முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 1)
ரோஜாக்களின் எழுச்சி - 1
இந்த பாழாப்போன நகரத்தில் நான் புறாக்கூண்டு போன்ற ஒரு சிறுவீட்டில் வசிக்கிறேன். கீழ்நடுத்தர வகுப்பைச் சார்ந்த எனக்கு இதைவிட வசதியான வீடு வாடகைக்கு கிடைக்காது என்பதையும் மறுக்கவியலாதுதான். ஆகவே வீட்டினுள் உள்ள வசதியோ வசதியின்மையோ எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வெளிப்புறம்? அதுதான் பிரச்சினை. என் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் வீடுகள் வெவ்வேறு அளவில் உள்ளவை. அவற்றுக்கும் எனது வீட்டுக்கும் நடுவில் மிகக்குறைந்த இடைவெளிதான், அதாவது மூன்றிலிருந்து ஐந்து அடிகள் வரை. அதனால் என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா? அதைத்தான் விளக்குவேன் இப்போது.
விடியற்காலை. ஆழ் உறக்கத்தில் நான். திடீரென கரகரவென உராயும் ஆண்குரல் எழும்புகிறது. “அடே கேனக்கூ, இன்னுமாடா தூக்கம், எழுந்திருடா நாயே”.
ஓரிரு விநாடிகளுக்கு எனக்கு தலைகால் புரியாது.
“இதப்பாரு, நீ பல் தேச்சியா, கால் கழுவிக்கிட்டியா, இல்லை குளிச்சியாங்கறது பத்தியெல்லாம் எனக்கு அக்கறை இல்லை”.
அடாடா, காலங்கார்த்தாலே என்னென்ன வாழ்த்துப்பாவெல்லாம் கேட்க வேண்டியிருக்கு?
“நேத்திக்கே அதை பண்ணி முடிச்சிருக்கணுண்டா டோமரு. இப்ப உடனே வெளியில போற, இல்லேன்னாக்க நான் ஒன் கையை முறிச்சு தூளில தொங்க விடுவேன்”.
எனக்குள் கோபம் மெதுவாக எழும்புகிறது. இப்பத்தான் இந்தக் குரல் பக்கத்து வீட்டுக்காரனுடையதுன்னு புரியறது. ஏதோ ஒரு விளங்காத கம்பெனியில அவன் ஒரு அதிகாரியா இருக்கான் போல. இந்த மாதிரி தன் வீட்டு பால்கனில வந்து நின்னுண்டு தினம் விடியற்காலை செல்போனில யார்கிட்டயாவது கத்தறதே அவனுக்கு வேலை. அவனோட மேலதிகாரி இவனை பிடிச்சு திட்டியிருப்பான் போல. இப்ப இவன் அந்தக் கோபத்தை தன்கீழ வேலை பாக்கறவன் மேல காண்பிக்கிறான். அவனை என்மனதுக்குள் திட்டியவாறே எழுந்து பல் தேய்க்கப் போறேன். (நான் சின்னவனா இருக்கச்ச, அமைதியான விடியற்காலத்துல எழுந்து, கடவுளை பிரார்த்திக்கிற வழக்கம் எல்லாம் இப்போ போயே போச்சு. இப்ப இதைத்தான் முன்னேற்றம்னு சொல்லியாகணுமா, எங்க அடிச்சுக்குறதுன்னு தெரியல்ல).
பாதி பல் தேய்த்திருப்பேன், திடீரென என் விட்டின் இன்னொரு பக்கத்திலிருந்து சைரன் ஒலிப்பது போன்ற குரலோடு அந்த வீட்டுப் பெண்குட்டி செல்போனுடன் ஆஜர். சைரனின் அதிர்ச்சியில் டூத்பிரஷ் பிசகி, ஈறைத் தாக்க செம வலி. (இந்த மாதிரித்தான் செல்ஃபோனில் பேச என் அண்டை வீட்டார்கள் வெளிலேதான் வராங்க. ஏதோ அங்கேதான் சிக்னல் சரியா ரிசீவ் ஆவுதாம். நாசமாப்போக).
“டீ ரீட்டா என்னடி அங்கே பண்ணிட்டிருக்க” – கிக்கிக்கீன்னு சிரிப்பு. இங்கே என் ஈறுல பயங்கர வலி. ரத்தம் வேற வந்திருக்குமோன்னு பயம். சைரனிடமிருந்து மறுபடி கேனத்தனமான சிரிப்பு.
“காப்பி குடிச்சியா”?
“நாஸ்தாக்கு என்ன சாப்பிட்டே”?
“என்னோட எஸ்.எம்.எஸ் கிடச்சுதா? அந்த ஜோக் நல்லா இருந்துச்சுல்ல”?
இந்த மாதிரியே கொஞ்ச நேரம் என்னை டரியலாக்கிட்டு அந்த சைரன் போய் சேருவாள். அப்பாடான்னு மூச்சு விடறதுக்குள்ளே இன்னொரு பக்க அண்டைவீட்டான் காலேஜ் மாணவனாம்-வந்து சேவையைத் தொடருவான், அவனோட செல்ஃபோனில்.
“டேய் மொட்டை நாயே எங்கேடா இருக்கே”?
“சீக்கிரம் வாடா, இன்னிக்கு மேட்னி ஷோ பார்க்கணுமே. அனிதாவும் வரா இல்லே? சரி, சரி காலேஜ் வாசல்ல காத்திருப்பேன். அங்கேயிருந்து ஒண்ணாப் போகலாம்”.
இப்படித்தான் தினமும் என்னுடைய காலை நேரம் ஆரம்பிக்கிறது. மாலை நேரங்களோ அதைவிட மோசம். அண்டை வீட்டாரை பார்க்க வருபவர்கள் வேறு தத்தம் செல்போனுடன் சேவைக்கு ஆஜராகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் எல்லா பக்கங்களிலிருந்தும் பேச, யார் யாருடன் பேசுகிறார்கள் என்ற குழப்பமெல்லாம் நேரிடும். ஆனால் இரவு நேரம்? ஐயோ, அது பற்றி பேசாமல் இருப்பதே நலம். அண்டைவீட்டாரின் இந்த செல்பேசி அலம்பல்கள் இரவு பத்து மணி வரைக்கும் தொடர்கின்றன. இரவு உணவு உண்டுவிட்டு அப்பாடா கண்ணசரலாம் என நினைத்து படுக்கையில் வீழ்ந்தால் நிம்மதியாகத் தூங்கவிடாமல் இந்த சப்தங்கள். ஆண்டவனே எங்காவது அமைதியாக வாழவகை செய்யும் ஜாகையை காட்டு என வேண்டினாலும் அவன் ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறான்.
அன்னி ராத்திரிகூட பாருங்க, தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்னும் மனநிலையில் இருந்தபோது, பக்கத்து வீட்டு அந்த சோமாரி கம்பெனி அதிகாரியின் இடிபோன்ற குரல் கேட்டது.
“அடே விளங்காத பயலே, மனசுல என்னடா நெனைச்சுண்டிருக்கே? அந்த ரிப்போர்ட் இன்னிக்கே வேணும்னு நான் சொன்னேனே. என்ன இப்போத்தான் சாப்பிடறியா, சோறு கொட்டிண்டப்புறம் முதல்ல போய் அந்த ரிப்போர்ட்டை முடிச்சுட்டுத்தான் நீ தூங்கப் போறே. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, உன்னோட வேலைக்கு நீ வாங்கற சம்பளத்துல பாதிக்கு வேலை செய்ய நிறையபேர் காத்துக்கிட்டிருக்காங்க”.
ஏதோ மின்சார ஷாக் பெற்றது போன்ற உணர்வு எனக்கு. தூக்கமெல்லாம் பறந்தே போச்சு. நான் தினசரி பிரயோகிக்கும் திட்டுக்களைத் தவிர புதிய திட்டுக்களை தேடி களைத்து போகிறேன். அதன் பலனாய் மெல்ல என்னையறியாமலேயே தூங்கிப் போகிறேன்.
ஒரு இனிமையான கனவு. என் கனவுக்கன்னி உர்சுலா ஆண்ட்ரூசுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் சினிமாவில் வருவதுபோல கனவுலக் புகை மண்டலம். தூரத்தில் கடலோசை. உர்ஸூவின் கையில் ஒரு ரோஜாப்பூ. அதனால் என் கன்னத்தை வருடியபடியே பேசுகிறாள், “எனதருமை ஷான், எவ்வளவோ வருஷம் ஆச்சு நாம பாத்து”? எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் ஒரு சிறு வருத்தம்.
நான் புன்னகையுடன் அவளிடம் கூறுகிறேன், “உர்ஸூ கண்ணே, நீதான் என்னோட கனவுக்கன்னி. ஆனாக்க என் பெயர் ஷான் இல்லையே” உர்ஸூ கூறுகிறாள், டார்லிங், என்னைப் பொருத்தவரைக்கும் நீ என்னோட ஷானேதான்”. நான் விடவில்லை, “ஆனா உர்ஸூலா, என்னோட பேரை ஏன் சொல்லம்ட்டேங்கற. ஷானோட பேரை ஏன் சொல்லணும்”?
அவள் கிக்கி கிக்கி என சிரிக்கிறாள். “என்னோட கையில என்ன இருக்குன்னு சொல்லு”?
