இதைத் தெரியாதவங்க யாராவது இருக்காங்க? ஆனாக்க அதுக்கு போய் மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்களே.
நண்பர் சந்திரசேகர் எனக்கு அனுப்பித்த இந்த மின்னஞ்சலில் Pat Hagan என்பவர் Telegraph, UK-ல் எழுதிய கட்டுரையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது சம்பந்தமாக எனது ஆங்கில வலைப்பூவில் இந்த இடுகை இட்டுள்ளேன்.
எவ்ளோ புத்திசாலியா இருந்தா என்ன, அம்சமா ஒரு ஃபிகர் வந்து புன்னகை செஞ்சாலே ஃப்ளாட் ஆயிடறாங்களே. இது லோகத்துக்கே தெரிஞ்ச விஷயம்தானே. இருந்தாலும் இதையும் நிரூபிக்க ஒரு ஆய்வு நடத்தியிருக்காங்கப்பு. அது பத்தித்தான் இப்பதிவில் பார்க்கப் போறோம்.
இந்த ஆய்வில் என்ன செஞ்சாங்க? மூளையை உபயோகித்து ஸ்கோர் செய்ய வேண்டிய சோதனை ஒண்ணை தேர்ந்தெடுத்தாங்க. முதலில் ஆண்கள் எல்லாம் டெஸ்ட் கேள்விகளுக்கு மடமடன்னு பதில் கொடுத்தாங்க. அதே ஆண்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அழகான பெண்ணுடன் பேச விட்டாங்க. பிறகு மறுபடியும் டெஸ்ட் பண்ணாக்க அவனவன் சிங்கியடிக்கிறான். முந்தைய ஸ்கோர் வரவேயில்லையாம். ஆக ஜொள்ளு விட்டாக்க வேலையில் காலியாங்கற கேள்விக்கு ஆமாம் அப்படித்தான்னு விடை கிடைத்த் விட்டது.
இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் அதன் ரிசல்டுகளை Journal of Experimental and Social Psychology-யில் பதித்துள்ளனர். அவர்களது துணிபு என்னவென்றால், அழகான ஃபிகர்களை மடக்கும் நோக்கத்துடன் புத்தியை அதிகம் செலவழித்ததாலேயே ஆய்வில் பங்கு கொண்ட ஆண்கள் பின்னால் டெஸ்டில் பிளாங்கி அடித்தனர் என்பதேயாகும்.
கோஎஜுகேஷன் ஸ்கூல்களில் பரீட்சையில் கோட்டைவிட்டப் பசங்கள் முக்கால்வாசி நேரம் இந்த ஜொள்ளு விஷயத்தால்தான் கெட்டார்கள். வேலை செய்யும் இடங்களில் கூட சூதனமாக பெண்டுகள் பின்னால் போகாமல் இருங்கடா டோமருங்களா என சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதே சமயம் அழகான ஆண்களுடன் பழகும் பெண்களுக்கெல்லாம் அம்மாதிரி நிகழ்வதில்லையாம்.
ஏன் இப்படி என்கிற கேள்விக்கு அளிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஃபிகர்களை மடக்குவது ஆண்களுக்கு கடினமாக இருக்கிறதாம். அதே சமயம் பெண்கள் தங்களுடன் உறவு கொள்ள ஆண்களை சுலபமாக அழைக்கவியலுமாம். இதுக்காக விசேஷமாக முயற்சிகள் எதுவும் தேவையில்லையாம். வெறுமனே செக்ஸியாக ஒரு லுக் விட்டு, லேசாக உடலுடன் உராசினாலே வெற்றிதானாம். ஆனால் ஒன்று. பின்னால் வரும் விளைவுகளையும் கவனிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உசுப்பப்பட்ட ஆண் சட்டென பின்வாங்க மாட்டான். ஆகவே தமாஷுக்காகவெல்லாம் இதைச் செய்யலாகாது என்பதை ஒரு புத்திசாலிப் பெண் உணர்ந்தே இருப்பாள். எது எப்படியானாலும் பிள்ளை பெறப்போவது அவள்தானே. அவதியும் அவளுக்குத்தானே.
இந்த ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஆண் டெஸ்டுக்கு பிறகு தன் விலாசத்தைக்கூட சிறிது நேரத்துக்கு மறந்தானாம். எல்லாம் நேரந்தேன். அப்படியா ஒருவன் தன் சக்தியை இம்மாதிரி வீணாக்குவான்?
British Psychological Society-யை சேர்ந்த மனோதத்துவ நிபுணர் Dr. George Fieldman கூறுவது என்னவென்றால் ஆண் எப்போதுமே தனது ஜீன்களை பரப்புவதிலேயே குறியாக இருப்பான் என்பதே. அதனால்தான் அழகிய ஃபிகர்களிடம் அசடு வழிவது எல்லாம் நடக்கிறது.
ஆனால் பெண்ணோ மேலதிக விஷயங்களையும் பார்க்கிறாள். ஆணின் செல்வம், இளமை, நல்ல குணம் எல்லாமே அவளது தெரிவில் காரணிகளே.
அதாகப்பட்டது பெண் புத்தியுடன் செயல்படுகிறாள். ஆணுக்கு அவ்வளவு போதாது. அதாவது பெண்புத்தி முன்புத்தி இந்த விஷயத்தில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
22 hours ago
16 comments:
மசையனுங்க தான்! ஆனா எப்படிப்பட்ட மசையனுங்கன்னு இந்த நாடே தெரிஞ்சுக்கவேனாமுங்களா? மசைத்தனத்தை அளந்து பாக்கற மாதிரியும் ஆச்சு, ஆகக் கூடின மசையன் யார்னு அம்மிணி தெரிஞ்சு ஜோடிப்பொருத்தம் சரின்னு சொல்றதுமாச்சுங்கோ!
நீங்க வேற, டோமரு, டாமருன்னுட்டு..!
டோண்டு அய்யா,
நீங்க சொல்ற படி ஜொள்ளுபார்டிங்க முட்டாளக்ளாகத் தான் இருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாக இருக்கலாம்.ஆனால் எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு என்று ஒரு சமாசாரம் இருக்கும் அல்லவா.
ஜொள்ளு விடுவதில் நம்ம ஊர் மஞ்ச துண்டு அய்யாவை விஞ்ச இன்னுமொரு ஜீவன் இனிமேல் பிறந்தால் தான் உண்டு.ஆனால் இந்த அய்யா ஜொள்ளுவிடுவதற்க்கு கூட் நம்ம ஊர் ஜல்லி பார்டிங்க பணம் கொடுத்து தானே அழைத்து வர வேண்டியிருக்கிறது.ஆகவே, ஜொள்ளு விடும் போது கூட பணம்(நிதி)சம்பாதிக்கும் இந்த அய்யா சூப்பர் புத்திசாலி அல்லவா.
பாலா
<<<
கோஎஜுகேஷன் ஸ்கூல்களில் பரீட்சையில் கோட்டைவிட்டப் பசங்கள் முக்கால்வாசி நேரம் இந்த ஜொள்ளு விஷயத்தால்தான் கெட்டார்கள். வேலை செய்யும் இடங்களில் கூட சூதனமாக பெண்டுகள் பின்னால் போகாமல் இருங்கடா டோமருங்களா என சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள்.
>>>
ஹிஹிஹி... :D
வயசு அப்படித்தான்.
nice post, thanks for sharing
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
(பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளிலிருந்து)
http://masivakumar.blogspot.com/2009/09/blog-post_08.html
கடவுள் மறுப்புக் கொள்கையும், ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்ததும் திராவிட இயக்கத்தின் இரு பெரிய போக்குகள் என்று எடுத்துக் கொண்டால், கடவுள் மறுப்புக் கொள்கை தமிழ் நாட்டில் முழுவதுமாக தோல்வி அடைந்து விட்டது என்றே சொல்லலாம். கடந்த 20 ஆண்டுகளில் சாமியார்கள், போதகர்கள், கோவில்கள் என்று பல மடங்கு பெருகியிருக்கின்றன. மக்கள் இன்னும் அதிகம் தேடலில் இறங்கியிருக்கிறார்கள்.
சாதி முறை ஆதிக்கத்தை உடைப்பதில் பெரு வெற்றி அடைந்தது திராவிட இயக்கம். கிட்டத்தட்ட 70%க்கு மேல் பாரம்பரியமாக பலன் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்த சாதியினருக்கு போய்ச் சேரும்படி இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே முன்னோடியாக செய்து காட்டியது திராவிட இயக்கங்களின் சாதனை. ஆனால், அந்த சாதனைக்கு பாதி மதிப்பெண்கள்தான் கொடுக்க முடியும். சமூக மாற்றங்கள் ஏற்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுபவர்களையும் மாற்றங்களை புரிந்து ஏற்றுக் கொள்ளச் செய்து அவர்களையும் பங்குதாரர்களாக கொண்டு போகாத இயக்கங்கள் சமூகத்தின் மீது மிகப்பெரிய சுமையை சுமத்தி விடுகின்றன.
பார்ப்பனராக பிறந்த ஒவ்வொருவரையும் குற்றவாளியாக நிறுத்தும் தமிழக அரசியல், அறிவுஜீவி வட்டங்களில் உருவாக்கிய பெருமை திராவிடத் தலைவர்களின் அணுகுமுறைக்குத்தான் சாரும். ஒருவர் பிராமணனாக இருந்தால் முதலில் தனது தமிழின தகுதிகளை நிரூபித்துக் காட்ட வேண்டும். தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதிர்க் கருத்து சொல்ல வரும் யாரும் 'நீ பார்ப்பான்தானே' என்று ஒரே சொல்லில் அவர்களை ஒதுக்கித் தள்ளி விட அனுமதிக்கும் சமூகப் போக்கு தமிழகத்தின் மிகப்பெரும் அவலம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் வகுத்த வழியில் வாழ வேண்டிய தமிழ்க் குடிகள், பிறப்பால் பார்ப்பனராக பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக ஒருவரை அவமதித்து, சிறுமைப்படுத்தி மனம் புண்படுத்தி வைத்திருப்பது மிகப்பெரிய ஒரு அவலம்.
மனு நீதி சாத்திரமும், அதன் அடிப்படையில் சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கி அதற்கான தத்துவ ஆதாரங்களை அமைத்துக் கொடுத்த பிராமணீயத்தை கண்டித்து வேரறுப்பது தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதைச் செய்யும் போது பிராமணர்களை புண்படுத்தாமல் செய்திருந்தால் இயக்கத்தின் தலைமை பெருமை பெற்றிருக்கும்.
அதில் பெரும் குற்றவாளி கருணாநிதி என்பது தமிழக அரசியல் களத்தை கவனிக்கும் எல்லோருக்கும் எளிதில் புரியும். எப்போதுமே பிராமணர்களை புண்படுத்துவதில் முனைப்பாக நிற்கும் அவரது நாக்கு தமிழகத்தைக் கூறு போட்டு வைத்திருக்கும் ஒரு தீய ஆயுதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணானது.
இந்த பதிவ வால் பாத்தாச்சா? நேத்து வந்து நான் ரொம்ப ஓவரா ஆணியம் பேசறதா சொல்லிட்டு போனாரு. பாவம், அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்குமா? ஆண்கள் பாவம்தான் நிஜமாவே. :))
:))
--வித்யா
லிங்கில் இருக்கற ஆர்டிகிளவிட அதுக்கு வந்திருக்கும் கும்மிகள், சிரிப்போ சிரிப்பு.
--வித்யா
இயற்கை தானே!
எனக்கு நல்லவன் மாதிரி நடிக்கவெல்லாம் தெரியாது!
ஒத்துகிறேன்!
தலிவா... டோமரு-னா இன்னா மீனிங்கு
முதல்வன் "ஷக்கலக்க பேபி" பாட்டு பார்த்திருக்கிறீர்களா ?
What are the methods that experts recommend to men for attracting women?
//What are the methods that experts recommend to men for attracting women?//
அதுங்காட்டியும் தெரிஞ்சாக்க நிபுணன்கள் அத்தெல்லாம் நமக்கு சொல்லிகிட்டிருப்பாங்களா இல்லே இந்த ஆய்வை செஞ்சுத்தான் டைமை வேஸ்ட் பண்ணிட்டிருப்பாங்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Thanks Dondu Sir. Excellent commentary.
நான் பின்னூட்டத்தை முடிப்பதற்குள் பிளாக்கர் சொதப்பலால் பப்ளிஷ் ஆகிவிட்டது.
நான் சொல்லவந்ததை முழுதாகச் சொல்லிவிடுகிறேன்.
ஷக்கலக்க பேபி பாட்டில்,
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்டை விட்டோம்...
லவ்வுல லயிச்சா லவ்வுல லயிச்சா வாழ்க்கை ஓடி விடும்...
என்ற வரிகள் வரும்.
அப்போது LIFE என்று வெள்ளை எழுத்துக்களில் பெரிதாக எழுதியிருக்கும் ஒரு கருப்பு டீ ஷர்ட் போட்டவன் அப்படியே தூரத்தில் ஓடுவான்....அறுமையான ஷாட் அது. அரை வினாடி வந்தாலும் நறுக்கென்று இருக்கும்.
Are there any relations between this post
http://vediceye.blogspot.com/2009/09/blog-post_6894.html
( Who is being referred as Mental Bhaskar :-))
and these posts ?
http://www.charuonline.com/Sep2009/varamtharumkalpatharu.html
http://www.charuonline.com/Aug2009/Katavulaikanten_1.html
Post a Comment