Palindrome என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. இது எல்லா மொழிகளிலும் உண்டு. இடதிலிருந்து வலமாகவோ வலதிலிருந்து இடமாகவோ எப்படி படித்தாலும் ஒன்று போலவே வரும் அவை. தெனாலிராமன் கதையிலும் வருகிறது அது.
அவன் மேல் கருணை கொண்டு காளி அவனுக்கு வரமளிக்கிறாள். "நீ நல்ல விகடகவி ஆவாய், அரசவையில் பேரும் புகழும் பெற்று நல்ல பொருளும் ஈட்டுவாய் என காளி அவனிடம் கூற, அவன் காளியை இவ்வாறு துதிக்கிறான். "அன்னையே, விகடகவி என்னும் சொல் திருப்பிப் போட்டாலும் அப்படியே வருகிறது, நல்ல வரம் தந்தீர்கள்".
நான் சமீபத்தில் 1953-ல் சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் உள்ள சாமாராவ் ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் அம்மாதிரியான இரண்டு சொற்றொடர்களை தந்தார்.
1. தேரு வருதே
2. மோரு போருமோ
மூன்று சொற்கள் இம்மாதிரியும் கொடுத்தார்.
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
Row மற்றும் Column இரண்டு வகையிலும் அவை ரிபீட் ஆகும்.
என் நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே தருவேன். இதே ரவி எனக்கு முன்னால் அனுப்பிய இரு மின்னஞ்சல்கள் கீழ்க்கண்ட பதிவாய் வந்துள்ளன. அவருக்கு என் நன்றி.
துணைவியின் பிரிவு
மென் பொருள் நிபுணராக விஜயகாந்த்
இப்போது அவர் அனுப்பிய மின்னஞ்சல்:
Dan Hoey, who had recently graduated, wrote a C program to look for and construct the following beauty:
A man, a plan, a caret, a ban, a myriad, a sum, a lac, a liar, a hoop, a pint, a catalpa, a gas, an oil, a bird, a yell, a vat, a caw, a pax, a wag, a tax, a nay, a ram, a cap, a yam, a gay, a tsar, a wall, a car, a luger, a ward, a bin, a woman, a vassal, a wolf, a tuna, a nit, a pall, a fret, a watt, a bay, a daub, a tan, a cab, a datum, a gall, a hat, a fag, a zap, a say, a jaw, a lay, a wet, a gallop, a tug, a trot, a trap, a tram, a torr, a caper, a top, a tonk, a toll, a ball, a fair, a sax, a minim, a tenor, a bass, a passer, a capital, a rut, an amen, a ted, a cabal, a tang, a sun, an ass, a maw, a sag, a jam, a dam, a sub, a salt, an axon, a sail, an ad, a wadi, a radian, a room, a rood, a rip, a tad, a pariah, a revel, a reel, a reed, a pool, a plug, a pin, a peek, a parabola, a dog, a pat, a cud, a nu, a fan, a pal, a rum, a nod, an eta, a lag, an eel, a batik, a mug, a mot, a nap, a maxim, a mood, a leek, a grub, a gob, a gel, a drab, a citadel, a total, a cedar, a tap, a gag, a rat, a manor, a bar, a gal, a cola, a pap, a yaw, a tab, a raj, a gab, a nag, a pagan, a bag, a jar, a bat, a way, a papa, a local, a gar, a baron, a mat, a rag, a gap, a tar, a decal, a tot, a led, a tic, a bard, a leg, a bog, a burg, a keel, a doom, a mix, a map, an atom, a gum, a kit, a baleen, a gala, a ten, a don, a mural, a pan, a faun, a ducat, a pagoda, a lob, a rap, a keep, a nip, a gulp, a loop, a deer, a leer, a lever, a hair, a pad, a tapir, a door, a moor, an aid, a raid, a wad, an alias, an ox, an atlas, a bus, a madam, a jag, a saw, a mass, an anus, a gnat, a lab, a cadet, an em, a natural, a tip, a caress, a pass, a baronet, a minimax, a sari, a fall, a ballot, a knot, a pot, a rep, a carrot, a mart, a part, a tort, a gut, a poll, a gateway, a law, a jay, a sap, a zag, a fat, a hall, a gamut, a dab, a can, a tabu, a day, a batt, a waterfall, a patina, a nut, a flow, a lass, a van, a mow, a nib, a draw, a regular, a call, a war, a stay, a gam, a yap, a cam, a ray, an ax, a tag, a wax, a paw, a cat, a valley, a drib, a lion, a saga, a plat, a catnip, a pooh, a rail, a calamus, a dairyman, a bater, a canal-Panama.
This is the world's longest PALINDROME. (The letter in bold italics is the center of the palindrome)
தமிழில் இம்மாதிரி நிரல் எழுத முடிந்தால் நம் மென்பொருள் வித்தக நண்பர்கள் யாராவது இதை முயற்சி செய்யலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
23 comments:
கும்பகோணம் அருகே சுவாமி மலை கோவிலில் ஒரு தேர் போன்ற வடிவத்தில்
ஒரு மிகப்பெரிய கவிதை ஒன்று பார்த்த நினைவு. யாராவது புகைப்படம் எடுத்து அனுப்பினால் நல்லது.
டோண்டு சார்..
சிவாஜி வாயில ஜிலேபி வரைக்கும் புரியுது.. அதுக்கப்புறம்.. இந்த ஞான சூன்யத்துக்கு ஒன்னும் புரியல.. நம்ம பொறியாளர்ங்க கிட்டத்தான் கேக்கணும்..
"இரண்டு பதிவுக்கு முன்னாடி 10 கேள்வி கேட்டீங்களே?அதுக்கு பதில் இன்னும் போடலையே?"
சரியாப்போச்சு, நீங்கதான் பதில் போடணும் சார். முடியல்லேன்னா கேரி ஓவர் செஞ்சு அடுத்தப் பதிவு போட வேண்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் நண்பர் (ப்ளாக்கராக அவர் உற்சாகம் காண்பிக்கவில்லை) எனக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். கணினி நிரல் இல்லாமலேயே அக்காலத்திலேயே இந்த பாலிண்ட்ராம் இருந்திருக்கிறது.
"தமிழில் நான்கு
வகைக் கவிகள் உள்ளன.
அவற்றுள் சித்திரக்
கவி வகையில் மாலை
மாற்று எனப்படும்
கூaலிநடரஒமe
அடங்கும். மாலை
மாற்று என்றால் என்ன?
ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை மாலை
மாற்றென மொழி
ஒரு செய்யுளiன் கடைசி
எழுத்தை முதலாக
வைத்துக் கொண்டு
பின்னாலிருந்து
திருப்பி எழுத்துக்
கூட்டிவாசித்துக்
கொண்டு முதல்
எழுத்துக்கு வர
வேண்டும். ஜபமாலையை
முன்னிருந்து
பின்னும்,
பின்னிருந்து
முன்னுமாக
உருட்டுகிறோம்
அல்லவா? அந்த முறையை
ஒத்திருப்பதால்,
(ஜப)மாலை மாற்று
என்று பெயர் பெற்றது.
மாலை மாற்றுப்
பாடுவதில்
சம்பந்தர் மன்னர்.
ஒரு முழுப்பதிகமே
அவர் பாடியுள்ளார்.
மாலைமாற்றுத்
திருப்பதிகம்.
பாரின் மலிகின்ற
புகழ் நின்ற தமிழ்
ஞானசம்பந்தன் என்று
அவர் தன்னையே
அழைத்துக் கொள்வது
எவ்வளவு பொறுத்தம்.
--------------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்
யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா
நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ
யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா
மேலேபோகா மேதேழீ
காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா
ழீதேமேகா பொலேமே
நீயாமாநீ யேயாமா
தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா
மாயாயேநீ மாயாநீ
நேணவரா விழயாசைழியே
வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே
யேழிசையாழவி ராவணனே
காலேமேலே காணீகா
ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ
காணீகாலே மேலேகா
வேரியுமேணவ
காழியொயே
யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே
யேயொழிகாவண
மேயுரிவே
நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி
ளாயுழிகா
காழியுளானின
யேனினயே தாழிசயா
தமிழாகரனே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
முதல் பாடலுக்கு
மட்டும் இப்போது
பொருள்ஈ
யாம் = சிற்றுயிர்கள்
ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது
பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே
(கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும்,
பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை
ஏந்தியிருப்பவனே
ஸ்ரீ
காமா = அனைவராலும்
விரும்பப் படுபவனே
ஸ்ரீ
காண்நாகா = காணத்
தகுந்தவாறு
பாம்புகளை
அணிந்துள்ளவனே ஸ்ரீ
காணா = காண
முடியாதவாறு
காமா =
மன்மதனை(அனங்கனாக)
செய்தவனே ஸ்ரீ
காழீயா =
சீர்காழிக்குத்
தலைவனே ஸ்ரீ
மாமாயா = பெரிய
மாயைகளைச்
செய்தலில் வல்லவனே
ஸ்ரீ
மா = கரிய(கொடிய)
மாயா =
மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக்
காத்தருள்வாயாக"
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் மேலே சொன்ன மாற்றுமாலையைக் காண நீங்கள் செல்ல வேண்டிய உரல்கள்:
http://kumar.bse.vt.edu/malai/index.html
http://kumar.bse.vt.edu/malai/malaisri.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
சம்பந்தர் பற்றிய பாடல் சுட்டிகளுக்கு டோண்டு அவர்களுக்கு நன்றி.
நன்றி கார்த்திக்ராமாஸ் அவர்களே. முக்கியமாக பாலிண்ட்ரோமுக்கு தமிழில் அழகாக மாலை மாற்று என்றக் காரணப்பெயர் எனக்கு மிகப் பொருத்தமாகவே தோன்றுகிறது.
சூபர்சுப்ரா அவர்களே, கவிதையின் பொருள் xஆபகம் இருக்கிறதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதற்கே அசந்தால் எப்படி நாட்டாமை அவர்களே. பாடல்களை அனுப்பிய என் நண்பர் முதல் பாடலுக்கு மட்டுமே பொருள் கொடுத்துள்ளார். மற்றப் பாடல்களின் பொருள்களையும் எதிர்ப்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
அது சரி, என் 10 கேள்விகளுக்கு விடை கூற முயற்சிப்பதுதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எங்க மாதிரி ஆட்களுக்கு காக்கா, தாத்தா- மாதிரி சின்ன பாலிண்ட்ரோம் தான் தெரியும். அசத்தலான உதாரணங்கள். என் பொண்ணுக்குக் காட்டணும்.
முயன்றால் முடியாதது என்று எதுவும் உலகிலில்லை தாணு அவர்களே. உங்கள் பெண்ணுக்கு நன்றாகத் தமிழ் கற்றுக் கொடுங்கள். குழந்தைக்கு என் ஆசிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரண்டாம் பாடலும் அதன் பொருளும் இப்போது நான் தருவேன்:
"யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா"
யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆயீன்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க
HE who is the ultimate goal of sacrices!
HE who plays the harp;
HE who attains compassionate form;
HE who functions as the Destroyer;
HE who is Mother to all whomsoever;
HE who is imponderable;
HE who adorns a garland of "Aththi " flowers;
HE who is surrounded by the flock of the wives of the Thaarukaa Forest Rishis!
O LORD of Sirkaalzi!
Deliver me from all miseries!
பொங்கு தமிழ் எழுத்து மாற்றியில் சில எழுத்துக்கள் கட்டமாக வந்தன. முடிந்தவரை போட வேண்டிய எழுத்துக்களை போட்டுள்ளேன். தவறிருப்பின் மன்னிக்க.
அன்புடன்,
டோண்டு டாகவன்
நீ வாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ
பூமாலை நாறு நீ பூமேக லோகமே
பூ நீறு நாலைமா பூ
குறிப்பு: இவை நான் எங்கேயோ படித்தது...
இரண்டாவது செய்யுளின் திருத்தம்!!
பூவாளை நாறு நீ பூமேக லோகமே
பூ நீறு நாளை வா பூ
மிக்க நன்றி பஸ்பாஸ் அவர்களே,
பாடல்களின் பொருள் கிடைக்குமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னியுங்கள்...
நான் சிறுவனாக இருந்த பொழுது இச்செய்யுளை கேட்டதாக ஞாபகம். சரிவர அர்த்தம் நினைவில் இல்லை. முதல் செய்யுள் இறைவனையோ தலைவனையோ நோக்கி உருகுவதாக அமைகிறது.
"Palindrome" பற்றி விவாதிக்கும் பொழுதோ சித்தர்கள் பற்றி கேட்கும் பொழுதோ எங்கள் குடும்ப நண்பரொருவர் இதை சொல்லிக்கொடுத்தார்.
மேலும் இவை தனிப்பாடல்கள் அல்ல. கன்டிப்பாக செய்யுள் தொகுப்புகள். தமிழாசிரியர்களுக்கு தெரிந்திருக்கும்.
அன்புடன்.
இப்போது மூன்றாம் பாடலின் முறை.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின் மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாநாழீ = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே
HE who is Unperishable;
HE who does not age;
HE who is the Resultant of the ten Kaaryaa's;
O LORD of Sirkaalzi!
He who dances in the fearsome cremation ground;
O ESTEEMED ONE!
He who rides the majestic elephant, Airaavanam;
HE who is the sea of Bestowal;
Deliver me from Death!
HE who is resplendant with golden lustre!
Give me all the blessings and boons!
Come before us!
HE who precedes all Time;
HE who is in the form of the elements like Air!
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருகிறது நான்காம் பாட்டு, கூடவே அதன் பொருள்:
நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ
நீவா = நீங்குதல் இல்லாத
வாயா = மெய்ப்பொருளானவனே
கா = காவுவென்ற
யாழீ = யாழையுடையவனே
வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம்
வாராமே = எங்களை அடையாமல்
கா வா = வந்து காப்பாற்றுக
வான் நோவா வா = யாதவர்கள் வருந்தாதபடி
மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே
காழீயா = சீர்காழி இறைவனே
காயா = ஆகாய வடிவினனே
வாவாநீ = நீ விரைந்து வருவாயாக
HE who is the Unremitting TRUTH;
HE who bears the Harp;
Deliver us so that the terrible misrey of Birth does not afflict us!
HE who bore the Meru Mountain as the Divine Bow to succour the Deva's;
O LORD of Sirkalzi!
HE who is the form of Aakaash;
Come speedily to us!
அன்புடன்,
டோண்டு ராகவன்
க ர டி
ர யி ல்
டி ல் லி
வி பூ தி
பூ ணூ ல்
தி ல் லி / லை
நன்றி லதா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோவிகண்ணன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://govikannan.blogspot.com/2006/04/blog-post_10.html
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடவோ, காக்க காக்க கனகவேல் காக்க என்று அவன் மருகனைப் பாடவோ தமிழுக்கு அருகதை இல்லையெனில் வேறு எந்த மொழிக்கு உண்டு?
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது தமிழின் ஓசை நயத்தால் நமது எண்ண அலைகளில் ஏற்படும் மாறுதலால்தானே ஏற்பட்டது.
ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். அது முடியாது என்று கூறுபவர்கள், யாராயினும் சரி, தமிழையும் அறியவில்லை, வடமொழி கூட அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "இருவழி ஒக்குஞ்சொல்" என்னும் இந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/palindrome.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவு இற்றைப்பட மாட்டேன் என்கிறது. ஆகவே இன்னொரு முயற்சி.
அன்புடன்,
டொண்டு ராகவன்
பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ.
பொருள்:
பூவாளை - இயல்பாய்ப் பூப்பில்லாதவளைக் கலந்து
நாறும் நீ - புலால்கமழும் நீ
பூ மேகம் லோகம் ஏ- எமக்குப் பூமழையும் பொன்மழையும் பொழியும் மேகமோ?
பூநீறு நாளைவா - பூவும் திருநீறும் புனைந்து நாளை வா.
பூ - இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்.
நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ
பொருள்:
நீவாத - நீங்காத
மா தவா - பெரிய தவத்தையுடையாய்!
தா மோக ராகமோ தாவாது - மிக்க மயக்க வேட்கை கெடாது; (ஆதலால்)
அ மாது - அழகிய மாதினுடைய,
அவா - ஆசையை,
நீ - நீக்குவாயாக
Source: http://www.tamilvu.org/slet/servlet/l0800.l0800pag?x=209
Post a Comment