“ஒரு ரோஜாப்பூ”
“பல வருஷங்களுக்கு முன்னாலேயே நம்ம செகப்பிரியர் சொல்லலியா, பேர்ல என்ன இருக்கு? ரோஜாவை என்னப் பேர் சொல்லிக் கூப்பிட்டாலும் அது ரோஜாதானே, அத்தோட மணம் அப்படியேத்தானே இருக்கு”
நான்: “ஆனாக்க உர்ஸூ, நீயும் சரி அந்த செகப்பிரியனும் சரி, ஒரு விஷயத்தை மறந்துடறீங்க. ரோஜா தன்னோட பேரை மாத்தி சொல்லறதுல கவலைப்படாமல் இருக்கலாம். ஆனாக்க மனுஷங்க கவலைப்படுவாங்கதானே”.
“அடப்போய்யா, என்னோட மூடெல்லாம் கெடுத்துட்டே”, உர்ஸூ ரோஜாவை கீழே போட்டு விட்டு உறுமியவாறே திரும்பி நின்றாள். “ஷான் எவ்ளோ அற்புதமான மனுஷன், அவன் பேர் உனக்கு பிடிக்கல்லியானா, நீயும் எனக்கு வேண்டாம்” என்றாள். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்ல. “உர்ஸூ, உர்ஸூ” என கத்துகிறேன்.
அவள் என்னை நோக்கி விஷமமாகக் கூறுகிறாள், “ஏய், என்னோட நாய் இப்ப வாலாட்டறது பார். திடுக்கிட்டு முழித்து கொள்கிறேன்.
நான்காம் வீட்டு பால்கனியில் உள்ள அந்த சுட்டிப் பெண் செல்போனில் மேலும் கத்துகிறாள், “நாய் இப்போ என்னோட காலை நக்கறது. ஏய், சும்மா இரு (இது நாயிடம்), ஆமா நீ எக்ஸாம் நல்லா பண்ணியா, சாப்டாச்சா, அப்பாவா, அவர் உள்ளே படுத்துண்டிருக்கார். அவருக்கு ஹை பிபி. எக்ஸாம் நல்லா பண்ணியா, சந்தோஷம்”.
அதானே, சந்தோஷமா இரு, கவலைப்படாதே. அவளுக்கென்ன அவள் சொல்லிவிட்டாள். அனுபவிக்கறது நானல்லவா. ராத்திரி பத்து மணிக்கு மேல அவளோட நாய் வாலாட்டறது பத்தியும், அவளோட அப்பாவின் ஹை பி.பி. பற்றியும் செய்தி கேட்கணும்னுங்கறது என்னோட தலைவிதி. நான் பெருமூச்சு விடுகிறேன். உர்ஸுலாவை மறுபடியும் கனவுல பிடிக்க ஆசைப்படறேன். ஆனாக்க முடியல்லியே. த்லையை பிச்சுக்கலாம்னா ரெண்டு காரணத்தால செய்யல்ல. ஒண்ணு என்னதான் இருந்தாலும் நான் ஒரு ஆப்டிமிஸ்ட். ரெண்டாவது காரணம் இருக்கறதே நாலு முடிகள்தான், அதையும் பிச்சுண்டா எங்கே போறது? எப்படியோ என்னையறியாமலே தூங்கியிருக்கிறேன் போல. கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு செல்போனில யாரோ பேசறதாலே மறுபடியும் முழிப்பு.
இப்படியே செஞ்சதில் நான் எதிர்பார்க்காமலேயே அடுந்த நாள் விடிந்தது. மறுபடியும் பக்கத்து வீட்டு அதிகாரி நாய் தன்னோட செல்போனில யார் கிட்டயோ கத்தறான். இந்த மாதிரித்தான் என்னோட பகல்களும் இரவுகளும் கழிகின்றன.
என்ன பண்ணறதுன்னு தெரியாமல் சோர்ந்து போகிறேன். சாதாரணமா இரவின் ஆழ்ந்த இருட்டில்தான் அடுத்த நாளின் விடியலுக்கான வெளிச்சம் மெதுவாகத் தெரியும்னு சொல்லுவாங்க. என்னோட விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் அது மெதுவாக எல்லாம் தெரியவில்லை. பளீரென மோட்டார் ஹெட்லைட் போல தெரிந்தது. திடீரென லாஃபன்ஷ்டைனின் நினைவு வந்தது. அவரைப் போய் பார்த்தால் என்ன? கொஞ்ச நேரம் அவரோட கழிச்சுட்டு வரலாமே. அவரோட கற்பனை கலந்த நிகழ்வுகள் எனக்கு ஆறுதலா இருக்குமே. கூடவே அவரோட விடாத சிரிப்பு வேற. அவ்ரைப் பற்றி நினைக்கும்போதே மனம் லேசாயிற்று.
விரைவாக வீட்டிலிருந்து வெளியேறினேன்.
(தொடரும்)
ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
9 comments:
தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்!
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.அரசு நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்---திமுகவுக்கு அப்பதானே ஓட்டை போடுவாங்க!
2.பென்னாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - --காங்-அதிமுக பக்கம் சாயுதா?
3.டிச.30ல் வேலைநிறுத்தம்: தெலங்கானா ஆதரவு கட்சிகள் முடிவு ---ஆந்திராவை ஒரு வழி பண்ணாமா விடமாட்டாங்களா?
4.காங்கிரஸ் ஒரு தேசியப் புரட்சி: சோனியா - இது நல்ல ஜோக்!
5.ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - 2012 வரட்டும்!
6.எத்தனை இடையூறுகள் வந்தாலும் பென்னாகரத்தில் பாமக வெற்றி பெறும் ---வானம் ஏறி வைகுண்டமா!
7.ஆந்திர ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்பு-- யாரெல்லாம் வதம் செய்யப் படுவரோ!
8.சாதிக்க முடியும் என்ற உறுதியோடு மாணவர்கள் படிக்க வேண்டும்- துணைவேந்தர் --மிகச் சரியா சொல்றார்!
9.கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதல்:10 பேர் பலி - இவங்க மாறவே மாட்டங்களா?
10.தேர்தல் ஆணைய முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு -சொன்னதை கேட்டதற்கா?
கந்தசாமி.
உங்கள் நண்பர் என்பதற்காக சொல்லாமல் நேர்மையாக சொல்லுங்கள்
வால் பையன் எழுதும் சமீபத்திய பதிவுகளை யாருக்கேனும் படிக்க பரிந்துரைக்கும் நிலையில் இருக்கின்றதா ?
@அனானி
என்னைப் பொருத்தவரைக்கும் வால்பையன் கவலைப்பட வேண்டிய விஷயம் அது. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனாவசியமா பாப்பான்னு சொன்னா இந்த பாப்பான் வந்து நிப்பான் அப்படின்னு ஒரு பஞ்ச் அடிப்பிங்க்களே !!
நூறு தடவை பாப்பானை வையிறார் அப்பவும் சொம்பு தூக்குவது ஏன் ? லெக்பீஸ் தின்னா எல்லாமே மரத்திடுமா ஏன்னா ?
//உங்கள் நண்பர் என்பதற்காக சொல்லாமல் நேர்மையாக சொல்லுங்கள்
வால் பையன் எழுதும் சமீபத்திய பதிவுகளை யாருக்கேனும் படிக்க பரிந்துரைக்கும் நிலையில் இருக்கின்றதா ?//
உன் பார்வையில் எப்படி இருக்குதுங்கிறது உன் கேள்வி பதிலுக்கு கேட்டது ? ஒன்னு நல்லாருக்குன்னு சொல்லு இல்ல நல்லா இல்லன்னு சொல்லு
வெளங்கிடுச்சா இப்பம்
கடந்த 2009 பற்றிய கேள்விகள், 31-09-2009-டோண்டு கேள்வி பதில்கள் பதிவுக்கு:
1.உங்களை மிகவும் கவர்ந்த கேள்வி?
2.உங்களை மிகவும் கவர்ந்த பதிவர்?
3.உங்களை மிகவும் கவர்ந்த பதிவு?
4.உங்களுக்கு மிகவும் ஆனந்தம் கொடுத்த நிகழ்ச்சி?
5.உங்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்த நிகழ்ச்சி?
6.உங்களுக்கு நல்ல அனுபவம் தந்த நிகழச்சி?
7.அதிகம் பின்னூட்டம் பெற்ற உங்கள் பதிவு?
8.அதிக ஹிட்டுகள் பெற்ற பதிவு ?
9.பிறரால் பார்க்கப்படாத நல்ல பதிவு?
10.நீங்கள் பாராட்டும் வகையில் சென்னை பதிவர் சந்திப்பு( பெஸ்ட்) நடந்த நேரம்,இடம்?
11.வால்பையனை தவிர உங்கள் பதிவுக்கு விடாமல் பின்னுட்டம் போட்டவர்களில் யார் பின்னூட்டம் நீங்கள் ரசித்தது?
12.உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்திய பதிவு?
13.தமிழகத்தில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
14.இந்தியாவில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
15.உலகில் உங்களை மிகவும் பாதித்த நிகழச்சி?
16.நிங்கள் விரும்பும் பதிவுலக மாற்றங்கள் வரும் 2010 ல்?
@நக்கீரன் பாண்டியன்
31.12.2009-க்கான பதிவு நிரம்பி விட்டது.ஆகவே உங்கள் கேள்விகள் அடுத்தப் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வால்பையன் என் நண்பர் என்பதுதான் பதில்.
அவர் பதிவுகள் பற்றி நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் வெளிப்படையாக பதிவராக லாக் இன் செய்துவிட்டு வந்து கேட்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment