9/07/2008

சபாஷ் கூகள் க்ரோம்!

நண்பர்கள் பாரா, பத்ரி ஆகியோர் இந்த புது உலாவி பற்றி கூறியதும் எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. இருப்பினும் எனது கணினி தொந்திரவு செய்த நேரத்தில் இந்த அறிவிப்பு வந்ததுதான் பிரச்சினை.

அதாவது கணினியை துவக்குவதற்கே படாத பாடுபடவேண்டும். பலமுறை சுயமாகவே திரும்ப ஆரம்பித்து அது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது. சில சமயங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென ரீஸ்டார்ட்டுக்கு வேறு சென்றது. கவுண்டமணி சொல்வதுபோல ரொம்ப குஷ்டம்டா சாமின்னுதான் சொல்லணும். வழக்கம்போல இங்கும் எனது கணினி குரு முகுந்தன் துணைக்கு வந்தான். முதலில் வைரஸ் ஏதேனும் இருக்கும் என சந்தேகம். ஆகவே சி மற்றும் டி ட்ரைவ்களை திரும்ப லோட் செய்ய வேண்டியிருந்தது. இயந்திரங்களுக்கே உரித்தான படுத்தல் என் கணினியும் செய்தது. அதாவது முகுந்தன் இருந்தவரைக்கும் சமர்த்தாக இருந்தது. அவன் அந்தண்டை போனதும் பிரச்சினை ஆரம்பம். நான் வாக்கிங் போய்விட்டு கணினியை துவக்க எண்ணினால் அதே பழைய பிரச்சினை. இன்றுதான் முகுந்தன் அதையும் சரி செய்தான். வேண்டுமென்றே கணினியை மூடிவிட்டு சில மணிநேரம் கழித்து ஆன் செய்தபோது பிரச்சினை இல்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும் எனக்கூறி மரத்தைத் தொட்டுக்கொள்கிறேன்.

சரி கூகள் குரோமை தரவிறக்கலாம் என்று செய்தேன். சும்மா சொல்லக்கூடாது சுகுராக இறங்கி இன்ஸ்டால் ஆயிற்று. பிரச்சினை ஏதும் இல்லை. அதிலிருந்து கொண்டுதான் இப்பதிவையே போடுகிறேன். இதற்குள் தமிழ் தட்டச்சிடுவதில் இருந்த பிரச்சினைகளை நாகராஜன் அவர்கள் அனாயாசமாக தீர்த்து வைத்துள்ளார். புது என் எச் எம் எழுத்தியையும் இறக்கிக் கொண்டேன். இதில் என்ன சிறப்பு என்றால், நான் பாமினி என்னும் லொள்ளு எழுத்துரு என்று நொந்து கொண்டதை போல இனிமேலும் கஷ்டம் இல்லை. பாமினியும் ஃபோனெடிக்கில் வந்து விட்டது. ஹிந்தி வேறு வந்து விட்டது. அதிலும் மொழிபெயர்ப்புகள் செய்யலாம். ஜாலி.

மீண்டும் கூகள் க்ரோம். பயங்கர வேகமாகச் செயல்படுகிறது. அதுவும் யூட்யூப் வீடியோ க்ளிப்புகளைப் பார்க்க ரொம்ப சௌகரியமாகவே உள்ளது. இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் திக்கி திக்கி வருவது போல எல்லாம் இல்லை.

வாழ்க்கை அற்புதமயமானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

கோவை விஜய் said...

கூகுள் ஆண்டவரின் இந்த விஸ்வரூபம்
பாராட்டுக்குரியது.

ஆனாலும் இந்த வைரஸ் தொந்திரவு தீரும் நாளும் வந்திடாதோ?

என்ன "ஆண்டி வைரஸ்" மென்பொருள் வைத்திருந்தாலும் அந்த பாதுகாப்பு வளையங்களையெல்லம் உடைக்க ஒரு பெருங் கூட்டம் இருக்குதே சார்

வடுவூர் குமார் said...

பரவாயில்லை,உங்கள் இணைய இணைப்பு அந்த அளவுக்கு (யூடியூப் பார்க்கிற) இருக்கிறது போலும்.

வால்பையன் said...

நானும் இறக்கி வைத்திருக்கிறேன்.
உபயோகப்படுத்தி பார்க்கவேண்டும்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது