குசேலன்:
1. What do you think of the judgement that M F Husain's painting are not obscene?
பதில்: பல தவறான முன்னுதாரணங்களை இது அனுமதிக்கும் என அஞ்சுகிறேன். கடவுளர்களை நிர்வாணமாக காட்டுவது அவமதிப்பு இல்லை என்று கூறுவது போன்ற தோற்றம் துரதிர்ஷ்டவசமானது. யாராவது முகம்மது, கதீஜா அம்மையார், ஏசு ஆகியோரையும் அக்கோலத்தில் படம் வரைவது கலைஞனின் சுதந்திரமே என வாதிடும் வகையில் இந்த தீர்ப்பு முன்னோடியாக அமைந்து விட்டால் குழப்பமே.
2. Did the judges see the paintings before giving the judgement?
பதில்: பார்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
3. The mainstream media while being happy for the victory of artistic freedom; they are not showing the actual paintings to the public. why don't they publish the paintings and show it to the people if it is not obscene?
பதில்: காட்டினார்கள் போலிருக்கிறதே. இப்போது இல்லை, சர்ச்சைகள் முதலில் எழுந்த அச்சமயத்தில். கராத்தே ஹுசைனி அம்மாதிரியான சரஸ்வதியின் படத்துக்கு அனாயாசமாக சில பிரஷ் வீச்சுகளில் அழகான புடவை போட்டு விட்டார். மேலும் எம். எஃப். ஹுசைனையும் நிர்வாணமாக வரைந்தார். இதை ஏனோ சுதந்திர உணர்ச்சி கொண்ட அந்த நிர்வாணக் கலைஞன் ரசிக்கவில்லை.
4. When nude paintings are not obscene because they are artistic, why are porn films being banned and its participants prosecuted, don't they have their own artistic freedom?
பதில்: அம்மாதிரியும் கேஸ் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கூடுதுறை:
1) பார்த்தால் இந்தவருடமே பொதுத்தேர்தல் வந்துவிடும் என்று தோன்றுகிறதே?
பதில்: மத்தியில் வரக்கூடும் என்று தோன்றுகிறது. குஜராத்தில் மட்டும் தில்லு முல்லு செய்து காங்கிரஸால் நிஜமாக ஜெயிக்க முடிந்திருந்தால் இடை தேர்தல் நிஜமாகவே வந்திருந்திருக்கும். கம்யூனிஸ்டுகள் காங்கிரசை அவ்வளவு வெறுப்பேற்றி வந்தனர்.
2)நக்மா போய் 10 வருடம் ஆகிவிட்டது உங்களின் லேட்டஸ்ட் ஜொள்ளூ யார்?
பதில்: சொன்னா போச்சு. இதுக்கென்ன காசா பணமா? நான் போன வருடம் என்னுடைய காரில் தள்ளிக் கொண்டு போன த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகிய அந்த 4 பேருமேன்னு வைத்து கொள்ளலாமே. :)))
3. எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயாவதி,அஸ்ஸாம் கணபரிஷத்,தெலுங்குதேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன். இது உருப்படியாகுமா???
ஸ்ஸப்பா, கனவே கண்ணைக் கட்டுதே. இப்படியெல்லாம் கனவு கண்டுண்டே போனாக்க, பேசாம காங்கிரசும் பி.ஜே.பி.யும் சேர்ந்து ஆட்சி அமைஞ்சாக்கூட ஆச்சரியப்படறதுக்கு இல்லைன்னுதான் சொல்லணும். நான் கூறுவதும் அப்படியொன்றும் நடக்க முடியாத விஷயம் இல்லை. சமீபத்தில் 1966-ல் மேற்கு ஜெர்மனியில் வழக்கமான எதிரிகளான சி.டி.யு/சி.எஸ்.யு. -ம் எஸ்.பி.டி.யும் சேர்ந்து மகா கூட்டணி அமைத்தது எனக்கு இன்னும் மறக்கவில்லை.
ஜயசங்கர் ஜகன்னாதன்:
1. சிலையை எறிந்தது கிருமிகண்ட சோழனா. இப்போ இருக்கும் சிலை எப்போ செய்தது?
பதில்: கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!
பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்! நன்றி ரவிசங்கர் கண்ணபிரான் (கே.ஆர்.எஸ்.) அவர்களது பதிவுக்கு.
அனானி (பிற்பகல் 03.01 மணிக்கு, 11.05.2008 அன்று கேள்வி கேட்டவர்)
1. மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் உயர் சாதிப்பிரிவினர் (பிராமணர் அல்ல))(மலையில் வாழும்)நடத்தும் போராட்டம் தேவையா?
பதில்: நான் இட்ட பொங்கி எழுங்கள் தலித் சகோதரர்களே என்னும் பதிவில் விவரமாக பதில் கூறியுள்ளேனே. சம்பந்தப்பட்ட உயர்சாதியினர் பார்வையில் அவர்தம் போராட்டம் தேவையே. அதே சமயம் கலைஞர் அரசு அவர்களிடம் பல்லிளித்து கெஞ்சுவதும் அவரைப் பொருத்தவரை ஓட்டு பெறும் அரசியலுக்கு தேவையே.
2. சாதிச் சுவர் இரட்டை குவளையை விட கொடியது அல்லவா-தங்கள் கருத்து என்ன?
பதில்: இதில் என்ன சந்தேகம்? மேலும் இது சிவில் வழக்காகக்கூட வரும் வாய்ப்புள்ளது. இவ்வளவு நாட்கள் பொதுவழியை மறித்த உயர்சாதியினர் கூட்டு தண்டனைகளுக்கு உரியவர்கள்.
3. திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இது போல் கோட்டை சுவர்(கோட்டைப் பிள்ளைமார்) இருந்ததாக சொல்வார்கள்.அது போல் தான் இதுவுமா?
பதில்: தெரியவில்லை. நான் இப்போது கூகளிட்டு பார்த்ததில் கோட்டை சுவருக்குள் அவர்கள் தாங்களாகவே விரும்பி வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. ஆனால் உத்தபுரத்தில் உயர் சாதியினர் தலித்துகளை சுவற்றுக்கு பின்னால் தள்ளினர். ஆக இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
4. 300 குடும்பங்களின் போராட்டம் தேவையான ஒன்றா?
பதில்: இல்லை. அதை அரசு கண்டுகொள்வதோ அதைவிட நிச்சயமாக வேண்டாத வேலைதான்.
5. இதுவும் அரசியலா?
பதில்: ஆமாம், ஓட்டு பொறுக்கும் அரசியல்.
6. கலைஞர் இந்த விஷயத்தில் நேர்மையாகத்தான் நடந்துள்ளார் போல் தெரிகிறது?
பதில்: நன்றாகவே வழிந்தார், சில நூறு ஓட்டுகளுக்காக. அதில் நியாயம் புதைகுழிக்கு போனதில் அவருக்கு கவலையில்லை எனத் தெரிகிறது.
7. அரசின் முயற்சிகள் பலன் அளிக்குமா?
பதில்: எது, ஆளும் கட்சிக்காக ஓட்டுகளை காபந்து பண்ணும் முயற்சிகளா?
8. ஜாதி அரசியல் வானவேடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா தமிழகம்?
பதில்: அப்படியெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தால் அரசியல் வாதிகளின் பிழைப்புக்கு என்ன வழி?
9. வழக்கம் போல் B.J.P இதில் தலையிட்டு தலித்துகளின் வாக்கு வங்கியை முழுவதும் இழக்க முயலுமா? (பிள்ளைமார் சமுகத்தினர் b.j.p உதவியை நாடுவதாக தகவல்(j.vikatan-14.5.08)
பதில்: பி.ஜே.பி.யினர் தமிழகத்தில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் உள்ளனர். பாவம் அவர்கள்.
10. புரட்சித் தலைவியின்(ஜெயலலிதா அம்மையார்)கருத்து என்ன என்றே தெரியவில்லை,ஏன்?
பதில்: கிட்டிமுட்டிப் போனால் திராவிடக் கட்சிகள் எல்லாமே உயர் சாதியினரிடம் பயப்படுவதாகத்தான் தோன்றுகிறது. ஜெயலலிதா மட்டும் எப்படி மாறி சிந்திக்க இயலும்?
அனானி (12.05.2008 அன்று மாலை 06.13-க்கு கேள்வி கேட்டவர்)
1. பிராமணர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதால் தான் திராவிட கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்பது உண்மையா?(பிராமணர் அல்லாத பிற உயர் சாதிப் பிரிவினர்,குறிப்பாக முதலியார்,பிள்ளைமார்,கார்காத்தார்,சமுகத்தார்.)
பதில்: பிராமணர்கள் ஓட்டு வங்கியில்லாத சிறுபான்மையினர். அவர்களை பத்திரமாக எதிர்க்கலாம். மற்ற உயர் சாதியினரை எதிர்க்க இயலாது. அவர்களிடம் கெஞ்ச வேண்டியதுதான். உத்தபுரத்தில் நடப்பது போல.
2. கேரள மன்னர்கள் பிராமணர்களின் முக்கியத்துவத்தை கட்டுபடுத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுகத்தை கேரளாவில் குடியமர்த்தினர் என்ற செய்தி உண்மையா?
பதில்: தெரியாது. நீங்கள் சொல்லித்தான் இதைப் பற்றி கேள்விப்படுகிறேன். கேரள தேசம் ஜாதி குழப்பங்களுக்கு பேர்போனது என்பதை மட்டும் அறிவேன்.
3. எட்டுவீட்டு பிள்ளைமார் செய்த கலகத்தை அடக்க சிங்கம்பட்டி ஜமீந்தார் கேரளா சென்றார் என்ற தகவல் உண்மையா?
பதில்: விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். நன்றி பி.என்.எஸ். பாண்டியன் அவர்கள். அவர் எழுதிய இப்பதிவுக்கு முழுவிவரங்களை அறியச் செல்லவும்.
4. பிராமணர்களும் தலித்துகளும் உ.பி. மாநிலத்தில் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல் தமிழகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதா?
பதில்: இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் தமிழகத்தில் போதுமான வாக்குவங்கி தங்களிடம் வைத்திருக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தின் கதை வேறு.
5. அதை தாங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: தேவையில்லை
6. சமதர்ம சமுதாயம் உருவாக அது வழி கோலுமா?
பதில்: இக்கேள்வியை எழுப்பவே முகாந்திரம் இல்லை.
7. கலப்புத் திருமணங்கள் இதற்கு உறுதுணையாகுமா?
பதில்: ஆகாது.
8. தலித் குடும்பங்கள் தங்கள் இல்ல வைபோகங்களுக்கு பிராமண வைதீகர்களை அழைப்பது தற்சமயம் சர்வசாதாரணம்; கோயில் தர்ம காரியங்களிலும் தலித் சகோதரர்கள் ஈடுபடுவது கண்கூடு. ஆக, தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,தமிழினத் தலைவர் கலைஞர்
கனவு நனவாகுமா?
பதில்: இதில் தந்தை பெரியாரோ அறிஞர் அண்ணாவோ, கலைஞரோ திடீரென எங்கிருந்து வந்தனர்? ஒரிஸ்ஸாவில் தலித்துகள் தங்களுக்காக கட்டிக் கொண்ட கோவிலில் பார்ப்பனரைத்தான் அர்ச்சகராக நியமித்து கொண்டனர். பக்தி செலுத்துவதில் தலித்துகள் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களை ஒதுக்கி வைப்பது ஹிந்து மதம் தனக்கு தானே செய்து கொள்ளும் தீது. வன்கொடுமைக்கு எதிராக எனது மிக பலமான கண்டனத்தை இங்கு இடுகிறேன். ஆகவேதான் மிக ஆதங்கத்துடன் அவர்கள் தங்களை தாங்களே உயர்த்தி கொள்ள பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தங்கள் சேவைகளை மலிவாக தரக்கூடாது. நான் மட்டும் தலித்தாக பிறந்திருந்தால் அவர்கள் அளவு பொறுமையாக இருந்திருக்க மாட்டேன். சமுதாயப் பெரியவர்களுக்கு பல ஆலோசனைகள் தந்து உயர்சாதிக்காரர்களை டரியல் ஆக்கியிருப்பேன். நான் தலித்தாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதையும் ஒரு பதிவாகப் போட்டுள்ளேன்.
அனானி (12.05.2008, மாலை 07.24-க்கு கேள்வி கேட்டவர்)
1. பணவீக்கம் உயர்வுக்கு தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமா?
பதில்: பணப்புழக்கம் அதிகரித்து உற்பத்தி குறையும் போது பணவீக்கம் சாதாரணமாக ஏற்படும். உற்பத்தியை அட்ஜஸ்ட் செய்வது trial and error ஆகவே போகிறது.
2. தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம் இந்தியாவை இன்னொரு எத்தியோப்பியா ஆக்குமா?
பதில்: அதையெல்லாம் நடக்காது தடுத்து உலகமயமாக்கலை நமக்கு சாதகமாகத் திருப்புவதுதான் அறிவுள்ளவன் செய்யக்கூடிய செயல்.
3. தொழில் தர்மம் இல்லா வணிகர்கள் (ஒரு பகுதியினர்) தான் இதற்கு காரணமா?
பதில்: அவர்களும் பங்கு வகிக்கிறார்கள். அரசின் கொள்கை குழப்பங்களும் ஒரு காரணமே.
4. Online trading செய்யும் சேட்டை இதுவா?
பதில்: Online trading பற்றி நான் அதிகம் அறியவில்லை.
5. பங்குவர்த்தகம் குழி தோண்டி குப்புறத் தள்ளும் குதிரையாய் மாறும் போல் உள்ளதே?
பதில்: பங்குவர்த்தகத்தை சூதாட்டமாக நினைத்து ஆடினால் அதுதான் கதி.
6. வழக்கம் போல் விலை வாசி எதிர்ப்பு செயலில் இடது சாரிகள் "வாய்ச் சொல் வீரரா?
பதில்: அவர்கள் என்ன செய்வார்கள்? அறிவை வைத்துகொண்டா தர மாட்டேன் என்கிறார்கள்?
7. இடைத்தேர்தல் count down தொடக்கமா?
பதில்: எந்த இடைத்தேர்தல்?
8. எல்லா மாநிலங்களை விட தமிழகத்தின் நிலை பாராட்டுவது போல் உள்ளதற்கு கழக நிர்வாக ஆட்சி முறை காரணமா?
பதில்: நமது முதல்வரின் தமிழறிவுக்கு ஈடான தமிழறிவு மற்ற மாநிலத்து முதல்வர்களுக்கில்லை என்று வேண்டுமானால் பெருமை பட்டுக் கொள்ளுங்களேன். யார் தடுப்பது? மற்றப்படி வேறெந்த நிலையை பற்றி கேட்கிறீர்கள்?
9. பழைய மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சி போல் வருவதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: அந்த ஆட்சி மிகக் குறுகிய காலமே இருந்தது. அதுவும் உட்கலகங்களால் பீடிக்கப்பட்டது. அதன் ஆட்சி மதிப்பீடு செய்யும் அளவுக்கு நீடிக்கவில்லை.
10. நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் நடைபெற வாய்ப்புள்ளதா? நன்மை பயக்குமா?
பதில்: அவருக்கு 1996-ல் சான்ஸ் கிடைத்தது. கோட்டை விட்டார். அவ்வளவுதான் விஷயம்.
விக்ரம்:
1) As far as you dont cheat, be honest, work hard, is it such a big crime to earn for you and your family and be selfish? Why, then, some fellows see that as a big crime?
பதில்: உண்மை என்னவென்றால், எல்லோருமே தத்தம் நலனை பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள். மேலுக்கு மட்டும் பொது நலம் என்றெல்லாம் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்கள் என்ன நினைத்தால் யாருக்கென்ன நஷ்டம்? அவரவர் நலனை கவனித்து கொண்டு போவதுதான் நல்லது.
2) Any plan of starting some post on mild harmless, A Jokes to make the readers happy?
பதில்: இல்லை. நேரில் பார்த்தால் பல அசைவ ஜோக்குகள் கைவசம் உள்ளன. எழுத்தில் அவை வேண்டாம். ஆளை விடுங்கள்.
3) Like in some countries such as Dubai, is there a possibility in India too, that there will be no income tax, someday?
பதில்: எண்பதுகளில் வருமான வரி ஒழிக்கப்படும் என்ற மாதிரி ஒரு எண்ணம் வந்தது. அதாவது முதலில் எஸ்டேட் டியூட்டி ஒழிக்கப்பட்டது. பிறகு சென்றது கிஃப்ட் டாக்ஸ். கம்பெனிகள் மேல் விதிக்கப்பட்ட surtax-ம் எடுக்கப்பட்டது. "இதே மாதிரி நடந்து கொண்டே போனால், என்னைப் போன்ற வரி ஆலோசகர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவது திண்ணம்" என்ற ரேஞ்சுக்கு ஒரு வருமானவரி ஆலோசகர் குறிப்பு எழுதும் அளவுக்கு அது சென்றது என்று அதே வருமானவரி ஆலோசகரிடமிருந்து அறிந்தேன். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அதே ஆலோசகரிடம் எஸ்.டி.டி. மூலம் பேசி கன்ஃபர்ம் செய்து கொண்டேன், எனது ஞாபகசக்தியில் பிழை ஏதும் இல்லை என்று. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. நடந்தால் நல்லதுதான்.
4) When do you think that the big and widening gap between the rich and poor will be narrowed?
பதில்: பழைய சோஷலிச காலங்களில் செல்வந்தர்களை ஏழையாக்குவதன் மூலம் அந்த இடைவெளியை குறைக்க முயற்சி செய்தனர். அதனால் இடைவெளிய் குறைந்ததோ இல்லையோ பணக்காரர்களை சதாய்ப்பது ஏழைகளுக்கு சந்தோஷம் தரும் என்ற நினைப்பில் காய்கள் நகர்த்தப்பட்டன. ஆனால் தற்சமயம் அது நடக்காது. பணக்காரர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மனது இருந்து, விடாமுயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானால் முன்னேறலாம் என்ற நிலை வந்துள்ளது. அதே சமயம் சோம்பித் திரிந்தால் சங்குதான் என்பதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இப்போது என்ன நடக்கிறதென்றால் புது பணக்காரர்கள் ஏழைகளை வஞ்சித்துதான் உயர்ந்துள்ளனர் போன்ற தோற்றம் தருகின்றனர். புது பணக்காரர்களை பலருக்கு ஏன் பிடிப்பதில்லை என்ற எனது பதிவில் நான் இது பற்றி எழுதியுள்ளேன்.
5) Is there a way to make the politicians (who always enjoy all facilities like a/c, car, bungalow, good food etc), suffer like ordinary people like us, by exposing them to crowd, queue, sweat, unclean,dirty, smelly public toilets, garbage, bad roads, traffic jam etc etc? so that they will realize the common man's problems....?
பதில்: நல்ல கனவு. நிறைவேற என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
அனானி (14.05.2008 மாலை 07.55க்கு கேள்விகள் கேட்டவர்):
1. புதிய பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கபட்ட நாள் முதல் நமது GDP 8% என்று சொல்லப்பட்டு வந்ததே திடிரென என்னாவாயிற்று? ஏன் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு (7.5%) உள்ளதாக கூறப்படுகிறது? யார் காரணம்,விளக்குக?
பதில்: பணவீக்கம் என்பது பல காரணங்களால் வருவது. இது பற்றி நான் மேலே ஒரு கேள்வியில் ஏற்கனவே பதிலளித்து விட்டேன்.
2. பங்கு சந்தையில் ஏற்படும் திடீர் உயர்வு/குறைவு ஏன் ஏற்படுகிறது?
பதில்: அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்தான். அவர்கள் திடீரென முதலீட்டை அதிகரிக்கின்றனர். திடீரென குறைக்கின்றனர். நம் ஷேர் மார்க்கெட்டும் எகிறுகிறது, தாழ்கிறது. மேலே விவரங்களைப் பார்க்க அணுகவும் நண்பர் வால்பையனை.
3. உணவுப் பொருள்களின் திடீர் 50 -60% விலையேற்றம் யாரால் ஏற்படுகிறது?
பதில்: நாளை என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது பொருட்களை பதுக்குதல் மிக சாதாரணம். அதுவும் அமெரிக்காவில் பல விளைநிலங்கள் எரிபொருள் உற்பத்திக்கு திசை திருப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரு ஆண்டுகள் பயிர்கள் சாவியாகப் போனது. இப்படி பல காரணங்கள் உண்டு. நமது பொது தானியசேமிப்பும் குறைந்துள்ளது.
4. விவசாயிகளின் தற்கொலைக்கு யார் காரணம்?
பதில்: மேலே உள்ள கேள்வியில் குறிப்பிடப்பட்ட உணவு விலைகள் விவசாயிகளுக்கு போகாது இடை தரகர்களுக்கு சென்றதும் ஒரு காரணம்.
5. 60,000 கோடி கடன் தள்ளுபடிக்கும் பின்னும் அவர்கள்(பொருளாதர) நிலை பரிதாபமாக உள்ளதே ஏன்?
பதில்: முதற்கண் சம்பந்தப்பட்ட தொகை அவ்வளவு அதிகம் இல்லை. அதனில் பாதிக்கும் குறைவே. அதுவும் கூட்டுறவு/ பாங்கு கடன்கள் மட்டுமே, தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகல் மாட்டி கொண்டிருப்பது கந்து வட்டிக்காரர்களிடம். அதற்கு எந்த நிவாரணமும் தரப்படவில்லை.
6. பாரம்பரிய தொழில்கள் நலிந்து வருகிறதே,அந்தப் பணியாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: உதாரணம் கூறுங்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அது தற்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது மேன்யுவல் தட்டச்சு யந்திரங்களை யார் வாங்குகிறார்கள்? ஆகவே அதை மட்டும் செர்வீஸ் செய்யத் தெரிந்தவர்கள் பாடு திண்டாட்டம். வி.சி.ஆர். மெக்கானிக்குகளுக்கும் அதே கதி. பல கம்பெனிகளில் இப்போதெல்லாம் ஸ்டெனோக்கள், டைப்பிஸ்டுகள் ஆகியோரை வேலைக்கெடுப்பது மிகவுமே குறைந்து விட்டது. பேங்குகளில் இத்தனை பேர் வி.ஆர்.எஸ்ஸில். போனாலும் இன்னும் வேலை நன்றாகத்தானே நடக்கிறது, கணினியின் தயவால். உண்மை கூறப்போனால் ஏற்கனவே பல காரணங்களுக்காக மிக அதிக அளவில் ஆட்கள் சம்பளத்துக்கு எடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புலப்பட ஆரம்பித்துள்ளது.
7. இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் குறைந்துள்ளதா?இல்லையா?
பதில்: கண்டிப்பாக இல்லை. அதுவும் எண்ணெய் இறக்குமதி நாடாக நாம் இருக்கும் வரை அதுதான் நிலைமை.
8. பொருளாதார வளர்ச்சி 70 % மக்களுக்கு போய் சேரவில்லை என இடதுசாரி கட்சிகளின் ஆதங்கம் உண்மையா?
பதில்: ஆதங்கம் படுவதோடு சரி. மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் அதற்கான முயற்சிகள் ஒன்றும் எடுப்பதாகக் காணோமே.
9. தேர்தல் அறிக்கை மூலம் வாக்களர்களுக்கு இலவசங்கள் அள்ளி கொடுக்கப்படுகிறதே? இது எங்கே கொண்டுபோய் விடும்?(ஒரு ஓட்டுக்கு மாதம் ரூபாய் 1000/= கொடுப்பதாக கூட அறிக்கை கண்ணில் படுகிறதே)
பதில்: யார் வீட்டு பணத்தை யார் அளிப்பது? எனக்கு தெரிந்து இலவசம் எல்லாம் தரமாட்டேன் என்று சொல்லியும் மிகப் பெரிய வெற்றி பெற்ற முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று ஊகித்து கூறுவதற்கெல்லாம் பரிசு கிடையாது என்பதையும் கூறிவிடுகிறேன். :)))))))
10. வங்க மாநிலத்தில் தனியார்மயத்தை ஆதரிக்கும்,இடதுசாரிகள் அதை எதிர்த்து நடுவண் (central government)ஆட்சியையே கவிழ்க்க முயலுவதுபோல் காட்சிகள் செய்விக்கப்படுகின்றனவே, ஏன், விளக்குக?
பதில்: பார்ப்போம், இந்த கண்ணாமூச்சி எத்தனை நாளுக்கென்று. மிக திறமையான பிரதமரை கோமாளியாக செயல்பட செய்யும் கம்யூனிஸ்டுகள் கண்டனத்துக்குரியவர்கள்.
சரவணன்:
1. தாங்கள் கிண்டி காலேஜ், அண்ணா யுனிவர்சிடியில் படிக்கும்போது நடந்த சுவையான சம்பவம் ஒன்று... (நானும் அங்கதான் படிச்சேன் அதான் காலேஜ் பாசத்துல வந்து உங்க பதிவுல கும்மியடிக்கறேன்)
பதில்: பொறியியல் கல்லூரி நினைவுகள் மிகவும் இனிமையானவை. நான் சமீபத்தில் 1963-ஆம் வருடம் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்த சமயம் என் நண்பர்களுக்கு ஒரு நீதிக்கதை கூறினேன். அதை படித்து கருத்து சொல்லவும்.
அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
22 hours ago
27 comments:
ஹுஸைன் ஓவியங்களை எதனால் ஹிந்துக்கள் எதிர்க்கிறார்கள் என்பது குறித்து:
ஹுஸைன் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்பதை ஹிந்துத்வவாதிகள் அறிந்தே உள்ளனர். அவரது திறமை குறித்து அவர்களுக்கு மரியாதை உண்டு. இந்த பிரச்சினைகள் வருவதற்கு முன்னால் ஹூஸைனின் ஓவியக் கண்காட்சிகளுக்கு ஹிந்துத்வா தலைவர்கள் சென்றதுண்டு. அவரை ஹிந்துக்களின் ஏஜண்டாகத்தான் இஸ்லாமிய சமூகத்தினர் அன்றும், இன்றும் பார்த்துவருகின்றனர். ஓவியங்கள், இசை, நுண்கலைகள் சாத்தானுடைய தூண்டுதல் என்பதில் இஸ்லாமியர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
ஹூஸைனுக்கு முன்பும் ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாக வரையும் வழக்கம் உண்டுதான். சிற்பங்கள் பலவும் அப்படித்தான் இருக்கின்றன.
அப்படி இருக்கும்போது ஹிந்துத்வவாதிகள் எதனால் ஹூஸைனை எதிர்க்கின்றனர்?
கோயில்களிலும், அக்கால ஓவியங்களிலும் தெய்வங்கள் அக்கால மனிதர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. மேலாடை இல்லாமல் இருப்பது இந்திய கலாச்சாரம். நிர்வாணம் பழகிய ஒன்று. தவறானதல்ல.
உடலின் குறிப்பிட்ட பாகங்களை மூடிவைக்கவேண்டும் என்கிற கருத்து இஸ்லாமிய, கிருத்துவ கருத்தியல்களால் இந்தியாவிலும் ஏற்பட்டுவிட்டது. அடிமை மனத்தினரான நாம் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். இப்போது, வெள்ளைக்காரர்களும், அரபிகளும் முன்வைக்கும் ஆடைகுறித்த கலாச்சாரமே சரியான கலாச்சாரம் என சமூகம் நம்புகிறது.
இந்த சமூகத்தில் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, சட்டையில்லாமல் இருக்கும் தமிழன் பிற்போக்குவாதி. ஆனால், ஜீன்ஸ் மட்டும் அணிந்துகொண்டு சட்டையில்லாமல் இருக்கும் இருக்கும் சல்மான்கான்கள் நாகரீகத்தின் அடையாளம்.
நாகரீகத்தை நிர்ணயிப்பதாக ஜீன்ஸும், அநாகரீகத்தை வேட்டியும் குறிப்பதாக இருக்கின்றன.
இந்த இந்திய சமூகத்தில் இன்னமும் விக்டோரிய நம்பிக்கைகள் மாறவில்லை. இங்கே ஆடையற்று இருப்பது அவமானப்படவேண்டிய விஷயமாக இப்போது இருக்கிறது.
ஆனால், இந்த நிர்வாணம் கலைகளில் காட்டப்படுமாயின் அதை ரசிக்கவே ஹிந்துக்களின் அழகியல் உணர்வு தூண்டுகிறது.
இருப்பினும், ஏன் ஹிந்துக்கள் ஹூஸைனின் ஓவியங்களை எதிர்க்கின்றனர்?
நவீன ஓவியக்கலை வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும், ஒவ்வொரு ஓவியரும் தங்களின் கருத்துக்களை உணர்வுகளை தங்களுக்கேயான படிமங்களின்மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
ஹூஸைன் கொடூரத்தை, ஆபாசத்தை, அருவருப்பை குறிக்க தனது ஓவியங்களில் நிர்வாணத்தை பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஹிட்லர் பற்றிய அவரது ஓவியம். முஸோலினியை அவர் சித்தரிக்கும்விதம். ஏளனப்படுத்த ஹூஸைன் கையாளும் வழி நிர்வாணமாகக் காட்டுவது.
இது ஓவிய பரிச்சயமுள்ளவர்கள் அறிந்த உண்மை.
நிர்வாணம் எனும் படிமத்தை ஹூஸைன் கையாளும் விதம் இப்படி இருக்கும்போது, திடீரென்று அவரது ஓவியங்களில் பெண் தெய்வங்கள் நிர்வாணமாகக் காட்டப்படுமாயின் அதற்கு என்ன பொருள்?
இதை ஹிந்துக்கள் எதிர்ப்பது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்படிப்பட்ட ஹூஸைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய மீடியாக்களும் செயல்படுகின்றன. ஆனால், அதே மீடியாக்கள் இந்தியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தஸ்லிமா நஸ்-ரீனைக் கண்டுகொள்வதில்லை.
இந்த மீடியாக்களும் அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் தங்களுக்கு தர்மம் நியாயம் சமூக நீதி குறித்த உணர்வு அதிகம் என்று காட்டிக்கொள்கின்றன.
இவர்களோடு ஒப்பிடும்போது எனக்கு இவ்வளவு பணம் கொடுத்தால் உன்னோடு உடலுறவு கொள்வேன் என்று வெளிப்படையாகப் பேசும் ஒரு பாலியல் தொழிலாளி உன்னதமானவர். ஏனெனில், இந்த பாலியல் தொழிலாளியிடம் உடலை மட்டும், அதுவும் ஒரு 10 நிமிடங்களுக்கு மட்டும்தான் கடன் வாங்க முடியும்.
அவரிடம் இருக்கும் நேர்மை இவர்களிடம் இல்லை. இவர்கள் எதையும் விற்பார்கள் - முக்கியமாக நேர்மையை.
உங்களது அடுத்த வார கேள்வி பதிலுக்கு என் மூன்று கேள்விகள்:
1. வெளிநாடுகளில் கடன்வாங்கி அந்தப் பணத்தில் இந்திய அரசாங்கம், இந்தியர்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி பல முன்னேற்றங்களைச் செய்துவருகின்றது. அவை இந்தியர்களின் சாதனையாகவே கருதப்படுகின்றன. உதாரணமாக, இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் தொழில்நுட்பங்கள். வெளிநாட்டுப்பணம் இல்லாவிட்டால் இவர்களால் இதைச் செய்திருக்க முடியாது. இருப்பினும், வெளிநாட்டு மூலதனத்தை வைத்துக்கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பெருமை வெளிநாட்டினருக்கு போய்ச் சேரவேண்டுமா?
2. இஸ்லாமிய, கம்யூனிஸ, ஆபிரகாமிய தீவிரவாதிகள் மிகத் தெளிவாக தாங்கள் இந்திய தீவிரவாதிகள் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் எப்போது குண்டு வெடித்தாலும் இது வெளிநாடுகளால் நடத்தப்படுவது என்று மீடியாக்கள், அரசியல்வாதிகள், அரசாங்கம் சொல்லிவருகின்றன. தீவிரவாதங்கள் இந்தியர்களால்தான் நடத்தப்படுகின்றது என்பதை இவர்கள் ஏன் மறைக்கவேண்டும்?
3. கடந்த பத்து ஆண்டுகளில் இருபத்தி இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் இருந்து நீங்களும், உங்களது குடும்பத்தினரும், அன்பர்களும் விடுபட்டு பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?
விஷ்ணுவின் சிலையை கடலில்போட்ட கிருமிகண்ட சோழனை ஹிந்துக்கள், முக்கியமாக சைவர்கள் போற்றிப் பாராட்டுகின்றனரா?
ஹிந்துக்கள் பார்வையில் கிருமிகண்ட சோழன் ஒரு நபியாகத் தெரிகிறாரா?
//ஹிந்துக்கள் பார்வையில் கிருமிகண்ட சோழன் ஒரு நபியாகத் தெரிகிறாரா?//
இதில் நபியெல்லாம் எங்கிருந்து வந்தார்? சைவ வைஷ்ணவ சண்டைகள் இப்போது இல்லை என்பதுதான் உண்மை. அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு என்றுதான் கிட்டத்தட்ட எல்லா இந்துக்களும் உள்ளனர்.
அதனால்தான் கூறுவேன், தசாவதாரம் படம் கதையாகத்தான் பார்க்கப்படும் என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நிர்வாணம் எனும் படிமத்தை ஹூஸைன் கையாளும் விதம் இப்படி இருக்கும்போது, திடீரென்று அவரது ஓவியங்களில் பெண் தெய்வங்கள் நிர்வாணமாகக் காட்டப்படுமாயின் அதற்கு என்ன பொருள்?
இதை ஹிந்துக்கள் எதிர்ப்பது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்படிப்பட்ட ஹூஸைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய மீடியாக்களும் செயல்படுகின்றன. ஆனால், அதே மீடியாக்கள் இந்தியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தஸ்லிமா நஸ்-ரீனைக் கண்டுகொள்வதில்லை.//
வெட்கக்கேடு. அதிலும் வேற்று மதத்து கடவுள்களை அவதூறு செய்பவர்கள் எல்லா தண்டனைக்கும் உரியவர்கள். நாடு ஏற்கனவே கலவர நிலையில் இருக்கும்போது ஹுஸைன் மாதிரி அரைகுறைகள் குட்டையை குழப்புவதை ஆதரிக்கவும் வெட்கம் கெட்ட மதசார்பற்ற வியாதிகள் உள்ளனர் என்பது விசனத்துக்குரியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களது அடுத்த வார கேள்வி பதிலுக்கு என் மூன்று கேள்விகள்://
அடுத்தவாரப் பதிவுக்கான முதல் மூன்று கேள்விகளாக இவை அப்பதிவின் வரைவில் சேர்ப்பிக்கப் பட்டுவிட்டன. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்தான். அவர்கள் திடீரென முதலீட்டை அதிகரிக்கின்றனர். திடீரென குறைக்கின்றனர். நம் ஷேர் மார்க்கெட்டும் எகிறுகிறது, தாழ்கிறது. மேலே விவரங்களைப் பார்க்க அணுகவும் நண்பர் வால்பையனை. ///
மோர்கன் ஸ்டேன்லி போன்ற பிரபல முதலீட்டு நிறுவனங்கள், ஒரு நாட்டின் பங்கு வணிகத்தை தீர்மானிக்கிறது, தனது நாட்டில் தனது பங்குகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வளரும் நாடுகளில் முதலீடு செய்கிறது.
சாதரணமாக ஒரு கம்பெனியின் பங்கு வளர்ச்சி அந்த கம்பெனியின் வளர்ச்சியை ஒத்தே இருக்க வேண்டும், சென்ற வருடம் நமது நாட்டின் பங்கு வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு இருந்தது, நான் வாடிக்கையாளர்களுக்கு சொல்வேன் பங்கு வணிகம் மலையேருவதை போல ஏறும் போது மெதுவாக தான் ஏற முடியும், ஆனால் வீழ்ச்சி அப்படியல்ல, அது கண்டிப்பாக நீர்வீழ்ச்சி போல தான் இருக்கும், இதை வரை நமது நாட்டில் நடந்த பங்கு வர்த்தக சரிவில் நிறைய நஷ்டத்தை அடைந்தது சிறு முதலிட்டார்கள் மட்டுமே,
இதனாலேயே நான் பங்கு வணிகத்தை முழுவதுமாக நம்புவதில்லை, ஏன் ஓட்டு எப்போதுமே விலை பொருள்களுக்கு மட்டுமே, நடுத்தர வர்க்கத்தினர் பணத்தை சேமிக்க விலைபொருள்களில் முதலீடு செய்தல் நலம்,
சமீபத்தில் உணவு பொருள்களை ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து நீக்கிய அரசு புதிதாக 8 கிராம் அளவுடைய தங்கம் வாங்க அனுமதித்திருக்கிறது,
வெறும் பத்து சதவிகிதம் கட்டி எட்டு கிராம் அளவுடைய தங்கம் நம் கணக்கில் வாங்க படும், ஏறி வரும் தங்க விலையில் இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும்
தங்கம் மற்றும் வெள்ளி விலை மற்றும் இன்றைய நிலை அறிய இங்கே செல்லவும்
வால்பையன்
ஐயா,
எனது விடுபட்ட கேள்வி என கொடுத்த 3வது அணி ஆட்சி பற்றிய கேள்விக்கு ஏன் பதில் இல்லை?
அந்த கேள்வி:
விட்டுபோன கேள்வி.
1)எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயவதி,அஸ்ஸாம் கணபரிசத்,தெலுங்கு தேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன்
இது உருப்படியாகுமா???
கூடுதுறை அவர்களே,
என் இப்பதிவில் விட்டுப்போன உங்கள் கேள்வியை சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//// தசாவதாரம் படம் கதையாகத்தான் பார்க்கப்படும் என்று.///
நீங்கள் மீடியாவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
ஒரு பொய், கதைகளாக மாற்றப்படுவதும், மீண்டும் மீண்டும் மக்களின் மனத்தில் புகுத்தப்படுவதும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆரிய-திராவிட இன வெறிகூட இப்படிப்பட்ட கதைகளால் சமைக்கப்பட்டதுதான்.
// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை //
அது என்ன கதை ?
--- மகேஸ்வரன்
///வேற்று மதத்து கடவுள்களை அவதூறு செய்பவர்கள் எல்லா தண்டனைக்கும் உரியவர்கள். ///
சாலப் பொருந்தும் பதில்.
// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை //
அது என்ன கதை?
திடீரென அது ஏன் நினைவுக்கு வந்தது? அது பற்றி இப்பதிவில் பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆரிய-திராவிட இன வெறிகூட இப்படிப்பட்ட கதைகளால் சமைக்கப்பட்டதுதான்//
engal ina maana ayya veeramani avargal itharku niraya aathaaram vaiththullaar. avar ezuthiyulla puththakangalaip padiyungal. appothaavathu thelivu perungal
komanakrishnan
//ஹுஸைன் மாதிரி அரைகுறைகள் குட்டையை குழப்புவதை ஆதரிக்கவும் வெட்கம் கெட்ட //
kadumaiyaana pechu. husain oru sirantha kalaignar.
avar ethu variya vendum enbathai kooda neengalthaan solla vendumo?
melum,
avarai paarppanargal thavira, veru yaar ethirkkiraargal?!!!
kuttaiyai kuzappuvathu neengalthaan dondu avargale!!!
komanakrishnan
//கோயில்களிலும், அக்கால ஓவியங்களிலும் தெய்வங்கள் அக்கால மனிதர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. மேலாடை இல்லாமல் இருப்பது இந்திய கலாச்சாரம். நிர்வாணம் பழகிய ஒன்று. தவறானதல்ல.//
ஹுசைன் சீதா தேவி ஹனுமானின் வாலில் தனது பிரைவேட் பாகங்களை தேய்ப்பது போல வரைந்தான், அது போல நமது கலாச்சாரத்தில் தெய்வங்கள் வரையபட்டது இல்லை.
சிலைகள் நிர்வாணமாக இருந்தாலும் அவை பெரும்பாலும் அலங்கரித்து வைக்கபட்டிருக்கும்.
//kadumaiyaana pechu. husain oru sirantha kalaignar.//
அமாம் நல்ல கலைஞர்தான், ஆனால் எண்ணம், புத்தி சரியில்லாமல் வரைந்துகொண்டிருக்கிறான். ஹிந்தி பட நடிகைகள் பார்த்து ஜொல்லுவிடுகிறான், இவனுக்கு இந்த வயசில் இது தேவையா..
அவனது சாமியை இதே போல அழாகாக கலை சுதந்திரத்துடன் ஒரு நிர்வாண படம் வரையட்டுமே பார்ப்போம்..
//avar ethu variya vendum enbathai kooda neengalthaan solla vendumo? //
எண்டா டே உங்களுக்கு ஒரு சட்டம் மத்தவனுக்கு ஒரு சட்டமா. நீங்க சொல்றது எல்லாம் நாங்க கேக்கணும், அனா நாங்க சொன்ன நீங்க கேக்கமாடீகளோ.
1.சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் தங்களுக்கு பிடித்த படம் எது? விளக்குக (20 மதிப்பெண்கள்)
2. பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா? (25 மதிப்பெண்கள்)
3. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுக உடையும் வாய்ப்பு உள்ளதா?((10 மதிப்பெண்கள்)
4. ஜெயலலிதாவிற்க்கு பிறகு அதிமுக என்ன ஆகும் ((10 மதிப்பெண்கள்)
5.ஈழ போராட்டத்தில் இந்து ராம் நிலை என்ன? அவர் நிலை சரியா? (35 மதிப்பெண்கள்)
அனைத்து பதில்களுக்கு விரிவான வடை 100 வரிகளுக்கு மேல் பதில் தருக
1.துக்ளக் சோ பார்வையில் "உத்தப்பபுரம்" சுவர் விவகாரம் வேறு கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஹிந்து நாளிதழ்கூட தகவலை வேறுமாதிரி பிரசுரித்தாதாக தவறான புகைப்படத்துடன் (மின்வேலி பாதுகாப்புச் சுவர்) எழுதியுள்ளார்(துக்ளக் dated 21-05-2008.)
2.அந்த சுவர் பற்றி பல புதுத் தகவல்கள் தந்துள்ளார்.
3.தமிழக முதல்வர் மெல்லிய அனுகுமுறைக்கு அவரது பாசம் தான்
(பிள்ளைமார் சமுகம் மீது)காரனமா?
4.அநேகமாக பிள்ளைமார் சமுகத்தில் பல உட்பிரிவுகள் உட்பட கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள்தான்.
5.இல்லை (உயர் சாதிப்பிரிவினர் மீது)மேலும் கலைஞர் அவர்களின் அனுகுமுறையில் இது நல்லா ஒரு மாற்றமா?( தாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களே!)
6.வால்பையன் அவர்கள் ஆதரவுதரும் online trading ( உலகத்தின் பொருளாதாரத்தை உலுக்கும்)
சாதகபாதங்களை துக்ளக் திரு எஸ்.குருமீர்த்தி அவர்கள் கட்டுரையை படித்தீர்களா? உங்கள் கருத்து யாது?
7.மத்திய அரசு ரயில்வே துறையில் மட்டும் தனியார் துறையில் உள்ளது போல் வசதிப்பெருக்கம்,நுகர்வோர் நலம் பேணுதல் எப்படி சாத்தியமாகிறது?
8.அங்கு நடைபெறும் கட்டிட மாற்றங்கள் (தரை,கூரை,இடவசதிகள்....)மிகவும் தரமான போற்றத்தலுக்கு உகந்த முறையில் நடை பெறுகிறதே?
வழக்கமாக "hc/lq" (Highest commission lowest quotation)
தாரக மந்திரம் (அரசுத் துறையை சிரழித்த அணுகுண்டு)அங்கே கடைபிடிக்கப் படவில்லையா?
9.லல்லு அவர்கள் அதிகாரிகளுக்கு
கொடுத்த முழுச் சுதந்திரம் காரணமா?
10. லல்லு அவர்கள் பாரத்தின் பிரதம அமைச்சராக மாறினால் எல்லா அரசுத்துரைகளும் (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள்) புதுப்பிறவி எடுத்து எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தில் இருக்கும் உழியர்களின் மனக் கலக்கம் மறையுமா.( அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவுகளால் அழிவின் விளிம்பில் பல பொதுத்துறை (உதாரணத்துக்கு-/ITI(TELEPHONE)-OOTY PHOTO FILM INDUSTRY.....) நிறுவனங்கள் உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன.)
Dondo sir,
Is this CHO's 'Formula' for Successes (?!)he.. he ...he Your answer please
'ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார்.
'சோ' இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றளவும் நடைமுறை படுத்திவருகிறார்.
Your friend
Sathappan
//'சோ' இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றளவும் நடைமுறை படுத்திவருகிறார்.//
இதில் ஒரு சூட்சுமம் உண்டு. சோ கேலி செய்தாலும் பார்த்து சரியாக கேலி செய்யக்கூடியதாகப் பார்த்துத்தான் கேலி செய்கிறார். உண்மையில் அதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்ப்பனர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தீமைகளை ஏழுபிரிவுகளாகக் குறிக்கின்றார் அம்பேத்கர்.
1. ஆள்வதும், அரசக்கொலையும் பார்ப்பனீய உரிமையென்பதை நிலைநிறுத்தியது.
2.பார்ப்பனர்களை சிறப்புரிமைகொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது.
3 வர்ணத்தை சாதியாக மாற்றியது.
4 பல்வேறு சாதிகளிடையே மோதலையும், வெறுப்புணர்வையும் தோற்றுவித்தது.
5. சூத்திரர்களையும், பெண்களையும் இழிந்த நிலைக்குத் தள்ளியது.
படிநிலை கொண்ட சமத்துவமற்ற (கிரேடட் இன் ஈக்வாலிடி)அமைப்பை உருவாக்கியது.
7. மரபு ரீதியாக நெகிழ்ச்சி கொண்டதாயிருந்த சமூக அமைப்பை சட்டபூர்வமானதாகவும், இறுகியதாகவும் மாற்றியது.
அம்பேத்கர் என்ற மிகப்பெரிய கல்வியாளர் ஆராய்ந்து சொன்ன இந்த கருத்துக்கள் தவறு என்கிறீர்களா டோண்டு ராகவன் sir ????
அம்பேத்கர் என்ற மிகப்பெரிய கல்வியாளர் இட ஒதுக்கீடு தலித்துகள் பழங்குடியினருக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் அறிமுகப்படுத்தினார். அது இப்போது எவ்வளவு வளர்ந்து ஓபிசி, பிசி போன்றவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது என்பதையும் பார்த்தீர்கள். அதுவும் அவ்வாறு விரிவாக்கத்தால் பலனடைந்தவர்கள் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்து வருபவர்கள். அம்பேத்கர் இந்த விரிவாக்கத்தை ஒப்பு கொண்டிருப்பார் என நினைக்கிறீர்களா?
மற்றப்படி அவர் பழங்கால சரித்திரத்தை ஆராய்ந்து எழுதியபோது மிஷனரிகள் கொடுத்த ஆரிய படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவர் எழுதினார். அவர் இறந்தே 51 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நடக்கும் கூத்துக்களை அவர் பார்த்திருந்தால் கண்டிப்பாக பார்ப்பனரை பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்.
ஆக, உங்கள் கேள்விகள் பொருளற்றவை. தற்கால நிஜத்துக்கு ஏற்ப இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா சாத்தப்பா,
இதைச் செய்தது ஆங்கிலேயர்களும், இஸ்லாமிய அரசாங்கங்களும்.
அம்பேத்கார் சொன்னதை அப்படியே உல்டாவாகப் போட்டு பார்ப்பனர்களின்மேல் பழியைப்போட்டுவிட்டீர்களே ஐயா !
1.கூட்டணிக் கட்சி அமைசர்கள்(முதலில் டி.அர். பாலு அவர்கள்,இப்போது அன்புமணி அவர்கள்) செய்யும் தவறுகளை காங்கிர ஸ் தலைவர்களின் சமாளிப்பு பற்றி தங்கள் கருத்து யாது?
2.அரசின் கையிலுள்ள அதிகார பவரை வைத்துக் கொண்டு அரசின் துறைகளை
முடக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற "வல்லமைத்தனம்" கடவுளுக்கே அடுக்குமா?
3.அரசுத்துறையை.நலிவடைய செது பின் அத் துறையின் கடல் போன்ற சொத்துக்களை book value க்குவாங்கும்(market value வைவிட 10 ல் ஒரு பங்கு மதிப்பு) போக்கை உங்ளை போன்ற கடவுள் பக்தி யுள்ளவர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டாமா?( 51 % பங்குகளை மிக சொற்ப (பங்கு விலை குறைக்கவோ கூட்டவோ இவர்களுக்கு (இந்தியாவின் பங்கு வணிபத்தில்)சர்வ சதாரணம்))
விலைக்கு வாங்கி owner ஆகும் "வல்லமை"
4.வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 கோடி பேர்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கல்வி,மருத்துவ உதவி,காப்பீட்டு உதவி,தங்கும் இட வசதி,உண்ண உணவு( விலைஏற்றம்) யெல்லாம் கானல் நீராய் மாறி வருகிறதே.இது நல்லதற்கா?
5.தவறான முறையில் பணம் குவித்தவர்கள்( பெரும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள்,அரசியல் தலைவர்கள்,ஹர்சத் மேத்தா போன்ற பங்குவர்த்தக மோசடிப் பேர்வழிகள்,உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தவர்கள்,கடத்தலில் கொடிகட்டி பறந்தவர்கள்,கள்ள சாராயம்,போலி மருந்து,அரசின் சொத்துகளை வளைத்து போட்டு புது தொழில் அதிபர்களாக வலம் வந்தவர்கள்.......etc..)இந்தியாவில் உள்ள சட்ட ஓட்டைகளை பயன் படுத்தி சுதந்திரமாக வலம் வருகிறார்களே இது தர்மமா?
6.தவறான முறையில் பணம் சேர்த்தால் தவறாமல் துன்பம் வரும் என்பது உண்மையாகுமா?
7.ஆன்மிகத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால் தப்பிக்காலாம் எனும் எண்னம் என்னாவாகும்?
8.எல்லோரும் எல்லாம் பெறவேண்டும்.
இங்கு இல்லாமை இல்லா நிலை வேண்டும்.இது இங்கே சாத்யம் போல் தெரியவில்லயே?
9.எல்லொரும் யாரைவேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் ஆனால் கடவுளை ஏமாற்றமுடியுமா?
10."உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கவேண்டும் " என்று நம் முன்னோர்கள் சொன்னது என்னவாகும்?
வணக்கம் ராகவன் ஐயா ,
எனது கேல்விகள்.
அரசியல்:
கருணாநிதி, தயாநிதி மாறன் சண்டை ஓயுமா ? கருணாநிதிக்கு பிறகு மாறன் கட்சியை கைபற்ற முயலுவாரா?
கலை:
திரைப்படங்களுக்கு மொழி மாற்றம் செய்யும் எண்ணம் உள்ளதா?
இலக்கியம்:
படிப்பதற்கும், வாசிப்பதற்கும் உள்ள வித்யாசம் என்ன? நிறைய இலக்கிய எழுத்தாளர்கள் புத்தகம் வாசிப்பதாக சொல்கிறார்களே ?
அன்புடன்,
அருண்
Post a Comment