2/20/2007

அருமை நண்பர் என்றென்றும் அன்புடைய பாலா

(நிஜமாகவே) சமீபத்தில் அக்டோபர் 1, 2004 அன்றைக்கு தமிழ் வலைப்பூக்களுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது. அன்றுதான் கூகளின் தயவால் tamil blogs என்று தேடுபெட்டியில் தட்டச்சு செய்து இந்த உரலைப் பிடித்தேன். தமிழ்மணம் செயலாக வரும்வரை இதுதான் எனக்கு தமிழ்ப்பதிவுகளை பிடிக்க உதவியது. அதில் அகர வரிசையில் வரும்போது இந்தப் பதிவு கிடைத்தது. அப்போதுதான் என்றென்றும் அன்புடன் பாலா அறிமுகமானார்.

அப்பதிவில் நான் முதலில் பின்னூட்டம் இட்டது ஆங்கிலத்தில்தான். நான் பிறந்து 23 வயது வரை வாழ்ந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலை உள்ளடக்கிய திருவல்லிக்கேணியும், எட்டு ஆண்டுகள் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியுமே எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளில் முக்கியமானவை. ஒரு 18 ஆண்டுகால இடைவெளி எங்களுக்குள் இருந்தாலும் இருவருக்குமே இந்த இரண்டு விஷயங்களை பற்றி பசுமையான நினைவுகள் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. எனது இந்தப் பதிவில் அவரது பதிவுகள் பற்றி எனது எண்ணங்களை கூற ஆவல்.

முதலில் சிறுவயது சிந்தனைகள். அது சம்பந்தமாக அவர் போட்டவை என்னுள் உடனடியாக எனது நினைவுகளை எழுப்பின. அதுவும் ஹிந்து உயர்நிலை பள்ளியில் தன் நண்பன் வெகுண்டு பற்றி அவர் எழுதியது மிக அருமை. ஒரே முறைதான் வாத்தியாரிடம் அடிவாங்கியிருப்பதாக அவர் எழுதியதற்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ (அப்போது அது ஒரு கற்பனை கதை என்று எனக்கு அப்போது தெரியாது):

"மிக அருமையான வலைப்பூ. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராமசாமி ஐயங்கார் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை 1962-க்குப் பிறகு நம் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நான் படித்த போது இருந்த ஆசிரியர்கள் உங்கள் காலத்தில் அனேகமாக எல்லோரும் ஓய்வுப் பெற்று சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு முறைதான் அடிவாங்கியிருக்கிறீர்களா? ரொம்ப அதிர்ஷ்டம் உங்களுக்கு. என் எல்லா வகுப்புகளிலும் முதல் ஐந்து மாணவர்களுக்குள் நான் இருந்து வந்தாலும் தினசரி ஒரு முறையாவது பெஞ்சு மேல் நின்றிருக்கிறேன் அல்லது அடி வாங்கியிருக்கிறேன் அல்லது வெளியே அனுப்பப் பட்டிருக்கிறேன் அல்லது .... விடுங்கள் அதைப் பற்றி இப்போது என்ன!
Comment by dondu(#4800161) at 4:10 PM, November 21, 2004"

புத்தகம் எடுத்து வராத எல்லோரும் வெளியே செல்லும்படி ஆசிரியர் டி.ராமானுஜம் கூற, அவ்வாறு செல்பவர்களில் நம்ம பாலாவும் இருக்கக் கண்டு மேற்படி ஆசிரியர் எல்லோரையும் மன்னிக்க, அதைக் கண்டு மாணவர்கள் பொரும என்றெல்லாம் சுவாரசியமாக எழுதியுள்ளார் பாலா. சாதாரணமாக நான் படித்த காலங்களில் அம்மாதிரி மாணவனை பிறகு கிரௌண்டில் வைத்து மற்ற நண்பர்கள் அன்புடன் தர்ம அடி (செய்முறை கீழே கூறப்பட்டுள்ளது) கொடுப்பார்கள். பாலா இங்கு அது நடந்ததாக எழுதவில்லை. அதிர்ஷ்டக்காரர்.

அவர் நினைவுகூர்ந்த சிறுவயது சிந்தனைகள் எல்லாமே அருமை. அதிலும் ஒரு பேப்பர்கார பையன் செஸ் ஆடி எல்லோரையும் அசத்தியது மனதில் நிற்கிறது. அரும்பு மீசை காலத்திலேயே ஒரு காதல் கதையும் எழுதியுள்ளார்.

வைணவ திவ்யதேசங்கள் பற்றிய அவரது பதிவுகள், பிரபந்தம் பற்றிய பதிவுகள், மாமனிதர்கள் பற்றி எழுதியவை ஆகியவை பற்றி கூறவும் வேண்டுமோ.

பாலா அவர்கள் சமூக சிந்தனை நிரம்பியவர். இட ஒதுக்கீடு பற்றி அவர் போட்ட பதிவுகள், மற்றும் கிராமத்து அனானி பதிவுகள், ஏழை மாணவி கவுசல்யா, மற்றும் அவசர சிகிச்சை தேவைப்பட்ட குழந்தை லோகப்பிரியா ஆகியோருக்காக அவர் செய்த முயற்சிகள் ஆயிரம் அஸ்வமேத யாகங்களுக்கு சமம்.

அதற்காக பாலா அவர்கள் சீரியசான முகபாவத்துடன் இருந்து கொண்டு எல்லோரையும் அறுத்துத் தள்ளிவிடுவார் என நினைத்தால் அது மிகப் பெரிய தவறு. பிறருக்காக உருகும் அதே பாலா சில சமயம் இரக்கமின்றி நடந்து மற்றவர்களை தனது கடி பதிவுகளால் உசுப்பி விடுவதும் உண்டு.

அவர் இம்மாதிரியெல்லாம் ஹிந்து உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது நடந்து கொண்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன். அங்கெல்லாம் இம்மாதிரி நடத்தைக்கு மேலே நான் குறிப்பிட்ட தர்ம அடிதான். நான் படிக்கும் சமயம் அதன் செய்முறை பின்வருமாறு. அதை வாங்க வேண்டியவன் தேமேனென்று கிரௌண்டில் நின்று கொண்டிருப்பான். திடீரென புயல் வேகத்தில் ஒரு பையன் இவன் பின்னால் ஓடிவந்து தலைமேல் துண்டு போட்டு மூடி "தர்ம அடீஈஈ" என்று கத்த அங்கு ஓடிவரும் மற்ற மாணவர்கள் சரமாரியாக அடித்து விட்டு ஓடுவர். அடிவாங்கியவன் திக்குமுக்காடி பார்ப்பதற்குள் எல்லோரும் மாயமாக மறைந்திருப்பர்.

கிரிக்கெட் பற்றியும் பல பதிவுகள் போட்டுள்ளார். அதன் தொழில்நுட்பங்கள் என் அறிவுக்கப்பாற்பட்டவை. ஆகவே ஜூட் விடுகிறேன்.

இப்பதிவுகள் பாலாவின் மற்ற பரிமாணங்களைக் காட்டுகின்றன.

இப்போது நான் கொடுத்த பல சுட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைக் காட்டும். ஆகவே நான் சுட்டிய மொத்தப் பதிவுகள் 50-ஐ சுலபமாக தாண்டும். ஏன் இந்த எண்ணை குறிப்பிட்டேன் என்பதை நண்பர் பாலா அவர்கள் புரிந்து கொள்வார் அது போதும்.

என்னை பாலா கவர்ந்ததற்கு பல தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் பலவற்றை ஏற்கனவேயே தொட்டு விட்டாகி விட்டது. இன்னும் ஒன்றையும் கூறிவிடுகிறேன். நான் போடு ஹைப்பர்லிங்க் பதிவுகளை படித்தவர்கள் தங்கள் மனதுக்குள்ளேயே தங்கள் நம்பிக்கையின்மையை வைத்து கொண்டிருப்பார்கள். அவற்றில் ஒன்று பாலா வீட்டிலேயே நடந்தது என்பதற்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் அவற்றின் நம்பகத்தன்மை காக்கப்பட்டன என்பதாலேயே அவரை எனக்கு பிடிக்கும்.

இவ்வளவு நல்லபடியாக எழுதி விட்டு ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என நினைத்தால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

enRenRum-anbudan.BALA said...

உங்களைப் பற்றி ஏதோ விளையாட்டாக சமீபத்தில் (உங்கள் சமீபத்தில் அல்ல:)) ஒரு பதிவு எழுதினேன் என்பதற்காக, இப்படி திட்டம் தீட்டி பழி தீர்ப்பிர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை ;-)

//இவ்வளவு நல்லபடியாக எழுதி விட்டு ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என நினைத்தால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
//
இது "டோண்டு" லெவலுக்கே டூ மச் என்பது என் தாழ்மையான கருத்து !!!

ஆமாம், எதற்கு இந்த "திடீர்" பாராட்டு விழா ???? ஏதாவது காரியம் ஆக வேண்டுமா :)))

எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

இரண்டு காரணங்கள். ஒன்று உங்களது 299-ஆம் பதிவு. அடுத்தது 300 தானே, ஏதோ நம்மால் ஆனது. அதை வரவேற்கலாமே என்று.

ஆனால் இன்னொரு காரணம் சீரியஸ். இந்த டோண்டு ராகவன் தமிழ்மணத்துக்கு வந்தது ஏன் என்று அவரவர் கொலை வெறியுடன் அலைகிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"""ஆனால் இன்னொரு காரணம் சீரியஸ். இந்த டோண்டு ராகவன் தமிழ்மணத்துக்கு வந்தது ஏன் என்று அவரவர் கொலை வெறியுடன் அலைகிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?""""

paththa vassuttiyee paratta :)

dondu(#11168674346665545885) said...

"paththa vassuttiyee paratta :)"

:))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இதிலிருந்து புரிகிறது தாங்கள் விளம்பர பிரியர் மட்டுமல்ல மற்றவர்களையும் உள்ளுகிழுத்து அதில் விளம்பர ஆதாயம் தேடுபவரென்று. ஏன் பாலாவுக்கு திடீரென பாராட்டுவிழா... தேவையற்ற ஒன்று... உள்நோக்கமுடையது.

dondu(#11168674346665545885) said...

//ஏன் பாலாவுக்கு திடீரென பாராட்டுவிழா... தேவையற்ற ஒன்று... //

எல்லாவற்றையும் எழுதி இதை நீங்கள் நடுவில் எழுதியிருந்தாலும், இதுதான் உங்கள் ஆட்சேபணையின் மூலக்கரு என்று உணருகிறேன்.

பாலாவின் மேல் ஏன் இத்தனை காண்டு உங்களுக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அய்யங்கார்வாள்

பாலா மீது ஒரு காண்டுமில்லை. ஏன் தேவையில்லாமல் அவரை???

dondu(#11168674346665545885) said...

//பாலா மீது ஒரு காண்டுமில்லை. ஏன் தேவையில்லாமல் அவரை???//

நான் தமிழ்மணத்துக்கு வர கிரியா ஊக்கியாக இருந்தவர் பாலா அவர்கள். அவர் எழுதிய விஷயங்களின் பன்முனை, பழைய நினைவுகள் ஆகியவை என்னைக் கவர, இவரை மிஞ்ச வேண்டும் என்ற எண்ணத்துடன் புகுந்தவன் நான்.

தமிழ் எழுத ஆரம்பித்ததிலிருந்து எனக்கு மொழிபெயர்ப்பு துறையில் அபார முன்னேற்றம். நான் அறிந்த ஆறு மொழிகளில் தாய் மொழியாம் தமிழுக்கு நான் மொழிமாற்றம் செய்தபோதுதான் உண்மையான மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதை உணர்கிறேன்.

இதற்கெல்லாம் தூண்டுதலாக இருந்தவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

அதுவும் அவரது 300-வது பதிவு வரும்போது எழுதுவதும் பொருத்தமானதேயல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவியா said...

ouf !En lisant ce blog j'ai pense qu'il lui est arrive un malheur !

dondu(#11168674346665545885) said...

Qu’est que vous dites Ravia? Ayez pour l’amour de dieux des pensées positives.

Salutations,
Dondu N.Raghavan

Madhu Ramanujam said...

முழுசா படிச்சா இன்னொரு 3 மாசம் ஆகும்ங்கிறதால இதுல உள்ள லிங்க் எதுக்கும் போக முடியலை. இருந்தாலும் நிறைய மெனக்கெட்டிருக்கீங்கனு தெரியுது. நல்ல முயற்சி. :)

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் மதுசூதனன் அவர்களே. மூணு மாசமெல்லாம் ஆகது. இரண்டரை மாசங்களிலேயே படிச்சு முடிச்சுடலாம்.

பை தி வே, லேட்டஸ்ட் துக்ளக்கில் வந்த இந்த கார்ட்டூனை பார்த்ததும் உங்களைத்தான் நினைத்து கொண்டேன்.

ஆற்காடு வீராசாமி மற்றும் கலைஞர் இதில் வருகிறார்கள்.

ஆ.வீ. நாம இலவச டி.வி. கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவீச்சு வழக்கு போட்டிருக்காங்க பாத்தீங்களா?

கலைஞர்: நல்லதுதான்! டி.வி. வழங்கக் கூடாதுன்னு தீர்ப்பு வந்தா, அதையே சாக்கா வெச்சு தப்பிச்சுடலாம். பிரச்னை தீர்ந்துடும்...

ஜயராமன் said...

டோண்டு சார்,

திரு.பாலா அவர்களை சந்திக்கும், பேசும் நல்ல வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

இருப்பினும், தரமான, மனதுக்கினிய பதிவுகளை தருவதில் அவர் உங்களை ஒத்தவர் என்பதால் என் மதிப்பு எப்போதும் உண்டு.

ஒரு சக (எக்ஸ்) அல்லிக்கேணி வாசி மற்றும் இந்து உயர்நிலைப்பள்ளி மாணவன் என்ற முறையிலும் இப்பதிவு கண்டு மனம் குளிர்ந்து தங்களுடன் என் வாழ்த்துக்களையும் பாலா அவர்களுக்கு இப்பின்னூட்டத்தின் மூலம் சமர்ப்பிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

நன்றி

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜயராமன் அவர்களே. என்னதான் பாலா அவர்களை நேரில் பார்த்து பேசாமலிருந்தாலும் நீங்களும் அவரும் ஒரே ஊர், ஒரே ஸ்கூல் என்ற பாசம் போகுமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஒரு விஷயம் சொல்லுங்க. எ.அ.பாலா பதிவுகளை படிக்க ஓப்பன் செய்தால் ஒரு எரர் காட்டுகிறதே ? இது எந்தவொரு பதிவுக்கும் இல்லையே ?

அன்று நீங்கள் ஏதோ தீர்வு சொன்னீர்கள், ஆனால் அது வேலைக்காகவில்லை...

அவர் பதிவை படிப்பதற்கான சூத்திரத்தை வெளியிடவும்...

செந்தழல் ரவி

Anonymous said...

ஹை, ஜெயராமன் வந்துட்டார்...வாங்க வாங்க..

செந்தழல்

enRenRum-anbudan.BALA said...

Ravi,
While typing my URL, Pl. use "%5F" instead of "_"

i.e.,
http://balaji%5Fammu.blogspot.com

and check if the error is persisting !

dondu(#11168674346665545885) said...

ஆகவே செந்தழல் ரவி அவர்களே பாலாஜி அவர்கள் கொடுத்த சுட்டியை நகலெடுத்து உங்கள் இணையப்பக்க முகவரி பட்டையில் ஒட்டுங்கள், பிறகு க்ளிக் செய்யவும்.

அப்படியும் வரவில்லை என்றால் அது நீங்கள் பாவிக்கும் கணினியில் உள்ள நெருப்பு சுவர்தான் அதற்கு காரணமாக இருக்க வேண்டும். வேறு இடங்களிலிருந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

பை தி வே ஜயராமன் வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இல்லை...வேலை செய்யவில்லை....இன்வேலிட் யூ ஆர் எல் என்று வருகிறது.....என் பிரவுசரில் கண்டிப்பாக பிரச்சினை இருக்க முடியாது. அப்படி இருந்தால் இந்த பதிவை எப்படி பார்க்க முடியும் ?

ஆனால் வெளியே பிரவுசிங் செண்டரில் தான் பார்க்க முடியும்...

இவரது பதிவுகளை படிக்கவேண்டி ப்ரவுசிங் செண்டர்தான் சென்று வருகிறேன். கடந்த காலங்களில் செய்தது போல்தான் இனியும் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்...:)))

ஜெயராமன் இடத்தை யாரும் இட்டு நிரப்ப முடியாது. அவர் சூடாக பதிவுகள் இடவேண்டும் என்றும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

செந்தழல் ரவி

பி.கு: நல்ல வேளை நீங்கள் அனானி ஓப்பன் செய்துள்ளீர். இல்லை என்றால் இந்த பின்னூட்டமும் என்னால் இடமுடிந்திருக்காது.

dondu(#11168674346665545885) said...

//என் பிரவுசரில் கண்டிப்பாக பிரச்சினை இருக்க முடியாது.//

உலாவியை பற்றி நானும் பேசவில்லையே. நெருப்புச் சுவரில் இட்டுள்ள ஆக்ஞைகளே அதற்கு காரணமாக இருக்க வேண்டும்.

டோண்டுவை தமிழ்ப்பதிவுலகுக்கு இழுத்ததற்காக உங்கள் கணினி பாலாவை கோபித்து கொண்டிருக்கும்போல.:))

இதிலே என்ன நீதின்னா, யாரும் தத்தம் உரலில் அண்டர்ஸ்கோர்ர் போடாதீங்கோ சாமியோவ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

எனக்கு உள்ள நெருப்பு சுவருக்கு சிறிய ஆப்பு வைத்துவிட்டுத்தான் நான் ப்லாகரை படித்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே என்றென்று அன்புடன் பாலா தன்னுடைய அண்டர்ஸ்கோரை நீக்கும் வரை வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சி மூலமாக விதான் சவுதா எதிரே ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தப்போகிறேன்....

செந்தழல் ரவி

Anonymous said...

libei Dondu!

thoi ya nie waarh? ago thoi mear India abi waarh. Chennai Blogger
ya jin maru libei DONDU.
India um Chennai Blogger vast ya
libei DONDU.

pulliraraja

enRenRum-anbudan.BALA said...

//ஆகவே என்றென்று அன்புடன் பாலா தன்னுடைய அண்டர்ஸ்கோரை நீக்கும் வரை வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சி மூலமாக விதான் சவுதா எதிரே ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தப்போகிறேன்....
//
இது "செந்தழல்" ரவி லெவலுக்கே டூ மச் என்பது என் தாழ்மையான கருத்து ;-)))

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லையே பாலா அவர்கள். டோண்டு, ரவி இருவரது லெவலையும் தெரிஞ்சு வச்சிருக்கார். பலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Vous devez apprecier non seulement Bala - pourquoi pas les autres, Monsieur Dondu!

dondu(#11168674346665545885) said...

Bon soir Gérard Pândian,

Bien sûr que oui, quand l’occasion le demande et quand j’en ai envie, pourquoi pas ?

Salutations,
Dondu N.Raghavan

Anonymous said...

Tandis qu'il est facile d'apprécier d'autres qui sont semblable à nous, n'est-il pas difficile de le faire à ceux qui sont différent à nous ?

dondu(#11168674346665545885) said...

//libei Dondu!
thoi ya nie waarh? ago thoi mear India abi waarh. Chennai Blogger
ya jin maru libei DONDU.
India um Chennai Blogger vast ya
libei DONDU.
pulliraraja//

இது என்ன மொழி என்பது புரியவில்லை. மலாய் அல்லது டட்ச் போன்ற மொழி என நினைக்கிறேன். யாராவது கூற இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சார், உங்கள் பிளாக்கை Internet Explorer - 7 feed -ல் படிப்பவன் நான். நாங்கள் முழு பக்கத்தையும் feed -ல் படிக்க ஏதுவாக தங்கள் setting -யை மாற்றி உதவவேண்டுமாய் கெட்டுக்கொள்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//சார், உங்கள் பிளாக்கை இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 7 ஃபீட் -ல் படிப்பவன் நான். நாங்கள் முழு பக்கத்தையும் ஃபீட் -ல் படிக்க ஏதுவாக தங்கள் செட்டிங் -யை மாற்றி உதவவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.//

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது