இந்தவாரத்துக்கான கேள்வி பதில்களுக்கு செல்வோமா?
அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. வாழும் மனிதர்களுக்கு வாழ்கைக்குத் தேவையான அழகின் அளவீடு என்ன?
பதில்: அழகு என்பது பார்ப்பவர் மனோபாவத்துக்கு ஏற்ப மாறுபடும். இதில் அளவீடு என ஒன்று எவ்வாறு அமையும்?
2. பொதுவிழாக்களில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறவர்கள் பற்றி?
பதில்: கலைஞரை வச்சு இங்கே காமெடி ஏதும் பண்ணல்லியே?
3. தமிழக காங்கரசாரின் சத்தியமூர்த்திபவனில் தற்போதைய செல்வாக்கு நிலவரம்?
பதில்: என்ன புடலங்காய் செல்வாக்கு? தமிழகத்திலேயே காங்கிரசாருக்கு செல்வாக்கு இல்லை. சத்தியமூர்த்தி பவன் மட்டும் என்ன ஸ்பெஷல்?
4. தமிழக அரசு அரசு உயர் அதிகாரிகளை அடிக்கடி பணிமாற்றம் செய்வது சரியா?
பதில்: பிறகு தண்ணீயில்லாக் காட்டுக்கெல்லாம் ட்ரான்ஸ்ஃபர் எப்படி செய்வதாம்?
5. அரசால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதபோது கள் இற்க்குவோரின் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்?
பதில்: நான் என்ன நினைக்கிறேன் என்றால் கள்ளுக்கு முதலீடு குறைவு. சாராயத்துக்கு பேட்டரி செல், பல்லி ஆகிய மூலப்பொருள்கள் தேவை. ஆகவே கள் இறக்க அனுமதித்தால் குடிசைத் தொழிலாகி போய் விடும் என அரசு பயப்படுகிறது போல தோன்றுகிறது.
6. புதுமுக நடிகர் ஷக்தி திரையுலகில் பிரகாசிப்பாரா?
பதில்: யார் அவர்? அவர் படங்கள் எதுவும் பார்த்ததாக நினைவில்லையே.
7. தமிழகத்தில் சீரியஸ் இலக்கியங்களையும் வாசகர்கள் படிக்க ஆரம்பித்துவிடது போல் தெரிகிறதே?
பதில்: எப்படி சொல்கிறீர்கள்?
8. தற்கால சூழ்நிலயில் இன்றைய கணவன்மார்களைப் பற்றி?
பதில்: செக்ஷன் 498-ஏ கண்டு அஞ்சுகின்றனர்.
9. தற்கால சூழ்நிலயில் இன்றைய மனைவிமார்களைப் பற்றி?
பதில்: 498-ஏ செக்ஷனை சகட்டுமேனிக்கு உபயோகிப்பது தங்கள் நலத்துக்கே ஊறு விளைவிக்கும் என்பதை இன்னும் சரியாக பலர் புரிந்து கொள்ளவில்லை.
10. தற்கால சூழ்நிலயில் இன்றைய ஆண்பிள்ளைகளைப் பற்றி?
பதில்: எல்லா துறைகளிலும் பெண்கள் போட்டியிடுவதால் ஆடிப்போயுள்ளனர்.
11. தற்கால சூழ்நிலயில் இன்றைய பெண்பிள்ளைகளைப் பற்றி?
பதில்: ஆண்களுடன் இடும் போட்டி சபாஷ் சரியான போட்டி எனச் சொல்ல வைக்கிறது.
12. தற்கால சூழ்நிலயில் இன்றைய மூத்த குடிமக்கள் பற்றி?
பதில்: குடி மக்கள் என்பதை எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் எனத் தெரியவில்லை. சீனியர் சிடிசன்ஸ் என நினைத்தால் அவர்கள் தங்கள்பாட்டை தாங்களே பார்த்து கொள்வது நல்லது. கடை காலம் வரைக்கும் உழைப்பதே அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பதற்கான ரகசியம் என்றால் மிகையாகாது.
13. குரு பெயர்ச்சி யோகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு வருமா?
பதில்: மன்னிக்கவும் எனக்கு சோதிடத்தில் ஏதும் நம்பிக்கை இல்லை.
14. சொத்து மதிப்பாக மு.கருணாநிதி 43.8 கோடி, மாயாவதி 52 கோடி, ஜெயலலிதா 24.6 கோடி எனச் சொல்லப்படுகிறதே-இவர்கள் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்?
பதில்: இவ்வளவு குறைவான சொத்தா? இது அவர்கள் டிக்ளேர் செய்ததாக இருக்கும். எப்ப்டி சம்பாதித்தார்களா? இது என்ன கேள்வி? குழந்தைக்கும் தெரியுமே.
15. வருமான வரித்துறை சட்டங்கள் கெடுபிடிகள் எல்லாம் சாமானியர்க்கு மட்டும்தானா?
பதில்: ஆமாம்
16. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்கிறார்களே அது சும்மாவா?
பதில்: எந்த ஆட்டமானாலும் அது முடிவுக்கு வரத்தான் வேண்டும். வரும்.
17. லஞ்சம் வாங்கி பணத்தை குவித்து-தேர்தலில் மக்களிடம் பண விதையாய் விதைத்து-வெற்றியும் பெற்று சாதனை வெற்றி எனக் கொண்டாடும் போக்கு நாட்டை எங்கே கொண்டு போகும்?
பதில்: கவலைக்கிடமான நிலைமைதான்.
18. கைகள் கட்டப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் பாவம் இல்லையா?
பதில்: தலைமை தேர்தல் கமிஷனர் படவேண்டிய கவலை அது.
19. இந்தக் கலி நீங்க மீண்டும் ஒரு சேஷன் வருவாரா?
பதில்: வரவேண்டும் என யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் சந்தேகம்தான்.
20. செல்பேசியில் எஸ்.எம்.எஸ். என்ற பெயரில் இளைஞர் உலகம் நேரத்தை வீணாக்குகிறதே?
பதில்: இந்த கிரேஸ் தீர்ந்ததும் வேறுவிஷயங்களுக்கு தாவுவார்கள். ஆனால் நேரத்தை வீணாக்குவது மட்டும் குறையாது என அஞ்சுகிறேன்.
21. வாழும் அரசியல் தலைவர்களைவிட நாட்டில் சிறந்தப் பத்துப் பேரைச் சொல்லுங்களேன்?
பதில்: அப்துல் கலாம் முதலில் நினைவுக்கு வருகிறார். சோ அவர்களை அரசியல் தலைவராக பார்க்க மாட்டீர்கள்தானே. எழுத்தாளர்களில் ஜெயமோகன், இரா முருகன். எம்.எஸ். உதயமூர்த்தி,
22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?
23. புரட்சிப்புயல் வைகோவும் வழக்குகளும் ஒரு தொடர் கதையா?
பதில்: இஅகோ நல்ல மனிதர். உணர்ச்சிவசப்படுபவர். நன்றாக அழுவாr. வாலிபால் விளையாட்டில் நிபுணர். சிறையில் நிறைய வாலிபால் ஆடியுள்ளார். நன்றாக நடப்பார். பேசுவார். ஆனால் அவை எல்லாம் போதுமா? பேசக்கூடாத விஷயங்களை பேசிப்பேசியே காரியத்தை கெடுத்து கொள்கிறாரே. ஆகவே வழக்குகளும் தொடர்கதையாகத்தான் போயின.
24. மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்கபட்ட மருத்துவரின் முயற்சிகள்?
பதில்: கேலிக்குரியனவையாக உள்ளன.
25. போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?
பதில்: இப்போதைக்கு திமுக தோற்கடிக்கப்படவேண்டியது முக்கியம். ஆகவே அதிமுகவுடன் கூட்டு சேருவது விஜயகாந்த்துக்கு காலத்தின் கட்டாயம். அவருkகுமே கூட மேலே வளர இது ஒரு வழி. ஆனால் அவரும் சரி, ஜெயும் சரி இதை உணர்ந்ததாகத் தெரியவில்லையே.
26. அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் எல்லாம் என்னவாச்சு?
பதில்: இழுபறியில் உள்ளன.
27.இடைத்தேர்தல் பரிசளிப்பை (மது,மாமிசம்) பார்க்கும் போது அடுத்து என்ன செய்வார்கள், வரவர இனி வாக்குரிமை?
பதில்: வரவர மாமியார் கழுதைப் போல ஆனாளாம்.
28.ஒரு ரூபாய் அரிசிதிட்டம், இலவச டீவி, இலவச கேஸ், இலவச வீட்டுமனை, பட்டா, கலைஞர் மருத்துவத்திட்டம், 50 ரூபாயில் பலசரக்கு, இட ஒதுக்கீட்டு கொள்கையில் 100 % உறுதி இவை எல்லாம் நம்மை காப்பாற்றாது என எண்ணி, இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் திமுக பற்றி?
பதில்: திமுக ஒரு குதிரையை மட்டும் நம்பி பணம் கட்டவில்லை என்பது தெரிகிறது.
29. அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படும் அதிமுக பற்றி?
பதில்: திமுகாவும் அதிமுகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என பெருந்தலைவர் எப்போதோ கூறிவிட்டாரே!
30. ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும் பிற கட்சிகள் பற்றி?
பதில்: தங்களுக்கும் அந்த சான்ஸ் கிட்டவில்லையே என்னும் காரணம்தான் இங்கு அந்த புலம்பலுக்கு மெயினாக உள்ளது.
31.ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றுவிட்டால் (அல்லது ஓட்டு வித்யாசம் குறைந்து விட்டால்) கலைஞர்/ஸ்டாலின்/அழகிரி என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
பதில்: ஸ்டாலின் அழகிரி என்ன சொல்லுவார்களோ தெரியாது. ஆனால் கலைஞருக்கு தமிழன் சோற்றால் அடித்த இண்டம் என்னும் உண்மை திடீரென மறுபடி நினைவுக்கு வந்து தொலைக்கும்.
32. உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும், தற்போதைய பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ஆரம்பத்தில் தமிழில் எழுதும்போது பல ஆங்கில சொற்களுக்கு சட்டென தமிழ் சொற்ககள் பிடிபடாமல் தயங்கினேன். இப்போது அந்தத் தயக்கம் போயே போயிந்தி.
சைவகொத்துப்பரோட்டா
1. கேள்வி:கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ எடுக்க தேர்தல்
கமிசன் எடுத்துள்ள முடிவு, கள்ள ஓட்டை தடுக்க வகை செய்யுமா?
பதில்: போட்டோ எடுக்கும் செயல்பாடு எம்முறையில் நடக்கும் என்பதை பொருத்தது அது.
எம்.கண்ணன்
1. தெலுங்கானா, ஆந்திரா போராட்டங்களினால் திரைப்படத்துறைக்கும், போக்குவரத்து மற்றும் வணிகத்துறைக்கு மிகுந்த நஷ்டமாமே? தமிழ் நடிக/நடிகர்கள், இயக்குனர்கள் இனி ஹைதராபாத் சென்று படம் எடுக்க யோசிப்பார்கள்தானே?
பதில்: கண்டிப்பாக யோசிப்பார்கள். இம்மாதிரி மாநிலங்களை பிரித்து கொண்டே போனால் கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது. வெங்காயம் உரிப்பது போலத்தான்.
2. கோபன்ஹேகனில் இன்று நிறைவுறும் Climate மாநாட்டில் எடுக்கப் போகும் முடிவுகளால் காமன்மேன் எனப்படும் இந்திய / தமிழக பிரஜைக்கு என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? கார் / 2 வீலர் வாங்கக்கூடாது, ஜெனரேட்டர் உபயோகம் பண்ணக்கூடாது, ஏஸி உபயோகிக்கக்கூடாது என அன்றாட வாழ்வில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் முடிவுகள் ஏற்படுமா? மேலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலை / கட்டுமானம் கட்டுவதில் தடைகள் வருமா? இதனால் முன்னேற்றம் பாதிக்குமா?
பதில்: வளரும் நாடுகளை இவ்வாறு கட்டுப்படுத்துவது வேலைக்காகுமா எனத் தெரியவில்லை.
3. வைரமுத்துவும் வாலியும் இணைந்து கலைஞரின் பெண் சிங்கம் படத்துக்கு பாடல் எழுதப் போகிறார்களாமே? அடுத்த வருட விருது இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்காகவா இது? இல்லை யாருடைய ஜால்ரா அதிகம் என பார்ப்பதற்காகவா?
பதில்: ரெண்டும்தான்.
4. தமிழ்ப் பட ஹீரோயின்கள் இந்திக்கும் போய்விட்டதால், அனுஷ்காவின் ராஜ்ஜியம் இங்கு வருமா?
பதில்: அனுஷ்கா தெலுங்குதானே? அருந்ததீயில் பார்த்துள்ளேன். அப்படி யாருடைய ராஜ்ஜியமும் நடிகைகள் விஷயத்தில் நிலைப்பதில்லை.
5. குமுதத்தில் முதல்வாரம் கௌதமி பேட்டி, அடுத்த வாரம் வாணி கணபதி பேட்டி. வரும் வாரங்களில் சரிகா, சிம்ரன் பேட்டிகள் வருமா?
பதில்: வரவேண்டும். அப்போதுதானே கமல் பற்றி மேலதிக விவரங்கள் கிடைக்கும்?
6. இவர்களில் யார் யார் - இட்லிவடை குழாமில் உறுப்பினர் - எ.அ.பாலா, பா ராகவன், பத்ரி, தேசிகன், பெனாத்தல் சுரேஷ், ஹரன் பிரசன்னா, ரஜினி ராம்கி, பாஸ்டன் பாலாஜி, சு.க்ருபாஷங்கர், இதில் யார் சரக்கு மாஸ்டர்? எ.அ.பாலா?
பதில்: எனக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை.
7. அத்வானி ஆக்டிவாக நடமாடிக்கொண்டிருக்கையிலேயே (வாஜ்பாய் மாதிரி அல்லாமல்) அவருக்கு கடைசி நாள் குறித்து - அவரை ராஜினாமா செய்யவைத்து - போதும் உங்கள் இருப்பு என சொல்வது என்ன மாதிரியான ஆர்.எஸ்.எஸ். அரசியல்? அவராகவும் ஏன் தானே ஒதுங்காமல் இப்படி இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் (கட்சியில், பதவியில்)?
பதில்: பாஜகவில் நடக்கும் உட்கட்சி சண்டை அந்த கட்சிக்கு நல்லது அல்ல. நாட்டின் ஜனநாயகத்துக்குமே நல்லது அல்ல. வேறு என்ன சொல்ல?
8. நிதின் கட்கரி பாஜக தலைவரானால் - அவர் சொல்லுவதையெல்லாம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கேட்பார்களா ? மகாராஷ்டிரத்திலேயே சிவசேனா பிரச்னைகளில் அவரால் ஏதும் செய்து வெற்றி பெற முடியாத நிலையில் இந்தியா அளவிற்கு பஜக தலைவரானால் யார் கேட்கப்போகிறார்கள்?
பதில்: முந்தைய கேள்விக்கான பதில்தான் இங்கும்.
9. கூடாரவல்லி கொண்டாடுவது உண்டா? வைகுண்ட ஏகாதசிக்கு வழக்கமாக எந்த கோயில் விசிட்? திருவல்லிக்கேணியா? நங்கநல்லூரேவா?
பதில்: நங்கநல்லூர்தான். உள்ளூர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில். கூடாரவல்லிக்கு அங்கு சர்க்கரை பொங்கல் தளிகை உண்டு. நானும் ஒரு உபயதாரர் மார்கழி நிகழ்ச்சிகளுக்கு.
10. சன் டிவியில் இரவு 10.30மணிக்கு 'விஜய் டிவியின் நடந்தது என்ன பாணியில்' காசியில் இருக்கும் அகோரிகள், நர மாமிசம் சாப்பிடுவதையும் காட்டினார்கள் (புதனன்று) - பார்த்தீர்களா?
பதில்: அறிவிப்பு/ட்ரைலரை பார்த்ததுமே குமட்டிக் கொண்டு வந்தது. ஜாக்கிரதையாக டைமிங்கை நோட் செய்து சன் டிவி போடாமல் இருந்தேன்.
கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1. இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக இந்தியா வர அனுமதிக்க வேண்டும்: பாஜக---மீண்டும் தமிழர் பாசம்!
பதில்: பாஜகவுக்கு பைத்தியம் பிடித்துள்ளது.
2. புலிகளின் ஆயுதக் கப்பலை கைப்பற்றியது இலங்கை---இது என்ன புதுக்கதை!
பதில்: செய்தி உண்மையா என்பது எனக்கு தெரியவில்லை.
3. தெலுங்கானா விவகாரம்: பிரதமர் நாளை முடிவு- --நல்லதா யாருக்கு!
பதில்: கண்டிப்பாக ஆந்திரர்களுக்கு நல்லதல்ல.
4. திருச்செந்தூர் தொகுதியில் 79.17% வாக்குப்பதிவு : பெண்களே அதிகம்---கொடுத்த பரிசுகள் கை கொடுத்துவிட்டனவா!
பதில்: விட்டன.
5. மக்களவை பாஜக துணைத் தலைவராக கோபிநாத் முண்டே நியமனம் ---இதுவாவது பலன் கொடுக்குமா!
பதில்: தலைக்குத் தலை நாட்டாமை என்றால் என்ன செய்வது?
6. கொடநாடு எஸ்டேட் பகுதியில் வேலி அமைப்பது தொடர்பாக மோதல் --கொடநாடு செய்தி இல்லாத நாளும் இனி உண்டோ!
பதில்: செய்திகள் இன்னும் வரும்
7. இரண்டு மணி வரை உழைக்கிறேன்: மம்தா --பாராட்டுவோம்!
பதில்: கண்டிப்பாக.
8. ஜெ., வீடு முன் அ.தி.மு.க.,வினர் முற்றுகை --இது கொஞ்சம் ஓவராயில்லை!
பதில்: என்ன சொல்லி முற்றுகை இட்டார்களாம்?
9. இடையூறாக இருந்த சிலைகள் அகற்றம் __சபாஷ் தலைவருக்கு!
பதில்: எங்கே?
10. மம்தா புகாருக்கு லாலு பதில் --சிவப்பு சாயம் வெளுத்து போச்சா!
பதில்: இருவருமே லேசுப்பட்டவர்கள் இல்லை. சபாஷ் சரியான போட்டி.
கேள்விகள் இருந்தால் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கலாமின் கனவு
-
ஜெ, அப்துல்கலாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய பொன்மொழிகள். இன்று
பரவலாக உள்ளன. அவர் கனவுகாணுங்கள் என்று சொன்ன பொன்மொழியை நான் என்
டெஸ்க்டாப்பில் வைத...
6 hours ago
43 comments:
1.இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது பற்றி?
2.திமுகவின் அழகிரி வூயூகம் பொதுத்தேர்தலில் செல்லுமா?
3.கறுப்பு எம்ஜிஆர் வி.காந்த்ன் கதை இனி?
4.வேட்டைக்காரன் படம் எப்படி?
5.பி.எஸ்.என்.எல்- இங்கே என்ன பிரச்சனை(பாரளுமன்றத்தில் அறிக்கை)
//வாழும் மனிதர்களுக்கு வாழ்கைக்குத் தேவையான அழகின் அளவீடு என்ன?//
அழகெல்லாம் சில மணிதுளிகள் தான்!
பழகியபின் அழகு பெரியவிசயமாக தெரியாது!
//பொதுவிழாக்களில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறவர்கள் பற்றி?//
மத்தவங்க பாராட்டுவாங்கன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து மண்டை காய்ஞ்சிருப்பாங்க!
//தமிழக காங்கரசாரின் சத்தியமூர்த்திபவனில் தற்போதைய செல்வாக்கு நிலவரம்?//
அது ஷிப்ட் கணக்கில் மாறக்கூடியது!
எப்போ யார் செல்வாக்குன்னு யாருக்கே தெரியாது!
//தமிழக அரசு அரசு உயர் அதிகாரிகளை அடிக்கடி பணிமாற்றம் செய்வது சரியா?//
உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, எல்லா ஊழயர்களையுமே அடிக்கடி ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும்!
ஊழல் குறைய இது ஒரு வாய்ப்பாக அமையும்!
அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளீல் படிக்க வேண்டும், எப்போது போனாலும் அவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்!
//அரசால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதபோது கள் இற்க்குவோரின் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்?//
அரசுக்கு வருமானம் போய் விடுமே!
கேரளாவிலும் தான் கள்ளுக்கடை இருக்கிறது, குடிசை தொழிலாவா ஆயிருச்சு!
//புதுமுக நடிகர் ஷக்தி திரையுலகில் பிரகாசிப்பாரா?//
இந்த கேள்விக்கு யாராவது நூறுருவா பரிசளிங்கப்பா!
//மிழகத்தில் சீரியஸ் இலக்கியங்களையும் வாசகர்கள் படிக்க ஆரம்பித்துவிடது போல் தெரிகிறதே?//
சீரியஸ் என்று எதுவுமேயில்லை!
இன்றைக்கு நீங்கள் சீரியஸாக நினைப்பது நாளைக்கு பழய இலக்கியமாகி விடலாம்!
//குரு பெயர்ச்சி யோகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாய்ப்பு வருமா?
பதில்: மன்னிக்கவும் எனக்கு சோதிடத்தில் ஏதும் நம்பிக்கை இல்லை.//
குரு ஏன் ஜெயலலிதாவை மட்டும் ஓரக்கண்ணால் பார்க்கனும்! குருவுக்கு வேற ஆளே கிடைக்கலையே!
*****
இப்போ என் கேள்வி!
பக்கத்து வீட்டுகாரன் வீடு மாறினால் நமக்கு புரமோஷன் கிடைக்குமா?
இப்போ என் பதில்
ஒரு ”மோஷனும்” கிடைக்காது!
//சொத்து மதிப்பாக மு.கருணாநிதி 43.8 கோடி, மாயாவதி 52 கோடி, ஜெயலலிதா 24.6 கோடி எனச் சொல்லப்படுகிறதே-இவர்கள் எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்?//
சென்னை மாநகர கவுன்சிலர் சொத்து கணக்கு இதைவிட அதிகமா இருக்கும்!
யார் காதுல பூ சுத்துறாங்களாம்!
//வருமான வரித்துறை சட்டங்கள் கெடுபிடிகள் எல்லாம் சாமானியர்க்கு மட்டும்தானா?//
சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கும்!
//உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான் என்று சொல்கிறார்களே அது சும்மாவா?//
உப்பு உடலிலுள்ள நீரை உறிஞ்சி அதை மேலும் திடமாக்கும், அதிக உப்பு சத்து இருந்தால் பிரஷ்ஷர் வரக்காரணம் இது தான்!
தப்பு பண்ணவன் நல்லா தான் இருக்கான்!
பழமொழியெல்லாம் சாமான்யனுக்கு தான்!
//லஞ்சம் வாங்கி பணத்தை குவித்து-தேர்தலில் மக்களிடம் பண விதையாய் விதைத்து-வெற்றியும் பெற்று சாதனை வெற்றி எனக் கொண்டாடும் போக்கு நாட்டை எங்கே கொண்டு போகும்?//
முதலாளிகளின் கூடாரத்தில் மக்கள் அடிமைகளாய் இருப்பது போல் எனக்கு அடிக்கடி கனவு வருகிறது!
//கைகள் கட்டப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் பாவம் இல்லையா?//
பணநாயகம் ஆனபிறகு ஜனநாயகத்தை பற்றி ஏன் அவர்களுக்கு கவலை!
//இந்தக் கலி நீங்க மீண்டும் ஒரு சேஷன் வருவாரா?//
அந்த சீஷன் முடிஞ்சி போச்சு!
//செல்பேசியில் எஸ்.எம்.எஸ். என்ற பெயரில் இளைஞர் உலகம் நேரத்தை வீணாக்குகிறதே?//
நாம ப்ளாக்குல அப்படியே பயனுள்ள பொழுதை கழிக்கிறோம் பாருங்க!
//உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்? //
என்ன ஒரு கற்பனை!
ஆஸ்காரே கொடுக்கலாம் உங்களுக்கு!
//புரட்சிப்புயல் வைகோவும் வழக்குகளும் ஒரு தொடர் கதையா?//
எதிர்கட்சியில் இருக்கும் வரை!
டோண்டு சார்,
இந்த லிங்க்-ஐ பிடியுங்கள், ஒரு அருமையான கண்ணன் பாடல் கிடைக்கும். 2003-2004 ல் சன் டி.வி.யில் வந்த ஆடுகிறான் கண்ணன் சீரியல் பாடல்தான் இது. வரிகளும்,இசையும் அருமை.
மிக நீண்ட தேடலுக்குப்பின் கிடைத்தது.
http://www.mediafire.com/?dw2mdmhdftw
//மீண்டும் திமுகவிடம் லட்சிய (பதவி)உறவுகொள்ள எடுக்கபட்ட மருத்துவரின் முயற்சிகள்?//
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
//போகிற போக்கை பார்த்தால் 2011இல் விஜயகாந்த்?//
எம்.எல்.ஏ கூட ஆகமாட்டார்!
//அரசால் போடப்பட்ட ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்குகள் எல்லாம் என்னவாச்சு?//
ஆட்சி மாறினால் அய்யோ, அம்மான்னு கத்த வேண்டியிருக்கும்னு அடக்கி தான் வாசிப்பாங்க!
//இடைத்தேர்தல் பரிசளிப்பை (மது,மாமிசம்) பார்க்கும் போது அடுத்து என்ன செய்வார்கள், வரவர இனி வாக்குரிமை?//
காபரே டான்ஸ் நடக்கலாம்!
//ஒரு ரூபாய் அரிசிதிட்டம், இலவச டீவி, இலவச கேஸ், இலவச வீட்டுமனை, பட்டா, கலைஞர் மருத்துவத்திட்டம், 50 ரூபாயில் பலசரக்கு, இட ஒதுக்கீட்டு கொள்கையில் 100 % உறுதி இவை எல்லாம் நம்மை காப்பாற்றாது என எண்ணி, இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் திமுக பற்றி?//
அவைகளனைத்தும் முழுமையாக சென்றடயவில்லை என்பது அவர்களுக்கும் தெரியுமே!
//அதற்கு சற்றும் சளைக்காமால் இதே பாணியில் செயல்படும் அதிமுக பற்றி?//
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது!
உள்குத்தாக கணிசமான பெட்டிகள் ஆளும்கட்சியினரிடமிருந்து மாறிவிடும்!
//ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது எனப் புலம்பும் பிற கட்சிகள் பற்றி?//
கொடுத்த பெட்டி பத்தலை போல!
//உங்களின் ஆரம்ப கால பதிவுகளுக்கும், தற்போதைய பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?//
ஆரம்பத்தில் மொக்கை!
இப்போ மரணமொக்கை!
//கள்ள ஓட்டைத் தடுக்க, ஓட்டு போட வருபவர்களை போட்டோ எடுக்க தேர்தல்
கமிசன் எடுத்துள்ள முடிவு, கள்ள ஓட்டை தடுக்க வகை செய்யுமா? //
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!
//கமல் பற்றி மேலதிக விவரங்கள் கிடைக்கும்?//
அது தெரிஞ்சி நாம என்ன பண்னப்போறோம்!?
யார்யா இந்த வால் பையன்!
அல்லா கேள்விக்குந்தான் அண்ணாத்த ஆன்சர் பண்ணி வேச்சுகிராறு தெர்ல !
இன்னாத்துக்கு ஊடால பூந்து கலீஜ் பன்னின்னு கீற !
/ கணவன்மார்களைப் பற்றி?
பதில்: செக்ஷன் 498-ஏ கண்டு அஞ்சுகின்றனர்./
திருமணம் என்கிற அமைப்பு தேவையா என்று கேட்கின்றனர் .“லிவ்-இன்” உறவுகள் முழுமையான சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுவிட்டன . கைடு பயம் கிடையாது
http://tamil498a.com/
ajan RADHAMANALAN said...
// யார்யா இந்த வால் பையன்!
அல்லா கேள்விக்குந்தான் அண்ணாத்த ஆன்சர் பண்ணி வேச்சுகிராறு தெர்ல !
இன்னாத்துக்கு ஊடால பூந்து கலீஜ் பன்னின்னு கீற !//
வால்பையன் பழகுவதற்கு
இனியவர்.
நல்லவர்.
வல்லவர்.
காரியம் ஆற்றுவதில் ஒரு நேர்த்தி பெற்ற பண்பாளர்.
பின்னூட்ட சக்கரவர்த்தி.
நாத்திகவாதி.
சாதி ஒழிய வேண்டும் எனும் கருத்து
உள்ள கலைஞன்.
ஆன்லயின்(கமாடிடி)வர்த்தகத்தில் புலி.
டோண்டுவின் அன்புக்கு பாத்திரமானவர்.
ஈரோட்டில் வாழும் “ஒபென் ஹார்ட்டெட்” பண்புமிகு மனிதர்.
அவர் பற்றி இன்னும் தகவல்களுக்கு
http://valpaiyan.blogspot.com/
*********************************
வருங்காலத்தில் :-
-வால்பையன் நற்பணி மன்றம்
-வால்பையன் சமூகபாதுகாப்பு இயக்கம்.
-வால்பையன் பகுத்தறிவு பாசறை
-வால்பையன் வெற்றிப் பேரவை
தொடங்கப்படலாம்.
**********************************
You did not answer my question posted last week !
I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period.
Regards
-Venkat
@வெங்கட்
மன்னிக்கவும் வெங்கட். பதில் கூற விட்டுப் போய் விட்டது. அடுத்த வரைவில் சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?
//
காரியம் கூடும் நேரம் பார்த்து வீட்டு அட்ரசையா கொடுப்பார் டோண்டு சார் ? வீட்டுல வீட்டம்மா இருக்குமே...
Anonymous said...
//
22. உங்கள் பதிவுகளை(குறிப்பாக- சோவின் எங்கே பிராமணன்) படித்துவிட்டு //தமிழ் திரையுலக கவர்ச்சிப்புயல் நமீதா உங்கள் வீட்டுக்கு வந்தால்?
பதில்: நமீதாவை வைத்து காமெடி ஏதும் பண்ணல்லியே?
//
காரியம் கூடும் நேரம் பார்த்து வீட்டு அட்ரசையா கொடுப்பார் டோண்டு சார் ? வீட்டுல வீட்டம்மா இருக்குமே...//
AVAR ROMBA NALLAVARU
//அனுஷ்கா தெலுங்குதானே?//
http://en.wikipedia.org/wiki/Anushka_Shetty Sweety Shetty was born in a Tulu speaking family in Mangalore!
தானைத்தலைவி, கன்னடத்து இளங்கிளி அனுஷ்காவைப் பற்றி யாரும் தப்பா எழுதக்கூடாது.
- தானைத்தலைவி அனுஷ்கா கொலை வெறிப்படை
ஏங்க வால்பையன் என்பருக்கும் உங்களுக்கு ஏதாவது டீலா ?
இப்படி எல்லா பதிவுலயும் வந்து 20-30 பின்னூட்டம் போட்டுவிடுகிறாரே...
? ஒன்று ரெண்டு பதிவுக்கு பண்ணா பரவாயில்லை...எல்லாத்துக்குமா ?
@வஜ்ரா
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறும்புகளை நான் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ரசிக்கிறேன்.
நீங்கள் கூட வேண்டுமானால் எல்லா கேள்விகளுக்கும் பதிலளியுங்களேன். வேண்டாம் என்றா கூறப்போகிறேன்.
வால் பையனின் பதில்களை அறிய நானும் ஆவலாகவே உள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்வி பதிகளுக்கு மட்டும் தான் அத்தனை பின்னூட்டங்கள் போடுவேன்!
சீரியஸ் மொக்கைகளுக்கு!? ஒன்று அல்லது இரண்டு தான்!
சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சு அப்படி பழகிருச்சு!
//வருங்காலத்தில் :-
-வால்பையன் நற்பணி மன்றம்
-வால்பையன் சமூகபாதுகாப்பு இயக்கம்.
-வால்பையன் பகுத்தறிவு பாசறை
-வால்பையன் வெற்றிப் பேரவை
தொடங்கப்படலாம்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
முடிவு கட்டாம விட மாட்டிங்க போலயே!
//
வால் பையன் எனக்கு பிள்ளை மாதிரி. அவரது குறும்புகளை நான் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ரசிக்கிறேன்.
நீங்கள் கூட வேண்டுமானால் எல்லா கேள்விகளுக்கும் பதிலளியுங்களேன். வேண்டாம் என்றா கூறப்போகிறேன்.
வால் பையனின் பதில்களை அறிய நானும் ஆவலாகவே உள்ளேன்.
//
ஒரு பதிவருக்கு ஒரு வாலே அதிகம்.... நான் வெறும் ரசிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்...
//ஒரு பதிவருக்கு ஒரு வாலே அதிகம்.... நான் வெறும் ரசிகனாக மட்டும் இருந்துவிட்டுப் போகிறேன்..//
வால் இருப்பது எனக்கு, அவருக்கு அல்ல!
Post a Comment