ஆடம் ஸ்மித்துடன் எதெதில் ஒத்து கொள்வதற்கில்லை என்று கூறும் முன்னால் பலவற்றை ஒத்து கொள்கிறேன் என்றுதான் கூற வேண்டும். அவற்றை முதலில் பார்ப்போம்.
"கடைசி ஓரிரு நூற்றாண்டுகளில் உலகம் நிஜமாகவே மாறியுள்ளது. இந்த மாறுதல்கள் வெவ்வேறு அளவுகளில் உலகின் வெவ்வேறு இடங்களில் பரவியதற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறவேண்டுமானால் அதுதான்: சுதந்திரம். சுதந்திர சூழ்நிலையில் மனித மனம் செழித்தோங்குவது நிரந்தரமானது. அந்த சுதந்திரத்தை நல்ல முறையில் பாவித்த நாடுகள் முன்னேற்றம் அடைந்தன. மற்றவை அடையவில்லை."
சத்தியமான வார்த்தை. சோவியத் யூனியன் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அங்கெல்லாம் மத்திய கேந்திரத்திலிருந்து திட்டமிடுவார்கள். யார், எங்கே எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மாஸ்கோதான் தீர்மானித்தது. அங்கிருந்து ஒருவரால் சைபீரியாவின் கிழக்கு கோடியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் காலத் தாமதம் ஏற்படும். அதை அவதானித்து திட்டம் போட்டு சைபீரியாவுக்கு திருப்ப அனுப்பும் முன்னரே அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். இதனால் குளறுபடிகள் ஏற்படும். இதற்கு யார் பொறுப்பு என்று சண்டை மண்டை உடையும். நிலைமையை அவதானிக்க யாருக்கும் நேரமோ பொறுமையோ இராது. இதுவே சோவியத் யூனியன் மொத்தத்துக்குமே என்பதை கற்பனை செய்து பாருங்கள். இருப்பினும் சோவியத் யூனியன் பல துறைகளில் முன்னேறியது என்றால் அது சராசரி ரஷ்ய குடிமகனின் உழைப்பு மற்றும் தேசப்பற்றுதான். Progress was not because of planning but in spite of planning. அங்கு மட்டும் பொருளாதார சுதந்திரம் இருந்திருந்தால் ரஷ்யா இன்னேரத்துக்கு அமெரிக்காவை பல மடங்கு மிஞ்சியிருக்கும். கம்யூனிசம்தான் ரஷ்யாவின் உண்மையான சோகம்.
"காலனி அரசின் அத்தனை அமைப்புகளையும் அப்படியே பெற்று கொண்டது இந்திய அரசு. அரசியல் அதிகாரம் என்பது போதையளிக்கக் கூடியது. சுலபத்தில் அதை விட்டுவிட மனம் வராது. ஆட்சியாளர்கள் அந்த போதையில் ஆழ்ந்தனர். அப்படியே வண்டியை நடத்தி செல்வதில் அவர்கள் சௌகரியத்தை உணர்ந்தனர். அவர்களது சுயநலம் பொது நலத்தை வரவிடாது செய்து விட்டது."
எல்லாவற்றுக்கும் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா என்று செய்து பொருளாதார முன்னேற்றத்தை அடமானம் வைத்து விட்டது இந்தியாவின் சோஷலிச சர்க்கார். உற்பத்தியை பெருக்க இயலாது, ஏனெனில் அதுவும் லைசன்ஸுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 1991-ல் இந்தியாவின் தங்கத்தையே அடமானம் வைக்க வேண்டிய நிலை வர நரசிம்மராவ் அரசு விழித்து கொண்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் 44 ஆண்டுகள் வீணாகப் போனது போனதுதான். மாமனிதர் ராஜாஜி கேலியாகக் கூறிய பெர்மிட், லைசன்ஸ் கோட்டா ராஜ் இந்தியாவின் சோகம்.
"கசாப்பு கடைக்காரன், பீர் தயார் செய்பவன், ரொட்டி சுடுபவன் ஆகியோரது தர்ம சிந்தனையால் நமது சாப்பாடு கிடைப்பதில்லை நம்மிடமிருந்து வரும் பணத்துக்காகத்தான் அவர்கள் தொழில் செய்கின்றனர். ஆக ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது முக்கியமாக தன்னலம் கருதியே. இந்த பொதுவாகக் காணப்படும் தன்னல எண்ணங்கள் சரியான பாதையில் திருப்ப முடியுமானால் பொதுநலம் தானே உருவாகும். அடுத்த வாரத்துக்குள் பலான அளவு பொது நலம் தேவை என்று யாரும் பிரதிக்ஞை எடுத்து வேலை செய்வதில்லை. அது சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாமல் கூட வந்து விடுகிறது. இவ்வாறு வரும் பொது முன்னேற்றம் பொது நலம் வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்து தீர்மானிப்பதால் வரும் பொது முன்னேற்றத்தைவிட பல மடங்கு அதிகம். அதுதான் பொருளாதார சுதந்திரத்தின் பலம்".
மிகவும் உண்மை. அவரவர் நலன்களில் கவனம் செலுத்தி செயலாற்றும்போது வணிகம் பெருகி பொது நலம் தானே ஏற்படுகிறது. அவ்வாறு வருவது நிலைத்தும் நிற்கிறது. மறுபடியும் சோவியத் யூனியனின் உதாரணத்தையே எடுத்து கொள்வோம். அதனுடைய கடைசி காலங்களில் கூட்டுறவு பண்ணையில் உற்பத்தி மந்தம். அதே சமயம் ஒவ்வொரு ரஷ்ய குடும்பத்துக்கும் சிறிய துண்டு நிலங்கள் தோட்டம்போட ஒதுக்கப்பட்டன. அவற்றில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதை வேண்டுமானாலும் பயிரிடலாம். அவர்கள் காய்கறி செடிகொடிகள், பழ மரங்கள் ஆகியவற்றை நட்டு, அவற்றுக்காக உயிரை கொடுத்து பாடுபட்டனர். அதில் விளைவதை அரசின் தலையீடின்றி அவர்களால் விற்க முடிந்தது. அவ்வாறு விற்பனையானதுதான் சோவியத் யூனியனின் தேவைகளை கணிசமாக பூர்த்தி செய்தன. அரசும் அதை கண்டு கொள்ளாமல் விட்டதற்கும் அதுவே காரணம். சோவியத் நிலைமை அது இல்லாது இருந்தால் ரொம்பவும் முன்னாலேயே திவாலாகியிருக்கும். அதுதான் கசப்பான உண்மை.
"சந்தைக்கு மக்கள் வருவதின் முக்கிய நோக்கமே பொருள்கள் மற்றும் சேவைகளை விற்க மற்றும் வாங்குவதற்குத்தான். விற்பனையாளர்களாக போட்டி போட்டு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு விற்கிறார்கள். அவர்கள் வாங்குபவர்களாகவும் போட்டி போடுகிறார்கள். அதன் மூலம் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குகிறார்கள். இதில் அளிப்பு மற்றும் தேவை ஆகிய இரண்டு விஷயங்கள் செயல் புரிகின்றன. அதன் மூலம் எவ்வளவு உற்பத்தி யார் செய்வது என்பது ஒருமாதிரியாக நிலை பெறுகிறது. அதன் மூலம் சமூகத்தில் குறிப்பிட்ட அளவுக்கே உள்ள வளங்கள் மிகச்சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்படுகிறன".
ஒத்து கொள்கிறேன். நமது நாட்டில் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் நிலை என்ன. இரண்டே இரண்டு மேக் கார்கள் சாலைகளில் பவனி வந்தன. அவற்றுக்கும் புக் செய்து ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டும். தரமா, அப்படியென்றால் என்ன என்ற நிலைதான். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்தானே. காசு கொடுத்து காரை ஓட்டிவர இயலும். தரக்கட்டுப்பாட்டுக்கு கார் கம்பெனிகள் மெனக்கெடுகின்றன. இல்லாவிட்டால் அவற்றுக்கு சங்குதான். சுதந்திரத்தால் உற்பத்தி பெருகியது. போட்டியால் தரம் உயர்ந்தது.
இதுவரை நான் முழுக்க முழுக்க ஒத்து கொண்ட விஷயங்கள் பற்றி கூறினேன். அபிப்பிராய பேதங்கள் பற்றியும் கூறவேண்டும்.
"கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குங்கள்".
அவ்வாறு தட்டையாக கூற இயலாது ஆடம் ஸ்மித் அவர்களே. எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு அதை இலவசமாக்கியாவது அவர்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம்தான் தருகிறார்கள். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் கூலிக்கு மாறடிப்பதாக தோற்றம் உள்ளது. கிராமங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் நகரங்களுக்கு மாற்றல் வாங்கி செல்வதிலேயே குறியாக உள்ளனர். பல கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் வருவதே இல்லை. அதையெல்லாம் சரி செய்ய வேண்டும். தனியார் கிராமப் பள்ளிகளில் முதலீடு செய்வார்கள் என்பதை தற்போதைய நிலையில் எதிர்ப்பார்க்க இயலாது என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. இருக்கும் அரசு பள்ளிகளை சரியாக இயங்கச் செய்வது அரசின் கடமை. நகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் வெள்ளம் போன்ற சமயங்களில் பள்ளிகளில் மக்களை தங்க வைப்பது நிறுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் படிப்பு தடைபடுகிறது. பள்ளி ஆசிரியர்களை வெளி வேலைகளில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் (உதாரணம்: குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஆள்சேர்த்தல், ரேஷன் கார்டுக்காக வீடுவீடாக சென்று தகவல் சேகரிப்பது ஆகியவை). ஆக அரசு கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
"சூரிய சக்தியை நாடுவது நலம்".
இந்த விஷயத்திலும் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக படித்துள்ளேன். இப்போதுள்ள முறைபடி அவற்றின் செயதிறன் ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். தியரிட்டிகலாகப் பார்த்தாலும் இது தாண்டாது என்றுதான் தோன்றுகிறது. சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் முறையில் ஒரு புரட்சி தேவை. நினைப்புகள் அடியோடு மாற்றப்பட வேண்டும். அதே சமயம் அணுசக்தியிலும் கலாட்டாக்கள் அதிகம். செர்னோபில் இன்னும் மறக்கபடவில்லை. இந்தியா பல முனைகளில் பிரச்சினயை அணுக வேண்டியிருக்கிறது.
இப்போதைக்கு தோன்றியது இவ்வளவுதான். உங்களுக்கு தோன்றுவதை பின்னூட்டங்களில் கூறுங்கள். மேலே விவாதிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
36 comments:
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உண்மையிலே பாரட்டுக் குறியது.ஆனால் அதற்கு நாம் விலையாகக் கொடுத்தது என்னவெல்லாம் என எண்ணிப் பாருங்கள்.
1.கலாச்சார சிரழிவு உச்சத்தை நோக்கி செல்வதை மறுக்க முடியுமா?
2.கூட்டுக் குடும்பங்கள் கலைந்து முதியோர் இல்லங்கள் தோன்றியுள்ளதே
3.கல்லுரிக் கல்வி சாதரண மக்களுக்கு எட்டாக் கனியாய் மாறியுள்ளதே
4.மருத்துவம் பெரும் வியாபாரமாகி நடுத்தரவர்கத்தை கூட பாடாய்படுத்துகிறதே
5.மனித வாழ்க்கையே எந்திரகதியில் வேகமாக செல்கிறதே(அளவுக்கதிகமான மண முறிவுகள்,சொத்து தாவாகள்,விவசாயிகளின் தற்கொலைகள்)
6.மால் கலாச் சாரம் (BIG SUIPER markets)சில்லரை வியாபாரிகளின் அன்றாட வாழ்க்கையை கேள்விகுறியாக்கிவிட்டதே
7.சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகையும்,மனை விலையும் உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கிறதே
8.மக்களின் அதிக ஆசையை தூண்டி MLM,share market,abnormal interest,1 for 3 times அவர்தம் ஆயுள் சேமிப்பை கபளிகரம் செய்யப் படுகிறதே
9.வனப்பு மிகு கார்கள் பவனி o.k
egmore station போக வேண்டு மென்றால் mount road ல் படகுக்காரை விட்டு செல்ல வேண்டும் போலுள்ளதே
10.கண்ணை விற்று சித்திரம் வாங்க முயலுகிறோமா?
***************************
ஒரு எச்சரிக்கை:
பொருளாதார நிபுனர்(மேலை நாட்டு) ஒருவரின் எதிர்கால கணிப்பு :
இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் தங்களது குடும்ப மாதாந்திர உணவுத் தேவைக்கு தங்கள் மாத வருமானம் முழுவதையும் செலவழிக்க வேண்டிவரும் எனவே எல்லாப் பொருளாதாரமும் தலைகீழாகிவிடும்
*******************************
தற்சமயம் உனவுப் பொருள்களின் அதீத விலை யேற்றம்(50% increase)
கச்சா எண்ணெய்(crude oil) விலை 200 டாலரை தொட்டால் உலகின் பொருளாதாரம் என்னவாகும் என்ற கவலை வலம் வரத் தொடங்கி விட்டது
*****************************
இது மாதிரி நடந்தால் கடவுள்தான் நம்மை காப்பாற்றவேண்டும்.
(ஒரளவுக்கு கட்டுக்கோப்பான மிதமான சட்டங்களுக்கு உட்பட்ட பொருளாதாரச் சுதந்திரம் கடைபிடித்தால் மட்டுமே)
******************************
உங்கள் பதிவுகள் தமிழ் எழுத்துத்துறையை, முக்கியமாக பிளாக் போன்ற ஜனரஞ்சக ஊடகத்தை, intellectual content ஊட்டி மேல் பாதையில் இட்டுச் செல்கிறது. வாழ்த்துகள்.
//இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் தங்களது குடும்ப மாதாந்திர உணவுத் தேவைக்கு தங்கள் மாத வருமானம் முழுவதையும் செலவழிக்க வேண்டிவரும்//
நான் படித்து உணர்ந்தவரை வருமானம் அதிகரிக்கும்போது, மொத்த வருமானத்தில் உணவுக்கான செலவின் சதவிகிதம் குறைந்து கொண்டுதான் போகும். ஒரு ஏழை நாலு ரொட்டிகள் சாப்பிடுகிறான் என்றால், அவனை விட 100 மடங்கு அதிக வருமானமுள்ள பணக்காரன் 400 ரொட்டிகளா சாப்பிட முடியும்?
கூட்டு குடும்பம் என்பது விவசாயக் குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்தது. நிலத்தில் வேலை செய்ய குடும்ப உறுப்பினர்கள் தேவையாக இருந்தனர். இப்போது விவசாயத்தை சார்ந்து அத்தனை பேர் இல்லையே. ஆகவே அதன் தேவை இல்லை. அதுதான் விஷயம்.
//ஒரளவுக்கு கட்டுக்கோப்பான மிதமான சட்டங்களுக்கு உட்பட்ட பொருளாதாரச் சுதந்திரம் கடைபிடித்தால் மட்டுமே//
கண்டிப்பாக. பொருளாதார சுதந்திரம் என்பதே அவரவரவருக்கு ஏற்ற தொழிலை தொடங்குவது, அல்லது சேவையளிப்பது. மற்றப்படி சமுதாயத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அப்படியே உள்ளன. அதில் எந்த கருத்து மாற்றமும் இல்லை. தனது வியாபாரத்தை சிறப்பிக்க செய்ய போட்டியாளர்களை போட்டு தள்ளும் சுதந்திரம் நிச்சயமாக கிடையாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் படித்து உணர்ந்தவரை வருமானம் அதிகரிக்கும்போது, மொத்த வருமானத்தில் உணவுக்கான செலவின் சதவிகிதம் குறைந்து கொண்டுதான் போகும். ஒரு ஏழை நாலு ரொட்டிகள் சாப்பிடுகிறான் என்றால், அவனை விட 100 மடங்கு அதிக வருமானமுள்ள பணக்காரன் 400 ரொட்டிகளா சாப்பிட முடியும்//
ஐயா பணக்காரர்களைபற்றி நான் கூறவில்லை.அவர்களில் பெரும்பாலோர் ஏழை எளியோரைப் போல் நிச்சயம் கஷ்டப்படமட்டார்கள். அதிக பணமுள்ளவர் அதீத (100 மடங்கும் அதற்கு மேலும்)வருமான உயர்வினால் விலைவாசிகளின் விஷவிலையேற்றத்தின் பாதிப்ப்பை சமன் செய்துவிடுவார்கள்.
எனது கருத்து பொருளாதாரதில் பலவீனமான 30 கோடி மக்களை பற்றிதான்.(தினக் கூலி ரூபாய் 30க்கும் கீழ் பெரும் துர்பாக்கிய சாலிகள்)
கடந்த 3-4 மாதங்களில் உணவுப் பொருள்களின் விலையேற்றம் 50-60 விழுக்காடு ஏற்பட்டுள்ளதையே சாமனியர்கள் தாங்கமுடியவில்லை. சராசிரியாக ஒரு குடும்பதின் உணவுத் தேவைக்கான செலவு ரூபாய் 3000(per month) அதிகரித்துள்ளது தங்களுக்கு தெரியாததல்ல.
பணவீக்கம் வீங்கிக்கொண்டே செல்கிறது.
( 10 % ஆகலாம் என்கிறார்கள்-ஒரு ஊகம் தான்)
அடுத்து அறிவிக்கப் பட இருக்கும் மத்திய ,மாநில,வங்கி,காப்பீட்டுத்துறை,இதர பொதுத்துறை நிறுவன மற்றும் பெரும் லாபத்தில்(30-40% வருமானப் பெருக்கம்)) கொழிக்கும் தனியார் துறை சார்ந்த ஊழியர்களின் அறிவிக்கப்படவுள்ள பெரும் சம்பள மாற்றங்கள்.
உனவுப்பொருள்களின் விலையை தந்திரமாக உயரச் செய்து(இருக்கவே இருக்கு பதுக்கல்,கடத்தல்,online trading(ஒரு சின்ன நிம்மதி அரசு இதை கட்டுபடுத்த முடிவு செய்துள்ளது))
நமது வருமானத்தில் பெரும் பகுதியை செலவளிக்க வேண்டி வராலாம்.
அதாவது ஏழை சாப்பிடும் 4 ரொட்டிக்கே 400 ரொட்டியின் (கொஞ்சம் விபரீதக் கற்பனைதான் -பொருத்தருள்க)இன்றய விலை கொடுக்க வந்தால் அவன் கதியென்ன.
எனவே
Professor Adam Smith அவர்களின் பொருளதாரக் கருத்துப் படியான அமெரிக்கா பாணி பொருளாதார சுதந்திரம் இந்தியாவின் தற்போதய
நிலைக்கு ஒத்துவராது என்பது எனது தாழ்மையான கருத்து.
****************************
200 ஆண்டுகளுக்கு முன்னால் ஒற்றுமை இன்மை காரணமாக இங்கிலாந்து அரசிடம் அடிமைபட்டு கிடந்தார்கள் நமது முதாதையினர்
தவறான பொருளாதரக் கொள்கையினால்
(தனியார்மமயம்,தராளமயம்,உலகமயம்)பன்னாட்டு கம்பெனிகளிடம்(mncs) பொருளாதார அடிமைகளாக மாறுவோம் என இடதுசாரிகளின் கருத்து உண்மையாய் விடக்கூடாது.
-------------------------
தண்ணிர் விட்டா
வளர்த்தோம்
சர்வேசா
கண்ணீர் விட்டல்லலோ
வளர்த்தோம்
சுதந்திரப் பயிரை
-------------------------------
இந்திய தொலைபேசி நிறுவனங்களின் பெரும் பகுதி அன்னிய கம்பெனி கைக்கு போய்க் கொண்டிருகிறது.
அடுத்த இலக்கு வங்கி துறை என்கிறார்கள்
பங்குவணிகத்தில் fiiன் ஆளுமை நாளும் நடைபெரும் நாடக அரங்கேற்றம்.
real estate வாணிபத்தில் நமது இடங்களையும்,கட்டிடங்களையும் கபளிகரம் பண்ணும் போக்கு
விவசாயத்தில் மரபணு மாற்ற விவசாயத்தால் விவசாய உற்பத்தி முடக்கம்.
-----------------------
டோண்டு ராகவன் சாரின் விரிவான பதில் பல நண்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமாய் அமையட்டும்(பல அலுவலகங்களில் இந்த தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம்,விலைவாசி ஏற்றம்,பொதுத்துறை நிறுவன ஊழியர்(நவரத்னா,மினி நவரத்னா நிறுவனங்கள் நீங்கலாக) களின் சூன்யமாய்க் கொண்டிருக்கும் எதிர்காலம் பற்றிய பயம்,காலிமனைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள போலி உச்ச விலைகள்,பங்கு வர்த்தகத்தில் உள்ள குதிரை பேரம் ஆகியவற்றின் தர்க்கம் தொடர்கிறது)
"டோண்டு பதில்கள் 25.04.2008"
35 Comments -April 28, 2008 11:39 PM தொடர்ச்சி
////முதல்வர் மனம் எல்லாம் மாறிவிட்டதாக என்னால் நம்ப இயலவில்லை. அதே சமயம் அவர் நிஜமாகவே மனம் மாறியுள்ளார் என்பதை பிற்கால நிகழ்ச்சிகள் காட்டி, நான் தவறகக் கூறினேன் என்பதை காட்டினால் என்னை விட சந்தோஷப்படுபவர்களும் இல்லை. என்ன தேவையின்றி நம்பி ஏமாறத் தயாராக இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
உங்கள் உயர்ந்த எண்ணம்
( சந்தோஷப்படுபதற்கு) நிறைவேற காலம் கனிந்து விட்டது.
please see page 14 of dinakaran paper dated 14.5.2008.
or
page 14 & 15 of dinamalar issue dated 14.5.08.
or
The Hindu page 1 dated 14.5.2008.
"Karunanidhi calls for cooperation from all"- an emotional speech moves MLAs to tears.
"தமிழ் இனத்தை வாழ வைக்க தோழமை உணர்வோடு அனைவரும் பாடு படவேண்டும்"- தமிழினத் தலைவர் கலைஞர்
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற பேச்சின் சாராம்சம்
" எல்லோரும் தோழமை உணர்வோடு பழகவும்,பொது வாழ்க்கையிலே ஈடுபடவும்,ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,மதிக்கவும்,மனிதாபிமானத்ததோடு பழகவும்,மனித நேயத்தை கடை பிடிக்கவும் வேண்டும் என்பதே உங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்."
//நல்லது நடக்கும்
இது நான்குமுறை தீர்ப்பு"
வெகு விரைவில் "கலைஞர் கருணாநிதி அவர்களை"
தமிழர்கள் அனவரும் மதம்,ஜாதி,இனம்,கட்சி,வயது, வித்தியாசமில்லாமால் ''ஒப்பற்ற தமிழினத் தலைவர்" என போற்றி கொண்டடுவர்.இது உறுதி.//
நல்ல தொடக்கம்
நல்ல காலம்
நல்ல நேரம்
நல்ல யோகம்
தமிழர் இனத்துக்கும் அன்னை தமிழுக்கும்.
//தினக் கூலி ரூபாய் 30க்கும் கீழ் பெரும் துர்பாக்கியசாலிகள்//
30 ரூபாய் தினக்கூலியா? எந்த ஊரில் இருக்கிறீர்கள் ஐயா? என் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரம்மாவின் கணவன் கொத்தனார் வேலைக்கு தினக்கூலியாக கட்டிட வேலைக்கு செல்கிறார். அவரது கூலி 300 ரூபாய்க்கும் மேல். எங்கள் எதிரில் உள்ள பெட்டிக் கடைக்காரர் அவ்வப்போது மண் அள்ளிப்போடும் வேலைக்கு சித்தாளாக செல்கிறார். அவருக்கு தினக்கூலி 200 ரூபாய். வயல்களில் வேலை செய்பவருக்கும் தினக்கூலி சில நூறு ரூபாய்கள் கூடவே நெல் என்றெல்லாம் கொடுக்க வேண்டும். 30 ரூபாய்க்கு யார் வேலை செய்வார்கள்? சிறு தொழிற்சாலை நடத்தும் அதியமான வர்களை கேட்டால் கதை கதையாக கூறலாம், தினக்கூலி எந்த அளவுக்கு இருக்கிறது என்று.
//online trading(ஒரு சின்ன நிம்மதி அரசு இதை கட்டுபடுத்த முடிவு செய்துள்ளது))//
இது நடக்கும் காரியமாகத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு அரசிடம் தொழில் நுட்பம் இருக்கிறதா என்ன?
உலகமயமாக்கல் வந்து விட்டது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அதை எவ்வாறு சமாளிப்பது என்றுதான் யோசிக்க வேண்டுமே தவிர கடிகாரத்தை திருப்பி செட் செய்யும் முயற்சி தோல்வியில்தான் முடியும். அது நமக்கு ஏற்றதா இல்லையா என்றெல்லாம் விவாதம் செய்யக்கூட இப்போது யாருக்கும் நேரம் இல்லை.
மேலும், இப்போது நாம் எல்லாம் பின்னூட்டங்கள் போடும் கலாச்சாரம் கூட உலகமயமாக்கலால்தான் வந்தது என்பதையும் நினைவில் நிறுத்துதல் நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////தினக் கூலி ரூபாய் 30க்கும் கீழ் பெரும் துர்பாக்கியசாலிகள்//
//30 ரூபாய் தினக்கூலியா? எந்த ஊரில் இருக்கிறீர்கள் ஐயா?//
(நான் சொல்ல வந்தது சராசரி தின ஊதியம்,வேலைஇல்லா (leave,weeklyrest)நாடகளை தவிர்த்து(weekly off without pay-to temporary status employees))
இதற்கான ஆதாரத்தை(செய்தியை-தங்களைப்போன்ற அணுபவசஸ்தரின் வலைப்பின்னலிலில் தான் படித்தேன்.அதை தங்களுக்கு(true copy of the matter) )இன்று மாலை
தெரிய படுத்துகிறேன்.
//சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகையும்,மனை விலையும் உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கிறதே//
intha IT-kaarargalin sambalaththai perumalavu kuraikka vendum. maatham Rs. 15000-kku mel sambalam kodukka koodathu. appadi
seythaal intha pirachinai sariyaagi vidum.
komanakrishnan
//நான் சொல்ல வந்தது சராசரி தின ஊதியம்,வேலைஇல்லா (leave,weeklyrest)நாடகளை தவிர்த்து(weekly off without pay-to temporary status employees//
இருக்கலாம். அவர்களிலும் குடும்பத் தலைவர்கள் குடி, ஒற்றை எண் லாட்டரி ஆகியவற்றில் பணத்தை கோட்டை விட்டு அதுவும் இல்லாது பட்டினி கிடக்கலாம். வாழ்க்கையின் யதார்த்தம் என்னவென்றால், ஓரளவுக்குத்தான் இம்மாதிரி சமுதாயக் கவலைகள் பட்டு கொண்டிருக்க இயலும். முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களும் தம் நிலையை உயர்த்திக் கொள்ள உழைக்க வேண்டும். சிவகாசி போன்ற ஊர்களில் என்ன நடக்கிறதென்றால் குடிகார தகப்பன்கள் பையனின் கூலியையும் சேர்த்து அமுக்குவதே நடக்கிறது. அவர்களுக்கெல்லாம் கவலைப்பட்டு கட்டுப்படியாகுமா உங்களுக்கு? என்னால் ஏலாது, ஆளை விடுங்கள்.
பல இடங்களில் கூர்ந்து பார்த்தால் பைத்தியம் தெளிந்தால்தான் கல்யாணம், கல்யாணம் ஆனால்தான் பைத்தியம் தெளியும் என்ற நிலைதான் நிலவுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவர்களுக்கெல்லாம் கவலைப்பட்டு கட்டுப்படியாகுமா உங்களுக்கு? என்னால் ஏலாது, ஆளை விடுங்கள்.//
ezaikalukku uthava koodaathu, avargalukkaaga parithaaba pada koodaathu endra ungal unmai soruupaththai thaangale thangal vaayaal othu kolkireergal, dondu avargale!!!. nandri. nandri!!. ungalukku jalra
adippavargal enna solla pokiraargal?
komanakrishnan
//"Karunanidhi calls for cooperation from all"- an emotional speech moves MLAs to tears.//
ஹிந்துவில் நான் பார்த்தது (No birthday celebrations தலைப்பின் கீழ் முதல் மற்றும் கடைசி பாராக்கள்):
"He chose the day his government completed two years in office to declare that he will not celebrate his 85th birthday on June 3. On Tuesday morning, after reaching the Secretariat and before entering the Assembly, he told his secretary that he would not be in Chennai in the first week of June".
"Sitting next to him, Electricity Minister, Arcot N.Veeraswami, gestured and said that no one could prevent people like him from celebrating the Chief Minister’s birthday".
முகம்மது பின் துக்ளக் படத்தின் கடைசி காட்சி:
துக்ளக் ஒரு உணர்ச்சிகரமான பேச்சு பேசி மக்களின் கோபத்தை பதூதா மேல் திருப்புவார். பிறகுதான் தமாஷ்:
துக்ளக்: மக்களே, அதற்காக என் நண்பர் பதூதா மேல் கல்லால் எல்லாம் அடிக்காதீர்கள்.
கல்மழை பதூதா மேல்.
துக்ளக்: மக்களே பதூதாவை கொன்று விடாதீர்கள்.
பதூதா காலி.
வாரப்பத்திரிக்கை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் படித்த ஒரு துணுக்கு இங்கு ஏன் எனக்கு ஞாபகம் வந்தது? இதன் ஹைப்பர்லிங்க் யாது?:
திடீரென பொதுக்கூட்டம் கலைந்து மக்கள் வீடு திரும்புகின்றனர். திகைப்புடன் நிற்கும் தலைவரிடம் அவரது அள்ளக்கை தலை குனிந்து நிற்கும் ஒரு பேச்சாளரை காட்டி, "ஐயா, இவர்தான் மக்களிடம் ஏதாவது உபயோகமான காரியம் செய்யும்படியும், பொழுதை வீணாக்க வேண்டாமென அவர்கள் கன்வின்ஸ் ஆகும் அளவுக்கு அழுத்தமாகக் கூறினார்" என குற்றம் சாட்டுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆதம்.ஸ்மித் : "கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குங்கள்".
டோண்டு : அவ்வாறு தட்டையாக கூற இயலாது ஆடம் ஸ்மித் அவர்களே. எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும். ஏழைகளுக்கு அதை இலவசமாக்கியாவது அவர்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்.//
டோண்டு சார், ஏழைகளுக்கு கல்வி இலவசமாக கொடுக்க கூடாது என்று அவர் சொல்லவில்லையே. எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் அவர் விருப்பமும். அதனால்தான் கல்வியை அரசின் கட்டுபாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.
அரசின் கல்வி கட்டுப்பாடுகள் மோசமானவை என்ன என்று பார்ப்போமா
1. தனியார் நிறுவனமாகவோ அல்லது லாப நோக்கில் பள்ளிகள் கட்டி கல்வி அளிக்க முடியாது.
2. Trust ஒன்றின் கீழ் லாப நோக்கம் அல்லாத இயக்கமாகதான் தனியார் பள்ளிகள் நடத்த முடியும்.
3. தனியார் பள்ளிகள் நிறுவ மிக அபத்தமான கட்டுபடுகளில் ஒன்று 'Essentiality Certificate'
Delhi School Education Act, 1973
The school must obtain “Essential Certificate” by establishing that its existence serves the public interest. The Administrator decides by taking into account “the number and categories of recognised schools already functioning in that locality, and general desirability of the school with reference to the suitability and sufficiency of the existing schools in the locality and the probable effect on them.”
இது லைசென்ஸ் பெர்மிட்-ராஜ் இல்லாமல் வேறு என்ன.
மேலும், அபத்தங்கள்
Delhi School Education Act, 1973
Rule 8: Terms and Conditions of Service of Employees of Recognised Private Schools,
Clause 2: Subject to any rule that may be made in this behalf, no employee of a recognised private school shall be dismissed, removed or reduced in rank nor shall his service be otherwise terminated except with the prior approval of the Director.
..............................
குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளில் Scholarship கொடுத்து படிக்க வைக்கலாம். அரசு கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் பணத்தை, நேரடியாக பெற்றோர்களிடம் பள்ளி கட்டணத்திற்கு Vocher' ஆக கொடுத்துவிட்டால் நல்லது.
மேலும் பார்க்க:
http://schoolchoice.in/
//குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றால் தனியார் பள்ளிகளில் Scholarship கொடுத்து படிக்க வைக்கலாம். அரசு கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் பணத்தை, நேரடியாக பெற்றோர்களிடம் பள்ளி கட்டணத்திற்கு Vocher' ஆக கொடுத்துவிட்டால் நல்லது.//
Wonderfu, DFC.
அதே நேரத்தில் குக்கிராமங்களில் பள்ளிகளை நிறுவ தனியாருக்கு மோட்டிவேஷன் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா. அம்மாதிரி இடங்களிலாவது அரசு பள்ளிகள் தேவைப்படும் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
////தினக் கூலி ரூபாய் 30க்கும் கீழ் பெரும் துர்பாக்கியசாலிகள்//
//30 ரூபாய் தினக்கூலியா? எந்த ஊரில் இருக்கிறீர்கள் ஐயா?//
தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம்
சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர்
உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசாயகூலிகள், உள்கட்டமைப்பு
துறையில் பணிபுரிதல் மற்றும் ஒப்பந்த தொழில், மீன்பிடித்தல், நெசவு என்று
பல்வேறுபட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39.4 கோடிபேர்(80%)
தினக்கூலியாக வெறும் ரூ.20 மட்டுமே(அரை டாலருக்கும் கீழ்) பெறுகின்றனர்.
தேசத்தின் வளர்ச்சி எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை என்று தேசிய முறைசாரா
தொழிலாளர் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கை பற்றிய செய்திகள்
கிடைக்கும் இடங்கள்
****************************
http://economictimes.indiatimes.com/8_out_of_10_working_Indians_earn_...
http://www.hinduonnet.com/thehindu/holnus/002200708100324.htm
*********************************
புதிய பொருளாதார
கொள்கைகள் 1991 இல் அறிவிக்கப்பட்டது. தேசத்தில் 1990 ல் மாத சம்பளம்
ரூ.500கீழ் வருமானம் பெறுவோர் வறுமைக்கோடின் கீழ் வாழ்வதாக அரசு அன்று
அறிவித்தது. அது இன்றளவும் அதே அளவுதான் உள்ளது. அதனால் இன்று வெறும்
24%(தோராயமாக 24 கோடி பேர்) மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக அரசு
பெருமையுடன் சொல்லிவருகிறது. இதை தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால்
சரியான அளவுகோளாக இருக்கும். 1990 இல் ஒரு கிராம் தங்கம் ரூ.250 மட்டுமே. எனவே
அன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் 2கிராம் தங்கம் வாங்க முடியும்.
அப்படியென்றால் இன்று இரண்டு கிராம் தங்கம் ரூ1650 க்கு விற்கப்படுகின்றது.
எனவே விலைவாசிப்புள்ளியுடன் ஒப்பிடும்போது இன்று ரூ1600 க்கு கீழ் சம்பளம்
பெறுவோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்தானே? ஏன் இந்திய அரசு
இதை உயர்த்த மறுக்கின்றது? ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று பசப்பவா?
மேலே
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர் மாத
ஊதியமாக வெறும் ரூ600(விடுமுறை சம்பளம் எதுவும் கிடையாது எனவே விடுமுறைநாட்களை
கழித்தால் இது இன்னும் குறையும்)க்கு கீழ் பெறுகின்றனர். அப்படியானால் அரசு
கூறிய 24% பேர் புள்ளிவிவரம் ஒரு ஏமாற்றுவேலை என்றுதானே பொருள். ஆக மாத ஊதியம்
1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ
60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட
பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன்
சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு
கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு
கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு
செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய
பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார
இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி
தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும்
1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக
குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம்
பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக
உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று
சொல்லப்படுகிறதோ?
டோண்டு சார் வேற எங்கேயும் இல்லை நமது புண்ணிய தேசத்தில் தான் ரூபாய் 30 கூட அல்ல ரூபாய் 20 தின வருமானத்துடன் உழலும் நம் ஏழை எளிய சகோதரர்களை இந்த பகா சூரர்களிடமிருந்து(உலகமயமாக்கல்-தனியார் மயமாக்கல்-தாரளமயமாக்கல்) காப்பது உங்களை போன்ற அறிவுசால் பெரியவர்களின் கடமையன்றோ.
(கொடுக்கப் பட்டுள்ள லின்ங் ஐ க்ளிக் செய்து பின் தங்கள் முடிவை சொல்லுங்கள்-இன்னும் வேண்டுமென்றால் supporting documents about the danger and unjustice imposed on our poor brothers,
தங்கள் பார்வைக்கு(email)அனுப்பிவைகிறேன் )
//அதே நேரத்தில் குக்கிராமங்களில் பள்ளிகளை நிறுவ தனியாருக்கு மோட்டிவேஷன் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா. அம்மாதிரி இடங்களிலாவது அரசு பள்ளிகள் தேவைப்படும் அல்லவா?
//
dondu avargal intha vishayaththil sariyaaga karuththu kooriyullaar.
komanakrishnan
//அதே நேரத்தில் குக்கிராமங்களில் பள்ளிகளை நிறுவ தனியாருக்கு மோட்டிவேஷன் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா.//
டோண்டு சார், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் ஒழுங்கா கிடைக்கும் பட்சத்தில் (Voucher முறையில் ), ஊக்கம் நிறையவே இருக்கு என்று நினைக்கிறேன்.
மேலும் குக்கிராமங்களில் கூட தனியார் பள்ளிகள் நிறைய வருவதாக சொல்லுகின்றனர், பெரும்பாலான பள்ளிகள் ஸ்கூல் பஸ் கூட விடுவதாக கேள்விபட்டேன்.
//அம்மாதிரி இடங்களிலாவது அரசு பள்ளிகள் தேவைப்படும் அல்லவா?//
தனியார் பள்ளிகளுடன் போட்டி போட ரெடி என்றால் அரசு பள்ளிகள் இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
வேலை செய்யாத அரசு வாத்தியார்களை பணி நீக்கம் செய்ய வழி இருந்தால், அரசு பள்ளிகளும் முன்னேறலாம்.
//அம்மாதிரி இடங்களிலாவது அரசு பள்ளிகள் தேவைப்படும் அல்லவா//
டோண்டு அய்யா,
அம்மாதிரி இடங்களில் தான் குறிப்பாக நல்ல பள்ளிகள் தேவை.அரசு பள்ளிகள் கேவலமானவை.அரசுக்கு மோட்டிவேஷனும் கிடையாது,நிர்வாகத் திறமையும் கிடையாது.கிராமங்களில் பள்ளிகள் நடத்த தனியார் துறையை சரியான நிதி உதவி செய்து ஊக்குவித்தல் தான் சரியான முடிவாக இருக்க முடியும்.அரசே நடத்துவது என்பது ஊழலில் தான் முடியும்.
பாலா
தராளாமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் நிலைமை படு மோசமாகியிருக்கும். டாலர் பற்றாக்குறையினால் ருபாயின் மதிப்பு பல மடங்கு சரிந்து, திவாலாகி, ஆயிரம் மடங்கு விலைவாசி உயர்ந்து, சர்வாதிகாரம் வந்திருக்கும்.
வரிவசூல், புதிய வேளை வாய்ப்பு 1991அய் விட இன்று பல பல மடங்கு அதிகரித்துள்ளது. இல்லையேல் ?
உடுக்க துணி முன்காலத்தில் பெரிய விசியம், ஆடம்பரம். இன்று 1970கள் அளவு கந்தல் உடை இல்லை. வயதானவர்களை கேட்டு பார்க்கவும்.
bala said... //அம்மாதிரி இடங்களில் தான் குறிப்பாக நல்ல பள்ளிகள் தேவை.அரசு பள்ளிகள் கேவலமானவை.//
சரியா சொன்னீங்க பாலா ஐயா
1.புதிய பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கபட்ட நாள் முதல் நமது GDP 8% என்று சொல்லப்பட்டு வந்ததே திடிரென என்னாவாயிற்று ? ஏன் பணவீக்கம் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு (7.5%) உள்ளதாக கூறப்படுகிறது? யார் காரணம்,விளக்குக?
2.பங்கு சந்தையில் ஏற்படும் திடிர் உயர்வு/குறைவு ஏன் ஏற்படுகிறது?
3.உணவுப் பொருள்களின் திடீர் 50 -60% விலையேற்றம் யாரால் ஏற்படுகிறது?
4.விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்.
5.60,000 கோடி கடன் தள்ளுபடிக்கும் பின்னும் அவர்கள்(பொருளாதர) நிலை பரிதாபமாக உள்ளதே ஏன்?
6.பாரம்பரிய தொழில்கள் நலிந்து வருகிறதே,அந்தப் பணியாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?
7.இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் குறைந்துள்ளதா?இல்லையா?
8.பொருளாதார வளர்ச்சி 70 % மக்களுக்கு போய் சேரவில்லை என இடதுசாரி கட்சிகளின் ஆதங்கம் உண்மையா?
9.தேர்தல் அறிக்கை மூலம் வாக்களர்களுக்கு இலவசங்கள் அள்ளி கொடுக்கப்படுகிறதே? இது எங்கே கொண்டுபோய் விடும்?(ஒரு ஓட்டுக்கு மாதம் ரூபாய் 1000/= கொடுப்பதாக கூட அறிக்கை கண்ணில் படுகிறதே)
10.வங்க மாநிலத்தில் தனியார்மயத்தை ஆதரிக்கும்,இடதுசாரிகள் அதை எதிர்த்து நடுவண் (central government)ஆட்சியையே கவிழ்க்க முயலுவதுபோல் காட்சிகள் செய்விக்கப்படுகின்றனவே, ஏன் ,விளக்குக?
வணக்கம் டோண்டு சார்.
அருமையான பதிவு அதனாலேயே நான் கும்மி அடிக்க வரவில்லை. தங்கள் கருத்து நிச்சயமாக நிறைய பேருக்கு எரிச்சல் தரும், நிஜம் சுடும். நாம சும்ம இருக்கலாம்னு பார்தகூட இழுத்து விட்டுடராங்களே. ஏன் IT காரங்களை பார்த்தா இப்படி காண்டு எடுத்து நிறைய பேரு அலையாராங்க
IT காரன் சம்பளம் பெரும்பாலும் வெளினாட்டு பணம், இங்க எங்களை விட அதிக ஒபி அடிக்கும் பல அரசாங்க அதிகாரிகள் வாங்கும் பணம் நம்மூர் கோயிஞ்சாமி கட்டுர வரிங்கப்பா..போய் ஒரு சென்ட்ரல் கவர்மென்ட் அல்லது பொதுதுறை நிறுவன ப்யூன் சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு பாருங்கப்பா.. இதுல அவர்களுக்கு இன்க்ரிமென்ட் எப்பவும் 2, 3 வருடங்களுக்கு முன்னாடி போட்டு அரியர்ஸ் என்ற பேரில் அள்ளிகொடுப்பார்கள். இவை அனைத்தும் கோயிஞ்சாமிது தம்பிங்களா.. ஒரு நிமிஷம் கோக் சாப்டுக்கரன் சோஷியலிசவாதிங்கலாம் ஜில்லுனு சுதேசி இளநீர் சாப்டுங்கங்க. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் டேமேஜர்களின் சம்பளம் கேட்டா லைட்டா நம்மக்கெல்லாம் கண்ணை கட்டும். மீண்டும் உங்களுக்கு இள்நீர் எனக்கு கோக் ஓகேவா..
என்னது IT காரங்க சம்பளத்தை 15,000 கீழ குறைக்க போறாங்களா? . ரூ 15,000 வச்சு நான் என்ன பண்ணுவன் அய்யோ வீக்லி எனக்கு பப்புக்கே (PUB - Public Utility Board அதாவது (கு)வாட்டர் சப்ளை சர்வீஸ்) ரூ 5000 ஆகுதே. அப்ப இனிமே நான் பப்புக்கு (பூவா) என்ன பண்ணுவன்.
டோண்டு சார் ஒரு நிமிடம் இங்க இவனுங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதால்தான் நெம்ப ஆடறாங்க விலைவாசி ஏத்துறாங்கன்னு வரவங்களுக்கு நான் சுண்டல் தரன் நீங்க மெயின் லைன்லயே விளையாடுங்க
எவனாச்ச்சும் IT காரங்க சும்ம மெயில் ஃபார்வர்ட் பண்ணிட்டு இருக்காங்க உழைப்புக்கு ஏத்த சம்பளம் இல்லைனு சொன்னீங்கனா ..*7#$%^(. அப்ப்டி பார்தீங்கனா காலைல இருந்து மாலை வரை பசியை உண்டு வியர்வை வழிய ரூ 80 ( கான்ட்ரேக்டன் கமிஷன் போக ) ரோடு போடும் அல்லது தோண்டும் ஆளுக்குதான் சம்பளம் கொடுக்கனும். அதே ரோட்டில் கவர்ன்மென்ட் கொடுத்த AC காரில் கவர்மென்ட் கொடுத்த வீட்டுக்கு செல்லும் மட்றும் IT துறைக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நீதிபதிக்கு அல்ல. They have already demanded to hike there salary , they want over a lakh per month.
நம்ம அரசாங்கம் ஏரோப்ளேன் ஓட்டறாங்களே அவர்களுக்கு மாதம் 4 லட்சத்துக்கு மேல கொடுக்கறாங்களே அவங்களுக்கு சம்பளம் குறைப்பாங்களோ.. வெண்ணை சம்பளம் 10 பைசா குறைச்சா கூட தனியாருக்கோ வெளிநாட்டுக்கோ வேலை பார்கப்போயிடுவாங்க. இந்தியாவில் பசியின் கொடூரங்களை கலர் கலரா காமிக்கறானே TV ல அந்த மீடியா ஆளுங்களுக்கு 2 லட்சம் மாத சம்பளம் .. குறைச்சு பாரேன் குட்பை அப்படின்னு போய்கினே இருப்பான்.
எங்களுக்கு அதிக சம்பளம் நாட்டுல நிறைய பேரு வயித்தெரிச்சல்ல ஏன் சார் சுத்தறீங்க. ஒவ்வொரு முறை ரெசஷன் வரும்போதும் பெஞ்சுல உட்காந்து இருக்கும்போதும் ஒரு டீ வாங்கி கொடுத்துருப்பீங்களா. வந்துட்டாங்க சம்பளம் குறைக்க நல்ல காலம் உங்களை போன்ற சோஷியலிச வியாதிகள் நிதியமைச்சரா இன்னும் வரலை.
அடுத்த முறையிலிருந்து இவர்களுக்கு ரேஷனில் 1 கிலோ ஈனோ இனாமாக வழங்க இலவசங்களின் இமயத்தை வேண்டிக்கொள்கிறேன்.
ஹெல்லோ கொஞ்சம் கோக் மீதி இருக்கு குடிச்சுகறன் நீங்களும் இள்நீர் சாப்டுங்கங்க .. ஹெல்லொ மிஸ்டர் சொஷியலிஸ்ட் அப்புறம் இளநீர் விலைய குறைக்க சொல்லிடபோறீங்க எங்களை மாதிரி பேசிகிட்டு இருக்கமாட்டங்க கையில என்ன இருக்கு பார்தீங்களா.. அருவா அருவா..
வரட்டா..
கதவை திறந்து வச்சுட்டு படுங்க காத்து வரும்
சரவணன்
// Anonymous said...
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உண்மையிலே பாரட்டுக் குறியது.ஆனால் அதற்கு நாம் விலையாகக் கொடுத்தது என்னவெல்லாம் என எண்ணிப் பாருங்கள்.
1.கலாச்சார சிரழிவு உச்சத்தை நோக்கி செல்வதை மறுக்க முடியுமா? //
சூப்பர் கேள்விண்ணா, வளர்சிக்கு முட்டுகட்டை போடுவதற்கு பல நூற்றாண்டுகளா பயன்படும் 100 % உத்திரவாதமுள்ள ஆயுதம்னா இது. ஒரு பெண்ணை போராடி நல்லமுறையில் தோக்கடிக்க முடியலன்னா அவ ஒரு அவுசாசி ஊர் மேயுறா அப்படின்னு கோழைத்தனமா ஈசியா ஜெயிச்சுடலாம் அதுக்கும் இதுக்கும் 1 % கூட வித்தியாசம் இல்லைங்கண்ணா என் பார்வையில்.
பழைய ஆச்சாரங்களை எல்லாம் நாம உடைப்போம் ஆனால் கலாச்சாரங்களை காப்போம் அப்படின்ரது லைட்டா, சாராய குடிச்சுட்டு பேசுர தெருமுனை அரசியல் கூட்ட வாசனை போல இருகுதுங்கண்ணா.
கலாச்சாரம் அப்படின்னா ஒரு இனம் அதன் மொழி, இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் என்று பல்வேறு கலைத்துறையில் காண்பிக்கும் வெளிப்பாடே கலாச்சாரம். நீங்க நினைக்கற மாதிரி சொந்தங்களை பேணுதல் கூட்டு குடும்பம் கற்பு நெறி இதெல்லம் அதில் அடங்காது. அதெல்லாம் இதில் போட்டு குழப்பிக்க கூடாது.
கலாச்சாரம் பற்றி விளக்கவே இது, பதிவின் மையம் விட்டு விலககூடாது என்பதற்கே எனது விளக்கம். மத்தபடி கலாச்சார காவலர்கள் இதற்கு எதிர்விளக்கம் கொடுத்து என்னொட டவுசர்லாம் கழட்டகூடாது சொல்லிட்டன் ஆமாம்..:-)
சரவணன்
//எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும்.//
சார் அதுல அப்படியே மருத்துவத்தையும் சேர்த்துகொள்ளுங்கள். கல்வியும் மருத்துவமும் சேவைகளாக இருந்தன இப்பொழுது அதை அடிக்க வேற வியாபாரம் கிடையாது, இதில் பணம் போடுபவர்கள் நட்டமடைய வாய்ப்பே இல்லை.
மக்கள் உண்மையான பொருளாதார சுதந்திரம் அடையும் வரை கல்வி மற்றும் மருத்துவம் (இரண்டும் சிறந்த முறையில் ஒப்புக்காக இல்லாமல்) குறைந்த விலையில் அல்லது இலவசமாக ஏழைகளுக்கு தந்தே ஆகவேண்டும். இதை இலவசம் என்று சொல்லாமல் அரசின் கடமை என்றே சொல்லலாம்
சரவணன்
/////online trading(ஒரு சின்ன நிம்மதி அரசு இதை கட்டுபடுத்த முடிவு செய்துள்ளது))//
இது நடக்கும் காரியமாகத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு அரசிடம் தொழில் நுட்பம் இருக்கிறதா என்ன?///
இதற்க்கு தொழில் நுட்பம் தேவையில்லை,
பெரும்பாலான உணவு பொருள்கள் ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து எடுத்தாகி விட்டது,
இப்பொழுது தேவையெல்லாம், கீழ்மட்டத்தில் இருக்கும் தினக்கூலி பெறுபவர்களின் (நீங்கள் சொல்வது உண்மை தான் அவர்களின் குறைந்த பட்ச வருமானம் 150 ரூபாய்)
வருமானத்தை அப்படியே முழுங்கும் டாஸ்மார்க்கை மூடிவிட்டால் எல்லாம் சரியாய் போகும்
வால்பையன்
//வால்பையன் said...
..பெரும்பாலான உணவு பொருள்கள் ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து எடுத்தாகி விட்டது //
ஆன்லைன் வர்தகத்தில் இருக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் மட்டுமே போதும் வால்பையன் அவர்களே.. உலகளாவிய விலைவாசி உயர்வுக்கு கடுமையான பெட்ரோல் பற்றாகுறை ஒன்றே போதுமானதாக இருக்கும்.
//..உண்மை தான் அவர்களின் குறைந்த பட்ச வருமானம் 150 ரூபாய்//
நெறய பேருக்கு வருமானம் உயர்ந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இன்னும் 50 இருந்து 100 ரூபாய்க்குள் வேலை செய்யும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். 10வது முடித்து ஒரு தொழில்நுட்ப பயிற்சி எடுத்து விட்டு அம்பத்தூர், பெருங்குடி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் உள்ள தொழிற்பட்டறைகளில் பலர் 1,500 முதல் 3000 ரூபாய்க்கு தங்கள் ஆரம்ப வருடங்களை ( சுமார் 5 ) கழிக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் திறமையானவர்களுக்கு அதை போல் 3 அல்லது 4 மடங்கு சம்பளம் தர பல நிறுவனங்கள் இருக்கின்றன அதை உணர அவர்கள் எடுக்கும் நேரம் அதிகம்.
எனக்கு தெரிஞ்சு நிறைய கார் டிரவர்களின் சம்பளம் 2,500 - 3,000 (அப்புறம் அவர் எப்படி பெட்ரோல் திருடாமல் வாழமுடியும்). இவர்கள் சென்னையின் ரூ 1000 கொடுத்து வீடு வாடகைக்கு பிடித்து எப்படியோ வாழ்ந்து (வாடி) கொண்டுதானிருக்கிறார்கள்.
இவர்களின் அறியாமையே இவர்களின் சாபம், எதோ நம்மால் முடிஞ்ச நம்மை சுற்றி இருக்கும் இதுபோன்ற மனிதர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை புரியவைத்தால் மிக நல்லது , வாய்ப்புக்களை அவர்கள் உணர்ந்தால் வாயால் முழம் போடும் அரசியல்வாதிகளை மதிக்காமல் அவர்களே அவர்தம் வாழ்வை வென்றெடுக்க தொடங்கிவிடுவார்கள்
சரவணன்
//எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும்.//
சார் அதுல அப்படியே மருத்துவத்தையும் சேர்த்துகொள்ளுங்கள்.
சார் நாங்க கல்வி இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சொன்னது பள்ளி கல்வி மட்டும்தான்.
சரவணா ஐயா,
மருத்துவத்தை ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று விளக்க முடியுமா.
//எனக்கு தெரிஞ்சு நிறைய கார் டிரவர்களின் சம்பளம் 2,500 - 3,000//
சார் BPO காரன் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ 1 கமிசென் தரானம், ரூ.4500 கம்மியா யாரும் வர மாட்றாங்க சார். இப்ப என்ன சம்பளம் வாங்குறாங்க என்று கேட்டு சொல்லவும்.
//சரவணா ஐயா,
மருத்துவத்தை ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று விளக்க முடியுமா.//
ஏன் வழங்ககூடாது சார்.
சுதந்திரம் வாங்கி வெறும் 60 வருடங்களே ஆகின்றன இதில் நமக்காக ஒவ்வொன்றாக நாம் உருவாக்கி கொண்டுவருகின்றோம். நமக்காக நாம் ரோடு, பாலம், ரயில், ராணுவம், கல்வி, மருத்துவம் என்று ஒவ்வொன்றையும் வளர்தெடுத்துகொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நீங்கள் இந்த தலைமுறை இளைஞனிடம் முன்னேறாதற்கு உள்ள குறை அவனுடைய முயற்சியின்மை என்று காணலாம்.
அதுவே ஒரு 60 வயது முதியவரிடம் அவர் ஏழ்மையில் குறை அவருடையதாக இருக்காது அது சமூக சுழ்நிலையே. அவரும் அவரது மகன்களிடம் முடிந்த அளவு அவர் வளர்ந்த சூழ்நிலை போல் இல்லாமல்தான் வளர்திருப்பார். டோண்டு சார் மாதிரி ஆட்களை இந்த ஆட்டத்துல சேர்த்துக்ககூடாது. அவர் போன்ற அறிவாளிகள் பாகிஸ்தானில் இருந்தாலும் போடா பூட்டோன்னு முன்னேறிடுவாங்க. :-)
அதனால் அந்த பெரியவரிடம் இந்த மருத்துவமனை கட்ட இவ்வளவு பணம் ஆச்சு, இந்த டாக்டருக்கு இவ்வளவு சம்பளம், இந்த ஸ்கேன் மிஷின் விலை உனக்கு தெரியுமான்னு கேட்டு அவரிடம் பணம் இருந்தால் வா இல்லை வெளியே போ என்பது, நீ நாட்டுக்கு தேவையில்லை எனவே இறந்து போ என்பதற்கு சமமாகும்.
இங்கே நான் இலவசங்களை ஆதரிப்பதாக நினைத்தால் ஐ அம் சாரி .. அம் அல்வேஸ் அகெயின்ஸ்ட் இட்.. இங்க நாம் இதை யாருக்கும் மறுக்கிறோம் என்பதே முக்கியம் படிக்க விருப்பமுள்ள படிக்கும் வயதிலுள்ள பிள்ளையிடம் பணம் இல்லாதது அவன் குற்றம் இல்லை அது அவன் பெற்றோர் குற்றம் அதற்காக எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு கல்வி மறுக்கபடகூடாது. உடல்நலம் சரியில்லாமல் வரும் குழந்தையிடமும் வயோதிகரிடமும் இஃதே. இலவசங்களை சரியாக உபயோகிக்கும் மனநிலை (எவ்வளவு கொள்ளை அடிக்கரானுங்க அரசியல்வாதிங்க எனக்கு ஏன் வேட்டி சேலை இலவசமா கொடுக்ககூடாது என்று இல்லாத நிலை) மக்களிடம் பரவுதல் மிக நன்று. இங்கே நான் இலவசம் என்பது தலைக்கு ஒரு லட்டு அல்ல.உண்மையில் கஷ்டபடும் மனிதர்க்குதாம்.
தன்மான தமிழன் அப்படின்னு சொல்லிகறோம் இலவசங்களுக்கு என்ன அடிதடிப்பா.. யாருக்கும் வெட்கமில்லை.
பிச்சை புகினும் கற்கை நன்றே..ஆனால் நம் குழந்தைகள் பிச்சையெடுத்து கற்க தேவையில்லாமல் அதை இலவசமாக தருவது அதனினும் நன்றே !
சரவணன்
// சார் BPO காரன் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ 1 கமிசென் தரானம், ரூ.4500 கம்மியா யாரும் வர மாட்றாங்க சார். இப்ப என்ன சம்பளம் வாங்குறாங்க என்று கேட்டு சொல்லவும்.//
சார் நீங்க சொல்றது கொஞ்சம் கரெக்ட். எல்லொருக்கும் பொருந்தாது, இதுவே பெங்களூரில் ஒரு கேப் டிரைவர் சுலபமாய் 15,000 சம்பாதிக்கலாம் ஒரு ஒரு முறை திரும்பி போகும்போதும் ட்ரிப் அடித்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். நம்ம சென்னயில் இது கஷ்டம் பிடிச்சா உடனே வேலை விட்டு தூக்கிடுவாங்க.
BPO இல்லாமல் தனியாரிடம் சிறு முதலாளிகளிடம் வேலை செய்பவர்கள் அந்த முதலாளி கர்ணனாய் இருந்தால் 4000 ரூபாய் சம்பளம் வாங்கலாம். அதிகம் கேட்டால் நாளையிலிருந்து நின்னுட சொல்லுவாங்க. ஏன்னா அந்த சம்பளத்துக்கு வேலை பார்க ஆயிரம் பேர் வெளியில் காத்து கொண்டிருக்கிறார்கள் சார். அதுவும் சென்னை தவிர்த்து வெளியில் சிறு நகரங்களில் வேலை பார்க்கும் டிரைவர்கள் சம்பளம் ரொம்ப கம்மி அதுக்கே மூணு தலைமுறை பற்றி விசாரிப்பார்கள்
இது எனக்கு நல்லா தெரியும் ஒரு கார் டிரைவரா இருக்கரதுக்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்டினால் அதிகம் சம்பாதிக்கலாம். அல்லது சொந்தமாய் டோண்டு டேக்ஸி (கால் டேக்ஸி). நம்பலான்னா அடுத்து ஆட்டோல போகும்போது டிரைவரிடம் ஏன் கார் ஓட்ட கத்துகிட்டு எங்கனா டிரைவர் வேலைக்கு போகவேண்டியதுதானேன்னு கேட்டுபாருங்க
சரவணன்
டோண்டு சார் நாளை கேள்விபதில் பகுதியில் சேர்த்துகொள்ளவும்..
தங்கள் கிண்டி காலேஜ், அண்ணா யுனிவர்சிடியில் படிக்கும்போது நடந்த சுவையான சம்பவம் ஒன்று...
சரவணன்
(நானும் அங்கதான் படிச்சேன் அதான் காலேஜ் பாசத்துல வந்து உங்க பதிவுல கும்மியடிக்கறேன்)
//மருத்துவத்தை இலவசமாக.. ஏன் வழங்ககூடாது சார்.//
தாரளமா வழங்குங்க சார்.. ஆனா என்ன மாதிரி ஏழைங்க கஷ்டபட்டு உழைத்து கட்டின வரி பணத்தில் இதெல்லாம் செய்வது கொஞ்சம் ஓவரா தெரியுது.
இலவசமா மருத்துவ சேவை வேண்டும் என்றால் சாயி பாபா ஆஸ்பத்திரியில் எல்லாமே இலவசம்.
கண் அபரேஷன் செய்யணுமா அரவிந்த் கண் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசம்.
அங்கு போய் சேவைகளை பெற்று கொள்ளவும், என் வரி பணத்தை கேட்காதீர்கள், சரியா..
//இது எனக்கு நல்லா தெரியும் ஒரு கார் டிரைவரா இருக்கரதுக்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்டினால் அதிகம் சம்பாதிக்கலாம்.//
அது சரி,
எனக்கு தெரிஞ்சி முக்காவாசி acting டிரைவர்கள், காலை அய்யாவை அபீஸ் டிராப், பிள்ளைகளை ஸ்கூலில் டிராப் செய்துவிட்டு பிறகு சாயந்திரம் பிக்-அப் அத்தோட வேல முடிஞ்சுது.
ஆனா ஆட்டோ ஓட்டுறது சும்மா கிடையாது, கஸ்டமர் கூப்ட இடத்துக்கு போகணும், போலீஸ் தொல்லை, சேட்டுக்கு மாசமான பைசா ஒழுங்க கொடுக்கணும் இல்லனா வண்டி சீஸ், இதை தவிர வண்டி மைன்டெய்ன் பண்ணனும்.
acting டிரைவர்களுக்கு இந்த தலைவலி கிடையாது, அதான் கம்மி சம்பளம்
சாரு நிவேதிதாவின் இந்தப் பதிவுகள் பற்றிய தங்கள் கருத்து என்ன ?
http://www.charuonline.com/may2008/pani.html
http://www.charuonline.com/may2008/pani2.html
India's Futures Ban Is No Answer to Inflation: Andy Mukherjee
Commentary by Andy Mukherjee
May 13 (Bloomberg) -- The Indian government has shown just how inept, illiberal and devoid of all logic its strategy to combat inflation really is.
India's decision last week to suspend futures trading in potatoes, chickpeas, rubber and soybean oil didn't come as a huge surprise; it was, nonetheless, a big disappointment.
There doesn't seem to be a compelling reason for the government to take such a heavy-handed step for products that together account for less than 1 percent of the inflation index.
And even if one accepts at face value the government's claim that it's trying to cool speculative fever in essential items, one can't fathom why its wrath had to fall on the humble spud: The spot price of potatoes has declined 27 percent this year, according to Multi Commodity Exchange of India Ltd., one of the bourses where contracts on the produce were traded.
The expansion of the ban on agricultural commodities -- contracts in rice, wheat and lentils were halted last year -- was all the more egregious because the government had no justification for taking such a step.
It had set up a committee to investigate whether futures trading in commodities had amplified price volatility.
The panel, which submitted its report last month, didn't find any evidence to settle that question one way or the other.
Yet the government went ahead with its decision and halted trading for at least four months.
Invisible Loss
With the annual inflation rate at 7.6 percent, the highest in 3 1/2 years, the Indian government is desperate for solutions.
But steps such as prohibiting exports of agricultural goods, or thwarting their domestic price-discovery by scrapping futures, do more harm than good. What's destroyed in the process of suppressing free markets is often invisible but is nonetheless extremely valuable.
Take potatoes. The futures were starting to gain popularity among large retail chains that were using the contracts to take delivery of good-quality produce that had been stored well.
This could have potentially had a very large benefit.
In India, the bulk of the potato crop is harvested between January and March, just before the onset of the summer months. If the crop is left on the farm, in so-called rustic storage, a fifth of it goes bad within 90 days.
It's a dead loss to the grower.
Potato Storage
And yet, in the absence of futures trading, the potatoes grown by small farmers in northern India didn't often end up in proper warehouses. That's because the farmer weighed the costs and benefits of cold storage against the unknown risk of a glut and the subsequent collapse in the future price of the commodity.
Nor did the cold storage have much incentive to chase the business of small growers: In the event the price of the potatoes held in storage crashed, these farmers might not even have money to pay for warehousing and reclaim their produce.
Contracts that allowed the future price to be locked today made storage a less risky proposition for both the farmer and the warehouse. That, in turn, held the promise of improving the economics of the cold-storage business, leading to more entrepreneurs investing in creating new capacity.
The ban on trading will disrupt this virtuous cycle, which was only beginning to make an impact and would have been strengthened with a law that aims to make warehouse receipts widely acceptable as collateral.
Ineffective, Counterproductive
With elections due to be held in the next 12 months, it's very important for Indian politicians to be seen to be doing something. It doesn't matter how ineffective or counterproductive that ``something'' happens to be.
Prices of kerosene and liquefied petroleum gas, which are directly controlled by the government, haven't been raised since April 2002 and November 2004, respectively. Nor has the government allowed refiners to pass on the full cost of record- high crude-oil prices to motorists.
None of this has come for free. The Indian government has piled up substantial future liabilities in its bid to keep domestic prices of fuel, food and fertilizers affordable.
These so-called off-budget expenditures are now so large that adding them to the fiscal deficit of the federal and state governments would raise the latter to 9.3 percent of gross domestic product in the year ending March 31, 2009, from an estimated 5.3 percent in the previous 12 months, according to Morgan Stanley economist Chetan Ahya in Singapore.
A budget-deficit-to-GDP figure of 9.3 percent wouldn't be very different from the 9.6 percent level of five years ago and would constrain the government's ability to lift economic growth by boosting public spending should private investments slow down.
Controlling inflation doesn't mean shielding people from having to face the true economic cost of their current consumption. Nor does it mean telling farmers what they can sell, when and to whom. None of this really helps the domestic poor, whose interests could be much more efficiently safeguarded with transparent, well-targeted cash subsidies.
Designing such a mechanism takes a little bit of work; banning futures trading is as easy as it is weird.
//Anonymous said...
.. ஆனா என்ன மாதிரி ஏழைங்க கஷ்டபட்டு உழைத்து கட்டின வரி பணத்தில் இதெல்லாம் செய்வது கொஞ்சம் ஓவரா தெரியுது.
.. என் வரி பணத்தை கேட்காதீர்கள், சரியா..//
வணக்கம் வரி கட்டும் நண்பரே,
உங்கள் வரிப்பணத்தில் இலவச மருத்துவம் வேண்டாம் என்கிறீர்கள், வரிகட்டும் உங்களுக்கு இதை எதிர்த்து கேட்க உரிமையுண்டு என்கிறீர்கள் சரி நீங்கள் சொல்வது போல வந்தாலும் நான் சமாதானத்தை விரும்புபவன் என் வரிப்பணத்தில் அரசாங்கம் பீரங்கி வாங்ககூடாது என்று நான் சொல்லுவேன் யாரவது ஒத்துகொள்வார்களா ?
உங்கள் வரிப்பணம் இலவச மருத்துவத்துக்கு ஏழைகளுக்கு வேண்டாம் என்கிறீர்கள். உங்கள் வரிப்பணம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்து விட்டு ஜெயிலில் இருப்பவனுக்கு சோறு போடுகிரதே பரவாயில்லயா இல்லை ஜெயிலே வேண்டாம் அவர்களை திருத்த ராம கிருஷ்ண மடம், அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற இடங்கள் உள்ளது என்பீர்களா. நமது வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறதுன்னு தெரியுமா சார்.
அமெரிக்க மக்களுக்கே ஈராக் யுத்தம் பிடிக்கவில்லை இருந்தும் அவர்கள் வரிப்பணம் கொண்டே அவர்கள் விருப்பத்துக்கு மாறாக யுத்தத்தை அரசு நடத்துகிறதே அதற்கு என்ன சொல்லுவீர்கள்.
இலவசம் இயலாதவர்களுக்கு மட்டுமே என்பது என் கருத்து, யாருக்கும் வேண்டாம் என்றால் என்ன சார் சொல்ரது நான்
சரவணன்
//அரசாங்கம் பீரங்கி வாங்ககூடாது என்று நான் சொல்லுவேன் யாரவது ஒத்துகொள்வார்களா ?//
நான் ஒத்துகிறேன்..
//அவர்களை திருத்த ராம கிருஷ்ண மடம், அரவிந்தர் ஆஸ்ரமம்//
மொதல்ல இந்த அசிரமத்துள்ள இருக்கிற போலி சாமியார் எல்லாத்தையும் புடிச்சி ஜெயில்ல போடணும்.
//இலவசம் இயலாதவர்களுக்கு மட்டுமே என்பது என் கருத்து//
இலவசம் என்று வந்துவிட்டால் அது ஒழுங்காக போய் சேராது, அதற்கான செலவு தென்டம்தான்
சார் இவளோ பேசும் நீங்கள் எப்பாவது அரசு அளிக்கும் இந்த இலவச படிப்பு, மருத்துவம் சேவையை அனுபவிதுள்ளீர்களா..
சார் இயலாதவர்களுக்கு மட்டும் இலவசமா கொடுக்கலாம், ஆனால் இதில் பணத்தை கொடுப்பதோடு அரசு வேலை முடியணும்.
அத வுட்டுபுட்டு ஆஸ்பத்திரி கட்டுறேன் , ஸ்கூல் நடத்துறேன் வந்துடா... அது கொரங்கு கையில் கொடுத்த பூ மாலை கதை தான்.
மேலும் அரசு பஸ் வுடுவது, ஆஸ்பத்திரி கட்டுவது என்று போவதால் தான் அதன் அடிப்படை கடமைகளை ஒழுங்காக செய்ய முடியவில்லை.
என் நம்ம நாடு உருப்படாம இருக்குன்னு புரியுதா, அரசு தன் வேலை செய்யாமல் கண்டதையும் செய்து கொண்டிருக்கிறது, அதான்..
Post a Comment