இது சம்பந்தமாக நான் இட்ட எனது முந்தைய பதிவை தொடர்வதாக முதலில் எண்ணம் இல்லை. ஆயினும் அப்பதிவு கிளப்பிய எண்ணங்கள் மேலும் பதிவுகளை போட தூண்டுகின்றன ('கிழிஞ்சுது கிருஷ்ணகிரி' என கத்தும் முரளி மனோஹர் சற்றே அமைதி காக்கட்டும்).
பகவத் கீதையை பார்த்தனுக்கு உபதேசிக்கும் கிருஷ்ணர் கூறுகிறார். "அருச்சுனா, நீயும் நானும் இதற்கு முன்னால் எண்ணற்ற பிறவிகள் எடுத்துள்ளோம். நம்மிருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், உனக்கு அவற்றில் ஒன்று கூட ஞாபகம் இல்லை, எனக்கு எல்லாமே நினைவில் உள்ளன". முந்தைய பிறவி என்னும் கான்சப்ட் இந்து மதம், புத்த மதம் ஆகிய மதங்களில் ஒப்பு கொள்ளப்பட்ட தத்துவம். அது உண்மை என்பதால் நம்புகிறோமா, அல்லது அது தேவை என்பதால் அதை உறுதிபடுத்துகிறோமா என்பதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் பல கருத்துக்கள் உள்ளன. அவை இப்பதிவின் விஷயம் அல்ல.
இந்தியாவில் பல வெற்றிப் படங்கள் இந்த பூர்வ ஜன்ம ஞாபகத்தை வைத்து எடுக்கப்பட்டவை. நான் தரும் உதாரணங்கள் நான் பார்த்த அல்லது கேட்டு அறிந்த இந்தி மற்றும் தமிழ் படங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
மதுமதி
சமீபத்தில் 1960-ல் நான் இப்படத்தை பார்த்தபோது அப்படம் ஏற்கனவே ஒரு வருடம் பழையது. அப்போது ஹிந்தி படிக்க மட்டும் தெரியும், வேகமாக பேசினால் புரிந்து கொள்ள இயலாது. அப்படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு, ந்ல்ல பாட்டு, திலீப் குமார் வைஜயந்திமாலா நடிப்பு ஆகியவை. இன்னொரு காரணமும் உண்டு, அதுதான் பூர்வ ஜன்ம விஷயம். பல பிறவிகள் உண்டு என்பதை உறுதியாக நம்புகிறது இந்திய மனம். ஒரு பிறவியில் நிறைவேறாத ஏக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆத்மாக்கள் அலைகின்றன என்பதை நினைக்கும்போதே மயிர் கூச்செரிகிறது. அதே படத்தை நான் 1975-ல் பார்த்தபோது வரிக்கு வரி ரசித்து இன்னும் அதிகம் அனுபவிக்க முடிந்தது. முந்தைய பிறவியில் காதலி முதலில் இறந்து, பிறகு அவளது ஆவி காதலனையும் தன்னுடன் மரணத்துக்குள் அழைத்து செல்கிறது. அடுத்த பிறவியில் காதலன் தன் மனைவியை வரவேற்க ரயில் நிலையம் செல்லும் சமயத்தில் புயலில் சிக்கி தன் நண்பனுடன் ஒரு மாளிகையில் அடைக்கலம் புக, அங்கு அவனுக்கு முந்தைய ஜன்மம் ஞாபகத்துக்கு வர, தன் நண்பனுக்கு அக்கதையை கூறுகிறான். கடைசியில் இன்னொன்றும் கூறுகிறான், இந்தப் பிறவியில் அதே காதலிதான் அவனுக்கு மனைவியாக வந்திருக்கிறாள் என்று. ரயில் வந்ததும் அவளை பார்த்து, அணைத்து தங்களது பந்தம் ஜன்ம ஜன்மமாக தொடர்கிறது என்று கூறுகிறான். அதற்குள் குழந்தை அழும் சத்தம் கேட்க, அவன் மனைவி நாணத்துடன் ரயிலிலேயே பிரசவம் ஆகிவிட்டது எனக்கூறுகிறாள். காமெரா அக்குழந்தையின் கள்ளமற்ற முகத்தை ஜூம் செய்கிறது படமும் முடிகிறது. பிறகு அவன் அக்கதையை மனைவிடம் கூறுகிறானா, அவளும் அதை நம்புகிறாளா என்பதையெல்லாம் பார்ப்பவர்களின் ஊகத்துக்கே விட்டு விடுகிறார், கதையை சரியான இடத்தில் முடிக்க தெரிந்த படத்தின் இயக்குனர். இம்மாதிரி அக்கதையில் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய ஊகங்களே அம்மாதிரி படங்களின் வெற்றிக்கு ஒரு காரணம். "ஆ ஜா ரேஏஎ பர்தேசி", "கடீ கடீ மெரா தில் தட்கே", "ஜுல் மே சங் ஆன்க் லடீ", "தில் தடப் தடப் ரஹே ஹை"
கரண், அர்ஜுன்:
தொண்ணூறுகளில் வந்து சக்கைபோடு போட்ட படம். கரண், அர்ஜுன் என்னும் தன் இரு புதல்வர்கள் உள்ளூர் மிராசுதாரரின் ஆட்களால் கொல்லப்பட, சீறி எழுந்த அந்த தாய் தன் புதல்வர்கள் மீண்டும் பிறந்து வந்து தனக்காக பழி வாங்குவார்கள் என சபதம் செய்து அதே ஊரில் இருக்கிறாள், எல்லோரது கேலியையும் பொறுத்து கொண்டு. அதே மாதிரி பிள்ளைகள் பிறந்து வந்து தாய்க்காக பழி வாங்குவதுதான் கதை. ராக்கி, சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரது அமர்க்களமான நடிப்பு ஆகியவை கதையின் ப்ளஸ் பாயிண்டுகள்.
மிலன்:
சமீபத்தில் 1967-ல் வந்த படம். நான் அதை 1969-ஆம் ஆண்டுதான் பார்த்தேன். 'நாம் இருவரும் யுகயுகமாக உள்ளங்கள் ஒன்றுபடும் இப்பாட்டை பாடிக் கொண்டே வருகிறோம்' என்னும் பொருள் வரும் 'ஹம்தும் யுக் யுக் மே தோ கீத் மிலன் கே காதே ரஹேன் ஹைன்' என்ற அந்தப்பாடலுடன் கம்பீரமாக படம் ஆரம்பிக்கிறது. நாயகன் நாயகி திருமணத்துக்கு பிறகு தேனிலவின் போது கங்கையில் படகில் செல்லும் தருணம் கதாநாயகனுக்கு முந்தைய பிறவி ஞாபகத்துக்கு வர, கதை விறுவிறு என்று செல்கிறது. 'மூகமனசுலு' என்ற பெயரில் சாவித்திரி நாகேஸ்வரராவ் நடித்த இந்த தெலுங்கு படத்தின் ஹிந்தி மொழியாக்கம்தான் மிலன். நான் அதைத்தான் பார்த்தேன். இதிலும் கதாநாயகனும் நாயகியும் ஒன்று சேராமல் மரணிக்க, அடுத்த பிறவியில் சேர என பார்வையாளர்களின் மனதுக்கு இதமான முறையில் அளிக்கப்பட்ட இப்படம் வெற்றியடைந்ததில் ஆச்சரியமே இல்லை. 'சாவன் கா மஹீனா' பாடலை கேட்காத செவியும் செவியோ. சுனில் தத் மற்றும் நூதன் அமர்க்களமான நடிப்பு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட். அதே படத்தை சாவித்திரி 'பிராப்தம்' என்ற பெயரில் தயாரித்து படம் வெற்றியடையாது ஊற்றிக் கொண்டது அவர் வாழ்க்கையில் மாறாத சோகமே.
The re-incarnation of Pter Proud:
மறுபிறவி கான்சப்டை வைத்து வந்த ஆங்கிலப்படம். பாவம் அதன் தயாரிப்பாளர். ஒரு சராசரி இந்தியத் தயாரிப்பாளர் அனாயாசமாக முடித்திருக்கக் கூடிய கதையை நம்பும்படி காட்ட ரொம்பவே கஷ்டப்பட்டார். ஆனால் அதன் ஹிந்தி மொழியாக்கம் அமர்க்களமான வெற்றி பெற்றது. ரிஷி கபூர், சிமி கரேவால், டீனா முனீம் நடித்தது. "ஓம் சாந்தி ஓம்" என்னும் பாடல் பெரிய ஹிட். படம் சமீபத்தில் 1985-ல் வந்தது. முந்தைய பிறவியின் அநீதியை இப்பிறவியில் வந்து சரி செய்யும் இக்கதை இந்திய பார்வையாளர்களது ஏகோபித்த பாராட்டை பெற்றது. என்ன, படத்தின் பெயரை மறந்து விட்டேன். யாராவது தெரிந்தால் கூறவும். (அப்படத்தின் பெயர் KARZ என்று எழுதி என் நினைவை தூண்டிய செய்யார் தமிழ் அவர்களுக்கு என் நன்றி). ஆனால் அவர் சொன்ன 'நெஞ்சம் மறப்பதில்லை'ன் கதை 'மதுமதியின்' கதை அல்ல. அந்த ரேஞ்சில் இப்படம் இருந்தது என்று கூறினால் மறுப்பு இல்லை).
தமிழில்? எனக்கு தெரிந்து 'நெஞ்சம் மறப்பதில்லை' இருக்கிறது, ஆனால் நான் பார்க்கவில்லை. சில பாடல்கள் மட்டும் கேட்டுள்ளேன். ஆகவே அது பற்றி நான் எழுதினால் சரியாக இருக்காது. பிராப்தம்? மிலன் இருக்கும்போது அது ரிஜக்டட்.
நான் உணர்ந்தவரை பூர்வ ஜன்ம படங்கள் வெற்றி பெறும் காரணங்கள் சில: 1. அந்த கான்சப்ட் நம் ரத்தத்தில் ஊறியுள்ளது. 2. ஒரு பிறவியில் கெட்டது நடந்தால் அடுத்த பிறவியில் அதை சரி செய்கிறார்கள். 3. மரணத்துக்கு பின் என்ன என்ற பயத்தை அது சுமாராக போக்குகிறது.
இந்த வரிசையில் இன்னும் பதிவுகள் வரக்கூடும். முரளி மனோகர், மன்னித்துவிடு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
28.05.2008 காலை சேர்க்கப்பட்டது:
திடீரென நினைவுக்கு வந்தது. சந்திரமுகியை எப்படி மறந்தேன்? மேலே குறிப்பிட்ட படங்களைப் போல நேரடியான பூர்வ ஜன்ம கதை இல்லாததால் இதை நான் முதலில் சேர்க்காமல் விட்டேன் என நினைக்கிறேன்.
ஆனால் யோசித்து பார்த்ததில் இதையும் சேர்த்திருக்க வேண்டும். என்ன ஒரே ஒரு பாத்திரத்துக்குத்தான் பாதிப்பு பழைய கதையால் வருகிறது. அதுவும் ஜோதிகாதான் முற்பிறப்பில் சந்திரமுகி எனக்கூட கூறவில்லை. ஆவியாக அலைந்த சந்திரமுகி ஜோதிகாவின் உடலில் புகுந்தது என கதை போகிறது. இருப்பினும் ஒரிஜினல் சந்திரமுகியின் சோகம் மனதை தாக்குகிறது. அவளது தாபத்தை ஜோதிகா 'ரா ரா சரசுக்கு ரா ரா' என்ற பாட்டில் தனது கண்களாலேயே அழகாகக் காட்டுகிறார். ரஜனி நடித்த அந்த பாத்திரம் புதுமுறையில் அந்த ஆவியை சாந்தப்படுத்துகிறார். அதுவும் திருப்தியடைந்து சென்று விடுகிறது. ஆக, எல்லோருக்கும் இதில் திருப்தியே.
இங்கு இன்னொரு விஷயம் கூற வேண்டும். சந்திரமுகி ஏற்கனவே சமீபத்தில் 1978-ல் "ஆயிரம் ஜன்மங்கள்" என்னும் பெயரில் வந்து சுமாரான வெற்றி பெற்றுள்ளது. ஜோதிகா ரோலுக்கு லதா, அவரை பீடிக்கும் ஆவி ரோலுக்கு பத்மப்பிரியா, பிரபு ரோலுக்கு விஜயகுமார், ரஜனி ரோலுக்கு அதே ரஜனியே. இதுவும் உண்மையாக பார்த்தால் பூர்வ ஜன்ம கதை இல்லைதான். பத்மப்பிரியா விஜயகுமாரின் முன்னாள் காதலி. அவர் கொலை செய்யப்படுகிறார். அவரது ஆவி லதாவின் உடலில் புகுந்து கொள்கிறது என்று கதை போகிறது. இங்கும் ரஜனி வந்துதான் ஆவியை விரட்டுகிறார். என்ன, இக்கதையில் ஆவி மறுபடியும் அலைகிறது. அந்த விஷயத்தில் சந்திரமுகி ரொம்பவும் மேல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
21 comments:
தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த "எனக்குள் ஒருவன் " படத்தை விட்டுவிட்டீர்களே டோண்டு ராகவன் சார்.
கமலஹாசனை முற்பிறவியில் விஞ்ச் லிருந்து கீழே தள்ளி கொலை செய்த சத்யராஜை அதே முறையில் அடுத்த ஜென்மத்தில் பழிவாங்குவது போல் பட மெடுத்தார்கள்.ஆனால் படத்தின் கமர்சியல் வெற்றி பற்றி தெரியவில்லை.
ஆனால் பாடல்களும்,படபிடிப்பும் பிரமாதம்.
1.மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவர்கள் நம்பாததன் காரணம் என்னாவாயிருக்கும்?
2.எகிப்தியர்கள் நம்புவதால் தான் பிரமிடுகள் தோன்றின சரிதானா?
3.தனது வாழ் நாள் முடிவதற்குள் அகால மரணமடைவோர் ஆவியாய் அலைவதாக காலம் காலமாக கதை கள் சொல்லப் பட்டனவே.ஆவியை பார்த்ததாக சொல்வது எல்லாம் கடைசியில் கட்டுக் கதையாகி விடுகிறதே.
4.கேரளா மாந்திரிகர்கள் கெட்ட ஆவிகளை வைத்து செய்வினை செய்வதாக செய்திகளில் உண்மை இருக்கிறதா?
5.20 வருடங்களுக்கு முன்னால் " குரளி வித்தை" தெருசந்திப்புகளில் நடைபெறுமே அதை இப்போது காணோமே?(வா இந்தப் பக்கம்,வந்தால் சொல்லுவியா?"
கமலஹாசன் படம் பற்றி நான் கேள்விப்படவில்லை. இப்பதிவு எழுதும்போது எவ்வளவொ உயற்சித்தும் தமிழ் உதாரணங்கள் ரொம்ப கிட்டவில்லை.
மற்றவர்கள் பின்னூட்டங்களில் தங்களுக்கு தெரிந்த படங்களை கூறட்டும்.
ஒரு ஹிந்தி படம் ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி நடித்தது, இன்னொரு ஹிந்தி படம் வித்யா சின்ஹா சஞ்சீவ் குமார் நடித்தது. இரண்டின் பெயரையும் மறந்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கடுமையான பணிகளிக்கிடையே உடனுக்குடன் பின்னுட்டங்களுக்கு தங்களின் அறிவார்ந்த ரெஸ்பான்ஸ்க்கு
நன்றி.
உலகை பயமுறுத்திடும் கச்ச எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வெப்பமயமாதல் பற்றி ஒரு பதிவு பலரின் சந்தேகங்களை நிவர்த்தி
செய்ய எதுவாகும்.இது ஒரு விண்ணப்பம்.
The name of the Hindi movie (Rishi Kapoor, Simi) is 'KARZ'. There is a wonderful Tamil movie in this list : Nenjam Marappadillai, which is equivalent to Madhumadhi of Hindi
மிக்க நன்றி செய்யார் தமிழ் அவர்களே. படத்தின் பெயரை தகுந்த இடத்தில் புகுத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்( and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?
2.கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?
3.உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்டும் ஏழைகள் கையில் தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை
காப்பாற்ற முயலவேண்டாமா?
4.ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொலவது நல்லதற்க?
5.இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு
வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கனக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?
6.பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகிறன(பொருளாதார அளவுகோல்- ஆண்டு வருமான கட்டுப்பாடு)
7.கொள்கைமுழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?
8.m.g.r அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
9.நகரங்களில் கூட நல்ல முற்போக்கு
சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடைக்கு விட தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?
10.உண்மையான சமத்துவ புரம் என்று கான்போம்?
1.பெட்ரோல் basic price 1 லிட்டர் ரூபாய் 30 தான் எனவும்,மத்திய,மாநில அரசுகளின் பலவித வரிகளால் தான் இந்த உச்ச விலை உயர்வு என்கின்றபோது,நிதிஅமைச்சகம் வரியின் சதவிகிதத்தை ஒரு சிறு சதவிகிதம் கூட குறைக்க மறுப்பதில் தார்மீகம் இருக்கிறதா?
2.பெட்ரோல் கம்பெனிகளின் வீண் செலவினங்களை குறைக்க முயலாதது ஏன்?
3.பொதுத்துறை நிறுவனங்ளிலே சாதரன கடை நிலை உழியரின் சம்பளம் கூட ஆயில் கம்பெனிகளில் மிக அதிகம் என்பது உண்மையா?
4.வேலைநிறுத்தம் எணும் ஆயுதம் கொண்டு தங்கள் சம்ம்பள விகிதங்களையும்,பிற சலுகைகளையும் மிக அதிகமாக உயர்த்திகொள்வதும் பற்றாக் குறைக்கு ஒரு காரணமா?
5.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16-17 வரை கூடினால் பனவீக்க விகிதம் 10 % தாண்டிவிடுமா?
yesterday I have received one sms from my friend about the world destroy on 21.12.2012.This is accepted by nasa scientists .sun wont riseup from 4 days before to the above date. for more information please go to www.2012videos.com
-------------------------------
Short film about the Mayan prediction for
2012 and some of there discoveries in
science.
9 minutes
--------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------
Mayan 2012 Prediction.
Terence Mckenna interview clip about
Timewave Zero in relation to
Nostradamus.
7 minutes
Terence Mckenna: 2012 Timewave Zero
TV Show Sightings
Solar & Mayan signs of the end of the
age.
The segment of the Mayan calendar is
from the TimeLife 'Lost Civilization'
series.
3 minutes
Signs of the End!
Decoding The Past
Mayan Doomsday Prophecy
Originally aired on the History Channel
44 minutes
--------------------------------------------------------------------------------
Mayan Doomsday Prophecy
On December 21st, 2012 A.D. the ancient Mayan Long Count Calendar comes to an abrupt end.
There are many scientific theories and historic prophecies that claim this will be the end of times.
What is really going to happen at the end of the Mayan calendar? Only time will tell. Find the best
online videos, downloads and DVDs about 2012 only at www.2012Videos.com
2012 Downloads
----------------------------
இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா.?
//இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா?//
அது கல்கி அவதாரம்.
இந்த மாதிரி ஆரூடங்களை பல கேட்டாகி விட்டது. இந்த உரல்களுக்கு போய் பாருங்கள். http://www.religioustolerance.org/end_wrl1.htm
http://www.religioustolerance.org/end_wrl2.htm
சமீபத்தில் 1960-ல் ஜூலை 14-ஆம் தேதி உலகம் முடியப் போகிறது என்று 1960 ஆரம்பத்தில் ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டு திரிந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 5-ஆம் தேதி எட்டு கிரகங்கள் ஒரே கோட்டில் வருவதால் உலகமே க்ளோஸ் என்று நம்மூர் ஜோசியர்கள் காசு பார்த்தார்கள்.
இதெல்லாம் பார்த்து அலுத்துவிட்டது.
1960 ஜூலை 14-க்கு பிறகு ஒரு நாள் (அப்போது 10-ஆம் வகுப்பு படித்து வந்தேன்) ஆங்கில வகுப்பில் Most probably என்னும் சொற்றொடரை உபயோகித்து ஒரு வாக்கியம் அமைக்க ஆசிரியர் கூறினார். நான் உடனே பவ்யமாக எழுந்து நின்று, Most probably the world will end tomorrow என்று கூறியதற்காக பெஞ்சு மேல் நிற்கவைக்கப்பட்டு, ஆசிரியரிடம் அடி வாங்கி, பிறகு வகுப்புக்கு வெளியே அனுப்பப்பட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா?//
அது கல்கி அவதாரம்.
இந்த மாதிரி ஆரூடங்களை பல கேட்டாகி விட்டது. இந்த உரல்களுக்கு போய் பாருங்கள்//
தவறை திருத்தியதற்கு நன்றி.
விளக்கத்திற்கும் நன்றி.
கடசியில் புலி வருது புலி வருது கதை ஆகிவிடக்கூடாது.
அமெரிக்கா நாசா விஞ்ஞானிகளெ ஒத்துக் கொள்வதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது ( please see malaimalar dated 16,5.2008)
---------------------------
எல்லாம் அவன் செயல். கோவை சுப்பையா சாரும் இதே கருத்தை தான்
சொல்லியுள்ளார்கள்.
www.classroom2007.blogspot.com
ஜோதிடரின் வாக்கு பொய்க்காதே
பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது. December 21, 2012 அன்று உலகம் அழியாது. அப்படி அழிந்தால், என்னை December 22, 2012 அன்று இதே பின்னூட்டப் பெட்டியில் வந்து சாடும் உரிமையை மனமுவந்து அளிக்கிறேன். :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது. December 21, 2012 அன்று உலகம் அழியாது. அப்படி அழிந்தால், என்னை December 22, 2012 அன்று இதே பின்னூட்டப் பெட்டியில் வந்து சாடும் உரிமையை மனமுவந்து அளிக்கிறேன். :))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றி.
இப்படி உலாவரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததற்கு நன்றி டோண்டு ராகவன் ஐயா அவர்களே.
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்கதென்பார் கிடைத்துவிடும்
//ஆவியாக அலைந்த சந்திரமுகி ஜோதிகாவின் உடலில் புகுந்தது என கதை போகிறது. //
அந்த காட்சி ஆவி நம்பிகையாளர்களுக்காக, சந்திரமுகியின் அஸ்தி வைத்திருக்கும் பானை உடைவது போல் காட்டப்பட்டது, ஆனால் கதைபடி ஜோதிகாவிற்கு எந்த கதையை படித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே கற்பனை செய்து கொள்ளும் குணம் உண்டு,
அது படத்திலும் காட்டப்பட்டது,
அந்நியன் படத்தில் மாறி மாறி வரும் பாத்திரங்கள் போல தான், சந்திரமுகி நேரங்கெட்ட நேரத்தில் வருவது,
ஆமாம் (உண்மையான) சமீபத்தில் நீங்கள் ஒரு படமும் பார்க்கவில்லையா?
வால்பையன்
//ஆமாம் (உண்மையான) சமீபத்தில் நீங்கள் ஒரு படமும் பார்க்கவில்லையா?//
இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எல்லாம் அவன் செயல். கோவை சுப்பையா சாரும் இதே கருத்தை தான்
சொல்லியுள்ளார்கள்.
www.classroom2007.blogspot.com
ஜோதிடரின் வாக்கு பொய்க்காதே//
ellaam poi kuppaigal.
komanakrishnan
Hindi-yil "Karz" endru vandha padamthan thamizhil satru mattrangaludan Kamal naditha "Ennakkul Oruvan" padam.
- Seenu
/// 1.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்( and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?
2.கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?
3.உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்டும் ஏழைகள் கையில் தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை
காப்பாற்ற முயலவேண்டாமா?
4.ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொலவது நல்லதற்க?
5.இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு
வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கனக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?
6.பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகிறன(பொருளாதார அளவுகோல்- ஆண்டு வருமான கட்டுப்பாடு)
7.கொள்கைமுழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?
8.m.g.r அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
9.நகரங்களில் கூட நல்ல முற்போக்கு
சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடைக்கு விட தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?
10.உண்மையான சமத்துவ புரம் என்று கான்போம்?///
இதுவும் மறுஜென்மம், ஆவி போன்றவைதானா?
நீங்க “குருவி” படம் பார்க்கலையா? ஒரு முறை பாத்தீங்கன்னா எந்த காலத்திலும் உங்கள் நினைவை விட்டு அகலாது. ஆனால் உங்க மனச திடப்படுத்திட்டு பாருங்க
"இது நம்ம ஆளு" என்கிற அருமையான படத்தை மறந்து விட்டீர்களே!
what about your openien end of world
Post a Comment