3/13/2008

இளைஞன் டோண்டு ராகவனை கேள்விகள் கேட்போமா?

தனது பெயர் / பின்னூட்டம் வெளியிட வேண்டாம் எனக் கேட்டு கொண்டு ஒரு நண்பர் அனுப்பிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி இது.

"நீங்கள் ஏன் "டோண்டு பதில்கள் - தேதி" என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதிவு போடக்கூடாது ? புதன் வரை வரும் கேள்விகளை (பின்னூட்டத்தில் / மெயிலில்) உங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப தேர்வு செய்து நல்லபடி Formatting செய்து வெளியிட்டால் உங்கள் பதிவு மேலும் அதிருமில்ல.

துக்ளக்கில், குமுதத்தில், விகடனில் என எல்லா பத்திரிக்கையிலும் முதலில் பெரும்பாலான வாசகர்கள் படிப்பது கேள்வி-பதில் பகுதிதான். அதுவும் உங்கள் நகைச்சுவை ததும்பும் பதில்கள் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்.

வாரத்திற்கு ஒரு பதிவாக வந்தால் நல்லது, அதிகபட்சம் 10 கேள்விகள் (ஒரு பதிவிற்கு)
கேள்விகள் அரசியல், சினிமா, தமிழ், எழுத்து, வாழ்வியல் என எதைப் பற்றியும் இருக்கலாம். உதாரணத்திற்கு குமுதத்தில் வரும் பாலகுமாரன் பதில்கள், முன்னர் வந்த வைரமுத்து பதில்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன மாதிரி, டோண்டு பதில்களும் நிச்சயம் உங்கள் பதிவிற்கு சூப்பர் ஹிட்களை பெற்றுத்தரும். மேலும் வலையுலகிலும் இது யாரும் இன்னும் முயற்சிக்காத ஒன்று.

பதிவுத் தலைப்புகள் டோண்டு பதில்கள் - 14-மார்ச் 2008 ; டோண்டு பதில்கள் 21-மார்ச் 2008 என்று வரலாம்.

சிறந்த கேள்விக்கு நட்சத்திர குறியிடலாம் அல்லது ஏதேனும் இணைய இலவச பரிசு (சுட்டிதான்) அளிக்கலாம். டோண்டு பதில்கள் என ஒரு Brand உருவாக்கலாம்.

வாழ்த்துக்கள்

இதோ சில கேள்விகள்

1. டோன்டு பால் ரூ.1.50குறைப்பாம் ? நீங்க எப்ப பால் வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள் ?

2. கால் டாக்ஸிகளுக்கு துட்டு கொடுத்து எப்படி கட்டுபடியாகிறது ?

3. உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா ?

4. பல எழுத்தாளர்களையும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் தாங்கள் பா.ராகவன் ஐயங்காருடன் இன்னும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவில்லையா ? அவரும் உங்க ஏரியாதானே ?

5. ஐயங்கார்கள் ஏன் ஐயர்களை கூட சேர்ப்பதில்லை ? (ஒரு அளவிற்கு மேல் நெருங்க விடமாட்டார்கள்)"

இப்போது டோண்டு ராகவன். எனக்கு இது சரியாக வருமா எனத் தெரியவில்லை. ஏற்கனவே பதிவர் சுபமூகா அவர்களும் நானும் செய்து பார்த்ததுதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏதேனும் கேள்விகள் உண்டா? இப்பதிவின் பின்னூட்டமாக அவற்றை வைக்கலாம். வசை / மற்ற பதிவரை மட்டம் தட்டும் கேள்விகள் ஆகியவை மட்டுறுத்தி தவிர்க்கப்படும். நாளை மீண்டும் வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

PPattian said...

//வசை / மற்ற பதிவரை மட்டம் தட்டும் கேள்விகள் ஆகியவை மட்டுறுத்தி தவிர்க்கப்படும்//

இது நம்பும்படியாக இல்லை.. :)

Anonymous said...

Excellent idea! I will return after installing eKalappai. For now my questions (kindly translate to Tamil):

1. Should TamilManam be more strict in enforcing decency in Tamil blogs?

2. What is the book that you are currently reading?

3. Who is the most appropriate actor for the role Vandiyathevan in Ponniyin Selvan?

Anonymous said...

கடலை வருத்த சாமியார் கதை எப்ப பதிவிட போறீங்க ?

வால்பையன் said...

என் கேள்வி!!
பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதில் லக்கிக்கு மட்டும் தெரியுமா இல்லை நீங்களே சொல்லி தருகிறீர்களா!!

வால்பையன்

சரவணன் said...

நல்ல ஐடியா! டோண்டுவிடம் கேட்காத கேள்விகள், டோண்டு வெளியிடாத கேள்விகள், டோண்டு சொல்லாத பதில்கள், வாண்டு பதில்கள் என்றெல்லாம் பிற பதிவர்கள் பதிவு போட்டு ஒப்பேற்றிவிடலாம்!

மற்றபடி கேள்விக்கா பஞ்சம்? என் பங்காக:
* டோண்டு என்றால் என்ன அர்த்தம்?
* தென் திருப்பேரை எங்க இருக்கு?
* Ed McBain நாவல்கள் படித்ததுண்டா?
*Georges Simonon படித்ததுண்டா?
* மிருதுவான இசையா, மென்மையான இசையா: எது சரி?
*Blog எழுத வராமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
அப்புறம் என்ன கேட்கலாம்...ம்..
* Aki Kaurismäki படங்கள் பார்த்ததுண்டா? (யாருங்க அவரு:-))

theevu said...

உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?

dondu(#11168674346665545885) said...

//இது நம்பும்படியாக இல்லை.. :)//
நான் நீக்கிய பின்னூட்டங்கள் அனேகம். கருத்து சுவையாக இருந்தால் சென்சார் செய்து வார்த்தைகள் திருத்தி வெளியிடுவேன். இல்லாவிட்டால் தடாதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கூடுதுறை said...

மிக நல்ல ஒரு ஐடியா. தயவுசெய்து உடனே தனியொரு பதிவாக ஆரம்பிக்கவும்.

ஏனேனில் எனக்கு கேள்விகேட்கத்தான் தெரியும்...

விரைவில் எனது கேள்விபட்டியலை எதிர்கொள்ளுங்கள்

நன்றி,

எனது தேவை:
எனது பதிவுற்கு நல்ல புனைபெயர் கொடுக்கவேண்டுகிறேன்

Anonymous said...

//Blog எழுத வராமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?//

ஒரு டாக்டர் இல்லனா இஞ்சினியர் ஆயிருப்பேன்

- நமீதா ஸ்டையில் பதில்

சரவணன் said...

யோவ் அனானி, டோண்டு ஏற்கனவே இஞ்சினியர்தான்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

Pls follow as it is. No need of any change.

சுழியம் said...

வீர வேல் ! வெற்றி வேல் !

டோண்டு ஐயா,

இதோ எனது கேள்வி:

தாங்கள் தவறுகளை தைரியமாக எதிர்க்கும் நேரங்களும், ஜாக்கிரதையாக ஜகா வாங்கும் நேரங்களும் எவை?

வந்தே மாதரம் !

dondu(#11168674346665545885) said...

டோண்டு பதில்கள் - 14.03.2008 என்னும் தலைப்பில் அடுத்தப் பதிவு நாளை வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. இது வரை வந்த கிட்டத்தட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன். நாளை காலையில் அப்பதிவு வெளியாகும். மேலும் வரும் கேள்விகளும் அதில் விடையளிக்கப்படும்.

அப்பதிவு வெளியானதும் அதற்கடுத்தப் பதிவு தயாராக ஆரம்பிக்கும். அது வருவது 21.03.08 க்கு என உத்தேசித்துள்ளேன். பிழைத்து கிடந்தால் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.
போலி டோண்டு மூர்த்தி திடீரென்று உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்??
2. தாங்கள் விரும்பும் வேலை பொறியாளர் அல்லது மொழி பெயர்பாளர் . விளக்கதுடன் பதில்
3. உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?

(அன்பு கட்டளை.. பதில்கள் நாளைய பதிவில் வர வேண்டும்)

Anonymous said...

கேள்வி பதில் எழுதனும்னு ஆசையிருந்தா எழுதிட்டு போங்களேன். அதுக்கு என்னத்துக்கு அனானி வேண்டுகோள் விடுத்தார்னு பிலிம் காட்டறீங்க? :)

அரவிந்தன் said...

டோண்டு ராகவன் - காண்டு ராஜேந்திரன்

ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்க

அரவிந்தன்

dondu(#11168674346665545885) said...

முதல் பதிவு வந்து விட்டது. அடுத்தப் பதிவு மார்ச் 21-ஆம் தேதி வரும். அதற்கான கேள்விகளை பின்னூட்டமாக மேலே குறிப்பிட்ட முதல் பதிவுக்கு இடவும். இதில் இப்பதிவுக்கான எதிர்வினைகளை மட்டும் இடவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது