12/31/2009

டோண்டு பதில்கள் - 31.12.2009

அனானி (23.12.2009 காலை 07.59-க்கு கேட்டவர்)
டோண்டு குறளுக்கு பொருள் எழுதினால்?
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பதில்: அகரம் முதல் தொடங்கும் எழுத்துக்கள் எல்லாம் மூல முதல்வோனாகிய இறைவனை முன்னிறுத்தியே உலகில் உள்ளன.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பதில்: ஒருவர் கல்வி கற்றும் இறைவனின் திருவடிகளைத் தொழவில்லை எனில், அவரது கல்வியினால் பயன் இல்லை, அவர் என்னதான் கற்றார்?

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பதில்: நினைத்தவுடன் மனத்தே விளைகின்ற, மேவுகின்ற இறைவனது பாதங்களைத் தொடருவதால், மன அழுத்தங்கள் நீங்கப்பெற்று மனிதர்கள் இப் பூவுலகில் இசைந்தொழுகி நீண்ட காலத்திற்கு வாழ்வார்

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பதில்: விருப்பு வெறுப்பே துன்பங்களுக்குக் காரணமாக இருப்பவை. ஆகையால் அவை இரண்டும் இல்லாத இறைவனின் பாதங்களை அடைந்தோருக்கு அவ்விதமே எங்கேயும், எப்போதும் எவ்வகைத் துன்பமும் இராது.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பதில்: இரு வினைகளாகிய பாவ, புண்ணியம் அல்லது நல்வினை, தீவினை ஆகியவற்றுள் அறியாமைக் காலத்தில் சேர்ந்தவையானவை, இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்து நிற்போரைச் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பதில்: ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என இந்திரிய வாயில்கள் மூலம் பெறும் ஐந்து அவாவினையும் அறுத்தவனின் உண்மையான ஒழுக்க நெறியினைக் கடைப் பிடிப்போர் உலகில் நீண்ட வாழ்வினைப் பெறுவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பதில்: தனக்கு இணையே இல்லாத, பேராற்றல் மிக்க இறைவனின் பாதார விந்தங்களைச் சேர்ந்து ஒழுகுபவருக்கு அல்லாது மற்றவர்களின் மனக் கவலை, துன்பம் போன்றவற்றைக் குணப்படுத்தும் சாத்தியம் அரிது

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

பதில்: அறக்கடலாகிய அகத்தே குளிருடைய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து ஒழுகுபவரைத் தவிர மற்றவர்கள் மற்றைய கடல்களாகிய பொருட் கடலையும், இன்ப சாகரத்தையும் கடக்க இயலாது.

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பதில்: இயங்கு கோள் அற்ற பொறிகளினால் பயன் இராதே; அதைப் போன்றே எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாளை வணங்கி ஒழுகாத தலையும் பயன் தராது.

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பதில்: இப்பிறவி வாழ்க்கை என்பது பெருங்கடலைப் போன்றது. இறைவனைச் சார்ந்து அவன் பாதாரவிந்தங்களை ஒழுகுபவர்களால் மட்டுமே அக்கடலைக் கடக்க இயலும். இறைவனைச் சாராதோரால் அக்கடலைக் கடக்க இயலாது மூழ்கிவிடுவர்.
நன்றி: இந்த வலைப்பூவுக்கு
குறளுக்கு எல்லாம் பொருள் சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆகவேதான் நான் ஏற்றுக் கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பும் இன்னொருவர் எழுதியதை சரிபார்ப்பதாகவே அமைந்தது. மற்றப்படி குறள் ஒரு ஆழ்கடல்.


அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது பற்றி?
பதில்: நேர்மையான ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்கும் என்னும் நம்பிக்கைக்கு சாவு மணி.

2. திமுகவின் அழகிரி வூயூகம் பொதுத்தேர்தலில் செல்லுமா?
பதில்: வெற்றிபெறக்கூடாது என்பதே விருப்பம். அது அன்ரியலிஸ்டிக்கா இல்லையா என்பது வேறு விஷயம்.

3. கறுப்பு எம்ஜிஆர் வி.காந்த்தின் கதை இனி?
பதில்: எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமா?

4. வேட்டைக்காரன் படம் எப்படி?
பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என அல் கொய்தா பலருக்கு எஸ்.எம்.எஸ். அளித்திருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.

5. பி.எஸ்.என்.எல்- இங்கே என்ன பிரச்சனை(பாராளுமன்றத்தில் அறிக்கை)
பதில்: இந்தச் செய்தி பற்றி கேட்கிறீர்களா? சந்தையில் அதனுடைய பங்கை திட்டமிட்டே அழிக்கிறார்கள் என நினைக்கிறேன். அரசே அதில் தீவிரமாக ஈடுபடுகிறது. மற்றப்படி நியாயமான போட்டி என்றால் பி.எஸ்.என்.எல். சோடை போகாது.

6. பரவலாய் போலீஸ் என்றாலே பொது மக்கள் மத்தியில் ஒரு வித வெறுப்பு. இது மாறுமா?
பதில்: By definition போலீச்சர், வருமானவரி அதிகாரிகள், கம்பெனிகளில் எச்.ஆர். துறையில் இருப்பவர்கள் ஆகியோரை யாருக்கும் பிடிக்காது. வெறுமனே சகித்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பார்கள்.

7. நடக்கும் கூத்துக்களை பார்த்தால் நம்ம ஜனங்களுக்கு, அவுத்து விட்ட(ஃப்ரீ) ஜனநாயகம் சரிப்பட்டு வராதோ என்ற எண்ணம் ?
பதில்: TINA (There is no alternative) அமுலில் இருக்கும்வரை ஜனநாயகத்தை சகித்து கொள்ள வேண்டியதுதான். மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

8. தமிழகத்தில் பயபக்தியுடன் கடைபிடிக்கப்படும் மகாளயபட்ச விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக சொல்லவும்?
பதில்: இங்கு போய் பார்க்கலாமே.

9. அமெரிக்க பொருளாதாரம் சரி ஆகிவிட்டதா?
பதில்: அப்படி சிம்பிளாக எல்லாம் கூறிவிட இயலாது. அமெரிக்கர்கள் இம்மாதிரி பல பொருளாதார மந்த நிலையை கடந்து வந்துள்ளனர். இப்போதும் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்.

10. அமெரிக்காவில் படிக்க வேண்டும்; அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும்; அமெரிக்க பாய்/கேர்ல் ப்ரண்ட் வேண்டும் எனும் இளைஞர்களின் கனவு மீண்டும்?
பதில்: பல ஆண்டுகளாகக் கண்ட கனவு. அவ்வளவு சுலபத்தில் மறக்காது.

11. அரசின் சலுகைகள் தமிழ் மீடியத்திற்கு பல இருந்தும் ஆங்கில மீடியத்தையே மக்கள் நாடுவதற்கு காரணம் என்ன?
பதில்: தமிழ் மீடியத்துக்கு அரசு சலுகைகளா? எங்கே, எங்கே?

12. படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு ஆசைப்படும் அளவுக்கு அவர்கள் சம்பள விகிதம் உள்ளது உண்மையா?
பதில்: அரசு வேலை என்றால் பாதுகாப்பானது என்னும் எண்ணம் இருக்கும்வரை அதற்கான போட்டி இருக்கத்தான் செய்யும்.

13. அரசு ஊழியரின் பென்ஷன் வருங்காலத்தில் அரசுக்கு பெரும் நிதிச்சுமையாய்விடும் எனும் அரசின் கருத்து பற்றி?
பதில்: முதலில் எல்லாம் 55 வயதிலேயே ஓய்வு பெறுவார்கள். சில ஆண்டு காலம் பென்ஷன் வாங்கிய பிறகு பிராணனை விடுவார்கள். இப்போதெல்லாம் ஆயுட்காலம் எதிர்பார்ப்பு அதிகரிப்பதால் ஒவ்வொருவரும் பென்ஷன் பெறும் காலம் சராசரியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 35 வயதில் ஓய்வு பெற்ற நானே 28 ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் வாங்கி விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இந்த நிதிச்சுமையால் யாராவது நினைக்கலாம் அல்லவா, ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் அந்த அளவுக்கு தண்டச் சம்பளம் குறையும் என்று. அதுதான் இப்போதைய சிந்தனை என எனக்குப் படுகிறது. இல்லாவிட்டால் சிந்துபைரவி படத்தில் பென்ஷன் வாங்கும் பெரிசு கிட்டே ஜனகராஜ் பண்ணும் கலாய்த்தல் போலத்தான் செய்ய வேண்டியிருக்கும்.

14.ஸ்டேட்பாங்க் ஊழியருக்கு மட்டும் பென்ஷன் 3வ்து சலுகையாய் (பணிக்கொடை, ப்ரொவிடெண்ட் பணம், பென்ஷன்) இருப்பதை மற்ற வங்கி ஊழியர்கள் பொறுத்து கொள்ளுவது ஆச்சரியமான ஒன்றுதானே?
பதில்: எனது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது என்னும் பதிவில் கிருஷ்ணமூர்த்தி இட்ட இந்தப் பின்னூட்டத்தை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும்.

ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியின் செல்லப் பிள்ளையாக இருந்த போது, எல்லாவற்றிலுமே கொஞ்சம் அதிகப்படியாகவே[அடுத்தவர்கள் இலையில் இருந்தும்] பெற்றுக்கொண்ட வங்கி. அங்கே மற்ற வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் வருவதற்கு முன்னாலேயே பென்ஷன் சலுகை இருந்தது. அதைக் காட்டி மற்ற வங்கி ஊழியர்களும் கேட்டபோது, பென்ஷன் இரண்டாவது சலுகையாக மட்டுமே வழங்கப்பட்டது. ஸ்டேட் வங்கியைப் போல மூன்றாவது சலுகையாக அல்ல.

அப்போதும் கூட, வலதுசாரி கம்யூனிஸ்ட் சார்பு சங்கம் பென்ஷன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டது என்பதற்காக, இடது சாரி கம்யூனிஸ்ட் சார்பிலான BEFI பென்ஷன் ஒப்பந்தத்தில் அது சொத்தை, இது சொத்தை என்று எதிர்த்துப்பிரச்சாரம் செய்தது. அதை நம்பிய ஏராளமான ஊழியர்கள் நிர்வாகம் தரவேண்டிய PF தொகையை விட்டுக் கொடுத்துப் பென்ஷனை ஏற்க விரும்பவில்லை.

என்னுடைய நினைவில் இருப்பது சரி என்றால், அகில இந்திய ரீதியில் இந்த மாதிரி பி ஃஎப் ஐ விட்டுக் கொடுத்து, பென்ஷன் வேண்டும் என்று ஒப்புக் கொண்டவர்கள் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே. ஒரே ஒரு வங்கியில் மட்டும் இது முப்பத்தைந்து சதவீதம் என்றும் நினைவு.


15. முன்பு தனியார் நிறுவனங்கள் சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விட்டார்களே இப்போது?
பதில்: வாடகைக்கு கிடைக்கலாம், ஆனால் அவRறை வாடகைக்கு எடுப்பதற்கு டப்பு வேண்டாமா? பல இடங்களில் அது தேவையான அளவுக்கு இல்லையே.

16. பொதுவாய் இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே என்ற குற்றச்சாட்டு ஆண்கள் மத்தியில்?
பதில்: இத்தனை ஆண்கள் ஆணாதிக்கத் திமிரில் இருந்தனர். பெண்கள் பல நிர்ப்பந்தங்களால் கட்டுப்பட்டு இருந்தனர். இப்போது ஆணாதிக்கத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். அதனால்தான் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு.

17. அடிக்கடி மருத்துவர்களால் பேசப்படும் கருணைக் கொலை எந்த நாட்டிலாவது சட்ட வடிவில் உள்ளதா?
பதில்: இந்த உரலுக்கு போய் விரிவாக சொடுக்கிப் பார்க்கவும்.

18. நிலவும் சூழ்நிலைக்கேற்ப கருணைக் கொலை அனுமதிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?
பதில்: கடைசி நிலையில் மருந்து எடுத்துக் கொள்ள மறுப்பதை நான் சில இடங்களில் கண்டுள்ளேன். “என்னை அமைதியாக போக விடுங்கள்” என எனது சித்தப்பாவின் பெரிய மாமனார் கூறி, இரண்டே நாட்களில் படுக்கையிலேயே உயிரை விட்டார்.

19. நல்ல தூய பண்பான நட்பின் இலக்கணம் என்ன?
பதில்: ஒருவரை ஒருவர் பாராமலேயே நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழனையும் பிசிராந்தையாரையும் விடவா சிறந்த நண்பர்கள் இருக்கவியலும்? எடுக்கவோ கோக்கவோ எனக்கூறிய துரியனும் அவன் நண்பன் கர்ணனும் சிறன்ம்த நட்புக்கு அடையாளமே. கடைசியாக எவ்வளவு மொக்கைகள் இருப்பினும் தொல்காப்பியன் அபியின் நட்பும் அதே லெவலைத்தான் சேர்ந்தது.

20. பெண்கள் உடுத்தும் உடையில் மடிசார், மாடர்ன் டிரஸ். இதில் பெண்களுக்கு உகந்தது எது? ஏன்?
பதில்: பெண்களையே கேளுங்கள்.

21. நியாயத்தை கொன்று வாழும் மனிதர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும்?
பதில்: தண்டனை அள்க்கும் காலக்கட்டத்தில் அவனது மனசாட்சி தூண்டப்படும். பிறகு அது அவனுக்கு கொடுக்கும் தண்டனையே போதும்.

22. கொண்டாடப்படும் விதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்து ஜெயந்தி ஒப்பிடுங்கள்?
பதில்: இருவர் பிறப்புக்கும் சாட்சி மிகவும் குறைவு. இருவருமே உலகை உத்தாரணம் செய்யப் பிறந்தார்கள். அவர்களது பிறப்பை சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பாகவே கொண்டாடுவார்கள். இரு பண்டிகைகளுமே நம்பிக்கையை தூண்டுபவன.

23. விரிவாய் விளக்குக: மாந்தருக்கு எது மயக்கம்? எது போதை?
பதில்: புகழ் ஒரு மயக்கம், புகழ்ச்சியோ போதை.

24. பொதுவாய் மக்கள் சட்டம் ஒரு கழுதை என ஏன் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?
பதில்: வழக்குகளில் தீர்ப்பெழுதுபவர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் தரலாகாது. பொறுமையாக எல்லா விஷயங்களையும் தரப்புகளையும் ஆராய வேண்டும். அம்மாதிரியான பொறுமை கழுதையிடம் காணப்படுவதாக கருதப்படுகிறது, அவ்வளவுதான்.

25. ஜொலிக்கும் தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பெண் எதனால் ஆபரணம் செய்து அணிந்தாள்?
பதில்: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தகராறு என இருக்கும்போது ஆபரணமாவது ஒன்றாவது. அது சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து விவசாய அடிப்படையில் வாழ்க்கை ஆரம்பித்தபோதுதானே முதலீடாக செல்வம் தேவைப்பட்டது. அதற்குள் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆகவே தங்கத்துக்கு முன்னால் ஆபரணம் வேறு உலோகங்களில் இருந்திருக்குமா? சந்தேகம்தான்.

26. இந்த கலிகாலத்தில் எப்படி அழைத்தால் கடவுள் வருவார்?
பதில்: கீதாஞ்சலியில் தாகூர் கதறுகிறார், “துன்பத்திலிருந்து விடுதலை தா என உன்னிடம் கையேந்தவில்லை, அவற்றால் மனம் பேதலிக்காமல் இருக்கும் அருளைத்தான் யாசிக்கிறேன்” என்று. அந்த அருள் வந்தால் போதாதா? கடவுள் தோன்ற வேண்டி ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

27. நிறைவேறாத உங்கள் நீண்ட நாள் ஆசை?
பதில்: நான் சிறுவனாக இருந்தபோது தெருக்களில் பசங்கள் சக்கரம் செலுத்திக்கொண்டே போவார்கள். அவற்றிலும் சைக்கிள் சக்கரத்தின் ரிம்கள் எல்லோருக்கும் பிரியமானவை. ஒரு குச்சியை அதன் பிளவில் வைத்து அழுத்தி ஓட வேண்டியது. எனக்கு அந்த சான்ஸ் கிடைத்ததே இல்லை. அவ்வாறெல்லாம் சக்கரம் விடும்பசங்கள் ரௌடிகளே என எனக்கு கூறப்பட்டது. ஆனால் இப்போது, என்னைத் தடுக்க யாரும் இல்லைதான். சைக்கிள் சக்கரத்தின் ரிம்மும் கிடைக்கும். ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்தால் பக்கத்து எதிர்வீட்டார்கள் “என்ன ராகவையங்கார் ஸ்வாமி இளமை திரும்புகிறதா” என கோட்டா செய்வார்களே. இந்த ஆசைதான் எனது நிறைவேறாத ஆசை.

28. நிறைவேறிய உங்கள் நீண்ட நாள் ஆசை?
பதில்: வெற்றிகரமாக மொழிபெயர்ப்பு பிராக்டீஸ் நடக்க வேண்டுமென நினைத்தேன். அது நிறைவேறியுள்ளது.

29. சொலவடையாய் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என சொல்வார்களே அதன் விளக்கம்?
பதில்: உன் நான்கு பிள்ளைகளிலேயே மிக நல்லவன் யார் என ஒருவனைக் கேட்டபோது, வீட்டுக் கூரையின் மேலே அதை கொளுத்துவதற்காக நெருப்புப் பந்தம் வைத்திருகிறானே, அவனே என் பிள்ளைகளிலேயே நல்லவன் என்றானாம். எல்லாமே ஒப்பிட்டுச் சொல்லறதுதேன்.

30. அப்போ இலுப்பைப் பூ இல்லாத ஊருக்கு என்ன சொல்லுவார்கள்?
பதில்: வேற ஏதாவது பொருத்தமானதைத்தான் கூறவேண்டும்.

31. மாநிலப் பிரிவினை கோரிக்கைகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரிய சவாலாய் மாறிவிடும் போலுள்ளதே?
பதில்: ஆம், கவலையளிக்கும் விஷயம்தான்.

32. இன்று இரவு 1200 மணி முடிந்ததும் பிறக்கும் 2010-ஐ எப்படி வாழ்த்தி கொண்டாடி என்ன எதிர்பார்ப்புடன் வரவேற்கிறீர்கள்?
பதில்: என் வீட்டுக்கருகிலேயே பட்டாசுகள் வெடிப்பார்கள்.


வெங்கட்
1. I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period.
பதில்: தொடர்ந்து எழுத மூட் வரவேண்டும். அது இப்போதைக்கு இல்லை.


அனானி (26.12.2009 இரவு 08.46-க்கு கேட்டவர்)
1.What is your plan respecting the 2010 new year celebrations.
பதில்: வீட்டிலிருந்தபடியே டிவி நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டியதுதான்.

2. Have you seen the super hit english film avadhar?
பதில்: இல்லை, பார்க்கவில்லை. மொத்தத்தில் படம் பார்ப்பதே குறைந்து விட்டது.

3. Any new decisions for the new year?
பதில்: புத்தாண்டு சபதங்கள் செய்வதில் நம்பிக்கை இல்லை.

4. Any plan of meeting other chennai bloggers on new year day?
பதில்: இதுவரைக்கும் அப்படி ஏதும் ஐடியா இல்லை.

5. What will happen to the world in 2012?
பதில்: அது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் துவங்கி ஒரு திங்கட்கிழமையில் முடிவடையும் என்பதை மட்டும் என்னால் உடனேயே கூற முடியும்.

கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.அரசு நலத்​திட்​டங்​களை பொது​மக்​கள் ​முழு​மை​யா​கப் பயன்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்​: மு.க.ஸ்டா​லின்---திமுகவுக்கு அப்பதானே ஓட்டை போடுவாங்க!

பதில்: முக்கியமா மத்தகட்சிக்கு ஓட்டுப் போடாம இருப்பாங்க.

2. பென்னாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - --காங்-அதிமுக பக்கம் சாயுதா?
பதில்: உடனடி பாதிப்பு பென்னாகரம் மக்களுக்கு. பொங்கல் செலவுக்கு இந்தத் தேர்தலைத்தான் நம்பியிருந்தார்களாம். ஆகவே எரிச்சலில் உள்ளனர்.

3. டிச.30ல் வேலைநிறுத்தம்: தெலுங்கானா ஆதரவு கட்சிகள் முடிவு ---ஆந்திராவை ஒரு வழி பண்ணாமா விடமாட்டாங்களா?
பதில்: இதில பெரிய போட்டியே நடக்குது.

4. காங்கிரஸ் ஒரு தேசியப் புரட்சி: சோனியா - இது நல்ல ஜோக்!
பதில்: தேசீய புரட்டுன்னு சொல்ல நினைத்து வாய் தவறியிருக்கும்.

5. ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - 2012 வரட்டும்!
பதில்: அப்போதும் அதே கும்பல் இருக்கும். யாராவது உலகம் அழியறதை 2022-க்கு தள்ளிப் போடுவாங்களா இருக்கும்.

6. எத்தனை இடையூறுகள் வந்தாலும் பென்னாகரத்தில் பாமக வெற்றி பெறும் ---வானம் ஏறி வைகுண்டமா!
பதில்: ஜாமீன் இழக்காமல் இருப்பதில் வேண்டுமானால் வெற்றி பெறலாம்.

7. ஆந்திர ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்பு-- யாரெல்லாம் வதம் செய்யப்படுவரோ!
பதில்: வதம் செய்யப்பட வேண்டியவர் மாற்றலில் சென்றுவிட்டாரே.

8. சாதிக்க முடியும் என்ற உறுதியோடு மாணவர்கள் படிக்க வேண்டும்- துணைவேந்தர் --மிகச் சரியா சொல்றார்!
பதில்: ஆமாம், அதில் என்ன சந்தேகம்? நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம்.

9. கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதல்:10 பேர் பலி - இவங்க மாறவே மாட்டாங்களா?
பதில்: அடுத்த தற்கொலைப்படைத் தாக்குதல் பெஷாவர்ல வச்சுக்கிறதுதான் அவங்களால ஆன மாற்றமா இருக்கும்.

10. தேர்தல் ஆணைய முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு -சொன்னதை கேட்டதற்கா?
பதில்: தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் பாஜகவுக்கும் என்ன வாய்ஸ் இருக்கிறது?

அடுத்த வாரம் சந்திப்போம். அப்போது கேள்விகளைத் துவக்குவது நக்கீரன் பாண்டியன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

63 comments:

Anonymous said...

கேட்கப்படும் கேள்விகளுக்கு சுவையான பதில் தரும் டோண்டு அவர்களுக்கு நன்றி.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஸார். திருக்குறள் உரை ரசித்தேன்..

வால்பையன் said...

//அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு//

(பையன்)ஆனா, ஆவன்னா ஒழுங்கா சொல்லலைனா அப்பன், ஆத்தால கூப்பிட்டு முகரையில குத்து!

(குரான்ல இப்படி தான் அடைப்புகுறியில அவுங்களா ஒரு அர்த்தம் போட்டுக்குவாங்க! பழகி பழகி எனக்கும் தொத்திகிச்சு!

(அப்ப நானும் நற்குடியா)

வால்பையன் said...

//கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்//

ஸ்ஸ்கூலுக்கு போய் பட்ச்சா என்னாகும்னு வாலுக்கு தெரியும், அதனால தான் அந்தாண்ட போகவேயில்ல!

நற்றாள்-இதுவும் நற்குடி மாதிரி எதாவது ஒரு சொல்லா!?

வால்பையன் said...

//மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.//

பூவ பறிச்சிகினு இல்லாம மானை அடிச்சி சாப்பிடா நிலத்தில(கம்பிக்குள்) நீண்ட நாள் வாழ்வியாமா!

வால்பையன் said...

//வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல//

வேணும்னா கேளு, வேணாடி போ, அதைவிட்டு ஏன் இடுப்புல கைவச்சு நிக்கிற!

வால்பையன் said...

//இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு//

நைட்டுல சரக்கடிச்சிகினு (பைக்குல)போகும் போது மாட்டுனா இறைவன்(போலிஸ்காரன்) இருக்குறதை புடுங்கிகிவான்!

வால்பையன் said...

//பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்//

பொறி வித்தாலும் நல்லா கூவி வித்தா, பொய் சொன்னாலும் ரொம்ப நாளைக்கு இருப்பெ!

வால்பையன் said...

//தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது//

உனக்கு ஒருத்தனை புடிக்கலையா, மனகவலையா இருக்கா, சும்மா கல்லாலெயே அடின்னு சொல்றே!

வால்பையன் said...

//அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது//

அரைவேக்காட்டு பார்ப்பான்(அந்தணன்) கூட கூட்ட சேர்ந்தேனா, கல்ல கட்டிவிட்ருவான், நீந்தி கரை சேர முடியாது அம்புட்டுதான்!

வால்பையன் said...

//கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை//

(வானத்து)கோளு பொறி கூட தராது, குணத்தால பொழச்சுக்கோ,இல்லைனா தலை குணிஞ்சி நிக்கனும்!

வால்பையன் said...

//பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்//

சும்மா நீந்திகிட்டே இருந்தேனா, சாமிகிட்ட(செத்து போயிறுவ) போய் சேர்ந்துருவ!

சாவறது இப்படியெல்லாம் ஐடியா கொடுக்குறாங்களா!?

வால்பையன் said...

//இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது பற்றி?//

நாம வாழனும்னா எத்தனை பேர கொன்னாலும் தப்பில்ல!

வால்பையன் said...

//திமுகவின் அழகிரி வூயூகம் பொதுத்தேர்தலில் செல்லுமா?//

பசை உள்ள அவரை எங்கேயும் போஸ்டர் ஒட்டலாம்!

வால்பையன் said...

/கறுப்பு எம்ஜிஆர் வி.காந்த்தின் கதை இனி?//

சட்டி சுட்டதடா! ”கை”யும் விட்டதடா

வால்பையன் said...

//வேட்டைக்காரன் படம் எப்படி?//

இதெல்லாம் அவர் பார்க்கமாட்டாருன்னு நம்புறேன்!

வால்பையன் said...

//பி.எஸ்.என்.எல்- இங்கே என்ன பிரச்சனை(பாராளுமன்றத்தில் அறிக்கை)//


அரசே பிரச்சனை, நிறுவனத்தில் பிரச்சனை வராதா!?

வால்பையன் said...

//பரவலாய் போலீஸ் என்றாலே பொது மக்கள் மத்தியில் ஒரு வித வெறுப்பு. இது மாறுமா?//

எல்லாத்துக்கும் டாக்டர் மாதிரி வெள்ள கோட்டு கொடுத்து பார்ப்போமா!?

வால்பையன் said...

//நடக்கும் கூத்துக்களை பார்த்தால் நம்ம ஜனங்களுக்கு, அவுத்து விட்ட(ஃப்ரீ) ஜனநாயகம் சரிப்பட்டு வராதோ என்ற எண்ணம் ?//

கூத்து பாக்குறதே யாராவது அவுத்து போட்டு ஆடுவாங்கன்னு தானே!

வால்பையன் said...

//தமிழகத்தில் பயபக்தியுடன் கடைபிடிக்கப்படும் மகாளயபட்ச விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக சொல்லவும்?//

பக்தி ரைட்டு அது என்ன பயம்!
நீங்க சோறு தின்னாம இருந்தா சாமிக்கு என்னாயா ஆகப்போவுது!
நீங்க திருந்த போறதில்ல!

வால்பையன் said...

//அமெரிக்க பொருளாதாரம் சரி ஆகிவிட்டதா?//

எவனாவது சிக்காமயா போயிருவான்!

பல தடவ கடந்துச்சாம்ல, எல்லா தடவையும் எவனவாது ஒருத்தன் மொட்டையடிக்கபடுவான்!

வால்பையன் said...

//அமெரிக்காவில் படிக்க வேண்டும்; அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும்; அமெரிக்க பாய்/கேர்ல் ப்ரண்ட் வேண்டும் எனும் இளைஞர்களின் கனவு மீண்டும்?//


1950 க்கு முன்னாடி வெள்ளைகாரன்னா லண்டன், இப்பெவெல்லாம் வெள்ளைகாரன்னா அமெரிக்காகாரன் தான்!

வால்பையன் said...

//அரசின் சலுகைகள் தமிழ் மீடியத்திற்கு பல இருந்தும் ஆங்கில மீடியத்தையே மக்கள் நாடுவதற்கு காரணம் என்ன?//

மனுசனுக்கு கவர்ச்சி பொருள்கள் மேல் தான் நாட்டம் அதிகம்!

வால்பையன் said...

//படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு ஆசைப்படும் அளவுக்கு அவர்கள் சம்பள விகிதம் உள்ளது உண்மையா?//

நிரந்தரம் என்னும் மாயை தான்!

வால்பையன் said...

//அரசு ஊழியரின் பென்ஷன் வருங்காலத்தில் அரசுக்கு பெரும் நிதிச்சுமையாய்விடும் எனும் அரசின் கருத்து பற்றி?//


நோட்டு அடிக்க மிஷின் இருக்கும் போது நிதிச்சுமையா! ஒரே தமாசு!

வால்பையன் said...

//முன்பு தனியார் நிறுவனங்கள் சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விட்டார்களே இப்போது?//

இப்போதும் கிடைக்கும் என்று நண்பன் சொன்னான்! சரியான வாடிக்கையாளர்கள் கிடைக்காததால் பல நிறுவனக்கள் மூடி விட்டார்களாம்!,

வால்பையன் said...

//பொதுவாய் இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே என்ற குற்றச்சாட்டு ஆண்கள் மத்தியில்?//

அவுங்களையெல்லாம் மிதிக்காம விட்டதுக்கே சந்தோசப்படனும்!

வால்பையன் said...

//நல்ல தூய பண்பான நட்பின் இலக்கணம் என்ன?//

நல்ல, தூய, பண்பெல்லாம் எதிர்பாராமல் இருப்பது!

வால்பையன் said...

//பெண்கள் உடுத்தும் உடையில் மடிசார், மாடர்ன் டிரஸ். இதில் பெண்களுக்கு உகந்தது எது? ஏன்?
பதில்: பெண்களையே கேளுங்கள். //

இதே பதை தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன்!

வர வர வேவ்லெந்த் கிட்டக்க ஓடுது!

வால்பையன் said...

//நியாயத்தை கொன்று வாழும் மனிதர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும்?//

அப்படி பார்த்தா, அப்படிபட்ட மனிதனை படைத்த கடவுளுக்கு தான் முதல் தண்டனை கொடுக்கனும்!

நாய அடிப்பானேன், பீய சுமப்பானேன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா, ஏன் அப்படி ஒரு ஆளை படைப்பானேன், பின் தண்டனை கொடுப்பானேன்!

சரியான முட்டா கடவுளய்யா!

வால்பையன் said...

//கொண்டாடப்படும் விதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்து ஜெயந்தி ஒப்பிடுங்கள்?//

ஜெயந்திய வேணும்னா கொண்டாடலாம்!

வால்பையன் said...

//விரிவாய் விளக்குக: மாந்தருக்கு எது மயக்கம்? எது போதை?//

மாந்தர்னா மனிதர்களா!?
அவுங்களுக்கு எல்லாமே மயக்கம் தான், எல்லாமே போதை தான்!

வால்பையன் said...

//பொதுவாய் மக்கள் சட்டம் ஒரு கழுதை என ஏன் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?//

இப்போ தான் கேள்வி படுறேன், முந்தியெல்லாம் கழுதைகிட்ட கேட்டு தான் தீர்ப்பு சொல்லுவாங்களோ!?

வால்பையன் said...

//ஜொலிக்கும் தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பெண் எதனால் ஆபரணம் செய்து அணிந்தாள்?//

மரம், மட்டை எல்லாமே ஆபரனங்கள் தான்!
முதல் ஆபரணம் இலை என்றால் நம்பவா போகிறீர்கள்!

வால்பையன் said...

//இந்த கலிகாலத்தில் எப்படி அழைத்தால் கடவுள் வருவார்?//

ஒரு கையையும், ஒரு காலையும் தரையில் ஊன்றி, மறு காலை வலப்புறமும், கையை இடப்புறமும் உயர்த்தி, மூக்கால் முதகை தொட்டு, எச்சில் படாமல் கைமுட்டியில் நக்கி கடவுளே என்றால் வந்துவிடுவார்!

வால்பையன் said...

//நிறைவேறாத உங்கள் நீண்ட நாள் ஆசை?//


குழந்தையா இருக்கச்சே கோவா போனும்னு ஆசைபட்டாராம்! திரும்பவும் குழந்தையும் ஆகமுடியாது, ஆசையும் நிறைவேறாது!

வால்பையன் said...

//நிறைவேறிய உங்கள் நீண்ட நாள் ஆசை?//

இன்னும் நீண்ட நாள் இருப்பாரு, அதுகுள்ள ஆசைகள் மாறலாம்!

வால்பையன் said...

//சொலவடையாய் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என சொல்வார்களே அதன் விளக்கம்?//

சிகரெட் இல்லாட்டி பீடி,
எம்.சி இல்லாட்டி மானிட்டர்!
அந்த மாதிரி தான்!

வால்பையன் said...

//அப்போ இலுப்பைப் பூ இல்லாத ஊருக்கு என்ன சொல்லுவார்கள்?//

சக்கரையே இல்லாமல் சாப்பிடுவார்கள்!
நான் சின்ன வயசுல சிகரெட் பீடி குடிக்காம இருந்தேன்ல அதுமாதிரி!

வால்பையன் said...

//மாநிலப் பிரிவினை கோரிக்கைகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரிய சவாலாய் மாறிவிடும் போலுள்ளதே?//

இல்லாட்டி முன்னேத்திட்டு தான் மறுவேலை நம்ம அரசியல்வாதிகளுக்கு!

hiuhiuw said...

யப்பா குறளோவியம்!

சரி தல . எதுனா பலான மேட்டர் குறள்ள இறந்து எட்து உடு !

வால்பையன் said...

//இன்று இரவு 1200 மணி முடிந்ததும் பிறக்கும் 2010-ஐ எப்படி வாழ்த்தி கொண்டாடி என்ன எதிர்பார்ப்புடன் வரவேற்கிறீர்கள்?//

சரக்கடிச்சு மட்டையாக வேண்டியது தான்! அப்ப தான் இந்த வருசம் பூரா நல்லா குஜாலா இருக்கும்!

வால்பையன் said...

//I see only 6 posts under your 'Nehru Legacy' folder. Where can i find the rest? Indra's 1975-1983 time period./

இதுக்கும், இதன் கீழிருக்கும் பீட்டருக்கும் கடும் கண்டனங்கள், எனக்கு தெரிஞ்ச மொழியில கேள்வி கேளுங்கப்பா!

வால்பையன் said...

//அரசு நலத்​திட்​டங்​களை பொது​மக்​கள் ​முழு​மை​யா​கப் பயன்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்​://

”பொது”வா கலைஞர் தம் ”மக்களை” முன் நிறுத்தி தான் பேசுவார்!

வால்பையன் said...

//பென்னாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - --காங்-அதிமுக பக்கம் சாயுதா?//


அதிமுகன்னு ஒரு கட்சி இன்னும் களத்தில் இருக்கா!?

வால்பையன் said...

//டிச.30ல் வேலைநிறுத்தம்: தெலுங்கானா ஆதரவு கட்சிகள் முடிவு ---ஆந்திராவை ஒரு வழி பண்ணாமா விடமாட்டாங்களா?//

சேதாரம் இல்லாம நல்ல நகை செய்ய முடியாதுன்னு ஒரு தத்துவஞானி சொல்றாரு!

வால்பையன் said...

//காங்கிரஸ் ஒரு தேசியப் புரட்சி: சோனியா - இது நல்ல ஜோக்!//

புரட்சின்னா என்னானு கேளுங்க முதல்ல!

வால்பையன் said...

//ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் - 2012 வரட்டும்!//

வாசலை கொண்டு போய் அங்கயா வச்சிருக்காங்க!?

வால்பையன் said...

//எத்தனை இடையூறுகள் வந்தாலும் பென்னாகரத்தில் பாமக வெற்றி பெறும் ---வானம் ஏறி வைகுண்டமா!//

வைத்தியர் நல்ல நகைச்சுவையாளர்!

வால்பையன் said...

//ஆந்திர ஆளுநராக நரசிம்மன் பொறுப்பேற்பு-- யாரெல்லாம் வதம் செய்யப்படுவரோ!//

கேமரா இருக்கானு முதல்ல செக் பண்ணுவார்!

வால்பையன் said...

//சாதிக்க முடியும் என்ற உறுதியோடு மாணவர்கள் படிக்க வேண்டும்- துணைவேந்தர் --மிகச் சரியா சொல்றார்!//

அதுக்காக டொனேஷன் கொடுக்க மறந்துறகூடாது!

வால்பையன் said...

//கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதல்:10 பேர் பலி - இவங்க மாறவே மாட்டாங்களா?//

ஏன் மாறனும்!
அவனை மாறச் சொல் நானும் மாறுறேன்பான்!

அவர்கள் கடவுளின் குழந்தைகள் அதை தான் செய்வார்கள்!

வால்பையன் said...

//தேர்தல் ஆணைய முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு -சொன்னதை கேட்டதற்கா?//

நானும் இங்க ஒருத்தன் இருக்கேன்னு வேற எப்படி காட்டுறதாம்!

வால்பையன் said...

//சரி தல . எதுனா பலான மேட்டர் குறள்ள இறந்து எட்து உடு ! //

குறளே பலானது தானே! தனியா என்ன நான் சொல்றது!

hiuhiuw said...

அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது ! அவரு சிலுவைய தூக்கி தலைல அடிச்சிடப் போறாரு

வால்பையன் said...

//அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது ! அவரு சிலுவைய தூக்கி தலைல அடிச்சிடப் போறாரு //


தலை நான் அம்பு வுட்டு தப்பிச்சுகுவேன்! இல்லனா துப்பாக்கி எடுத்து டுபிக்கிபியா, டுபிக்கிபியா ன்னு சுட்ருவேன்!

வால்பையன் said...

//
அவரு பாரின் பிகருக்கே மயங்காத மலைப் பாம்பாம் !
நெறைய மகுடிங்க மல்லாக்க விழுந்திருக்கு //

அந்த வகையில பாராட்டனும்!

hiuhiuw said...

// டுபிக்கிபியா, டுபிக்கிபியா ன்னு சுட்ருவேன்!

//

அது யாரு டுபிக்கிபியா ? வள்ளுவரின் செகண்ட் சேனலா

வால்பையன் said...

கடைசி பின்னூட்டம் மாறி வந்துருச்சு!

Madhavan Srinivasagopalan said...

'தமிழ்' தன்னாலத்தான் வாழ்ந்துகொண்டு இருப்பதாக நினைத்துகொண்டிருக்கும், இன்றைய 'தமிழ் தாத்தா' அவர்கள், திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரம் பாடியுள்ளார் எனத் தெரிந்தும் கடவுள் இல்லவே இல்லை என சொல்லி வாழ்கையை ஒட்டிகொண்டிருப்பது பற்றி?

வால்பையன் said...

//திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரம் பாடியுள்ளார் எனத் தெரிந்தும் கடவுள் இல்லவே இல்லை என சொல்லி வாழ்கையை ஒட்டிகொண்டிருப்பது பற்றி? //

நல்லா கேளுங்க தல, அப்பையாவது புத்தி வருதான்னு பார்ப்போம்!

Anonymous said...

1.Will there be any solution to save BSNL in the meeting convened by the Hon.P.M of india on 6.1.2010?
2.The private operators will increase the cell phone tariff if the bsnl is not in the market. Is it true or not?
3.Will the private operators run services in rural sector, which incur heavy loss to govt owned company?
4.There are so many cases reported about the non payment of dues(IUC,ADC) to Bsnl by the pvt operators. What is your opininon?
5.Do you agree that the cell phone tariff has come down only after BSNL started cell services?

Ramanujam

Anonymous said...

1.Will there be any solution to save BSNL in the meeting convened by the Hon.P.M of india on 6.1.2010?


PM forms committee to arrest BSNL's falling revenues: Concerned over deteriorating financial health and competitiveness of state-run telecom firm BSNL, the government has constituted a high-level committee, headed by Sam Pitroda and Deepak Parekh as member, Telecom Secretary P J Thomas as other member, to look into the issues and give recommendations within a month.(ET)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது