நான் சமீபத்தில் 1954-ல் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல் பீஸ் மாதத்துக்கு இரண்டே முக்கால் ரூபாய். 15-ஆம் தேதிக்குள் அதை கட்டிவிட வேண்டும். பிறகு கட்டினால் ஃபைன் இரண்டணா (12 பைசா). என் நண்பர்கள் பலர் மிக ஏழ்மை நிலையில் இருந்தனர். குறிப்பிட்ட தேதிக்குள் ஃபீஸ் கட்ட இயலாது. ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். அவர்களை கேட்டால், “நான் ஃபைன் கட்டிவிடுகிறேன்” என்று கூறுவார்கள். இப்போது இதை எழுதும்போது எனக்குள்ளேயே என் மேல் கேலியான புன்னகை எழுகிறது. நான் இதை எப்படி புரிந்து கொண்டேனென்றால், 15-ஆம் தேதிக்கு பிறகு ஃபைன் இரண்டணா கட்டினால் போதும் என்றுதான். எனக்கு அப்போது ஒரே ஆச்சரியம், அதென்ன பேசாமல் இரண்டணா கட்டுவதை விட்டு வேலையில்லாமல் இரண்டே முக்கால் ரூபாய் கட்ட வேண்டுமென்று.
ஒரு மாதம் என அம்மா ஐந்தாம் தேதிவாக்கில் ஃபீஸ் பணம் கொடுக்க, நான் 15-ஆம்தேதிக்கு அப்புறம் ஃபைன் கட்டி விடுகிறேன் எனக் கூற அவருக்கு முதலில் புரியவில்லை. பிறகு நான் மேலே புரிந்து கொண்டதை கூற, அவருக்கு சிரித்து சிரித்து புரைக்கேறி விட்டது. “அட அசடே, வெறுமனே இரண்டணா கொடுத்தால் சரீன்னு ஸ்கூல்ல வாங்கிக்க மாட்டார்கள். இரண்டே முக்கால் ரூபாயுடன் சேர்த்து இரண்டணாவும் தர வேண்டியிருக்கும். சரியான பேருக்கேத்த மாதிரி அசடா இருக்கியே” என்று தலையில் குட்டினார் (டோண்டு என்றால் அசடு என பொருள் என அவர் ஏற்கனவே எனக்கு கூறியிருக்கிறார்).
சரி இப்போது அது ஏன் நினைவுக்கு வரவேண்டும்? கீழே உள்ள பதிவை பார்த்ததால்தான்.
செல்வராஜ் என்னும் பதிவர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதற்கு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைக்கிறார்.
“இந்திய அரசியல் சட்டத்தின்படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்? இது இருக்கின்ற உரிமையை தானாக கேட்டு குறைபதல்லாமல் வேறென்ன”!
“சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், நாளைய பெண்கள் சமூகத்திற்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாதபடியாகும். நிச்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம். அப்படி வரும்போது. இந்த முப்பதிமூன்று சதவிகிதம் என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கும்”.
அவருக்கு நான் இட்ட பின்னூட்டம்:
“பெண்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பஸ்களில் லேடீஸ் சீட் என தனியாக இருப்பது போலத்தான். அதாகப்பட்டது 33% தொகுதிகளில் அவர்கள் மட்டும்தான் நிற்க முடியும். அதனால் 67 % ஆண்கள் தொகுதிகளாகி விடாது. அவற்றிலும் பெண்கள் நிற்கலாம், தடை ஏதும் இல்லை.
பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்கார இயலாது, ஆனால் பொது சீட்டுகளிலும் பெண்கள் தாராளமாக உட்காரலாம். ஆண்கள் சீட் என்று ஒன்றும் கிடையாது”.
அவரது பதில்:
“வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன்!
இப்போது 100% சதவிகித தொகுதிகளிலும் போட்டியிட உரிமையுள்ளதே பெண்களுக்கு”.
அப்போ அவரது புரிதலின்படி தலித்துகளுக்கும் மற்றவருக்கும் கூடத்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை. அட ஆண்டவா?
வேறென்ன செய்வது, பெருமூச்சு விடுவதை விட?
நான் தில்லியில் இருந்தபோது தூர்தர்ஷனில் ஆப் அவுர் ஹம் என்னும் நிகழ்ச்சி வரும். பார்வையாளர்களின் கடிதங்களை ஒருவர் படிப்பார், அதற்கு இன்னொருவர் விடையளிப்பார். நம்மூரில் அந்த நிகழ்ச்சிக்கு எதிரொலி என்று பெயர். அதில் பேச்சுவாக்கில் பதிலளிப்பவர் ஒரு முத்தான கருத்தை உதிர்த்தார், அதாகப்பட்டது, பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்காரக் கூடாது என சொல்லும் அதே பெண்கள் மட்டும் ஆண்கள் சீட்டில் உட்காரலமா என்று. கூட இருந்து கேள்வி கேட்டவர் ஒரு பெண். அவரும் பேசாமல் தேமேனென்று கேட்டு கொண்டிருந்தார். உடனேயே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு கடிதம் தட்டினேன். அதில் பஸ்களில் பெண்களுக்கு மட்டுமே என சீட்கள் நிச்சயம் உண்டு, ஆனால் மீதி எல்லாம் ஆண்களுக்கு எனப் பொருள் இல்லை. அவை பொது சீட்கள் பெண்களும் உட்காரலாம். என்ன, அவ்வாறு பொது சீட்டில் பெண் உட்கார்ந்திருக்கும் போது பக்கத்தில் ஆண் வந்து அமர்ந்தால் ஆட்சேபிக்க இயலாது அவ்வளவே”. இக்கடிதமும் அடுத்த வாரம் படிக்கப்பட்டது அதே பெண்ணால். பதிலளிக்க வேண்டியவர் அதே ஆண்தான். பெண்ணின் முகத்தில் புன்முறுவல். ஆண் அதிகாரி கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டு, அடுத்த கடிதத்தை படிக்குமாறு கூறினார்.
இதை இங்கு ஏன் கூறுகிறேன் என்றால், இம்மாதிரி புரிதல்கள் ரொம்ப சர்வ சகஜமாகவே உள்ளது. அதையேதான் மேலே சொன்ன பதிவரும் செய்திருக்கிறார். என்ன, டோண்டு என்ற 8 வயது அசடுக்கு 1954-லேயே, அவன் அம்மா விவரித்த உடனேயே அது புரிந்து விட்டது, ஆனால் உலகில் ஒரு டோண்டு மட்டும் இல்லை போலிருக்கிறதே! :)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
15 comments:
உள்ளாச்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது!
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவை நிராகரிக்கப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது!
பெண்களுக்கு
இட ஒதுக்கீடு தேவை!
கண்டிப்பாக தேவை,
நிச்சியமாக தேவை,
உறுதியாக தேவை!
ஒரு பட்டி மன்றத்தில் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசியது தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது...
பேருந்துகளில், பெண்களுக்குகான இடம் ஒதுக்கப் பட்டுள்ள இடங்களில், மகளிர், பெண்கள், பூவையர், லேடிஸ் இப்படி எல்லாம் எழுதியிருக்கும். ஆணாம் மறுபக்கத்தில் திருடர்கள் ஜாக்கிரதை, டிக்கெட் இல்லா பயணத்திற்கு அபரதாம், கரம், சிரம், புரம் நீட்டாதீர்..
இப்பத்தான் புரிஞ்சுகிட்டேன், அது ஆண்களுக்கான இடம் இல்லை. பொது.. அப்பாடா கொஞ்சம் நிம்மதியா இருக்குங்க...
மிக்க நன்றி...
//
வால்பையன் said...
உள்ளாச்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது!
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவை நிராகரிக்கப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது!
பெண்களுக்கு
இட ஒதுக்கீடு தேவை!
கண்டிப்பாக தேவை,
நிச்சியமாக தேவை,
உறுதியாக தேவை!//
நான் வழிமொழிகிறேன்...
//உள்ளாச்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது!//
தமிழகத்தில் இடப்பங்கீடு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதும், இந்திய அளவில் என்ன நடக்கிறது என்பதும் தெரிந்தது தானே
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. பதிவின் மெயின் பாயிண்டை விட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே. 33% இட ஒதுக்கீடு என்பது குறைந்த பட்சமா அல்லது அதிகபட்சமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//33% இட ஒதுக்கீடு என்பது குறைந்த பட்சமா அல்லது அதிகபட்சமா?//
குறைந்த பட்சம்தான். தூண்டு என்று திருப்பி திருப்பி நிரூபிக்க வேண்டுமா என்ன?
தூண்டு? எதைத் தூண்ட வேண்டும்? :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்விகள்
1. சோனியா காந்தி கூட்டத்தை ரத்து செய்து
விட்டாங்களாமே?
2. பிரபாகரன் சொந்த ஊர் கொல்லமாமே? இன்று காலை என்.டி.டிவி. அவங்க சொந்தக்
காரங்களை பேட்டி எடுத்திருக்காங்க
தெரியுமா?
3. பாரதி ராஜா, சேரன், சீமான் - சினிமாக்காரங்கள் திட்டம் சோனியா காந்தி கூட்டம் ரத்திலேமுடிந்துள்ளது - இது இன்னம் தொடருமா?
4. ராஹுல் ஸ்ருதி இறங்குகிறதே? ஏன்?
5. இந்தக் களேபரத்திலே பா.ஜ.வுக்கு
ஏதாவது சான்ஸ் கிடைக்குமா?
பழைய கேள்விகள் வெளி வருமா ?
Chandru.
@சந்துரு
பழைய கேள்விகள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கடந்த வாரம் நான் அனுப்பியவைகள் வரலையே? அது எங்கே ?
Chandru
@சந்துரு
அக்கேள்விகள் ரிஜக்ட் செய்யப்பட்டிருக்கலாம்.
ஏற்றுக் கொள்ளப்படும் கேள்விகள் பின்னூட்டங்களாக முதலில் மட்டுறுத்தப்பட்டு வந்து, பிறகு பதிலளிக்கவில்லையெனில் கேட்கவும்.
பின்னூட்டத்திலேயே வரவில்லை என்றால் அவை ரிஜக்டெட் என்றுதான் பொருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெண்ணை என்று கெட்ட அர்த்தம் தொனிக்கும் வகையில் எழுதியதற்காக வெட்கப்பட்டு தான் “வெண்ணைக்”கேள்விகள் வெளி வரலை போலும்.
முதிர்ச்சி தெரிகிறது. வாழ்க !!
விமர்சனங்கள் வருகிற போது உங்களால் தாங்க முடியாது “சாதி” பற்றி பேசக் கிளம்பி விடுவீர்கள் என்றார்கள். அது சரி தான்.இனைய தாசில்தார் சர்டிபிகேட்டுக்காக சாதியை மட்டும் தான் விடக்கூடாது, ஆனால் கெட்ட வார்த்தைகளை அள்ளித் தெளித்து அதை பெறுவதில் தயக்கம் இல்லை அப்படித் தானே.
நெஞ்சில் உரம் வேண்டாமா ? விமர்சனங்களை தாங்க ?
chandru
@சந்துரு
ஓ, அந்த வெண்ணை கேள்விகளா? முதலில் ஒரு செட் அலவ் செய்தேனே. பிறகு ரொம்பவே தரக்குறைவான கேள்விகள் வந்தன ஆகவே ரிஜக்ட் செய்தேன்.
நீங்களே முகத்தை மூடிக்கொண்டுதானே கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்.
மேலும் நான் வெண்ணை என்று விளித்தது கோவி கண்ணன் பதிவில் வெண்ணை போல எழுதி அவரை தாக்கியவரை. அது யார் என்று குன்ஸாக புரிந்தது. அந்தாளுக்கு வெண்ணெயை விட இன்னும் மோசமான பட்டங்களும் பொருந்தும்.
அதுக்கென்ன இப்போ?
அன்புடன்
டோண்டு ராகவன்
50% இட ஒதுக்கீடு ராணுவம், நீதிதுறை , IAS IPS ஆகியவற்றிலும் வழங்கப்பட வேண்டும் .
இது வரை பெண்களுக்கு சட்ட ரிதீயிலான கடமைகள் ஏதும் கிடையாது.பெண்ணுரிமை என்பது ஆணடிமை என்பதாக அர்த்தம் செய்யப்படுகிறது . இவை அனைத்தும் பெண்கள் ஆண்கள் போல் குற்றம் செய்வதில் முடியும் . குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் வன்முறை செய்தல் பரிகாரம் கிடையது !!மற்றொரு பெண்ணே பாதிக்க பட்டாலும் இந்த சட்டத்தால் பரிகாரம் கிடையது !!
இது பாலியல் ரீதியான பாகுபாட்டில் முடிந்து சமூக அழிவு ஏற்படும்.
" No husband can plead that presently he has no job or he resigned his job and that he could not pay maintenance.Husband is expected to exploit his ability and resources and earn and maintain his wife who has no income to maintain herself.".............
THE HONOURABLE MR.JUSTICE RAJASURIA
C.R.P.(PD)No.3345 of 2008 and
M.P.No.1 of 2008
==================
""Whereas, the respondent/wife would come forward with the categorical statement that she is not working any where and earning. In such a case, the burden of proof is on the petitioner to prove the place in which she is working
and earning. In the absence of such evidence, I could see no infirmity in the order passed by the lower Court.
12. The affidavit of the wife, accompanying the I.A.No.163 of 2007, would display and indicate that the petitioner is doing business and earning""
http://judis.nic.in/chennai/qrydisp.asp?tfnm=17907
இது போன்ற சமுதாய சலுகைகளை இழக்க நேரிடும்.
மேலை நாடுகள் போல திருமணம் என்ற அமைப்பு இல்லாமல் போய் மைனர் பெண் கர்ப்பம், தந்தையற்ற சமூகம், சிறார் குற்றம் அதிகரிக்கும் நிலை ஏற்படும் .குடும்ப அமைப்பு ஒழியும்.
//மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது//http://dondu.blogspot.com/search/label/battle_of_sexes-1
Post a Comment