சுப்பிரமணியன் சுவாமியை கே.பி. சுனில் கண்ட பேட்டியின் ஒன்பது வீடியோக்கள்
சுவாமியின் கொச்சைத் தமிழ் சற்றே படுத்துகிறது. இப்போது பேட்டிக்கு போவோம். அது நடக்குமிடம் புது தில்லியில் இந்தியா கேட்டுக்கு அருகில்.
சுனில் வைத்த முதற் கேள்வி என்னவென்றால் முதலில் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் பிரதம மந்திரி ஒரு நடவடிக்கையையும் எடுக்காததை சாடி இருந்தார். ஆனால் இப்போது நிலைமை இவ்வளவு தீவிரமாக வந்த நிலையில் சுவாமி பிரதம மந்திரிக்கு ஆதரவு அளிப்பது போல ஏன் பேசுகிறார் என்பதே. இதற்கு சுவாமியின் பதிலில் பிறகுதான் தனக்கு பிரதம மந்திரி அவரது புகார்களின் மேல் எடுத்த நடவடிக்கை தெரிய வந்தது என்றார். தனது ஒவ்வொரு கடிதத்தையும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆக்ஷன் எடுக்குமாறு நோட் போட்டதாகவும், அந்த அதிகாரிகள் அவற்றை தாமதமாக சட்ட அமைச்சகத்துக்கிஉ அனுப்பியதாகவும், சட்ட அமைச்சகம் பிரதமருக்கு தவறான அறிவுரைகள் தந்தது என்கிறார். அவருக்கு இதில் உள்ள சட்ட நுணுக்கங்களை யாருமே அவருக்கு எடுத்துக் கூறவில்லை என்கிறார்.
அதாவது பிராசிக்யூஷனுக்கு அனுமதி கேட்டு சுவாமி எழுதியதில் ப்ரிமா ஃபேசி கேஸ் இருந்தால் அனுமதி தருவதோ அல்லது மறுப்பதோதான் பிரதமர் செய்ய வேண்டியது. அதை விடுத்து அவரும் அவற்றை இன்வெஸ்டிகேட் செய்யப் புகலாகாது. ராசாவுக்கு இது பற்றி ஒரு தகவலும் தரலாகாது போன்ற விஷயங்களை சுப்ரீம் கோர்ட் கூறியது. இது பற்றி பிரதமருக்கு ஐடியாவே இல்லை. அவர் சட்ட நிபுணர் இல்லை, பொருளாதார நிபுணரே.
இம்மாதிரி தவறாக தகவல் தந்து அவரை திசை திருப்பவைத்து, அவர் பெயரைக் கெடுத்து அவரை பதவிலிருந்து நீக்கி ராகுலை கொண்டுவரவும் சதி இருக்கிறது என்பதை தான் உணர்ந்ததாலேயும், அதற்கு தான் ஏன் துணை போக வேண்டும் என நினைத்ததாலேயுமே தான் இப்போது பிரதமர் விஷயத்தில் அடக்கி வாசிப்பதாக சுவாமி கூறுகிறார். பிரதமரை எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் சோனியாவுக்கு இருந்தாலும். நல்லவர் என பெயர் எடுத்திருக்கும் பிரதமரின் பெயரை கெடுத்து பிறகு அவரை வெளியேற்றுவதுதான் அஜெண்டா என்றும் கூறுகிறார்.உங்களுக்கு எப்படித் தெரியும் என சுனில் கேட்க, சுவாமி தனக்கும் காங்கிரசில் தகவல் சொல்ல ஆட்கள் உள்ளனர் என்றார்.
பிரதமர் நிஜமாகவே ஒன்றும் செய்யாது அமர்ந்திருந்தால் தானும் அவர் ராஜினாமாவை கோரியிருப்பார் என்றும் அவர் கூறினார். பிரதமருக்கு தான் கடைசியாக எழுதிய கடிதத்தில் பிரதமர் இரு விஷயங்களை உடனுக்குடன் செய்தால் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
1. தவறாக பெறப்பட்ட லைசன்சுகலை ரத்து செய்வது. 2. பணம் தவறாக ஈட்டியவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது. கபில் சிபல் இப்போது செய்யும் நடவடிக்கைகள் அரைமனதாகத்தான் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். இவ்வளவு நாட்கள் ஆகியும் ராசாவை விசாரிக்கக் கூட இல்லை, அவர் பெயரைக்கூட குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. இதெல்லாம் செய்யக் கோரி தான் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சுவாமி கூறுகிறார். இனிமேலும் பிரதமர் வெறுமனே லெட்டர்களை மட்டும் அதிகாரிகளுக்கு பாஸ் ஆன் செய்யாது தீவிரமாகச் செயல்பட வேண்டும் எனக் கூறப்போவதாவும் கூறுகிறார். இனிமேலும் அவரது சட்ட அறிவுக்குறைவு சாக்காக அமையலாகாது எனவும் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
வெறுமனே ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வெத்துவேட்டுக் கம்பெனிகள் பற்றியும் கூறுகிறார் (வீடியோ-4-ன் இறுதி, வீடியோ-5). அவற்றில் தாவூத் இபரஹீம் ஆகிய கொலைகாரர்களின் ஈடுபாடும் இருப்பதையும் கோடி காட்டுகிறார். ராசா, கருணாநிதி, அவர் குடும்பத்தினர் ஆகியோரும் இன்வால்வ் ஆகியிருப்பதையும் எடுத்துரைக்கிறார். கருப்புப் பணம் இந்த நிலையில் வெளுப்பாக மாற்றப்படும் வித்தை பற்றி சுனில் கேட்க அதையும் சுவாமி ஆமோதிக்கிறார். ஐ.எஸ்.ஐ. யின் தொடர்பையும் சுவாமி குறிப்பிடுகிறார்.
இதனால் எல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் என்றும், இந்த ஊழலை நடத்தியவர்கள் நாட்டுக்கே துரோகம் செய்கிறார்கள் என்றும் சுவாமி எச்சரிக்கிறார்.
தான் சிபிஐக்கும் பிரதமருக்கும் ராசா மேல் கேஸ் போடச் சொல்லி கடிதம் எழுதி ஒரு வாரம் அவகாசம் தரப்போவதாகவும், அப்போதும் ஆக்ஷன் இல்லாவிட்டால் தானே கேஸ் ஃபைல் செய்யப் போவதாகவும் கூறுகிறார். இந்த ஊழலில் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் புகுந்திருப்பது ஹவாலா ஆப்பரேஷன்களுக்காக என்றும் அவர் கூறுகிறார்.
சோனியா காந்தியின் சகோதரிகளது இன்வால்வ்மெண்ட் பற்றியும் சுவாமி பேசினார். கருப்புப் பணச் சலவை விஷயங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலுடன் அவதானித்து வருவதாகவும், அதன் கணினிகளில் எல்லா விவரங்களும் இருப்பதாகவும் சுவாமி கூறுகிறார். பிரதமர் பணச்சலவை என்னும் காரணத்தைக் கூறி அத்தகவல்கலை அதிகாரபூர்வமாகவே பெறலாம் என்றும், தன்னிடம் அவை ஏற்கனவேயே இருந்தாலும் அவற்றுக்கு அதிகார பூர்வ அந்தஸ்து இல்லை என்றும் சுவாமி கூறுகிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் தான் கோர்ட்டில் கூறி பிரதமரை நிர்பந்தத்துக்கு உட்படுத்த முடியும் என்றும் சுவாமி கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சர்காரியா கமிஷனால் விஞ்ஞானபூர்வ ஊழலாய் செய்து வருவதாகக் கூறப்பட்ட திமுக தற்போது எலெக்ட்ரானிக் ஊழலாக செய்து திருடன் முன்னேற்றக் கழகமாக நடந்து கொள்கிறது. அதைத் தோற்கடிக்க மக்களாலேயே முடியும் என்றும் சுவாமி கூறுகிறார்.
வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்களை விலைக்கு வாங்கும் திருமங்கலம் ஃபார்முலா பற்றி சுனில் கேட்க, அது கண்டிப்பாக நடக்கும், ஆனால் தனக்கு மக்கள் மேல் இன்னும் நம்பிக்கை உண்டு என சுவாமி கூறுகிறார். 1977-ல் இந்திரா காந்தி வெர்றி பெறுவார் என அமெரிக்காவே அவதானித்தபோது, மக்கள் அவருக்குப் படுதோல்வி தரவில்லையா என சுவாமி குறிப்பிட்டார். இப்போது திமுக தரும் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மக்கள் அதற்கெதிராக வாக்களித்தாலும் வியப்பதற்கில்லை என்றும் அவர் கூறுகிறார்.
சோனியாவின் சகோதரிகளின் பெயர் அனுஷ்கா மற்றும் நாடியா. அவை இத்தாலியப் பெயர்கள் இல்லையே எனக் கேட்க, அனுஷ்கா ஒரிஜினல் பெயர் அலெக்ஸாண்ட்ரா, நாடியாவின் பெயர் அலீஷியா (அலீச்சா என்பதுதான் சரியான இத்தாலிய உச்சரிப்பு என்று கூறுவது டோண்டு ராகவன்). சோனியாவின் பெயரோ அந்தோனியா. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் படையில் போர்வீரராக சென்ற சோனியாவின் தந்தை மெயினோ ரஷ்யாவில் யுத்தக் கைதியாக நான்கு ஆண்டுகள் இருந்ததாக சுவாமி கூறுகிறார். யுத்தம் முடிந்ததுமே ரஷ்ய யதார்த்தத்துக்கு மாறாக மெயினோ விடுதலை ஆனதே அதிசயம், ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் மினிமம் சிறை தண்டனையே 20 ஆண்டுகள். இவர் கேஜிபியில் சேர்ந்து பணிபுரிந்ததால் இந்த நிலை. அவரது ரஷ்ய ஆதரவுக்கு அடையாளமாகத்தான் அவரது பெண்களின் பெயர்கள் சோனியா, அனுஷ்கா மற்றும் நாடியா என மாற்றப்பட்டன.
இன்னும் சுவாமி ஆற்ற வேண்டிய பணிகள் அனேகம் என்றும் அவரும் ஜெயா டிவிக்கு அடிக்கடி வருவார் என்ற நம்பிக்கையை சுனில் கூற, பேட்டி முடிந்தது.
டோண்டு ராகவனுக்கு இப்போது ஒரு பயங்கர டவுட்டு. சோனியாவே கொள்ளை அடித்திருக்கும் நிலையில் (60%) பிரதமரால் ஹானஸ்டாக எப்படி செயல்பட முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
3 comments:
//திமுக தற்போது எலெக்ட்ரானிக் ஊழலாக செய்து திருடன் முன்னேற்றக் கழகமாக நடந்து கொள்கிறது//
லஞ்ச பிதாமகர் கருணாநிதியின் தி. மு. க. வுக்கு நான் சூட்டிய பொருத்தமான பெயரான திருடர்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை இப்போது Dr. சுப்ரமண்யம் சுவாமி அவர்களும் பயன்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என் கண்கள் பனித்தன; இதயம் இனித்தது.
What is your take on this lyrics written and also sung by a pervert in Tamil cinema?
http://www.indiaglitz.com/channels/tamil/article/62156.html
ரஷ்யாவில் யுத்தக் கதியாக நான்கு ஆண்டுகள் இருந்ததாக சுவாமி கூறுகிறார்.
check the typo 'கதியாக' இல்லை 'கைதியாக'
Post a Comment