9/20/2008

மனம் போன போக்கில் ஒரு மொக்கைப் பதிவு

"உன் முகத்தைக் காட்டு, விதிகளை நான் சொல்கிறேன்" என்ற சொலவடையை ஐ.டி.பி.எல். லில் நான் வேலை செய்தபோது சர்வ சாதாரணமாகக் கூறுவார்கள். விளக்குகிறேன். நிர்வாகத்தின் செல்லப் பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியும் ஒரே விதி அமலாக்கப்படும். சிலர் ரெகுலராக லேட்டாக வந்தால் கூட கண்டு கொள்ளமாட்டார்கள். அதே சமயம் சாதாரணமாக சரியான நேரத்துக்கு வந்து விட்டு ஒரே ஒரு நாள் லேட்டாக வந்தாலும் வறுத்தெடுத்து விடுவார்கள்.

ஒரு ராப்பிச்சைக்காரன் இருந்தான். அவனுக்கு எந்த வீட்டிலும் பிச்சை போட மாட்டார்கள், ஒரே ஒரு வீட்டைத் தவிர. அன்றிரவு அந்த வீட்டம்மா வந்து பிச்சை போட சற்றே லேட்டாகி விட்டது. பிச்சைக்காரன் சொல்கிறான், “பிச்சை போடாத மகராசிகள்தான் போடவில்லை, போடற முண்டச்சி ஏண்டி நீ லேட்டா வந்தே”? என்று கேட்டானாம். நல்லத்துக்கு காலமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?

இதெல்லாம் விடுங்கள். வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ அலங்கோலங்கள் நடைபெறுகின்றன. அண்ணா நூற்றாண்டு விழாவுக்காக 1405 பேரை விடுதலை செய்தார்கள். அது என்ன கணக்கு? அதை எதிர்த்து ரிட் பெட்டிஷன் சுப்பிரமணிய சாமி போட, அந்த கேசில் அரசு செய்தது சரியில்லை என தீர்ப்பு வந்தால் அத்தனை பேரையும் மறுபடி கைது செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டது நீதிமன்றம். இது என்னவென்றே புரியவில்லை. சட்டுபூட்டென்று விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய கேஸ் இல்லையா இது? திரும்ப 1405 பேரை அரஸ்ட் செய்ய வேண்டுமென்றால் நடக்கும் காரியமா அது? சுத்தமாக எனக்கு புரியவில்லை.

இது பற்றி ரியாலிடி செக் என்னும் வலைப்பதிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

"1405 life prisoners to be released in Tamilnadu
Posted in Uncategorized by realitycheck on the September 14, 2008
Remember the media coverage of Afzal Guru. Remember the socialites who were on TV yelling against the death penalty. This news from Tamilnadu is sure to send them sulking into characteristic hibernation.

The ruling party’s founder Mr C.N.Annathurai’s 100th birthday celebrations are being kicked off in the state. As part of the celebrations, 1405 prisoners serving life terms (I assume mostly murder) are being released. Can we call them hardcore criminals ? I think so. They may want to pick roses for a living but they are hardcore enough to have been awarded a life term. Families have been destroyed by their actions. Wives lost husbands, kids lost fathers.

The two categories are :

1. All those serving life terms who have completed 7 years (subject to some checks like good behaviour)

2. All those over 60 are free if they have served five years

Remember, a life term is usually awarded for murder.

The idea is that these prisoners should not be neglected by the society and stigmatised for their past forever. Our Correctional Wing along with NGOs and Prison Ministry of India is working out various ways to resettle them in the society,” said DGP R Nataraj, who initiated the programme.

Forever. What a nice word ? Does ‘rest of your life‘ mean the same thing, or are we misreading it ? Kids have lost their dads forever, haven’t they ? What about them ?

While many have expressed a desire to own a taxi or an autorickshaw, a few have asked for sewing machines and fishing nets. One man wanted to open a flower shop. “For such cases we are trying to arrange bank loans to help them start their own small-scale units,” said Nataraj. The sewing machines and fishing nets will be given on the day of their release.

So, people who commit heinous crimes like murder will be given bank loans for taxis and autos. Is this facility available to non-criminals as well ?

V Kannadasan, Special Public Prosecutor for Human Rights said, “Human Rights concepts are growing everywhere and these prisoners also have a right to life, which if denied, will lead them back to crimes. So this opportunity to reform must be given to them.”

All quotes from expressbuzz

Human Rights Sir, I have a stupid question. How can it “lead them back to crimes” if they are in jail ?

This is a slap on the faces of the victims families. Their consent has clearly NOT been obtained.

This is moment of shame for the media because no TV channel will discuss this.

Another moment of humiliation for the judicial system.

There is a case against it by in the Supreme Court by the relentless Subramanian Swamy. The Supreme Court had earlier stayed the released of 1500 hardcore criminals by the YS Reddy government.

But AP is AP, TN is TN, Bengal is Bengal, Kerala is Kerala.
Until then, no one in India has the right to talk about Afzal Guru".

இப்போது என்னவாயிற்று என்றால், ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களுக்கும் இந்த வசதியை நீடிக்க வேண்டுமாம். தூக்கு தண்டனை பெற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமாம். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

ஒரு கொலை நடந்து கேஸ் எல்லாம் முடிந்து தூக்கு தண்டனை அளித்தால் அதை நிறைவேற்றுவதில் தேவையற்ற தாமதங்கள். இப்படித்தான் விஷ ஊசி வழக்கில் பத்தாண்டுகள் ஆகிவிட்டதை சாக்காக காட்டி முக்கிய குற்றவாளி வைத்தீஸ்வரன் தூக்கிலிருந்து தப்பிக்க முடிந்தது. அந்த பத்தாண்டுகள் தாமதத்துக்கும் அவன் செய்த அப்பீல்களே காரணம் என்பதை வசதியாக மறந்து விட்டனர். இம்மாதிரி கேசுகளில் எவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் நலமாக இருக்கும். மக்ஃபூல் பட் என்னும் தீவிரவாதியை தூக்கில் போடுவதை தேவையின்றி தாமதப்படுத்தியதில் அவனது கூட்டாளிகள் இந்திய தூதரக அதிகாரி மாத்ரே என்பவரை பயணக் கைதியாக்கிக் கொன்றனர். பிறகு மக்ஃபூலும் தூக்கிலிடப்பட்டான். இந்த எழவு காரியத்தை முன்னாலேயே செய்து தொலைக்காமல் என்ன கழட்டினார்கள் என்று தெரியவில்லை. மாத்ரே சாகாமல் இருந்திருப்பார் அல்லவா?

1991-l நடந்த ராஜீவ் காந்தி கொலைக்காக தூக்கு தண்டனை பெற்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சோனியா காந்தி கூறியதால் தூக்கு தண்டனையிலிருந்து தப்பியுள்ளாராம். நான் கேட்கிறேன், சோனியாவின் கணவர் மட்டும்தான் மரணமடைந்தாரா? கூட பலர் மரணமடையவில்லையா? அவர்கள் உறவினரது ஒப்புதல் பெறப்பட்டதா? அதே போல பிரியங்கா காந்தி நளினியை பார்க்க அனுமதிக்கப்பட்டதில் எல்லாவிதமான விதிகளும் மீறப்பட்டுள்ளன. சாதாரண நிலையில் உள்ள மக்களுக்கு இச்சலுகைகள் வழ்ங்கப்படுமா?

அதனால்தான் கூறினேன், "உன் முகத்தைக் காட்டு, விதிகளை நான் சொல்கிறேன்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Ramesh said...

பார்த்தவர் விவரங்கள் does not show correct fonts? Mostly I use Firefox.

Also I checked with a friend in a senior position.

What government has done is unconditional parole only, hidden to most public and magazines sensationalize Subramaniya Swamy. They need to sign regularly and the local Police station would monitor them. They can arrest them anytime. (Even in the USA due to the paucity of space, about 40% were let go on Parole, in most states in 1980's. But they were booked immediately, if they don't report to Parole officer once in 7 days, unless sick!)

This would not hold in court says a good lawyer friend of mine, who works with a very famous Supreme Court Lawyer firm. In 2007 the release was unconditional, the wording were not right, hence the court struck it.

Let us wait and watch.

யாழ் Yazh said...

இப்படி தான் எனது பிராமின் நண்பருக்கு TVSல் வேலை கிடைத்தது

வால்பையன் said...

இருப்பினும் கொலைக்கு கொலை தண்டனை ஆகுமா!
நன்னடத்தை காரணமாக விடுவிக்கலாம், ஆனால் அவை தான் உண்மையில் நடந்ததா என்பதே என்னை போல் உள்ளவர்களின் கேள்வி, அவர்களின் நன்னடத்தை யாருக்கு விசுவாசமாக இருந்தது. இதை தான் நீங்களும் சொல்ல வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் நளினி விசயத்தில் குற்றத்துக்கு துணை போனார் என்ற குற்றசாட்டை தவிர, குற்றம் புரிந்தார் என்று எதுவும் இல்லையே, அவருக்கு கருணை காட்டுவதில் தவறில்லை என்பது பெரும்பாலோனோர் சொல்வது, நளினியின் குழந்தையை பார்த்தால் நமக்கும் அது தானே தோன்றும்


//Yazh said...
இப்படி தான் எனது பிராமின் நண்பருக்கு TVSல் வேலை கிடைத்தது//

இவரு என்ன சொல்ல வர்றாரு

அருண்மொழி said...

http://arunmozhi985.blogspot.com/2008/09/blog-post_7882.html

Madhu Ramanujam said...

இப்போதெல்லாம் இவர் பிறந்தார் அவர் இறந்தார் என்று ஏதேனும் சாக்கு சொல்லி சிறையிலிருந்து பலரை விடுவிப்பது பழக்கமாகவே ஆகிவிட்டது. சிற் சில சமயங்களில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதில் தவறில்லை. ஆனால் இத்தகைய விடுதலைகள் குறித்த சரியான தகவல்கள் ஊடகங்களில் எல்லா சமையங்களிலும் வெளியிடப்படுவதில்லை. உதாரணமாக இங்கே முதல் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது போல விடுதலை செய்ய பட்ட அனைவரும் நிபந்தனையற்ற பரோலில் தான் உள்ளனரே தவிர அவர்களின் தண்டனை ரத்து செய்யப் படவில்லை என்பது நான் புதிதாய் தெரிந்து கொண்ட ஒரு விஷயம்.

இதெல்லாம் போக இத்தகைய செயல்கள் அரசியல் விளம்பரம் கருதி அதிகரித்து வருவது மேலும் வருத்தமளிக்கிறது. அத்தகைய வருத்தத்தின் அடிப்படையில் ஒருவர் இச்செயலுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்தால் அவ்வெதிர்ப்பு மற்றொருவரால் எதிர்கொள்ளப்படும் விதம் இன்னமும் வருத்தமளிக்கிறது.

உதாரணமாக, டோண்டுவின் இப்பதிவுக்கு எதிர் பதிவாய் அருண்மொழி அவர்கள் “படுகொலை செய்த பாதகனை பாதி தண்டனையில் வெள்யில் விடலாமா” என்று ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் கோட்சே விடுதலை ஆகலாம் ஆனால் இந்த 1405 பேர் விடுதலை ஆகக் கூடாது என்று விதண்டாவாதம் பேசுகிறார். அது மட்டுமின்றி ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை அவ்வாறு செய்தார். அப்போது எங்கே போனாய் என்று வேறு ஒரு உபரி கேள்வி.

கோட்சே விடுதலை என்பது அவர் சார்ந்தவர்களால் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட ஒன்று. இதற்கு டோண்டு ராகவன் எப்படி பொறுபேற்க முடியும்? வேண்டுமானால் அதை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அவரால் பேச முடியும் அவ்வளவே.

இப்போது இரண்டாவது விஷயம் ஜெ பிறந்த நாளில் கைதிகள் விடுதலை: - இது நிச்சயம் விரும்ப தக்க ஒரு விஷயமில்லை என்பது என் கருத்து. அந்த நாளில் ஏன் பதில் சொல்லவில்லை என்றால் அன்று இந்தப் பதிவெழுதும் பழக்கமோ அல்லது நினைத் போதெல்லாம் இணையத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதோ இயலாத ஒன்றாய் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை என்பதே காரணம்.

இனியாவது விதண்டாவாதம் செய்யாமல் தரமான கருத்தாடல் செய்தால் நன்றாயிருக்கும்!

dondu(#11168674346665545885) said...

@அருண்மொழி:
நாதுராம் கோட்ஸே 1949-ல் தூக்கிலிடப்பட்டார். விடுதலை செய்யப்படவில்லை. நீங்கள் ஒரு வேளை கோபால் கோட்ஸேயை பற்றி கூறுகிறீர்களோ என்னவோ தெரியவில்லை. அவரும் இம்மாதிரி அனாமத்தான முறையில் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனையை அனுபவித்த பிறகே வெளியில் வந்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆ! என்ன? காந்தி இறந்து விட்டாரா?

நாதுராம் கோட்சே

அருண்மொழி said...

@ இப்போதெல்லாம் இவர் பிறந்தார் அவர் இறந்தார் என்று ஏதேனும் சாக்கு சொல்லி சிறையிலிருந்து பலரை விடுவிப்பது பழக்கமாகவே ஆகிவிட்டது.
ஆனால் எந்த காரணமும் இல்லாமல் கோட்சே விடுவிக்கப்பட்டார்

@ சிற் சில சமயங்களில் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதில் தவறில்லை. ஆனால் இத்தகைய விடுதலைகள் குறித்த சரியான தகவல்கள் ஊடகங்களில் எல்லா சமையங்களிலும் வெளியிடப்படுவதில்லை.
அப்படிபோடு

@ உதாரணமாக இங்கே முதல் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது போல விடுதலை செய்ய பட்ட அனைவரும் நிபந்தனையற்ற பரோலில் தான் உள்ளனரே தவிர அவர்களின் தண்டனை ரத்து செய்யப் படவில்லை என்பது நான் புதிதாய் தெரிந்து கொண்ட ஒரு விஷயம்.
அப்படியா. அப்ப சுசா போட்ட கேஸ் அம்பேலா

@ இதெல்லாம் போக இத்தகைய செயல்கள் அரசியல் விளம்பரம் கருதி அதிகரித்து வருவது மேலும் வருத்தமளிக்கிறது.
உண்மை

@ அத்தகைய வருத்தத்தின் அடிப்படையில் ஒருவர் இச்செயலுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்தால் அவ்வெதிர்ப்பு மற்றொருவரால் எதிர்கொள்ளப்படும் விதம் இன்னமும் வருத்தமளிக்கிறது.
உண்மை. என கோட்சே விடுதலை எதிர்ப்பை நீங்கலெல்லாம் எதிர்கொண்ட விதத்தை விட கேவலம் எதாவது இருக்கா

@ உதாரணமாக, டோண்டுவின் இப்பதிவுக்கு எதிர் பதிவாய் அருண்மொழி அவர்கள் “படுகொலை செய்த பாதகனை பாதி தண்டனையில் வெள்யில் விடலாமா” என்று ஒரு பதிவை எழுதியுள்ளார்.

@ அதில் கோட்சே விடுதலை ஆகலாம் ஆனால் இந்த 1405 பேர் விடுதலை ஆகக் கூடாது என்று விதண்டாவாதம் பேசுகிறார். அது மட்டுமின்றி ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை அவ்வாறு செய்தார். அப்போது எங்கே போனாய் என்று வேறு ஒரு உபரி கேள்வி.


@ கோட்சே விடுதலை என்பது அவர் சார்ந்தவர்களால் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட ஒன்று. இதற்கு டோண்டு ராகவன் எப்படி பொறுபேற்க முடியும்? வேண்டுமானால் அதை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அவரால் பேச முடியும் அவ்வளவே.
அவர் எதிர்த்து பேச வில்லையே. இதிலிருந்து அவர் கைதி விடுதலையை எதிர்க்க வில்லை. கருணாநிதியை எதிர்க்கிறார்

@ இப்போது இரண்டாவது விஷயம் ஜெ பிறந்த நாளில் கைதிகள் விடுதலை: - இது நிச்சயம் விரும்ப தக்க ஒரு விஷயமில்லை என்பது என் கருத்து. அந்த நாளில் ஏன் பதில் சொல்லவில்லை என்றால் அன்று இந்தப் பதிவெழுதும் பழக்கமோ அல்லது நினைத் போதெல்லாம் இணையத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதோ இயலாத ஒன்றாய் இருந்தது.
சரி. ஆனால் இன்று அதை எதிர்க்கலாம் அல்லவா

@ ஆனால் இன்று அப்படி இல்லை என்பதே காரணம்.
சரி. இப்ப சொல்லுங்க. அதை எதிர்க்கிறீரா இல்லையா

@ இனியாவது விதண்டாவாதம் செய்யாமல் தரமான கருத்தாடல் செய்தால் நன்றாயிருக்கும்!
சரி

dondu(#11168674346665545885) said...

@அருண்மொழி:
//கோட்சே விடுதலை எதிர்ப்பை நீங்கலெல்லாம் எதிர்கொண்ட விதத்தை விட கேவலம் எதாவது இருக்கா//
உங்களை லூஸா என்று உங்கள் பதிவில் கேட்ட அனானி சரியாகத்தான் கேள்வி கேட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கோட்சே விடுதலை ஆகவில்லை தூக்கிலிடப்பட்டார் என்பதை பார்க்காமலேயே உளறுகிறீர்கள்.

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"In October 1964, Karkare, Madanlal and Gopal Godse finished their term in prison and were released."
See: http://www.mkgandhi-sarvodaya.org/godse.htm

Dondu N. Raghavan

dondu(#11168674346665545885) said...

@Arunmozhi

In spite of being caught in uttering flagrant falsehood, you seem to revel in it. Hence my doubts as to your sanity.

Dondu N. Raghavan

bala said...

//In spite of being caught in uttering flagrant falsehood, you seem to revel in it. Hence my doubts as to your sanity.//


Dear Dondu Sir,
Why should you have doubts about ArunMozhis's insanity.It has been quite a while, since Arun Mozhi was confirmed aa a certified pathologically insane, lunatic. just like many other rabid black shirts of TN.Please dispel any traces of doubt from your mind.

Bala

Anonymous said...

//நீங்கலெல்லாம்//

What do u mean by நீங்கலெல்லாம்?

Ram?

Anonymous said...

//just like many other rabid black shirts of TN.//

Like leader like thondans!! Do you expect him to be honest?!!

Ram

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது