12/04/2010

போலி டோண்டு ரேஞ்சில் வேலை செய்யும் சீனாவுக்கு இந்தியா அடிபணியக்கூடாது

தலைப்பைப் பின்னால் ஜஸ்டிஃபை செய்கிறேன்.

நோபல் பரிசு அறிவிப்புகளுக்கு விவாதங்கள் புதிது அல்ல. உதாரணத்துக்கு ரவீந்திரநாத் டாகூருக்கு அளிக்கப்பட்ட இலக்கிய நோபல் பரிசையே எடுத்துக் கொள்ளலாம்.

அது சம்பந்தமாக சில சர்ச்சைகளை இங்கே படிக்கலாம்.

ஆனால் மேலே உள்ள சுட்டியில் படித்ததைத் தவிர்த்து இன்னொரு விஷயம். இதை நான் இங்கே கூறுவது டாகூரை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. ஆகவே போங்ளாக்காரர்கள் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.

அவருக்கு பரிசு வழங்கப்பட்ட காலகட்டத்தில்தான் அதுவரை ஒரே சமஷ்டி அரசாக செயல்பட்ட நார்வேயும் ஸ்வீடனும் இரு தேசங்களாகப் பிரிந்திருந்தன. ஒருவர் மேல் மற்றொருவர் கசப்பான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். ஆகவே சமாதானப் பரிசைத் தவிர்த்து மீதி நோபல் பரிசுகளை நிர்வாகம் செய்த ஸ்வீடன் நார்வேயை வெறுப்பேற்றவே ரவீந்திரநாத் டாகூருக்கு அப்பரிசை வழங்கியதாம். அது பற்றி நான் படித்த கட்டுரை தெளிவாகவே விஷயங்களை குறிப்பிட்டிருந்தாலும், நான் அவற்றை சரியாக நினைவில் கொணர முடியவில்லை. எது எப்படியானாலும் அப்பரிசும் சர்ச்சைகளிலிருந்து தப்ப இயலவில்லை என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.

அதே போல சமீபத்தில் 1970-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக அறிவிக்கப்பட்ட போதும் சர்ச்சை எழுந்தது. பரிசுக்குரிய அலெக்சாண்டர் சோல்ட்ஸ்ஹெனிட்சின் அதைப் பெற நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் சோவியத் யூனியன் இப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டதை தீவிரமாக ஆட்சேபித்தது.

நான் இப்பதிவில் முக்கியமாக குறிப்பிட எண்ணுவது இந்த ஆண்டுக்கான சமாதானப் பரிசு பற்றிய சர்ச்சைதான். அது பற்றி ஹிந்து வெளியிட்டுள்ள குறிப்பு கீழே.

With just a week to go before the Nobel Peace Prize for 2010 is formally conferred, in absentia, on Liu Xiaobo, a prominent Chinese dissident, at Oslo City Hall on December 10, India is yet to take a call on a Chinese demarche asking countries around the world to boycott the ceremony.

A number of senior officials told The Hindu that their own view was that India should attend the ceremony this year, just as it has been doing in the past. But a careful review of the issue is, nevertheless, being conducted at the highest levels of the government before a decision is taken. One complicating factor is the planned arrival in New Delhi of Chinese Premier Wen Jiabao a few days after the Oslo function.

Liu Xiaobo was given the prize ““for his long and non-violent struggle for fundamental human rights in China.” Last month, the Chinese government asked India and others not to send representatives to witness the investiture, warning that attending the ceremony would have repercussions on the bilateral relationship, and possibly impact Mr. Wen's visit. The Chinese view is that Mr. Liu, who is serving an 11-year sentence for “subverting state power,” is a “criminal.”

Chinese Foreign Ministry officials recently told Indian Ambassador S. Jaishankar that China wanted India to boycott the ceremony. The officials have met diplomats from almost every country in recent weeks, conveying the same message. Among those who have said they will stay away are Russia and Pakistan.

The Foreign Ministry told The Hindu in a statement that China was opposed to any country “making anything out of the issue,” indicating that participating in the ceremony would be tantamount to intervening in China's judicial sovereignty. “We have a clear stance on the issue of Liu Xiaobo and the Nobel Peace Prize,” the statement said. “We oppose anyone, in any means, to intervene in China's internal affairs and to hurt China's judicial sovereignty.”

The statement added that China “would like to cooperate with India to promote a sound and stable bilateral relationship.”

The Foreign Ministry did not directly respond to questions on how the bilateral relationship would possibly be affected if India sent a representative to the ceremony. But diplomats from several countries have told The Hindu that they had been warned by Beijing that attending the ceremony would “damage” ties. In some instances, diplomats were also told that Chinese companies would be instructed to either cut or reduce trade links.

China has suspended negotiations over a free trade accord with Norway over the issue. “It is difficult to maintain friendly relations with Norway as in the past,” Foreign Ministry spokesperson Jiang Yu said on Thursday.

There is still uncertainty over whether the ceremony will take place. Mr. Liu is in jail, while his wife, Liu Xia, has been barred from attending the ceremony and is under effective house arrest in Beijing. Other political activists who Ms. Liu has nominated to attend the ceremony have also been barred from travelling to Oslo.

One option the Norwegians are reportedly considering is awarding the prize to two empty chairs, symbolising the incarcerated Liu and his absent wife.

நன்றி: ஹிந்து

லியூவோ அவர் மனைவியோ இப்பரிசை வாங்க இயலாது. அதற்காக பல முன்னுதாரணங்கள் உள்ளன. சீனா செய்யும் ஆட்சேபங்களும் புதிது அல்ல. எல்லா சர்வாதிகார அரசுகளும் செய்வதுதான். ஆனால் சீனாவின் அடாவடி எல்லா அக்கிரமங்களையும் தாண்டி விட்டது.

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அது ஆர்டர் போடுகிறது, நார்வேயில் நடைபெறப் போகும் பரிசளிப்பு விழாவை அட்டெண்ட் செய்யக்கூடாது என்று? என்ன வில்லத்தனம்? அதையும் இந்தியா கன்சிடர் செய்வது வெட்கக்கேடுதான்.

“ஏண்டா நாயே டோண்டுவுக்கு பின்னூட்டமிட்டாய்” என பலரை மிரட்டிய போலி டோண்டு போலத்தான் சீனாவும் செயல்படுகிறது. அவனுக்கு பயந்து அடங்கிப் போன பல பதிவர்கள் நிலையில் இந்தியா இருக்கலாமா? அது தகுமா? பிற்காலத்தில் அதை திரும்பிப் பார்த்தால் இந்தியா அது பற்றி வெட்கம்தான் அடைய நேரிடும்.

ஆகவேதான் சொல்கிறேன், போலி டோண்டு ரேஞ்சில் வேலை செய்யும் சீனாவுக்கு இந்தியா அடிபணியக்கூடாது.

என்ன, தலைப்பை ஜஸ்டிஃபை செய்து விட்டேன் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பர்.தமிழ்மணம் டாப் 20 பிளாக்கில் 8 வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Indian said...

India should ignore the demarche. It is china's arrogance to think that it can arm twist any country the way it wants.

Any consideration would embolden China to believe that it can make India pee in pants.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது