திமுக தொண்டன்:
1. பத்மநாபா கொலை என்பது துரோகி அழிப்பா அல்லது கொலையா? தெளிவுபடுத்தவும்??
பதில்: பத்மநாபா கொலை பற்றி ஜெயின் கமிஷனது அறிக்கையிலிருந்து சில வரிகள் தருகிறேன். அவை 1997-ல் இண்டியா டுடே பத்திரிகையில் வந்தன.
"The (Jain) report emphasises the political antagonism between the DMK government in the state and the Rajiv Gandhi government at the Centre. Karunanidhi took over as chief minister in January 1989 after his party's decisive victory over the Congress and the AIADMK. According to the report, 1989 signified "the perpetuation of the general political trend of indulging the Tamil militants on Indian soil and tolerance of their wide-ranging criminal and anti-national activities ... LTTE activities of arms smuggling, abduction of Indian citizens and officials and intimidation of the law enforcement machinery were tolerated". Citing the brutal murder of EPRLF leader K. Padmanabha, along with 15 others in Madras on June 19, 1990, Jain has resurrected memories of "the impunity with which the LTTE could operate in India".
The commission has quoted two reports of the Intelligence Bureau (IB) that speak of Karunanidhi not being averse to the elimination of EPRLF leaders by LTTE hit squads. These reports, filed on June 28, 1990 (nine days after Padmanabha's murder) referred to "the chief minister informing Natesan (an LTTE activist) to provide advance information regarding LTTE movements and also sought details of locations of LTTE hideouts to direct the police to keep away from such places". The IB also recorded the "opinion expressed by the chief minister regarding Padmanabha being a betrayer". Another report quoted by Jain claims the "chief minister also told Natesan that killing of Padmanabha was a necessity and so also of Vardaraja Perumal and that Natesan should ensure that he (Karunanidhi) was taken into confidence before such acts are committed". The commission has also recorded the evidence of former state home secretary R. Nagarajan, which further indicts Karunanidhi: "Nagarajan has deposed that the DGP informed him that the chief minister has asked him (DGP) that the police need not evince keen interest to trace out the culprits in the Padmanabha massacre till his arrival the next day for further instructions from him." To drive home the point, the commission has quoted extensively from Chidambaram's speech to the Lok Sabha on February 25, 1991, in which he claimed that the movement of senior eprlf leaders "was conveyed by the state police to the LTTE". Padmanabha's killing is important because it was the same hit squad that was later deployed to eliminate Rajiv".
If that isn't enough to damage Karunanidhi, the commission has quoted other documents and various statements given to it by former LTTE activists. For example, Kasi Anandan, a senior member of the 10-member central committee of the LTTE's political wing, admitted in his deposition on September 11, 1996, that "the LTTE had very friendly relations with Karunanidhi. In the days of Karunanidhi as CM, movement of LTTE was more free. Local administration was also friendly in Tamil Nadu". Anandan even disclosed that the "LTTE was able to communicate from Jaffna to Tamil Nadu when the V.P. Singh government was at the Centre and the Karunanidhi government in Tamil Nadu."
Jain has recorded vivid details of the LTTE's free access to Karunanidhi and key state government officials. Anandan revealed that he, along with another LTTE leaders, used to meet Karunanidhi in strict privacy: "I have met Karunanidhi several times alone and once or twice with Natesan." Neither the Tamil Nadu government nor the Centre had any clue as to what transpired in these meetings.
Further, Jain records that Karunanidhi and top state officials were directly involved in getting many LTTE cadres released from police custody. The interim report contains an IB account of the interference during the raid on a LTTE hideout on November 30, 1990. At least two key LTTE cadres, Kiruban and Anandan, were let off due to instructions from above: "A posse of policemen converged on the Thillai Nagar hideout of LTTE in Tiruchirappalli in the early hours of today (Nov.30) and laid siege to the premises that had 19 LTTE cadres including Kiruban and Kasi Anandan, the LTTE representative liaising with the Tamil Nadu Government. The cadres refused to let the police in and issued an ultimatum to the effect that if the siege was not lifted by 12 noon today, all the cadres would consume cyanide and commit suicide."
கருணாநிதி அவர்களது புலிகள்பால் பரிவைப் பற்றி ஜெயின் கமிஷன் மேலும் பேசுகிறது. அது பற்றி வேறு ஒரு சமயம் பார்ப்போம். இக்கேள்விக்கு இப்போது வருகிறேன். பத்மநாபா ஒரு துரோகி என பிரபாகரனால் கணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதுதான் நிஜம். பத்மநாபா ஒரு துரோகியாகவே கருணாநிதி அவர்களாலும் சித்தரிக்கப்பட்டார் என்பதையும் ஜெயின் கமிஷன் அறிக்கை கூறுகிறது. இக்கொலைகள் நடக்கும்போதே புலிகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. ராஜீவின் கொலைக்கு அப்புறம் சுத்தமாக அழிந்தது.
அனானி (பெயர் டோண்டுவினால் சென்சார் செய்யப்பட்டது):
1. தமிழ்நாட்டு தமிழர்கள் அதாவது மலையக தமிழர்கள் வந்தேறிகள் என்று சொல்லி அவர்களை இந்தியாவிற்கு திரும்ப அனுப்பியதில் யாழ்பாணவாசிகளுக்கு பெரும் பங்கு உள்ளதாமே?? உண்மையா??
பதில்: யாழ்ப்பாணவாசிகளுக்கும் மட்டக்களப்புவாசிகளுக்கும் ஒத்துக் கொள்ளாது. புலிகளுக்கு இசுலாமியரைப் பிடிக்காது. இசுலாமியரோ தங்களைத் தமிழர்கள் என்பதைவிட இசுலாமியர் என்றே வரையறுத்துக் கொள்ள விரும்பினர் என்றும் அறிகிறேன். அவற்றையெல்லாம் புரிந்து கொள்வது கடினம். இடியாப்பச் சிக்கல்கள் அவை.
சித்தார்த்தா:
1. உங்கள் வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்த்து, செய்யாமல் விட்டதை எண்ணி வருந்தியுள்ளீரா?
பலமுறை அவ்வாறு என் வாழ்வில் நடந்திருக்கிறது. செய்யாமல் விட்டது மட்டுமல்ல செய்தவை பற்றியும் வருந்தியுள்ளேன். பலமுறை கடந்த காலத்துக்கு சென்று அவற்றை சரிசெய்ய ஏதாவது கால யந்திரம் கிடைக்காதா என்றும் ஏங்கியுள்ளேன். அதே சமயம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அப்போதைய டோண்டு ராகவன் காலப்பயணி டோண்டு ராகவன் சொல்படி கேட்பானா என்பதும் சந்தேகமே. சமீபத்தில் 1971 ஜனவரியில் மத்தியப் பணித்துறையில் சேர்ந்த அடுத்த நாளுக்கு பொக்காரோ ஸ்டீல் கம்பெனியில் வேலைக்கான நியமன உத்திரவு வந்தது. அதில் சேர்ந்திருந்தால் பதவி உயர்வுகள் வேகமாக வந்திருக்கும். ஆனால் நான் ஜெர்மனோ பிரெஞ்சோ படித்திருக்க இயலாது. ஆக, அப்போது கஷ்டமாகப் பட்டது இப்போது பின்னோக்கி பார்க்கும்போது நல்லதாகவே தெரிகிறது. எனது வாழ்க்கையில் மட்டுமல்ல, எல்லோருக்குமே இம்மாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும் என்பது உறுதி.
2. ஜயேந்திரர் வழக்கு என்னாயிற்று?
இழுபறியாக போய்க்கொண்டிருக்கிறது. இணையத்தில் போய்ப்பார்த்தால் இம்மாதிரி செய்தி வருகிறது.
"சங்கரராமன் கொலை வழக்கு: செப்.24 விசாரணை! (வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008(16:05 IST)
சங்கரராமன் படுகொலை வழக்கில் புதுச்சேரி அரசு, அரசு வழக்கறிஞரை நியமிக்க காலதாமதம் ஏற்படுவதால் விசாரணையை செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி வி. ஆறுமுகம் தள்ளிவைத்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி உள்பட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம் சாற்றப்பட்ட 24 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி உள்பட 16 பேர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளதால், தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது என்றும், புதுச்சேரி அரசுதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அரசு வழக்கறிஞரை நியமிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதிமன்றத்திற்கு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.
சங்கரராமன் படுகொலை வழக்கில் புதுச்சேரி அரசு, அரசு வழக்கறிஞரை நியமிக்க உள்ளதால், அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது".
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
3. மாநில அரசுக்கும் தேர்தல் லோக்சபா தேர்தலுடனேயே வந்து விடுமா?
வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவேயே கருணாநிதி அவர்கள் சமீபத்தில் 1971-ல் அதைத்தானே செய்தார். சரித்திரம் திரும்புகிறது போலும். அத்துடன் இன்னொன்றும் கூறுவார்கள். அதாவது, "சரித்திரம் திரும்ப வரும் வாய்ப்பு உண்டு. முதல் தடவை சரித்திரமாக, அடுத்த முறை அபத்தமாக".
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
4 comments:
என் கேள்வி
அமெரிக்காவின் ஹைட் கொள்கைகள் இந்தியாவை கட்டுபடுத்துவது போல் உள்ளதே!
அமெரிக்காவின் உண்மையான நோக்கம் தான் என்ன?
ஐயா, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் இல்லை, அவர்கள் தமிழ் பேசும் மக்கள். 40% முஸ்லிம் மக்கள் அராபிய இனத்தவர்கள், மிகுதி மக்கள் மலாய் இனத்தவர்கள். அவர்கள் இங்கு வியாபார நோக்கம் காரணமாய் வந்தவர்கள். இலங்கையின் அன்றய வியாபார மொழி தமிழ், முஸ்லிம்கள், போர்த்துகேயர் அனைவரும் தமிழ் முலம்தான் வியாபாரம் நாடாத்தினார்கள்.
இந்தியா போன்று இலங்கையின் முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டவர்கள் இல்லை. இதன் காரணமாய் தான் முஸ்லிம்கள் வேறு இனம், தமிழர் வேறு இனம்.
Dear DONDU Sir,
I had been a reader of Thamizmanam for the past 2 years and happy that I remain a reader only and not got pulled into the vortex yet.
I had been to Then Thiruperai Temple on 6th Sept as part of my visit to NavaThirupathi.
I just remembered you when I visited that temple.
A beautiful and well maintained temple and everyone in our family were happy to have visited Navathirupathi temples.
Just thought of sharing with you.
Best regards
K.G.SUbbramanian
ஹுசை வரைந்த ஓவியம் இந்துக்கள் மனம் புண்படும்படியாக உள்ளது என்று சொல்லும் இந்துத்வாவாதிகளைக் பக்கம் பக்கமாக திட்டி எழுதி கண்டிக்கும் அறிவாளிகள், முகம்மதை கேலிச்சித்திரமாகக் காட்டிய தினமலரைப் புரக்கணியுங்கள் என்று அரைக்கூவல் விடும் ஜிஹாதி பதிவர்களைக் கண்டிக்கத் துப்பு இல்லையே ஏன்? கருத்துச் சுதந்திரம் எல்லாம் மைனாரிட்டிக்குத்தானா ? மெஜாரிட்டிக்கு இல்லையா ?
Post a Comment