12/08/2009

காதோடுதான் நான் பேசுவேன்

மொழிபெயர்ப்பு பலவகைப்படும்.

அவை எழுத்து மற்றும் பேச்சு மொழிபெயர்ப்பு ஆகும். பேச்சு மொழி பெயர்ப்பையும் இருவகையாக பிரிக்கலாம். ஆய்வரங்கங்களில் கட்டுரை சமர்ப்பிப்பவர்கள் ஒரு மொழியில் பேசப் பேச அதை அதே நேரத்தில் தனியாக கூண்டுகளில் அமர்ந்திருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் மாற்றுவார்கள். இதை simultaneous interpreting என்பார்கள். பார்வையாளர்களிலிருந்து யாரேனும் ஒருவர் தனது மொழியில் கேள்வி கேட்டால் அதை சம்ப்ந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பேச்சாளரின் மொழிக்கு அதே நேரத்தில் மாற்றுவர்.

ரொம்பவும் கஷ்டமான வேலை. தாவு தீர்ந்து விடும். ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக வேலை செய்யவியலாது. ஆகவே ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் குறைந்த படசம் ஒரு மாற்று மொழிபெயர்ப்பாளர் உண்டு. முறை வைத்து அவர்கள் வருவர்.

அதே சமயம் ஒரு பார்வையாளர் தனக்காக பிரத்தியேகமாக ஒரு மொழி பெயர்ப்பாளரை தன்னருகில் அமர செய்யலாம். அவர் இவருடைய காதில் ரகசியமாக மொழிபெயர்க்க வேண்டும், ஏனெனில் அருகில் இருக்கும் மற்ற பார்வையாளர்களுக்கு தொந்திரவு கூடாது என்பதால். இதை ஆங்கிலத்தில் whispered interpreting என்றும், பிரெஞ்சில் chuchotage என்றும் கூறுவார்கள். தமிழில்? காதோடு ரகசிய மொழிபெயர்ப்பு என்று கூறலாம். இப்பதிவின் தலைப்பு இப்போது புரியும் என நினைக்கிறேன்.

இப்போது ஏன் இதையெல்லாம் சொல்லறே என்று கேட்கும் முரளிமனோகருக்கும் அதே கேள்வியை வைத்திருக்கும் வாசகர்களுக்கும் இப்பதிவின் பின்புலனைக் கூறுகிறேன். இது பற்றி நான் எனது ஆங்கில வலைப்பூவில் ஏற்கனவேயே The present Miss France is future interpereter என்று பதிவு போட்டுள்ளேன். 


இப்போது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைத் தருகிறேன்.

நமது சக பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் லோறான் அவர்கள்தான் இந்த நல்ல செய்தியை கொண்டு வந்தது.

பிரெஞ்சு தெரிந்தவர்களுக்கென்ன, அங்கேயே போய் படித்துக் கொள்ளட்டும். ஆனால் நான் மற்றவர்களுக்காக அதை தமிழில் கீழே தருகிறேன். 


எல்லோரும் கேளுங்கப்பூ, ஒரு பிரத்தியேகத் தகவல் உங்களுக்காக! உங்கள் ஊழியன் லோறானாகிய நான் ஒரு சனிக்கிழமை மாலையையே இந்த கலாச்சார ஒளிபரப்புக்காக செலவழித்தேன் என்றால் மிகையாகாது. இப்போது முன்கூட்டியே ஒரு சூடான செய்தி. இப்போதுதான் மிஸ் ஃபிரான்ஸாக தெரிவு செய்யப்பட்டவர் ஒரு வருங்கால துபாஷியாம்!

சுடச்சுட செய்தி: மாலிகா மெனாற், நார்மண்டியைச் சேர்ந்த இப்பெண் (அவரை யாரும் நார்மண்டி பசுவுடன் ஒப்பிட மாட்டார்கள்) Miss France 2010 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 22. அவர் இப்போது Caen நகரில் licence course in Applied Foreign Languages (Licence L.E.A.), ஆங்கிலம்-இத்தாலிய மொழியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறாராம். (ம்ம், லோறானுக்கு அவனது சிறுவயது ஞாபகங்கள் வருகின்றன). அவரது நோக்கம் conference interpreter ஆக வருவதே.


அவரைப் போன்ற ஃபிகர், காதோடு பேசும் மொழிபெயர்ப்பை செய்தால் வாடிக்கையாளர்கள் வாணாம்னா சொல்லுவாங்க!


மீண்டும் டோண்டு ராகவன். திடீரென நார்மண்டி பசு பற்றி ஏன் பேச வேண்டும் என நீங்கள் குழம்பலாம். பிரெஞ்சு தெரியாதவர்களுக்கு அது ஒரு சிறு புதிரே. விஷயம் என்னவென்றால் இது பிரெஞ்சில் ஒரு அற்புதமான சொல் விளையாட்டு. பிரெஞ்சு மொழியில் அந்த வாக்கியத்தை முதலில் பார்ப்போம். 



"Malika Menard, une Normande qui n'a rien d'une vache, a été élue Miss France 2010". 


நானும் இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது சற்றே தடுமாறினேன். உடனே word reference forum-க்கு சென்று எனது சகமொழிபெயர்ப்பாளர்களிடம் இந்தக் கேள்வியை வைத்தேன். . 

அக்கேள்வியையும் அதற்கான பதில்களையும் இங்கே பார்க்கலாம். இங்குதான் நான் நார்மாண்ட் என்பது நார்மாண்டி பெண்ணையும், அதே பெயரில் உள்ள பசு இனத்தையும் குறிக்கும் என அறிந்து கொண்டேன்.

மொழிபெயர்ப்பில் பசுவை ஏன் இழுத்தேன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பிறகு சம்பந்தப்பட்ட பிரெஞ்சு வலைப்பதிவரது இடுகைக்கும் சென்று, அவரிடமும் இதை குறிப்பிட்டு அந்த மன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அவ்வாறே செய்தார். அவருக்கு என் நன்றி. அவர் கூறியது கீழே.


"அந்த பிரெஞ்சு பதிவை இட்டவன் நானே. பிறகு ராகவன் என்னைத் தொடர்பு கொண்டு இங்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அப்பெண்மணியை பரிகசிக்கும் எந்த எண்ணமும் எனக்கில்லை. அவர் நார்மாண்டியைச் சேர்ந்தவர் ஆனாலும் அவர் நார்மாண்டி பசு மாதிரி இல்லை என வேடிக்கையாக மட்டும் குறிப்பிட்டேன் அவ்வளவே (நண்பர் நிகோமோன் இதை நன்றாகப் புரிந்துக் கொண்டார்).

பை தி வே, எனது இந்த இடுகையில் ஒரு தகவல் பிழை வந்து விட்டது. துபாஷியாக வர ஆசைப்படுவது புதிய Miss France அல்ல. அவ்வாறு எண்ணுவது அழகிப் போட்டியில் ஆறவது இடத்தில் வந்த Miss Côte d'Azur (மிஸ் பிரெஞ்சு ரிவியரா).




ஓக்கே, ஓக்கே, மிஸ் பிரெஞ்சு ரிவியரா காதோடு பேசினால் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு கசக்குமா என்ன எனக் கேட்பது 63 வயது இளைஞன் டோண்டு ராகவன். :)))


Regards,
N. Raghavan

13 comments:

வால்பையன் said...

பக்கத்துல உட்கார்த்தாலே போதும்னு சொல்லுங்க!
காதுல வேற கிசுகிசுக்கனுமாக்கும்!

dondu(#11168674346665545885) said...

உட்கார்ந்தா போதாது. காதோடு பேசறதுதான் முக்கியமான வேலையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//உட்கார்ந்தா போதாது. காதோடு பேசறதுதான் முக்கியமான வேலையே.//

ரொம்ப ஜொள்ளுனா காதோட கடிச்சு எடுத்துற மாட்டாங்களா!?

dondu(#11168674346665545885) said...

மாட்டாங்க. பை தி வே நானே காதோடு பேசி ஒரு கான்ஃபரன்ஸில மொழி பெயர்த்திருக்கேன், கடந்த 2000 ஆண்டில் காமரூனிலிருந்த வந்த ஒரு பெண்மணிக்கு (40 வயது அவருக்கு)

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//மாட்டாங்க. பை தி வே நானே காதோடு பேசி ஒரு கான்ஃபரன்ஸில மொழி பெயர்த்திருக்கேன், கடந்த 2000 ஆண்டில் காமரூனிலிருந்த வந்த ஒரு பெண்மணிக்கு (40 வயது அவருக்கு)//

நல்லவேளை காது தலையில் இருக்கிறது!

:)

Anonymous said...

@ Vaal:

Telugu - Kadhu - means NO. You need to know - French Kadhu - where it is!! .. :)))))

வன்பாக்கம் விஜயராகவன் said...

"ஆறவது இடத்தில் வந்த Miss Côte d'Azur (மிஸ் ஐவரி கோஸ்ட்)."

இது இரண்டும் வேற. Côte d'Azur பிரான்சின் கடலோரப்பகுதி. ஐவரி கோஸ்ட் ஆப்பிரிக்க நாடு.

விகி படி

"The Côte d'Azur, often known in English as the French Riviera, is the Mediterranean coastline of the south eastern corner of France, extending from Menton near the Italian border in the east to either Hyères or Cassis in the west."


விஜயராகவன்

பெசொவி said...

ஏன் ரெண்டு பெரும் அடிச்சுக்கிறீங்க? ஒரு அழகான பொண்ணை என் பக்கத்தில் உக்காரவச்சுட்டு அப்புறம் பாருங்க, அந்தப் பொண்ணு என் காதுல ரகசியம் பேசினப்புறம், ரிசல்டப் பாருங்க.

dondu(#11168674346665545885) said...

@விஜயராகவன்
நன்றி விஜயராகவன் அவர்களே. Côte d'Azur-ஐ Côte d'Ivoire-உடன் குழப்பிக் கொண்டேன். பதிவையும் தேவைக்கேற்றபடி திருத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.உலகிலயே அழகிய பெண்களைக் கொண்ட நாடு நம் நாடா?
2.பகல் தூக்கம் போடுகிறவர்களை பற்றி?
3.தமிழ் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள் இருந்தும், "பலான' படங்கள் இன்னும் வருகின்றனவே.இது எப்படி?
4.பொதுவாய் வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையா?
5.உலகில் உண்மையான பொதுநலவாதி யார்?

Anonymous said...

கேள்விகள்: (கடந்த சில வாரங்களாக பல்வேறு பிரச்னைகள், அதனால் பதிவுகள் பக்கம் வரமுடியவில்லை எனவே கேள்விகளும் இல்லை).

எம்.கண்ணன்

1. எங்கே பிராமணன் - 2ஆம் பாகம் திங்கள் (டிசம்பர் 14 முதல்) - கதையை எப்படி கொண்டு செல்வார் சோ ? உங்கள் யூகம் என்ன ?

2. பூணூல் போடாத பிரபலங்கள் என விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் சில பிரபலங்களை சுட்டியுள்ளார்.(ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி) அவர் சொல்லியுள்ள காரணம் அவருக்குப்(ரவிபிரகாஷுக்கு) பொருந்தலாம். ஆனால் மற்ற பிரபலங்கள் ? http://vikatandiary.blogspot.com/2009/11/blog-post_30.html

3. ஆந்திரா - தெலுங்கானா பிளவு பற்றி உங்கள் கருத்து என்ன ? இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் பிளவுகள் வந்தால் நாடு என்னாகும் ?

4. ஜூன் வரை வெயிட்டீஸ் என்கிறார் கருணாநிதி. குடும்ப உறுப்பினர்களின் தொல்லை மிக அதிகமாகிவிட்டதோ ?

5. பாமக நிறுவனர் ராமதாசின் மீதான கொலைவழக்கில் அவர் விடுவிப்பு - மீண்டும் மஞ்சள் துண்டு போர்த்தும் படலமா ?
(http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=4&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=11-12-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00402&publabel=TOI)

6. டிசம்பர் சீசன் துவங்கிவிட்டதே. கச்சேரிகளுக்கு கூடிப் போகச் சொல்லி வீட்டம்மாவின் தொந்தரவு கிடையாதா ?

7. இந்த வருடம் சென்னையில் குறைந்த மழை - கோடையில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருமா ?

8. லண்டனின் தேம்ஸ் நதி போல கூவத்திலும் படகில் செல்லும் பாக்கியம் நமது வாழ்நாளிலாவது கிட்டவேண்டும் என ஸ்டாலின் மெனெக்கெடுவது போல தெரிகிறதே ? சாத்தியம் தானா ?

9. குருவி, வில்லு, வேட்டைக்காரன் - எது பார்த்தால் தலைவலி குறையும் அல்லது கூடும் ? (3 படப் பெயர்களுக்கும் தொடர்பு இருப்பது போல உள்ளதே ?) சன் டிவி குழுமத்தில் அடாவடிகளால் இனிமேல் விஜய் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பாரா ? இல்லை வேட்டைக்காரன் விளம்பரத்திற்காக தொடர்ந்து பல ஊர்களிலும், தியேட்டர்களிலும் வந்து ரசிகர்களுக்கு கை அசைக்க வைக்கப்படுவாரா ?

10. புதிய தலைமுறை பத்திரிக்கை - யாருடையது ? சன் குழுமமா ? இல்லை வேறு யாராவதா ? எப்படி 5 ரூபாய்க்கு விற்க முடிகிறது? அதுவும் இவ்வளவு டிவி விளம்பரங்களுடன் ?

வால்பையன் said...

இந்த வாரம் கேள்வி பதில் இல்லையா!?

அடுத்த வாரத்துகான கேள்வி!

மோடி பூணூல் போடாத பார்ப்பனா?
http://timesofindia.indiatimes.com/india/Vibrant-Gujarat-98-Dalits-have-to-drink-tea-in-separate-cups/articleshow/5312335.cms

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
கேள்விகள் ஒன்றும் வரவில்லை. ஆகவே பதிவு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது