பகுதி - 82 (28.05.2009):
இப்பகுதியின் ஒளிபரப்பு ஜெயா டிவியில் நடந்த போது நான் கிழக்கு பதிப்பகத்தின் மீட்டிங்கில் இருந்தேன். ப்ளாக்.இசைதமிழ்.நெட்டில் எபிசோடுகளை வலையேற்றப்போவதை நம்பித்தான் ப்ரூனோ மீட்டிங்கிற்கே சென்றேன். ஆனால் சோதனை போல அது வலையேற்றப்பட ரொம்பவும் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அடுத்த நாள் காலையிலிருந்தே அந்த வலைத் தளத்தில் பலமுறை போய் பார்த்து ஏமாந்ததுதான் நடந்தது. நல்ல வேளையாக பிற்பகல் மூன்றரை மணியளவில் அதை வலையேற்றினர். முழுக்க பார்த்து விட்டு இப்பதிவுக்கு வருகிறேன். எனது நம்பிக்கை வீணாகப் போகாததில் மிக்க மகிழ்ச்சியே.
அசோக் உமாவுக்கு அட்வைஸ் கொடுப்பது தொடர்கிறது. உமாவின் ஆட்சேபணைகளை நட்புடனும் அதே சமயம் உறுதியாகவும் எதிர்க்கொண்டு அவளை கன்வின்ஸ் செய்யத் தொடங்குகிறான். ஒரு பெண்ணின் காயப்பட்ட மனது அவனுக்கு புரியாது என அவள் ஒரு தருணத்தில் அவனிடம் குற்றம் கூறும் தொனியில் கூற, அவன் அசராது அவள் இந்த துன்பத்தை ஒருவகையில் விரும்புவதாகவே தோன்றுகிறது எனக்கூறிவிட்டு, அது மிக அபாயமான மனநிலை என்பதையும் விளக்குகிறான். அவள் கடைசியில் அவன் சொல்வதை ஏற்று தன் தாய் தந்தையர் ஏற்பாடு செய்யும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறாள். ”இப்போதுதான் நீ எனது உண்மைத் தோழி உமா” என அவன் மகிழ்ச்சியடைகிறான். “ஏதோ மேகக்கூட்டம் விலகியது போல தனக்கு தோன்றுகிறது” என்றும் அவள் கூறுகிறாள்.
அரசியல்வாதி வையாபுரியின் மகன் படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறான். அவன் மேலே செய்ய வேண்டியது பற்றி வையாபுரி அவனுடன் விவாதிக்கிறார். தான் பிசினஸ் செய்ய உத்தேசித்திருப்பதை பையன் கூற வையாபுரி அதெல்லாம் சரிப்படாது என கூறுகிறார். அவனும் தன்னைப் போலவே அரசியலுக்கு வருவதுதான் சுலபம் மற்றும் புத்திசாலித்தனமும் கூட என அவர் சொல்கிறார். டாக்டர் மகன் டாக்டராகிறான், வக்கீல் மகன் வக்கீலாகிறான், நடிகன் மகன் மகன் நடிகனாகிறான். இம்மாதிரி செய்பவர்கள் சுலபத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆக தனக்கு குலக்கல்வியின் மகத்துவம் இப்போதுதான் புரிகிறது என்றும், இதை மட்டும் அக்காலத்திலேயே கொண்டு வந்திருந்தால் நாடே தொழில் துறையில் அமோக வெற்றி பெற்றிருக்கும் எனவும் வையாபுரி கூறுகிறார்.
நீலகண்டன் வீட்டுக்கு வரும் நாதன் அசோக்கை முந்தைய நாள் தன் வீட்டுக்கு அனுப்பி உமாவுடன் பேச வைத்ததற்கு நன்றி கூறுகிறார். இப்போது உமா அசோக்கின் பேச்சைக் கேட்டு, தன் பிடிவாதங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். நாதன் திகைக்கிறார். பிறகு அசோக் முந்தைய நாள் முழுதும் தன் அறையிலேயே அடைபட்டு இருந்ததாகவும், அவன் எப்படி நீலகண்டன் வீட்டுக்கு வந்திருக்க முடியும் என்றும் நாதன் கேட்கிறார். இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த வசுமதிக்கும் திகைப்பு. அச்சமயம் கீழே வந்த அசோக்கும் தான் நீலகண்டன் வீட்டுக்கு வந்து உமாவுடன் பேசியதை திட்டவட்டமாக மறுக்கிறான்.
சோவின் நண்பர் “அசோக்தான் உமா வீட்டுக்கு போனானே, அதே சமயம் நாதன் வீட்டிலேயே வேறு இருந்திருக்கான். இது என்ன குழப்பம்”? என கேட்கிறார். வாழ்வில் பல விஷயங்கள் இம்மாதிரி நமது புரிதல்களையும் மீறி நடந்து விடுகிறது. நாம் நமது எல்லைகளை உணர வேண்டும். எல்லாவற்றையுமே எப்போதுமே புரிந்து கொள்ள இயலாது. தெய்வச்செயல் என்று வேண்டுமானால் கூறலாம். பல விஷயங்கள் நடந்து முடிந்த்வுடன் யோசித்து பார்த்தால் இம்மாதிரி புரியாதவை பல வரும்.
உதாரணத்துக்கு 1991-ல் நரசிம்ம ராவ் பிரதமராக வருவார் என்பதை யாருமே அதற்கு முன்னால் கற்பனை செய்திருக்க முடியாது. ஹரியானாவில் போலீசார் ராஜீவை வேவு பார்ப்பதை அவர் உணர்ந்து கோபப்பட்டு, சந்திரசேகர் மந்திரி சபைக்கு அதுவரை அளித்த காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்ள, ராஜீவை தாஜா செய்யாமல் சந்திரசேகர் பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1991 தேர்தல் வந்தது. காங்கிரசுக்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது என்பதை பலர் அப்போது கணித்தனர். திடீரென ராஜீவை புலிகள் கொல்ல அனுதாப ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைத்தது. பிரதமர் போட்டிக்கு பலர் உரிமை கொண்டாட அதிக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத நரசிம்ம ராவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தனர். அவரோ முழுமையாக 5 ஆண்டுகளும் பதவியில் இருந்து இந்தியப் பொருளாதார மேலாண்மையில் பல மாறுதல்கள் கொண்டு வந்தார். அவைதான் இன்னமும் இந்திய அரசியலை வழிநடத்துகின்றன. ஆக, ஹரியானாவில் நடந்த ஒரு சாதாரண நிகழ்ச்சி இவ்வளவு விஷயங்களை தன்னுள் கொண்டிருந்தது என்பதுதானே நிஜம்?
தனக்கு மகாபெரியவரிடம் கிட்டிய அனுபவத்தையும் சோ அவர்கள் கூறினார். அதற்கு பல நூற்றுக்கணக்கான பேர் சாட்சி எனக் கூறிய அவர் அதற்காகவெல்லாம் தன்னை மகாபெரியவரின் அத்யந்த சிஷ்யன் எனக் கூறவியலாது, தனக்கு அந்த அருகதை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இந்த இடத்தில் நான் என் மனதில் பட்டதை கூறவிரும்புவேன். சீரியலின் கதை ஓட்டத்தை அறிந்த நான் இம்மாதிரி அசோக் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தது குறித்து ஆச்சரியப்படவில்லை. அசோக்கின் பிறப்பின் நோக்கம் என வைத்து பார்க்கும்போது இதெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். இது தெய்வச்செயலே. அதே சமயம் அதை அவ்வாறு உணர வசுமதிக்கோ நாதனுக்கோ, நீலகண்டனுக்கோ பக்குவம் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும். சிறிது முனைந்து பார்த்திருந்தாலே உணர்ந்திருக்கக் கூடிய இந்த விஷயத்தை அவர்கள் பார்க்கத் தவறுவது மிக இயல்பாகவே காட்டப்படுகிறது. மாயை அவர்கள் கண்ணை மறைப்பதும் இங்கு தெரிகிறது. இந்தப் புரிதல் வர அவர்களுக்கு இன்னும் சமயம் வாய்க்கவில்லை என்றுதான் வைத்து கொள்ள வேண்டும்.
நீலகண்டனோ தன் பெண் உமா பொய் கூறுவாள் என நினைக்கவில்லை எனக் கூறி தன் வீட்டுக்கு ஃபோன் செய்து உமாவையே நாதனுடன் பேச வைக்கிறார். நாதனின் திகைப்பு இன்னும் அதிகரிக்கிறது. எது எப்படியாயினும் உமா மனம் மாறியதே போதும் என கூறும் நீலகண்டன் அசோக்குக்கு தன் நன்றியை தெரிவித்து விட்டு, அவன் நிஜமாகவே கிரேட் என்னும் சான்றிதழையும் போகிற போக்கில் தந்து விட்டு செல்கிறார்.
அவர் அந்தண்டை போனதும் வசுமதி நாதனுடன் பிலுபிலுவென சண்டை போடுகிறாள். அவர்தான் அசோக்கை ரூமிலிருந்து விடுவித்து அனுப்பியிருக்க வேண்டும் என்பது அவளது முடிவான முடிவு. அவளுடன் வாது செய்ய சக்தி இல்லாத நிலையில் உள்ள நாதனுக்கு குழப்பம் தொடர்கிறது.
வேம்பு சாஸ்திரி மற்றும் சாம்பு சாஸ்திரி அப்போதுதான் நல்லபடியாக நடந்து முடித்திருந்த ஜெயந்தி-கிரி திருமணம் பற்றி பேசுகின்றனர். சாம்புவின் மருமகள் பிரியாவும் அருகில் இருக்கிறாள். கல்யாணம் நன்றாக நடந்ததில் சாம்பு திருப்தியை தெரிவிக்க, வேம்புவோ தனது மற்றும் சிகாமணி முதலியார் உறவினர்களில் பாதிக்கு மேல் இத்திருமணத்தை தவிர்த்தது பற்றிய தனது மனக்குறையை வெளிப்படுத்துகிறார். எந்த சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும் என்றும், அவர் இதற்கெல்லாம் கவலைப்படலாகாது என்று பிரியாவும் சாம்புவும் வேம்புவை தேற்றுகின்றனர். அவரும் மனச்சமாதானம் அடைகிறார்.
சாரியாரை பார்க்க அசோக் அவர் வீடு தேடி வருகிறான். தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவன் சாரியார் தமிழில் மொழிபெயர்த்து தனது அச்சகத்தில் வெளியிட்ட யோக வாசிஷ்டத்தை பெரிதும் சிலாகித்து பேசுகிறான். அவனது இளவயதிலேயே யோக வாசிஷ்டத்தை போற்றும் அவன் அசாதாரணமானவன் என்பதை கண்டறிந்த சாரியார் அவனது அறிவை கண்டு வியந்து மகிழ்கிறார். வைஷ்ணவ சம்பிரதாயங்களை அவரிடமிருந்து கற்க விரும்புவதாக அசோக் கூறிவிட்டு, அவர் தன் வீட்டுக்கு ஒரு நாள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறான். அவரும் அவ்வழைப்பை ஏற்று கொள்கிறார். ஆழ்வார்களை பிரதானமாக கொண்டாடும் திருபெரும்புதூர், திருவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய கோவில்கள் பற்றியும் பேசுகிறார்.
பகுதி - 83 (29.05.2009):
அசோக் வீட்டுக்கு சாரியார் வருகிறார். அசோக் மிக்க மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று நாதனுக்கு அறிமுகப்படுத்துகிறான். நாதன் வசுமதியை அழைத்து அவளும் அவரை வரவேற்கிறாள். பெருமாள் கோவில்களில் ஏன் நவக்கிரக வழிபாடு இல்லை என்ற வசுமதியின் கேள்விக்கு சாரியார் தெளிவாக பதிலளிக்கிறார். ஆனால் தற்சமயம் மதுரையருகிலுள்ள கூடலழகர் கோவில், திருமோகூர் கோவில் ஆகிய இடங்களில் நவக்கிரகங்களுக்கான சன்னிதி உண்டு என்றும் கூறுகிறார்.
நாதன் தன் பிள்ளை நார்மலாக இல்லையென வருத்தப்பட, யோகவாசிஷ்டம் படிக்கக் கூடியவன் பிரத்தியேகப் பிறவி என்றும் அவனைப் பற்றி நாதன் தேவையின்றி கவலைப்படுவதாகவும் சாரியார் கூறுகிறார். இப்படிபட்ட சத்புத்திரனை மகனாக பெறும் பாகியம் செய்தவர்களை பார்க்கவே தான் அந்த வீட்டுக்கு வந்ததாகவும் சாரியார் கூறுகிறார். நாதன் தனக்கு பாதுகா ஸ்லோகம் என்னும் ஆன்மீக புத்தகம் அவர் அச்சகத்தில் கிடைக்குமா எனக் கேட்க அதை தான் உடனே இவருக்கு கூரியர் செய்வதாகவும் இல்லாவிட்டால் அசோக் தன்னை பார்க்க வரும்போது அவனிடம் கொடுத்து விடுவதாகவும் கூறுகிறார். அவர் விடைபெற்று சென்றதும் வசுமதி இவனுக்கென்று இப்படியெல்லாம் நண்பர்கள் வருகிறார்களே என தன் வியப்பை வெளிப்படுத்த, ஞானமார்க்கத்தில் செல்பவனுக்கு குரு தானே கிட்டுவார் என நாதன் பதிலளிக்கிறார். பாகவதராவது ஸ்மார்த்தர், ஆனால் சாரியாரோ ஐயங்கார், அதுதான் தனக்கு உறுத்தலாக இருப்பதாக வசுமதி கூற, சத்சங்கம் தங்கள் பிள்ளைக்கு அமைவதே முக்கியம், இதில் ஸ்மார்த்தர் என்ன, வைஷ்ணவர் என்ன என நாதன் விடை கூறுகிறார்.
கடற்கரையில் காதலர் இருவர் அமர்ந்திருக்கின்றனர். ஆண் எம்.எல்.ஏ. வையாபுரியின் மகன், பெண் நடேச முதலியாரின் இரண்டாம் மகள் சோபனா. அவர்கள் தங்கள் காதலை எப்படி திருமணம் வரைக்கும் கொண்டு செல்வதென் யோசிக்கின்றனர். அவர்கள் அச்சமயம் சோபனாவின் அக்கா பார்வதியின் நண்பர் ஹிந்தி பேசும் ஃபினான்ஷியரின் கண்களில் படுகின்றனர்.
நாதனின் குடும்ப டாக்டர் வீட்டில் அவர், நர்ஸ் பார்வதி, ஃபினான்ஷிய்ர் மற்றும் சாரியார் இந்தப் பிரச்சினை பற்றி பேசுகின்றனர். வையாபுரியின் மகன் ஹரிஜன். சோபனாவோ முதலியார் சாதியை சேர்ந்தவள். இவர்கள் திருமணத்துக்கு சோபனாவின் தந்தை நடேச முதலியார் நிச்சயம் ஒத்து கொள்ளப் போவதில்லை. பிராமண ஜாதியில் பெண் எடுத்ததற்காக அவர் தனது சொந்த தம்பியையே பல ஆண்டு காலம் ஒதுக்கி வைத்தவர் என்ற நிலை வேறு இவர்கள் எல்லோரையும் தயக்கம் கொள்ளச் செய்கிறது. இந்த வேலையை நாசூக்காக செய்யக் கூடியவர் அவர்து நண்பர் சாரியார் மட்டுமே என எல்லோரும் முடிவு செய்கின்றனர். இருப்பினும் பார்வதி ஒன்று கூறுகிறாள். முதலில் வையாபுரியை சந்தித்து பேச வேண்டும். அவர் இந்த திருமணத்துக்கு ஒத்து கொள்வாரா என்பதை பார்க்க வேண்டும். பிறகுதான் நடேச முதலியாரை பார்க்க வேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்து கொள்கிறார்கள்.
நாதன் வீட்டுக்கு அசோக்கை பார்க்க வருகிறன் நீலகண்டனின் மகன் ராம்ஜி. தன் சகோதரி உமாவுக்கு அவன் அறிவுரைகள் கூறி அவளை அவள் பிடிவாதத்திலிருந்து விடுவித்ததற்காக நன்றி கூறுகிறான். தன் அந்த குறிப்பிட்ட தினத்தன்று அவர்கள் வீட்டுக்கு வரவே யில்லை என அசோக் திட்டவட்டமாக மறுக்கிறான். ராம்ஜி திகைக்கிறான். இதே மாதிரி இன்னொரு விஷயம் அசோக் வீட்டில் நடந்தது பற்றி அவன் கோடி காண்பிக்க, அசோக் தான் பாகவதரை நேரடியாக இங்கே சென்னையில் பார்த்த சில நொடிகளில் அதே பாகவதர் காஞ்சியிலிருந்து ஃபோன் செய்ததையும் கூறுகிறான். இம்மாதிரி ஏதேனும் மறுபடியும் அமானுஷ்யமா நடந்திருக்குமா என ராம்ஜி கூற அசோக்கும் ஆமோதிக்கிறான். தன் ரூபத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று உமாவுடன் பேசியது ஒரு தெய்வசக்தியாகத்தான் தோன்றுகிறது என அசோக் கூறுகிறான். அதே சமயம் இந்த சந்தேகங்களை எல்லாம் உமாவிடம் கூற வேண்டாம் எனவும் அவள் நினைத்தபடியே தானே அவளுடன் பேசியதாக இருக்கட்டும், இல்லாவிட்டால் அவள் குழப்பமடைந்து தன் முடிவை மாற்றக்கூட செய்யலாம் என அசோக் கூற ராம்ஜியும் ஒத்து கொள்கிறான்.
“உண்மையை மறைப்பது தப்பு இல்லையா? ஏன் அசோக் இம்மாதிரி குழப்பறான், அவன் நிஜமாவே நல்லவனா” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், “நல்லவன்தான். ஒரு நல்லது நடக்கவேண்டுமானால் பொய் சொல்வதில் தவறே இல்லை என்பது ஆன்மீக வாக்கு. ராமரே பொய் சொல்லியிருக்கிறார். அவர் வனவாசம் செல்லும்போது பின்னால் ஓடிவரும் தசரதர் தேரோட்டி சுமந்திரனை விளித்து தேரை நிறுத்துமாறு கூற ராமரோ தேரை வேகமாக செலுத்த ஆணையிடுகிறார். அது மட்டுமன்றி அவன் அயோத்தி திரும்பியதும் அரசரிடம் அவர் சொன்னது காதில் விழவில்லை என்றும் கூற சொல்கிறார். தந்தையின் வாக்கு பரிபாலனம் செய்யும்போது அவர் எந்த தடங்கலையும் விரும்பவில்லை என்பதாலேயே இது நடந்தது. அதே போல காட்டில் தன்னை பார்க்க வரும் பரதர் தன் அன்னையை கடுமையாக சாட, ராமர் பரதனிடம் தந்தை தசரதர் கைகேயியை மணம் முடிக்கும்போது அவளுக்கு பிறக்கும் மகனே தனக்கு பின்னால் பட்டத்துக்கு வருவான் என்று வாக்களித்தார் என ராமர் கூறி சமாதானப்படுத்துகிறார். வால்மீகி ராமாயணத்தில் வேறு எந்த இடத்திலும் இது வரவே இல்லை. மேலும் இது உண்மையாக இருந்திருந்தால் ராமரே முதலிலேயே பட்டாபிஷேகத்துக்கு சம்மதிதிருக்க மாட்டார், ஆகவே இது பரதனின் கோபத்தை தணிக்கவே செய்யப்பட்டது” என சோ கூறுகிறார்.
இப்போது நண்பர் இன்னொரு கேள்வி கேட்கிறார். “வாலியை மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று ராமர் அம்பு விட்டது மட்டும் சரியா” என கேட்க, சோ அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், ராமர் அவ்வாறு ஒருபோதும் செய்யவேயில்லை என. இம்மாதிரி மரத்தின் பின்னாலிருந்து அம்பு விட்ட கதை கம்ப ராமாயணம் மற்றும் துளசி ராமாயணத்திலும்தான் வருகிறது, வால்மீகி ராமாயணத்தில் வரவேயில்லை. மேலும் வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி, மீதி ராமாயணங்கள் அல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். வாலியின் உடலை பார்க்க வந்த தாரையிடம் வானரங்களே கூறுகிறார்கள், “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. மேலும் சோ கூறுகிறார், இதை நானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக சோ கூறுகிறார்.
என் அப்பன் ராமபிரான் குற்றம் செய்யவில்லை என அறிந்து எனக்கும் மனச்சமாதானம் ஏற்பட்டதை நான் இங்கே மறைக்கப் போவதில்லை.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
10 hours ago
9 comments:
எங்கே பிராமணன் கதையில் சாத்திரம் சொன்னதில்லை நாடகக் கதையையும் புகுத்துவது போல் தெரிகிறது. சாரியார், பார்வதி எல்லாம் அந்த நாடக பாத்திரங்கள்...
Dear Dondu Sir,
Thanks always for your tireless effort in giving the updates.
1. Don't you think it's ironic that Singaram should talk about sons opting for the same profession as their father when Kalaignar nominates Stalin as the Deputy CM.
2. I do agree that there are somethings which are beyond our control and you never understand.
I have managed to survive the turbulent economy in US (till now) eventhough I don't have any extra-ordinary skills. Yes, of course hardwork could be one of the criteria, but there's something more to it which I don't understand (as Cho mentions in the episode).
Regards.
Partha, New Jersey
Dondu sir,
Whats the experiance of Cho with Maha Periyavar. Why u dint elobrate that. Pls tell us also. Thaks for the post
//Whats the experiance of Cho with Maha Periyavar. Why u dint elobrate that. Pls tell us also. Thaks for the post//
சோ, அருண் ஷோரி, எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்த சிலர், குருமூர்த்தி ஆகியோர் காரில் மகா பெரியவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் சோ அவர்கள் மகாபெரியவர் ஒரு விஷயத்தில் செய்ததை பற்றி (என்ன விஷயம் என சொல்லவில்லை) விமரிசனம் செய்து வந்தார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே கார் மகா பெரியவர் இருக்கும் இடத்துக்கு சென்று விட்டது.
எல்லோரும் நிறைந்த சபையில் அவர் திடீரென சோ அவர்களை பார்த்து “உனக்கு நான் இந்த விஷயத்தில் செய்தது பற்றி மாற்று கருத்து இருக்கிறதல்லவா. நான் அவ்வாறு செய்ததற்கான காரணங்கள் இவைதான்” என்று கூறிவிட்டு அவற்றை அடுக்கினார்.
சோ அவர்கள் சொன்னது இவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Even as we discuss the sons and daughters of Karunanidhi, the life of C.N.A. Parimalam, son of DMK founder C.N. Annadurai, offers a study in contrast. A government doctor, Parimalam committed suicide by jumping into a well in Chennai’s Nungambakkam area in March last year. He was 67. He is said to have ended his life because he was worried about the expenses his family was incurring for his heart ailment. The high ideals Parimalam had imbibed from his father forbade him from seeking financial support from either of the two big Dravidian parties that live off his father’s legacy.
With a deified figure like Annadurai as a father, it would not have been difficult for Parimalam to make a career in politics. MGR apparently offered him the Dindigul Lok Sabha seat in the ’70s and Karunanidhi the Chennai Central seat in the ’80s, but he chose to stay away from politics as his father was opposed to any form of dynastic perpetuation.
http://www.outlookindia.com/full.asp?fodname=20090608&fname=Cover+Story&sid=3
ராகவன் சார், பார்க்காமல் விட்டுப்போன பகுதிகளை தங்கள் மூலமாகத் தான் தொடர முடிகிறது. நன்றி.
http://www.valmikiramayan.net/kishkindha/sarga16/kishkindha_16_frame.htm
வால்மீகி ராமாயணத்திலும் ராமன் தான் வாலியைக் கொன்றதாக உள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆழ்வார்கள் பாசுரங்களிலும் இதனை உறுதிபடுத்திக் கொள்ளலாம்..
இருப்பினும் இராமன் எந்த சாக்கு போக்கும் சொல்லவில்லை.. தான் செய்தது தவறு என்றே ஒப்புக் கொண்டான்... வாலியே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை பார்த்து “இராம நீ என்னைக் கொன்றதன் காரணம் நான் சொல்கிறேன்.. சீதை அருகில் இல்லாத்தால் தான் நீ இப்படி நடந்து கொண்டாய் என்று”.. அதுதான் உண்மையும்..
@ராகவ்
ஒவ்வொரு பகுதியின் தலைப்பிலும் சொடுக்கினால் சம்பந்தப்பட்ட வீடியோ வரும். பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. நாணயங்களில் முன்பெல்லாம் தலை (சிங்க இலச்சினை) ஒரு பக்கமும், பூ (காசு மதிப்பு எண்) இன்னொரு பக்கமும் இருந்தது. ஆனால் தற்போது சிங்க இலச்சினை மற்றும் காசு எண் இரண்டும் ஒரே பக்கம் இருக்கிறதே ? ஏன் ? பூவா தலையா போடும்போது எதை பூ என்றும் தலை என்றும் கொள்வார்கள் ?
2. முன்பெல்லாம் நாணயங்களில் ஏதாவது ஒரு தேசத் தலைவர் அல்லது நாட்டின் வரைபடம் அல்லது திட்டம் போன்றவை (பூ) ஒரு பக்கம் இருக்கும். தற்போது இரட்டை விரலும், பிளஸ் (அல்லது சிலுவை ?) போல ஏதோ முத்திரைகள் வருகின்றனவே ? இதை யார் முடிவு செய்கிறார்கள் ? அரசு அதிகாரிகளா ? இல்லை எந்தத் துறை அமைச்சர் ? இல்லை சோனியாவை திருப்திப் படுத்தவா ?
3. ஜட்டிகளில் சிறந்தது எது ? ஏன் ? டான்டெக்ஸ் எலாஸ்டிக் ? பட்டா பட்டி அண்டர்வியர் ? பாதசாரி கடைகளில் விற்கும் 10 அல்லது 15 ரூபாய் ஜட்டிகள் ? வி. ஐ.பி ? அல்லது கோமணம் ? அல்லது காத்தாட இருப்பது (கோடையில்) ?
4. 86ஆம் பிறந்த நாள் காணும் கலைஞர் கருணாநிதிக்கு தற்போது என்ன சொல்லி வாழ்த்துவீர்கள் ? ஏன் ? 86 வயது ஆகும் போது அவர் அளவிற்கு உழைக்க உடல்வலுவும், மன உறுதியும், ஞாபக சக்தியும் நமக்கெல்லாம் (உங்களுக்கும் கூட) இருக்குமா ?
5. நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ கமல்ஹாசன் பேசுவது பல சமயம் புரிவதில்லையே ? எப்படி இருந்த கமல் ஏன் இப்படி ஆகிவிட்டார் ?
6. உங்கள் மாப்பிளையுடன் உங்கள் உறவு (மாமனாராக) எப்படி ? மாமியார் மருமகள் உறவுக்கும் மாமனார் மருமகன் உறவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காணுகிறீர்கள் ? எல்ல விஷயங்களையும் அரட்டை உண்டா ? இல்லை ஒருவித டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுவீர்களா ?
7. முகச் சவரம் செய்ய சரியான பிளேடு (தற்போது மார்க்கெட்டில் கிடைப்பதில்) எது ? ஒரு சிலருக்கு மட்டும் பளபள என முகச் சவரம் செய்த பிறகு இருக்கிறது. சிலருக்கு எந்த பிளேடை உபயோகித்தாலும் ஒரு சில மணிநேரங்களில் கறுப்போடுகிறதே ? தினமும் சவரம் செய்வது போர் இல்லையோ ?
8. இகாரஸ் பிரகாஷ் என்ற மிகப் பிரபலமான பதிவர் எங்கிருக்கிறார் தற்போது ? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்தவுடன் ஆளையே காணோமே ? அவர் தானே கில்லி தளத்தை நடத்தி வந்தது ? இட்லி வடை குழுவில் ஒரு கோயிஞ்சாமியாகவும் இருந்தார் அல்லவா ?
9. உங்கள் கணிப்பில், தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு மிடில் கிளாஸ் ஆசாமி சென்னையில் வசிக்க மாதம் மினிமம் எவ்வளவு பணம் தேவைப்படும் ? (தங்க, உணவு, போக்குவரத்து, துணி, இதர செலவுகள்) ? தனியே இருந்தால் எவ்வளவு தேவைப்படும் ? குடும்பத்தினருடன் இருக்க (மனைவி, குழந்தைகள்) எவ்வளவு தேவைப்படும் ?
10. தி.நகர் உஸ்மான் ரோடில் ஒரு நாளைக்கு சுமார் எவ்வளவு பணப் புழக்கம் / ரொட்டேஷன் இருக்கும் ? சென்னையின் மற்ற பகுதிகளை விட உஸ்மான் ரோட்டுக்கு மட்டும் (அதாவது தி.நகர், பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு ஏரியாக்கள்) எப்படி இவ்வளவு வியாபார முக்கியத்துவம் வந்தது ? ஏன் மற்ற ஏரியாக்கள் இந்த அளவு முக்கியத்துவம் பெறவில்லை ?
Post a Comment