முதல் பகுதி
இந்த நவீனத்தை பற்றி மேலே பேசும் முன்னால் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பல கதைகளை பற்றி பேசலாம் என நினைக்கிறேன். மகாபாரதத்தில் இல்லாத விஷயமே கிடையாது என்று கூறுவதை பலரும் அறியும்போது நம்ம திரையுலகக்காரர்கள் மட்டும் அறிய மாட்டார்களா என்ன?
ஞாபகத்திலிருந்து கூறுகிறேன். எழுபதுகளில் காளி என்ற படம் வந்தது. ரஜனிகாந்த் மற்றும் விஜயகுமார் நடித்தது. துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பை ஒரு கதை முடிச்சாக எடுத்து கொண்டு தயாரிக்கப்பட்ட படம் இது. விஜயகுமார் கர்ணன் ரோலிலும் ரஜனிகாந்த் துரியோதனன் ரோலிலும் நடித்த படம் இது. பலருக்கு இப்படத்தின் பெயர் கூட நினைவிலிருக்காது. ஆனால் அதன் ரீமேக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதுதான் தளபதி. இதில் ரஜனிகாந்துக்கு கர்ணனாக பிரமோஷன், துரியோதனன் ரோலில் மம்முட்டி. கர்ணன் குழந்தையாக இருக்கும்போது கூடையில் வைத்து நதியில் விடுவதற்கு பதிலாக, இதில் ஸ்ரீவித்யா கூட்ஸ் வண்டியில் வைத்து கோட்டை விடுகிறார். அருச்சனன் ரோலில் அரவிந்தசாமி. அதற்காக பாண்டு எங்கே திருதிராஷ்ட்ரன் எங்கே என்றெல்லாம் கேட்கக்கூடாது. கதையின் முடிச்சை மட்டுமே எடுத்து கொண்டனர்.
இம்மாதிரி பிள்ளை அன்னை தந்தையை பிரிந்து வரும் பல படங்களையும் பார்த்தால் இங்கிருந்துதான் கதை முடிச்சை எடுத்திருப்பார்கள். இன்னொரு உதாரணம் பாவ மன்னிப்பு. சிவாஜிதான் கர்ணன். (அதே சிவாஜி நிஜமாகவே கர்ணனாக நடித்தது இந்த ஆட்டையில் வராது. நான் குறிப்பிடுவது மகாபாரதத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி வரும் பெரும்பாலான சமூகக் கதைகளே, நேரடியான மகாபாரதம் திரைக்கதையாக அல்ல. அதற்கு உதாரணங்கள் கர்ணன், வீர அபிமன்யு, மாயா பஜார் ஆகியவை)
மகாபாரதத்தின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு சமூகக் கதையாக எடுக்கப்பட்ட படம்தான் கல்யுக் என்னும் ஹிந்தி படம். அதில் இரு குடும்பங்கள், சித்தப்பா/பெரியப்பா பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பிசினஸ் போட்டிகள், என்ன, கௌரவர்களில் இருவர் மட்டும் வருகின்றனர், துரியோதனன் மற்றும் துச்சாசனன், பாண்டவர்கள் மூவர் மட்டுமே, தருமன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் மட்டுமே. கிருஷ்ணர் சித்தப்பாவாக வருகிறார். கர்ணனாக சஷிகபூர் (அப்படத்தின் தயாரிப்பாளர்). மேலும் பல பாத்திரங்களை துல்லியமாக அடையாளம் காட்ட இயலுகிறது.
திரைக்கதாசிரியர்கள் மட்டும் ஏன்? நான்கூட ஒரு பதிவை மகாபாரதத்தின் ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதியுள்ளேன். :))))
அப்படியே ராமாயணத்தை வைத்தும் ஒரு பதிவு போட்டுள்ளேன் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன்.
அதாவது மகாபாரதம் பலருக்கு உதவியாக உள்ளது. என்ன இருந்தாலும் அது ஒரு காப்பியம் அல்லவா. இம்மாதிரி ஒரு தேசத்தின் காப்பியம் அந்த தேசத்தின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதை பல முறை பார்க்க இயலும். உதாரணத்துக்கு எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் நான் இட்ட இந்த மன்றப்பதிவு நான் கூறியதை நிலைநாட்டுகிறது.
நம்மூரில் கூட பார்க்கிறோமே. கலகம் செய்பவனை சகுனி என்றும், செய்பவளை கூனி என்றும் கூறுகிறோம் அல்லவா. வள்ளல்களை 'அவரா, அவர் கர்ணமகாப்பிரபு' என்றும் கூட கூறுகிறோமே. வீடணனைப் பற்றி கேட்கவே வேண்டாம். காட்டிக் கொடுப்பவர்களை வீடணன் என்றே தவறாக அழைக்கின்றனர். இதில் சகுனி மேல் எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதாவது பரீட்சை சமயத்தில் சும்மா பொழுதுபோகாமல் இந்த கேள்வி வரலாம் அந்த கேள்வி வரலாம் என்று மற்றவர்களை அக்காலக்கட்டத்தில் நான் குழப்பியதால் என் நண்பன் தேசிகன் எனக்கு சகுனி என்று பெயரிட்டு விட்டான். அது நிலைத்து நின்றுவிட்டது. :)))))
The great Indian novel பற்றி மீண்டும் அடுத்தப் பதிவில் பார்ப்போம். இப்போது அதை மறுபடியும் தீவிரமாக படித்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
5 hours ago
12 comments:
தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் படம் பற்றி கூறிபிட்டதற்கு நன்றிகள்!
உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துக்கள்
'கல் யுக்' என்றவுடன் 'கல் நாயக்' படத்தை கவுண்டர் மணி 'கல் நாயே' என்று கிண்டல் செய்தது நியாபகம் வருகிறது.
//அதாவது பரீட்சை சமயத்தில் சும்மா பொழுதுபோகாமல் இந்த கேள்வி வரலாம் அந்த கேள்வி வரலாம் என்று மற்றவர்களை அக்காலக்கட்டத்தில் நான் குழப்பியதால் என் நண்பன் தேசிகன் எனக்கு சகுனி என்று பெயரிட்டு விட்டான். அது நிலைத்து நின்றுவிட்டது. :)))))//
இந்த மாதிரி பசங்களுக்கு சகுனி சரியான பெயர். அவனவன் படிக்காம வந்திருக்கும் போது இதென்ன விபரீத விளையாட்டு. ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை.
<==
ஞாபகத்திலிருந்து கூறுகிறேன். ==>
உங்க ட்ரேட் மார்க் "சமீபத்தில்"னு சொல்ரதுதான் சரி. ரெண்டுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசமில்ல
<==
ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை. ==>
பெயிலானா மட்டும் தெரியாது.பெயிலாயி அடி வாங்கினாத்தான் தெரியும் =))).
இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
எழுதிய வருடம் போன்ற எதாவது தகவல் கிடைக்குமா சார்?
வால்பையன்
Dondu saar,
Cycle Gapla auto elai, Periya Truck kuda neenga otuveer oye. Endha postingliyum oru link koduthidarael. umm, kalakukungo.
//ஸ்கூல் பாடம் ஒழுங்க படிக்காம பெயில் அனா தான் தெரியும் அந்த கொடுமை.
பெயிலானா மட்டும் தெரியாது.பெயிலாயி அடி வாங்கினாத்தான் தெரியும் =)))//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. அது நான் இரண்டாம் ஆண்டு பரீட்சையில் மூன்று பேப்பர்களில் கம்பார்ட்மெண்ட் வாங்கிய போது புரிந்தது. அதற்குள்ளேயே சகுனி பெயர் வந்து விட்டது.
அடியெல்லாம் வாங்கவில்லை, ஆனால் நானே எனக்கு தண்டனை கொடுத்து கொண்டதை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
அதே போல நிறைய அறுவை ஜோக்குகள் அடித்து எல்லோரையும் படுத்திய இந்த டோண்டு ராகவனை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையும் அவனுக்கு மறக்கக் கூடாது. அதற்காகவே அவ்வப்போது ஆரவாரப் பேய்களை அடக்க வேண்டியிருக்கும்.
//Endha postingliyum oru link koduthidarael. umm, kalakukungo.//
சரி அப்படியே செய்தால் போச்சு. மேலே பார்க்கவும்.:))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதிகாஷங்களின் அசல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
எழுதிய வருடம் போன்ற எதாவது தகவல் கிடைக்குமா சார்?//
உண்மையில் தெரிந்து ஆர்வத்தில் தான்
கேட்டேன், தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.
வால்பையன்
//உண்மையில் தெரிந்து ஆர்வத்தில் தான்
கேட்டேன், தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.//
இதில் தவறாக எடுத்து கொள்ள ஒன்றும் இல்லை. ராமாயணமும் மகாபாரதமும் வடமொழியில் எழுதப்பட்டன. எழுதியது வால்மீகி மற்றும் வியாசர். ராமாயணம் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டன. தமிழில் எழுதியது கம்பர். ஆனால் அவற்றை வெறுமனே மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாகாது.
எழுதப்பட்ட காலம் பற்றி பல வேறுபடும் கருத்துகள் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தூ. இப்படி ஒரு ஆபாச களஞ்சியத்தை போற்றி எழுதுகிறீர்களே? அதுவும் எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பது பண்பாடா? அதை அக்கால நடைமுறை என்று ஜல்லியடிக்க பார்க்கிறீர்? வெட்கமாயில்லை? அது பார்ப்பனரின் நடைமுறையாயிருக்கலாம். அது தமிழனின்/திராவிடனின் பண்பாடா? இதைத்தானே தந்தை பெரியாரும் அய்யா வீரமணியும் எதிர்த்து வருகிறார்கள்? இதை மகாத்மாவுடன் வேறு சம்பந்தப்படுத்துகிறீர். அவரை கொன்றதே
RSS தானே? இப்போது நல்லவர் மாதிரி பேசிகிறீர்.
//அது தமிழனின்/திராவிடனின் பண்பாடா?//
டேய், திராவிட கட்சியில் பதவி வேணும்னா முதல்ல ரெண்டுக்கு மேற்பட்ட பெண்டாட்டிகள் இருக்கணும், இல்லனா வப்பாட்டியா இருந்திருக்கணும். இதுதானே திராவிட பண்பாடு.
திராவிடர்கள் பண்பாட்டை பத்தி பேச லாயக்கு இல்லாதவர்கள்.
//இதைத்தானே தந்தை பெரியாரும் அய்யா வீரமணியும் எதிர்த்து வருகிறார்கள்?//
எப்படி சின்ன வயசு பெண்களை கிழவன்களுக்கு கட்டி வைத்துதானே எதிர்கிறார்கள்.
Post a Comment