1/31/2011

இணையம் நம்மை அடிமைப்படுத்துமாறு விடுவதா?

போன டோண்டு பதில்கள் பதிவில் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்வியையும் அதற்கான எனது பதிலையும் முதலில் பாருங்கள். பிறகு இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.

ராம்ஜி_யாஹூ
கேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா? உதாரணத்துக்கு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா?
பதில்: ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி திறந்தால் இணையத்தைத் திறப்பது டீஃபால்ட்டான செயல். எனது வேலை அப்படிப்பட்டது. ஆன்லைன் அகராதிகள் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கூடவே கூகள் டாக். வேலை செய்து க்ண்டிருக்கும்போது வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே அவ்வப்போது அவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கணினியும் இணையமும் மாறிவிட்ட நிலையில் நீங்கள் சொல்வது போல கணினியை அணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

என்ன, மொழிபெயர்ப்பு வேலைகள் வேணமட்டும் இருக்கும் நிலையில் தமிழ்மணம், வலைப்பூக்கள் ஆகியவற்றை பாவிப்பது தன்னாலேயே கட்டுப்படுகிறது. அவ்வளவே.

உண்மை கூறப்போனால் இடமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக நான் பதிலை மிகவும் சுருக்கியிருந்தேன். அக்கேள்வி ஒரு தனிப்பதிவாக கையாளப்பட வேண்டியது, அதைத்தான் நான் இப்போது செய்கிறேன்.

என்னைப் பொருத்தவரை ஒரு விஷயம் கூறுவேன். எதிர்ப்புகள் வரவர எனது வைராக்கியம் அதிகரிக்கும். அதிலும் நான் சரி என நினைத்திருப்பதையே கேள்விக்கு உட்படுத்தி என்னை அவநம்பிக்கை கொள்ளச் செய்ய முயல்பவர்களை நான் ஒரு போதும் லட்சியம் செய்ததில்லை. உதாரணத்துக்கு, வகுப்பில் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக்கூட பலர் அஞ்சுவர். எங்காவது ஆசிரியர் நமது அறியாமையை கேலி செய்வாரோ, சக மாணவர்கள் சிரிப்பார்களோ என்றெல்லாம் அச்சம் வெளியாகி பலரை வாய்மூடி மௌனியாக்கி விடுகிறது.

ஆனால் நான் அப்படியில்லை. சந்தேகம் என வந்து விட்டால் கேட்காமல் விடுவதில்லை. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் ஆசிரியர்களிடமும் சிலரிடம் சந்தேகத்தை பிடிக்காத குணம் உள்ளதுதான். நான் சமீபத்தில் அறுபதுகளில் பொறியியற் கல்லூரியில் படிக்கும் தருணம் எங்களது இயற்பியல் ஆசிரியர் போண்டா (திரு. சுவாமிநாதன்) அவர்கள் அருவி மாதிரி லெக்சர் தரும்போது நான் நடுவே பொசுக்கென எழுந்து ராபணா என ஒரு சந்தேகம் கேட்டு வைப்பேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கே முக்கால்வாசி நேரம் அதே சந்தேகம் இருந்து தொலைத்திருக்கும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என நம்பி வந்த அவரை நான் கழுத்தை அறுப்பது போல கேள்வி கேட்க அவருக்கு என்னைப் பிடிக்காமல் போயிற்று.

அக்கல கட்டத்திலும் எனது சக மாணவர்கள் என்னை சந்தேகம் கேட்பதைத் தவிர்க்குமாறு பல முறை ஆலோசனை கூறியுள்ளனர். அதையெல்லாமா நான் கேட்பேன்?

சரி, அதெல்லாம் முடிந்து போன கதை. இப்போது வலைப்பூக்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம். போலிப் பிரச்சினையின் போது அவனை வெளிப்படையாக எதிர்க்காமல் இருக்குமாறு பலர் நல்லெண்ணத்தினாலே கூட கூறியுள்ளனர். [இதில் போலியின் நாடறிந்த அல்லக்கைகளை நான் சேர்க்கவில்லை]. இருப்பினும் அவன் என்னை இணையத்திலிருந்து துரத்தும் முயற்சி செய்தான் என்பதற்காகவே அவனை எதிர்த்து போராடினேன். வெற்றியும் கிடைத்தது. ஆனால் அது பற்றி வேண மட்டும் எழுதி விட்டதால் அது பற்றி மேலே இங்கு பேச்சு இல்லை.

இருப்பினும் எந்தப் பழக்கமானாலும் அதற்கு இரையாகாமல் இருப்பது முக்கியமே. ஆகவே எனது வலைப்பூ நடவடிக்கைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளேன். முதலில் செய்த காரியம் அனானி பின்னூட்டங்களை மறுக்கும் செட்டிங்ஸை செய்ததுதான். அடுத்தபடியாக எனது ஹிட் கவுண்டரை தாட்சணியம் இன்றி நீக்கினேன். அது இருந்ததால் தேவையின்றி ஹிட்களின் என்ணிக்கையை மெயின்டெயின் செய்வதற்காக பல பதிவுகள் போட வேண்டியிருந்தது, அப்போதுதானே பதிவர்கள் பார்வையில் இருக்கலாம், ஹிட்களும் ஏறும்.

திடீரென ஒரு ஞானோதயம், அவ்வாறு வரும் ஹிட்களை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது என்று. ஆகவே அதைத் தூக்குவதில் ரொம்பத் தயக்கமெல்லாம் இல்லை. தமிழ்மண விருத்துக்குக் கூட 3 பதிவுகளை சப்மிட் செய்திருந்தேன். ஆனால் அவற்றை கேன்வாஸ் செய்து ஒரு சிறு கோடிகூட எங்குமே காட்டவில்லை. இருந்தும் மூன்றுமே முதற் சுற்றைத் தாண்டின. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மூன்று பதிவுகளில் ஒன்றான பள்ளிகளில் தர்ம ஹிந்தி பற்றி நானே மறந்து விட்டதால் எனது ஓட்டைக் கூட அதற்கு போடவில்லை. திருநங்கைகள் சம்பந்தமான ஒரே ஒரு பதிவு இரண்டாம் சுற்றையும் தாண்டி தமிழ்மண ஜூரியிடம் சென்ற்து. கடைசி தேர்வில் அது வரவில்லை. இருந்தாலும் இவ்வளவு தூரம் சென்றதே அதிகம். பை தி வே மூன்றாம் பதிவு அமிதாப்பின் பாஆஆ படம் குறித்து.

இப்போது எனக்கு நானே வைத்துக் கொண்ட சில சுயக்கட்டுப்பாடுகள் பற்றிக் கூறுவேன்.

பதிவுலகுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே எனது தமிழை மேம்படுத்தி, தமிழ் மொழிபெயர்ப்பு விஷயங்களில் நல்ல பலன் பெறுவது. அது நிறைவேறி விட்டது. இனிமேல் பதிவுக்காகவே பதிவு என்ற நிலை எனக்கு இல்லை. ஏதாவது கூற வேண்டிய விஷயம் இருந்தால் மட்டும் பதிவிட்டால் போதும். முக்கியமான விஷயங்களாக இருக்க வேண்டும், அதாகப்பட்டது, இஸ்ரேல், சோ, துக்ளக் பத்திரிகை, வலதுசாரி ஆதரவு, ஈவேராவை கட்டுடைத்தல் முதலியன. மொக்கைகளும் அவ்வப்போது வரும்.

இருக்கவே இருக்கின்றன கேள்வி பதில் பதிவுகள். அவற்றிலும் ஒரு சிறிய மாற்றம். அவை வியாழனன்றுதான் வரும், முப்பது கேள்விகளுக்கு மிகாமல் இருக்கும். அதிகப்படியான கேள்விகள் அடுத்த பதிவின் வரைவுக்கு சென்று விடும், ஆகியவையே அந்த மாற்றங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/30/2011

டோண்டு பதில்கள் 30.01.2011

கேள்விகளின் எண்ணிக்கை இருபதை தாண்டியதால் இப்போதே பதில்கள் வந்து விட்டன.

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி 1. படம் ஓடுகிறதோ, இல்லையோ சம்பளத்தை ஏற்றுவதை நிறுத்துவதே இல்லை ஹீரோக்கள். ஒவ்வொரு படம் நஷ்டம் அடையும் போதெல்லாம் தன் சம்பளத்தை மட்டும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார் என்று முன்னணி நடிகர் ஒருவரை பற்றி மேடையிலேயே புலம்பி தள்ளினார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
பதில்: இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் அந்த குறிப்பிட்ட நடிகரை புக் செய்யாமல் போய்விடுவாரா ஏ.எம். ரத்தினம்? எல்லாமே சப்ளை அண்ட் டிமாண்ட் பொருத்துத்தான். நடிகர்களிலும் தொடர்ந்து ஓரிரு பங்கள் ஊற்றிக் கொண்டால் அவர்களை சீந்துபவர்களே இருக்க மாட்டார்கள். அப்போது அவர்கள் சம்பளம் தாராளமாகக் குறையும்.

கேள்வி-2. சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.
பதில்: திரையுலக அரசியலில் இந்த கூத்தெல்லாம் சகஜமப்பா. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ரசிப்போம் அவ்வளவே.

கேள்வி-3. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில், ரஜினியை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல், ஷங்கரால் தனியா ‘ரோபோ’ பண்ணி இருக்க முடியாது. ரஜினியை இனி யாரும் தாண்டிப் போக முடியும்னு தோணலை!”-நாகார்ஜுனா
பதில்: ரோபோ ரஜனியின் காமெடி நன்றாக இருந்தது என கேள்விப்பட்டேன். நான் இன்னும் அப்படம் பார்க்கவில்லை. ஆகவே ஒன்றும் கருத்தில்லை.

கேள்வி-4. உயரத்தில் பூண்டு விலை..-ஒரு கிலோ பழைய பூண்டு, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பதில்: நான் சில நாட்களுக்கு முன்னால் பூண்டு வாங்கினேன். விலை 280 ரூபாய்.

கேள்வி-5. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு 36 தொகுதிகள் உட்பட, 16 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்குரிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.\
பதில்: ஏதாவது செய்து இப்போதைய திமுக ஆட்சி போவதே நல்லது.

கேள்வி-6. பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்குள் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற அவல நிலையை ஒழிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
பதில்: வெளியில் கிளம்பும் அவசரத்தில் இருக்கும் கணவன் உள்ளே தயாராகிக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப்படுத்த, உள்ளிருந்து கொண்டே மனைவி கத்துகிறாள், “5 நிமிஷத்துலே வரேன்னு ஒரு மணியா சொல்லறேனே, காதில் விழவில்லையா”?

கேள்வி-7. மூழ்கப்போகும் சென்னை – நெருங்கிவரும் அபாயம்-தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பதில்: அண்டார்டிகா பனிக்கட்டிகள் உருகத் தொடங்கி விட்டதாகவும், அப்புறம் சென்னை போன்ற நகரங்களுக்கு சங்குதான் என தீவிரமாக கூறப்படுகிறது. கவலைக்குரிய விஷயம்தான்.

கேள்வி-8. ”உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே… உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!” என்ற பீடிகையுடன் ‘ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ.
பதில்: இலங்கையில் உள்ள தமிழர்களிலேயே தமிழ் ஈழம் குறித்து ஏகோபித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லையே.

கேள்வி-9. இதுவரைக்கும் பணத்துக்காக நடிச்சாச்சு. இனிமேல் பணம் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. நல்ல நடிகைன்னு பேர் வாங்கணும் என்று கதை சொல்ல போனவர்களின் மயிர் சிலிர்க்கும்படி பேசுகிறாராம்.-ஸ்ரேயாவின் இந்த திடீர் மாற்றம்
பதில்: அம்மாதிரி பேசும் அளவுக்கு அம்மணிக்கு அப்படி என்ன வயதாகி விட்டதாம்?

கேள்வி-10. கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டதட்ட எல்லா நடிகர்களும், நடிகைகளும் ‘ட்விட்டர், பேஸ் புக்’ தங்களுடைய அன்றாட சம்பவங்களை எழுதி வருகின்றனர். அதில் சிலர் தேவையற்ற கருத்துக்களை எழுதி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. சமீபத்தில் ‘ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது. ஆனால் என் பெயரில் போலியாக யாரோ இதை நடத்துகின்றனர்’ என்கிறார் அசின்.
பதில்: நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தகவல்தேன்.

ராம்ஜி_யாஹூ
கேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்தில், பதிவுகளில் நேர ஒழுங்கை கடைபிடிக்க முடிகிறதா அல்லது இணைய அடிமையா? உதாரணத்துக்கு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இணையம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினால், ஒரு மணி நேரம் முடிந்ததும் கணினியை அணைத்து விடும் பழக்கம்/சுய கட்டுப்பாடு இருக்கிறதா?
பதில்: ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு குறையாமல் கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கணினி திறந்தால் இணையத்தைத் திறப்பது டீஃபால்ட்டான செயல். எனது வேலை அப்படிப்பட்டது. ஆன்லைன் அகராதிகள் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கூடவே கூகள் டாக். வேலை செய்து க்ண்டிருக்கும்போது வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே அவ்வப்போது அவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கணினியும் இணையமும் மாறிவிட்ட நிலையில் நீங்கள் சொல்வது போல கணினியை அணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

என்ன, மொழிபெயர்ப்பு வேலைகள் வேணமட்டும் இருக்கும் நிலையில் தமிழ்மணம், வலைப்பூக்கள் ஆகியவற்றை பாவிப்பது தன்னாலேயே கட்டுப்படுகிறது. அவ்வளவே.

Arun Ambie
கேள்வி-12. மஹாராஷ்ட்ராவில் ஓரு உதவி கலெக்டர் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்கிறார். அரசு, தண்டனை இவை பற்றிய அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லவே இல்லையே? Any way to get out of this?
பதில்: தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றிருக்கலாமே அந்த கலெக்டர் என்று பிரலாபிக்கத்தான் முடிகிறது.

அப்படியே குற்றவாளிகளை பிடித்தாலும் சாட்சிகள் பிறழாமல் இருக்க வேண்டும், தூக்கு தண்டனை அளிக்கப்பட்டால் அதை வருடக்கணக்காக நிறைவேற்றாது இருக்கும் சொதப்பல்கள் நடக்காமல் இருக்க வேண்டும். தருமபுரி மாணவிகள் எரிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகியும் இன்னும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனரே. அது மட்டுமா பார்லிமெண்ட் தாக்கப்பட்ட வழக்கு, மும்பை ஹோட்டல் தாக்குதல் வழக்கு ஆகியவற்றில் தூக்கு தண்டனை பெற்றவர்களை சிறையில் பிரியாணி போட்டு வளர்க்கிறார்களே. அப்படியிருக்க குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்?


Surya
கேள்வி-13. சமீபத்தில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தென் மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ததையும் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டதையும் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். முதல்வர் தந்தை பெரியாரின் கருத்தை ஒட்டி தன் சொந்தக் கருத்திலிருந்து மாறுபட்டாலும் வீட்டுப் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் என மகிழ வேண்டுமா? அல்லது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா என்று வருத்தப் பட வேண்டுமா?
பதில்: அது அப்படித்தான். ஊராருக்கு மட்டுமே உபதேசம். நெற்றியில் பொட்டு வைத்தால் கேலிபேசும் முதல்வர், தொப்பி போட்டுக் கொண்டு நோன்புக கஞ்சி குடிப்பது போலத்தான் எல்லாமே.

கேள்வி-14. ஜெயலலிதா முன் போல் இல்லாமல் மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களை மதித்துப் பழக ஆரம்பித்துள்ளார் என்ற பரவலான அபிப்பிராயம் பரவி வருகின்றது. இது நிலைத்து இருக்குமா? உங்கள் கருத்து என்ன?
பதில்: இப்போதைக்கு எதிர்கட்சியாக செயல்படும் ஜெ ஆட்சிக்கு வந்தால் இம்முறை எவ்வாறு செயல்படுவார் என்பதையும் பார்த்த பிறகுதான் இது பர்றி கருத்து கூற முடியும்.

கேள்வி-15 கனிமொழி அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டு இருக்கின்றீர்களா? சமீபத்தில் அவர் கலைஞர் டீ.வி. பட்டி மன்றத்தில் பேசக் கேட்டேன். அவர் பேச்சுத் திறன் சராசரிக்கும் கீழே என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: கலைஞரின் மகள் என்ற ஒரு தகுதிதான் அவரது ஒரே பெரிய தகுதி. மற்றப்படி தன்னளவிலேயே ஒன்றும் பெரிதாக அவர் சாதித்ததாக தெரியவில்லை எனக்கு.

கேள்வி-16. சோவின் உடல் நிலை குறித்து உங்கள் கட்டுரையில் வந்த குறிப்பைக் கண்டு வருத்தமுற்றேன். துக்ளக்கைப் பொறுத்த வரை அவர் succession plan வைத்திருக்கிறாரா? ஆண்டவன் அவருக்கு நிறைந்த ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும். துக்ளக் அவருடன் நின்று விடக் கூடாது.
பதில்: ஆமென்.


thenkasi
அடிக்கடி கழக பேச்சாளர்களால் பேசப்படும் கீழ்கண்ட வாசகங்களுக்கு உண்மையான அர்த்தம் இன்றைய சூழலில்?
கேள்வி-17. தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டலும் நான் உங்களை கவிழ்க்க மாட்டேன், கட்டுமரமாய் மாறி உங்களை காத்திடுவேன் காலம் உள்ள வரை.

பதில்: இவ்வாறு கூற கலைஞருக்கே காப்புரிமை உண்டு. அதையும் மீறி எந்த கழகக் கண்மணி பேசுவது? அவரிடம் போட்டுக் கொடுத்திடுவோமில்ல!

அப்படியே கடலில் தூக்கிப் போட்டால் தமிழர்கள் சோற்றாலடித்தப் பிண்டங்கள் என புலம்புவதும் அதே வாய்தான் என்பதையும் மறக்காமல் இருப்போமாக.

கேள்வி-18. இருப்பது ஓர் உயிர் அது போவதும் ஒரு முறைதான்.
பதில்: எல்லோருக்குமே இருப்பது ஓர் உயிர்தான். இவர் மட்டும் பூனையா என்ன? ஒன்பது உயிர்கள் வைத்திருப்பதற்கு?

கேள்வி-19. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
பதில்: அவரது இதயத்தில் இருப்பவர்களும் உடலோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகி விடுவார்களோ?

கேள்வி-20. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்.
பதில்: குடும்பத்தினருக்கு பதவி, மேலும் பதவிகள் பெற தில்லியில் முகாம் போடுதல்

கேள்வி-21. தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடோம்.
பதில்: தமிழ் காட்டுமிராண்டி மொழி எனச்சொன்ன கன்னடிய பலீஜா நாயுடு நாயக்கரை மட்டும் தந்தை என அழைப்போம்.

கேள்வி-22. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
பதில்: அவர்களை சிரிக்க வைத்து நாம் மேலும் மேலும் சிரிப்போம். ஏழைகளுக்குத்தான் இலவச டிவி இருக்கவே இருக்கிறதே.

கேள்வி-23. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
பதில்: சன் டிவி தவிர.

கேள்வி-24. கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
பதில்: யாரிடம் கேட்கிறாய், எதற்குக் கேட்கிறாய் என்று அடுத்த வசனம் வந்தால் பரவாயில்லையாமா?

கேள்வி-25. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.
பதில்: மத்தியில் கூட்டணி ஆட்சி பாவித்து கொள்ளையில் பங்கு. மாநிலத்தில் மைனாரிட்டி தனியாட்சியை பாவித்து கொள்ளையில் ஏகபோக உரிமை, அவ்வளவுதானே? தீர்ந்தது விஷயம்.

கேள்வி-26. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்.
பதில்: அதை மனப்பூர்வமாக சொன்னவர் சமீபத்தில் 1969 பிப்ரவரியில் மறைந்து விட்டார். இப்போதெல்லாம் ஒன்றே கொள்கை, அதுதான் ஆட்சியுரிமை.


மேலும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/27/2011

டோண்டு பதில்கள் 27.01.2011

hayyram
கேள்வி-1. நேருவின் ஆங்கிலேய பாசத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது பற்றி உங்கள் கருத்து?
பதில்:எட்வினா என்னும் தலைப்பில் காதெரின் க்ளெமெண்ட் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் லேடி மவுண்ட்பேட்டன் பற்றி ஒரு நாவலாக எழுதியிருந்தார். அது பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் பிரெஞ்சு மூலத்தில் நான் படித்தவை அப்படியே வந்திருக்குமா எனத் தெரியவில்லை.

நான் படித்தவரை பிரெஞ்சு மூலத்தில் எட்வினாவின் நடத்தை அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லைதான். அவரை ஒரு நிம்ஃபோமேனியாக் ரேஞ்சுக்கே விவரித்திருந்தார்கள். மவுண்ட்பேட்டனோ இதையெல்லாம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நேரு பற்றியும் பெண்கள் விஷயத்தில் சபலமுள்ளவராகவே காட்டப்பட்டது. அவருடைய காதலிகளில் எட்வீனாவும் ஒருவர்.

நேருவை தன் கணவர் சொற்படி நடக்குமாறு எட்வினா செய்தார், அதாகப்பட்டது பட்டேல் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானியரை மும்முரமாக விரட்டியபோது இவராக குடுகுடுவென ஐநாவிடம் ஓடியதையே குறிப்பிடுகிறார்கள். அச்சமயம் நேரு அனாவஸ்யமான வாக்குறுதிகளையும் தந்தார், பிரிவு 370, பொதுமக்கள் வாக்கெடுப்பு இத்யாதி, இத்யாதி. அதன் பலனை இன்னும் அனுபவிக்கிறோம்


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-2. காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்
பதில்: திரும்பத் திரும்ப உண்மைத் தமிழனை கேட்க வேண்டிய கேள்விகள் எனக்கு அனுப்பப்படுகின்றன.

இளைஞன் ஓடாது முதுமையடைந்து விட்டானா? இதில் என்ன ஆச்சரியம்? கருணாநிதி வசனம் எழுதி படம் போண்டியாவது இது முதல் தடவை இல்லையே. எது எப்படியானாலும் கருணாநிதி தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு ஏதாவது சாராய பெர்மிட் கொடுத்து விட்டுப் போகிறார் (நன்றி சோ அவர்களே).

கேள்வி-3. வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!
பதில்: நான் உழவர் சந்தையில் நேரடியாகவே பார்த்தது என்னவென்றால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை சப்ளை பொருத்தே அமைகிறது. அதிக மழையில் வெங்காய பயிர்கள் காலி என்றால் விலை ஏறாமல் என்ன செய்யும்? அரசு இதில் ஏதேனும் உள்புகுந்து மார்க்கெட் விலை ஏற அல்லது சரியச் செய்யும் என நினைக்கவில்லை.

கேள்வி-4. ஆவின் பால் முதல் அனைத்து நிறுவன பால் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தது 50 பைசா முதல் 2 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
பதில்: ஆவின் பால் விலை அப்படியே உள்ளது. திருமலா toned பால் லிட்டருக்கு 2 ரூபாய் ஏறியுள்ளது. ரிலையன்ஸ் பால்விலை அப்படியே உள்ளது. சில இடங்களில் ரீட்டைல் வியாபாரிகள் விலை உயர்ந்த பால்களை வாங்கி வைக்காது புறக்கணித்தனர்.

கேள்வி-5. “ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தி, ஐகோர்ட் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பதில்: முதலில் அவர் கட்சியில் அதை செய்யட்டும். எல்லா ராஜ்யசபா எம்பி விவகாரத்திலும் வன்னியருக்கே (அன்புமணி) இட ஒதுக்கீடு.

கேள்வி-6. என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
பதில்: காவலன் படம் சற்றே தேறிவிட்டது என கேள்விப்படுகிறேன்? மற்றப்படி முதல்வரின் எல்லா வீடுகளும் திரைப்பட உலகைக் கைப்பற்றியது என்னமோ நிஜம்.

கேள்வி-7. ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்புடன் சிபல் செயல்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
பதில்: அதெல்லாம் உப்பு போட்டு சாப்பிடுபவருக்குத்தான் உரைக்கும். கபிலுக்கு ஆகவே கவலையில்லை.

கேள்வி-8. அரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார்.
பதில்: புத்திசாலி. முதலில் தனது தொழிலில் சூதனமாக நடந்து கொள்ளட்டுமே.

கேள்வி-9. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பதில்: இந்தச் செய்தியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அக்கிரமம். இதென்ன கொடுங்கோன்மை.

அமெரிக்காவில் பள்ளி புதிதாகக் கல்வியாண்டை ஆரம்பிக்கும்போது முதல் நாள் பழைய மாணவ மாணவியர் வரவேண்டும் எனக் கட்டாயச் சட்டம் உள்ளது. இந்தியாவிலும் பல பள்ளிகளில் அப்படித்தான் எனக் கேள்விப்படுகிறேன்.

ஆனால் மிட் டெர்ம் விடுமுறைக்கும் அதே மாதிரி இந்தக் கல்லூரி செயல்படுகிறது என்பது வியப்பாக உள்ளது. குறைந்த பட்சமாக இந்த விதி இருப்பதை கல்லூரி நிர்வாகம் சரியான அளவில் முன்கூட்டியே நிலைநிறுத்தியதா என்பதைப் பார்த்தல் அவசியம்.

கேள்வி-10. நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பதில்: அன்புமணியோ அவர் தந்தையோ பெங்களூர் ஆகிய இடங்களில் ஒன்றும் நிலம் கிலம் வாங்கவில்லையோ?

கேள்வி-11. மதிமுகவிலிருந்து விலகியுள்ள லேட்டஸ்ட் திரையுலக பிரமுகர் வரிசையில் சேர்ந்துள்ளார் இயக்குநர்-நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்.
பதில்: சுந்தரராஜனின் நடிப்பு எனக்கு பிடிக்கும் அவ்வளவே. மற்றப்படி அவரது அரசியல் பற்றி ஒன்றும் அறியேன். ஆகவே கருத்து ஏதுமில்லை.


ரமணா
கேள்வி-12. தமிழக சட்டசபைக்கான திமுக+காங் கூட்டணி முடிவான நிலையில் ரிசல்ட் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?
பதில்: இழுபறியாகத்தான் இருக்கும் என எனக்குப்படுகிறது.

கேள்வி-13. ஸ்விஸ் வங்கி கணக்கு வைதிருப்போரின் விபரம் தெரிய வந்தால் ரிசல்ட் மாறுவதற்கு வாய்ப்பு உண்டா?
பதில்: அந்த விபரம் வருவதற்கே வாய்ப்பு இல்லாத போது இது அனுமானக் கேள்வி மட்டுமே.

கேள்வி-14. ஆளுநரின் செயல் பாட்டை எதிர்த்து கர்நாடக முதல்வரின் ஹர்த்தால் சரியா?
பதில்: இருவருமே லேசுப்பட்டவர்கள் இல்லைதான். மற்றப்படி சோ சொல்வதுபோல எடியூரப்பாவால் பாஜகாவுக்கு சங்கடமே.

கேள்வி-15. துக்ளக் ஆசிரியரின் ,ஆண்டுவிழா பேச்சை திருமப்த் திரும்பப் போடும் ஜெயா டீவியின் செயல்பாடு தேர்தலில் பயனளிக்குமா?
பதில்: விற்பனைக்கு இருக்கும் மீட்டிங்கின் டிவிடியின் சேல்ஸ் வேண்டுமானால் குறையும், ஏனெனில் வாங்க நினைப்பவர்கள் ஜெயா டிவியிலேயே பார்த்து விடுவார்கள். மற்றப்படி சோ சொல்வதை எல்லாம் ஒப்புக் கொள்பவர்கள் கூட ஓட்டு என வரும்போது மாற்றிப் போடுவதுதான் அதிகம் நடந்துள்ளது.

கேள்வி-16. சேலம் மாநாட்டில் மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகு- இந்தத் தடவையாவது புரட்சிதலைவியும், இரண்டாம் புரட்சித் தலைவரும்(வி.காந்த்) ஓர் அணியில் வருவார்களா?
பதில்: அவ்வாறு நடப்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பார்ட்டிகளுக்குமே நல்லது என்பதுதான் தற்போதைய நிலவரம். அது நடக்காமல் முட்டுக்கட்டை போடக்கூடியது அவர்தம் ஈகோதான். ஆகவே பார்ப்போம் என்ன நடக்கிறது என.


நக்கீரன் பாண்டியன்
தமிழக தேர்தலில் ஒரு வேளை வி.காந்த் + திமுக + காங் கூட்டணி அமைந்தால்(50+134 +50 தொகுதிகள் - தகவல் ஜூ.வி)
கேள்வி-17. ஜெ.ன் எதிர்காலம்?

பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்தான். நீங்கள் கூறியது போல நடந்தால் ஜெ அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கொடநாட்டுக்கெல்லாம் போனால் அங்கேயே இருக்க வேண்டியதுதான்.

கேள்வி-18. மருத்துவரின் நிலை?
பதில்: தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கலைஞர் காலில் விழுந்து கதறிவிட மாட்டாரா என்ன? அன்புமணிக்கு கவுன்சிலர் பதவி கிடைத்தாலும் போதுமே என எண்ணுவாரோ?

கேள்வி-19. கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு?
பதில்: தமிழகத்தை பொருத்தவரை அவர்களது நிலை அப்படியே இருக்கும், அதாவது செல்லாக் காசாக.

கேள்வி-20. வைகோ?
பதில்: மீண்டும் வாலிபால் ஆட வேண்டியிருக்காது என நம்புவோம்.

கேள்வி-21. தமிழகம்?
பதில்: ஐயகோ.

மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2011

டோண்டு பதில்கள் 20.01.2011

jaisankar jaganathan
கேள்வி-1. விஜய்காந்த் இந்த முறை விருத்தாசலத்தில் ஜெயிப்பாரா?
பதில்: முந்தைய தேர்தலில் தனது புதிய கட்சியின் பலம் தெரிவதற்காக அவர் தனியே செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் இத்தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அவ்வாறு கூட்டணி அமைத்து அவரும் தேர்தலில் நின்றால் விருத்தாசலம் என்ன எந்தத் தொகுதியிலும் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமே.

கேள்வி-2. மன்மதன் அம்பு எப்படி ஓடுது சென்னையில்(நான் வசிப்பது திருச்சி)
பதில்: நானும் அதை இன்னும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டுக்கு வெகு அருகில் உள்ள தியேட்டரில்தான் அது ரிலீஸ் ஆயிற்று. இருந்தாலும் அதைப் பார்க்கத் தோன்றவில்லை. நான் கேள்விப்பட்டவரை அதன் கதை சமீபத்தில் 1977-ல் நான் பார்த்த “Follow me" என்னும் படத்தை நினைவுபடுத்துகிறது. அதில் இஸ்ரவேல நடிகர் டோப்போல் நடித்தார் (Fiddler on the roof புகழ்). பார்க்க வேண்டும் என எண்ணினேன் ஆனால் நேரம் கிடைக்கவில்லை. படத்தைத் தூக்கி விட்டார்கள், இங்கு அது 25 நாட்கள் ஓடியது.


Arun Ambie
கேள்வி-3. சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போனீர்களா?
பதில்: ஒரே ஒரு முறை சென்றேன். காந்தியின் கொலை, ராஜீவ் காந்தியின் கொலை, ஹாரி பாட்டரை பகடி செய்து வெளிவந்த ஒரு நாவல் ஆகியவற்றை வாங்கினேன்

கேள்வி-3. துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வர எண்ணியிருக்கிறேன். உங்களை அங்கே சந்திக்கலாமா?
பதில்: ஆண்டுவிழா முடிந்து விட்டதே. பிறகு எப்போதாவது பார்ப்போம். நீங்கள் சென்னையில் இருந்தால் உங்கள் டெலிஃபோன் நம்பரை எனக்கு ஒரு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பேச முயற்சி செய்கிறேன். அப்பின்னூட்டத்தை வெளியிட மாட்டேன்.


வஜ்ரா
கேள்வி-4. மதம் மாறுவதால் எப்பயனும் இல்லை என்பதற்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள்:
இப்படி கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதைவிட ஈசியாக இந்துவாக இருந்தே சாதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கலாமே. டோண்டு, உங்கள் கருத்து?
பதில்: தீண்டாமை என்பது நமது மதத்துக்கு ஒரு தீராத களங்கம்தான். அதே சமயம் இந்த விஷயத்தில் ஹிந்து மதத்தை சாடும் மிஷநரிகள் கிறித்துவத்திலும் அதை புகுத்துவது வெட்கக்கேடு. நீங்கள் சொல்வது போல ஹிந்துவாகவே இருந்து ஜெயிக்க தலித்துகள் முற்படுவதே நலம்.

மிளகாய் பொடி
கேள்வி-5. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகள் வந்ததினால் சிறிய மளிகை கடைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன?
பதில்: எனக்குத் தெரிந்து அவ்வாறு இல்லை.

கேள்வி-6. தாங்கள் மளிகை பொருட்கள் வாங்குவது சூப்பர் மார்கட்டிலா அல்லது சிறிய மளிகை கடையிலா?
பதில்: சுமாரான அளவுடைய மளிகைக் கடையில்.

கேள்வி-7. தங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருக்கிறதா?
பதில்: இருந்தது, இப்போது இல்லை. இது பற்றி நான் எழுதியதை இங்கே பார்க்கவும்.

கேள்வி-8. டயபெடிக்ஸ் வராமல் இருக்க உடற்பயிற்சி எல்லாம் செய்வது அவசியமாமே..?
பதில்: ஆம். உண்மைதான்.

கேள்வி-9. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுகவின் சாதனைதானே?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?


ராஜரத்தினம்
கேள்வி-10. நீங்கள் ஐயங்கார்கள் தவறே செய்தாலும் அதை தாங்கி (கமல் ஹாசன், பலே S.V.Sekarனு மனசாட்சியே இல்லாமல் ஒரு பதிவு)பிடிக்கிறீர்களே? அது ஏன்?
பதில்: நான் என்ன பலீஜா நாயுடுவான ஈ.வே. ராமசாமி நாயக்கர் மாதிரி 44 தலித்துகளை கோபால கிருஷ்ண நாயுடு என்னும் பண்ணையார் உயிரோடு எரித்தபோது, அதை வெறுமனே கூலித்தகராறு என சொதப்பலாக அறிக்கை விட்டேனா என்ன?

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி 11. விஜய்க்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் இந்த வலை அரசியல் சார்ந்தது என்றாலும், அதை கடன் பிரச்சனையாக்கி விட்ட சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்தாராம் அவர். இனிமேலும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற அளவுக்கு சூடாகிக் கிடக்கிறாராம்.
பதில்: படத்தை வெளியிடுவதில் வெற்றியடைந்தார் என படித்தேனே. உண்மைத் தமிழன் விவரமாகவே எழுதியுள்ளார் படியுங்கள்.

கேள்வி-12. காவலன் – உங்களுக்கு ஜண்டுபாம்
பதில்: எனக்கா, விஜய்க்கா?

கேள்வி-13.குடும்பத்தோடு பார்க்கக் கூடிய, அழகான காதலைக் கொண்ட, உணர்ச்சிகரமான கதையைக் கொண்ட, ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை ஆடுகளம்! தனுஷும் வெற்றி மாறனும் நின்று ஆடும் வெற்றிக்களம்!
பதில்: இன்னும் பார்க்கவில்லை. மக்கள் கருத்து என்ன?

கேள்வி-14. விஜய்க்கு உதவ வந்த விஜயகாந்த்
பதில்: எந்த முறையில்? ஏ செண்டர், பி செண்டர் சி செண்டர் ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர்களின் புள்ளிவிவரங்களைத் தந்தாரா?

கேள்வி-15. படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார்.
பதில்: பலர் முயற்சி செய்து கோட்டை விட்டனர். நான் என்ன நினைக்கிறேன் என்றால், அதை டிவி சீரியலாகத்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக எடுக்கவியலும்.


நக்கீரன் பாண்டியன்
கேள்வி-16. மு. க. அழகிரியின் நடவடிக்கை.....?
பதில்: சமாதானம் ஆகிவிட்டதாக இன்று ஜூவியில் பார்த்தேனே.

கேள்வி-17. ஆட்சியில் பங்கு கேட்கும் காங்.தலைவர் இளங்கோவன் வெற்றி பெறுவாரா?
பதில்: 1996-ல் காங்கிரஸ் அதிமுகவுடன் சேர்ந்து இருந்தபோது இருந்த அதே நிலைதான் இப்போது திமுகவுடன். அப்போதும் காங்கிரஸ் விடாப்பிடியாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க தமாக பிறந்து, நிலைமை தலைகீழாக மாறியது. ஆனால் அபோது மூப்பனார் இருந்தார். இப்போது வாசன் துணிவாரா என்று தெரியவிலையே.

கேள்வி-18. பெட்ரோல் லிட்டர் ரூ100 க்கு வந்து விடும் போலுள்ளதே?
பதில்: வண்டி வைத்திருப்போர் வைத்திருக்காதோர் ஆகிய எல்லோரையுமே பயமுறுத்தும் செய்தி இது.

கேள்வி-19. நீதித் துறையிலும் புகார் புயல், என்னவாகும்?
பதில்: கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுதாம்.

கேள்வி-20. 2010-2011 துக்ளக் ஆண்டுவிழா ஒப்பிடுக->அரங்க மாற்றம்-வாசகர் எழுச்சி-சோவின் நகைச்சுவை மிளிரும் அரசியல் கிண்டல் - துக்ளக் வாசகர்கள் பேச்சு-நடை பெற்ற மாற்றங்கள்-மக்களின் அரசியல் விழிப்புணர்வு-திமுகவின் ரியாக்‌ஷன்-ஜெயா டீவியின் கவரேஜ்?
பதில்: போன ஆண்டும் சரி, இம்முறையும் சரி சோ அவர்களது உடல் நிலையில் பலகீனம் தெரிந்தது. இருப்பினும் மனிதர் மனவலிமையுடன் 3 மணி நேரம் நின்று பேசினார். அவரது பேச்சில் நகைச்சுவை, கூர்மை, கிண்ட ஆகிய ஒன்றிலும் குறையேதுமில்லை.

துக்ளக் வாசகர்களும் தங்களது உயர்தரத்தை நிரூபித்தனர். பிரியாணி அளித்து, லாரி அனுப்பி ஊரிலிருந்து வந்தவர்களை சென்னையை சுற்றிக் காட்டல் ஆகிய எந்தக் கருமாந்திரங்களும் இன்றி தானாகவே வந்த கூட்டம் மிக அமைதியாகவே பல மணி நேரம் காத்திருந்தது கண்கொள்ளா காட்சிதானே

இம்முறை ஜெயா டிவி முழு மீட்டிங்கையும் கவர் செய்தது பாராட்டுக்குரியதே.


மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/15/2011

துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங் - 14.01.2011

எனது கார் ம்யூசிக் அகாடெமியை அடைந்தபோது மணி மாலை 04.30. ஆறரைக்குத்தான் மீட்டிங் ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பழைய அனுபவத்தால் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றேன். இருப்பினும் அரங்கம் நிரம்பியிருந்தது. பிற்பகல் இரண்டரை மணிக்கே ஃபுல் ஆகிவிட்டது என பிறகு கேள்விப்பட்டேன். காலை 11.30 மணியிலிருந்தே மக்கள் வர ஆரம்பித்து விட்டனர் என்பதையும் அறிந்தேன்மேலும், நான் சென்ற சமயம் மினி ஹாலை திறந்தனர். ந்ல்ல வேளையாக உள்ளே இருக்கை கிடைத்தது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் லைவ் ஒளிபரப்பில் வீடியோ மக்கர் செய்ய ஆடியோ மட்டும் நன்றாகக் கேட்டது. அதுவே போதும் என அமர்ந்து விட்டேன். வெளியே கார் பார்க்கிங்கில் கார்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. அதற்கென அருகே இருந்த பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மீட்டிங் ஆரம்பிக்கும் முன்னால் இணையத்தில் அதன் லைவ் கவரேஜுக்கான சுட்டியை அறிவித்தனர். அது முன்னமேயே தெரிந்திருந்தால் வீட்டிலேயே இருந்திருக்கலாமே எனத் தோன்றியது. இருப்பினும் இந்த விஷயத்தை குறுஞ்செய்தியாக 20 பேருக்கும் மேல் அனுப்பினேன். ஆனால் நடுவில் அந்த ரிலே நின்று விட்டதாக பதிவர் Hayyram எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இப்போது அப்பக்கத்துக்கு போய் பார்த்தால் மீட்டிங்கின் சுருக்கம் என ஒரு வீடியோ இருக்கிறது, ஆனால் இப்போதைக்கு அது வேலை செய்யவில்லை.

சரி மீட்டிங் விஷயத்துக்கு வருகிறேன். சரியாக ஆறரை மணிக்கு சோ மைக்குக்கு வந்து ஆரம்பித்து வைத்தார். எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள், சித்திரையில் வரவிருக்கும் புத்தாண்டுக்கான முன்கூட்டியே வாழ்த்துக்கள் எனக்கூறி கலகலப்பூட்டினார்.

வழக்கம்போல துக்ளக்கில் வேலை செய்பவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து அறிமுகம் செய்வித்தார். அவ்வப்போது கிண்டல்களும் அதில் இருந்தன.அது லேட்டஸ்ட் ஹிந்து மகா சமுத்திரம் எடிஷன் ரிலீஸ் செய்யப்பட்டு, அவரது பேத்தி அதை பெற்றுக் கொண்டார்.

பிறகு பேசுவதற்காக பெயர் அளித்த சில வாசகர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்தனர்.

அவர்கள் வைத்த கேள்விகளும் அவற்றுக்கான சோவின் எதிர்வினைகளும் கீழே. (சாரம் மட்டும் தரப்பட்டுள்ளது)

1. 2010 நிகழ்வுகள் பல மக்களை உலுக்கி விட்டன. அவற்றின் விளைவுகளிலிருந்து நாட்டை மீட்க சாதாரண மக்கள் என்ன செய்யலாம்?
சோ: ஒழுங்காக ஓட்டுப் போட்டு நல்ல அரசை தேர்ந்த்டுக்கலாம். வேறு என்ன செய்ய முடியும்?

2. ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள நம்மவர்களின் கருப்புப் பணத்தைக் கொணர முடியுமா?
சோ: முடியும் அரசு முயன்றால். ஆனால் இப்போதைய மத்திய அரசு முயலாது.

3. விவசாயத்தை சிறப்பிக்க எந்த அரசுமே தயாராக இல்லையே (மோதியைத் தவிர).
சோ: விவசாயம் செய்தால் பிழைப்பு இல்லை என்பதை பல விவசாயிகள் கண்டுவிட்டதால் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயருகின்றனர். அவர்களுக்கு தர வேண்டிய விலைகளை அவர்களது செலவைப் பொருட்படுத்தாமல் அரசே நிர்ணயிக்கிறது. ஆகவே பலருக்கு அது கட்டுப்படியாவதில்லை.
மேலும் விவசாயத்துக்கு ஏற்ப நீர்நிலைகளும் சரியாக இல்லை. அரசு மனது வைத்தால் செய்யலாம்.

4. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி?
சோ: குருமூர்த்தி அது பற்றி பேச இருக்கிறார். பிறகு நானும் பேசுவேன்.

5. தமிழகத்தில் கூட்டணி சாத்தியங்கள் (கேள்வி கேட்டவர் பல காம்பினேஷன்களை அடுக்கினார்)
சோ: பேச்சுக்கள் நடக்கின்றன, பார்ப்போம்.

6. இடதுசாரி சிந்தனையுடைய பல மீடியா கவரேஜ்கள் பற்றி?
சோ: அவ்வாறு பலர் எழுதுகிறார்கள். ஆனல் அவற்றால் சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை.

7. துணை முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு பற்றி கேள்வி கேட்டார் (அவர் இரண்டு மணி நேரம் மேடையில் அமராமல் நின்றாரே)
சோ: நான் கூடத்தான் இந்த மீட்டிங்கில் 3 மணி நேரமாக நிற்கிறேன். ஸ்டாலின் என்ன செய்வார் பாவம், அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லையே.

8. குஜராத்தில் மோதி வந்தது போல இங்கே நல்ல ஆட்சி அமைக்க யாராவது வருவார்களா?
சோ: அதற்கு தமிழக மக்கள் குஜராத்தியரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். 2007 தேர்த்தலில் காங்கிரஸ் பல இனாம்களை வாக்காளர்களுக்காக வாக்குறுதி அளித்தது. மோதியோ தான் பதவிக்கு வந்தால் மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், அதே சமயம் மின்வெட்டின்றி நாள் முழுவதும் மின்சாரம் தருவதாகவும் கூற, அவரையே தேர்ந்தெடுத்தனர் குஜராத்தியர். ஆனால் அந்த மன்நிலை இங்கு வருமா? வந்தால் அம்மாதிரி ஆட்சி கிடைக்கும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் செய்திகளை அளிப்பதில் பரபரப்புக்கே முக்கியத்துவம் தருவது பற்றி?
சோ: என்ன செய்வது இது போட்டிகள் நிறைந்த இடமாகி விட்டது. ஆனால் அதே சமயம் தமிழகம் தவிர்த்த இடங்களில் டெலிவிஷன் போட்ட சத்தத்தால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலே வெளியில் வந்தது என்பதையும் மறக்கக் கூடாது.

10. ஸ்டாலினுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி சரியாகத் தெரியவில்லை என தோன்றுகிறது. அவர் பூசி மெழுகி பேசுகிறார். அவர் எல்லாம் எப்படி துணை முதல்வரானார்? அவர் கலைஞர் டிவியை பார்ப்பதை விட்டு விட்டு ஜெயா டிவியை பார்த்தல் நலம், கலைஞரும் அவ்வாறே செய்ய வேண்டும்.
சோ: (கிண்டலுடன்) இப்போது கூட அவர்கள் துக்ளக் படிக்க வேண்டும் எனக்கூற உங்களுக்குத் தோன்றவில்லையே.

12. நீதிபதிகளின் பெயரும் கெடுவது பற்றி?
சோ: நான் பிராக்டீஸ் செய்த சமயத்தில் நீதிபதிகள் தவறு செய்வது விதிவிலக்காகவே இருந்தது. இப்போது நிலைமை மோசம் ஆகிவிட்டது. இருப்பினும் இன்னும் பல நல்ல நீதிபதிகள் உள்ளனர்.

13. நீரா ராடியா பற்றி?
சோ: இந்த அம்மையாரிடம் நிஜமாகவே பவர் இருந்திருக்கிறது. பிரதமரையே கிள்ளுக்கீரையாக மதித்துள்ளார்.

14. ஜெயலலிதாவை நெருங்க முடியவில்லை, ஆனால் கருணாநிதியை நெருங்க முடிகிறது.
சோ: கருணாநிதியை நெருங்க வேண்டுமானால் அவருக்கு ஜால்ரா போடுபவர்களால்தான் முடியும். அப்படி புகழுக்கு அலைகிறார் மனிதர். மாற்றுக் கருத்துக்களை கேட்கும் மனோபாவத்தில் இல்லை அவர். ஆனால் ஜெயலலிதாவிடம் எதிர்க் கருத்துக்களைக் கூறலாம். பொறுமையாகக் கேட்பார். அவற்றை ஏற்பாரோ மாட்டாரோ அது வேறு விஷயம்.

15. ரஜனிகாந்த், விஜயகாந்த் ஆகியோரை ஒன்றுதிரட்டி இந்த ஆட்சியை மாற்ற வழி சோ அவ்ர்கள் வழி செய்ய வேண்டும்?
சோ: நான் சொல்லிக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை.

16. தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கான ஆதரவு பற்றி.
சோ: அவர் அடக்கியது புலிகளை. புலிகள் மட்டுமே தமிழர்கள் என்று இருப்பதாலேயே இக்கேள்வி வருகிறது. அவர் புலிகளை ஒடுக்கியது பெரிய விஷயம். இப்போது கேம்புகளில் இருக்கும் தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் நடந்து வருகிறது. ஆனால் புலிகளை இங்கும் வடிக்கட்ட வேண்டியிருக்கிறது.

17. கலைஞர் அடிக்கடி கடிதம் எழுதுவது பற்றி?
சோ: கடிதம் எழுதுவது எப்படி என லிஃப்கோ வெளியிட்டு வரும் நூல்களுக்கு அவர் சரியான போட்டி. தம் குடும்பத்தவருக்கு பதவி தேவை என்றால் நேராகவே தில்லியில் முகாம் போடுவார். மற்ற விஷயங்களுக்கெல்லாம் கடிதம் மட்டுமே.

18. பாமக எப்பக்கம் செல்லும்?
சோ: தெரியாது (டோண்டு ராகவன்: அது பாமகாவுக்கே இன்னும் தெரியாது)

மேலும் கேள்விகள் வந்தன, ஆனால் அவை எல்லாமே மேலே கூறப்பட்டுள்ளவற்றை பல காம்பினேஷன்களில் ரிபீட் செய்தன.

இப்போது குருமூர்த்தி பேச அரம்பித்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஒரு பொதுப்பார்வை அளித்தார். 1,76,000 கோடி ரூபாய் என்னும் தொகை எவ்வாறு சுட்டப்பட்டது என்பதற்கு துரிதமான கால்குலேஷன்கள் தந்தார். ஜயராம் ரமேஷ், கபில் சிபல் ஆகியோர் முழுச்சோற்றில் பூசனிக்காயை மறைக்க முயற்சி செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங் வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் குறிப்பிட்டார். ராசாவுக்கு சோனியாவின் பக்கபலம் இன்றி இது நடந்திருக்காது என்ற இம்ப்ளிகேஷனும் அவர் கூறியதில் இருந்து புலப்பட்டது.

கருப்புப்பணம் உலகளாவிய பிரச்சினை. வரிகள் பிரச்சினை இல்லாத பனாமா, லீஷ்டன்ஸ்டெஇன் போன்ற நாடுகளில் அவை குவிக்கப்பட்டு பல நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டதில் பல நாடுகள் அம்மாதிரியான நாடுகளை நெருக்க அவையும் தம்மிடம் உள்ள கணக்குகளுக்கு யார் சொந்தக்காரர்கள் என்னும் லிஸ்ட் தரத் தயாராக இருக்கும் நிலையில் இந்திய அரசோ அதைப் பெற எந்த முயற்ச்சியையும் எடுக்கவில்லை.

ராஜீவ் காந்தியின் பெயரிலேயே 2.2 பில்லியன் டாலர்கள் இருக்க, அது பற்றிய செய்திகள் அவர் இறந்ததும் அமுக்கப்பட்டன. இறந்தவர் பர்றித் தவறாகப் பேசலாகாது என்ற நமது பொதுபுத்தியே இதற்குக் காரணம். ஆனால் தற்சமயம் மீண்டும் அவை வெளியே வந்துள்ளன. கேஜீபியிடமிருந்து அவர் பெற்றத் தொகையே ஸ்விஸ் வங்கியில் இப்போது ராகுல் காந்தியின் பெயரில் உள்ளது என்ற விஷயமும் பல இடங்களிலிருந்து வெளியாக, அவ்வாறு வெளியிட்டவர்கள் மேல் இதுவரை சோனியா காந்தி ஒரு அவதூறு வழக்கும் போடவில்லை எனபதையும் குருமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

வெளி நாடுகளில் முடங்கியிருக்கும் நம்மவர்களின் கருப்புப் பணத்தில் 25% சதவிகிதம் வந்தால் கூட நாட்டின் பொருளாதார முன்னேற்றம் 14 அல்லது 15% அபிவிருத்தியை எட்டும் என குருமூர்த்தி கூறினார்.

பிறகு சோ பேச ஆரம்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ராசாவே தவறு நடக்கவில்லை எனக்கூறியதாலேயே தவறு ஒன்றும் நடக்கவில்லை என மன்மோகன் சிங் கிளிப்பிள்ளை மாதிரி கூறியதை அவர் சாடினார். அவ்வாறு எல்லா வழக்குகளிலும் கோர்ட்டுகள் நடக்க ஆரம்பித்தால் வழக்குகள் தேங்கும் நிலையே வராது என கிண்டலாகக் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகைகளைக் கணிப்பதில் சிஏஜி தவறு செய்துள்ளது எனக் கூறும் கபில் நட்டமே இல்லை என எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று அவர் திருப்பிக் கேட்டார். சிஏஜி அளித்த கணிப்பீடுகளை அவர் ரிப்பிட் செய்து, ராசாவோ கருணாநிதியோ தமது சொத்துக்களை த்ற்சமயம் 1991 விலைக்கு விற்பார்களா என்றும் கேட்டார்.

சீனாவின் அச்சுறுத்தல்கள், நக்சலைட்/மாவோயிஸ்ட் பிரச்சினைகளில் அரசு விட்டேத்தியாக நடந்து கொள்வதையும் அவர் சாடினார். போஃபோர்ஸ் விவகாரத்தில் வருமான வரித்துறை கமிஷன் பெறப்பட்டது உண்மைதான் எனக்க்கூற இன்னும் இல்லவே இல்லை என மத்திய அரசு மறுத்துவரும் கூத்தையும் எடுத்துரைத்தார்.

பிறகு பேச்சு திமுக நோக்கித் திரும்பியது. துளிக்கூட சமரசத்துக்கு இடம் தராமல் அக்கட்சியின் அடாவடிச் செயல்கலை விமரிசனம் செய்தார். இப்போதைக்கு மாற்றாகத் தெரிவது ஜெயலலிதா மட்டுமே. அவரது வாக்கு வங்கி 34 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. கூட்டணிகளைச் சரியாக அமைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் விஜயகாந்தின் ஓட்டு வங்கி 8 சதவிகிதம் மட்டுமே. ஆகவே அவர் இத்தேர்தலில் ஜெயுடன் கூட்டு சேர்வதே நலம் என எடுத்துரைத்தார்.

திமுக செய்யும் குளறுபடிகள், கலைஞர் குடும்பத்தின் எல்லா கிளைகளிலிருந்தும் ஆட்கள் அரசியலுக்கு வந்ததால் பெரியவர் படும் கஷ்டங்கள், நாடு அடையும் துயரங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

அதே சமயம் ஜெயலலிதாவின் மழைநீர் சேமிப்புத் திட்டம், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்கை உறுதியாகக் கையாண்டது ஆகியவர்றையும் எடுத்துக் கூறினார்.

இந்த திமுக ஆட்சி இப்போது போக வேண்டியதன் கட்டாயத்தை பல உதாரணங்களுடன் எடுத்துக் கூறினார்.

பிறகு தேசீய கீதத்துடன் மீட்டிங் நிறைவு பெற்றது.

இப்போது மிகப்பெரிய, மற்றும் அவசரமான பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் உள்ளதால் சுருக்கமாகத்தான் வெளிட முடிந்தது. மன்னிக்கவும்.

இட்லிவடை பதிவில் ஆடியோவைக் கேட்கலாம் என எனது நண்பர் varadhaganesh இப்போதுதான் எனக்கு சேட்டில் தெரிவித்தார், அவருக்கும் என் நன்றி.

இந்த மீட்டிங்குக்கான ஒரு சுருக்க வீடியோ கிடைத்து, அதை கீழே தருகிறேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2011

டோண்டு பதில்கள் 13.01.2011

கண்பத் (மொக்கை கேள்விகள்)
கேள்வி-1. மைலாப்பூரிலிருந்து நங்கநல்லூருக்கு வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
பதில்: N 45B or 45B>Guindy>52L/P/etc.

கேள்வி-2. நங்கநல்லூரிலிருந்து மயிலாப்பூருக்கு திரும்பி வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
பதில்: நங்கநல்லூருக்கு பஸ்ஸில் வரும்போது வாய் கொழுப்புடன் கண்டக்டருடன் சண்டை போட்டிருந்தால் மரியாதையாக நங்கநல்லூர் ரயில் நிலையம் சென்று மயிலைக்கு டிக்கெட் வாங்கவும்

கேள்வி-3. சைதாப்பேட்டை சென்னை 15 என்கிறார்கள் ஆனால் சென்னை 16 அதை அடுத்த கிண்டி இல்லையாம். அதற்கும் அடுத்த St.Thomas mount என்கிறார்கள்.இது என்ன டுபாக்கூர் வேலை?
பதில்: கிண்டி சென்னை-32 ஆயிற்றே அதை ஏன் விட்டு விட்டீர்கள்?


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-4. சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி. சமீபத்தில் ஒரு மேடையில், “ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது” என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின். இப்போது சேரன் நடிக்கும் “யுத்தம் செய்” படத்தை இயக்கியுள்ளார்.
பதில்: எல்லாம் மாயை. சண்டை போடுவார்கள், ஆனால் போட மாட்டார்கள். சண்டை போடுபவருக்கு இவர் சான்ஸ் கொடுத்தால் அவர் போட மாட்டார். சுற்றி நின்று பார்த்து கருத்து சொல்பவர்க்கள் மடையர்கள்.

கேள்வி-5. அரசியலோடு பின்னி பிணைந்தது இரண்டே இரண்டு. அதில் முக்கியமான ஒன்று பிரியாணி. அரசியலில் நுழைய அதிகாரபூர்வமாகவே முடிவெடுத்துவிட்ட விஜய்க்கு அஜீத் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் டாப் கியர் பேச்சு
பதில்: விருந்தின் போது அல்வா பரிமாறப்பட்டதாமா?

கேள்வி-6. 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
பதில்: இரண்டாவதாகவா? முதல் இடத்தில் யாராம்?

கேள்வி-7. ஒரு பத்திரிக்கையில் அதிமுக தலைமையை விமர்சித்து தேமுதிக நிர்வாகிகளின் பெயரில் வெளியான விளம்பரத்திற்கும் தேமுதிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளா
பதில்: பின்னே, கூட்டணி அமைய வேண்டாமா? ஆகவே விஜய்காந்த் செய்வது சரி. அப்படி அமைந்து விட்டால் யாருக்கு பாதிப்பு ஏற்படுமோ அவர் அதற்கு எதிராக சிண்டு முடிவதும் சரிதான் அவரை பொருத்தவரை.

கேள்வி-8.“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த புகார் மனு ஏற்கத்தக்கதே’ என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி மோசடி வழக்கில் ராஜாவை ஒரு குற்றவாளியாக சேர்க்கலாம் என்றும், அவருக்கு எதிராக டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது
பதில்: பிறகு என்ன, சேர்க்க வேண்டியதுதானே. சுப்பிரமணியம் சுவாமியே அதையும் செய்யலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.


நக்கீரன் பாண்டியன்
கேள்வி-9. பொதுவாகவே நடைமுறையில் விலைவாசி குறைப்பில் அரசியல்வாதிகள் ஏன் அதிகம் அக்கறை காட்டுவதில்லை?
பதில்: ஏன் காட்டப் போகிறார்கள்? அதனால் அவர்களோ அவர்களது குடும்பத்தாரோ பாதிக்கப் பட்டால்தானே. அதனால்தான் “ரொட்டி கிடைக்கவில்லையென்றால், மக்காள் கேக் உண்ணட்டும்” என
பிரெஞ்சு அரசி மாரி ஆந்த்வானெத்தும், மக்களது வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது என கருணாநிதியும் கூற முடிகிறது.

கேள்வி-10. தமிழக அரசின் இலவசங்கள்( குறிப்பாக 21 லட்சம் வீடுகள் பற்றிய கலைஞர்தொலைக் காட்சி விளம்பரங்கள்)ஆட்சியை தொடர வைக்குமா?
பதில்: கூடவே நல்ல கூட்டணியை தக்க வைப்பதும் அவசியம்.

கேள்வி-11. 2ஜி ஸ்பெக்ட்ரம்விவகாரம், பீரங்கி கதை ஆயிடும் போலுள்ளதே?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. பிரச்சினையை ஆராய, ஆராய புதுப்புது பூதங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளனவே. ஒரு நிலையில் இதற்கு மேல் தோண்டுவது அபாயம் என விட்டாலும் விட்டு விடுவார்கள்.

கேள்வி-12. பெரும் புகழ் பெற்ற சாகாவரம் பெற்ற எழுத்துக்களின் படைப்பாளிகள் கல்கி சுஜாதா சாவி மீண்டும் உயிர் பெற்று வந்தால்?
பதில்: மறுபடியும் எழுதத் தொடங்கும் தங்களை இற்றைப் படுத்திக் கொள்வார்கள்.

கேள்வி-13. ஆண்டாண்டு காலமாய் மக்கள் சக்தி மகத்தானது என்கிறார்கள். ஒன்றும் சாதிக்க (சமீப காலங்களில்) முடியவில்லையே! ஏன்?
இல்லையே சமீபத்தில் 1977, 1996 ஆகிய ஆண்டுகளில் தோற்கடிக்க முடியாதவர்கள் என சாதாரண அரசியல் பார்வையாளர்களால் மதிப்பிடப்பட்ட இந்திரா காந்தி, ஜெயலலிதா ஆகியோரை மக்கள் தோற்கடிக்கவில்லையா?

Kannan
கேள்வி-14. On a different note, what is your take on Tiruchi Velusamy's report... one of them is below.

பதில்: சுவாரசியமாக உள்ளது.


thARumARu
கேள்வி-15. பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை குறித்த புத்தகம் படித்தீர்களா? அவர் என்ன படிப்பவர்கள் எல்லாம் கேனயர்கள் என நினைக்கிறாரா? ஸ்பெக்ட்ரம் - நடந்தது என்ன? என்று கழகக் கண்மணிகளை விளக்க கூட்டம் நடத்தச்சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கழகம் சார்பில் பல
நூறு காப்பிகள் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையா?

பதில்: பத்ரி அம்மாதிரியெல்லாம் நினைத்து சீப்பாக செயல்படுபவர் அல்ல. அவர் நன்கு யோசித்து தனது கருத்தைக் கூறுகிறார். அவரது முடிவுகள் அதற்கேற்றாப்போல் வந்துள்ளன. அவ்வளவே.

அப்புத்தகத்தை நான் வாங்கவில்லை. பத்ரி தனது வலைப்பூவில் இதுபற்றி எழுதுவதை படித்து வருகிறேன், அவ்வளவே.


மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்த முறை சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/08/2011

டோண்டு பதில்கள் 08.01.2011

கேள்விகள் இருபதை தாண்டி விட்டதால் முதலில் கூறியபடி இப்போதே வெளியிட்டு விடுகிறேன்.

எல்கே
கேள்வி-1: பொதுவாக அத்வைதிகள்(அய்யர் ) சிவன் / விஷ்ணு இருவரையும் வணங்குகின்றனர். ஆனால் , ராமானுஜர் வழி வந்த வைஷ்ணவர்கள் அவ்வாறு இல்லை ஏன்?
பதில்: நீங்கள் கூறுவது எனக்கு புதிய செய்தி. சரித்திரத்தில் நான் அறிந்தவரை குலோத்துங்கச் சோழன் சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லா வைணவர்களையும், ராமானுஜர் உட்பட, வற்புறுத்தியபோது அவர் மாட்டேன் எனக்கூறியது என்னவோ உண்மைதான்.

ராமானுஜர் என்ன எந்த வைணவனுமே அதை ஒப்புக் கொள்ள மாட்டான், இந்த டோண்டு ராகவன் உட்பட.

அதே நேரத்தில் சிவனை மதிக்காமல் இருப்பது என்பதும் என்னைப் பொருத்தவரை நடக்காத காரியமே.

ஆனால் வீரசைவர்களும் சரி வீரவைணவர்களும் சரி எப்போதுமே இருந்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே.

ஆகவே இதில் ராமானுஜர் எதையும் ஸ்பெஷலாகச் செய்ததாக நான் கருதவில்லை.

ஆனால் ஒன்று. ஐயர்கள் வைணவப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள், ஐயங்கார்கள் மாட்டார்கள். ஆகவே பரமேஸ்வரன் என்னும் பெயருடைய ஒரு பார்ப்பனர் ஐயராகத்தான் இருக்க முடியும். ஆனால் நாராயணன், பார்த்தசாரதி, ராகவன் ஆகியோர் ஐயராகவும் இருக்கலாம் ஐயங்காராகவும் இருக்கலாம்.

லட்சுமணன் சாதாரணமாக ஐயர்தான், அதே லட்சுமணனை ஐயங்கார்கள் ராமானுஜம் என்று அழைப்பார்கள். அதற்காக ராமானுஜ ஐயர்களும் இல்லாமல் இல்லை. என்ன குழப்புகிறேனா?

மிளகாய் பொடி
கேள்வி-2. தங்கள் ஊரில் பவர் கட் ஆகிறதா? தாம்பரம் தாண்டினால் மற்ற எல்லா ஊர்களிலும் இன்னும் தொடர்கிறது மின்வெட்டு தினமும் 2 மணி நேரம் .. தற்பொழுது குளிர் காலம்தானே? இன்னும் ஏன் மின்வெட்டு தொடர்கிறது?
பதில்: கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு வைணவத் தலங்களை சந்திக்கும் நிமித்தம் “எனது” காரில் சென்றிருந்தேன். ஹோட்டலில் ரூம் போட்டதுமே நான் கேட்கும் கேள்வி “இந்த ஊரில் எப்போ பவர்கட்” என்பதுதான். நீங்கள் சொல்வது போல தினசரி இரண்டு மணி நேரங்களுக்குக் குறையாது.

ஆனால் சென்னையில் பவர் கட் ஆகும் இடங்களை முந்தைய தினமே பேப்பரில் போடுகிறார்கள். தினசரி எல்லாம் இல்லை. மாதத்துக்கு ஒரு முறை, காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து வரை இருக்கும். அந்த விஷயத்தில் சென்னைக்கு வெளியே உள்ள இடங்கள் பாவம்தான்.

கேள்வி-3. தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?
பதில்: தற்போதைய நிலவரப்படி தமிழ் மிகவும் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் மொழி. ஆங்கிலக் கலப்புடன் உணர்ந்து பேசும் படித்தவர்கள் குறைந்த சதவிகிதததினரே. அதே சமயம் ரயில், பேப்பர் போன்ற எளிய சொற்கள் தமிழாகவே ஆகிவிட்டதும் நிஜமே.

கேள்வி-4. ஜல்லி கட்டு நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா? அதை தடை செய்யவேண்டுமா கூடாதா?
பதில்: நேரடியாக பார்த்ததில்லை, பார்க்கும் ஆசையும் இல்லை. ரத்தத்தைக் கண்டால் அவ்வளவு பயம். அதே சமயம் அதைத் தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எனக்கு கருத்து ஏதும் இல்லைதான்.

மணிகண்டன்
கேள்வி-5. உங்களுக்கு தூங்கும்போது கனவு வருமா ?
பதில்: அமர்க்களமாக வரும். கனவில்லாத தூக்கமே எனக்குக் கிடையாது. என்ன எல்லா கனவுகளுமே நினைவில் இருக்கும் எனக் கூறவியலாது. தூங்கி எழுந்தவுடனேயே பல மறைந்து விடும், ஆனால் கனவு கண்டோம் என்ற ஒரு விஷயம் மட்டும் நினைவிலிருக்கும்.

வாத்தியார் பாடம் நடத்தும்போது தூங்க நேர்ந்தாலும் கனவுகள் வந்துள்ளன.

நான் 20 ஆண்டுகள் தில்லியில் வசித்தபோது என்னை விடாது தொடர்ந்த கனவு பற்றி எழுதியிருப்பதை படியுங்கள்.

அப்படித்தான் பல முறை பறப்பதாகவும் நான் கனவு கண்டுள்ளேன். இதில் என்ன வேடிக்கை என்றால் ஒவ்வொரு முறையும் அக்கனவு வரும்போது, இத்தனை நாள் கனவாகக் கண்டது இப்போது பலிக்கிறது பார் என்ற உணர்வுதான். ஆனால் கடைசியில் எழுந்த உடனேயே இம்முறையும் இதுவும் கனவுதான் என்றவுடன் ஏமாற்றமாக இருக்கும்.

அதே போல எனக்கு அடிக்கடி இன்னொரு கனவும் வரும்.

அதாகப்பட்டது, நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும். நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான்.

இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரியார் வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்கு தயாரா என்று கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட அந்த பதட்டத்தில் மறந்து விடும்.

முழித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும்.

கேள்வி-6 நீங்கள் காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பீர்களா? சோ ராமசாமி தேய்ப்பாரா?
பதில்: நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமான கேள்வியா? நான் தேய்ப்பேன். சோ பற்றிய கேள்வியை நீங்கள் வரவிருக்கும் துக்ளக் மீட்டிங்கில் நிறைந்த சபையில் வைத்து அவரிடமே கேட்டு விடுங்கள்.

கேள்வி-7 நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்களா ? இல்லையென்றால் இந்த கேள்விக்கு பதிலாக ஒரு கவிதை எழுதுங்களேன்.
பதில்: அந்தளவுக்கு பதிவர்களை படுத்தும் எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

கேள்வி-8. நீங்கள் மதியம் தூங்குவது உண்டா? இஸ்ரேல் மொசாத்தில் இருப்பவர்களுக்கு மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?
பதில்: தூக்கம் வந்தால் தூங்க வேண்டியதுதானே. இதில் டோண்டு என்ன, மொசாத் என்ன? பை தி வே, எனக்கு மதியத் தூக்கம் பிடிக்கும். அப்போது கனவு வருவதும் பிடிக்கும்.

கேள்வி-9. உங்களுக்கு சச்சின் டெண்டுல்கருடன் நேரடி அறிமுகம் உண்டா ?
பதில்: இல்லை

கேள்வி-10. Brett lee மற்றும் Bruce lee - இவர்கள் இருவரில் யாருடைய பௌலிங் உங்களை மிகவும் கவர்ந்தது?
பதில்: யார் அவர்கள்?

அருள் (மிளகாய் பொடியின் கேள்வி-3-க்கு துணை கேள்வி)
கேள்வி-11. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் ஏன் அதனுடன் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதில்லை? ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் என்ன தப்பு? அப்படி செய்தால் ஆங்கிலம் அழிந்து விடுமா என்ன? அது என்ன ஆங்கிலத்துக்கு ஒரு நீதி, தமிழுக்கு மற்றொரு நீதி?
பதில்: தாராளமாக பேசலாமே. நான் சமீபத்தில் 1960-61, 1961-62 கல்வியாண்டுகளில் ஹிந்து உயர்நிலை பள்ளியில் பொறியியல் சிறப்பு பாடம் எடுத்து படிக்கையில், தச்சு வேலை கற்றுத் தரும் தச்சர் பெருமாளாச்சாரி என்பவர் டோர் கதவு, விண்டோ ஜன்னல் என்றெல்லாம் கூறுவார். நான் அறிந்து எந்த ஆங்கிலேயரும் அதை ஆட்சேபிக்கவில்லை.


Mukkodan
கேள்வி-12. In my hometown people think the price per vote will be more for 2011 TN Elections because of 2G. What will be the likely going rate per vote?
பதில்: அதுதான் நியாயமும் கூட. ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் தரலாம் என நம்பத்தகாத வட்டங்கள் கூறுகின்றன. ஆனால் ஒன்று, இப்போது இருக்கும் நிலையில் இனாம்களை வாங்கிக் கொண்டு திமுக வுக்கு நாமம் போட்டாலும் வியப்படைவதற்கில்லை

கேள்வி-13. Do you think the Sonia devotee Naveen Chawla(CEC) will be used by DMK/Cong for winning TN elections(like they did in few places in 2009)
பதில்: சாவ்லாதான் ரிட்டயர் ஆகி விட்டாரே. அவரைப் பற்றி ஷா கமிஷன் “unfit to hold any public office which demands an attitude of fair play and consideration for others” என்று கூறியுள்ளது. அவசர நிலையின் காலகட்டத்தில் அவர் தில்லி லெப்டினண்ட் கவர்னருக்கு செக்ரட்டரியாக செயல்பட்டு சஞய் காந்திக்கு ஜால்ரா அடித்தவர்.

கேள்வி-14. Why are these self-proclaimed Science lovers so-called "pagutharivivaadigal", especially in blogosphere, still believing in AIT/AMT, despite proven as fake/conspiracy by so many independent/neutral scientific researches.
பதில்: அவன்களாகவே தங்களை அப்படி பிரகடனப்படுத்திக் கொண்டால் அப்படி ஆகிவிடுவார்களா என்ன? மேலும் AIT/AMT ஆகிய விஷயங்களை விடாப்பிடியாக வைத்திருப்பதன் காரணமே அவன்களது புவ்வாவுக்குத்தான். விடுங்கள். அவன்களுடன் விவாதம் செய்ய எவனுக்கு நேரம் உள்ளது?

hayyram
கேள்வி-15. நீங்கள் ரசித்து படித்த ஜெர்மன் நாவல் அல்லது புத்தகத்தில் ஏதாவது ஒன்றை உரிமம் பெற்றும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம் அல்லவா? மொழிபெயர்ப்பு புத்தகம் வரிசையில் உங்கள் புத்தகமும் இருக்குமே. அப்படி செய்ய ஏதாவது உத்தேசம் உள்ளதா?
பதில்: நான் தொழில் முறை மொழிபெயர்ப்பாளர். நல்ல காசு வந்தால்தான் மொழி பெயர்ப்பேன்.

தொழில் நுட்பக் கட்டுரைகளைத் தவிர்த்து சாதாரண நாவல்களுக்கோ அல்லது பொது புத்தகங்களுக்கோ அடிமாட்டு விலைதான் தருகிறார்கள். எனக்கு அது கட்டாது. ஒரு நாளைக்கு 16 மணி நேரம்தான் எனக்கு மொழி பெயர்க்க அவகாசம் கிடைக்கும். அதை நான் குறைந்தவிலை விஷயங்களுக்காக செலவிட இயலாது.

ஒரு பதிவர் நண்பர் என்னை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அவரது கதைகளை மொழிபெயர்க்க சொன்னார். எனத் ரேட்டைக் கேட்டு மிரண்டு ஒதுங்கி விட்டார். ஆனால் நான் கேட்டவையோ சர்வ சாதாரணமாக எனது வாடிக்கையாள்ர்கள் தரும் ரேட். ஆகவே அதில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.


virutcham
கேள்வி-16. காசிக்கோ அல்லது கைலாஷுக்கோ அரசு யாத்திரை ஏற்ககனவேயே இருக்கா? இல்லை என்றால் அரசு செலவில் புனித யாத்திரை என்று ஒட்டு வங்கி வாக்குறுதியில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் ஏன் இடமில்லை? இந்த பெரும்பான்மை மக்களுக்கு வேறு வழி இல்லை பாதிக்கு பாதி பேர் வேறு வழி இல்லாமல் ஒட்டு போட்டாலும் போதும் என்ற எண்ணமா?
பதில்: முதற்கண் ஒரு விஷயத்தைக் கூறிவிடுகிறேன். கைலாஷ், மானசரோவர், வைஷ்ணோதேவி யாத்திரைகளுக்கு ராணுவ எஸ்கார்ட் உண்டு, தீவிரவாதிகளது அச்சுறுத்தலால்/சீனர்களின் படுத்தலால் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி நீங்கள் கேட்க நினைக்கும் சப்சிடி எதுவும் இந்த யாத்திரைகளுக்காக இருப்பதாகத் தெரியவில்லை.

மதசார்பற்ற அரசு என பொய்யாக பெயரை வைத்துக் கொண்டுள்ளது அரசு. இந்து அறநிலையத் துறை என்று வைத்திருக்கும் அரசு இசுலாமிய அறத்துறை அல்லது கிறித்துவ அறத்துறை என்றெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. சிறுபான்மையினருக்கு தேவையற்ற செல்லம் கொடுப்பது ஓட்டு அரசியல்.

ஆனால் அவ்வாறு அது மோதி விஷயத்தில் இல்லை, அவரது அரசு குஜராத் மக்கள் அனைவருக்குமே மத வேறுபாடு இன்றி நல்லது செய்து வருகிறது. அதைப் பார்த்தாவது மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசும் தம் கொள்கைகளை மாற்றி அமைத்தால் ஒரு ஆரோக்கியமான அரசியல் நிலை இருக்கும்.

நான் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிவேன். ஆனால் பல ஹிந்துக்களுக்கு இந்த விஷயத்தில் மத்திய, மற்ற மாநில அரசுகள் மேல் வருத்தம் இருப்பது நிஜம்.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-17. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
பதில்: தொலைத் தொடர்புதுறை அமைச்சர் என்றாலே உளற வேண்டியதுதான் தேவையான க்வாலிஃபிகேஷன் ஆகி விட்டது என நினைக்கிறேன்.

இரண்டாம் உலக யுத்த முடிவில் ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொன்றான் என்று அமர்க்களப்பட்ட சமயத்தில், அறுபது லட்சம் எல்லாம் இல்லை வெறுமனே நாற்பது லட்சம்தான் என சில பிரகஸ்பதிகள் கூறினதாக படித்துள்ளேன். அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

கேள்வி-18. வசூலில் சற்று முன்னே பின்னே இருந்தாலும், பாராட்டுக்கள் வஞ்சனையின்றி குவிந்து வருகின்றன தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு.
பதில்: அப்படியா? நான் பார்க்கவில்லை இதுவரை. ஆகவே கருத்தேதுமில்லை.

கேள்வி-19 காய்கறிகள் மீது மூன்று மாத காலத்திற்கு, உள்ளூர் வரிகள் விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பதில்: மாநில சட்டசபைக்கு தேர்தல் முன்னாலேயே வந்துவிடும் போலிருக்கிறதே.

கேள்வி-20. விஜய் நடித்த “காவலன்” படம் பொங்கலுக்கு வருகிறது. “சுறா” படத்துக்கு நஷ்டஈடு அளிக்காததால் இப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதில்: அடாவடி கோரிக்கை. அவர்கள் என்ன குழந்தைகளா? கொள்ளை லாபம் வந்தபோது விஜய்க்கு ஏதேனும் பணம் அதிகமாக தந்தார்களா என்ன, இப்போது கேட்க?

கேள்வி-21. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பதில்: கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் கூறியது இளைஞர்களுக்குத்தான், அதுவும் பகல் கனவெல்லாம் அவர் இளைஞர்களைக் கூட காணச் சொன்னதில்லை.


மேலும் கேள்விகள் இருந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/06/2011

டோண்டு பதில்கள் 06.01.2011

பத்மநாபன்
கேள்வி-1: வன்மத்தோடு ஜாதீயம் பேசும் நிலையிலிருந்து தமிழ் வலைப்பூவுலகம் மாறுவதற்கு வழியேயில்லையா ?
பதில்: அது எப்படி நடக்கும்? உண்மை என்னவென்றால், பெரும்பாலும் சாதி இல்லை என்பவன்தான் சாதியை தூக்கிக் கொண்டு அலைகிறான். அவர்களில் தலித்துகள்/பார்ப்பனர் இல்லாத மற்ற சாதியினர் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்யும்போது அதை பார்ப்பனீயம் என சௌகரியமாக பூசி மொழுகுகின்றனர்.

மற்றப்படி சாதி என்பது அவரவர் அஜெண்டாவுக்கு உகந்ததே.

நீச்சல்காரன்
கேள்வி-2: பிரெஞ்சு|ஜெர்மன் டு இங்கிலீஷ் மொழி பெயர்ப்பை கூகிள் செய்யும் பொது உங்கள் மொழி பெயர்ப்பின் தனிச் சிறப்பென்ன அல்லது கூகுளால் உங்கள் தொழில் பாதிக்கப்படுகிறதா?
பதில்: என்ன, என் தொழில் பாதிக்கப்படுமா? சான்ஸே இல்லை.

இது பற்றி நான் எனது ப்ரோஜ் மன்றத்தில் போட்டதை பார்க்கவும்.

There is a lot of (horror) stories about machine translation. My favorite story for the last thirty years goes like this.

The sentence "Out of sight, out of mind" is well known. If you do not see a person for a long time, you tend to forget him. This is true of really famous stars, who suddenly stop acting and fade away from the public gaze. Within a short span of time people just forget them and new people who come on to the scene, have not even heard of them. You got the picture? More about this later.

Let us come back to the sentence, "Out of sight, out of mind". It seems that this sentence was fed into a computer for translation into Russian. The resulting sentence was fed into another computer for translating back into English. The sentence that came out was "Invisible idiot".

You will have to keep in mind that this story has been circulating for more than 30 years and at that time machine translation was not that much known.

Have things become better? I was reading this post about machine translation by google translate and was introduced to this hilarious game.

One sentence in English is to be typed in a box for the purpose of back and forth translation. The moment you click for finding the equilibrium, the machine translation program goes on translating from English into Japanese and back to English and so on, till two successive English sentences are the same. Then you get the message saying that the equilibrium is found.

I give below the result I found. The original sentence describes a beautiful maiden coming to a garden along with her playmates and gets separated from them. She meets a handsome man and falls in love with him. A typical start to a love story.

Original
The young charming heroine out on a game in a garden with her friends gets separated from the latter and wanders around.

into Japanese
彼女の友達と一緒に庭でゲームに小さな魅力的なヒロインを、後者から分離されるの中をうろうろ。

back into English
The heroine in the game in a small attractive garden with her friend, separated from the parade around the latter.

back into Japanese
彼女の友人は、後者の周りのパレードで区切られた小さな魅力的な庭園では、ゲームでのヒロイン。

back into English
Her friend, a charming garden, separated by a small parade around the latter, the heroine of the game.

back into Japanese
彼女の友人は、魅力的な庭園は、後者の周りに小さなパレードで区切られた、ゲームの主人公。

back into English
Her friend, an attractive garden, separated by a small parade around the latter, the hero of the game.

back into Japanese
彼女の友人、魅力的な庭園は、後者の周りに小さなパレードで区切られた、ゲームの主人公。

back into English
Her friend, an attractive garden, separated by a small parade around the latter, the hero of the game.

Equilibrium found! That's deep, man.

I am curious. Let us now try the sentence "Out of sight, out of mind" and see what we get. Here goes:

Original
Out of sight, out of mind

into Japanese
視界の外に心の

back into English
Heart out of sight

back into Japanese
心臓が視力

back into English

Eye heart

back into Japanese
眼部

back into English
Eye

back into Japanese
アイ

back into English
I

back into Japanese
わたし

back into English
I

Equilibrium found!

There you are. Have a nice day.

மிளகாய் பொடி has left a new comment on your post "உத்தம புத்திரன் - நேர்மறை எண்ணங்களுடன் கூடிய படம்":

கேள்வி-3. நீங்க எந்தெந்த வெளிநாட்டிற்கு சென்றுள்ளிர்கள்?
பதில்: அதற்கெல்லாம் ஏதோ பாஸ்போர்ட் என்கிறார்களே, அதை வாங்க வேண்டுமே.

கேள்வி-4. அமர்நாத் குகை சென்றுள்ளிர்களா? செல்லும் எண்ணம் உள்ளதா?
பதில்: இல்லை, இல்லை.

கேள்வி-5. சித்தர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? எதாவது சித்தரை meet பண்ணி இருகிறீர்களா?
பதில்: அபூர்வ பிறவிகள். அவர்களை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை என நினைக்கிறேன்.

கேள்வி-6. நீங்கள் ink pen உபயோகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... தற்பொழுது யாராவது ink pen உபயோகிக்கிறார்களா?
பதில்: இப்போது இங்க் பேனாக்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. அவற்றின் தொழில் நுட்பம் தேக்க நிலையை அடைந்து நின்று விட்டது. பால் பாயிண்ட் பேனாக்கள், அதுவும் உபயோகித்த பிறகு தூக்கி எரியும் வகைதான் இப்போது கிட்டத்தட்ட எல்லோராலும் பாவிக்கப் படுகின்றன.

முன்பெல்லாம் ஒரு இங்க் பேனா வாங்குவது என்பது ஒரு மாணவனுக்கு பெரிய விஷயம். ஆனால் இப்போது? வேறு விஷயங்கள் அவன் கவனத்தை ஈர்க்க வந்து விட்டன.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-7. சென்னையில் நேற்று நடந்த வைரமுத்துவின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொள்வதாக இருந்தது. அழைப்பிதழில் பாரதிராஜா பெயர் இடம் பெற்றிருந்தும் அவர் இந்த விழாவை புறக்கணித்துவிட்டார். அவர் நிகழ்ச்சிக்கு வராதது பலவித யூகங்களை கிளப்பியிருக்கிறது.
பதில்: உண்மைத் தமிழனுக்கு அனுப்பியிருக்க வேண்டிய கேள்வி. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஈகோ பிரச்சினைகளாகத்தான் இருக்கும்.

கேள்வி-8. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் 200 தியேட்டர்கள் கூட ஒப்பந்தம் ஆகவில்லையாம். ரொம்பவே டென்ஷனோடு நடந்தது சென்சார். ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பை கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி!
பதில்: இன்னுமா தன்னை ஊர் நம்புவதாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்?

கேள்வி-9. ஆடுகளம் இசை வெளியீட்டு விழாவில் இரண்டுபேர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது். ஒருவர் நடிகர் சூர்யா. மற்றொருவர் இயக்குனர் ஷங்கர். சூர்யா பேசும்போது “நான் தனுஷ் ரசிகன்… அவர் இயக்குனர்களின் நடிகர்” என்று ஈகோ இல்லாமல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
பதில்: பெருந்தன்மையான தந்தையைப் பெறும் பேறு பெற்ற சூர்யா அவ்வாறு இருப்பதில் என்ன ஆச்சரியம்? அது சரி, ஷங்கர் என்ன பேசினாராம்?


கேள்வி-10. பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர்
பதில்: முதலில் ல எதைக் குறிக்கிறது என்பதை விரிவாகக் கூறுங்கள்.


கேள்வி-10. தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களில் திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
பதில்: கருணாநிதிக்கென்ன, அவர் தேவையானால் டாஸ்மாக் பாக்கெட்டுகளிலும் தன் உருவத்தை பொறித்துக் கொள்ளட்டுமே.


மீண்டும் மேலே கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/02/2011

உத்தம புத்திரன் - நேர்மறை எண்ணங்களுடன் கூடிய படம்

இன்று காலை எதேச்சையாக உத்தம புத்திரன் படத்தின் ஒரு காமெடி க்ளிப்பிங்கை டி.வி.யில் பார்த்தேன். அமர்க்களமாக இருந்தது. சரி மீதி காமெடி காட்சிகளையும்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் யூ ட்யூப்புக்கு போய் உத்தமபுத்திரன் என ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிட்டு, தேடினால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல முழுப்படமே கிடைத்தது.

அது கீழே:



என்ன, கிட்டத்தட்ட ஒரு ஜிபி பிடிக்கும் அதை உங்கள் கணினியில் பார்க்க. எது எப்படியாயினும் பார்க்க வேண்டுமானால் உடனே பார்த்து விடவும். ஏதாவது போட்டுக் கொடுக்கும் பசங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இந்த வீடியோவையே தூக்கி விடலாம். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் அந்த டேப்.

நான் ஏற்கனவேயே ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, முதன் முதலில் தனுஷை பார்க்க எனக்கு பிடிக்காமலிருந்தாலும், இப்போது பிடித்து விட்டது. காமெடியில் பின்னுகிறார். அதுவும் விவேக்கை வயிறு கலங்க வைக்கும் காட்சிகளும் அற்புதம்.

இன்னொரு விஷயம். இப்படத்தின் சில வசனங்கள் ஒரு குறிப்பிட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பிடிக்காமல் ஆட்சேபணை எல்லாம் தெரிவித்தார்களாம்.

அப்படி ஒன்றும் ஆட்சேபகரமாகத் தெரியவில்லையே (இந்த வீடியோ முழு வசனங்களையும் உள்ளடக்கியது என அறிகிறேன்)

இப்படத்தில் எனக்கு பிடித்ததே தனுஷின் நேர்மறையான எண்ணங்கள்தான். இது ஒரிஜினலாக தெலுங்கில் வந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கென்னவோ இது ஒரு ஹிந்திப்படமாகத்தான் முதலில் வந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/01/2011

டோண்டு பதில்கள் 01.01.2011

2011-ஆண்டின் முதல் பதிவுக்கு முரளி மனோகரின் அறிமுக உரை:
“டோண்டு பெரிசு நியாயஸ்தர். மீண்டும் கேள்வி பதில்கள் பதிவு வந்த போதே சொன்ன விஷயம்தான். பதிவுகள் ஒவ்வொரு வியாழனன்றும், அல்லது ஒவ்வொரு இருபது கேள்விகளுக்கும் (எது முதலில் வருகிறதோ) வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் ஒரே ஒருத்தர் 20 கேள்விகளை கேட்டு வைத்தார். சுதாரித்துக் கொள்வதற்குள் மேலும் இருவர் மேலதிகமாக பத்துக் கேள்விகள் கேட்க, இப்போதே ரிலீஸ் செய்ய வேண்டியதாயிற்று”.

நக்கீரன் பாண்டியன்
கடந்த 2010 ஆண்டில்: (1.1.2010 to 31.12.2010):
கேள்வி-1. உங்களை கவர்ந்த பிற பதிவாளரின் பதிவு,காரணம்?
பதில்: ஜெயமோகனின் பதிவு, மபொசி, காமராஜ், ராஜாஜி

அரைவேக்காட்டு திராவிட அரசியல்வாதிகள் இவர்களைப் பற்றி - அதிலும் ராஜாஜி சம்பந்தமாக - கூறிய பல அவதூறுகளுக்கு ஆணித்தரமான பதில் ஜெயமோகன் தனக்கே உரித்தான அழகுதமிழில் தந்துள்ளார்.

கேள்வி-2. உங்களுக்கு மிகவும் பிடித்த உங்கள் பதிவு?
பதில்: இஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலைப் பாராட்டுகிறேன்.

கேள்வி-3. வெகுவாய் விமர்சனத்துக்குள்ளான உங்கள் பதிவு?
பதில்: பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

கேள்வி-4. அதிக பின்னூட்டங்கள்/பாரட்டுக்கள் பெற்ற உங்கள் பதிவு?
பதில்: அதிக பின்னூட்டங்கள் பெற்றதும் பார்வதி அம்மாள் பற்றிய பதிவுதான். ஆனால் வரலாறு காணாத வகையில் நெகடிவ் பின்னூட்டங்கள்.

கேள்வி-5. யாரும் கண்டு கொள்ளாத பதிவு?
பதில்: சோவின் எங்கே பிராமணன் சம்பந்தமான பல பதிவுகள்

கேள்வி-6. அடுத்த ஆண்டில் பதிவுகளில் என்ன மாற்றம் செய்ய்லாம் என் தீர்மானித்துள்ளீர்கள்?
பதில்: ஏற்கனவேயே செய்து விட்டது, ஹிட் கவுண்டரை தூக்கியதுதான். ஒரு லட்சம் ஹிட்கள் வருவதற்கான கால அவகாசம் மிகவும் குறைந்து கொண்டே போனதால், நண்பர்களுக்கு நன்றி என்று அடிக்கடி பதிவு போடுவது போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே கவுண்டரை தூக்கி விட்டேன்.

கேள்வி-7. நீங்கள் பார்த்த திரைப் படங்களில் உங்களுக்கு பிடித்தது?
பதில்: போன ஆண்டு ஒரே ஒரு படம்தான் தியேட்டரில் பார்த்தேன் என நினைக்கிறேன். அதுதான் நண்பேண்டா புகழ் பாஸ் என்னும் பாஸ்கரன்.

யூ ட்யூப்பில் பார்த்த படம் ஆடும் கூத்து மனதைக் கவர்ந்தது.

கேள்வி-8. அய்யையோ இந்த படத்தை பார்க்காமால் விட்டோமே என உள்ள படம்?
பதில்: அப்படி ஒரு படமுமே இல்லை. எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் வேலன், வெற்றிவேல் காம்ப்ளக்சுக்கு போகக் கூட அவ்வளவாக விருப்பம் இல்லை.

கேள்வி-9. வசூலில் பெரும் சாதனை படைத்த படம் உங்கள் மதிப்பீட்டில்?
பதில்: Harry Potter and the deathly hallows-part-1

கேள்வி-10. அன்பின் ஆழத்தை இயல்பாய் கவிதையாய் வடித்தெடுத்த மிஸ்கின் அவர்களின் நந்தலா போல் இனியொரு படம் வருமா?
பதில்: இப்படத்தை நான் பார்க்கவேயில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை. பார்க்க விரும்பவும் இல்லை, ஏனெனில் அதன் கதை நான் கேட்டவரை சங்கடப்படுத்தியது என் மனதை.

கேள்வி-11. உங்களை பாதித்த மிகவும் சோகமான நிகழ்ச்சி?
பதில்: சாலை விபத்தில் எனது பெரியப்பாவின் பேத்தி அகால மரணமடைந்தது.

கேள்வி-12. உங்களை அதிக குஷிபடுத்திய நிகழ்வு?
பதில்: அயோத்யா பற்றிய நியாயமான தீர்ப்பு

கேள்வி-13. ஆன்மீக சூற்றுலா சென்ற தலங்களில் மிகவும் பிடித்த திருத்தலம்?
பதில்: தென்திருப்பேரை

கேள்வி-14. எந்த அரசியல் தலைவரின் செயல்பாடு சிறப்பாயிருந்தது?
பதில்: நரேந்திர மோதி

கேள்வி-15. புத்தாண்டில் உங்களின் புதிய தீர்மானம்?
பதில்: வழக்கம்போல புதியனவற்றைக் கற்றுக் கொண்டே போவதுதான். அப்போதுதானே மனது இளமையாக இருக்கும்!

கேள்வி-16. உங்களுக்கென தனியாய் வெப் தளம் அமைக்கும் எண்ணம் உண்டா?
பதில்: ஏற்கனவே இரண்டு தளங்கள் உள்ளனவே, 1 மற்றும் 2

கேள்வி-17. பேஸ்புக்கில் இணையும் உத்தேசம் உண்டா?
பதில்: ஏற்கனவே அதில் இணைந்துள்ளேன், ஆனால் செயலாக இல்லை. ட்விட்டருக்கு மட்டும் அவ்வப்போது வருவதுண்டு.

கேள்வி-18. 2ஜி விவகாரம் என்னவாகும்?
பதில்: மேல் மட்டம் வரைக்கும் எல்லோருக்கும் பங்கு போனதால் ராசா காப்பாற்றப்படுவார் என்றுதான் தோன்றுகிறது.

கேள்வி-19. கல்மாடியின் அரசியல் எதிர்காலம்?
பதில்: ராசா மாதிரி மேலே பங்குகள் செல்லாமலிருந்தால் ரயில்வே அமைச்சர் எல். என். மிஷ்ரா என்பவருக்கு சமஸ்திபூரில் நேர்ந்த கதிதான் அவருக்கும்.

கேள்வி-20. mobile number portability -உங்கள் கருத்து?
பதில்: வேண்டாத வேலை என்பது எனது கருத்து. வேறு சேவை அளிப்பாளரிடம் சென்றால் என்ன, அந்த நம்பரை முக்கியமானவர்களுக்கெல்லாம் கூற வேண்டியதுதானே.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-21. ஓயாமல் இசையமைத்தது போதும்… வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.
பதில்: அவருக்கு அது கட்டுப்படியாகுமா? தூங்கும்போது கூட காலை ஆட்டிக் கொண்டு தூங்க வேண்டும். இல்லாவிட்டால் செத்தான் என மற்றவர்கள் மலர் வளையம் எல்லாம் வைத்து உத்திரக் கிரியைகள் செய்து விடுவார்கள்.

என்னைப் பொருத்தவரை எனது தொழிலில் ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

கேள்வி-22. செல்வராகவன், யுவன், தனுஷ் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கிறது. இவர்களின் முந்தைய படஙகள் எல்லாமே ஹிட் என்பதால் இதையும் வெற்றிப்படமாக எதிர்ப்பார்க்கலாம்.
பதில்: ஆம், எதிர்ப்பார்க்கலாம். முதலில் தனுஷ் எனக்கு பிடிக்காது. இப்போது என்னவோ பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் காமெடியிலும் பின்னுகிறார்.

கேள்வி-23. தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது. 2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டா கல்யாணங்களையும் கண்டது.
பதில்: நயனதாரா, பிரபுதேவா?

கேள்வி-24. நீரில் ஓடும் கார் என்ற ரத்தன் டாடாவின் கனவு நனவாகும் நாள் ‌வெகுதொலைவில் இல்லை என்று பிரபல விஞ்ஞானி சி என் ஆர் ராவ் தெரிவித்துள்ளார்.
பதில்: அது சீக்கிரம் நடக்கட்டும். எங்கே குஜராத்திலா? இரட்டிப்பு மகிழ்ச்சி.

கேள்வி-25. இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது.
பதில்: கருத்து ஏதுமில்லை.

ரமணா
கீழ்கண்டோரின் செயல்களை பார்க்கும் போது உங்கள் மனசாட்சி என்ன சொல்லும்?
ஒட்டுமொத்த பதில்: முதற்கண் கேள்விகளின் சொற்களே தவறு. நான் ஏதேனும் தவறாகச் செய்தால் என்னை வந்து கேட்க வேண்டியது என மனசாட்சி. அதே போல ஒரு புது முடிவு எடுக்கும்போது எது நியாயம் என எனது மனசாட்சி கூறுகிறதோ அதன்படி முடிவு எடுக்க வேண்டும். அதை விடுத்து கீழே உள்ள சினோரியோக்களுக்கெல்லாம் எனது மன்சாட்சி என்ன கூறவியலும்?

எனது கருத்து என்ன என்றுதான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன், ஆகவே அவற்றை கூறுகிறேன்
கேள்வி-26. பாதசாரிகளிடம் வழிப்பறி செய்யும் வழிப்பறி திருடர்கள்
பதில்: மோட்டார்களில் செல்வோரை மட்டும் வழிப்பறி செய்யலாம் என்றா கூறுவீர்கள்?

கேள்வி-27. நள்ளிரவில் வீடு புகுந்து பிறர் சொத்தை அபகரிக்கும் கொள்ளையர்கள்
பதில்: நைட் ட்யூட்டிக்காக சார்ஜ் செய்யாமல் இருந்தால் போதாதா?

கேள்வி-28. அநியாய வட்டிக்கு (மீட்டர் வட்டி) கடன் கொடுத்து ஏழை எளியோரை வஞ்சிக்கும் லேவா தேவிக்காரர்கள்
பதில்: பல கடன்கள் தேவையற்ற செலவுகளுக்குக்காகத்தான் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஐம்பதுகளில் வெளியான மதர் இந்தியா என்னும் ஹிந்திப் படம் அதை விளக்குகிறது. தனது கல்யாணத்தை நடத்த ஒருவன் கடன் வாங்கி நாசமாகப் போகிறான்.

வெறுமனே கோவிலுக்கு போய் தாலி கட்டியிருந்தாலோ, அல்லது ரெஜிஸ்த்ரார் அலுவலகத்துக்கு போய் சில ரூபாய்களில் முடிந்திருக்க வேண்டிய விஷயம் இவ்வளவு சீரியசாகப் போய் அவனது உயிரையே எடுத்து விடுகிறது.

அதே சமயம் பல கடன்காரர்களும் லேசுபட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு கடன் கொடுத்தா நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற ரேஞ்சுக்கு கடன் தந்தவர்களை பரிதவிக்க வைப்பவர்கள்.

கேள்வி-29. உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்ப்போர்
பதில்: பல நேரங்களில் தட்டுப்பாட்டையே இவர்கள் போன்ற சமூக விரோதிகள்தான் உருவாக்கி பதுக்கல் வேலைகளைச் செய்கின்றனர். தூக்கு தண்டனை என்பது கூட அவர்களுக்கு போதாது.

கேள்வி-30. வியாபரத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் (பொருளே இல்லாமல் -பார்க்காமால்- மார்ஜின் பணத்தை மட்டும் வைத்து)) ஆன்லைன் எனும் தந்திரம் கொண்டும திடீர் பணக்காரராய் மாறிவரும் நவீனர்கள்( தங்கம், வெள்ளி, வெள்ளைப் பூண்டின் விலை உச்சத்தில் -உதாரணம்)
பதில்: ஆன்லைன் வர்த்தகம் பற்றி போன பதிவில் கூறியதைத் தவிர வேறு என்ன புதிதாகக் கூறிவிடப் போகிறேன்?

மேலும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது