நடேசன் பூங்காவினுள் நுழையும்போது மணி 5.30. அரை மணி நேரம் லேட். ஏன்னுடன் சேர்ந்து கேபிள் சங்கரும் அப்போதுதான் பார்க்கில் நுழைந்தார். உள்ளே பத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே குழுமியிருந்தனர். ஒரு நோட்டு புத்தகத்தில் வருகை பதிவு செய்யப்பட்டிருந்தது. என்னிடமும் அது வந்த போது எனது பெயரை பதிவு செய்தபின் எனது நோட்டு புத்தகத்திலும் அப்பெயர்களை அப்படியே சந்தடி சாக்கில் ஏற்றிக் கொண்டேன்.
வந்தவர்கள் விவரம்: 1. பைத்தியக்காரன், 2. பாலபாரதி, 3. சுகுமார் சுவாமிநாதன், 4. வெண்பூ, 5. நர்சிம், 6. லக்கிலுக், 7. அதிஷா, 8. பாபு, 9. ஸ்ரீ, 10. ஆ.முத்துராமலிங்கம், 11. ஜெ. அன்புமணி, 12. நெல்லை எஸ். ஏ. சரவணகுமார், 13. பினாத்தல் சுரேஷ், 14. கேபிள் சங்கர், 15. டோண்டு ராகவன்
பிறகு வந்தவர்கள்: 16. ப்ரூனோ, 17. செல்வம், 18. ஜாக்கி சேகர், 19. காவேரி கணேஷ், 20. அக்கினி பார்வை, 21. தண்டோரா, 22. வண்ணத்து பூச்சியார், 23. சரவணகுமார், 24. நைஜீரியா ராகவன், 25. தங்கமணி பிரபு (கோலங்கள் சீரியலில் டிஜிட்டல் பள்ளத்தாக்கின் பிரதிநிதியாக வருபவர்), 26. பாஸ்கர் சக்தி (மேகலா, கோலங்கள் சீரியல்கள் வசனகர்த்தா), 27. ஆசிஃப் மீரான் (சாத்தான் குளத்தார்).
நான் முன்னெச்சரிக்கையாக மூன்று கொசுவர்த்தி சுருள்கள் மற்றும் அவற்றுக்கான standகளுடன் சென்றிருந்தேன். என்ன அக்கிரமம், கொசுக்கள் இம்முறை கண்ணிலும் படவில்லை, உணரவும் முடியவில்லை. ஆகவே நான் கொண்டு சென்றதற்கு வேலை இல்லாமல் போயிற்று.
ஆசிஃபை அமீரகத்திலேயே பார்த்திருக்க வேண்டியதை மிஸ் செய்து விட்டது குறித்து நைஜீரியா ராகவன் வருத்தப்பட்டார். பார்ப்பதற்கு ரிசர்வ் டைப்பாக தெரிந்த நைஜீரியா ராகவன் பேச ஆரம்பித்ததும் கலகலவென பழகினார். அவரிடம் நைஜீரியா பற்றி கேட்டேன். லாகோசில் இருக்கிறாரா என கேட்டதற்கு, இல்லை தான் வேறு ஒரு நகரத்தில் இருப்பதாகக் கூறி அதன் பெயரையும் சொன்னார். இன்னொரு முறையும் கேட்டு உறுதி செய்து கொண்டாலும் இப்போது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அவரே பின்னூட்டமாக போடட்டும். நைஜீரியாவில் அறுபதுகளில் உள்நாட்டு போர் நடந்தது. இபோ பிரிவை சேர்ந்தவர்கள் பிரிந்து போய் பயாஃப்ரா என்னும் தேசம் அமைத்தனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் அங்கீகாரம் தந்தன. இருப்பினும் சில ஆண்டுகள் போருக்கு பின்னால் பயாஃப்ரா உலக வரைபடத்திலிருந்து மறைந்தது என அக்காலகட்ட பேப்பர்களில் படித்துள்ளேன்.
இப்போது அங்கு நிலைமை எப்படி என ராகவனை கேட்டதற்கு இப்போதெல்லாம் அங்கு இரண்டே இரண்டு பிரிவினர்தான் உண்டு, அதாவது பணம் படைத்தவர்கள் மற்றும் ஏழைகள் அவ்வளவே என்றார். தான் இருக்குமிடம் அமைதியாக உள்ளது என்று கூறினார். இத்தாலியை சேர்ந்த ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். போஸ்டிங் நைஜீரியாவில். இந்திய கம்பெனியாக இருந்தால் சேர்ந்திருக்க மாட்டேன் என்றார். ஏனெனில் அன்னியச் செலாவணி தகராறால் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒரு முறைதானாம். இத்தாலிய கம்பெனி பரவாயில்லையாம், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் தந்து விடுகிறார்களாம். மாத வாடகை எப்படி தருவீர்கள் என இழுத்ததற்கு அவர் ஆண்டு வாடகையாக முன்கூட்டியே தர வேண்டியிருப்பதால் பிரச்சினை அந்த விஷயம் பொருத்தவரை கிடையாது என்றார். அதுவும் கம்பெனியே அதை பார்த்து கொள்கிறது என்றார். அக்கவுண்ட்ஸ் மற்றும் நிர்வாக துறைகளில் அவரது போஸ்டிங் என்றார். ரொம்பவும் கடினமான பொறுப்புதான்.
பாஸ்கர் சக்தி தனக்கும் வலைப்பூக்களுக்கும் அவ்வளவு பரிச்சயம் இல்லை என்றார். சுரேஷ் கண்ணன் இவரை ஒரு முறை சந்தித்ததை மற்றவர்களை ஏப்ரல் முட்டாளாக்கும் நோக்கத்தில் மெருகூற்றிக் கூறியதை தான் முதலில் சீரியசாக எடுத்து கொண்டு, அம்மாதிரியெல்லாம் நடக்கவேயில்லை என கோபமாக பின்னூட்டமிட்டதையும் சுரேஷ் கண்ணன் தான் ஏப்ரல் ஃபூல் செய்யும் நோக்கத்தில் போட்டதாகவும் கூறி அடுத்ததாகவே மன்னிச்சுடுங்க என்னும் பதிவை போட்டதையும் கூறி, தான் அப்போது ஓவர் ரியேக்ட் செய்திருக்கலாம் என்றார். அதன் பிறகு தான் வலைப்பூக்களை அதிகம் பார்த்ததில்லை என்றும், இப்போதுதான் சில நாட்களாக பார்ப்பதாக கூறினார். வலைப்பூக்கள் பற்றி அவரது கருத்தை கேட்டதற்கு கிரியேட்டிவிடி என்பது அதில் சற்றே குறைவுதான், ஆயினும் எழுத்து நடை நன்றாக இருப்பதாக கூறினார்.
நர்சிமின் எழுத்துக்களால் தான் கவரப்பட்டதாக ஒரு பதிவர் கூறினார். இன்னொருவருக்கு பரிசல்காரனை பிடித்திருந்தது. இப்போது விகடன், குமுதம் ஆகிய பத்திரிகைகளில் பல வலைப்பூக்கள் ரிபீட் ஆகின்றன என்றும், போகிற போக்கில் அவை முழுக்க முழுக்க வலைப்பதிவர்களின் எழுத்தால் நிரப்பப்படும் காலமும் வரலாம் என ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் எழுதி பப்ளிஷ் செய்து கொள்ளலாம் என்ற நிலை காரணமாக பல புதுப்புது எழுத்தாளர்கள் வருவதும் வரவேற்கப்பட்டது.
குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்.
எல்லோரும் சுய அறிமுகம் செய்து கொள்வது இருமுறை நடந்தது. ஏனெனில் முதல் அறிமுகம் முடிந்த பிறகு மேலும் பலர் வந்ததே அதற்கு காரணம். எனது சுய அறிமுகம் செய்து கொண்டதும், நான் எழுதிய எதையாவது பற்றி சில வார்த்தைகள் கூறும்படி கேட்டு கொள்ளப்பட்டேன். இஸ்ரேல் பற்றி பேசலாமா என்றதற்கு பலர் பதறிப் போயினர். பிறகு தெருக்களில் ஒருதலை பட்சமாக சாதிப் பெயர்களை எடுத்து நிர்வாக குழப்பத்துக்கு தமிழக அரசு சமீபத்தில் 1978-ல் செய்தது குறித்து நான் எழுதிய யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை கூறி அதற்கான எதிர்வினைகள் பற்றியும் கூறினேன். இப்போதும் சற்றே சலசலப்பை அது எழுப்பியது.
எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பல குழுக்களாக பிரிந்து டிஸ்கஸ் செய்யப்பட்டது இயற்கையாகவே நிகழ்ந்தது. நான் கலந்து கொண்ட டிஸ்கஷன்களைத்தான் நான் எழுதியுள்ளேன். மற்றவர்களும் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஏழரை மணியளவில் கூட்டம் கலைந்தது. பாஸ்கர் சக்தியுடன் கோலங்கள் பற்றி நான் சில கேள்விகள் இட்டேன். போன ஆண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டியது இன்னும் இழுக்கப்படுவதற்கு அதற்கு பல முறை தரப்பட்ட எக்ஸ்டென்ஷன்கள்தான் காரணம் என அவர் தெரிவித்தார். மிக நல்ல தொழில்நுட்ப முறையில் சீரியல் எடுக்கப்படுதால் அது பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆகவே அதன் இயக்குனரின் சமூகப் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது எனக் கூறிய நான் திருச்செல்வனிடம் ஒரு லைவ் டி.வி. ஷோவில் நான் கேட்ட கேள்வி பற்றியும் கூறினேன். அவரை அச்சமயம் கேட்க நினைத்து, கேட்காமல் விட்ட கேள்வியை இப்போது பாஸ்கர் சக்தியிடம் கேட்டேன். அதாவது எந்த கேரக்டர்களுக்குமே சாதியை கூறாது விட்டுவிட்டு, கங்கா என்னும் நெகடிவ் பாத்திரத்தை மட்டும் ஐயங்கார் பெண் என குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் அது. அதில் என்ன இழிவான விஷயம் கூறப்பட்டது என கேட்க, அந்த ஐயங்கார் குடும்பத்தின் மாப்பிள்ளை தன் மனைவியையே கூட்டிக் கொடுப்பதாகவெல்லாம் சீன் வைக்கப்பட்டதை கோபத்துடனேயே நான் குறிப்பிட்டேன். பல எபிசோடுகள் இக்குடும்பத்தினர் செய்வதாகக் கூறப்படும் எதிர்மறை காட்சிகள் வந்தன. அதே சமயம் அபி குடும்பத்துக்கு சூனியம் வைப்பது, காசு வெட்டிப் போடுவது போன்ற உத்தமமான காரியங்கள் செய்த பாஸ்கரின் அன்னை, கொலை கொலையாய் முந்திரிக்காய் என செயல்பட்ட பாஸ்கர் ஆகியோரின் சாதி பற்றி பேச்சில்லை. ஆகவே கதை ஓட்டத்துக்கு சற்றும் தேவைப்படாத சாதி விஷயத்தை ஒரு க்ரூப்புக்கு மட்டும் ஐயங்கார் என அடையாளம் ஏன் காண்பிக்க வேண்டும் என கேட்டு, அக்கேள்வியை திருச்செல்வத்துக்கு பாஸ் செய்யும்படி கேட்டு கொண்டேன். பாஸ்கர் சக்தியும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.
தங்கமணி பிரபுவை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது. அவரும் கோலங்கள் சீரியலில் வந்ததாக கூறப்பட்டதுமே நினைவுக்கு வந்து விட்டது. அவரிடம் அவர் ஏற்ற பாத்திரம் பற்றியும் பேசினேன். இப்போது லாஜிக்கலாக முரண்படும் சில விஷயங்கள் பற்றி கேட்க, பாஸ்கர் சக்தி ஒரு விஷயம் சொன்னார். அதாவது பல முறை கதையின் போக்கு மாற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 30 எபிசோடுகளுக்கு ஒரு கதை என்ற ரேஞ்சில்தான் ஒரு சீரியல் செல்கிறது. அதில் முக்கிய பாத்திரங்களின் கேரக்டர்கள் மட்டும் அடிநாதமாக இருக்கின்றன. அவற்றுக்கு பங்கம் வராமல் வசனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் பல முறை பழைய நிகழ்வுகள் கவனத்திலிருந்து மறைந்து போகின்றன என்றார். பேசாமல் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்த டோண்டு ராகவனையாவது அல்லது தனது அன்னையையாவது வேலைக்கு வைத்து கொள்ளலாம் என ஒரு பதிவர் குறிப்பிட்டார் (கேபிள் சங்கர்?). திட்டிக் கொண்டே தன் அன்னை சீரியலை விடாது பார்ப்பதையும்ம் அவர் கூறினார். என்னைப் பொருத்தவரை கோலங்கள் சீரியல் அளவுக்கு மீறி அசடு வழிந்தால் நான் அந்த எபிசோடுகளை பார்ப்ப்தை தவிர்த்து விடுவேன் என கூறினேன். மேகலா நல்ல முறையில் வருவதாக கூறினேன்.
அங்கிருந்து ஒரு சிறு கோஷ்டி தாகசாந்திக்காக அருகில் இருந்த பாருக்கு நகர்ந்தது. நானும் அதில் இருந்தேன். த்ண்டோரா அவர்கள் காரில் லிஃப்ட் கிடைத்தது. நைஜீரியா ராகவனும் வந்தார் ஆனால் ஸ்ட்ரிக்டாக சாஃப்ட் ட்ரிங்க் மற்றும் சைவ ஐட்டங்கள்தான். நான் பயங்கர அசைவ பார்ட்டி என்பது டைம் பத்திரிகையிலேயே போட்டு விட்டார்கள். ட்ரிங்க் ஆக ப்ளடி மேரி எடுத்து கொண்டேன். பிறகு ராகவன் அவர்கள் எடுத்து கொண்ட சாஃப்ட் ட்ரிங்கையும் ஆர்டர் செய்து கொண்டேன். மற்றவர்கள் விஸ்கி, பிராண்டு என்றெல்லாம் அமர்க்களப்படுத்தினர். ஒரு பதிவர் என்னிட யாருடைய பெயரையும் இது சம்பந்தமாக குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் அவர்களது பெயரை கூறவில்லை. தண்டோராவின் பெயரை கூறித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அவர்தான் என்னை கடைசியில் மீனம்பாக்கத்தில் ட்ராப் செய்தார். அவருக்கு நன்றி.
இங்கும் பேச்சு பல விஷயங்களை தொட்டது. என் பங்காக சில அசைவ ஜோக்குகள் சொன்னேன். நல்ல வரவேற்பு. அதுவும் பெண்வீடா பிள்ளைவீடா என்ற தத்துவக் கேள்விகளை உள்ளடக்கிய ஜோக் மிகுந்த வரவேற்பை பெற்றது. வலது இடது பிரச்சினையும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இரவு பத்தரைக்கு கிளம்பினோம். கேகே நகரில் சிலரை இறக்கி விட்டு கார் 100 அடி ரோட் வழியாக கத்திபாராவை தாண்டி மீனம்பாக்கம் நோக்கி விரைந்தது. பேச்சு சுவாரசியத்தில் நான் இறங்க வேண்டிய இடம் மிஸ் ஆகிவிட தண்டோரா அவர்கள் சற்றும் தயங்காமல் காரை ஏர்போர்ட்டில் யூ டர்ண் செய்து என்னை மிஸ் ஆன இடத்தில் இறக்கி விட்டார். அப்படியே ரயில்வே லைனை கிராஸ் செய்து ஜெயின் கல்லூரி பக்கம் சென்றால் ஒரு ஆட்டோவும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் விறுவிறென நடை. வீட்டுக்கு போய் சேரும்போது மணி 11.30. எழுபதுகளுக்கு பிறகு இப்போதுதான் ராத்திரி அந்த ஏரியாவில் நடை.
இன்று காலை 5.17 மணிக்கு இப்பதிவை போட ஆரம்பித்தேன். இப்போது நேரம் 6.58.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வழிவழியாக வந்தமைவோர்
-
அன்புள்ள ஜெ வெண்முரசு நாவல்கள் வெளிவந்துகொண்டிருந்தபோது நான் உங்களுக்கு சில
கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். அந்நாவல்களைச் சுருக்கவேண்டும், எடிட்
செய்யவேண்டு...
4 hours ago
35 comments:
//இங்கும் பேச்சு பல விஷயங்களை தொட்டது. என் பங்காக சில அசைவ ஜோக்குகள் சொன்னேன். நல்ல வரவேற்பு. அதுவும் பெண்வீடா பிள்ளைவீடா என்ற தத்துவக் கேள்விகளை உள்ளடக்கிய ஜோக் மிகுந்த வரவேற்பை பெற்றது. வலது இடது பிரச்சினையும் வரவேற்பை பெற்றது.//
please tell the "a" jokes to all
@அனானி
ஏன் இந்த கொலைவெறி? நேரில் பார்த்தால் கேளுங்கள், சொல்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றாக பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்... நன்றி
உங்களுடனான சந்திப்பில் நிறைய செய்திகள் அறிந்து கொண்டேன். நன்றி.
அன்புடன்,
பாபு
சந்திப்பு அற்புதம். உங்களுக்கு சிறப்பு நன்றிகள். (காரணம் நினைவிருக்கும் என நினைக்கிறேன்!) விரைவில் பதிவர் சந்திப்பு குறித்த எனது இடுகையை வெளியிடுகிறேன்.
ஸ்ரீ....
நேத்து ராத்திரியே உங்க பதிவ எதிர்பார்த்தேன் இப்பொழ்து தான் காரணம் புரிகிறது
:))))))))))))
என் கார் நடேசன் பார்க்கை அடைந்த போது மணி 6.30 ...
இப்படி தானே உங்க தொடக்கம் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு வந்தா , வெறுமனே நடேசன் பார்க்கை அடைந்த போது மணி 6.30 அப்டின்னு ஆரம்பிச்சுட்டிங்க. உங்க கார்களுக்கு என்னா ஆச்சு?
வழக்கம் போல சந்திப்பு விவரங்கள எழுத உங்கள அடிச்சுக்க யாருமே இல்ல போங்க.
சிங்கை பதிவர் சந்திப்புகள தொகுத்து எழுதுற பணியை ஏற்றுக்கொண்டுள்ள டொன் லீ சிறப்பா எழுதிகிட்டு இருக்கார். அவருக்கு கூட சிங்கையின் டோண்டு அப்டினு ஒரு அவர்ர்டு குடுக்க இருக்கோம்.
@ஜோசஃப் பால்ராஜ்
சந்திப்புக்கு என்னோட பஸ்ல போனேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
சாரு-ஜெமோ விவகாரம் பற்றி யாரும் பேசவில்லையா? பைத்யகரன்-லக்கி இருந்தும்?
இல்லை பொலிடிகல்லி சரியாக அதுபற்றி எழுதுவதை தவிர்த்து விட்டீர்களா?
பகிர்விற்கு நன்றி.
//என் கார் நடேசன் பார்க்கை அடைந்த போது மணி 6.30 ...//
நான் வந்த்தது 05.30-க்கு. ஆனால் தவறுதலாக 06.30 என குறிப்பிட்டு விட்டேன். இப்போட்க்ஹு சரி செய்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///தான் வேறு ஒரு நகரத்தில் இருப்பதாகக் கூறி அதன் பெயரையும் சொன்னார்///
அண்ணே ராகவன் நைஜீரியா, அவர்கள் இருக்குமிடம் அபுஜா, நைஜீரியாவின் தலைநகரம்..
அருமையான அழகான நகரம். வசிக்க சிறந்த இடம்.. ஐரோப்பாவில் இருப்பது போன்றே இருக்கும்..
[[[குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்.]]]
எப்படி ஸார் இப்படி கூச்சப்படாம அவர்கிட்டயே கேட்டிருக்கீங்க..?
போலி டோண்டுவுக்கு அல்லக்கையா தானே இருந்த கதையையும், சக பதிவர்களைப் பற்றியத் தகவல்களை போலியாருக்கு திரட்டிக் கொடுத்த கதையையும், தானே அனானியா பலரையும் திட்டித் தீர்த்த கதையையும் அவரே எழுதுவாராக்கும்..!?
இதையும் ஒரு கேள்வின்னு சொல்லி நீங்களும் கேட்டிருக்கீங்க..?!!!
அவர் எழுதற கொடுமையைவிட நீங்க கேட்ட கொடுமைதாங்க ரொம்பப் பெரிசு..!
நல்லாயிருங்க..!
கோடானு கோடி நன்றிகள் உடனடி பதிவிற்கு.
அடுத்த நாள் பதிவர் சந்திப்பு பற்றியும் படிக்க ஆவலாய் உள்ளேன்.
சில நேரங்களில் நேரடியாக கலந்து கொள்வதை விட இம்மாதிரி பதிவுகளில் அதிக சுகம் ஏற்படுகிறது (கிரிக்கெட் போட்டி தொலைகாட்சி பெட்டி/ ஹிந்துவில் படிக்கும் சுகம் போல - நேரில் போகாமல் ).
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[குமுதம் ரிப்போர்டரில் சைபர் கிரைம் தொடர் பற்றி எழுதி வரும் லக்கிலுக்கிடம் நான் ஒரு கேள்வியை வைத்தேன். அதை எனக்கு ஒரு அனானி வாசகர் பின்னூட்டமாக இட்டிருந்தார், நான் அதை ஏற்கவில்லை. இப்போது எல்லார் முன்னிலையிலும் அக்கேள்வியை நான் வைத்தேன், அதாவது சைபர் கிரைம் ப்ற்றிய அத்தொடரில் அவர் போலி டோண்டு விவகாரத்தை தொடுவாரா என்பதே அக்கேள்வி. பாலபாரதி இப்போதுதான் லக்கிலுக் சீரியலையே எழுத ஆரம்பித்திருப்பதாகவும், இன்னும் பல காலத்துக்கு அது வரும் என்றும், அது முடிந்தபின் போலி டோண்டு விவகாரம் அதில் கவர் ஆகவில்லையெனில் அப்போது அவரை கேட்கலாம், இப்போது கேட்பது சஸ்பென்சை உடைத்து விடும் என்றார். நானும் அதை ஏற்று கொண்டேன்.]]]
எப்படி ஸார் இப்படி கூச்சப்படாம அவர்கிட்டயே கேட்டிருக்கீங்க..?
போலி டோண்டுவுக்கு அல்லக்கையா தானே இருந்த கதையையும், சக பதிவர்களைப் பற்றியத் தகவல்களை போலியாருக்கு திரட்டிக் கொடுத்த கதையையும், தானே அனானியா பலரையும் திட்டித் தீர்த்த கதையையும் அவரே எழுதுவாராக்கும்..!?
இதையும் ஒரு கேள்வின்னு சொல்லி நீங்களும் கேட்டிருக்கீங்க..?!!!
அவர் எழுதற கொடுமையைவிட நீங்க கேட்ட கொடுமைதாங்க ரொம்பப் பெரிசு..!
நல்லாயிருங்க..!//
உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
என்று ஒரு பழமொழி உண்டே
விரிவாக பதிவிட்டமைக்கு நன்றி!
பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
இந்த பழமொழிகளுக்கு டோண்டு பாணியில் நக்கலாய் கலாய்க்கவும்.
1.உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
2.தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரானா
3.கெடுவான் கேடு நினப்பான்
4.பேராசை பெரு நஷ்டம்
5.எறும்பூர கல்லும் தேயும்
6.ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்
போது
7.இலவு காத்த கிளிபோல
8.ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும்
9.ஊர்த்தேங்காய் எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைத்தது
போல்
10.கழுத்துவலி போய் திருகுவலி வந்தது போல்
நன்றி. நான் தற்போது இருப்பது அபுஜா என்ற இடம். இது நைஜிரியாவின் தலை நகரம். 1971 க்கு முன்பு லாகோஸ்தான் நைஜிரியாவின் தலைநகராக இருந்தது. சமீபத்தில் (1971) மாற்றிவிட்டார்கள்.
// இராகவன் நைஜிரியா said...
நன்றி. நான் தற்போது இருப்பது அபுஜா என்ற இடம். இது நைஜிரியாவின் தலை நகரம். 1971 க்கு முன்பு லாகோஸ்தான் நைஜிரியாவின் தலைநகராக இருந்தது.
சமீபத்தில் (1971) மாற்றிவிட்டார்கள்.//
.))))))))))))))
இராகவன் நைஜிரியா said
//சமீபத்தில் (1971) மாற்றிவிட்டார்கள்//
டோண்டு ராகவன்
//சமீபத்தில் 1978-ல் செய்தது குறித்து நான் எழுதிய யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை கூறி அதற்கான எதிர்வினைகள் //
ராகவன் சார்கள் ராஜ்யத்தில் ........
11.புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல்
12.சூரியனை பார்த்து நாய் குரைத்தது போல்
13.நாயை குழிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்
14.ஆடத்த்தெரியாதவனுக்கு தெருக் கோணல் எனபது போல்
15.உப்பில்லா பண்டம் குப்பையிலே
16.உப்பிட்டவரை உயிர் உள்ளவும் நினை
17.கூட இருந்து குழிபறிப்பது போல்
18.பார்த்தால் பசு பாய்ந்தால் புலி
19பசுத்தோல் போர்த்திய புலி போல்
20.நாடறிந்த அந்தணரருக்கு பூணுல் எதுக்கு
ஞாயிறு இரவு 12 மணி வரை உங்க பதிவை எதிர்பார்த்து காத்து இருந்தேன். பாவம் நீங்களே 1 கிமீ நடந்து நடு இரவில் தான் வீடு போய் சேர்ந்து இருக்கீங்கன்னு இதை படித்தவுடன் தான் தெரியுது.
உங்க பதிவு பதிவர் சந்திப்பிலே கலந்து கொண்ட மாதிரி இருக்கு டோண்டு சார்!
@அபி அப்பா
தங்கமணி பிரபுவுடன் (கோலங்கள் சீரியலில் டிஜிட்டல் பள்ளத்தாக்கின் பிரதிநிதியாக வருபவர்) பேசும்போது அவர் கோலங்கள் ஆரம்ப கட்டங்களில் தீபா வெங்கட்டுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையாக வந்து சில சீன்கள் செய்த ஞாபகம் வந்தது. கூடவே உங்கள் ஞாபகமும் வந்தது. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முன்னெச்சரிக்கையாக மூன்று கொசுவர்த்தி சுருள்கள் மற்றும் அவற்றுக்கான standகளுடன் சென்றிருந்தேன். என்ன அக்கிரமம், கொசுக்கள் இம்முறை கண்ணிலும் படவில்லை,//
நம்மைவிட பெரிய கடி மன்னர்கள் வர்றாங்கன்னு கொசுவுக்கு யாராவது தகவல் சொல்லியிருக்கலாம்!
பாம்பின் வால் பாம்பறியும்...
செந்தழல் ரவிக்கு உதவியாக போலி டோண்டுவின் குரலை பதிவு செய்து, அதன் பல சிடிக்களாக உருவாக்கியதையும் எழுதுவார் லக்கி...
செந்தழல் ரவி காவல்துறைக்கு எழுதிய கம்ளைண்டை பிரவுசிங் செண்டர்களில் மணிக்கணக்கான நேரம் செலவிட்டு ப்ரிண்ட் அவுட் செய்ததையும் லக்கி எழுதுவார் என்பது சிறப்பு..
அதை கஷ்டப்பட்டு டைப் செய்த உண்மைத்தமிழன் அண்ணன் செந்தழல் ரவியுடன் முருகன் இட்லிக்கடையில் அல்லவா இருந்தார் அப்போது ??? அண்ணே நியாபகம் இல்லையா ?
என்னக்கென்னவே இதனை இப்போது கிளறுவது தேவையில்லை என்று தோன்றுகிறது.
காலம் கூடவா உங்கள் காயங்களை ஆற்றவில்லை அண்ணே ? போலி டோண்டு விவகாரம் பற்றி போலி டோண்டுவே மறந்துவிட்டிருக்கக்கூடிய காலம் இது. இன்னுமா ??
//பாம்பின் வால் பாம்பறியும்... //
யாரோ என்னை வச்சு காமெடி பண்றாங்களே!
///செந்தழல் ரவி said...
செந்தழல் ரவிக்கு உதவியாக போலி டோண்டுவின் குரலை பதிவு செய்து, அதன் பல சிடிக்களாக உருவாக்கியதையும் எழுதுவார் லக்கி...
செந்தழல் ரவி காவல்துறைக்கு எழுதிய கம்ளைண்டை பிரவுசிங் செண்டர்களில் மணிக்கணக்கான நேரம் செலவிட்டு ப்ரிண்ட் அவுட் செய்ததையும் லக்கி எழுதுவார் என்பது சிறப்பு..
அதை கஷ்டப்பட்டு டைப் செய்த உண்மைத்தமிழன் அண்ணன் செந்தழல் ரவியுடன் முருகன் இட்லிக்கடையில் அல்லவா இருந்தார் அப்போது ??? அண்ணே நியாபகம் இல்லையா ?
என்னக்கென்னவே இதனை இப்போது கிளறுவது தேவையில்லை என்று தோன்றுகிறது.
காலம் கூடவா உங்கள் காயங்களை ஆற்றவில்லை அண்ணே? போலி டோண்டு விவகாரம் பற்றி போலி டோண்டுவே மறந்து விட்டிருக்கக்கூடிய காலம் இது. இன்னுமா??///
தம்பி.. ராசா.. கண்ணா..
சுலபத்துல மறக்கக் கூடிய விஷயமா இது..?
எத்தனை நாள்.. என்னென்ன கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்..
அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக நான் செலவிட்ட பல மணி நேரங்களை இப்போது நான் திரும்பப் பெற முடியாது..
எதிரியும், எதிரிக்கு நண்பனாக இருந்தவனும் எனக்கு எதிரிதான்.. இது புது பழமொழி.
சைபர் கிரைம்ல குற்றவாளியா நிக்க வேண்டியவரே, சைபர் கிரைம் பத்தி எழுதறது காமெடியா இல்ல..!?
அதைத்தான் நான் போன பின்னூட்டத்துல சொல்லியிருக்கேன்.
அவர் திருந்திட்டாரு.. மறந்திட்டாரு.. போலி டோண்டுவே மறந்திட்டாருன்னு நீ வேண்ணா சொல்லிக்க..
நான் இனியொரு முறை ஏமாறவும் தயாராகவில்லை.. மன்னிக்கவும் தயாராக இல்லை..
Dondu Sir,
Follow these links and enjoy your time with K.J.Yesudas lovely vocals in Hindi.Each & every words we can clearly notify. He have done simply superb job with excellent output.
I am sure, these belowed contents will be the best feast to you. Tribute to K.J.Yesudas.
http://www.youtube.com/watch?v=FOW9LWn3OgM&feature=related
http://www.youtube.com/watch?v=XaK8cqg4xv0
http://www.youtube.com/watch?v=vejr2_PXVQo&feature=related
http://www.youtube.com/watch?v=IFlVF45rhvc&feature=related
http://www.youtube.com/watch?v=273VlFdkAVY&feature=PlayList&p=9EE0C03F71DB6238&index=2
http://www.youtube.com/watch?v=Q58rC3I2MNI&feature=related
//அவர் திருந்திட்டாரு.. மறந்திட்டாரு.. போலி டோண்டுவே மறந்திட்டாருன்னு நீ வேண்ணா சொல்லிக்க..//
Did luckylook do those kinda things?
இந்த பதிவை பின்தொடர்கிறீர்களா ?
http://www.narendramodi.com/
1.லாரிவாடகை 25 % கூட்டும் போக்கு, அதிகமாய் இருக்கிறதே,
அரசின் கட்டுப்பாடு வருமா?
2.ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை சம்பளமாய் அள்ளிக் கொடுக்கும் அரசுகள், சலுகைகளையும் தராளமாய் வழங்குவது சமானயனுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
3.எல்லாப் பொருளின் விலையும் உச்சத்தில் இனி என்னவாகும்-வால்பையன் சொல்வது போல் அரிசி கிலோ 100 ரூபாய் ஆகிவிடுமா?
4.மம்தாவின் மக்கள் நல,வங்களா நல ,மகளிர் நல ,பணியாளர் நல ரயில்வே வரவு செலவு அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
5.பொது வரவு செலவு அறிக்கையில் என்ன என்ன இருந்தால் பாராட்டி மகிழ்வீர்கள்?
1.பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.இது நியாமா? லிடருக்கு அரசு கூட்டியது வெறும் நாலு ரூபாய்.ஆனால் இவர்கள்?
2.ஓரினச்சேர்க்கையை வரவேற்கும் நடிகை குஷ்பு மீண்டும் சிக்கலில் மாட்டப் போகிறாரா?
3.டி.ஆர் பாலு மற்றும் அழகிரி வெற்றியை எதிர்த்தும் வழக்கு போட்டவரின் மனத்திண்ணம் பற்றி?
4.பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜூலை 15. காங்கிரசாரின் தனி ஆட்சிக் கனவுக்கு கட்டியங்கூறும் நாளாகுமா?
5.பெட்ரோல்,டீசல் விற்பனையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுதந்திரம் கொடுப்பது மறைமுகமாய்,மூடி கிடக்கும் ரிலயின்ஸ் பெட்ரோல் நிலயங்களுக்கு மறு வாழ்வு அளிக்கவா?
//வால்பையன் said...
//பாம்பின் வால் பாம்பறியும்... //
யாரோ என்னை வச்சு காமெடி பண்றாங்களே!//
.)))))))))))))))))))))
Post a Comment