பாலா:
1)சிங்கப்பூர் கருத்து கந்தசாமியோ அல்லது அவரது தெலுங்கு மாமியார் பார்ட்டியான டி பி ஸி டி. அய்யாவோ தான் போலி டோண்டு/வி க/மூர்த்தி என்ற திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டால் உங்கள் முதல் எண்ணம் என்னவாக இருக்கும்?
பதில்: கோ.வி கண்ணன் கண்டிப்பாக மூர்த்தி இல்லை, ஆனால் அவனுக்காக ரொம்பவுமே வக்காலத்து வாங்கியவர். அவரைப் பற்றி நான் எழுதியதில் எந்த மாற்றமும் இல்லை.
மற்றப்படி டி.பி.சி.டி. க்கு அடிப்படை நாகரிகமே இல்லை, அவர் எழுதிய ஒரு பதிவில் அவர் எழுதியதன் காண்டக்ஸ்ட் புரியவில்லை, சற்று சுட்டி தரவும் என்று சாதாரணமாக கூறியதற்கே, புரியவில்லை என்றால் முட்டிக் கொள்ளுங்கள் என்று அன்பாக கூறும் அளவுக்கு எழுதுபவர். இவர் மூர்த்தி என்றால் ஆச்சரியம் எதுவும் எனக்கு இருக்காதுதான். அவ்வளவு தேவையற்ற காழ்ப்பு என்னைப் பற்றி.
2) இந்தியாவைப் பொருத்தவரை,கீழே தரப்பட்டவகைகளில் மிகவும் மோசமான தீவிரவாத குழு எது?
LeT,JeI,HUJI,SEMI,SIMI,JeM போன்ற இஸ்லாமிய தீவிரவாத கும்பலா?
பெ தி க,தி க,தி மு க போன்ற காட்டுகூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் காட்டுமிராண்டி கும்பலா? அல்லது, ம க இ க போன்ற வெறி பிடித்து அலையும் பொறிக்கி கம்யூனிஸ்ட்(நக்சல்) கும்பலா?
பதில்: இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல்கள் எல்லாமே உலகத்துக்கே அபாயம். இந்தியாவுக்கும்தான்.
புபட்டியன்:
1. வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு கமல் பொருத்தமாகவே இருக்க மாட்டார். அவர் அந்த பாத்திரத்தின் தன்மையை கெடுப்பார்.. அதோடு "இப்போதைய" என்பதற்கு அர்த்தம் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் அல்ல...
"இப்போதைய" என்பதற்கு அர்த்தம், "சூர்யா, விக்ரம், பரத், அஜித், ஆர்யா, விஜய், விஷால்... etc." யார் உங்கள் சாய்ஸ்?
பதில்: கமல் இன்னும் ஃபீல்டில்தான் உள்ளார். விக்ரம் மற்றும் சூர்யாவும் பொருத்தமானவர்களே.
வஜ்ரா:
சமீபத்தில் சென்னை லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: வெட்கக்கேடு. தேவையின்றி இசுலாமியர் ஓட்டுக்காக செய்யும் மலிவான ஸ்டண்ட் அது. சரஸ்வதி தேவியை நிர்வாணமாக வரைந்தவனுக்கெல்லாம் பாதுகாப்பு. நாடு எங்கே போகிறது?
அனானி1:
1. நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
பதில்: பெயரைச் சொல்லிவிட்டு முதலில் தொலைபேசுங்கள். பிறகு பார்ப்போம்.
அனானி2:
1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
பதில்: இந்த சண்டை போடவில்லை என்றால் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் எப்படி தொடர்ந்து வன்கொடுமை செய்வதாம்? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.
2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
இரண்டாவது கேள்விக்கு லக்கிலுக்கும் பதில் அளிக்கலாம்!!!
பதில்: தேசீயக் கட்சிகள் பலம் பெற்று வருவதுதான் சரியாக இருக்கும். பி.ஜே.பி.யும் சரி காங்கிரசும் சரி திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் வரை தமிழ்மக்களுக்கு இந்த டகால்டி பற்றி புரிந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. TINA (There is no alternative) factor இருக்கும் வரை கஷ்டமே. மற்றப்படி திராவிடத் தலைவர்களின் டகால்டி வேலைகள் தெரியாமல் இல்லை. எனது முந்தைய கேள்விகள் பதிவில் ஒரு அநானியின் பின்னூட்டம் இங்கே பொருத்தமாக இருக்கும்.
//திராவிடக்கட்சிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவரும் சாதாரண தொண்டனின் இப்போதைய நிலை என்ன? அதன் தலைவர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது வருடங்களுக்கு முன்னர் முத்துவேல் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், துரைமுருகன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது? விலைமாதுவிடம் சென்றுவிட்டு காசு கொடுக்காமல் வந்தவர்கள் யார்? கவிஞர் கண்ணதாசன் புட்டுப் புட்டு வைத்த உண்மைகளை நீங்கள் படிக்கவில்லையா? ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெட்கமில்லாமல் உண்டியல் வைத்து ஏழைத்தொண்டனின் கோவணத்தையும் அதில் போடச்செய்த தலைவர்களை இன்னமும் உங்களைப் போன்றவர்கள் நம்புவது வேதனையாக இருக்கிறது.//
சுழியம்:
ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெடுக்கவும்:
தன் கை பலமாக இருக்கும்போது பெரிய வஸ்தாது போல பூச்சாண்டி காட்டுவதும், தன் கை பலமாக இல்லாதபோது பொய் சொல்லுவதும், குழைந்து நடு நடுங்கி புகழாரம் சூட்டுவதும் யாருடைய செயல்?
1. கோழைகள் 2. சுயமரியாதை இல்லாதவர்கள் 3. புல்லுருவிகள் 4. அற்பர்கள்
5. திராவிட மாயையில் மயங்கியவர்கள் 6. வன்முறைக்கு அஞ்சுபவர்கள் 7. மானம் போனாலும், தர்மம் அழிந்தாலும், உலகில் நன்மை அழிந்தாலும், தானும் தன் குடும்பமும் உயிர் பிழைப்பதும், சுகங்களை அனுபவிப்பதுமே முக்கியம் என நினைப்பவர்கள் 8. பாலஸ்தீனியர்கள்
9. இஸ்ரேலியர்கள் 10. தமிழ் நாட்டில் சாதி வெறியினால் அதிகாரம் செய்யும் கழகக் கண்மணிகள்
பதில்: டார்வினின் இருப்பியல் தத்துவத்தை உணர்ந்து செயல்படுபவர்கள். உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் போய் ஆபத்தை தேடுபவன் முட்டாள். இன்று பதுங்கி உன்னைக் காப்பாற்றிக் கொண்டால், மறுபடியும் ஒரு நாள் சண்டையிட உயிர் இருக்கும் என்பதை உணர வேண்டும். ஆக, நீங்கள் கொடுத்த ஆப்ஷனிலிருந்து தெரிவு செய்ய இயலவில்லை.
சரவணன்:
ஒரு கோரிக்கை: அனானியாக வரும் கேள்விகளைத் தவிர்க்கவும். குறைந்தபட்சம் blogger கணக்கு இல்லாததால் அனானியாக வருபவர்கள் பெயர் குறிப்பிட வேண்டும் என்று கூறுங்கள்.
விளக்கம்: இப்போதைக்கு கருத்துதான் முக்கியம். மற்றப்படி வசை கேள்விகள் அனுமதிக்கப்படாது. அதை செய்ய என்னால் இயலும் என்று தெளிவாக இருப்பதால் பிரச்சினை இல்லை.
கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)
பதில்: கோத்ரா படுகொலை நடந்த அன்று ஹிந்துவில் செய்தி வந்தது. நானும் செய்தித்தாளில் தேடிப் பார்த்தேன். யாரும் அதை கண்டிக்கவில்லை. முக்கியமாக மதசார்பற்ற வியாதிகள் கள்ள மௌனம் சாதித்தனர். அப்போதே ஹிந்துவுக்கு மின்னஞ்சல் மூலம் ஆசிரியர் கடிதம் இது பற்றி அனுப்பினேன். இக்கொலைக்கு வாய் மூடி இருப்பவர்கள் அதற்கு எதிர்வினை வரும்போது எப்படியெல்லாம் பேசுவார்கள் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன். கடைசியில் அப்படித்தான் நடந்தது. எந்தக் கட்சி பதவியில் இருந்திருந்தாலும் கலவரம் நடந்திருக்கும். அதற்கு மோடிதான் பொறுப்பு என்று கூறுவது அரசியல் பிரசாரமே. அதை வைத்து 2002 தேர்தலிலேயே வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் ஆணையரும் தனது நடவடிக்கைகளால் காங்கிரசுக்கு ஆதரவாக நடந்து பார்த்து விட்டார். ஆனாலும் மோடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜெயித்து ஐந்து ஆண்டுகள் அற்புத ஆட்சியைத் தந்தாரா இல்லையா? இப்போதையத் தேர்தலிலும் அவருக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட கூறமுடியவில்லை என்பதுதானே நிஜம். இம்மாதிரி ஒரு முதன் மந்திரியை நாம் கடந்த 40 ஆண்டுகளில் எப்போதாவது பார்த்திருக்கிறோமா? மோடி கொலை செய்தார் என்றால் ராஜீவ் 1984-ல் செய்ததென்ன? அவருக்கும் நாலில் மூன்று அறுதிப் பெரும்பான்மை தந்தார்கள். அவர் நாட்டை எப்படியெல்லாம் சோஷலிச மாயையில் வைத்து குட்டிச்சுவராக்கினார் என்பதையும் பார்த்தீர்கள்தானே. இம்முறை மோடிக்கு இசுலாமியரும் ஓட்டு போட்டனர். கடந்த ஐந்தாண்டுகளும் தீவிரவாதிகள் தாக்குதலோ, மதக்கலவரமோ ஒன்று கூட இல்லை. இதெல்லாம் முக்கியமில்லையா?
மேலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இறந்த உதயகுமாரன், மதுரையில் தலைவரின் பிள்ளை நடத்திய ருத்ர தாண்டவத்தில் கொல்லப்பட்ட உயிர்கள், அதே போல தர்மபுரியில் அதிமுக ரௌடிகளால் பஸ்சில் உயிருடன் எரிக்கப்பட்ட மூன்று பெண்கள் என்றெல்லாம் அக்கிரம் செய்வித்து விட்டு வெட்கமின்றி ஆட்சி செய்யும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மோடி எவ்வளவோ மேல்.
எம்.கண்ணன், பாங்காக் - இந்த வாரக் கேள்விகள். கேள்விகளை இப்போது வெளியிடவேண்டாம். உங்கள் பதில்கள் வெளியாகும் போது வெளியிட்டால் நன்று.
1. வரும் நாடாளுமன்ற (அ) சட்டம்ன்ற தேர்தலில் உங்களை பிரச்சாரம் செய்ய கூப்பிட்டால் (தினக்கூலியும், பாட்டாவும் கொடுத்துதான்) எந்தக் கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்கள் ? ஏன் ?
அ) திமுக ஆ) அதிமுக இ) தேமுதிக ஈ) பா.ஜ.க உ) காங்கிரஸ் ஊ) சமத்துவக் கட்சி எ) சோ ஆதரவு தரும் கட்சி ஏ) இன்னும் 10 ஆண்டுகளுக்கான உங்கள் பணத்தேவைகளை எந்தக் கட்சி பூர்த்தி செய்கிறதோ அந்தக் கட்சி?
பதில்: எந்தக் கட்சிக்குமே பிரசாரம் செய்வதாக இல்லை. எனது மொழிபெயர்ப்பு வேலையே தலைக்கு மேல் இருக்கும்போது இதெல்லாம் தவையேயில்லை.
2. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் பிறகு தமிழக அரசியல் எப்படி இருக்கும்?
பதில்: காலம் வரும்போது நிலைமையும் தானாகவே மாறும். இப்போது எப்படி ப்ரொஜக்ட் செய்து பார்ப்பதாம்?
3. சானியா மிர்சாவை மீடியாக்கள் இவ்வளவு கொண்டாடுவது எதற்காக? அவரது திறமைக்காகவா ? இல்லை அவரது கவர்ச்சியான உருவத்திற்காகவா?
பதில்: திறமைக்கு திறமை, கவர்ச்சிக்கு கவர்ச்சி. இரண்டுமே சேர்ந்து இருந்தால் வேண்டாம் என்றா கூறப்போகிறார்கள்? எது எப்படியானாலும் சானியா மிர்சா இந்திய டென்னிசுக்கு ஒரு வரப்பிரசாதம். அந்த இளம்பெண் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
4. குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இது நடக்கும் என்று தோன்றவில்லை. கவர்ச்சி என்பது பாதி மூடிய நிலையில் வருவதே. முழுதும் திறந்தால் அது போய் விடும். டாப்லெஸ் பார்களில் ஜொள்ளுவிட்டு பார்ப்பது புதிதாக வருபவர்களே. பிறகு இரண்டே நாட்களில் பழகிப் போய் தத்தம் வேலையைப் பார்க்கின்றனர்.
5. நங்கநல்லூரில் தற்போதையை ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி ? 900- 1000 சதுரடி flat எவ்வளவு விலை. ? தண்ணீர் பிரச்னை உண்டா?
பதில்: ஃபிளாட் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறும் என கேட்டறிந்தேன். ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) ஐம்பது லட்சத்துக்குக்ம் மேல் கேட்கிறார்கள். தண்ணீர் பிரச்சினை சில பாக்கெட்டுகளில் அதிகம் உண்டு.
வஜ்ரா:
1. இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான, திபத்தியர் கலாச்சாரத்தை அழிக்கும் சீனா பற்றி நம் உள் நாட்டு தேச துரோகிக் கும்பலின் (CPIM, CPM, CPIML) கருத்து என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஏதேனும் சொல்லுங்கள். அதே விஷயத்தை, "தி ஹிண்டு" எவ்வாறு அணுகுகிறது என்பது பற்றியும் சொல்லுங்கள் ஐயா.
கம்யூனிஸ்டுகளின் தேசதுரோக சிந்தனை சரித்திர பிரசித்தி பெற்றதாயிற்றே. 1941 வரை இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசி பிரிட்டனை எதிர்த்தவர்கள் ஸ்டாலின் சோவியத் யூனியன் மீது படையெடுத்ததுமே பால்மாறி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தேசபக்தர்களை காட்டிக் கொடுத்தவர்கள். 19620-ல் சீன ஆக்கிரமிப்பு போது சீனாவை கண்டிக்க ஒரு பகுதி மறுத்து, CPM ஆக மாறியது மறந்து விடுமா என்ன? இப்போது கூட 1962-ல் ஆக்கிரமிப்பு செய்தது இந்தியாதான் என்று பேசித் திரியும் கம்யூனிஸ்டுகள் உள்ளனரே. ஹிந்து பத்திரிகை வெறுமனே காக்டயில் கம்யூனிசம் பேசுகிறது.
எஸ். குமார் (ஆங்கிலத்தில் இட்ட கேள்வி அவர் விருப்பப்படி தமிழாக்கம் செய்யப்படுகிறது)
1. நாங்கள் கர்நாடக மாநிலத்தில் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். தமிழக அரசோ நடுவண் அரசோ அம்மாதிரி திருமணங்களுக்காக பணம் பரிசாக அளிக்கின்றனவா? அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
பதில்: இது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எதற்கும் இங்கு போய் பார்க்கவும்
இந்த வாரத்துக்கான கேள்வி பதில்கள் இவ்வளவுதான். அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவின் பின்னூட்டத்தில் கேளுங்கள். வழக்கம் போல கேள்விகள் வர வர அவை அடுத்த வாரத்துக்கான வரவு பதிவில் சேர்க்கப்பட்டு விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
3 hours ago
78 comments:
//தெலுங்கு மாமியார் பார்ட்டியான டி பி ஸி டி. அய்யாவோ//
Raghavan/Bala ayya, Do you really know that TBCD's mother/mother-in-law tongue is telgu?
(sorry, I don't have tamil font in my machine)
\\அனானி1:
1. நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
அனானி2:
1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
இரண்டாவது கேள்விக்கு லக்கிலுக்கும் பதில் அளிக்கலாம்!!!
//திராவிடக்கட்சிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவரும் சாதாரண தொண்டனின் இப்போதைய நிலை என்ன? அதன் தலைவர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது வருடங்களுக்கு முன்னர் முத்துவேல் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், துரைமுருகன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது? விலைமாதுவிடம் சென்றுவிட்டு காசு கொடுக்காமல் வந்தவர்கள் யார்? கவிஞர் கண்ணதாசன் புட்டுப் புட்டு வைத்த உண்மைகளை நீங்கள் படிக்கவில்லையா? ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெட்கமில்லாமல் உண்டியல் வைத்து ஏழைத்தொண்டனின் கோவணத்தையும் அதில் போடச்செய்த தலைவர்களை இன்னமும் உங்களைப் போன்றவர்கள் நம்புவது வேதனையாக இருக்கிறது.//
டோண்டு சார்,
மேல சொன்ன அம்புட்டும் என்னோட சொந்தச் சரக்கு. நீங்க பாட்டுக்கு அனானி 1 அனானி 2ன்னு போட்டுட்டீங்களே? இது உங்களுக்கே நியாயமாப் படறதா?
உங்கள் பதிலகள் அனைத்தும் நன்றாக இருந்தது. தொடருங்கள்.
சத்தியமாக நான் வலைப்பதிவர் இல்லை. விரைவில் உங்களுடன் தொலைத் தொடர்புகிறேன்.
நன்றி.
////அனானி2:
1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
பதில்: இந்த சண்டை போடவில்லை என்றால் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் எப்படி தொடர்ந்து வன்கொடுமை செய்வதாம்? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.////
40 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக்
கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்தன?
இந்த யுத்தத்தை அவர்களாவது முடிவிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமில்லையா?
ஏன் செய்யவில்லை?
சொத்து சேர்க்க அலைந்த நேரத்தில் ஒரு பத்து சதவிகிதமாவது ஒதுக்கி இதைச் செய்திருக்கலாமே?
ஏன் செய்யவில்லை?
இந்த நிலைமை இங்கே தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்கும் திராவிடத் தலைவர்களின் அடி வருடிகளுக்கு ஏன் தெரியவில்லை?
எங்கே போய் முட்டிக் கொள்வது?
அல்லது அவர்களை எங்கேபோய் முட்டிக் கொள்ளச் சொல்வது?
டோண்டு அய்யா.ஒரு கேள்வி.
சாதி வெறி பிடித்து அலையும் உயர் சாதி திராவிடர்கள்,ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளாக அரசு,மற்றும் நில புலன்,வியாபாரம் என்று எல்ல துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள்.இருந்தும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்வது அரசியலுக்காகவா அல்லது இந்த மூஞ்சிகள் உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான,அறிவே இல்லாத காட்டுமிரண்டி கும்பலா?
பாலா
உதயகுமார் அவர்களே,
நான் இட்ட உலகை வெறுத்த சாமியார் பதிவில் குறிப்பிட்ட தெலுங்குக்காரர் நிச்சயமாக டி.பி.சி.டி அல்ல. பார்க்க: http://dondu.blogspot.com/2008/03/blog-post_12.html
அதில் நான் குறிப்பிட்டிருந்த பதிவர் பெயர் கோபாலகிருஷ்ணுடு. அவர் பெயரை வைத்து தெலுங்குக்காரர் என்று கூறினேன். அவ்வளவுதான். அவர் நிஜமாகவே தெலுங்குக்காரர்தானா என்பதும் எனக்கு தெரியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மேல சொன்ன அம்புட்டும் என்னோட சொந்தச் சரக்கு. நீங்க பாட்டுக்கு அனானி 1 அனானி 2ன்னு போட்டுட்டீங்களே? இது உங்களுக்கே நியாயமாப் படறதா?//
பிளாக்கர் பின்னூட்டம் தவிர வேறு எப்படி வந்தாலும் நான் கூறியது போலத்தான் செய்ய இயலும். அல்லது குறைந்த பட்சம் எல்லா கேள்விகளும் ஒரே பின்னூட்டத்தில் வந்திருக்க வேண்டும்.
ஆக நான் வேறு எந்த மாதிரியும் செயல்பட்டிருக்க இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சரஸ்வதி தேவியை நிர்வாணமாக வரைந்தவனுக்கெல்லாம் பாதுகாப்பு.//
தில்வாராவில் கோயிலைக் கட்டியவரைத் தானே சொல்றீங்க? அந்த மன்னர் எப்பவோ செத்துப் போயிட்டார்னுல்ல நெனச்சேன்.
எனது கேள்விகளையும் பதில் வெளியிடும்போது வெளியிட்டால் போதுமென்று நினைக்கிறேன்
அரசியல் கேள்விகள்
1.இடது சாரி, வலது சாரிகளுக்கு உள்ள வேறுபாடு என்ன?
அவர்களின் முக்கிய கொள்கைகள் என்ன ?
2.முந்தய ஜெ ஆட்சி, இப்போதைய கருணாநிதி ஆட்சி, வேறுபாடு என்ன?
3.குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
மொக்கை கேள்விகள்
1.அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
2.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா? சின்ன வயதில் எந்த பைக் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
3.கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டா அல்லது பணம் காய்க்கும் விளையாட்டா ?
வால்பையன்
//தில்வாராவில் கோயிலைக் கட்டியவரைத் தானே சொல்றீங்க? அந்த மன்னர் எப்பவோ செத்துப் போயிட்டார்னுல்ல நெனச்சேன்.//
இல்லை எஃப்.எம்.ஹுசைனை சொன்னேன். இது சம்பந்தமாக இன்னொரு நிகழ்ச்சி. கராத்தா ஹுஸைனி சித்திரம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றவர். மேலே சொன்ன அந்த அயோக்கிய ஹுசைனை கண்டித்து ஒரு பிரெஸ் மீட் போட்டார். அவன் வரைந்த சரஸ்வதியின் ஓவியத்தை வைத்து நான்கே தூரிகை வீச்சுகளில் அழகாக துணியும் வரைந்தார். ஒரு தாயின் மானத்தை காப்பாறும் பாரத புதல்வனின் செயலாகத்தான் எனக்கு பட்டது. கூடவே அந்த ஹுசைனின் நிர்வாணப்படத்தை வரைந்து அவன் மானத்தை வாங்கினார். மன நிறைவை தந்தது அச்செயல்.
நான் கூறுகிறேன், நீ ஓவியன் என்றால் முகம்மதுவை படமாக வரைந்து கொள்ளவும், உன்னை வெட்டி விடுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்க வேண்டும் வால்பையன் அவர்களே, கேள்விகளை அவ்வாறு ஒருமுறை வெளியிடாது பிறகு பதிலளித்தேன் என்பது நிஜமே. ஆனால் இனிமேல் அவ்வாறு செய்யப்போவது இல்லை.
ஏனெனில், டோண்டு இக்கேள்விகளுக்கு எப்படித்தான் பதிலளிக்கப் போகிறான் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தால்தான் பதிவு சுவையாக இருக்கும்.
பை தி வே உங்கள் கேள்விகள் அடுத்தவாரத்துக்கான வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தில்வாராவில் கோயிலைக் கட்டியவரைத் தானே சொல்றீங்க? அந்த மன்னர் எப்பவோ செத்துப் போயிட்டார்னுல்ல நெனச்சேன்.//
ஆக, நம் மரபில் உள்ளதைத்தான் இந்த மண்ணின் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த அந்த மாபெரும் கலைஞர் செய்தார். பிறகு ஏன் அவர் மேல் இந்தக் கொலைவெறி?
அடுத்து, கோத்ரா சம்பவம் நடந்த தேதி 27/02/2002. அடுத்த நாள் 28/02/2002 அன்று 'இந்து' நாளிதழில் முதல் பக்கத்தில் இச்செய்தி வந்துள்ளது. அதே இதழில் இந்தச்செய்தியும் வந்துள்ளது:
Sonia condemns Gujarat incidents
இது எப்படி உங்கள் கண்களில் படவில்லை?
ஆம் சோனியாஜி சொன்னது என் கண்களில் படத்தான் இல்லை. நன்றி. ஆனால் நான் பார்த்தது பிரிண்டட் வெர்ஷன். அதில் இதை பார்த்ததாக ஞாபகம் இல்லை. நீங்கள் கொடுத்திருப்பது இணையப் பக்கம். மேலும் அம்மாதிரி பிரிண்டட் வெர்ஷனில் வந்திருந்தால் ஹிந்துவே அடுத்த நாளைக்கு என் கடிதத்தைப் போட்டு தக்க பதிலும் கூறியிருக்கும். அவ்வாறு ஒன்றும் அது செய்யவில்லை. நான் மின்னஞ்சலில் ஹிந்துவின் விதிகள்படி எனது முழுமுகவரி எல்லாம் இட்டுத்தான் அனுப்பியிருந்தேன். பேப்பரில் பதில் கூறாவிட்டாலும், எனக்கு மின்னஞ்சலிலும் பதில் இல்லை.
மேலும் ஒன்று. சோனியாஜி கூறினார், மற்றவர்கள்?
ஹுசைனை சப்பை கட்டும் நீங்கள் ஔரங்கசீப் கண்காட்சியில் உண்மையான ஆவணங்களை வைத்துத்தானே கண்காட்சி நடத்தினார்கள், பல ஊர்களில் நல்லபடியாக நடந்ததை இங்கு ஏன் ஆர்ப்பாட்டம் செய்து மூடச்செய்ய வேண்டும் என்பதற்கும் பதில் கூறுங்களேன். வெட்கம் கெட்ட ஓட்டு அரசியல்தானே இதற்கு காரணம்.
மறுபடியும் கூறுகிறேன், வேற்று மதத்து கடவுளரை நிந்தனை செய்த அற்பப் பதர்களையெல்லாம் மாமனிதனாக ஒப்புக் கொள்வதற்கில்லை.
டோண்டு ராகவன்
//
ஆக, நம் மரபில் உள்ளதைத்தான் இந்த மண்ணின் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்த அந்த மாபெரும் கலைஞர் செய்தார். பிறகு ஏன் அவர் மேல் இந்தக் கொலைவெறி?
//
சரவணா,
நம் மரபில் நிர்வாணத்தைக் கலையாகப் பார்த்தார்கள். ஹுசைன் செய்தது கொஞ்சமும் ஞாயமற்ற செயல். அவன் நிர்வாணப்படங்கள் மட்டும் வரைந்துவிட்டு சும்மா இருந்தால் பரவாஇல்லை. ஹுசைனின் தாய், அன்னை தெரசா, போன்ற இந்து அல்லாத பெண்களை நன்கு ஆடைகளுடன் சித்தரித்துள்ளான்.
ஹிட்லரை நிர்வாணமாக வரைந்து, அதற்கு நிர்வாணத்தில் அசிங்கம் உள்ளதால் ஹிட்லரை அப்படி வரைந்ததாகவும் கூறியுள்ளான். அப்படி அசிங்கப்படுத்தும் எண்ணத்துடன் தான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று இந்து சின்னங்களை நிர்வாணமாக வரைந்துள்ளான்.
கோவில்களில் கலைஞர்கள் வடிக்கும் நிர்வாணம் என்பது கலை, ஹுசைன் செய்வது கலை என்கிற பெயரில் தன் வெறுப்பை வியாபாரம் ஆக்குவது.
அதைத் தெரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோத்ரா, 2002 குஜராத் என்று பேசுவது மூடத்தனம். குஜராத்தே 2002 ல் இருந்து 2008 க்கு வந்து விட்டது, உங்களைப் போன்ற bleeding hearts எல்லாம் எப்ப கரை ஏறப்போறீங்க... ?
எம். எஃப். ஹுசைனுக்கு வக்காலத்து வாங்கும் வக்கற்றவர்களுக்கு
http://www.slideshare.net/deshbhakta/mf-hussains-hypocrisy/
டோண்டு அவர்களே , உங்களுக்கான கேள்வி, இந்த தளத்தில் உள்ளது.
Dear Udhayakumar,
There are totally 3 TBCDs in this world.Among them TBCD #1 s mother-in-law tongue is suspected to be Telugu.However TBCD #0,#2 have their firm roots in Malayalaam which is evident from the writing accent(?).
Bala
Dear Dondu sir,
I do believe that this is worthy of publishing .I do not think that there is any abuse here for you to reject.
ஹுசேன் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தன் சொந்த நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுவது வெட்கக்கேடு.
//...இங்கு ஏன் ஆர்ப்பாட்டம் செய்து மூடச்செய்ய வேண்டும் என்பதற்கும் பதில் கூறுங்களேன். //
நிச்சயம் மூடச்செய்தவர்களை வண்மையாகக் கண்டிக்கிறேன். நான் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவன். பேச்சுரிமை என்பது ஓட்டுரிமைக்கு நிகராகக் கருதப்பட்டால்தான் மக்களாட்சியே அர்த்தம் உள்ளதாக இருக்கும். மோடி அரசு பரோடா பல்கலை. மாணவர்கள் கண்காட்சிக்குப் பாதுகாப்பு அளிக்காமல் பஜ்ரங் வன்முறையாளர்களை ஊக்குவித்தது போல, பல அரசுகள் (ஆரம்பத்தில்) டாவின்சி கோட் படத்தையும், சமீபத்தில் ஜோதா அக்பர் படத்தையும் தடை செய்தது பேச்சுரிமையை மீறும் செயல்.
மற்றபடி 'இந்து' தாளுக்கு, இணையப் பிரதி, அச்சுப்பிரதி என்ற வேறுபாடு கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே என்று நினைக்கிறேன்.
//மற்றபடி 'இந்து' தாளுக்கு, இணையப் பிரதி, அச்சுப்பிரதி என்ற வேறுபாடு கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே என்று நினைக்கிறேன்.//
நான்படித்த அச்சுப்பிரதியில் அது இல்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லாது ஏதாவது மூலையில் இருந்திருக்கலாம். மற்றப்படி வேறு யாருமே அதை கண்டனம் செய்யவில்லை என்பது நீங்கள் கூறுவதிலிருந்தே தெரிகிறது.
//நிச்சயம் மூடச்செய்தவர்களை வண்மையாகக் கண்டிக்கிறேன்.//
அப்பாடா பெரிய மனது கொண்டு இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே, நன்றி.
//ஹுசேன் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தன் சொந்த நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுவது வெட்கக்கேடு.//
தஸ்லீமா பிரச்சினையில் தங்கள் கருத்து என்ன?
டோண்டு ராகவன்
அடுத்த பதிவுக்கான கேள்வி
'இந்த கேள்விகளில் எத்தனை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது. எத்தனை, தனக்குத்-தானே அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது'
:)
கேள்விக்கு நன்றி சர்வேசன். விடை அடுத்த வெள்ளிக்கிழமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி!
ஆவலுடன் வெயிட்டிங்.
இங்க வந்தா அங்க கலீஜ் பின்னூட்டம் வருது; பெயில்ல விட்டுட்டாங்களா சைகோவ?
Stand up for Free Tibet:
Why are the global celebrity champions of the oppressed silent on this one,
like Amartya Sen, Arundhati Roy, Aruna Roy, Medha Patkar, Bono, Bill
Clinton???
//ஹிந்து பத்திரிகை வெறுமனே காக்டயில் கம்யூனிசம் பேசுகிறது. //
ஹிந்துவுக்கு இந்த எச்சி வேல எதுக்கு. ஏன் ஊரை ஏமாத்த பார்க்கிறது.
நடந்த உண்மையை சொல்லலாமே, ஏன் இந்த பொய் பித்தலாட்டம்.
இதுவரை வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி, சொல்ல வரும் விஷயத்தை வைத்தே பதிவுகளைப் படித்தும், பின்னூட்டமிட்டும் வருகிறேன். மிக கண்ணியமான வார்த்தைகளைத்தான் எனக்குப் பயன்படுத்தத் தெரியும். இதில் யாரோ உண்மைப் பெயர் சொல்ல தைரியமில்லாத கோழை
டிபிசிடி என்று (தமிழில்) போலிப் பெயரில் என்னுடைய ஒரு இடுகையின் பின்னூட்டமாக என்னை மிகக் கேவலமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளான்--காரணம் உங்கள் இடுகைக்கு நான் பின்னூட்டம் இட்டதாம். எந்த இடுகையைப் படிப்பது, மறுமொழியிடுவது என்று எனக்குத் தெரியும், உன் வேலையப் பாருடா என்று அவனுக்குச் சொல்லிக்கொள்கிறேன். (இப்பக் கூட ஏக வசனத்தை விருப்பமின்றி, வேறு வழியில்லாமல் தான் முதல் முறையாக உபயோகிக்கிறேன்.)
அப்புறம் தஸ்லீமா...அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க மனமில்லாத மத்திய அரசு மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியவற்றைப் பற்றி என்ன சொல்ல? மேலும் ரஷ்டியே எளிதாக இந்தியா வந்து செல்லும் போது தஸ்லீமாவுக்குப் பாதுகாப்பளிப்பதில் என்ன கஷ்டம் என்று புரியவில்லை.
டியர் ராகவன் சார் ,
கேள்வி பதில் நன்று.
விலைமாதுவிற்க்கும் காசு கொடுக்க மாட்டார்கள் .
கல்யாணம் காது குத்துவிர்க்கு வந்தாலும் அவர்களது கட்சி முக்கிய ஆளாக இருந்தாலும் அவர் கலந்து கொள்ள பணம் கொடுக்க வேண்டும் .பேச பணம் எக்ஸ்ட்ரா .
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதற்கிணங்க இப்போது பேயும் மழை எத்தனை பேரின் குடி கேடுத்ததோ ! (செய்யாரில் மழை இல் நெல் மூட்டைகள் நனைந்தன - செய்தி ).
இவர்கள் சிறுபான்மை மக்கள் ஒட்டு கிடைக்க எது வேண்டுமானாலும் செய்வார்கள் .
அன்புடன்
பாஸ்கர்
//
ஹிந்துவுக்கு இந்த எச்சி வேல எதுக்கு. ஏன் ஊரை ஏமாத்த பார்க்கிறது.
நடந்த உண்மையை சொல்லலாமே, ஏன் இந்த பொய் பித்தலாட்டம்.
//
ஹிந்து நாளிதள் ஆசிரியர் நரசிம்மன் ராம் ஒரு சீனக் கையாள். கம்யூனிச அடிவருடி. இப்படிப்பட்ட உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் பிழைப்பு பிழைக்க நாண்டு கொண்டு சாவலாம் என்று சாபம் வாங்கும் அளவுக்கு ஒரு பக்கச் செய்தி வெளியிடுபவர்.
அவரது பித்தலாட்டங்களை தோலுரிக்கும் இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.
http://cbcnn.blogspot.com/
மவுண்டு ரோடு மாவோ
//தஸ்லீமாவுக்குப் பாதுகாப்பளிப்பதில் என்ன கஷ்டம் என்று புரியவில்லை.//
அது வேக்ககேடா, இல்லையா? கொஞ்சம் சொல்லுங்க சரவணன் சார்.
பிரபு
ஃப்ரெடரிக் ஃபோர்சைத் எழுதியுள்ள ராம் தால் என்கிற இந்திய மாணவனைப் பற்றிய சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா? ['There Are No Snakes in Ireland';book: No Comebacks]
படித்திருந்தால் சுலபத்தில் மறந்திருக்க முடியாது!
சரவணன் அவர்களே,
Frederick Forsyth is one of my favourite authors. And No Comebacks, a collection of short stories, is one of his best works. Jeffrey Archer, another favourite of mine too writes great shorts. But I would choose No Comebacks over any short story collection by Archer.
No Comebacks, is the first of the ten stories and is about a rich man who falls head over heels in love with a married woman. Unable to let her go, he arranges an assassination of her husband. And things go horribly wrong.
There Are No Snakes In Ireland is about an Indian medical student in Ireland who is bullied by the foreman at a construction site where he is trying to earn his tuition. Things go too far and the student decides to take his revenge.
The Emperor is a feel good story, one about how a henpecked husband discovers his passion for fishing during a long duel with the emperor.
There are Some Days…. is a gem. It is about a highway robbery gone wrong. With a serious twist in the end.
Money With Menaces is about a working man who commits one little indiscretion and ends up getting blackmailed. A great story, this.
Used In Evidence is about an old man who might have committed a murder, or might not have.
Privilege tells the story of small business man who is heavily slandered by a reporter. He finds that although he has legal options available to clear his name, he might end up bankrupting himself in the process.
Duty is somewhat different from the other stories in the collection, as the author himself points out. Although a simple story, you will find plenty of things to chuckle over.
A Careful Man is a gem, again. It details how a wealthy man who knows he is suffering from terminal cancer keeps his wealth away from both Inland Revenue as well as his relatives.
Sharp Practise is the story of a card game on a train - a judge, a priest and another man being the three parties involved. And it ends with a twist.
I have read this book many times over the years and it manages to impress me every time.
மேலே உள்ளது போல எல்லாம் கூறத்தான் ஆசை. ஆனால் இந்தப் புத்தகம் நான் படித்ததில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிலுக்கு நன்றி
ஜக் சூரியா ஒரே கல்லில் மூணு மாங்காய் அடிக்கிறார். திபெத் அவமானம், தஸ்லீமா வெக்ககேடு, சின்ன ராமதாசின் மொக்கை.
பிரபு
SECOND OPINION
From Taslima to Tibet, India proves chicken
21 Mar 2008, 0153 hrs IST,Jug Suraiya
Instead of the peacock, India should adopt the chicken as its national bird. Apart from the fowl being the dish of choice, at least in the northern part of the country, our official response to various situations - ranging from the Taslima Nasreen controversy to the protests in Tibet - can best be described as chicken-hearted.
Forced into exile from her native Bangladesh by religious fanatics who didn't like her feminist writings, Taslima sought sanctuary in Kolkata in whose Bangla milieu she felt creatively comfortable. However, after street riots instigated by local goons disguised as religious zealots caused the Marxist state government to decide that minority-appeasing discretion was the better part of secular valour, the writer was bundled out of the city and taken first to an undisclosed hideaway in Rajasthan and later to Delhi, where she was kept in virtual isolation.
Made to apologise for her 'anti-Islamic' views, she was warned by no less than the information and broadcasting minister - supposedly the custodian of the fundamental right to freedom of expression as spelt out in the Constitution - that she should not say or do anything that might hurt the religious sensibilities of any group. (Should the I&B ministry be renamed the ministry of intimidation and browbeating?)
Finally, Taslima has sought sanctuary in distant Scandinavia, saying: "A person who couldn't be scared by fundamentalists has been defeated by cold-blooded state terrorism inflicted by the Indian government. My terrible experience has shattered all my notions about a secular, democratic India.”
Why did Taslima - yet another personification of freedom of expression — have to quit India? Because when push comes to communal shove, for all its professions to the contrary, India is too chicken to stick to its principles of liberalism and democracy and allows mob rule to subvert the rule of law. In the case of the Chinese crackdown in Tibet, India's official response has been so politically correct, not to mention politically chicken, that it has earned praise from no less than the Chinese premier, Wen Jiabao (who might have made special mention of the Indian Left whose non-response might be summed up as 'Tibet who?').
Despite China's continuing claims on Arunachal, and despite its proven nuclear proliferation to Pakistan, New Delhi walks on eggshells where Tibet is concerned and seems vaguely embarrassed by the Dalai Lama's presence on Indian soil. Why? Because then, maybe, China will support India's admission to the UN Security Council. Or at least stop using Pakistan as a foil against us. Or sell us cheap pichkaris for Holi. Or something.
The truth is that we are just too chicken to take on the big demons - Chinese totalitarianism, religious fundamentalism - but make do with assailing minor imps of the perverse. For instance, Fiona Mackeown, mother of the murdered Scarlett Keeling, has been strictured for having left her 15-year-old daughter alone in Goa. What an unnatural, monstrous mother. How unlike the caring, sharing mothers of the suitably named Mother India, where female foeticide and infanticide are as common as the common cold. Or take the case of health minister Ramadoss who is so busy fighting the evils of tobacco and liquor - by putting 'gory' pictures on tobacco products, and banning surrogate liquor ads - that he has no time to address the much larger ills that plague our practically non-existent public health system.
Can't move mountains? Find convenient molehills, turn them into mountains, and then move them. That seems to be the recipe. Not just for the health minister but for the entire sorry mess which might aptly be called Indian chicken curry.
http://timesofindia.indiatimes.com/Jug_Suraiya_From_Taslima_to_Tibet_India_proves_chicken/articleshow/.cms
//ஹுசேன் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தன் சொந்த நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுவது வெட்கக்கேடு.//
இந்தியாவுக்கு வந்தா போலீஸ் கைது பண்ணும் என்று பயந்து கொண்டு, துபையில் மறைந்து கொண்டிருக்கும் பேடி கிழவன் அக்கியுஸ்ட் எம்.எப்.ஹுசைனுக்கு என்ன வக்காலத்து.
இவன் மீது 7 குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன. மேலும் இவனை பிடிக்க 6 நீதிமன்றங்கள் கைது வாரண்ட்டுகள் பிறப்பித்துள்ளது.
ஆஹா .. இங்கே பின்னூட்டமிட்டதற்கு நிறைய வாழ்த்துகள உங்கள் நண்பரிடமிருந்து வந்தவண்ணம் இருக்கின்றன் . ;) ;)
இப்போது சில கேள்விகள் .....
1) சில மேல்நாட்டு பெயர்களை தமிழ் சிறப்பெழுத்து 'ழ'வுடன் தொடங்குகிறார்களே. அது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும் ?
2) ஒவ்வொரு பெயர்சொல்லையும் அதன் உரிமையாளர் உச்சரிப்பது போல் உச்சரிக்கவேண்டும் . உ.தா திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிக்கேன் என அவன் உச்சரிக்க முடியாமல் சொன்னான். ஆனால் நாம் ஏன் 'இங்லீஷ்' என்ற பெயர்சொல்லை ஆங்கிலம் என மொழிபெயர்த்துள்ளோம்
தாசு அவர்களே, உங்கள் கேள்விகளுக்கு பதில் அடுத்த பதிவில். அவை ஏற்கனவே அடுத்த பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
You are right. Telugu is my mother tongue.
ராகவன், உங்கள் பதிவுகள் மிக நன்றாக உள்ளன...உங்கள் கருத்துடன் நான் பெரும்பாலும் ஒத்து போகிறேன்...சிலவற்றை மறுக்கிறேன்....இதோ எனது கேள்வி
' சோ ' அவர்களுக்கு பிறகு துக்ளக் நாளேடு எப்படி இருக்கும். நானும் சோ வின் விசிறி தான். அதனால் தான் கவலையோடு இந்த கேள்வியை கேட்கிறேன்..?
அருண்
மேலும் ஒரு சிறு குறிப்பு...என்னிடம் பிளாக்கர் account இல்லை....அதனால் தான் அருண் என்ற பெயரில் கமெண்ட் செய்து இருக்கிறேன், இது எனது பெயர் தான் புனை பெயர் கிடையாது :)
கோபலக்ருஷ்னடு காரு,
வணக்கம்.உங்களுக்கு ஒரு கேள்வி.
அது ஏன் தெலுங்குல தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு லு அல்லது டு சேர்த்து போட்டு விட்டு தூய தெலுங்கு வார்த்தைன்னு சொல்லிக்கறீங்க.அப்படீன்னா ஏன் தெலுங்கை தமிழ்லு ன்னு சொல்லக் கூடாது?ஆனாலும் தெலுங்கை சுந்தரத் தெலுங்குன்னு சொல்வது ஓவர் தானே?
//ஹுசேன் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தன் சொந்த நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுவது வெட்கக்கேடு
//
its a self imposed exile. Nobody is preventing him from coming to India, if he comes he will get arrested for what he did. Thats all.
Mohammed Abu
//நீ ஓவியன் என்றால் முகம்மதுவை படமாக வரைந்து கொள்ளவும்,//
matha veriyai thoondum pechu dondu avargal solvathu. kandikkiren
komanan
இதுவரை வாழ்க்கையில் எதையாதுவது சாதித்ததாக எண்ணுகிறீர்களா ? அப்படி என்றால் அதில் முதலில் நிற்கும் சாதனை எது ?
தமிழ் சமுதாயத்த்துக்கு இதுவரையில் நீங்கள் செய்த பெரிய தொண்டு என்ன ? தானம் தருமம் செய்வதில் ஆர்வம் உண்டா ?
இளமைப்பருவத்தில் காதலித்ததுண்டா ? யாரை ? அந்த கதையை சொல்லமுடியுமா ?
மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேட்பீர்கள் ?
தமிழ்மணத்தில் எழுத வரவில்லை என்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள் ?
நீங்கள் ஏன் நல்ல ஆங்கில புதினங்களை தமிழில் மொழி பெயர்கக்கூடாது....பணம் அதிகமாக வராது என்பது மட்டும் தான் காரணமா?
அருண்
கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார் ?
டோண்டு சார்,
எனது கேள்விகள்:
1) பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர் நீங்கள் ஆரம்பித்தால் என்ன?
2) www.dondu.com தளம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?
3) உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்? அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?
விக்ரம்
//
உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்? அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?
//
அவர் பார்ப்பானராகப் பிறந்துவிட்டார். அது மட்டுமில்லாமல் தான் ஒரு பார்ப்பானன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. அது தான் பிரச்சனை.
//அது ஏன் தெலுங்குல தமிழ் வார்த்தைகளுக்கு ஒரு லு அல்லது டு சேர்த்து போட்டு விட்டு தூய தெலுங்கு வார்த்தைன்னு சொல்லிக்கறீங்க.//
It is just a Telugu ending. I do not know more about it. The name is as given by my parents. In school I took Hindi as second language and henece am not in a position to read and write Telugu.
//மேலும் ஒரு சிறு குறிப்பு...என்னிடம் பிளாக்கர் account இல்லை....அதனால் தான் அருண் என்ற பெயரில் கமெண்ட் செய்து இருக்கிறேன், இது எனது பெயர் தான் புனை பெயர் கிடையாது :)//
பிளாக்கர் அக்கவுண்ட் திறப்பது ஐந்து நிமிட வேலை. ஏன் கூறுகிறேன் என்றால், யார் வேண்டுமானாலும் அருண் என்று அனானி பின்னூட்டம் இடலாம். அதை தடுக்க இயலாது.
அன்புடன்,
டொண்டு ராகவன்
//
பிளாக்கர் அக்கவுண்ட் திறப்பது ஐந்து நிமிட வேலை. ஏன் கூறுகிறேன் என்றால், யார் வேண்டுமானாலும் அருண் என்று அனானி பின்னூட்டம் இடலாம். அதை தடுக்க இயலாது.
அன்புடன்,
டொண்டு ராகவன்
//
நான் கூட அருண் என்ற பெயரில் பின்னூட்டம் போடுவேன்.
ஆனால் என் உண்மையான பெயர் செந்தழல் ரவி இல்லை.
//ஆஹா .. இங்கே பின்னூட்டமிட்டதற்கு நிறைய வாழ்த்துகள உங்கள் நண்பரிடமிருந்து வந்தவண்ணம் இருக்கின்றன் . ;) ;) //
பின்னூட்டம் இட ஊக்கபடுத்தும் இந்தசெயலை என்னவென்று பாராட்டுவது,
அந்த பரதேசி பயளுக்காக ஒரு அருவா தீட்டி வச்சிருக்கேன். எப்ப வந்தாலும் அவன் தாவு கிளியிறது என்னால்தான்.
//நானும் சோ வின் விசிறி தான். //
காத்து நல்லா வருமா, கரெண்டு போன கொஞ்சம் கஷ்டமா இருக்கு
வால்பையன்
சார் ,
உங்களுக்கு பின்னுட்டம் இட்டால் எனது பிளாக்கில் அசிங்கமாய் பின்னுட்டம் வருகிறது ! இது எப்படி ? யார் அனுப்புகிறார்கள் ? ப்ளீஸ் விளக்கவும் !
அன்புடன்
பாஸ்கர்
@அறுவை பாஸ்கர்,
Please remove the filthy comment in your blog post. It is not from me.
1. Introduce comment moderation.
2. Till such time you are capable of locating impersonating comments, disable the other and anony options.
3. Please read my post http://dondu.blogspot.com/2005/12/2.html
on the above subject.
Regards,
Dondu N.Raghavan
//வேற்று மதத்து கடவுளரை நிந்தனை செய்த அற்பப் பதர்களையெல்லாம் மாமனிதனாக ஒப்புக் கொள்வதற்கில்லை.
//
டோண்டு சார்,
முன்னொரு பின்னோட்டத்தில் வீரமணியை பற்றி அவன் இவன் என்று எழுதியதை அவர் இவர் என்று மாற்றி 'அவர் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' என்றீர்கள்.
இப்போது தாங்களே.....??!!!! ஏன் இப்படி??!! எனக்கு புரியவில்லை??!!
முதலாவது, எம்.எப். ஹுசைனுக்கு வீரமணியை விட வயது அதிகம்
இரண்டாவது, இந்து மத கடவுளரை நிர்வாணமாய் வரைந்தது தவிர வேறு எதுவும் குறை எதுவுமில்லை. ஆனால் வீரமணியோ, பக்கா பச்சோந்தி, ஏமாற்றுவாதி. சமூக நீதி, பகுத்தறிவு என்ற பெயரில் ஊரை ஏமாற்றுவது, ரவுடித்தனத்தை தூண்டிவிடுவது, தீவிரவாத சக்திகளுக்கு ஜால்ரா போடுவது, பெரியார் டிரஸ்ட் பணத்தை சுருட்டியது, இந்துக்களை குறிப்பாக பார்ப்பனர்களை இழிவாக பேசுவது, ஆனால் மற்ற உயர் சாதி இந்துக்களை பற்றி பேசாமலும் மற்ற மதத்தின் குறைபாடுகளையும் விமர்சிக்க வக்கு இல்லாமல் இருப்பது போன்ற பல பல குறைபாடுகள் உண்டு.
ஆனால் இப்படிப்பட்ட ஆளுக்கு மரியாதை...!! ஆனால் இதைவிட குறைந்த குறைபாடுள்ள ஆளுக்கு மரியாதை இல்லை? ஏனிந்த முரண்பாடு? வீரமணி அப்படியென்ன ஸ்பெஷல்?
விக்ரம்
விக்ரம் அவர்களே,
நீங்கள் கூறுவது உண்மையே. நான் முன்னுக்குப்பின் முரணாகத்தான் நடந்து கொண்டேன். மன்னித்து விடுங்கள்.
ஹுசைன் செய்ததைப் பற்றி எழுதும்போதே என்னையறியாமல் கண்மூடித்தனமான ஆத்திரம் வந்து திக்குமுக்காடிப் போனேன். அதன் எதிரொலிதான் அது.
இனிமேல் ஜாக்கிரதையாக நடக்க முயல்வேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//matha veriyai thoondum pechu dondu avargal solvathu. kandikkiren
komanan//
அடேய் ம.க.இ.க மடையா ,
இந்து சாமிய துணியில்லாம வரஞ்சா அது ஓவியம் அதையே அவுக சாமிக்கு வரைய சொன்னா அது மத வெறிய தூண்டுறதா..
நல்லா இருக்குவே உம்ம நியாயம். யவண்டே உனக்கு இப்படி தப்பு தப்பா சொல்லிகொடுத்த்வேன்..
பெண்களைக் கவருவது எப்படி?
//ஹுசைன் செய்ததைப் பற்றி எழுதும்போதே என்னையறியாமல் கண்மூடித்தனமான ஆத்திரம் வந்து திக்குமுக்காடிப் போனேன். அதன் எதிரொலிதான் அது.//
நியாயமான ஆத்திரம்தான், அக்கியுஸ்டுக்கு என்ன மரியாதை.
வீரமணி என்னதான் கயமத்தனம் செய்தாலும், நாய் மாதிரி இந்தியாவை விட்டு ஓடவில்லையே, அவருக்கு மரியாதை கொடுக்கலாம்.
//கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார்?//
Bala is a good man, we need many people like him for a good future to India.
என்னுடைய கேள்வி.
நேபாள மக்களின் உரிமைக்காக சமீபத்துல பொங்கியெழுந்து சென்னையில் போராட்டம் நடத்தின அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னதான் 'முதலாளித்துவ' சீனாவை எதிர்க்கிறோம் என்று பீலா விட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சே?
ஐயா,
பெரியாரின் பூணூல் அறுப்பு மற்றும் கொண்டை அறுப்பு போராட்டத்துக்கு பிராமணர்கள் எவ்விதம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்?
- வேல் -
காஞ்சி சங்கர மட கொலை வழக்கில் உங்கள் "தீர்ப்பு" எப்படி இருக்கும்?
காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...
- வேல் -
அப்துல் கலாம் - பிரதீபா பட்டீல் ஒப்பிடுக.
- வேல் -
//அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//
சார் இவிநிங்கள வுடுங்க.. சிலு வண்டி பயலுவ.
இவுங்க தலைவனுங்க தா.பாண்டியன், பிரகாஸ் கரத் மற்றும் அவன் பொண்டாட்டி, சிதாராம் எசுரி இவனுங்க எல்லாரும் திபெத் விசியத்தில் மூடிக்கொண்டு இருப்பது ஏன். மேலும் இவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பீலா விடும் அமர்த்தியா சென் போன்றவர்கள் என்னத்தை புடுங்கிகொண்டிருகின்றனர்.
ஏன் இந்த ரெட்டை வேடம் ?
இல்லனா இந்த மொத்த இடதுசாரி கும்பலும் சீனா, ரசியா போன்ற கம்முநிஸ்ட் நாடுகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய மக்களை எமாத்துகின்றனரா ?
ஏன் இந்த ஏமாத்துவேலை? படிக்காத அப்பாவி இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா இது போன்ற ரெட்டை வேட செயல்கள்.
சார் மேலும் இந்த திருட்டு நாயிங்க கொலைகார லெனின், ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர், இப்படி பல சமுதாய துரோக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் எவன் காசு கொடுக்கிறான், ரசியா நட்டுக்காரனா?
இப்படி தேச துரோக திருட்டு வேலை செய்யும் கமுநிச கம்னாடிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?
எம்.கண்ணன், பாங்காக்
1. 108 திவ்யதேசங்களில் எத்தனை திவ்யதேசங்களுக்குச் சென்றுள்ளீர்கள் ? தரிசனம் செய்துள்ளீர்கள் ? ஏதாவது இண்டரஸ்டிங் அனுபவம் ?
2. நரசிம்மம் என்பதை ந்ருசிம் 'ந்' எழுத்தில் துவங்குகிறார்களே சிலர் ? ஏன் ? (சமஸ்கிருதம் மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்)
3. எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள் ? சுவையான அனுபவம் ?
(இதுவரை செல்லவில்லையெனில் - எந்த நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ? ஏன்)
4. வாழ்க்கையில் இன்னும் அடையவேண்டிய லட்சியம் ஏதாவது உண்டா ?
5. விவேக்- வடிவேலுக்குப் பிறகு யாரும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் வரவில்லையே ஏன் ?
தமிழ்மணம் குறித்து நான் கேட்ட கேள்வியை காணோமே? பயமா டோண்டுராகவன்?
//தமிழ்மணம் குறித்து நான் கேட்ட கேள்வியை காணோமே? பயமா டோண்டுராகவன்?//
தமிழ் மணம் நிர்வாகத்தைப் பற்றி ஒரு தலைப்பட்சமாகக் கேட்ட கேள்வியை நான் அனுமதிக்க் விரும்பவில்லை, அவ்வளவே.
நான் பதிலளிக்க விரும்பும் கேள்விகள் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அடுத கேள்வி பதில் பதிவின் வரைவுக்கு அனுப்படு, இங்கும் பிரசுரமாகும். பதில் மட்டும் அடுத்த வெள்ளியன்றுதான் கிடைக்கும். அதே சமயம் நான் அனுமதிக்காத கேள்விகளை உள்ளடக்கிய பின்னூட்டமே ஏற்காது மட்டுறுத்தப்படும்.
எனக்கு பயமா என்று கேட்டீர்கள், சரி. நீங்களே அனானியாகத்தானே வந்துள்ளீர்கள்? ஏன், உங்களுக்கு பயமா? இப்படித்தான் ஏசுபிரான் பற்றிய அவதூறு பின்னூட்டத்தை ஒரு அனானி இட்டு அதை நான் மறுத்ததற்கு நீங்கள் சொன்ன கன்ஸ்ட்ரக்ட் தந்தார். அவருக்கு தந்த பதிலேதான் உங்களுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்?
2. dogma என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?
வலைப்பதிவுகளால் தமிழ் ஊடகத்திற்கு என்ன நன்மை ?
ஆங்கில வலைப்பதிவுகள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அடைவது போல், தமிழ் வலைப்பதிவுகள் இருப்பதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ?
அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம் ? தங்கள் கருத்து ?
//அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம் ? தங்கள் கருத்து ?//
The news media just reflects what the public want to hear or read. They just pander to people's belief.
If facts don't sell, they print/show what sells.
Even though the news barons benefit from being capitalists, what they sell is socialism.
That is why it is repeatedly said that businessmen (like The Hindu Ram) often are not friends of capitalism. Businessmen often don't like competition.
Capitalism if good for the people not for crony businessmen.
கடலோர பகுதிகளிளும், கடற்கரைகளியிலும் பொது மக்களை எச்சரிக்க (Public Address System) எதுவும் நிருவபடாமலே இருக்கும்போது, ஹைதிராபாத்தில் ஒரு காலி பில்டிங்கை திறந்துவைத்துவிட்டு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் நிருவிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறது இந்திய அரசு.
கேள்விக்கு வருகிறேன்..
1. இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் எப்போது நிறுவப்படும் ? ( உண்மையான எச்சரிக்கை செய்யும் சிஸ்டெமாக இருக்க வேண்டும், பொது மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும் )
2. இப்படி பொது மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்/ விஞ்யானிகளுக்கு சம்பளத்தை குறைக்காமல் ஏன் உயர்த்த வேண்டும் ?
//
The news media just reflects what the public want to hear or read. They just pander to people's belief.
If facts don't sell, they print/show what sells.
Even though the news barons benefit from being capitalists, what they sell is socialism.
//
Facts definitely sells. There is not much of a competition even in media. Thats what is the real issue is. Less competition leads to hegemony of a few, and they just manipulate public opinion by fudging facts. Its not that fudged facts sell better, its just that fudging facts suits their interest of being patronized by a stupid regime so that their hegemony remains unchallenged.
None of the indian news media welcomes FDI in Print media.
//There is not much of a competition even in media. Thats what is the real issue is. Less competition leads to hegemony of a few, and they just manipulate public opinion by fudging facts. //
good point sir.
//Its not that fudged facts sell better//
not sure on this though... there are lot of people who just don't want facts. Facts for them are boring. All they want is stories and op-eds matching their own world-view.
//its just that fudging facts suits their interest of being patronized by a stupid regime so that their hegemony remains unchallenged.//
Mix less competition with journalists who don't stick to plain reporting but mix it with their own agenda (like P.Sainath). You will get the poison to corrupt the minds of most people.
//None of the indian news media welcomes FDI in Print media.//
Leave alone FDI in Print Media. N.Ram is often the Chief Guest of Anti-FDI meeting opposing FDI in all sectors organised by unions of left parties. N.Ram has a nice foreign car but doesn't want others to have one.
Times of India has been trying to enter chennai market unsuccesfully for many years. I don't know what is stopping them. But I can smell rat, and that rat can be The Hindu, because they have already filed numerous false/frivolous complaints against Deccan Chronicle.
ok,
I will ask a question for Dondu Sir,
1. When will the Monopoly of The Hindu end?
என்ன சார், லக்கிலுக் பதிவை தமிழ்மணத்தை விட்டு தூக்கியிருக்கிறார்கள். நீங்க ஒண்ணுமே சொல்லலையே ? உங்களுக்கு ஜெயா டிவி சிடி எல்லாம் கொடுத்த நண்பர் ஆச்சே ?
அதிரடி கேள்வி..
1. இந்து பத்திரிக்கை N.Ram, SFI யை உருவாக்கிய கும்பலில் ஒருத்தரா?
"நாசிக் நகரில் நோட்டு அடிச்சா பாட்ஷாவுக்கு பங்கு பாரடா"
- பாட்ஷா பட பாடல் வரி
2. சீனா, இந்திய கம்முநிச கட்சிகளுக்கு ஒவொரு முறையும் விசுவாசத்திற்கு பணம் கொடுக்கும் போது N.Ram க்கு பங்கு வருமா ?
லக்கியின் பதிவு நீக்கம் குறித்து வருத்தம்தான்....
திரட்டிகளில் நேரடி பதிவு பிரசுரங்களை விட "moderation" முறை எதாவது செய்ய இயலுமா?
காண்டு கஜேந்திரன் உங்களுக்கு புகழ்மாலை சூட்டியிருக்காரே? பார்த்தீங்களா? என்னவோ போங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கறதும், கூடி கும்மாளம் போடுறதும் ஏதோ சொல்லிவெச்சு செய்வது போலிருக்கு?
http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_8888.html
//1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்?
பதில்: மா.சிவக்குமார், பத்ரி, ஜெயமோகன், பா.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், என்றென்றும் அன்புடன் பாலா//
அபிஅப்பா அவர்களை விட்டு விட்டீங்களே சார் .
அன்புடன்
பாஸ்கர்
Post a Comment