5/19/2009

எங்கே பிராமணன் - பகுதி 74

பகுதி - 74 (18.05.2009): (வீடியோ லிங்க் கிடைக்கவில்லை)
முரளி மனோகர் கூறுகிறான், பகுதி 74-க்கான லிங்க் இதோ இப்பத்தான் கிடைச்சது என்று. அவனுக்கு என் நன்றி.
அசோக்கைப் பார்க்க டாக்டர்கள் ஹம்சாவும் மார்க்கபந்துவும் வருகின்றனர். அசோக்கை தனக்கு ஆன்மீக விஷயங்களில் குருவாக இருக்குமாறு ஹம்சா கேட்க, அவன் மரியாதையாகவே தனக்கு அதற்கான யோக்கியதை இல்லையென்கிறான். “அன்னிக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு மேடம் ஆன்மீகத்துக்கே மாறிட்டாங்க” என மார்க்கபந்து கூறுகிறார். “ஆண்டவனை அடையும் மார்க்கத்துக்கு போவதே நல்லது” என அசோக் கூறுகிறான். தனது எதிர்காலம் எப்படி இருக்கும் என குழம்பும் ஹம்சாவிடம், எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம் என்பதெல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவையே என்றும் eternity மட்டுமே உண்மை என கூறும் அசோக், அது மனிதமனதின் புரிதலுக்காகத்தான் யுகங்கள், நூற்றாண்டுகள், ஆண்டுகள், மாதங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், விநாடிகள் என குறுக வைக்கப்பட்டதாகக் கூற இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிதாக இவன் விளக்குகிறானே என ஹம்சா வியக்கிறார். தான் இனிமேல் எப்படி தனது கேஸை டீல் செய்வது என அவர் கேட்க, அவர் சேவை இன்னமும் நோயாளிகளுக்கு தேவை. அவர் படித்த வைத்திய முறைக்கும் குறைவொன்றுமில்லை என அசோக் கூறுகிறான்.

ரமண மகரிஷிக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது அவர் மயக்க மருந்தை புறக்கணித்து தன் யோக சக்தியால் உயர் நிலைக்கு சென்று வலிக்கு அப்பாற்பட்டவராக தன்னை நிறுத்தி கொண்டார், ஆனால் சாதாரண நோயாளிகள் அதை செய்ய இயலாதததால்தான் அவர்களுக்கு மயக்க மருந்து போன்றவை தேவைப்படுகின்றன என்றும் ஹம்சா தனது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அசோக் கூறுகிறான்.

எல்லோருமே யோகிகளாக மாறிவிட்டால் டாக்டர்களுக்கு வேலை இருக்காது என ஹம்சா குறிப்பிட, ஆகவே அதுவரை டாக்டர்கள் தேவை, அதே போலத்தால் நீதித்துறை, கல்வித்துறை விஷயங்களிலும் என பதிலளிக்கிறான் அசோக். ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யணுமா என ஹம்சா கேட்க, அவர் ட்ரீட் செய்யும் மனோதத்துவ பிரச்சினைகள் சாதாரணமாக ஏழைகளுக்கு வருமா என அவன் எதிர்க்கேள்வி போட, அவர் யோசித்து பார்த்து விட்டு தன்னிடம் நோயாளிகளாக வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே எனக் கூறுகிறார். அதற்குக் காரணமே பணம் பெறும் முயற்சியில் அவர்கள் அதிகம் ஈடுபடுவதால், அதன் மேல் அட்டாச்மெண்ட் ஏற்படுகிறது, அதுவே மற்ற குழப்பங்களுக்கு இட்டுச் செல்கிறது என அசோக் கூறுகிறான்.

சோவின் நண்பர் அட்டாச்மெண்ட் இல்லாம மனிதன் இருக்க முடியுமா என வியக்க, சோ அவருக்கு இது சம்பந்தமாக பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருச்சுனனுக்கு கூறியதை சொல்கிறார். பற்று ஆசைக்கு வழிவகுக்கிறது. ஆசையால் உருவாகும் கோபம், அதன் மூலம் வருவது வெறியாகிய பெருமோகம், ஆகவே நாம் காண்பது நல்ல நினைவுகள் இல்லாமை, அதன் விளைவு புத்தி நாசம், அது அழைத்து வருவது பூரண அழிவு. ஆகவே பற்றில்லாமலேயே இருத்தல் அவசியம். அவாறு இருந்தால் இருக்கும் சுகங்களை அனுபவித்தாலும் தவறில்லை. இந்த நிலைய அடைய முடியாது என்றில்லை, ஆனால் அதை அடைய பெரும் பயிற்சி தேவைப்படும். என்னுடையது என்னும் எண்ணம் ஒழிய வேண்டும். அது ஜனகரால் முடிந்ததால்தான் மிதிலை எரிந்த போதும் அவர் பாட்டுக்கு வேதாந்த ஆராய்ச்சி செய்த வண்ணம் இருந்தார்.

அசோக் தொடர்கிறான். பக்கத்து வீட்டில் சாவு ஏற்பட்டால் ஐயோ பாவம் என கூறிவிட்டு நம் காரியங்களை கவனிக்க முடிந்த நம்மால் அதே சாவு நம் வீட்டில் ஏற்பட்டால் அதே விட்டேத்தியான மனோபாவம் வருமா? அப்படி வந்தால் ஞானி என கொள்ளலாம். தூரத்தில் இருந்து இம்மூவர் பேசுவதை எல்லாம் “இது என்ன கூத்து” என்னும் முகபாவத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றனர் நாதனும் வசுமதியும். இப்படியே போனால் இவன் ஜே.கே. மாதிரி கிளாஸ் எல்லாம் எடுக்க ஆரம்பித்து விடுவானோ என சலிப்புடன் நாதன் கூற, அது யார் ஜே.கே. என வசுமதி கேட்கிறாள். அவளிடம் ஜே.கே. என்னும் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி விளக்குகிறார்.

இந்த இடத்தில் டோண்டு ராகவன் ஒன்று கூற ஆசைப்படுவான். No general is hero to his butler; no man is hero to his mistress; a prophet gets his worst detractors from among his own kith and kin என்றெல்லாம் பலர் பலமுறை கூறியுள்ளனர். இது ஒரு மனோதத்துவ பிரச்சினையே. John the Baptist தனக்கு முன்னால் கூடியிருந்த மக்களின் நடுவில் முதன் முறையாக ஏசுவை ரட்சகராக அடையாளம் கண்டு எல்லோருக்கும் அடையாளம் காட்டி, அவரை தன்னிடம் வரச்சொல்லி அவருக்கு ஞானஸ்நானம் செய்தபோது, ஏசுவின் அண்டை வீட்டார் “இது நம்ம தச்சன் ஏசு அல்லவா, இவனா ரட்சகனாக இருக்கமுடியும்” என ஐயப்பட்டு அதை வார்த்தைகளில் வெளியிடவும் செய்தனராம். இதை இங்கே எதற்கு சொல்கிறேனென்றால் அதுவும் மனித இயற்கைகளில் ஒன்று என்பதை தெளிவு படுத்தத்தான். போயும் போயும் நாம் பார்த்து வளர்ந்த பையன், அவனா மகான் என உறவினர்கள் வியப்பது போலத்தான்.

நீலகண்டன் வீட்டுக்கு வரும் பாகவதர் பர்வதத்துடன் உமா அசோக் விஷயம் பற்றி கவலையுடன் பேசுகிறார். பர்வதமும் கவலையுடன் என்ன செய்வது என தானும் தனது கணவர் நீலக்ண்டனும் திகைப்பதாகவும், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமலும் திகைப்பதாகக் கூறுகிறாள். பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டதாக தான் உணர்வதாக அவள் உரைக்கிறாள்.

“அது என்ன பத்மவியூகம், நான் நிறையதடவை அச்சொல்லை கேட்டுள்ளேன். அப்படி என்றால் என்ன”? என சோவின் நண்பர் கேட்கிறார். மகாபாரதத்தில் 14-ஆம் நாள் யுத்தத்தில் துரோணர் தலைமையில் கௌரவ சேனை. யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்துத் தருவதாக அவர் துரியனுக்கு வாக்கு தந்திருக்கிறார். அருச்சுனனை திசை திருப்பி சம்சப்தகர்கள் அவனுடன் சண்டையிட அவனை போர்முனையின் இன்னொரு கோடிக்கு அழைத்து சென்று விட்டனர். இங்கே துரோணர் பத்மவியூகம் அமைக்கிறார். அதில் உள்ளே நுழைந்து வெளியே வரும் வழி தெரிந்தது இருவர் மட்டுமே, அருச்சுனன் மற்றும் கிருஷ்ணர். உள்ளே மட்டும் நுழையத் தெரியும் ஆனால் வெளியில் வரத்தெரியாது என்னும் நிலையில் அருச்சுனனின் வீரமைந்தன் அபிமன்யு. அவனிடம் யுதிட்டிரன் உதவி கேட்க, இந்த உண்மையை அவன் உரைக்கிறான். அவன் உள்ளே நுழைந்தால் போதும், பின்னாலேயே தாங்களும் புகுந்து விடுவதாக யுதிட்டிரர் கூற அவ்வாறே செல்கிறான் சுபத்திரா மைந்தன். ஆனால் அவன் பின்னால் மற்றவர்கள் செல்லும் முன்னமேயே பத்ம வியூகத்தில் அவனால் உருவாக்கப்பட்ட திறப்பு கௌரவ வீரர்களால் அடைக்கப்படுகிறது. உள்ளே கோர யுத்தம் புரிந்து வீரமரணம் எய்துகிறான் அபிமன்யு. அதிலிருந்து ஏதேனும் ஒரு விவகாரத்தில் எக்கச்சக்கமாக உள்ளே நுழைந்து வெளியேறும் வழி இன்றி இருப்பதைத்தான் பத்மவியூகத்தில் சிக்கியது மாதிரி என்பார்கள். இதே பத்ம வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அபிமன்யுவுக்கு எவ்வாறு தெரியாமல் போயிற்று என்பதற்கான ஒரு சுவாரசியமான கதையையும் சோ அவர்கள் கூறுகிறார்.

பாகவதர் மேலே பேசுகிறார். அசோக் மிகவும் மன வலிமையுடையவன். ரம்பா ஊர்வசி போன்ற தேவ அழகிகிளாலும் அவனை மயக்கவியலாது என பாகவதர் கூற, தன் பெண்ணை அவர்களுடன் அவர் ஒப்பிடுவதற்காக தன் வருத்தத்தை வெளிபடுத்துகிறாள் பர்வதம். தான் சொல்ல வந்ததே வேறு, உமாவின் நோக்கம் நிறைவேறாமல் அவள் பெரிதும் ஏமாற்றமடைவதை தடுக்கவே தான் அவ்வாறு கூறியதாக பாகவதர் சொல்ல, அவள் அரைமனதுடன் ஏற்கிறாள். தான் உமாவுடன் இது பற்றி பேச விரும்புவதாக பாகவதர் கூற, பர்வதம் அவளை கீழே அழைத்து பாகவதருடன் பேசச் சொல்கிறாள்.

உமாவிடம் தான் பர்வதத்திடம் சொன்னதையே பாகவதர் கூறி, அவளை இம்முயற்சியை கைவிடுமாறு கூறுகிறார். அசோக்கை சைக்கியாட்ரிஸ்டிடம் அழைத்து செல்ல எல்லோரும் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போனதில் தான் மட்டும் அவனை அதற்கு சம்மதம் சொல்லவைத்ததை உமா சுட்டிக்காட்டுகிறாள். தான் அவனை காதலிப்பதாகவும் தனது காதல் அவனை வசப்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கிறாள். ஜெயிக்கப்போவது அவனது பிரும்மச்சரியமா அல்லது தனது வைராக்கியமா என்பதை இப்போதே அறுதியிட்டு கூறவியலாது என்பதைய்ம் சுட்டிக் காட்டுகிறாள். அது காதல் எல்ல, வெறும் இன்ஃபாசுவேஷன் என பாகவதர் கூறுகிறார். நெருப்போடு அவள் விளையாடலாகாது எனவும் பாகவதர் எச்சரிக்க, நெருப்பைக் கண்டு தான் பயப்படவில்லை எனவும், நெருப்புக்குத்தான் ஏதேனும் ஆகிவிடப்போகிறதோ என பாகவதர் தவிப்பதாகத்தான் தனக்கு தோன்றுகிறது எனக்கூறுகிறாள் உமா. அவ்வாறெல்லாம் நினைப்பதை விடுத்து தனக்கு ஆசி வழங்குமாறு கூறி, சரேல் என அவர் பாதம் பணிந்து அப்பால் செல்கிறாள் அந்த சுட்டிப் பெண்.

பாகவதர் திகைக்க, அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பர்வதமும் பாகவதரிடம் வந்து தன் பங்குக்கு அங்கலாய்க்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

ரவி said...

ரொம்ப நாளாக தேடுகிறீர்களே ?? கிடைத்தானா ??

Anonymous said...

உறுப்படியாக எழுதுவதர்க்கு வேறெந்த தலைப்பும் கிடைக்கவில்லயா உங்களுக்கு ???...

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. சூப்பரின் டெண் டென்ட் (Super-in-tendant) என்பதை ஏன் பலரும் சூப்ரண்டு என சொல்கின்றனர் ? இந்த பதவியின் பெயர் எப்படி வந்தது ?

2. அரசு அதிகாரிகளின் hierarchyயில் எதற்கு இத்தனை துணை, இணை, கூடுதல் கமிஷனர் போன்ற பதவிகள் ?

3. பிரிடிஷார் வைத்திருந்த பதவிப் பட்டியலையே ஏன் இன்னும் வைத்துள்ளோம் ? இதற்கெல்லாம் Reform கமிஷன் வைத்து மாற்ற மாட்டார்களா ?

4. போலீஸ் துறையின் hierarchy கீழிருந்து மேலே வரை சொல்ல முடியுமா ? எனக்குத் தெரிந்த வரை - கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி, துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி ?

5. தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக பணி புரியும் போலிசுக்கு எவ்வளவு மாதச் சம்பளம் (தற்போது) ? அதனால் தான் அவர்கள் கிம்பளம் வாங்குகிறார்களா ?

6. அழகிரி அமைச்சராகிவிட்டல் மற்ற மாநிலங்களுக்கு ஏதேனும் செய்வாரா இல்லை குண்டு சட்டியான மதுரையிலேயே இன்னும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பாரா ?

7. தயாநிதி மாறனுக்கு பதவி கொடுக்காவிட்டால் மீண்டும் சன் டிவி, தினகரன் அம்மா புகழ் பாட ஆரம்பிக்குமா ? ஒருவருடம் முன்பு தினகரனில் 'அழகிரி ரவுடி' என்றெல்லாம் எழுதிவிட்டு இன்று அவர் பக்கத்தில் பாராளுமன்றத்தில் அமர்ந்து மத்த எம்பிக்களின் இந்தி பேச்சுக்களை ஹிந்தி மொழிபெயர்ப்பு செய்யும் நிலை பற்றி தயாநிதி என்ன எண்ணுவார் ?

8. டி.ஆர்.பாலு துணை சபாநாயகர் ஆகிவிட்டால் எப்படி வரும்படி பார்க்க முடியும் ? தமிழ்நாட்டுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ள அவருக்கு ஏன் பதவி கொடுக்க பிளான் இல்லை ?

9. இனிமேல் ஜெ. வைகோ, ராமதாஸ் எல்லாம் - அண்ணன் எப்போ மறைவார் திண்ணை எப்போ காலியாகும் - என காத்திருக்கத் தான் வேண்டும் அல்லவா ?

10. இப்போதே ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி வழங்க கருணாநிதி ஏன் இன்னும் தயங்குகிறார் ?

Anonymous said...

Intha pudiya atchiyil vennai villai kuraiyumaa ?

Chandru

dondu(#11168674346665545885) said...

@சந்துரு
ஆவினுக்கு ஃபோன் செய்து கேட்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது