டோண்டு பதில்கள் 12.09.2008 பதிவு வராததற்கு ஒரே காரணம் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பதே. ஆக 28 வாரங்களாக விடாது வந்த தொடர் போன வாரம் முடிவுக்கு வந்தது. நானும் இதை ஏற்று கொண்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்தேன். இன்று காலை கணினியைத் திறந்தால் திடீரென மறுபடியும் கேள்விகள். நேற்று இரவு நான் கணினியை மூடிய பின்பு வந்துள்ளன. இன்றுதான் பார்த்தேன். ஆகவே இந்த வாரம் பதில்கள் வந்துள்ளன. அடுத்த வாரம் பதில்கள் வருமா என்றால் தெரியாது. கேள்விகள் வந்தால் வரும். பார்க்கலாம். இப்போது கேள்விகளுக்கு போகலாம்.
அவனும் அவளும்:
1) கேள்வி கேட்க ஒரு தகுதி தேவையா?
பதில்: பதில் சொல்லவே தகுதி என்று ஒன்றும் பெரிசாகத் தேவையில்லாதபோது, கேள்வி கேட்க மட்டும் என்ன தேவையாக இருந்துவிடப் போகிறது? சுவாரசியமான பதிலை வரவழைக்கும் கேள்வியாக இருந்தால் விசேஷம்.
2) சாரா பாலின் ஐஸ்வர்யா ராய் ஜாடையில் இருக்கிறாரா?
பதில்: அப்படீங்கறீங்க? கீழே போட்டோக்களை பார்க்கலாமா?
அட ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆக ரிபப்ளிகன் பார்ட்டி வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம். இம்மாதிரி முக ஜாடைகள் பார்ப்பது எனக்கும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி என நினைக்கிறேன். அதில்தான் பிறக்கும்போதே பிரிக்கப்பட்டவர்கள் என இம்மாதிரி ஜோடி ஜோடியாக படம் போடுவார்கள். உதாரணத்துக்கு வி.பி. சிங் டி.வி. சீரியல் நடிகர் புனியாத் புகழ் ஆலோக் நாத். 1989 லோக் சபா எலெக்ஷன் சமயம் இந்த உருவ ஒற்றுமை காரணமாக அவரது தொடர்கள் ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டன. ஏனெனில் அது வி.சிங்குக்கு ஆதரவாகப் போய் விடுமாம். மற்ற உதாரணங்களை பார்க்க வேண்டுமானால் எனக்கென்னவோ பிரேமானந்தாவும் செந்திலும் ஒரே ஜாடையில் இருப்பதாகத் தோன்றுகிறது.
அதே போல அதிமுகாவைச் சேர்ந்த பாலா பழனூர் (சில நாட்கள் சரண்சிங் மந்திரி சபையில் இருந்தார்) கபில் தேவும் ஒரே ஜாடை. இது பற்றி அரசு கேள்வி பதில்களில் கேட்கப்பட்டது. தேவயானியை பார்த்தால் பழைய நடிகை அஞ்சலிதேவி ஞாபகம் வருகிறது. இதே மாதிரி அரசு கேள்வி பதிலில் ஒருவர் நடிகை மும்தாஜுக்கும் (?) அஞ்சலிதேவிக்கும் ஒரே ஜாடை இருப்பதாகக் கூற, அதற்கு அரசு அந்த வாசகரது அபிமான நடிகையாக மும்தாஜ் இருந்தால், அஞ்சலிதேவி அவரது தாத்தாவின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார் என கூறினார்.
3) வரும் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வெல்லுமா? உங்களுடைய ஊகம் என்ன?
பதில்: பூவா தலையா போட்டு பார்த்து விடுவோமா? சீரியசாக, Cricket is a game of glorious uncertainties. ஃபாலோ ஆன் வாங்கிய இந்தியா மேட்சையே ஜெயித்தது கூட நடந்துள்ளது.
இது பற்றிய கேள்விக்கு நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அளித்த பதில் பின்வருமாறு.
"நீங்கள் குறிப்பிடுவது இந்தியா vs ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். 2001-இல் நடந்தது. இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, பின்னர் லஷ்மணும் (281), டிராவிட்டும்(180) ஜோடி சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியதில், கல்கத்தாவில் ஸ்டீவ் வா தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. அவர்களது தொடர் (16 போட்டிகள்) வெற்றியும் முடிவுக்கு வந்தது. அவர்களது 'Invincibility' ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
1981-இல் ஹெடிங்க்லியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆட்டம் ஒரு Real Classic. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. மைக் பிரயர்லி (இவரை தலைமைப் பண்பு, ஸ்லிப் ஃபீல்டிங் ஆகியவற்றிற்காகவே அணியில் வைத்திருந்தனர் என்றால் அது மிகையில்லை!) தலைமை தாங்கிய இங்கிலாந்து அணி 174 ரன்கள் எடுத்து follow-on வழங்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் 135-7 என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, இயன் பாத்தம், வால் முடிவாட்டக்காரர்களோடு (Tailenders:)) கூட்டு சேர்ந்து ஒரு காட்டு காட்டியதில், இங்கிலாந்து 356 ரன்கள் குவித்து (பாத்தம் 149 நாட் அவுட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை நிர்ணயித்தது. பின்னர், ஆஸ்திரேலிய அணி பாப் வில்லிஸின் (8-43) வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 111-க்கு (இதை நெல்சன் என்று அழைப்பர்! அதாவது, அதிர்ஷ்டமில்லா எண்!) சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வரலாறு !
இதற்கு முன்னர், 1894-85 Ashes-இல், ஸிட்னியில் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 586 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. Follow-on செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து, திடமாக ஆடி, 437 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 177 ரன்களே ! நான்காவது நாள் முடிவில், ஆஸ்திரேலியா 113-2 என்ற ஸ்கோரில் Driver's seatஇல் இருந்ததென்னவோ நிஜம் ! இரவு பெய்த மழையின் காரணமாக, இறுதி நாளில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு பயங்கரமாக உதவியதில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் க்ளோஸ் :) 166 ரன்களில் சுருண்டு, இங்கிலாந்து 10 ரன்களில் வென்று ஒரு Famous Victory !!! தொடரையும் 3-2 என்ற கணக்கில், இங்கிலாந்து வென்றது".
4) தாங்கள் எப்பொழுது வெப்சைட் தொடங்க உள்ளீர்கள்?
பதில்: எனக்கு ஏற்கனவே நான்கு வெப்சைட்டுகள் உள்ளன. அவற்றில் மூன்று மொழிபெயர்ப்பு தலைவாசல்களில், அவையும் இலவசம். ஒன்றே ஒன்று மட்டும் நான் காசு கொடுத்து உருவாக்கி கொண்டது.
5) உங்கள் வெப் பக்கம் கறுப்பில் இருந்தால் 70% பவர் சேமிக்க முடியும் என்பது தெரியுமா? அப்படி தெரிந்தால் நீங்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவீர்களா?
பதில்: அதில் மாற்றம் செய்ய நான் சேவை அளிப்பவரிடம்தான் கூற வேண்டும். அது சரி, கருப்பாக இருந்தால் பவர் சேமிக்க முடியும் என்று கூறுவது உண்மையா? எனக்கென்னவோ கருப்பாக இருந்தால் பார்ப்பவர் கண்ணின் பவர் வேண்டுமானால் கூடலாம். பை தி வே கருப்பு நிற மாருதி கார்களின் எரிபொருள் செலவு மற்ற மாருதி கார்களை விடக் குறைவு. இது உண்மை. ஏன் எனக் கூற இயலுமா?
6) அடுத்த வார கேள்வி கேட்க நேரிட்டால், உங்களுக்கு எது சம்பந்தமாக கேட்டால் பிடிக்கும்?
பதில்: எதில் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்.
7) விடாது கருப்பு தொடர் உங்களுக்கு பிடிக்குமா?
பதில்: இந்திரா சவுந்திரராஜன் எழுதி, நாகா டைரக்ஷனில் வந்த தொடர்தானே? எனக்கு அது பிடிக்கவில்லை.
மீண்டும் அடுத்த வாரம் (கேள்விகள் இருந்தால்) சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
14 hours ago
22 comments:
//சுவாரசியமான பதிலை வரவழைக்கும் கேள்வியாக இருந்தால் விசேஷம்.//
சுவாரிசியமான கேள்வி கேக்க தகுதிகள் வேண்டுமா?
//அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம்.//
உங்கள் வயது எட்டி பார்க்கிறது, அந்த கிழவி உங்களுக்கு பிகரா?
//கருப்பு நிற மாருதி கார்களின் எரிபொருள் செலவு மற்ற மாருதி கார்களை விடக்
குறைவு.//
ஒரு லாஜிக்கும் புரியல? அது ஏன் என்பது எனது அடுத்த வாரத்துக்கான கேள்வி
//எதில் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்.//
பிரவுசரில் உலாவும் போது பாப்அப்பாக பிட்டு பட சைட் வந்தால் பார்பீர்களா?
இல்லை க்ளோஸ் பண்ணி விடுவீர்களா?
(நீங்க தான் எது வேண்டுமானாலும் கேக்கலாம்னு சொல்லிருக்கிங்க)
//இந்திரா சவுந்திரராஜன் எழுதி, நாகா டைரக்ஷனில் வந்த தொடர்தானே? எனக்கு அது பிடிக்கவில்லை. //
ஒருவேளை வேறு யாராவது எழுதி, வேறு யாராவது இயக்கினால் உங்களுக்கு புடிக்குமா?
//மீண்டும் அடுத்த வாரம் (கேள்விகள் இருந்தால்) சந்திப்போமா//
என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறீர்கள்?
இந்திய வங்கிகள் திவாலாகும் வாய்புள்ளதா?
உங்கள் ஆசை அமெரிக்கா பொருளாதாரத்தில் மண்ணை கவ்வுகிறதே! உங்கள் கருத்து?
நீண்ட கால முதலீட்டிற்கு நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?
இப்போ கண்டிப்பா சந்திச்சு தானே ஆவணும்
//பை தி வே கருப்பு நிற மாருதி கார்களின் எரிபொருள் செலவு மற்ற மாருதி கார்களை விடக் குறைவு. இது உண்மை. ஏன் எனக் கூற இயலுமா? //
கருப்பு நிற மாருதி கார்களின் எண்ணிக்கை குறைவு என்பதால்
//ஒரு லாஜிக்கும் புரியல? அது ஏன் என்பது எனது அடுத்த வாரத்துக்கான கேள்வி//
மருத்துவர் ப்ரூனோ சரியான பதிலைக் கூறி விட்டார். மீதி கேள்விகள் அடுத்தவார பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.
துரதிர்ஷ்ட வயிற்றெரிச்சல்காரர்கள் மன்னிக்கவும். அடுத்த வாரமும் இக்கேள்வி பதில்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////அட ஆமாம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆக ரிபப்ளிகன் பார்ட்டி வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம்./////
ஃபிகர் இந்தியாவிற்கு அனுசரனையாக இருக்கவேண்டுமே சார்?
நம்மூரில் இல்லாத ஃபிகர்களா?:-)))
டோன்டு அவர்களே,
// கருப்பு நிற மாருதி கார்களின் எரிபொருள் செலவு மற்ற மாருதி கார்களை விடக் குறைவு. இது உண்மை. ஏன் எனக் கூற இயலுமா?
// இதே கேள்வியை சிவப்பு நிற அம்பாஸடர் கார் என்று சொல்லி சுஜாதா கேட்ட நியாபகம்.
அம்சமான ஃபிகரோ அனுசரணை இல்லாத ஃபிகரோ, ஃபிகர்னா ஃபிகர்தான்.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு வினிழோகஸ்தர்கள் மினிமம் காரண்டி அடிப்படையில் பணம் தருவதுபோல என்று வேண்டுமானால் வைத்து கொள்ளுவோமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://ecoiron.blogspot.com/2007/07/facts-and-fallacies-on-black-google.html
ஒருவனுக்கு ஒருத்தி என்பது கிறுத்துவக்கலாச்சாரமாமே?
பஜ்ரங் தல்லைத் தடை செய்யவேண்டும் என்பது பற்றி?
ஹனுமான் ஒரு காமுகன், கிருஷ்ணபரமாத்மாவின் மகள் ஒரு தேவ$&ள் என்று சொல்லி மதம் மாற்றும் new life church ஐ என்ன செய்யலாம்?
தமிழகத்தில் ஆயூள் தண்டனையின் காலம் எவ்வளவு?
100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாய்ச்சொல் வீரர் ஒருவர் பிறந்தார் என்பதற்காக தீவிரவாதிகள், கொலைகாரர்களை விடுதலை செய்யும் கலாச்சாரம் எங்கிருந்து தோன்றியது?
லீலாவதி கொலைவழக்கில் உள்ளே போன ஆயூள் தண்டனைக் கைதியை விடுதலை செய்யவும் கம்யூனிஸ்டுகள் கத்துகிறார்களே, அந்தக் கொலைகாரனை அனுப்பிய கருணாநிதியுடன் கூட்டு வைத்து அரசியல் செய்யும் போது இல்லாத ரோஷம் இப்ப மட்டும் ஏன் இவர்களுக்கு வந்துத் தொலைக்கிறது?
ஹிந்தி படம் "ஒரு புதன்கிழமை" A Wednesday பார்த்து விட்டீர்களா? பட இறுதியில் நஸீருத்தீன் ஷா பேசும் சொற்பொழிவு எப்படி?
ராஜா, சென்னை
செப் 20
1.இந்திராவின் எமர்ஜென்சி காலம் தொடர்பாக பல் வேறு செய்திகள்.எம்ர்ஜென்சி காலம் தொடர்பாக உங்களின் கருத்து என்ன?? விரிவாக தனி பதிவாக சொன்னால் மிக்க நலம் :).
2.அமெரிக்கா பொருளாதார விழ்ச்சியால் இங்கு இந்தியாவில் பல பேர் வேலை இழக்கிறார்களே?
என்னதான் கம்யூணிச கொள்கை தொடர்பாக விமர்சித்தாலும்..இப்படி ஒரே நாளில் நடு தெருவிற்க்கு வரும் அவல நிலைக்கு கம்யூணிச கொள்கை மாற்று தானே??
லாபம் வரும் போது முதலாளிக்கு நழ்டம் வரும் போது அது தொழிலாளிக்கு என்ற அந்த கண்ணோட்டம் சரியா??
3. சென்னையில் இனி வரும் மாதங்களில் வாங்க ஆள் கிடைக்காமல் ரியல் எஸ்டேட் தள்ளாடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா?
4. இந்தியாவுக்கு இலங்கை அரசு விடுதலைபுலிகள் இதில் யார் நண்பன் யார் எதிரி?
5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நழ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?
இண்டியன் முஜாஹித்தீன் மற்றும் countercurrents.org என்ற கேரள கம்யூனிஸ்டு வலைத்தளத்திற்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வருகின்றதே. அதைப் பற்றி படித்து ஒரு honest பதிலை எழுதுமாறு வேண்டுகிறேன். இந்த வாரக் கேள்வி பதிலில் கூட அது இடம் பெறவேண்டும் என்று ஒன்றும் கட்டாயமில்லை. உங்கள் தோது பார்த்து அதைப் பற்றி வெளியிடுங்கள்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட இன்டியன் முஜாஹித்தீனைச் சேர்ந்தவர்கள் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு வக்கீல் வைத்து வாதாடப்போறாராமே?
இப்படியெல்லாம் தீவிரவாதச்செயலில் ஈடுபடுபவர்களின் கோர்டுச் செலவுக்கெல்லாம் மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படலாமா ?
(ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மக்கள்வரிப்பணத்தில் இயங்கும் மைனாரிட்டி பல்கலைக்கழகம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.)
வஜ்ரா அவர்களே, இச்செய்தி உண்மையாகவிருப்பின் அது கண்டிக்கத் தகுந்ததே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment