9/27/2008

"அமெரிக்க காங்கிரஸ் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தரவேண்டும்", என்று கூறுவது யார்?

அமெரிக்க காங்கிரஸ் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தரவேண்டும் என்று கூறுவது ஜெஃப் இம்மெல்ட், General Electric Co.-வின் தலைமை அதிகாரி. அவர் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போமா? அது பற்றிய எனது ஆங்கில பதிவிலிருந்து இங்கு மொழி பெயர்க்கிறேன். அது சாய்வெழுத்துக்களில் உள்ளது. இதில் நான் என்று வருவது அவர்தான். ஓவர் டு ஜெஃப் இம்மெல்ட்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு முயற்சிக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் பல ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் நிலையில் உள்ளது. அத்துடன் சுற்றுப்புற சூழலை பாழாக்காத தொழில் நுட்பம் மூலம் மின்சக்தியையும் உருவாக்க்கி இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் காரணமாக இருக்கலாம். மேலும், ஒரு முக்கிய ஜனநாயக நாட்டுடன் அமெரிக்காவின் நட்பையும் பலப்படுத்தலாம்.

இப்போது சந்தை மற்றும் பொருளாதாரங்களின் நிலையற்ற தன்மை தாண்டவமாடும் இந்த நிலையில் அவற்றை எதிர்கொள்ள இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஆகவே காங்கிரஸ் காலம் கடத்தாது ஒப்பந்தத்துக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்தியாவின் அதிகரித்து வரும் மின்சக்தியின் தேவைக்கான ஏற்பாடுகளை செய்வது தற்சமயம் மிக முக்கியம். மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆகவே அதன் மின் தேவைகள் மிகவும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதை சரியான முறையில் கையாளாவிடில் எண்ணெய், கரி ஆகிய வளங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு எண்ணெய் விலை உயர்வு, உலகலஇல் வெப்பமாதல் ஆகிய விளைவுகள் ஏற்படும்.

இந்தியாவும் சரி சர்வதேச அணுசக்தி அளிப்பவர்களும் (NSG) சரி, இதை நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் NSG சுமார் 34 ஆண்டுகளாக இந்தியாவுடன் அணுசக்தி செய்வதற்கு விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. அதன் மூலம் உலகில் உள்ள பல நாடுகளிடமிருந்து இந்தியா அணுசக்தி பெற வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவை பொருத்தவரை அதனுடைய காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் இந்த தடை நீக்கம் பொருளற்றது. அது கிடைக்காத பட்சத்தில் இந்தியா மற்றவரிடமிருந்து அணுசக்தி சம்பந்தமாக உதவி பெறுவதை ஓரமாக அமர்ந்து வாயில் விரலை வைத்து கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர அமெரிக்கா வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

அணு உலை கட்டுமானங்கள்

இந்த ஒப்பந்தம் அமெரிக்க இந்திய உறவுக்கு நல்லது. உலகளவில் மின் உற்பத்தி, அமெரிக்காவில் உருவாகும் வேலை வாய்ப்புகள் ஆகியவையும் இதனால் ஏற்றம் பெறும். பல ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்புடைய அணு உலை தொழில் நுட்பம் வழங்கப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 அணு உலைகள் சொந்தமாகவோ அயல் நாட்டு உதவியாலோ இந்தியாவில் கட்டப்பட உள்ளன.

இந்த தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்னும் முறையில் நான் இந்தியாவின் எதிர்காலத்தை உறுதி செய்யும் கட்டுமானங்களுக்கு தேவையான ஆள்பலத்தை உண்டாக்க விரும்புவேன். அம்மாதிரி செய்ய விடாது அமெரிக்க கம்பெனிகளை தடுப்பது புத்திசாலித்தனம் இல்லை.

இந்த ஒப்பந்தத்துக்கு காங்கிரஸ் தராவிடில் மேலே சொன்னதுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக அமெரிக்க இந்திய வணிகத்தின் வீச்சை விரிவுபடுத்த இயலாது போகும்.

சோபிக்காத வணிகம்

பல ஆண்டுகளாக அமெரிக்க இந்திய வணிகம் ஏனோதானோ என்று இருந்து வந்துளது. 2000-ல் அதன் அளவு சுமார் 14 billion டாலர்கள். ஐயர்லாந்து, வெனெஜுலா ஆகிய சிறிய நாடுகளுடன் இதை விட அதிகம் இருந்தது. அதன் பிறகு அமெரிக்க இந்திய அரசுகளின் முயற்சியால் வணிக அளவு மும்மடங்காயிற்று. ஆனால் இன்னமும் இது உலகின் மிக அதிக பொருளாதார துடிப்புடைய அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலையை நோக்குகையில் மிகவும் குறைவுதான்.

அணுசக்தி மூலம் இந்தியாவின் மின்சாரம் மற்றும் பல பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். ஆகவே இந்த வணிக ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட தொழில் பிரிவுக்கு அப்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மூலம் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையில் பொருளாதார மற்றும் ராஜரீக உறவுகள் பலப்படும். அதே சமயம் இதை ஏற்காவிட்டால் இந்தியாவில் அமெரிக்காவின் இந்த முயற்சிகளால் உருவாகிய நல்லெண்ணம் பாதிக்கப்படும்.

அமெரிக்க அரசு மற்றும் காங்கிரஸ் இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளது பாராட்டத்தக்கதே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் காங்கிரஸ்தான் இந்த விஷயத்தில் இந்தியாவுடனான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பெரிய ஆதரவை தந்தது என்பதை இங்கு நாம் மறக்கலாகாது. இப்போது காங்கிரஸ் மேலே செயல்பட்டு சீக்கிரமே ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலையில் உள்ளது. இந்த அபூர்வமான சந்தர்ப்பத்தை அது இழக்கலாகாது.


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். சாதுர்யமாக செயல்பட்டு NSG-யின் ஒப்புதலை பெற்றதற்கு பிரதமருக்கு பாராட்டுகள். இப்போது நிலைமை என்னவென்றால் காங்கிரஸ் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் இந்தியா மற்ற அணுசக்தி நாடுகளை அணுகுவதில் எந்தத் தடையுமில்லை. இப்போதைக்கு இதற்கு ஒப்புதல் அளிப்பதே அமெரிக்க நலனுக்கு உகந்தது என்ற நிலை வந்துள்ளது. அப்போதுதான் அது இந்தியாவின் இந்த செயல்பாட்டில் அதிக அளவில் ஈடுபட்டு லாபம் ஈட்ட இயலும் என்றாகிவிட்டது. செயல்பட வேண்டியது அதன் முறை.

எது எப்படியோ நாம் தற்போது இந்தியாவை பற்றி கவலைப்படுவோம். அமெரிக்கா ஆதரித்தால் அதற்கு நல்லது. இல்லாவிடில் மற்ற நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதை அது வேடிக்கை பார்க்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

Anonymous said...

அமெரிக்காவுக்கு starting எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா ending தான் கொஞ்சம் மோசமா இருக்கு.. ஒழுங்கா 123 pass பண்ணினா ரெண்டு பேருக்கும் நல்லது.
NSG விசயத்தில் இந்தியா எப்படியோ எஸ்கேப், பிரதமர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு செய்த உதவியை நாம் பாராட்ட வேண்டும்

வால்பையன் said...

அமெரிக்காவின் அவசரத்துக்கு தான் காரணம் புரியவில்லை!
ஜான் பெர்கின்ஸ் எழுதிய
"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" படித்தீர்களா

Anonymous said...

//அணுசக்தி மூலம் இந்தியாவின் மின்சாரம் மற்றும் பல பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். ஆகவே இந்த வணிக ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட தொழில் பிரிவுக்கு அப்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மூலம் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையில் பொருளாதார மற்றும் ராஜரீக உறவுகள் பலப்படும்//

எல்லாம் உங்க‌ளை போன்ற‌ மேட்டுகுடியின‌ருக்கு இனிப்பான‌ செய்திக‌ளாக‌ இருக்க‌லாம். ஒருவேளை
க‌ஞ்சிக்கு வ‌க்கில்லாத‌ மூட்டை தூக்கும், துப்புர‌வு செய்யும் தொழிலாளிக‌ளுக்கு ப‌ய‌ன் உண்டா?
விலைவாசி குறையுமா? வீட்டு வாட‌கை குறையுமா?

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

Anonymous said...

Komans,

Don't you use electricity?
Do you live in a cave or what?
Don't he watch maanaada mayilaada in Kalainjar channel in free TV.

Power/electricity is the common/basic need for every citizen this this world.

Only the consumption varies, need remains same?

வன்பாக்கம் விஜயராகவன் said...

"அமெரிக்க காங்கிரஸ் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தரவேண்டும் என்று கூறுவது ஜெஃப் இம்மெல்ட், General Electric Co.-வின் தலைமை அதிகாரி. "

ஜி.ஈ.யின் தலமை அதிகாரி நிச்சயமாக இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பார்? ஏன்? சுயநலமே காரணம்.

ஜி.ஈ.அணு ரியாகடர் உற்பத்தியும், அணு மின்சார உற்பத்தியிலும் உலகத்திலேயே பெரிய ப்ளேயர். இந்தியாவில் பல புது ரியாக்டர் வந்தா, அவர் கம்பெனிக்குதான் குஷி, ஏனெனில் நிரைய ஆர்டர் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கே. இந்தியா எவ்வளவு பெரிய மார்கெட்.கோடானுகோடி வியாபாரம் நடப்பதை, வரவேற்க்காமல் என்ன செய்வது.

மற்றவர்கள் சுயநலம் அதை எதிர்பதற்க்கு காரணமில்லை.

dondu(#11168674346665545885) said...

வாழ்க்கையே, அதுவும் வியாபாரமே சுயநலன்களால்தான் நடக்கிறது. என்.எஸ்.ஜி. ஒப்புதல் பெற்றதில் இந்தியாவின் நலன் காப்பாற்றப்பட்டது. இப்போது அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் மற்ற நாடுகளிடமிருந்து நாம் தொழில்நுட்பம் பெற தடையேதுமில்லை. அந்த நாடுகளின் நலனும் நமக்கு அதை அளிப்பதிலேதான் உள்ளது என்றால் அவையும் அதைத் தரும்.

அதே சமயம் இதை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் இதனால் சீனாவுக்கு ஏதேனும் பாதகம் வருமா என்றுதான் அஞ்சுவதாகத் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

//எல்லாம் உங்க‌ளை போன்ற‌ மேட்டுகுடியின‌ருக்கு இனிப்பான‌ செய்திக‌ளாக‌ இருக்க‌லாம். ஒருவேளை
க‌ஞ்சிக்கு வ‌க்கில்லாத‌ மூட்டை தூக்கும், துப்புர‌வு செய்யும் தொழிலாளிக‌ளுக்கு ப‌ய‌ன் உண்டா?
விலைவாசி குறையுமா? வீட்டு வாட‌கை குறையுமா?//

இதுல என்னையா மேட்டுக்குடி புண்ணாக்கு வேண்டி கிடக்கு? இன்னைக்கு எந்த வீட்ல மின்சார பயன்பாடு இல்லைன்னு சொல்லுங்க? அணு மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்வது எதிர்காலத்தில் மலிவான மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும். இதனால் நிச்சயம் விலைவாசி குறையும். நம்ம ஆற்காட்டாரும் ஒரு காலத்தில் வானொலியில் வந்த ”இன்று ஒரு தகவல்” மாதிரி இன்று மின்வெட்டுக்கு இந்த காரணம்னு ஏதாவது ஒரு கதை சொல்ல கஷ்ட படாம இருக்கலாம். கொஞ்சம் யோசிங்கப்பூ...

Che Kaliraj said...

Why America worry about india? this is like fox worry about this food. am I correct? pls reply

dondu(#11168674346665545885) said...

//Why America worry about india? this is like fox worry about this food. am I correct? pls reply//
விடை பதிவிலேயே உள்ளது. மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது