ஒரு பழைய படம். பெயர் மறந்து விட்டது. அதன் பெயரை யாராவது கூற இயலுமா? கதை சுருக்கம் இதோ.
கதை 1973-ல் நடக்கிறது. முதல் காட்சியில் சௌகார் ஜானகி விருவிரென்று ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். வீட்டுச் சாமான்களை ஒழுங்கு செய்ய ஆரம்பிக்கிறார். வீட்டிலிருக்கும் மாஸ்டர் ஸ்ரீதருக்கும் மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
ஏனெனில் சௌகார் ஜானகி முதன் முறையாக அவ்வீட்டினுள் வருகிறார். பிறகுதான் தெரிகிறது அவர் மனநிலை பிறழ்ந்தவர் என்று. அவரைப் பொருத்தவரை அவர் 1961-லேயே வாழ்கிறார். அப்போது அந்த வீட்டில் அவர் குடியிருந்திருக்கிறார். அவரது மைத்துனன் சசிகுமாரின் காவலையும் மீறி தன் பழைய வீட்டுக்கு வந்து விடுவதால் ஒரே குழப்பம்தான் போங்கள்.
அவர் கணவன் ஏ.வி.எம். ராஜன் வேறு அவர் பங்குக்கு அப்போதுதான் அந்த வீட்டுக்கு வந்து சேர கலாட்டா இன்னும் அதிகரிக்கிறது. அவர் செய்யாத ஒரு கொலைக்காக (உண்மையில் அது தற்கொலை; இறந்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா) 12 வருடம் சிறையில் இருந்து விட்டு அப்போதுதான் அங்கு வருகிறார். மாஸ்டர் ஸ்ரீதர்தான் தன் மகன் என்று அவரைக் கட்டித்தழுவ அவரோ மிரள, ஒரே கலாட்டாதன்.
பிறகு முன்கதை தெரிந்தவுடன் பார்வையாளர்களை ஒரு சோகம் கவ்விக் கொள்கிறது. இப்போது மருத்துவர் ஆலோசனை பேரில் 1961 காட்சியமைப்பை அவ்வீட்டில் உருவாக்கி நாயக நாயகியரை சந்திக்கச் செய்ய, சௌகார் ஜானகிக்கு பயைழ ஞாபகம் திரும்புகிறது. ஏ.வி.எம். ராஜனைக் கட்டிக் கொண்டு அவர் கதறித் தீர்த்து விடுகிறார். மாஸ்டர் ஸ்ரீதரும் மற்றோரும் உறைந்துப்போன நிலையில் அக்காட்சியைப் பார்க்க, நானும் உறைந்துப் போனேன்.
திடீரென்று இப்படம் என் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் தலைப்பை மறந்து விட்டேன். யாராவது கூற இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
20 hours ago
2 comments:
இன்று காலையில் ராஜ் டிவியிலோ/ ராஜ் டிஜிடல் ப்ளஸிலோப் பார்த்த்தாக ஞாபகம். அந்தப் படமா தெரியாது, ஆனால், நீங்கள் சொன்ன எல்லா நடிகர்களும் அதில் வருகின்றார்கள். கருப்பு வெள்ளை திரைப்படம். படத்தின் பெயர் "பிரார்த்தனை"
நான் சொன்ன ப்ளாட்தானா? படம் முழுக்கப் பார்த்தீர்களா? நான் சொன்னக் காட்சிகள் வந்தனவா? பிரார்த்தனை என்றப் பெயர் கேட்டதும் அதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment