12/05/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.12.2009

அப்பாடா கோலங்கள் சீரியல் முடிந்தது
என்னதான் திட்டினாலும் அதை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் அதன் நேர்த்தியான தயாரிப்பைத்தான் கூற வேண்டும். அதன் 1533 எபிசோடுகளில் நான் வேண்டுமென்றே பார்க்காமல் விட்டவை சில நூறுகள் இருக்கும். தேவையில்லாமல் காம்ப்ளிகேஷன்களை வளர்த்துப் போவதாக எனக்கு தோன்றியபோதெல்லாம் நான் சீரியலைப் பார்க்காமல் தவிர்த்தேன்.

பாலசந்தருக்கு அடுத்தபடியாக பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுமை செய்பவர் என திருச்செல்வத்தை கண்டிப்பாக குறிப்பிடலாம். அபி கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்றே அவர் தீர்மானம் செய்து விட்டார். அபிக்கு ஏற்ற ஜோடி தொல்காப்பியன் என்பதை கடைசி எபிசோடிலாவது ஒத்துக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாம்.

அவர் செய்த இன்னொரு அலம்பல் தேவையின்றி இலங்கைப் பிரச்சினையினை உள்ளே நுழைத்ததுதான். ஓக்கே, ஒக்கே, டி.ஆர்.பி. ரேட்டிங்காய நமஹ. அதை வைத்து கொண்டு சிலர் குதூகலித்ததுதான் பெரிய காமெடி.

நான் தொல்காப்பியனைக் கேட்ட கேள்வி பதிவின் கடைசி பின்னூட்டத்தில் கச்சிதமாக முடித்திருக்க வேண்டிய சீரியல்களை ஜவ்வு மாதிரி இழுத்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது இந்த சீரியலுக்கும் பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்திருக்க வேண்டியது.

இத்தருணத்தில் சோ அவர்களது எங்கே பிராமணன் சீரியலை குறிப்பிட்டே ஆக வேண்டும். கச்சிதமாக 103 எபிசோடுகளில் அது முடிக்கப்பட்டது. இத்தனைக்கும் ஜெயா டிவியில் அதை நீடிக்குமாறு கேட்டுக் கொண்டும் சோ அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தைச் சேர்த்ததும் பொருத்தமாகவே இருந்தது. என்ன, இரண்டு நாடகங்களிலும் வரும் அரசியல்வாதி கேரக்டர் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தன. அதன் இரண்டாம் பகுதி வரப்போகிறதாம். அதுவும் அதே மாதிரி கச்சிதமாகத் தயாரிக்கப்படும் என நம்புவோம்.

காஞ்சி அர்ச்சகர் தேவநாதன் விவகாரம்
ரொம்பக் கேவலமான செயல் செய்துள்ளான் தேவநாதன். அதுவும் கோவில் கருவறையில் செய்தது அசிங்கத்தின் உச்சக்கட்டம். கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவன் அவன். செல்பேசியில் எடுத்து சிடிக்கள் விற்பனைக்கு காரணமானது வேறு சைபர் கிரைமில் வரும்.

அவன் வாக்குமூலத்தைப் பார்த்தால் அவனுடன் ஒத்துழைத்த பெண்களும் லேசுப்பட்டவர்கள் இல்லைதான். நான் வேறு தருணத்தில் குறிப்பிட்டது போல பாலியல் செயல்பாடுகள் அவற்றைப் பொருத்தவரை மனம் ஒத்து வயது வந்த இருவர் ஈடுபடுவதால் குற்றத்துக்குரிய செயல் இல்லை, அதாவது cognizable offence இல்லை. செய்த இடம்தான் ஆட்சேபணைக்குரியது. வேண்டுமென்றால் தேவநாதனின் மனைவியோ அல்லது அவனுடன் சேர்ந்து செயல்பட்ட பெண்களின் கணவர்மார்களோதான் புகார் செய்ய இயலும்.

ஆனால் விநாச காலே விபரீத புத்தி என்பதற்கேற்ப தேவநாதனுக்கு அவற்றையெல்லாம் செல்பேசியில் பதிவு செய்யத் தோன்றியிருக்கிறது என்பதுதான் கடவுள் செயல். அதுவே அவன் பிடிபடவும் காரணமாகி விட்டது. நிக்சன் மாட்டிக் கொண்டதும் இப்படித்தான்.

ராமாயணத்தில் ஒரு காட்சி
கடைசி நாள் யுத்தம். ராவணன் சிவபெருமானை வணங்க வருகிறான். மண்டோதரி எடுக்கும் ஆரத்தி அணைந்து தட்டு கீழே விழுகிறது. ராவணன் சிவனைப் பார்த்து கத்துகிறான்.

“மஹாதேவரே, நீங்கள் என்னைக் கைவிட்டதை உணர்கிறேன். நான் உங்களிடமும் பிரும்மனிடமும் பெற்ற வரங்கள் சும்மா வந்ததில்லை. அதற்காக நான் கடும் தபஸ் செய்தேன். ஆகவே அவற்றைக் கொடுப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லைதானே.

இருப்பினும் இவ்வளவு வரங்கள் கொடுத்தாலும் அவற்றுடன் கூடவே எங்களுக்கு கர்வம் என்னும் கொடிய மருந்தையும் தந்து விடுகிறீர்கள். அவற்றால் நாங்கள் பீடிக்கப்பட்டு தவறுகள் பல செய்து வரங்களின் பலன்களை வீணாக்குகிறோம். அவை தீர்ந்ததும் இம்மாதிரி நிலைதான் எங்களுக்கு. சரி, போகட்டும். அந்த வரங்களை நான் எவ்வளவு கர்வத்துடன் அனுபவித்தேனோ அதே கர்வத்துடன் தண்டனையையும் அனுபவிப்பேன். இன்றைய யுத்தத்திலிருந்து உயிர் மீண்டு வந்தால் உங்களை சந்திக்கிறேன், இல்லையேல் நீங்கள் விட்ட வழிதான்”.

தவம் செய்யும்போது தேவர்களால் அதற்கு பங்கம் வருகின்றன. அவற்றையும் மீறி தவம் செய்து முடித்தால் அதற்கான வரங்களை தந்தே ஆக வேண்டும். அதை கடவுளாலும் மீற இயலாது. எல்லா நிகழ்வுகளுமே அவற்றுக்கான ஒழுங்கில்தான் இயங்குகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

கோவி.கண்ணன் said...

//தவம் செய்யும்போது தேவர்களால் அதற்கு பங்கம் வருகின்றன. அவற்றையும் மீறி தவம் செய்து முடித்தால் அதற்கான வரங்களை தந்தே ஆக வேண்டும். அதை கடவுளாலும் மீற இயலாது. எல்லா நிகழ்வுகளுமே அவற்றுக்கான ஒழுங்கில்தான் இயங்குகின்றன.//

டோண்டு இராகவன் சார்,

இராவணனும், தேவனாதனும் பார்பனர் என்பதால் இந்த ஒப்பீடா ?

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
வாருங்கள், கோவி கண்ணன். நிக்சன் பார்ப்பனர் அல்லவே? எல்லோரும் தவறு செய்து மாட்டிக் கொண்டது அவரகளது சொந்தச் செயலால்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எங்கே பிராமணன்..தொடர்ச்சி ஜெயா டி.வி.யில் வர இருக்கிறது ..அனேகமாக 28ம் தேதி முதல் வரலாம்

கோவி.கண்ணன் said...

////தவம் செய்யும்போது தேவர்களால் அதற்கு பங்கம் வருகின்றன. அவற்றையும் மீறி தவம் செய்து முடித்தால் அதற்கான வரங்களை தந்தே ஆக வேண்டும். அதை கடவுளாலும் மீற இயலாது. எல்லா நிகழ்வுகளுமே அவற்றுக்கான ஒழுங்கில்தான் இயங்குகின்றன.//

டோண்டு இராகவன் சார்,
தேவநாதனின் செயல் கடவுள் சித்தம் போல் எழுதி இருப்பதால் உங்களுக்கு எதிர்ப்பு(ம்) வரலாம். தேவனாதனுக்கு பதில் கடவுள் தண்டிக்கப் படவேண்டியவரா ?

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
@கோவி கண்ணன்
வாருங்கள், கோவி கண்ணன். நிக்சன் பார்ப்பனர் அல்லவே? எல்லோரும் தவறு செய்து மாட்டிக் கொண்டது அவரகளது சொந்தச் செயலால்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

நிக்சன் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிடலைன்னு நினைக்கிறேன். உங்கள் ஒப்பீடு தற்செயலாக அமைந்ததா ?

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
சரியாகப் பார்க்கவும். தேவநாதன் செல்பேசியில் படம் எடுத்த முட்டாள்தனமான செயலைத்தான் குறிப்பிட்டேன். விநாச காலே விபரீத புத்தி என்பது அதுதான்.

இதில் எனக்கு ஏன் எதிர்ப்பு வரவேண்டும்?

அதே போல போலி டோண்டு மூர்த்தி மாட்டிக் கொண்டதை துவக்கியது அவன் செந்தழல் ரவிக்கெதிராக ஆர்க்குட்டில் இட்ட அவதூறுகளே. அவை ரவியை தூண்டிவிட்டு அவர் தனக்கு தெரிந்த தமிழக மந்திரி ஒருவரின் பி.ஏ.வின் துணையுடன் போலீசை தொடர்புகொள்ள வைத்தன.

அதற்கும் முன்னால் எனக்கு பின்னூட்டமிட்டவர்களை வர்ஜா வர்ஜமில்லாமல் தாக்கியதன் தொடர்ச்சிதான் அவனை கடைசியில் செந்தழல் ரவிக்கெதிராக ஆர்க்குட்டில் எழுத வைத்தது. அவ்வளவே.

அதுதான் இப்பதிவின் சாரம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//அதே போல போலி டோண்டு மூர்த்தி மாட்டிக் கொண்டதை துவக்கியது அவன் செந்தழல் ரவிக்கெதிராக ஆர்க்குட்டில் இட்ட அவதூறுகளே. அவை ரவியை தூண்டிவிட்டு அவர் தனக்கு தெரிந்த தமிழக மந்திரி ஒருவரின் பி.ஏ.வின் துணையுடன் போலீசை தொடர்புகொள்ள வைத்தன.
//

இருந்தாலும் இவர்களை தேவநாதன் ரேஞ்சுக்கு எழுதுவது தேவனாதனை அவமதிக்கும் செயலாக தெரிகிறது. :) அவரு(தேவநாதன்) எம்மாம் பெரிய செயலை செய்திருக்கிறார் !!!

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
ஓ தேவர்கள் விஷயம் பற்றி கூறுகிறீர்களா? தேவநாதனும் அப்படியென்றால் தவம் ஏதும் செய்யவில்லைதானே?

அசட்டுத்தனமாக மாட்டிக் கொண்டது அவனும் நிக்சனும்தானே?

மற்றப்படி ராவணன் மற்றும் தேவநாதன் பார்ப்பனர்கள் என்பதால் அந்த ஒப்பிடல் வரவில்லை. நீங்கள் கூறுவது போல தற்செயலாக வந்ததுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@டி.வி. ராதாகிருஷ்ணன்
உங்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரை, நல்ல செய்தி சொன்னதற்கு. முதல் எபிசோடின் ரெவ்யூ என்னுடையது என டோண்டு பெரிசிடம் கூறிவிட்டேன். அதுவும் சரி என சொல்லிவிட்டது.

அன்புடன்,
முரளை மனோகர்

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
@கோவி கண்ணன்
ஓ தேவர்கள் விஷயம் பற்றி கூறுகிறீர்களா? தேவநாதனும் அப்படியென்றால் தவம் ஏதும் செய்யவில்லைதானே?
//

தாந்திர யோகம் (ஆலிங்கனம்) செய்தல் என்கிற நிலை தவத்தின் ஒரு வகையாக கிடையாதா ? என்ன இருந்தாலும் மாற்றான் மனைவி(கள்) !!! தேவ நாதன், இராவணன் ஒப்பீடு சரி தான்.

dondu(#11168674346665545885) said...

மூர்த்தி எதிரில் தேவநாதன் பச்சா. அசடு மாதிரி செல்பேசியை ரிப்பேருக்கு கொடுத்த மாட்டிக் கொண்டது.

அவனைப் போய் மூர்த்தி லெவலுக்கு நினைப்பது அடுக்காது. அதுவும் பெண்பதிவர்களை அவன் கேவலமாக எழுதியதெல்லாம் சரோஜாதேவி புக் ரேஞ்சுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
@டி.வி. ராதாகிருஷ்ணன்
உங்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரை, நல்ல செய்தி சொன்னதற்கு. முதல் எபிசோடின் ரெவ்யூ என்னுடையது என டோண்டு பெரிசிடம் கூறிவிட்டேன். அதுவும் சரி என சொல்லிவிட்டது.

அன்புடன்,
முரளை மனோகர்

December 05, 2009 10:03 AM
//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் மிஸ்டர் 'முரளி மனோகர்' சாரி டோண்டு இராகவன் சார்

கோவி.கண்ணன் said...

//அதுவும் பெண்பதிவர்களை அவன் கேவலமாக எழுதியதெல்லாம் சரோஜாதேவி புக் ரேஞ்சுக்கு.
//

சார், இதைப் படித்ததும் சல்மா ஞாபகம் தான் வருது !

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
மூர்த்தி எதிரில் தேவநாதன் பச்சா. அசடு மாதிரி செல்பேசியை ரிப்பேருக்கு கொடுத்த மாட்டிக் கொண்டது.

//

சார் சார்.....சும்மா வெளி உதாரணங்களே எதுக்கு, முரளி மனோகர் ஆபாசமாக எழுதினாரா இல்லையா என்பதைவிட முரளி மனோகர் என்று எழுதி டோண்டு இராகவன் மாட்டிக் கொண்டதும் அசட்டுத்தனம் இல்லையா ?

dondu(#11168674346665545885) said...

//முரளி மனோகர் ஆபாசமாக எழுதினாரா இல்லையா என்பதைவிட முரளி மனோகர் என்று எழுதி டோண்டு இராகவன் மாட்டிக் கொண்டதும் அசட்டுத்தனம் இல்லையா?//
இதில் என்ன அசட்டுத்தனம்? அது அவன் கைமீறிய செயல். பிளாக்கர் சொதப்பலால் வந்தது. மேலும் ஆஃப்டர் ஆல் அது புனைப்பெயர் மட்டுமே. அதில் ஏதாவது ஆபாசமாக எழுதியிருப்பானோ என நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அவன் எதிரிகள் அலைந்ததுதான் மிச்சம்.

ஆனால் அதனால் இன்னொன்று நல்லது நடந்தது. அதாவது முரளி மனோகர் விஷயத்தில் அவன் செய்தது அற்பத்தனம் என்றெல்லாம் கொதித்து பிடுங்கிகள் போல பதிவு போட்டவர்கள்
மூர்த்தி மாட்டிக் கொண்டதும் எல்லா துவாரங்களையும் மூடிக்கொண்டு கள்ள மௌனம் சாதித்தது அவர்கள் மூர்த்தியில் அல்லக்கைகள என்ற விவரம் பலருக்கு தெரிந்தது. அதுவும் கடவுள் செயலே.

சல்மா விஷயத்தில் நான் இட்டப் பதிவு அப்படியே உள்ளது. அது குறித்து எனது நிலைப்பாடும் மாறவில்லை

ஆகவே அது பற்றி புதிதாகக் கூற ஏதும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hiuhiuw said...

புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ... வேட்டி அவுரக்கூடாது

சைவகொத்துப்பரோட்டா said...

"பாலசந்தருக்கு அடுத்தபடியாக பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுமை செய்பவர் என திருச்செல்வத்தை கண்டிப்பாக குறிப்பிடலாம்."

நூற்றில் ஒரு வார்த்தை, பேசாம மெகா(மொக்க) சீரியல் எடுப்பது (ஒளி பரப்புவதும்) தடை செய்ய பட்டால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

டோண்டு சார் & கோவி சார்

கோலங்கள் சீரியல் 1533 எபிசோட் வரை இழுத்து, பார்த்தவர் பொறுமையைச் சோதித்த மாதிரி இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் போலி டோண்டு/மூர்த்தி விவகாரத்தை ஜவ்வாக, மீள்பதிவுகள், தொடர்பதிவுகள், எதிர்வினைப் பதிவுகள் செய்வினைக்குச் செயப்படு வினைப்பதிவுகள் என்றே எழுதிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?

இங்கே நிறையப் பதிவர்கள், அமைதியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! பதிவுகளையாவது மெகா சீரியல் மாதிரி ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகாதீர்கள்!

This too shall pass!
இது ஜென் ஞானம்! இதை மட்டுமல்லா, எல்லா அனுபவங்களையுமே கடந்து தான் போயாக வேண்டும்!

தேங்கி அங்கேயே நின்றுவிட்டால் அது சாக்கடை பெருகிக் கூவம் ரேஞ்சுக்கு வளர்ந்துவிடும்!

இரண்டுபேருமே தத்தம் நிலைப்பாட்டை நிறையத் தரம் சொல்லிவிட்ட பிறகும், எதற்காக, இப்படி சீசன் நம்பர் 1,2,3,4,....?

கிருஷ்ண மூர்த்தி S said...

தொலைக் காட்சி பார்க்க ஆரம்பித்த அந்தக் காலங்கள்..அதிகமில்லை வெறும் பதினாலே ஆண்டுகளுக்கு முன்னால் தான்!

பொதிகையில், பதிமூன்றே எபிசோடில், அதுவும் வாரம் ஒரு நாள் என்று தான் ஒளிபரப்பாகும், மொத்தமே பதிமூன்றே வாரங்கள் தான்! நல்ல நல்ல தொடர்களைப் பார்க்க முடிந்தது!

இப்போது சீரியல்களைப் பார்ப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்தாயிற்று! மொக்கை மெகா சீரியல்களுக்கு 'நறுக்' செய்யும் வித்தை பார்ப்பவர்களிடம் தான் இருக்கிறது!

Anonymous said...

{புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ... வேட்டி அவுரக்கூடாதுஞ}

புலவராகுறதுக்கு தகுதியே வேட்டி அவுக்குறதுதான்!

hiuhiuw said...

//புலவராகுறதுக்கு தகுதியே வேட்டி அவுக்குறதுதான்!//

இது வேலைக்காவாது

Unknown said...

பதிவை படித்து விட்டேன்.., கூகிள் என்னை ஏமாற்றி விட்டது..,

மணிகண்டன் said...

****
“மஹாதேவரே, நீங்கள் என்னைக் கைவிட்டதை உணர்கிறேன். நான் உங்களிடமும் பிரும்மனிடமும் பெற்ற வரங்கள் சும்மா வந்ததில்லை. அதற்காக நான் கடும் தபஸ் செய்தேன். ஆகவே அவற்றைக் கொடுப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லைதானே.

இருப்பினும் இவ்வளவு வரங்கள் கொடுத்தாலும் அவற்றுடன் கூடவே எங்களுக்கு கர்வம் என்னும் கொடிய மருந்தையும் தந்து விடுகிறீர்கள். அவற்றால் நாங்கள் பீடிக்கப்பட்டு தவறுகள் பல செய்து வரங்களின் பலன்களை வீணாக்குகிறோம். அவை தீர்ந்ததும் இம்மாதிரி நிலைதான் எங்களுக்கு. சரி, போகட்டும். அந்த வரங்களை நான் எவ்வளவு கர்வத்துடன் அனுபவித்தேனோ அதே கர்வத்துடன் தண்டனையையும் அனுபவிப்பேன். இன்றைய யுத்தத்திலிருந்து உயிர் மீண்டு வந்தால் உங்களை சந்திக்கிறேன், இல்லையேல் நீங்கள் விட்ட வழிதான்”.

தவம் செய்யும்போது தேவர்களால் அதற்கு பங்கம் வருகின்றன. அவற்றையும் மீறி தவம் செய்து முடித்தால் அதற்கான வரங்களை தந்தே ஆக வேண்டும். அதை கடவுளாலும் மீற இயலாது. எல்லா நிகழ்வுகளுமே அவற்றுக்கான ஒழுங்கில்தான் இயங்குகின்றன
****

Very Very nice. I have not come across this incident/explanation before. After a long time, panjaamirdham is palatable :)-

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
அத்தனை பெருமையும் ராமானந்த் சாகரின் ராமாயண சீரியலுக்குத்தான் போக வேண்டும்.

நான் கேட்ட ஹிந்தி டயலக்கை நினைவிலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததே நான் செய்தது.

அதுவரைக்கும் நான் கூட இவ்வளவு வரங்கள் இந்த பிரும்மாவும் சிவனும் தர வேண்டியது, பிறகு விஷ்ணு அவற்றுக்கெல்லாம் மாற்றம் தேடுவது ஏன் இதெல்லாம் என யோசித்ததுண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஐயையோ, அப்ப ராவணன் திராவிடன் இல்லையா ?

Raju Viswanathan said...

Hello Govi Sir,
Neengal dondu sir ketta kelvikku onnum bathil sollave illaiye? Ithilirindhu ungalin vaadha thiramai therigirathu.. Murthy-i oppittavidanaye moodikondu poi viteergale???? Dondu sir Vazhga..


Raju.

dondu(#11168674346665545885) said...

@ராஜு விஸ்வநாதன்
கோவியிடம் நான் கேள்வி ஒன்றும் வைக்கவில்லையே.

மூர்த்தி விவகாரத்தில் அவரவர் நிலைப்பாட்டை புரிந்து கொண்டுள்ளோம். அவர் கூறவந்ததைக் கூறி விட்டு அமைதியானார்.

நானும் அப்படித்தான்.

அன்புஅட்ன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எங்கே பிராமணன் 14ஆம் தேதிமுதல் வருகிறதாம்.28 அல்ல

dondu(#11168674346665545885) said...

@டி.வி. ராதாகிருஷ்ணன்
உங்கள் வாயில் இன்னொரு பிடி சர்க்கரை சேங்ஷண்டு.

அன்புடன்,
முரளி மனோகர்

அரவிந்தன் said...

//அசடு மாதிரி செல்பேசியை ரிப்பேருக்கு கொடுத்த மாட்டிக் கொண்டது.//

அந்த கிரிமினல் உங்களுக்கு அசடா தெரிகிறான்...

பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு

Guru Prasath said...

//ஐயையோ, அப்ப ராவணன் திராவிடன் இல்லையா ?//

கலைஞர்: அடச்சே!!! இது தெரியாம ஒரு காவியமே எழுதி தொலைச்சுட்டேனே...

கோவி.கண்ணன் said...

//Raju Viswanathan said...

Hello Govi Sir,
Neengal dondu sir ketta kelvikku onnum bathil sollave illaiye? Ithilirindhu ungalin vaadha thiramai therigirathu.. Murthy-i oppittavidanaye moodikondu poi viteergale???? Dondu sir Vazhga..


Raju.
//

மூர்த்தி விவாகரத்தில் பதில் சொல்ல நான் மூர்த்தியின் அல்லக்கையாக செயல்படவில்லை. மூர்த்தி உத்தமன் என்று நான் எங்கும் எழுதவில்லை. சல்மாவுக்கு வக்காலத்து வாங்கிய நண்பர் டோண்டு இராகவனுக்கு அப்படி ஒரு கவலை இருக்கலாம்.

பைதவே, மூர்த்தி விவாகாரத்தை இங்கே இடை நுழைத்தது டோண்டு இராகவன் சார்தான். நான் அதை எதிர்க்கவும் இல்லை, அவர் மூர்த்தி என்றதும் எனக்கு சல்மாவும் சேர்த்தே ஞாபகம் வருது என்றேன். வேறென்ன பதில் வேண்டும் உங்களுக்கு ?

Anonymous said...

Dondu

We got Jaya TV in USA last month only. Awaiting Cho's "Enge Brahmanan's" second part eagerly.

Venkat

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது