முரட்டு வைத்தியம் - 5-ன் தொடர்ச்சி இப்பதிவு.
சாதாரணமாக Efficient என்னும் வார்த்தை திறமையை குறிப்பிடும் நல்ல சொல். ஆனால் அதே Efficient சில இடங்களில் காரியத்தை கெடுக்கும். இது என்ன புதுக்கதை என்பவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.
பொதுவாக டயட்டில் இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. அதாவது முதலில் கொஞ்சம் எடை குறையும், பிறகு ஒரு அளவுக்கு பின்னால் என்ன டயட் செய்தாலும் ஒரு அணுகூட குறையாது. அதே சமயம் டயட்டை விட்டாலோ எகிறிக் கொண்டு எடை ஏறிவிடும்.பழைய அளவையும் தாண்டி விடும். இதற்கு காரணம் அவரது உடல் Energy efficient ஆவதே.
அதாவது உணவு முதலியன குறையும்போது உடல் மெக்கானிசம் தானாகவே குறைந்த அளவு செயல்பாட்டுக்கு சென்றுவிடும். குளிர்க்காலங்களில் பனிப்பிரதேசங்களில் கரடிகள் சீசன் முழுக்க தூங்கச் செல்லும் hibernation என்னும் செயல்பாடு இந்த தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டது. அப்போது மட்டும் தூங்கும் mode-க்கு செல்லாது செயல்பாட்டுடன் இருந்தால் கரடி பட்டினியில் செத்துவிடும், ஏனெனில் குளிர்காலத்தில் அதற்கு போதிய இரை கிடைக்காது.
மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியில் மிக சமீபகாலமாகத்தான் அடுத்த வேளை உணவை பற்றிய கவலை பெருமளவு குறைந்துள்ளது. மனித குலத்தையே நாசம் செய்த பல பஞ்சங்கள் - உதாரணம் தாது வருட பஞ்சம், 1943-ல் வங்காளத்தில் வந்த பஞ்சம் ஆகியவை - தற்போது அவ்வளவாக இல்லை, ஈத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளைத் தவிர்த்து. ஆகவே இப்போது இப்பதிவில் குறிப்பிடப்படும் Energy efficient என்ற நிலைப்பாட்டின் பிரச்சினை முதலில் காலத்தின் கட்டாயத்தால்தான் உருவானது.
உடல் பருமனாதல் என்றால் என்ன? நாம் உட்கொள்ளும் கலோரிகள் நம் உடனடி தேவைகளுக்கு அதிகமாக இருப்பதால், மிகுதியான கலோரிகள் கொழுப்புகளாக உடலில் குடி கொள்கின்றன. போலீஸ் தொப்பையும் அதன் ஒரு விளைவுதான். ஆகவே சாப்பாட்டை குறைத்தால் போதும் என நினைப்பவர்கள் தட்டையாக சிந்திக்கிறார்கள் என்பதுதான் நகை முரண். சாப்பாட்டை குறைத்தால் நான் மேலே சொன்னபடி உடல் Energy efficient ஆகிவிடுவதால், குறைந்த அளவு உட்கொள்ளும் உணவு வகைகளே கொழுப்பாக சேர்கின்றன அல்லது டயட்டை விட்டால் பழிவாங்குவது போல விரைந்து வந்து எடை மற்றும் உடல் கொழுப்பை அதிகரிக்கின்றன. அதற்கு என்ன வழி?
அதுதான் மெழுகுவர்த்தியை இரண்டு பக்கமிருந்தும் எரிப்பது. அதாவது, உணவை குறைக்க வேண்டும், அதே சமயம் உடற்பயிற்சியை அதிகரிக்கவும் வேண்டும். அதற்காக ஜிம்முக்கெல்லாம் போக எல்லோராலும் முடியுமா என்ன? அதற்கான நேரமும் இருக்காதே. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கடைபிடித்த வழிதான் அதிவேக நடை. இப்போதும் அதைத்தான் கடைபிடிக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னால் நண்பர் மா.சிவக்குமார் வீட்டுக்கு வந்திருந்தார். பார்த்த உடனேயே கூறிவிட்டார், எனது பருமன் மிகவும் குறைந்து விட்டதாக. மனதுக்கு நிறைவாக இருந்தது. ஆனால் ஒன்றை கூற வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெற்ற வெற்றி ஐந்தே மாதங்களில் வந்தது. ஆனால் இம்முறை சற்று தாமதமாகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நடுவில் மிக அதிகமாகவே பருத்து விட்டேன் என்று. அந்த பாவமூட்டை தீர அதிக நாட்கள் பிடிக்கின்றன. ஆனாலும் டவுசர் லூசாவது தொடர் கதையாகத்தான் உள்ளது.
இப்பதிவை போடுவதன் நோக்கம், ஒரு இடைக்கால பிராக்ரஸ் ரிப்போர்ட் தருவதே.
ஓக்கே. வாக் போக வேண்டும், பிறகு பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
23 hours ago
6 comments:
dondo sir,
Where and what time you go for walking ..
Iam in ashok nagar( Lot of crowd here and lot of mamis also he..he )
i can come to your place and back, atlest one day
sathappan
கே.கே.நகரில் பார்க்குகள் இருக்க வேண்டுமே. அவற்றின் பாதைகளில் காலை மற்றும் மாலை நடக்கலாமே.
இன்னொன்றையும் நினைவில் கொள்ளவும். இந்த வேக நடை பயிற்சி டீஃபால்ட்டாக தனியாக செய்வதே சரியாக இருக்கும். நான் ஏற்கனவே கூறியபடி அவரவர் தத்தம் உடல் களைப்படையாது சப்போர்ட் செய்யும் வேகத்தில் நடத்தல் முக்கியம். அவரவருக்கென்று வேகங்கள் தனி. ஆகவே கூட்டு முயற்சி உதவாது. இன்னொரு விஷயம், நடை பயிற்சி என்பது ஒரு யோகாசனம் மாதிரி. மனம் ஒருமித்திருக்க வேண்டும். தேவையற்ற வம்பு பேச்சுகள் காரியத்துக்காகாது.
முடிந்தவரை உங்கள் வீட்டிலிருந்து இடது பக்கமாகவே திரும்பி, ரோட் கிராஸ் செய்வதை தவிர்த்து நடக்கவும். எப்பேர்ப்பட்ட வட்டாரமானாலும் சரி, இதை கண்டறிவது கஷ்டமே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முடிந்தவரை உங்கள் வீட்டிலிருந்து இடது பக்கமாகவே திரும்பி, ரோட் கிராஸ் செய்வதை தவிர்த்து நடக்கவும். எப்பேர்ப்பட்ட வட்டாரமானாலும் சரி, இதை கண்டறிவது கஷ்டமே இல்லை.//
ஒரு சிறு மாடிஃபிகேஷன். மேலே கூறியதற்கு பதில் கீழே குறிப்பிட்டுள்ளதை கடைபிடிக்கவும்.
"முடிந்தவரை உங்கள் வீட்டிலிருந்து வலது பக்கமாகவே திரும்பி, ரோட் கிராஸ் செய்வதை தவிர்த்து நடக்கவும். எப்பேர்ப்பட்ட வட்டாரமானாலும் சரி, இதை கண்டறிவது கஷ்டமே இல்லை".
அப்போதுதான் தெருவின் வலதுபக்கமாக நடந்து எதிரே வரும் வண்டி ட்ராஃபிக்கை அவதானித்து ஜாக்கிரதையாக நடக்க இயலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த அவசர உலகில் சாப்பிடும் உனவை விட , கொறிக்கப்படும் நொறுக்கித் தீனிகளும்,குடிக்கப்படும் கல்ர் கலர்ரய் வல்ம் வரும் குளிர்பானங்களும் தான் உடல் பருமனுக்கு காரணம் என மருத்துவர்கள் காரணம் என் சொல்லிக் கோண்டிருக்கும் போது தங்கள் ஒரு புதுத் தகவல் கொடுத்துள்ளீர்கள்.
நன்றி.
உடல் உழைப்பு குறைந்ததும் (விஞ்ஞான வளர்ச்சியின் அனுகூலங்கள்)மற்றுமொரு காரணம்.
வேகமான நடைபயிற்சி செலவில்லா வைத்தியம்.
வலது பக்கமாய் சென்றால் எதி வரும் வாகனங்களின் போக்கால் ஆபத்து இல்லை.எலா பயனுள்ள ஆலோசனை.
பெரியவங்கன்னா பெரியவங்கதான்.அவர்களின் அனுபவத்தை ,ஆலோசனைகளை இளயதலைமுறையினர் 10-20 % கேட்டாலே நாடு உருப்படும்.
ஆனால் தனியாகப் போகச் சொல்கிறீர்களே,நடந்து போவர்கள் எல்லாம் (ஆண்கள்,பெண்கள்,வாலிப படாளங்கள்)தன் நிலை மறந்து செல்தொலைபெசியில் கதைத்து (இலங்கை பாஷை)கொண்டு அல்லவா
அன்ன நடை பயில்கிறார்கள்.
இல்லைன்னா "walkman" அண்ணாவே துணை என பவனி வருகின்றனரே?
//இந்த அவசர உலகில் சாப்பிடும் உணவை விட, கொறிக்கப்படும் நொறுக்குத்தீனிகளும்,குடிக்கப்படும் கலர் கலராய் வலம் வரும் குளிர்பானங்களும்தான் உடல் பருமனுக்கு காரணம் என மருத்துவர்கள் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது தங்கள் ஒரு புதுத் தகவல் கொடுத்துள்ளீர்கள். நன்றி.//
மருத்துவர்களும் சரியாகத்தான் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது தேவைக்கதிமான கலோரிகளின் உள்வாங்கலின் ஆபத்து.
//உடல் உழைப்பு குறைந்ததும் (விஞ்ஞான வளர்ச்சியின் அனுகூலங்கள்)மற்றுமொரு காரணம். வேகமான நடைபயிற்சி செலவில்லா வைத்தியம்.
வலது பக்கமாய் சென்றால் எதிர் வரும் வாகனங்களின் போக்கால் ஆபத்து இல்லை.எல்லாம் பயனுள்ள ஆலோசனை.//
இதில் ஒன்றுமே புதுத் தகவல் இல்லை. என்ன, பலர் அதை இந்த அவசர யுகத்தில் மறந்து விட்டனர். அவர்களுக்கு நினைவுபடுத்துவதே இப்பதிவு. முக்கியமாக Energy efficient ஆபத்தை மறக்கக் கூடாது. அதே சமயம் அதுவும் மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஒரு அங்கம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
//ஆனால் தனியாகப் போகச் சொல்கிறீர்களே, நடந்து போகிறவர்கள் எல்லாம் (ஆண்கள்,பெண்கள்,வாலிப பட்டாளங்கள்)தன்னிலை மறந்து செல்பேசியில் கதைத்து (இலங்கை பாஷை)கொண்டு அல்லவா
அன்ன நடை பயில்கிறார்கள்.
இல்லைன்னா "walkman" அண்ணாவே துணை என பவனி வருகின்றனரே?//
ரொம்பவுமே ஆபத்தான விஷயங்கள். முக்கியமாக வாக்மேன். செல்பேசி நானும் எடுத்து செல்வேன். வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் அழைப்பார்கள், ஆகவே எனது வீட்டு தொலைபேசியின் இன்கமிங் எப்போதுமே செல்பேசிக்கு ஃபார்வேர்ட் செய்த நிலையில்தான் இருக்கும். மற்றப்படி வளவளவென்று வம்பு பேசுபவரை டிஸ்ப்ளேயில் கண்டு கொண்டு ரிங் டோனை ம்யூட் செய்து விடுவேன். அவ்வளவுதான் விஷயம். வாடிக்கையாளரிடம் சுருக்கமாக பேசி, பிறகு கூப்பிடுகிறேன் என்றால் அவர்களும் ஒத்து கொள்வார்கள். ஆனால் கும்பலாக சென்றால் முதலில் எல்லோரையும்விட மெதுவாக நடக்கும் பேர்வழியின் நடைக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள நேரிடும். அவரவர் தத்தம் அதிகப்பட்ச வேகத்தில் செல்வதுதான் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
உடல் எடை குறைய நடைப் பயிற்சி நல்ல பலன் தரக்கூடிய ஒன்று தான்.. அதே நேரம் கூடவே எடைப்பயிற்சியும் பலனளிக்கும். மேலும் பட்டினி கிடப்பதை விட நொருக்குத் தீனி தின்னாமல் இருப்பது, இனிப்பு தின்னாமல் இருப்பது, அரிசியின் அளவைக் குறைத்து கேப்பை / சோளக் களி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது, முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவைச் சேர்த்துக் கொள்வதும் அளவான ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்.
நீங்கள் என்.வி என்றால் காலை உணவுக்கு நான்கைந்து முட்டைகளின்ன் வெள்ளைக் கருவும் வெஜிடபிள் சாலடும் சாப்பிடலாம். மதியம் கொஞ்சம் அரிசி சோறும் இரவுக்கு கேப்பை (அ) சோளக்களியும் சரியாக இருக்கும். எடை குறைக்க நினைக்கும் பலரும் சக்கரை நோய் இருக்கும்பலரும் கொண்டிருக்கும் தவறான என்னம் என்னவென்றால் அரிசி எடையைக் கூட்டும் கோதுமை எடையைக் குறைக்கும் என்பது. ஆனால் இரண்டிலுமே கார்போஹைட்ரேட் அதிகம் தான். நமது சீதோஷ்னத்திற்கு நாம் அரிசியைப் புறக்கனிப்பது ஆபத்தாகிவிடும்.. தினசரரி சிறிதளவாவது சேர்த்துக் கொள்வதே சிறந்தது.
இன்னொரு சிறந்த ப்ரோட்டீன் சோர்ஸ் சிக்கன்.. வாரம் ஒன்றிரண்டு முறை ( உங்கள் வயதுக்கு அந்தளவே சரியாக இருக்கும் ) தரம் எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் இந்திய முறைப்படி தயாரிக்கப்படும் அசைவ உணவுகளின் தொந்திரவே அவற்றில் அள்ளித் தெளிக்கப்படும் மசாலாக்கள் தான்.. குறைவான மசாலாக்கள் சேர்க்கப்படும் அசைவ உணவுகள் உடலுக்கு நன்மையே செய்யும்.. எடையும் தாறுமாறாக கூடாது.
ஹாப்பி டயட்டிங்
ராஜ்
Post a Comment