என்னுடைய சஷ்டியப்தபூர்த்தியை எதிர்நோக்கி நான் போட்ட இப்பதிவுக்கு நான் தட்டச்சு செய்யும் இத்தருணம் வரை 84 பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் பல என்னுடையவை என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் கணிசமான நண்பர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. அதிலும் பல பெயர்கள் எனக்கு அறிமுகமில்லாதவை. இருப்பினும் ஏதோ மிகவும் தெரிந்தவர்களுடன் பேசுவது போலவே தோன்றுகிறது.
திருமணம் மிக நல்லபடியாக முடிந்தது. காலை 8-லிருந்து 9 மணி வரை முகூர்த்தம். பூர்வாங்க வேலைகள் 6.30 மணிக்கே ஆரம்பிக்கப் பட்டன. சரியாக நிர்ணயம் செய்திருந்த நேரத்தில் என் காதல் மனைவிக்கு இரண்டாவது முறை தாலி கட்டி என்னை அவருடையவராக்கினேன்.
சாப்பாட்டிற்காக நாங்கள் ஏற்பாடு செய்த கேட்டரர் (caterer) சென்னையில் மிகப் பிரசித்தி பெற்ற நரசிம்மன் அவர்கள். மயிலையிலிருந்து உணவுப் பொருட்களை வேனில் நங்கநல்லூர் வரை கொண்டு வந்து அழகாகப் பரிமாறினார். ஆனால் என்ன, நடுவில் சென்னையின் போக்குவரத்து நெருக்கடியால் இன்று அவர் வருவது சற்றே தாமதமானது. அடையாறிலிருந்து கத்திபாரா வரை ட்ராஃபிக் ஜாம். முகூர்த்தம் 9 மணிக்கே முடிவடைய, அவர் 10 மணிக்குத்தான் வர முடிந்தது. காலை 7.45-க்கு புறப்பட்டும் இந்த நிலை.
இணைய நண்பர்கள் முத்து (தமிழினி), ஜெர்மனி முத்து, டி.பி.ஆர்.ஜோசஃப், துளசி, நிலா, விச்வாமித்ரா, ஜாவா குமார், ராஜ் சந்திரா, ஸ்ரீகாந்த், முகமூடி, ரவிஷா, கோபி, சில்வியா, பி.கே.எஸ், நாட்டாமை, சுந்தர், மணியன், டைனோ, டி.ராஜ், இட்லி, வடை, கோபி, எஸ்.கே., தினகர், சிவஞானம்ஜி, சுபமூகா, குமரன், சதயம், அருண் வைத்தியனாதன், ரஜினி ராம்கி, திருமலை, பி.கே. சிவகுமார், பெனாத்தலார், முத்துக் குமரன், வெங்கடேஷ் சர்மா, முத்து, ஆறுமுகம், பறக்கும் பட்டம், பார்வை, தருமி, மனசாட்சி, மகேஸ், கீதா சாம்பசிவம், ஜி. ராகவன், இலவசக் கொத்தனார், சிவா, ரவி பால சுப்ரமனியன், ஆதிரை, ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி, காலக்ரி சிவா, மஞ்சுளா சீமாச்சு, குமரன், ஜயஸ்ரீ, மாயக்கூத்தன், பரஞ்சோதி ஆகியோர், தொலைபேசி மூலமும், பின்னூட்டங்கள்/மின்னஞ்சல்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
இன்று நேரில் வந்து கடைசி வரை இருந்து கம்பெனி கொடுத்தவர்கள் என்றென்றும் அன்புடன் பாலா மற்றும் மாயவரத்தான். அவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் நன்றி. நாங்கள் மூவரும் ஃபங்ஷன் முடிந்ததும் மண்டபத்திலிருந்து என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் தமிழ் இணைய உலகைப் பற்றிப் பேசினோம்.
எல்லோருக்கும் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளை வேண்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
.
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
5 hours ago
51 comments:
மிக்க நன்றி உள்ளூர் அன்னியன். அது சதாபிஷேகம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
die Glückwünsche
மணி விழா சிறப்பாக முடிந்ததற்கு மகிழ்ச்சிகள் சார்....
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா:-)))))
அன்புள்ள டோண்டு,
வாழ்த்துகள். உடல் நலப்பொலிவுடன் இன்னும் பல்லாண்டு வாழ இறைவன் அருளட்டும்.
அன்புடன்
பத்மா
Dankeschoen Kusumban.
Gruesse,
Dondu N.Raghavan
நன்றி முத்துக் குமரன் மற்றும் தேந்துளி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
vazhga! vazhga!! nanri!
நாங்க வந்து வாழ்த்து சொன்னதுக்கே உங்க பிரெண்டு (போலிதான்) தேடி தேடி பார்த்து பதில் மரியாதை மெயில் அனுப்பறார். நீங்க இந்த மாதிரி லிஸ்ட் எல்லாம் வேற போட்டு அவருக்கு ஹெல்ப் பண்ணறீங்களே.
ஆனாலும் மீண்டும் வாழ்த்துக்கள்.
"நீங்க இந்த மாதிரி லிஸ்ட் எல்லாம் வேற போட்டு அவருக்கு ஹெல்ப் பண்ணறீங்களே."
"இதில் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்."
போலி டோண்டு எல்லோரையும் குழப்பிவிட்டானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் மாமா.. இப்போதெல்லாம் வருவதில்லை. கிட்டத்தட்ட அலுத்து விட்டது. எனினும் உங்களை வாழ்த்தாமல் விட முடியுமா? வாழ்த்துக்கள்.. ஹிஹிஹி.. திருமணம் என்றால் வரதட்சணை எல்லாம் வாங்குவீர்களா?
மிக்க நன்றி மஸ்ட் டூ மருமகனே. வரதட்சணை கொடுக்கும்படி என்னைக் கேட்காமல் இருந்தால் போதாதா?
அன்புடன்,
டொண்டு ராகவன்
அத்துழாய் அவர்களே,
என் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்துக்கு நன்றி. அதை பப்ளிஷ் செய்து விட்டேன்.
ஆனால் ஒரு சிறு பிரச்சினை. என் பெயரில் ஒரு போலி நபர் உங்களுக்கு அசிங்கமானப் பின்னூட்டம் இடுவான். அவனும் dondu(#48800161) என்ற டிஸ்ப்ளே பெயரில் பின்னூட்டம் இடுவான்.
உங்கள் பின்னூட்டம் செட்டிங்க்ஸ்படி ஒன்று அவன் பின்னூட்டம் மேலே சொன்னது போல டிஸ்ப்ளே பெயருடன் ஆனால் போட்டோ இல்லாமல் வரும் அல்லது போட்டோவுடன் கூட வரலாம். ஆனால் டிஸ்ப்ளே பெயருக்கு மேல் மௌஸை வைத்துப் பார்த்தால் என்னுடைய ப்ளாக்கர் எண் 48800161 கீழே தெரியாது. வேறு எண் தெரியும். ஆகவே உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இடுகிறான் என்பதை அறிய போட்டோ வருகிறதா மற்றும் சரியான ப்ளாக்கர் எண் வருகிறதா என்பதைப் பார்க்கவும்.
உதாரணத்துக்கு இன்ஹ்டப் பின்னூட்டம் இரண்டு டெஸ்டுகளையும் பூர்த்தி செய்யும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோன்டு,
எனது அன்பான வாழ்த்துக்கள்!
நன்றி பொட்"டீ"க்கடை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மீண்டும் வாழ்த்துக்கள், டோண்டு !! ஹனிமூன் எங்கேயாவது போகும் திட்டமுண்டா :-) ???
நன்றி சோம்பேறி பையன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
viel Glueck
bonne chance
buena suerte
எல்லாம் கூகிள் தயவுதான்.
Dankeschoen,
Merci beacoup
Molte grazie
Many thanks
Bahuth shukriya
மிக்க நன்றி மகேஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி நாட்டாமை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பிற்குரிய டோண்டு,
மணிவிழா காணும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இராம.கி.
மிக்க நன்றி இராம.கி. அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தினகர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நங்கநல்லூரில் கல்யாணம்.......
மைலாப்பூரில் இருந்து சாப்பாடு....
னண்பர்கள் நேரிலும் ப்திவிலும் வாழ்த்துக்கள்...
ப்ர.....மா....தம் !!!
வாழ்த்துக்கள், மீண்டும்!
நன்றி வெங்கடேஷ் ஷர்மா அவர்களே. மெனுதானே. கூறிவிட்டால் போகிறது.
வாழைக்காய் வறுவல், பீன்ஸ் பருப்புசிலி, உருளைக்கிழங்கு கறியமுது, அவியல், பழங்கள் பச்சடி, சாதம், தயிர்வடை, மோர்குழம்பு, கத்தரிக்காய் சாம்பார், சாத்தமுது, புளியோதரை, முந்திரி கேக், காரா சேவு, பால் பாயசம், பகாளாபாத், ஊறுகாய் (ஞாபகத்திலிருந்து கூறுகிறேன்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு சார்!
பல்லாண்டு வாழ வாழ்த்துக்களும் பிராத்தனையும்!
நன்றி எஸ்.கே., ஜோ மற்றும் ராமசாமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராமசாமி அவர்கள் இட்ட இந்தப் பின்னூட்டத்தை ஏற்று விட்டேன். ஆனால் ப்ளாக்கர் சொதப்புகிறது. ஆகவே அதை இங்கே நகலிடுகிறேன்.
Ramasamy to me>
HAPPY SECOND MARRIED LIFE TO YOU AND YOUR LIFE PARTNER AND GET ALL BLEESINGS OF ALMIGHTY GOD ONTHE WAY OF YOUR LIFE IN AND ALL ASPECTS.
RAMASAMY,
YOUR NEW READER.
மீண்டும் நன்றி ராமசாமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஹ¥ம்... மெனு சூப்பர்.
இப்படிக்கு,
ஏப்ரல் முதல் தேதி ஊர் திரும்பியவள்.
அன்புள்ள டோண்டு,
வாழ்த்துகள்
ரவியா
நன்றி உஷா அவர்களே. உங்கள் தந்தையுடன் தொலைபேசினேன். ஆனால் நீங்கள் கூறியமாதிரியே அவரால் அவ்வளவாக பழைய விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பேசி முடித்ததும் மனது சற்று கனமாக உணர்ந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடேடே ரவியா சாரா? என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணவில்லையே?
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அடேடே ரவியா சாரா? என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணவில்லையே?
//
ரொம்ப நாளா "எந்தப்" பக்கமே போகமுடியவில்லை...கோடையில் சந்திப்போம் !! encore mes sincères féliciatations..moi je fêterai 25 ans de mariage en mai !
sincères féliciatations de ma part également, Monsieur Raviya.
Salutations,
Dondu N.Raghavan
நன்றி அத்திம்பேர், புதுப் புத்தகம் மற்றும் கிருஷ்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி அறவாழி அந்தணர் (மாம்பலம்) அவர்களே.
சீக்கிரம் பதிவு போட ஆரம்பியுங்கள். இகலப்பையை இறக்கிக் கொண்டீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லது அறவாழி அந்தணன் அவர்களே. நான் க்ளிக் செய்துப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் டோண்டு சார்.. விழாவில் எடுத்த சில புகைப்படங்களை பதிவில் போடுவீர்களா?
அறவாழி அந்தணர் அவர்களே தலைப்பை நீளமாகப் போடிருப்பீர்கள். உதாரணத்துக்கு இந்தப் பதிவையே நான் "டோண்டுவின் இரண்டாம் திருமணம் எவ்வாறு நடந்தது என்று கேட்பீர்காள் நண்பர்களே -2" என்ற ரேஞ்சில் போட்டிருந்தால் இதுவும் காணாமல் போகும் வாய்ப்பு உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காயத்ரி ஸ்ரீனிவாசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://gayathrisrinivasan.blogspot.com/2006/04/blog-post.html#comments
வருக காயத்ரி அவர்களே. என் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்துக்கு நன்றி. அதை பப்ளிஷ் செய்து விட்டேன்.
ஆனால் ஒரு சிறு பிரச்சினை. என் பெயரில் ஒரு போலி நபர் உங்களுக்கு அசிங்கமானப் பின்னூட்டம் இடுவான். அவனும் dondu(#48800161) என்ற டிஸ்ப்ளே பெயரில் பின்னூட்டம் இடுவான்.
உங்கள் பின்னூட்டம் செட்டிங்க்ஸ்படி ஒன்று அவன் பின்னூட்டம் மேலே சொன்னது போல டிஸ்ப்ளே பெயருடன் ஆனால் போட்டோ இல்லாமல் வரும் அல்லது போட்டோவுடன் கூட வரலாம். ஆனால் டிஸ்ப்ளே பெயருக்கு மேல் மௌஸை வைத்துப் பார்த்தால் என்னுடைய ப்ளாக்கர் எண் 48800161 கீழே தெரியாது. வேறு எண் தெரியும். ஆகவே உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இடுகிறான் என்பதை அறிய போட்டோ வருகிறதா மற்றும் சரியான ப்ளாக்கர் எண் வருகிறதா என்பதைப் பார்க்கவும்.
உதாரணத்துக்கு இந்தப் பின்னூட்டம் இரண்டு டெஸ்டுகளையும் பூர்த்தி செய்யும்.
மாடரேஷனையும் செயல்படுத்தவும். அற்புதமான இணைய உலகத்தினுள் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்க எனது மனப்பூர்வமான ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் டோண்டு சார்.. விழாவில் எடுத்த சில புகைப்படங்களை பதிவில் போடுவீர்களா?"
பின்னூட்டத்திற்கு நன்றி பொன்ஸ் அவர்களே.
கணியில் ஏற்றியப் படங்கள் என் மருமானிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன. அவற்றைப் புது பதிவு ஒன்று போட்டு ஏற்றலாம் என்ற யோசனை. ஆனால் போலி டோண்டு அவற்றை காப்பி செய்து (முக்கியமாக என் மனைவி மற்றும் மகள் படங்களை) கண்ட இடத்தில் அசிங்கப் பின்னூட்டங்களுடன் போடுவான் என அஞ்சுகிறேன்.
ஆகவே படங்கள் கேட்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் தனியாக அனுப்பும் எண்ணம் இருக்கிறது. இப்பதிவில் வரும் படங்களில் நான் மட்டும் இருப்பதாகப் பார்த்தும் போடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Dondu,
Well...pranams on your sashtiabdhapoorthi.I wish you and yr wife a long and a healthy life.Hope and wish you both celebrate bheemaradha shanthi and also sadhabishekam!!!!! (43 years together.hmm lot of work would have gone into this marriage i guess!!!)
Radha
மிக்க நன்றி ராதா ஸ்ரீராம் அவர்களே. உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வயதில் மூத்த உங்களுக்கு எனது மணிவிழா வாழ்த்துக்கள். எனது அட்வான்ஸ் சதாபிஷேக வாழ்த்துக்களும்!
நன்றி விடாதுகறுப்பு அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டய்யா..
பதினாறும் பெற்று பெருவாழ்வுன்னு வாழ்த்தவா முடியும்.. தலைக் குனிந்து ஆசி கேட்கிறோம்.. ஆசிவழங்குங்கள்.
அன்புடன்
ஜீவா
எங்கள் ஆசிகள் ஜீவாவுக்கு எப்போதுமே உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் பதிவைப் படிக்கும் போது சில நேரம் போலி டோண்டுவைப் பற்றி அதிகம் சொல்கிறீர்களோ என்ற தோற்றம் சில நேரம் ஏற்பட்டதுண்டு. நேற்று உங்களுக்கு வாழ்த்து சொல்லும் வரை.
http://payananggal.blogspot.com/2006/04/blog-post_06.html
அது தவறென்று உணர்ந்துக் கொண்டேன்.
சர்வம் கிருஷ்ணார்ப்பனம்.
அன்புடன்
ஜீவா
"அது தவறென்று உணர்ந்துக் கொண்டேன்."
அந்த நிரூபணம் இம்மாதிரி வந்ததற்காக வருந்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு...
நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரன் தான்... மடிப்பாக்கம்...
உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்!
அய்யா,
உங்கள் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டேன்... தயவுசெய்து அந்த எண்களை நீக்கி விடுங்கள்... உங்களுக்கு ஒரு அசிங்கமான எதிரி இருப்பதை வலைப்பூக்களில் அறிந்து கொண்டேன்... அந்த எதிரி இந்த எண்களை வேறு ஏதாவது மோசமான காரியத்துக்கு உபயோகப்படுத்தப் போகிறான்.....
பெங்களூரில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்லியே உங்கள் வலைப்பூவுக்கு வருகை தந்தேன்....
உங்கள் கருத்துகளில் எனக்கு சில ஏற்பு உண்டு.... சிலவற்றில் மாறுபாடும் உண்டு....
Thanks Lookalike. Fact is, Poli Dondu already knows my number. Nevertheless, I would like to avoid some new undesirable character knowing about it. Hence I removed the concerned comment following your suggestion. Thanks.
Looking forward to meeting you. Identify yourself as Lookalike.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment