5/09/2008

டோண்டு பதில்கள் - 09.05.2008

சரவணன்:
1. நல்லாதான் பதில் சொல்றீங்களே நீங்க ஏன் அரசியலுக்கு வர கூடாது, அட்லீஸ்ட் உங்க வார்டு கவுன்சிலரா ஆகலாம் இல்லை?
ஏன், நான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?
2. ரொம்ப தைரியமா பேசறீங்களே நீங்க இருக்கரது சென்னை வாழறது 2008 உங்கள் கருத்துகளை கருத்துக்களாலேயே எதிர்ப்பார்கள் என்று எப்படி உங்களுக்கு நம்பிக்கை, ஆட்டோ அனுப்பினா என்ன செய்வீங்க?
என்ன இருந்தாலும் நம் நாடு ஜனநாயக நாடு என்பதை மறத்தல் தகாது.
3. அப்புறம் இது முக்கியமான கேள்வி தேமுதிக கட்சிக்கு கொபசெ என்று யாரை போடலாம்? (ரோஜா, ராதிகா, பானுப்ரியா, அசின் இல்லை அந்த பெண் இன்னும் பிறக்கவில்லை பிறந்து வளர்ந்து விஜயகாந்த் கூட நடித்த உடன் முடிவு செய்து கொள்ளலாம்).
என் அபிமான நடிகை மான் கண்ணழகி நக்மாவை விட்டு விட்டீர்களே.
4. அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான் கேள்வி, நீங்க ஏன் சிறந்த கேள்வி கேட்பவர்களை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க கூடாது, உதாரணத்துக்கு இந்த சிறந்த கேள்விக்கு பரிசு கொடுப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.
துக்ளக்கில் அப்படித்தான் சமீபத்தில் 1970-ல் ஆரம்பித்தார்கள். ஒரு லட்ச ரூபாய் பரிசு. அதாவது ஒரு லட்சத்துக்கான அரசு பரிசு சீட்டு. அச்சமயம் ஒரு கேள்வியில் அப்பரிசு சீட்டுக்கு பரிசு விழுந்தால்? என்று கேட்க, சோ அவர்கள் வெளிப்படையாகவே எழுதினார் "வயிறெரியும்" என்று. சில வாரங்களிலேயே லாட்டரி சீட்டு பரிசாக வழங்குவது நிறுத்தப்பட்டது, ஏனெனில் யாரோ அவரிடம் கேள்வி கேட்டனர், அதாவது நீங்களே துக்ளக்கில் அரசு லாட்டரி திட்டத்தை எதிர்த்து எழுதும் தருணத்தில் இம்மாதிரி பரிசுச் சீட்டு வழங்குவது முரண்பாடாக இல்லையா என்று. அதை மரியாதையாக ஒத்து கொண்டது துக்ளக். அது சரி, துக்ளக் செய்வது ஒரு வியாபார உத்தி. எனக்கு அதெல்லாம் தேவையில்லை.

மகேஸ்:
1. சமீபத்தில் நீங்கள் இரண்டரை வயது குழந்தையாக இருந்தபொழுது நடந்த சுவாரசியமான சம்பவம் ஏதேனும்...
நான் இரண்டரை வருட குழந்தையாக இருந்தது அக்டோபர் 1948-ல். அந்த மாதம் இரண்டாம் தேதி முதன்முறையாக அது (காந்தி ஜயந்திக்காக) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாக அறிகிறேன். அகில இந்திய ரேடியோவில் அன்று முழுக்க காந்தி பஜன் நடந்தது. எம்.எஸ். அவர்களது வைஷ்ணவ ஜனதோ பாட்டை பல நிலையங்களில் பல நேரங்களில் ஒலி பரப்பினார்கள். காந்தியின் வழிப்படி நடப்போம் என்ற தலைவர்கள் உறுதி மொழி அவர் சமாதியில் எடுக்கும் சடங்கு அந்த ஆண்டுதான் துவக்கப்பட்டது.

அந்த ஆண்டு தீபாவளி கொண்டாடக்கூடாது என பல கணவர்கள் தீர்மானிக்க (இந்த முறையாவது பட்டுப் புடவை வாங்காது தத்தம் பர்ஸுகளை காப்பாற்றத்தான்) மனைவியர் அது குறித்து சோகம் அடைந்து, இரு கோடுகள் தத்துவத்தில் காந்தி மறைந்த சோகம் சிறியதாகிப் போனது என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மேக்ரோ அளவில். இப்போது மைக்ரோ லெவலுக்கு வருவோம்.

அதே ஆண்டு தி. நகர் சரோஜினி தெரு 15-ஆம் நம்பரில் குடியிருந்த ருக்மிணி மாமி தனது வீட்டிற்கு வாங்கப்பட்ட ஐந்து ரூபாய்களுக்கான பட்டாஸ்களை வெய்யிலில் காய வைக்க நினைத்தார். ஆனால் ஒரே மழை. ஆகவே அவர் சக குடித்தனக்காரரும் தோழியுமான செல்லம் மாமி ஒரு பெரிய தாம்பாளத்தில் பட்டாஸ்களை பரப்பி தங்கள் வீட்டின் அடுப்பு மேல் சற்று நேரத்துக்கு வைத்து, அதை மறந்து போனதில் திடீரென எதிர்பாராமல் பட்டாசுகள் சமையல் அறையிலே வெடிக்கத் துவங்க ஒரே களேபரம்.

நேர் மாடியில் இருந்த வீட்டுக்காரர் சுப்பையரின் மனைவி சத்தத்தின் அதிர்ச்சியில் கட்டிலிலிருந்து தூக்கி போடப்பட்டு கீழே விழுந்து, கீழ் போர்ஷனுக்கு வந்து செல்லத்தையும் ருக்மிணியையும் வறுத்தெடுக்க, ருக்மிணி மாமியின் கணவர் நரசிம்மனின் தம்பி நாராயணன் அவர்கள் தான் ஆசை ஆசையாக வாங்கிய பட்டாசுகள் இப்படி நாசமானதைப் பற்றி அங்குமிங்கும் நடந்தபடி முணுமுணுத்து பொரும, செல்லம் மாமி ருக்மிணி மாமியிடம் "உங்காத்து பட்டாசை எங்காத்துலேயே வெடிச்சுட்டோம்னு உங்க சின்ன மச்சினர் கோச்சுண்டுட்டார்னு" சொல்லி (அந்த களேபரத்திலும்) நக்கல் அடிக்க, இந்த சத்தம் ஒன்றுக்கும் மசியாது ருக்மிணி மாமியின் இரண்டரை வயது பிள்ளையும் நான்கரை வயதான அவன் அக்காவும் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்ததை பிற்காலத்தில் அந்த ருக்மிணி மாமி அந்தப் பிள்ளை டோண்டு மற்றும் அவன் அக்காவிடம் கூறி சிரித்தார்.

ரவிஷா
1. தசாவதாரத்தின் கதைக்களத்தில் ஒன்று "சைவ வைணவ அடிதடி" பற்றியது! சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கிறாரோ கமல்?
பதில்: இதனால் எல்லாம் சைவ வைஷ்ணவ சண்டைகள் வந்து விடாது. ஏனெனில் அவர்கள் ஒன்றுபட்டு பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இப்பல்லாம் அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணுங்கறதுதான் காலம். அக்காலக் கட்டத்தை பற்றிய ஒரு நாவலில் கிருமிகண்ட சோழன் மேல் அன்னை பார்வதிக்கும் கோபம் வந்தது என படித்தேன். என்ன இருந்தாலும் அவரது தமையனது சிலையை அல்லவா மன்னன் கடலில் எறிந்தான்?

2. இந்த ஜார்ஜ் புஷ் குடாக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிட்டே/செஞ்சிட்டே இருக்கே, நம்மூரில் என்ன ரியாக்ஷன் அதுக்கு? What is your take on that?
பதில்: இம்மாதிரி புஷ் உளறுவது ஒன்றும் புதிதில்லையே. புஷ் என்று மட்டும் இல்லை எல்லா அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கும் பொது அறிவு சற்றே கம்மிதான். புஷ் போன்றவர்களுக்கு லேது என்று கூட சொல்லலாம்.

இதில் எனக்கு ஒரே ஒரு பயம் என்னவென்றால் இதனால் நான் ஆதரவு தரும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பங்கம் வந்து விடுமோ என்றுதான். அமெரிக்க விவகாரங்களில் நான் எப்போதுமே குடியரசு கட்சியின் ஆதரவாளன். ஏனெனில் அக்கட்சிக்காரர்கள்தான் உண்மையாகவே அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டனர். ஜனநாயக கட்சி தலைவர்கள் விளக்கெண்ணெய்கள். அமெரிக்க நலனை கோட்டை விடுவார்கள். அமெரிக்காவின் ஆதரவாளனான டோண்டு ராகவனுக்கு அவர்களை அதனால் பிடிக்காது.

3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி??
பதில்: ஸ்டேட்மெண்டா, ஸ்டண்டா? கவிஞர் கண்ணதாசன் நாத்திகரிலிருந்து ஆத்திகராக மாறியதில் நல்ல பலன் இருந்தது. அர்த்தமுள்ள இந்து மதம் கிடைத்தது. பல கண்ணன் பாடல்கள் கிடைத்தன. இந்த சாரு நிவேதிதாவால் என்ன கிடைக்கும்? கோணல் பக்கங்கள்தான்.

வேல்பாண்டி:
1. தற்போதைய பிராமணர்களிடையே ஒற்றுமை உள்ளதா?
பதில்: பிராம்மணானாம் அனேகத்துவம் (பிராமணர்களுக்குள் ஒற்றுமையில்லை) என்ற வடமொழி சுலோகம் கூறுகிறது. அதிலும் படிப்பறிவு பரவலாக இருக்கும் ஒரு சமூகத்தில் குருட்டுத்தனமாக ஒரு தலைவனிடத்தில் தனது எதிர்க்காலத்தை ஒப்படைப்பது என்பது லேசில் நடக்காது. தாங்களே ஏன் தலைவனாகக் கூடாது என்று பலரும் சிந்திக்க தொடங்குவர்.

2. நாடார்களை ஒற்றுமை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்காடும் நீங்கள் பிராமணர்களை எதற்கு உதாரணமாக காட்டுவீர்கள்?
பதில்: படிப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்று. ஆகவே என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை, "கற்கல் நன்றே, கற்கல் நன்றே, பிச்சைப் புகினும் கற்கல் நன்றே" என்றக் கோட்பாட்டில் அவர்கள் நிற்கும்வரை, எந்த ஒரு ஜாட்டானாலும் தடுக்க முடியாது. அவர்கள் பாட்டுக்கு படித்து விட்டுப் போய் கொண்டே இருப்பார்கள். தமிழக அரசு வேலைகள் இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு போய்க்கொள்வார்கள். அதனாலேயே வெளிநாடுகளில் அதிகம் பரவியுள்ளனர்.

சரவணன்:
1. இந்த சுவத்துக்கும் இஸ்ரவேலர்கள் மேற்கு கரையில் கட்டிய சுவற்றுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்று டோண்டு சார் சொல்லவும்.

பதில்: இரண்டையும் ஒப்பிடவே இயலாது. மேற்கு கரையில் கட்டியது உண்மையான தேவைக்கு. உத்தபுரத்து சுவர் சாதிக் கொழுப்பில் செய்தது. ஐரோப்பாவில் யூதர்களை ஒரு இடத்தில் அடைத்து அவர்கள் வசிக்கும் இடத்தை சுற்றி சுவர் எழுப்பியது போலத்தான் உத்தபுரத்தில் தலித்துகளுக்கு விரோதமாக செய்தனர். மேற்கு கரையிலோ தீவிரவாதத்திற்கு எதிர்வினையாக நடந்தது. உண்மை கூறப்போனால் இசுலாமிய தீவிரவாதத்தால் பீடிக்கப்படும் இந்தியா இந்த விஷயத்தில் இஸ்ரவேலர்களின் ஆலோசனை பெறுவது புத்திசாலித்தனம். அப்படித்தான் அப்போதைய ரஷ்ய குடியரசுத் தலைவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவிருந்தபோது அத்தேசத்தை தாக்கி வாதங்களை எடுத்து வைக்க தயாராகிக் கொண்டிருந்தார். அச்சமயம் செசன்யா விவகாரம் வெடித்து நிலைமையே தலைகீழாகப் போயிற்று. இஸ்ரேலுக்கு சென்ற ரஷ்ய குடியரசுத் தலைவர் இஸ்ரேலை கண்டனம் செய்வதற்கு பதில் அதன் ஆலோசனைகளை இது விஷயமாக பெற்று சென்றார்.

சாத்தப்பன்:
1. WHY DID THE CHICKEN CROSS THE ROAD?
பதில்: டோண்டு ராகவனுக்கு பின்னூட்டமிட்டதற்காக யாரோ அதை துரத்தினார்கள் போலும்.

அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

Subbiah Veerappan said...

////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி??
பதில்: ஸ்டேட்மெண்டா, ஸ்டண்டா? கவிஞர் கண்ணதாசன் நாத்திகரிலிருந்து ஆத்திகராக மாறியதில் நல்ல பலன் இருந்தது. அர்த்தமுள்ள இந்து மதம் கிடைத்தது. பல கண்ணன் பாடல்கள் கிடைத்தன. இந்த சாரு நிவேதிதாவால் என்ன கிடைக்கும்? கோணல் பக்கங்கள்தான்.////

கரீக்டா சொன்னே சாமி!

Anonymous said...

வணக்கம் சார், என்ன சார் அதிகாலையிலேயே பதிவு போட்டுருக்கீங்க.

நான் இஸ்ரேல் கட்டிய் சுவர் பற்றி உங்களிடம் இருந்து இன்னும் நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன், நாங்கள் படித்தது மொத்தத்தில் இஸ்ரேலின் சர்வாதிகாரப்போக்கின் சின்னமே அந்த சுவர் என்பதாகும் இந்தியாவில் அந்த மாதிரி ஒரு கருத்துதான் படிக்ககிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

சரவணன்

Anonymous said...

எங்க சார் போய்ட்டீங்க.. எங்க என் கமென்ட், பாருங்க ஐஸ் மழையில நினைஞ்சுகிட்டே கேக்குது,.

எங்கே எனது கமென்ட் ஆஃபிசில் alt+tab
அடிச்சு அனுப்பிய கமென்ட்
வழியில் ஹேக்கும் ஆனதா அம்மம்மாஆ - பைர்வால்
விழியில் சிக்கிகொண்டதா..
கமென்டை தேடிதாருங்கள் இல்லை என்
கேள்வியை திருப்பிதாருங்கள் அம்மம்மாஆ

சரவணன்

தமிழினியன் said...

"துக்ளக்கில் அப்படித்தான் சமீபத்தில் 1970-ல் ஆரம்பித்தார்கள்."

1970 ரொம்ப சமீபத்தில் தான் இல்லைங்களா.

......................

Anonymous said...

கதை கதையாம் காரணமாம்

நம்ம ஊர்கார பயலுங்க ரெண்டு பேரு செத்து விளையாடும்போது நிசமாவே செத்துபோய் விண்ணுலகம் போறாங்க. அங்க

நம்ம சி.குப்தன் இன்னைக்கு எமனுக்கு பிறந்தநாள் என்பதால் எல்ல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்கப்படும் பதில் சொல்பவர்கள் சொர்கத்துக்கு போகலாம் என்று சொல்கிறான். ஒவ்வொருவராக கேள்வி கேட்கபடுகிறது நமது ரெண்டு
கோயிஞ்சாமிங்க முறை வருகிறது.

இவர்கள் அதிபுத்திசாலிகள் என்பதால் இவர்களையும் கடைத்தேற்ற நமது சி.குப்தன் அப்பரசன்டிய விட்டு கேள்வி கேட்க சொல்கிறார். அப்ரசன்டி நம்ம வி.குப்தா (s/o சி.குப்தன்) சுலபமான் கேள்வி கேட்கிறார். வி.குப்தன் அங்கு கான்வென்டில் படித்தவர் என்பதால் கேள்விகள் இங்கிலீசு கலந்து இருக்கும் கண்டுகாதீங்க. நமது
கடவுள் மறுப்பு இயக்கவாதிகள் அனைவரும் 24 மணி நேரமும் இறைவனையே நினைத்து (திட்டி) வந்ததால் அவர்கள் அனைவருக்கும் சொர்கத்தில் கோட்டா இல்லாமலே சீட்டு கிடைச்சுடுச்சு. நம்ம திராவிட சிங்கங்கள் இறப்புக்கு பிறகு
காட்டுக்கு (இயற்கையோடு) போய்விடுவதால் நரகத்தில் தமிழை தாங்க ஆளே இல்லாமல் டெல்லில போய் TV ஆன் பண்ணா மாதிரி இந்தியும் இங்கிலீசும் கொஞ்கி விளையாடுது. அய்யோ கேட்க ஆளே இல்லையா...

முதல் கேள்வி கோயிஞ்சாமி - 1 இடம் கேட்கபடுகிறது. ஒரு வீக்ல எத்தனை டேஸ் 'T' தொடங்குது அப்ப்டின்னு.

கோயிஞ்சாமி ரொம்ப நேரம் முழிச்சு முழிச்சு பார்துட்டு ரெண்டு அப்படின்னு சோல்லிடறான்

விக்கித்துபோன் வி.குப்தன் என்ன என்னனு சொல்லுன்ரான். நம்ம ஆளு Today, Tomorrow அப்படின்ரான். ஆகா
இப்படிகூட யோசிக்கலாமன்னு சரி பொழச்சுபோ அந்தபக்கமா சொர்கத்துக்கு ஓடி போ அப்படிங்கரான்.

அடுத்த கேள்வி கோயிஞ்சாமி - 2 நோக்கி வீசப்படுகிறது, ஆளுங்க விவரமா இருக்கானுங்க கஷ்டமாவே கேட்போம் என்று ஒரு வருடத்துல எத்தனை செகண்ட் என்று கேட்கிறான். கோயிஞ்சாமி - 2 தலைய பிச்சுகினு தரையில
உருளரான்... ரொம்ப நேரம் விரல்லாம் விட்டு கணக்கு போட்டு சாமி 12 செகண்ட் அப்படின்ரான்.

கடுப்பான வி.குப்தன் நீங்கல்லாம் எப்படா படிச்சு முன்னேற போறீங்க அப்படின்ரான் இது தப்பான விடை அப்ப்டின்ரான். அதுக்கு நம்ம கோயிஞ்சாமி இல்ல சாமி இதான் கரெக்ட் நீங்களே கூட்டி பாருங்க 12 தான் வரும் அப்ப்டின்னு விடைய
சொல்ரான். ஜனவரி 2nd, பிப்ரவரி 2nd, ... டிசம்பர் 2nd அப்ப நான் சொல்ரது கரெக்ட்தானென்னு.

இதை பார்த நம்ம வி.குப்தா.. நமீதா பார்த்து ஆடி ... சீ சீ ஆடாம போன டோனி மாதிரி சிலையாகிட்டான்

நம்ம அறிவாளித்தனமா கேள்வி கேட்டொம்னா அதைவிட அறிவாளிங்கலாம் இருக்காங்கனு அப்புறம்தான் தெரியுது.

சரி இது இப்ப எனக்கு நாபகம் வருது ( யாரவது இந்த நாபகத்துக்கு வர நா எப்படின்னு சொல்லி கொடுங்க ப்ளீஸ் அது எனக்கு மறந்து போய் நாபகமே வரமாட்டேன்னுது)

சரவணன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

////3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி?? ///////

கண்ணதாசன் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்,உலகில் யாரும் முழு நாத்திகர்கள் என்று இல்லை,பிறந்ததிலிருந்தே ஆத்திகர்கள் மற்றும் 50 வயதுக்குப் பிறகு ஆத்திகராபவர்கள் என....

வஜ்ரா said...

//
நாங்கள் படித்தது மொத்தத்தில் இஸ்ரேலின் சர்வாதிகாரப்போக்கின் சின்னமே அந்த சுவர் என்பதாகும் இந்தியாவில் அந்த மாதிரி ஒரு கருத்துதான் படிக்ககிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.
//

இஸ்ரேலின் சர்வாதிகாரியா ?

யார் அவர் ?

Anonymous said...

//1. நல்லாதான் பதில் சொல்றீங்களே நீங்க ஏன் அரசியலுக்கு வர கூடாது, அட்லீஸ்ட் உங்க வார்டு கவுன்சிலரா ஆகலாம் இல்லை?
ஏன், நான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?
2. ரொம்ப தைரியமா பேசறீங்களே நீங்க இருக்கரது சென்னை வாழறது 2008 உங்கள் கருத்துகளை கருத்துக்களாலேயே எதிர்ப்பார்கள் என்று எப்படி உங்களுக்கு நம்பிக்கை, ஆட்டோ அனுப்பினா என்ன செய்வீங்க?
என்ன இருந்தாலும் நம் நாடு ஜனநாயக நாடு என்பதை மறத்தல் தகாது.//

நியாயமா இது இரண்டு கேள்விகளுக்கும் உள்ள பதில்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன. நீங்க ரொம்ப தெளிவானவர்னு நெனச்சன் கடைசில நீங்களும் மிடில் கிளாஸ் மென்டாலிடியுடன் இருக்கிறீர்களே இது நியாயமா. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை, அடச்சீ என்ன பழமொழி இது மாத்துவோம் பிராந்தி வேணூம் வாந்தி எடுக்கமாட்டன்னா என்ன அர்த்தம்..

சரவணன்

Anonymous said...

சார் அரசியல பத்தி ஒண்ணு சமீபத்துல 5 நிமிஷத்துக்கு முன்னாடி படிச்சது மறந்து போறதுக்கு முன்னாடி கட்டி ஒட்டிடறன்.

"It has been said that politics is the second oldest profession. I have learned that it bears a striking resemblance to the first."
--Ronald Reagan

எப்பா மேல இருக்கரது என் கருத்தோ இல்லை பதிவரோட கருத்தோ இல்லை சொன்ன ரீகன் கருத்து, அதனால யாரவது வட்ட செயலாளர்கள் ஆட்டோ வைக்கரதா இருந்தா புதரகத்துக்கு போய் ரீகன் உடம்பை தோண்டி எடுத்து எரிக்கலாம். கட்சில இதுக்குலாம் ஃபைனான்ஸ் இல்லனா அவரோட போட்டோ நெட்டுல இருந்து ப்ரின்ட் எடுத்து அப்புரம் நகல் எடுத்து கொளுத்தலாம்

சரவணன்

dondu(#11168674346665545885) said...

//இது இரண்டு கேள்விகளுக்கும் உள்ள பதில்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன.//
தவறு. முதல் கேள்விக்கான பதிலின் பொருளே வேறு. தேர்தலில் நின்றால் கண்டபடி காசு செலவழியும். கடைசியில் திவால் கூட ஆகலாம். பதவிக்கு வந்து பணம் பார்க்க நினைப்பு உள்ளவர்கள் மட்டுமே அந்த முதலீட்டை செய்வர். அந்த நினைப்பு இல்லாத நான் ஏன் மெனக்கெட வேண்டும். இருக்கும் தொழிலிலேயே தேவையான வருமானம் வருகிறது, நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வணக்கங்க இஸ்ரேலின் சர்வாதிகாரி என்று யாரயும் சொல்லலைங்க இப்ப எப்படி நம்ப ஊர்ல எதாவது முஸ்லிம்களுக்கு எதிரா நடந்தா இங்க மலேசியாவில் இந்தியா அரசின் சர்வாதிகார வலதுசாரி அரசு அப்படின்னு போடுவாங்க உண்மை எந்த பக்கம் வேண்டும் என்றாலும் இருக்கலாம் ஆனால் சுலபமாய் போட்டு விடுவார்கள் அது போல் நிறைய நமது ஊரில் இஸ்ரேல் எதிர்ப்பான செய்திகளே கிடைத்தன.

இப்ப நாமெல்லாம் அமெரிக்க அல்லக்கை ஆயிட்டதுனால பாலஸ்தீனியர்கள் தீவிரவாதிகளா பூட்டாங்க. ( ஆனா பாருங்க அல்லக்கை அதிகம் சாப்பிட்டா கூட ஒத்துக்கமாட்டறார் நாட்டமை ).

நமது ரீடர்ஸ் டைஜஸ்ட் (மூணு வரி முத்தாரம்) கொடுத்த அறிவ வச்சு தப்ப சொல்லியிருந்தன்னா, தண்டனையா குருவி படத்துக்கு டிக்கெட் எடுத்து புறா கால்ல கட்டி அனுப்புங்கன்னா..பார்த்துட்டு குருவி விமர்சனமும் புறா 65 ரெண்டு பத்தியும் சொல்லறன்

சரவணன்

Anonymous said...

// தொழிலிலேயே தேவையான வருமானம் வருகிறது, நன்றி. //


உங்களை மாதிரி அறிவாளிகளை பார்கும்போது இது கூட கரீக்ட்டோன்னு தோணுது சார்

" If a man empties his purse into his head, no man can take it away from him "

இதை புரிஞ்சிகிட்டா சிவாஜி ரஜினி மாதிரி கூலா இருக்கலாம்... இல்லைனா ரொம்ப கஷ்டம்தான்

சரவணன்

Anonymous said...

Next Week Questions:

1. What do you think of the judgement that M F Husain's painting are not obscene?

2. Did the judges see the paintings before giving the judgement?

3. The mainstream media while being happy for the victory of artistic freedom; they are not showing the actual paintings to the public. why don't they publish the paintings and show it to the people if it is not obscene?

4. when nude paintings are not obscene because they are artistic, why are porn films being banned and its participants prosecuted, don't they have their own artistic freedom?

No need to answer all the questions. Would be happy to receive answers for 3. and 4.

dondu(#11168674346665545885) said...

அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையதுதான் குசேலன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அடுத்த வாரத்துக்கான முதல் 4 கேள்விகள் உங்களுடையதுதான் குசேலன் அவர்களே.//

மிக்க நன்றி ஐயா

கூடுதுறை said...

அடுத்தவார கேள்விகள்
1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்தேர்தல் வந்துவிடும் எனதெரிகிறதே?

a3)நக்மா போய் 10 வருடம் ஆகிவிட்டது உங்களின் லேட்டஸ்ட் ஜொள்ளூ யார்?

Unknown said...

சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் சிலை எப்போ செய்தது.

dondu(#11168674346665545885) said...

ஜயசங்கர் ஜகன்னாதன் அவர்களே,

உங்கள் கேள்விக்கு விடை அடுத்தவார டோண்டு பதில்கள் பதிவில் வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கூடுதுறை said...

விட்டுபோன கேள்வி.

1)எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயவதி,அஸ்ஸாம் கணபரிசத்,தெலுங்கு தேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன்

இது உருப்படியாகுமா???

Anonymous said...

தசாவதாரம் படம் உண்மையிலேயே வைணவர்களை இழிவுபடுத்துகிறதா? (முன்னோட்டச் சுருக்கம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்)

Unknown said...

பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி

Anonymous said...

பிராமணர்கள் ஒரு சிலர் முகமூடியுடன் பிராமணருக்கு எதிரான பதிவுகள் போடுவதாக சொல்லியிருந்தீர்கள்.ஆனால் பரமக்குடி ஸ்ரீனிவாச ஐயங்கார்க்கு மகனாகப் பிறந்த
உலக நாயகன் கமலஹாசன் எதையும் நேராக் சொல்லும் சிந்தனையாளர்.போலி வாதியல்ல. அவரது தசாவதாரம் திரைபடத்தைக்கு எதிர்ப்பு தேவையா?
குறுக்கு விளம்பரம் தேடுவோர் யார்?

Anonymous said...

//நாடார்களை ஒற்றுமை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்காடும் நீங்கள் பிராமணர்களை எதற்கு உதாரணமாக காட்டுவீர்கள்//

நாடார் பெருமக்களின் பொருளாதார வளர்ச்சி போற்றுதற்குறியது.
பிற்பட்ட ஜாதியினரிடையே
மருத்துவர்கள்,வக்கீல்கள்,உயர் அரசு அதிகாரிகள்(rto,cto,rdo,supt.er,mlas,mps,vc,etc)நாடார் வகுப்பினர்தன் அதிகம் உள்ளனர்(above 70%)
அவர்களின் கடும் உழைப்பு,கட்டுப்பாடு,கடவுள் பக்தி(குறிப்பாக சிவகாசி,விருது நகர் உறவினர்முறை நாடார்கள்)அந்த காலப் பிராமணர்களை போல் உள்ளதை மறுக்க முடியுமா?
உண்மையில் சொல்லப்போனால்
வள்ளுவன் வாக்கு போல் அந்தணர் என்போர் அறவோர் " அவர் தான் நாடார் குலப் பெருமக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது(ஒரு சிலர் இதற்கு முரண்படலாம்).

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது