மொக்கை போட்டு கொஞ்ச நாளாச்சு. ஆகவே இந்தப் பதிவு.
தோழர் (அணில்குட்டி, பீட்டர் தாத்ஸ் புகழ்) கவிதா அவர்கள் திரும்ப பதிவுகள் போட ஆரம்பித்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பழைய பதிவுகளை பார்க்க இயலுவதும் மகிழ்ச்சியே. ஆனால் அவற்றுக்கான பின்னூட்டங்கள் லேது, அத்துடன் புது பின்னூட்டங்கள் போடும் சான்ஸும் நஹீ.
அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நினைவுகள் அலைய, அவரை கதாநாயகியின் நினைவுகள் துரத்த, மனிதர் ஒரு மாதிரி டரியல் ஆகி விடுவார். அதில் அவ்வப்போது ஒரு டயலாக் விடுவார். முக்கியமாக ஊர்வசியுடன். "இப்ப அது இருந்தது, ஆனா இல்ல" என்ற மாதிரி ஒரு டயலாக். எல்லோரும் தலையைப் பிய்த்து கொண்டு ஓடுவர்.
இப்போது அது ஏன் ஞாபகத்துக்கு வரவேண்டும்?
எது எப்படியானாலும் அவரை மீண்டும் வலைப்பூ உலகுக்கு மனமார வரவேற்கிறோம். கவிதா வந்து விட்டார். அவர் பதிவுகள் வந்து விட்டன ஆனால் பின்னூட்டங்கள் காலி. அவர் இதற்காக ஏதேனும் செய்யும் எண்ணம் வைத்துள்ளார எனத் தெரியவில்லை.
ஆகவே, அது வரைக்கும், பதிவர் கவிதா திரும்ப வந்து விட்டார் ஆனால் வரவில்லை!
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்னறம் இலக்கிய விருது 2025
-
தன்னறம் இலக்கிய விருது 2025 எழுத்தாளர் சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு…
மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எழுத்தாளர் பா. வெங்கடேசன் கவிஞர் பரமேசுவரி
முன்னிருப...
1 week ago

2 comments:
பதிவர் கவிதா அவர்களே! வருக!! வருக!!
பதிவர் கவிதா திரும்ப வந்துவிட்டார் ஆனால் வரவில்லை! என்ன டோண்டு சார் கொழப்பறீங்க?!
ஜிம்ஷா அவர்களே,
அவங்க பதிவுக்கு சுட்டி கொடுத்திருக்கேனே. அங்கே போய் பாருங்க, புரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment