"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."
மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.
அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))
"ஒவ்வொரு தலைமுறையும் தான்தான் செக்ஸைப் பற்றிக் கண்டுபிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்று ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த வாத்சாயனர் வேறு கூறியிருக்கிறார். அக்கால ஆசிரியர்கள் போல இக்காலத்தில் எங்கு கிடைக்கிறார்கள் என்று சமீபத்தில் 1930-ல் வெளி வந்த தனது "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் பேராசிரியர் கல்கி பொருமியிருப்பார்.
இன்று துக்ளக்கில் துர்வாசர் என்னும் புனைப்பெயரில் வரும் ஒரு எழுத்தாளரை பற்றி வந்த ஒரு பிரஸ்தாபமே நான் இப்போது போடும் பதிவுக்குக் காரணம். துர்வாசர் இப்போதெல்லாம் கல்விக்கூடங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது போல இல்லை என்று பொருமி வருகிறார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அதே துக்ளக்கில் அதே பெயரில் அப்போது எழுதியவரும் பொருமியிருப்பார். அதாவது நாற்பதுகளில் இருந்த மாதிரி இப்போது இல்லை என்று. முப்பதுகளில் இருந்த நிலையைப் பற்றி கல்கி அவர்கள் கூறியதை ஏற்கனவே மேலே பார்த்து விட்டீர்கள்.
சமீபத்தில் 1880-களில் வெளி வந்த "கமலாம்பாள் சரிதம்" என்னும் நாவலில் (தமிழில் இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் பிரதாப "முதலியார் சரிதம்"). அதில் பள்ளிக்கூட பசங்கள் பாடிய பாட்டை இப்போது பார்ப்போம்.
"நெடுமால் திரு மருகா
நித்தம் நித்தம் இந்தெழவா
இந்த வாத்யாரும் சாவாரா
என் வவுத்தெரிச்சல் தீராதா".
நான் மிகவும் ரசிக்கும், எனக்கு பதிவுகள் போடுவதற்கான இன்ஸ்பிரேஷனாக இருந்த என் அருமை நண்பர் பதிவிலிருந்து கோட் செய்து இப்பதிவை முடிக்கிறேன்.
"ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
7 hours ago
28 comments:
////"ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."////
எங்கே இருந்து எடுத்தீர்கள் ? சொல்ல முடியுமா ?
டோண்டு சார், 1880யும் சமீபமா ஆகிப் போச்சா? நல்லா இருக்கு சார்! :)
"எங்கே இருந்து எடுத்தீர்கள் ? சொல்ல முடியுமா?"
கண்டு பிடியுங்கள், இதை ஒரு போட்டியாக அறிவிக்கிறேன். இப்போட்டியிலிருந்து நான் கோட் செய்த சம்பந்தப்பட்ட பதிவர் டிஸ்க்வாலிஃபை செய்யப்படுகிறார்.
விடை கூறினால் போதாது. சுட்டியுடன் கூற வேண்டும்.:)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டோண்டு சார், 1880யும் சமீபமா ஆகிப் போச்சா? நல்லா இருக்கு சார்! :)"
கி.மு. 399-ஏ சமீபம் என்று ஆனதுக்கப்புறம், 1880 எல்லாம் ஜுஜூபிதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூகிளாண்டவர் புண்ணியத்தில் ,
balaji_ammu.blogspot.com
அதையும் சேர்த்துத்தான் கேட்கணமுன்னு நினைச்சேன். விட்டுப் போச்சு. :)
////"ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."////
இந்த வரிகளை என்றென்றும் பாலா அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி இருந்தார் என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.... அவர் பதிவில் தேடிப் பார்க்கட்டுமா?
லக்கிலுக் வெற்றி பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். என்னைப் போன்ற இக்காலத்துப் பசங்க ரொம்ப ஸ்மார்ட்ன்னு கூறிவிடுகிறேன்.
பாலா இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதியதை இப்போது மீள் பதிவு செய்தார். அதன் முழு சுட்டி இதோ. பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/09/ii_30.html
அவரை வைத்து நான் காமெடி பண்ணவில்லை என்று எடுத்துக் கொள்ளுமாறு இந்த இளைஞன் டோண்டு ராகவன் கேட்டுக் கொள்கின்றான். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது//
செந்தழல் ரவியின் ஆதங்கம்தான் எனக்கும்.
உங்களுடைய முடிவு சரியில்லையென்றே தோன்றுகிறது..
என்னுடைய மகளுடைய பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களில் சிலரை சந்தித்திருப்பதால் சொல்கிறேன்.
அவர்களுக்கு இக்கால இளைஞர்களுடைய போக்கிலேயே விட்டு அவர்களை தங்கள் வழிக்கு கொண்டுவருவதில் படு சமர்த்தர்களாயிருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்..
அத்துடன் நீங்கள் எடுத்துக்காட்டிய சாக்ரட்டீஸ் (யாரோ ஒருத்தர் அதுவா முக்கியம்) மேற்கோளும் சரியில்லையென்றே படுகிறது. அது எக்காலத்தையும் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கத் தெரியாத ஒரு முதியவரின் கருத்தாகவே தென்படுகிறது.
எல்லா தலைமுறையிலும் அக்காலத்திய இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை விடவும் திறமையுள்ளவர்களாகவே எனக்கு தென்பட்டு வந்துள்ளார்கள்.
"எல்லா தலைமுறையிலும் அக்காலத்திய இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை விடவும் திறமையுள்ளவர்களாகவே எனக்கு தென்பட்டு வந்துள்ளார்கள்."
இக்கால இளைஞர்கள் சார்பில் இந்த இளைஞன் நன்றி தெரிவிக்கிறான்.:))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))//இது என்ன குத்து.ரசித்தேன்.
லியோ சுரேஷ்
துபாய்
நன்றி லியோ சுரேஷ் அவர்களே. முதுமை-இளமை நினைப்புகளுக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பத்மகிஷோர் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள்தான் வெற்றி பெற்றீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"The more the things change the more they remain the same."
அதே அதே சபாபதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது//
இல்லை என்று ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது. வேண்டுமானால் குறைவு என்று சொல்லலாம்...
"இல்லை என்று ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது. வேண்டுமானால் குறைவு என்று சொல்லலாம்..."
இதெல்லாம் உணர்ச்சியில் பேசுபவை. அதாவது நமக்குச் சிறுவயதில் வரும் அனுபவங்களை வைத்து பேசுகிறோம். மற்றப்படி வாழ்க்கை அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஏதாவது புள்ளி விவரம் எடுத்தோமா? இல்லையே. எங்கள் 8-ஆம் ஆசிரியர் திரு. ஜெயராம ஐயங்கார் சனி ஞாயிறு மற்ற விடுமுறை தினங்களில் ஆங்கில இலக்கணத்துக்காக தனி வகுப்புகள் எடுப்பார். இப்போதும் ஏதேனும் ஒரு ஆசிரியர் நாட்டின் ஒரு மூலையில் அவ்வாறு செய்து கொண்டிருக்கலாம். இதெலாம் மனிதர்களை சார்ந்து உள்ளது காலம் சார்ந்து அல்ல. அதாவது அந்தக் காலத்தில் எல்லாமே நன்றாக இருந்தது இப்போது அவ்வாறில்லை என்று கூறுவது முன்பும் நடந்தது, இப்போதும் நடக்கிறது, இனிமேலும் நடக்கும்.
அதைத்தான் இப்பதிவில் வலியுறுத்த நினைத்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆசிரியர் தொழிலை சேவையாக நினைப்பவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். காந்தி க்ராமத்தின் தம்பித் தோட்டம் பள்ளியில் ஆசிரியராக இருந்த வெங்கட்ராமன் ஒரு உதாரணம். கணக்கு வாத்யாராக இருந்த இவர் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்க விதித்தது ஒரு நாளைக்கு 25 பைசா. அதுவும் கொடுக்கும் மாணவர்களிடம் மட்டும்தான் வாங்குவார். மற்றவர்களிடம் கேட்கக்கூட மாட்டார். கொடுக்கும் மாணவர்களிடம் அவர்கள் வராத நாட்களுக்கான பைஸாக்களை கழித்துக்கொண்டுதான் வாங்குவார். வகுப்பில் நடத்தப்படும் அதே பாடங்கள்தான் ட்யூஷனிலும் நடத்தப்படும். இரண்டு எம் ஏக்கள் படித்துமுடித்திருந்த இவரை எல்லா மாணவர்களும் மாமா என்றுதான் அழைப்பார்கள். பலருக்கு அவரது நிஜப்பெயர்கூட தெரியாது. தான் கடைபிடிக்கும் நேர்மையை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பதால் இவரை மாணவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது.
அதே பள்ளியில் இருந்த மற்றொரு வாத்தியார் சிறப்பாக பாடம் நடத்தினாலும், ட்யூஷன் மாணவர்களுக்குச் சில சிறப்பான முறைகளில் பாடம் நடத்துவார்.
இருவரும் ஒருவரை ஒருவர் முகம்கொண்டுகூட பார்த்துக்கொள்ள மாட்டார்கள்.
மற்றபடி இருவரும் சிறந்த ஆசிரியர்கள்தான். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் சிறந்த ஆசிரியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.
//
"The more the things change the more they remain the same."
//
வழிமொழிகிறேன்.
//
டோண்டு சார், 1880யும் சமீபமா ஆகிப் போச்சா? நல்லா இருக்கு சார்! :)
//
சமீபத்தில் 1300 BC ல் மோசஸ் செங்கடலைப் பிழந்து இஸ்ரவேலர்களை அழைத்துச் சென்றார்...;D
"ஆசிரியர் தொழிலை சேவையாக நினைப்பவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள்."
எப்போதுமே இருந்து வந்திருக்கிறார்கல், இருக்கிறார்கள், இருப்பார்கள்.
ஆனால் என்ன, எப்போதுமே குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள். அவர்களை ஆசிரியராகப் பெற அதிர்ஷ்டம் செய்த மாணாக்கர்கள் பிற்காலத்தில் பேசும்போது தங்கள் காலத்தைப் போல டீச்சர்களே இல்லை என்று கூறுவார்கள்.
என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது.:))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"சமீபத்தில் 1300 BC ல் மோசஸ் செங்கடலைப் பிழந்து இஸ்ரவேலர்களை அழைத்துச் சென்றார்...;"
About this Exodus there is a joke. Moses stands before the Red Sea and says, "I will split the sea", whereupon his publicity agent exclaims, "Baby, you just do it, I will get you two pages in the old testament".
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
நல்லாசிரியர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.
சிலருக்கு நம்ம செந்தழல் ரவிக்கு கிட்டிய ட்யூசன் வணிகமே நோக்கமாகக் கொண்ட 'மாவு"ஆசிரியர் மாதிரியானவர் டிரிக்னாமென்ட்ரியை "அடித்து"ச் சொல்லித்தரக் கிடைக்கிறார்கள்.
சிலருக்கு காலத்துக்கும் நினைக்கும் போது நன்றியுணர்வில் கண்ணில் நீர் வரும் அளவுக்குப் பண்பான கடைமையான ஆசிரியர் கிடைக்கின்றனர்.
எனக்கான ஆசிரியர்களிடம் எனக்கு கதம்பமான அனுபவம்.
விதி வலியது. ஆசிரியரையும் அதுவே தீர்மானிக்கிறது!!
அன்புடன்,
ஹரிஹரன்
"சிலருக்கு நம்ம செந்தழல் ரவிக்கு கிட்டிய ட்யூசன் வணிகமே நோக்கமாகக் கொண்ட 'மாவு"ஆசிரியர் மாதிரியானவர் டிரிக்னாமென்ட்ரியை "அடித்து"ச் சொல்லித்தரக் கிடைக்கிறார்கள்."
அப்புசாமி சீதாப்பாட்டி ஜோடியை உருவாக்கிய ஜ.ரா. சுந்தரேசனை பற்றி இங்கு கூற விரும்புவேன். அவருக்கு இப்போது எழுபதுக்கும் மேல். அவர் தன் சிறுவயது அனுபவங்களைப் பற்றி எழுதும் போது ஓரினச் சேர்க்கையில் விருப்பம் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் தனது பதவிய பயன்படுத்தி பசங்களை மிரட்டி காரியத்தை சாதிக்க நினைத்ததைப் பற்றி எழுதியுள்ளார்.
இதை இங்கே ஏன் கூறுகின்றேன்? கால தேச வர்த்தமானத்தை மீறியது மனித நடத்தைகள். அதிலும் எப்போதுமே சிறு வயது சிந்தனைகள் இனிமையானதால் அந்தக் காலம் போல இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் என்னைப் போன்ற இளைஞர்கள் இந்த நிமிடம் கூட அற்புதம் என்று கூற விழைகிறோம். தினமும் புதிதாகக் கற்கும்போது ஆண்டொன்று போனாலும் வயதொன்று போகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
//நான் மிகவும் ரசிக்கும், எனக்கு பதிவுகள் போடுவதற்கான இன்ஸ்பிரேஷனாக இருந்த என் அருமை நண்பர் பதிவிலிருந்து கோட் செய்து இப்பதிவை முடிக்கிறேன்.
"ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."
//
என் பதிவிலிருந்து quote செய்கிற அளவுக்கு, என்னை தூக்கி விட்டுட்டீங்க ! நன்றி :) இந்த மாதிரி இமேஜ் பில்டப், சமயத்துல உதவும் கூடத் தான் ;-)
//அவரை வைத்து நான் காமெடி பண்ணவில்லை என்று எடுத்துக் கொள்ளுமாறு இந்த இளைஞன் டோண்டு ராகவன் கேட்டுக் கொள்கின்றான். :)))
//
அப்ப நான் யாரையாவது வச்சு சமீபத்தில (உங்க "சமீபத்தில்" அல்ல!) காமெடி பண்ணேன்னு சொல்ல வரீங்களா ??? ;-) சிங்கப்பூரிலிருந்து ஒருத்தர் என் கூட சண்டைக்கு வரணுமுன்னு ஆசையா அய்யா உங்களுக்கு ???
எ.அ.பாலா
"சிங்கப்பூரிலிருந்து ஒருத்தர் என் கூட சண்டைக்கு வரணுமுன்னு ஆசையா அய்யா உங்களுக்கு ???"
:)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது அப்படியில்லை செர்வாண்டஸ். நான் கடந்த 35 ஆண்டுகளாக 25 வயது நினைப்பிலேயே இருந்து வருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் கடந்த 35 ஆண்டுகளாக 25 வயது நினைப்பிலேயே இருந்து வருகிறேன்.
இப்படி எத்தனை வருடங்களாகச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்?
"இப்படி எத்தனை வருடங்களாகச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்?"
சொன்னதில்லை, நடத்தையில் காட்டி வருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
On browsing through your posts in the chronologically reverse order, I came upon this intriguing post.
"அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))"
If that old guy had seen this post from this 60 year young man, he would have been flabbergasted much more.
Sorry for commenting here and elsewhere in English. I am typing these comments from a browsing centre.
Thangamma
Post a Comment