நான் தில்லியை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு, அதாவது 2000-த்தில் சுற்றுலா சம்பந்தமாக ஒரு டாகுமெண்டரி படம் எடுப்பதற்காக சென்றகுழுவில் தமிழ் ஸ்க்ரிப்ட் ரைட்டராகச் சென்றேன். நைனிதாலை சுற்றி டூரிசம் சம்பந்தமான ஷூட்டிங். இதில் நானும் சேர்க்கப்பட்டது மிகவும் எதேச்சையாகவே நடந்தது.
சுஜீத் என்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் இம்மாதிரி படப்பிடிப்பு நடக்கப் போவதை குறிப்பிட்டு, ஆவணப்படத்தை ஹிந்தியிலும் தமிழிலும் தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் ஸ்க்ரிப்ட்டுக்கு பொறுப்பேற்க முடியுமா என்றும் அவர் கேட்டார். விரும்பினால் நேரே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். போய்த்தான் பார்ப்போமே என்று சென்றேன். சுஜீத்தின் கூடவே இருந்தவர் பார்க்க ரொம்ப பரிச்சயமானவராகத் தோன்றினார். கிரிக்கெட் ஆட்டக்காரர் அஜய் ஜடேஜாவின் ஜாடை அப்படியே இருந்தது. அதை அவரிடம் கூறியபோது அவர் தான் அஜய் ஜடேஜாவின் சொந்த அண்ணன் என்பதை கேஷுவலாகச் சொன்னார். அவர் பெயர் அஜீத் ஜடேஜா. அவர் எனது வேலைக்காக குறிப்பிட்ட தொகை மிகவும் குறைவு. ஆகவே நான் மரியாதையாக மறுத்து விட்டேன். சரி வீட்டுக்கு கிளம்பலாம் என நினைத்தபோது ஒரு அழகான இளம் பெண் உள்ளே வந்தார். அவர்தான் ஹிந்தி வெர்ஷனுக்கான மாடல். அஜீத் ஜடேஜா இப்போது சற்றே விலையை அதிகரித்து சொல்ல சரி என்று ஒத்து கொண்டு விட்டேன். நான்கு நாள் நைனிதாலில் ஷூட்டிங். அப்பெண்ணும் வருகிறார் என்பதுதான் அதற்கு காரணம் என்பதைக் கூறவும் வேண்டுமோ.
இப்போது தமிழ் வெர்ஷனுக்கான மாடல் உள்ளே வந்தார். இவரும் அழகுதான், ஆனால் அந்த ஹிந்திப் பெண்ணின் அழகுக்கு ஈடில்லை. ஆனால் இவர் துறுதுறுவென செயல்பட்டது மனதைக் கவர்ந்தது. ஆனால் இந்தப் பெண்ணிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அதாவது இவர் தாய்மொழி தமிழ்தான், தமிழை நன்றாகவும் பேசினார். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதாம். என்ன கொடுமை பாருங்கள். தில்லியில் இது சர்வசாதாரணம். தமிழ் படிப்பவர்கள் குறைவுதான். தமிழ்க்குழந்தைகளும் ஹிந்தியையே படிக்கின்றனர். பேச மட்டும் இயலும், ஆனால் படிக்கத் தெரியாது.
இரண்டு நாள் கழித்து நைனிதாலுக்கு சென்றோம். காலையில் கிளம்பிய மினிவேன் மாலை 5.30 அளவில் நைனிதால் சென்றது. நடுவில் ஒரே ஒரு இடத்தில் சாப்பாட்டுக்காக நிறுத்தினர், அவ்வளவே. இந்த ஷூட்டிங் முழுக்கவுமே சாப்பாடு விஷயத்தில் ரொம்ப சிரமம் ஏற்பட்டது. இந்த ஜடேஜா அந்த விஷயத்தில் சரியான பிசுனாறி. சாப்பாட்டுக்கு பிரேக் விடவே ரொம்ப யோசித்தார். அது பற்றி மேலும் பிறகு கூறுகிறேன்.
ஹிந்தி தமிழ் இரண்டுக்கும் ஷூட்டிங் ஒவ்வொரு இடத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது. நைனிதாலில் உள்ள பல டூரிஸ்ட் இடங்களில் ஷூட்டிங் நடந்தது. ஹிந்தியில் மிக அழகாக காவிய நடையில் ஸ்க்ரிப்ட் தந்து அப்பெண் அமர்க்களமாக செய்தாள். ஆனால் தமிழில், அந்தோ, காவிய நடையில் எழுத நான் ஆசை கொண்டாலும் தமிழ்ப் பெண்ணுக்கு சுட்டுப்போட்டாலும் படிக்க இயலவில்லை. ஆகவே எல்லாவற்றையும் நான் ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு "மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என சூரியனை விளித்து நான் ஆங்கில லிபியில் எழுத வேண்டியிருந்ததுதான் கொடுமை. அப்படி கஷ்டப்பட்டு நான் எழுதியதை அப்பெண் கொச்சை நடையில் "முங்கில் இலைமெலே துங்கும் பனிநிரே" என்று காரே மோரே எனப் படிக்க வாழ்க்கையையே வெறுத்தேன். இம்மாதிரி ஒரு தலைமுறையே தாய் மொழியில் படிக்க இயலாது, அதே சமயம் ஆங்கிலம் ஹிந்தியிலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான திறமையின்றி திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் நிலை விசனத்தை அளித்தது. அது மேக்ரோ அளவில், ஆனால் உடனடி பிரச்சினை அப்பெண்ணை சரியாக தமிழ் உச்சரிக்க வைப்பதே. செந்தமிழை விடுங்கள் சாதாரண பேச்சுத் தமிழே தகராறுதான் படிப்பதற்கு, அதுவும் ஆங்கில லிபியில். என்ன செய்வது ஒத்து கொண்டாகி விட்டது, ஆகவே எப்படியோ செய்தேன் என்று வைத்து கொள்ளுங்கள்.
இந்தக் கஷ்டத்தைத் தவிர்த்து நைனிதால் நல்ல அனுபவங்களையே தந்தது. ஊரே நைனி ஏரியைச் சுற்றித்தான் அமைந்துள்ளது. நம்மூர் மதுரை வீரனைப் போல அங்கே கோலு தேவதா என்ற பெயரில் உள்ளூர் வீரனை நினைவுபடுத்தும் வகையில் அவருக்கு கோவில் எழுப்பியிருந்தார்கள்.
ஏற்கனவே கூறியபடி ஜடேஜா சாப்பாடு விஷயத்தில் ரொம்பவும் பிசுநாறியாக இருந்தார். ஆனாலும் நான் பாட்டுக்கு அவ்வப்போது ஏதோ வாங்கி சாப்பிட்டு கொண்டேன் என வைத்து கொள்ளுங்கள். ஆனால் அந்த மாடல்கள் ரொம்பவும் நொந்து போயினர். அதிலும் ஹிந்திப் பெண் முறைத்து கொண்டு சரியான சாப்பாடு தந்தால்தான் வேலை செய்யப் போவதாகக் கூறி ஜடேஜாவின் வயிற்றில் புளியைக் கரைத்தாள். இரு மாடல்களும் முறைத்து கொள்ள ஜடேஜா தன்னை திருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவர் கணக்கில் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம் எனக்கூற வேண்டியதாயிற்று.
நான்கு நாட்கள் கழித்து தில்லி திரும்பினோம். எடிட்டிங் வேலைகள் பாக்கி இருந்தன. பிலிம் ஓட்டிப் பார்த்தால் ரொம்ப ஏமாற்றமாக மிகத் தட்டையாக இருந்தது. ஜடேஜா சன் டீவி சேனலில் இடம் பிடிக்க எண்ணியிருந்திருக்கிறார். ஆனால் அதில் வெற்றியடையவில்லை. மேலும் தமிழ் மாடலின் தமிழ் பற்றாக்குறை நன்றாகவே தெரிந்தது. அப்போதுதான் நான் ஜடேஜாவிடம் தமிழ் படிக்கவும் தெரிந்த மாடலை செலக்ட் செய்திருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டினேன். அவரும் சோகத்துடன் ஒத்து கொண்டார். இரண்டு மூன்று முறை அவர் அலுவலகத்துக்கு சென்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பிறகு அவர் தமிழ் வெர்ஷனின் ஐடியாவை துறந்து விட்டதாகத் தோன்றியது. நானும் அப்புறம் செல்லவில்லை, அவரும் கூப்பிடவில்லை. வேலையை முடிக்காததால் பணமும் கேட்கவில்லை.
எது எப்படியானாலும் ஒரு பிராஜக்டை எப்படியெல்லாம் நடத்தக் கூடாது என்பதை ஜடேஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
12 hours ago
16 comments:
//அழகான இளம் பெண் உள்ளே வந்தார். அவர்தான் ஹிந்தி வெர்ஷனுக்கான மாடல். அஜீத் ஜடேஜா இப்போது சற்றே விலையை அதிகரித்து சொல்ல சரி என்று ஒத்து கொண்டு விட்டேன். நான்கு நாள் நைனிதாலில் ஷூட்டிங். அப்பெண்ணும் வருகிறார் என்பதுதான் அதற்கு காரணம் என்பதைக் கூறவும் வேண்டுமோ.//
அட சே, ஒரு 20-30 வருசத்துக்கு முன்னடி மொபைல் காமேராவும் இண்டேர்நெட்டும் கண்டுபிடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்..
Dear Sir,
Your best friend Mr. Cyber Brahma Kichu is writing about a matter of interest to you.
Have a look at: http://kichu.cyberbrahma.com/2008/05/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/
இந்த வாரத்திற்கான கேள்வி ஒன்று:
ப்ளாக்குகளில் நேரம் செலவழிக்கும் இச்சையை வேலை நேரத்தில் எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள்?
//இவர் தாய்மொழி தமிழ்தான், தமிழை நன்றாகவும் பேசினார். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதாம். என்ன கொடுமை பாருங்கள். தில்லியில் இது சர்வசாதாரணம். தமிழ் படிப்பவர்கள் குறைவுதான். தமிழ்க்குழந்தைகளும் ஹிந்தியையே படிக்கின்றனர். பேச மட்டும் இயலும், ஆனால் படிக்கத் தெரியாது.//
மருத்துவர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாசின் பிள்ளைகள் தில்லியில் படிப்பதற்கும் இந்த கமெண்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?!
//மருத்துவர் ராமதாசின் மகன் அன்புமணி ராமதாசின் பிள்ளைகள் தில்லியில் படிப்பதற்கும் இந்த கமெண்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?!//
பிறகு வந்த செய்திகளைப் பார்த்ததில் அவரது குழந்தைகள் தமிழ்நாட்டில் இருந்த போதே தமிழ் படிக்கவில்லை என அல்லவா தெரிகிறது. லோதி தமிழ் ஸ்கூலுக்கு தமிழ் மட்டும் படிக்க ஸ்பெஷல் கோச்சிங்கிற்கு அனுப்பியதும் ஒரு டேமேஜ் லிமிட்டிங் செயல்பாடாகத்தான் தோன்றுகிறது.
ஆனால் தில்லி வாழ் தமிழர்கள் விஷயம் அப்படியில்லை. வெளிப்படையாகவே செயல்பட்டு குழந்தைகளுக்கு அவர்கள் நலன் எனத் தாங்கள் கருதுவதை அளித்தனர். முக்கியமாக தாங்கள் அப்படி செய்து கொண்டு ஊராருக்கு வேறு மாதிரியாக எல்லாம் உபதேசம் செய்யவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்க்கையில் படிப்பினை எப்படியெல்லாம் வருதுன்னு பாருங்க!!!!!!
ஆமாம். இப்பெல்லாம் தட்டச்சுப்பிழை அடிக்கடி வருதுபோல இருக்கே.
சொல்றேன்னு கோச்சுக்கமாட்டீங்கதானே?
வயிற்றில் புளிக்கரைச்சல்:-)
//வழிற்றில் புளியைக் கரைத்தாள்//
இதைத்தான் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். ழ வும் ய வும் இம்மாதிரி இடம் மாறி வந்துவிடுகின்றன. அதற்கு காரணம் நான் உபயோகிக்கும் ஜெர்மன் தட்டச்சு பலகை. ஆங்கிலத் தட்டச்சு பலகை querty என்றால் ஜெர்மானியப் பலகை quertz. y & z மாற்றத்தால் இது அவ்வப்போது நடந்து விடுகிறது.
இப்போது பிழை திருத்திவிட்டேன், நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இவர் தாய்மொழி தமிழ்தான்...என்ன கொடுமை பாருங்கள்...//
அந்த பெண்ணை பற்றி நமது தமிழ் தொலைக்காட்சிகளுக்கு தெரிந்திருந்தால் உடனடியாக தொகுப்பாளினி வேலை கொடுத்திருப்பார்களே!
மிகவும் சுவாரஸ்யமான பதிவு. ஆங்கில லிபிக்கு பதிலாக நீங்கள் ஹிந்தி லிபி-ஐ கையாண்டிருக்கலாமே!
//மிகவும் சுவாரஸ்யமான பதிவு. ஆங்கில லிபிக்கு பதிலாக நீங்கள் ஹிந்தி லிபி-ஐ கையாண்டிருக்கலாமே!//
அதையும் செய்தேன். ஆனால் மாடல் தான் ஹிந்தி படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறி ஆங்கிலத்திலேயே தரச் சொன்னார்.
அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. முந்தைய ஆண்டுதான் பாஸ் செய்திருக்கிறார். அப்படியே லைன் மாறி மாடலின்ஙிற்கு வந்து விட்டார்.
ஹிந்தி கடைசியாக பத்தாம் வகுப்பில்தான் படித்திருக்கிரார். ப்ளஸ் டூவில் ஃபிரெஞ்சு எடுத்திருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
<==
எது எப்படியானாலும் ஒரு பிராஜக்டை எப்படியெல்லாம் நடத்தக் கூடாது என்பதை ஜடேஜாவிடமிருந்து தெரிந்து கொண்டேன்.
=))))
//ஆங்கிலத் தட்டச்சு பலகை querty என்றால் ஜெர்மானியப் பலகை quertz.//
ஆங்கிலத் தட்டச்சு பலகை QWERTY :-)
//ஆங்கிலத் தட்டச்சு பலகை QWERTY :-)//
தவறை சுட்டிக் காட்டி திருத்தியதற்கு நன்றி.
அன்புடன்,
நன்றியுள்ள வாலிபன் டோண்டு ராகவன்
டோண்டு சார் நம்ம அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் (இவர்களில் ஒரு பகுதியினர்)இதையேதான் கடைபிடிக்கிறார்கள் போல் தெரிகிறது.அதனால் தான் திட்டங்கள் எல்லம் திரிசங்கு சொர்க்கமாய் காட்சி அளிக்கிறதோ?
//ஆங்கிலத் தட்டச்சு பலகை QWERTY :-)//
தவறை சுட்டிக் காட்டி திருத்தியதற்கு நன்றி.
அன்புடன்,
நன்றியுள்ள வாலிபன் டோண்டு ராகவன்//
டோன்டு ஐயா!!
சைகிள் கெப்பில ஆட்டோ ஓட்டரிங்கலே :-))
நன்றியுள்ள வாலிபன்??? டோண்டு ராகவன்
it is 2much.
புதுவை சிவா
//சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டறீங்களே :-))//
நான் ஆட்டோ ஓட்டறது இருக்கட்டும், இது என்ன சாவகாசமா வரீங்க ந்டைவண்டியிலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment