பிரகாஷ் காரத்தை கே.பி. சுனில் கண்ட பேட்டியின் ஒன்பது வீடியோக்கள்
பிரகாஷுக்கு தமிழ் தெரியாததால் வேறு வழியின்றி பேட்டி ஆங்கிலத்திலேயே நடந்தது.
தன் அறிமுக உரையில் சுனில் அரசியலில் இரு துருவங்களாக செயல்படும் பாஜகாவும் சிபிஐ மார்க்சிஸ்டும் ஒன்று சேர்ந்து செயல்பட 1,76,000 கோடி அளவில் மோசடி செய்யப்பட வேண்டியிருந்தது எனக் கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கும்மேலாக நடந்து வரும் இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தை காரத்தின் கட்சி எப்போது உணர்ந்தது என சுனில் கேட்க, 2007-ன் இறுதியிலேயே அதை உணர்ந்ததாகவும், 2008 பிப்ரவரில் அக்கட்சியின் ராஜ்யசபா தலைவர் பிரதமருக்கு இது பற்றிக் கடிதம் எழுதியதாக காரத் கூறுகிறார். தங்கள் கட்சி நஷ்டத்தின் அளவை மதிப்பிட்டதின் அடிப்படையையும் கூறுகிறார். இருப்பினும், தலைமை தணிக்கை அதிகாரியின் ரிப்போர்ட் வந்ததும்தான் நிலையே சூடு பிடித்தது என சுனில் சுட்டிக் காட்டுகிறார்.
பிறகு நான் மேலே அவரது அறிமுக உரை சம்பந்தமாகக் குறிப்பிட்ட விஷயத்தை சுனில் தொட, காரத்தோ இவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடந்தால் எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பதில் ஒன்றாவது ஒன்றும் புதிது இல்லை எனக் கூறுகிறார். அரசும் பாராளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க மறுப்பதில் தீவிரமாக இருப்பதை சுட்டிக் காட்டிய சுனில் அரசின் மோட்டிவேஷன் பற்றி கேள்வி கேட்கிறார்.
அரசு சிபிஐயிடம் கேஸை ஒப்படைத்து ஓராண்டுக்குன் மேல் ஆகியும் பலன்கள் லேது. பாராளுமன்ற கூட்டுக்குழுவால்தான் மொத்தமாகப் பார்க்க இயலும். சிஏஜியோ பப்ளிக் அக்கௌண்ட்ஸ் கமிட்டியோ எல்லா விஷயங்களையும் தொட முடியாது என்றும் காரத் கூறுகிறார். இருப்பினும் ஏன் அரசு பிடிவாதமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுக்க வேண்டும் என்பதற்கு காரத் இதை அரசு தரப்பிலிருந்து ஒரு damage limiting exercise ஆகவே பார்க்கிறார். ராசாவின் ராஜினாமாவுக்கு பிறகு விவகாரத்தை பூசிமொழுகவே அரசு நினைக்கிறது என்கிறார் அவர்.
ஜேபிசி மட்டுமே போதாது, அரசு நிலைமையை கட்டுக்கு கொண்டு வரவும், 1,76,000 கோடி ரூபாயை திரும்பப் பெற வேண்டும் என காரத் கூறுகிறார். முதல் ஸ்டெப்பாக ட்தவறான முறையில் அளிக்கப்படும் லைசன்சுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது விசாரணையை உத்தேசித்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என ஆலோசனை தருகிறார். இந்த விஷயத்தில் ஜேபிசியும் உதவ முடியும் என்கிறார். கூடவே வெளியே சென்ற பணத்தையும் ட்ரேஸ் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக ராடியா டேப்புகளும் பிக்சருக்கு வந்தன.
டெலிஃபோன்களை ஒட்டுக் கேட்பது சரியா தவறா என்றும் கேள்வி எழுந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களது போன்களை ஒட்டுக் கேட்பதை காரத்தின் கட்சி முன்னால் ஆட்சேபித்தது. ஆனால் ராடியா டேப்பில் வெளியான விவரங்கள் ஏற்கனவேயே சிபிஐக்கு தெரிந்தாலும் அது ஏன் செயல்படவில்லை என சுப்ரீம் கோர்ட் கேட்பதற்கும் இந்த டேப்புகள் வழிவகை செய்துள்ளன என காரத் கூறுகிறார். ஆகவே இந்த விஷயத்தில் ஒட்டுக் கேட்டலை அவர் ஆதரித்தார் என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த விஷயத்தில் பாராளுமன்றம் முடக்கப்படுவது தவிர்க்க இயலாது என காரத் கூறினார். போஃபோர்ஸ் விவகாரத்தில் 45 நாட்கள் பாராளுமன்றம் முடக்கப்பட்டது பற்றி இத்தருணத்தில் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஜேபிசி கவர் செய்ய வேண்டிய காலகட்டம் 1998-லிருந்து கூட இருக்கலாம் என எதிர்க்கட்சிகள், பிஜேபி உட்பட, ஒத்துக் கொண்டதையும் காரத் சுட்டிக் காட்டினார்.
கருணாநிதி ராசா தலித் என்னும் விஷயத்தை வைத்து விளையாடுவது பற்றி பேச்சு வர, காரத் அது ஒரு நொண்டிச் சாக்கு எனக்கூறி, அதைப் புறந்தள்ளினார்.
ராடியா டேப்புகள் பற்றி மீண்டும் குறிப்பிடுகையில் மந்திரி சபை அமைக்கும் விஷயத்தில் பெரு முதலாளிகள் மூக்கை நுழைப்பது பற்றியும், இது தனியார்மயமாக்கப்படாதாலும் வந்த விஷய்மா எனக் கேள்வி கேட்கப்பட்டது. காரத்தோ, அரசியல் கட்சிகளே தனியார்மயமாக்கபபட்டு விட்டதாகக் கூறினார்.
சுப்ரீம் கோர்ட் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிடுவது மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் இந்த விஷயங்களில் அது தவிர்க்க முடியாதது என காரத் கூறினார்.
இனிமேல் நடக்கப் போவது பற்றி பேசுகையில் அரசு இதை பூசிமொழுக முயற்சி செய்யலாம் என்பதை சுனில் மற்றும் காரத் இருவருமே ஒத்துக் கொண்டனர்.
இந்த ஊழலில் திமுக தான் ஈட்டிய பணத்தை வைத்து வரும் தேர்தலில் ஜெயிக்க முயலுமா என சுனில் கேட்க, அப்பணம் ஏற்கனவேயே 2008, 2009-ல் நடந்த தேர்தல்களில் ஒரு பகுதி செலவாகி விட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். இது கவலையளிக்கும் விஷயம் என்றும் இதை மக்களாக விழிப்புடன் இருந்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுனில் நன்றி தெரிவிக்க, பேட்டி முடிவுக்கு வந்தது.
என் தரப்பிலிருந்து இன்னும் குறையாக இருப்பது காங்கிரஸ் இந்த விவகாரத்தில் கொள்ளை அடித்தது பற்றி இருவருமே பேசவில்லை.
ஞாநி பேட்டிக்கான பதிவில் நான் எழுதியதை சற்றே மாடிஃபை செய்து எழுதுகிறேன்.
காங்கிரசுக்கும் ஊழல் பணத்தில் பங்கு போயிருக்கும் என்னும் எண்ணத்தைக் கூட வெளியிடாது சுனிலும் காரத்தும் பூசி மெழுகியது ஆயாசத்தையே வரவழைக்கிறது. அதிமுக வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேரும் வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது என்பதற்காகவே ஜெயா டிவி அடக்கி வாசித்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் காரத்துக்கு என்ன கம்பல்ஷன் அதை மறைப்பதில்?
சரி, சரி. அடுத்த பேட்டி சுப்பிரமணிய சுவாமியினுடையது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
15 hours ago
5 comments:
பல இடங்களில் குண்டு வைத்தது பத்தாதென்று இந்துக்களின் புனிததலமான காசியிலும் குண்டு வைத்து அப்பாவி குழந்தையைக் கொன்ற மனித மிருகங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
www.hayyram.blogspot.com
//காங்கிரசுக்கும் ஊழல் பணத்தில் பங்கு போயிருக்கும் என்னும் எண்ணத்தைக் கூட வெளியிடாது சுனிலும் காரத்தும் பூசி மெழுகியது ஆயாசத்தையே வரவழைக்கிறது.// இதைத்தான் சோ அவர்கள் சூசகமாக தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். ராஜாவின் தைரியத்திற்கு தி மு க வையும் விட யாரோ ஒருவர் தன்னைக் காப்பார் என்ற எண்ணமே காரணம். அந்த யாரோ ஒருவர் யார் என்பதும் வெளியே வரவேண்டும் என்றார். வருமா?
Good presentation
// hayyram said...
பல இடங்களில் குண்டு வைத்தது பத்தாதென்று இந்துக்களின் புனிததலமான காசியிலும் குண்டு வைத்து அப்பாவி குழந்தையைக் கொன்ற மனித மிருகங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//
அதான் மனித மிருகமாச்சே. அப்படித்தான் இருக்கும்
1. தேர்தலை பொறுததவரை, இந்த விவகாரத்தால் அதிகம் பாதிப்பி காங்கிரசுக்கா , திமுகவுக்கா?
2. சம்ச்சீர் கல்வி முறை குறித்து?
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறதே
Post a Comment