நான் செவ்வாய்க்கிழமை கவிதைகள் பதிவில் இட்ட பின்னூட்டம் இது. அதற்கு முன்னால் அப்பதிவின் சில வரிகளைப் பார்ப்போம். அவையே எனது பின்னூட்டத்தின் பின்புலன்.
"மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமம் உத்தபுரம். இங்கு ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது. சில காலத்திற்கு முன்பு இந்த சுவரின் உயரம் அதிகரிக்கபட்டிருக்கிறது. இதோடு அடங்கவில்லை சாதி வெறி. சுவர் ஏறி யாராவது குதித்தால் தீட்டாகிவிடுமே என்பதால் சுவற்றில் மின்சாரத்தை பாய்ச்ச தொடங்கினார்கள். இதற்கு பிறகு சமீப நாட்களாக செய்திகளில் அடிபட தொடங்கி பிறகு அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்திருக்கிறது. அரசு மாவட்ட கலெக்டரை பணித்து அந்த சுவரை இடித்திருக்கிறது. சுவர் இடிக்கபட்ட காரணத்தினால் இந்த கிராமத்தில் வாழும் சாதி இந்துக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுக்கையிட்டு திரும்ப ஒப்படைக்கவும் முனைந்திருக்கிறார்கள். அதாவது தங்களது சாதி வெறியை தடுத்தால் தங்களால் இந்த நாட்டு பிரஜைகளாக இருக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள். சாதி வேற்றுமை குறித்தோ சுவர் குறித்தோ கிரிமினல் வழக்கு எதுவும் பதிவானதாக தெரியவில்லை. ஆனால் சாதி இந்துக்கள் தங்களது சாதி வெறி எனும் உரிமை மறுக்கபட்டதால் கோபமுற்று கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்கோ தங்கியிருக்கிறார்கள். இவர்களை சாந்தபடுத்தி மீண்டும் கிராமத்திற்கும் கூட்டி வர மாவட்ட கலெக்டர் முயற்சி செய்து வருகிறார்".
இப்போது பின்னூட்டம்:
"ரேசன் கார்டுகளை திருப்பித் தராங்களாமா. ரொம்ப நல்லதா போச்சு. வாங்கி அப்படியே கிழித்து போட வேண்டும். வன்கொடுமை செய்ததற்கு தண்டனையாக ரேசன் இல்லாமல் அவதிப்படட்டும். வீட்டுக்கு திரும்பாமல் மலைப்பகுதியிலே ஒக்காந்திருப்பாங்களாமா அப்படியே ஒக்காரட்டும். போடா மூதேவிகளான்னு விட்டுட்டா தானே திரும்ப வந்துட்டு போறாங்க. அப்படியே வராவிட்டாலும் நாட்டுக்கு ஒரு நட்டமும் இல்லை.
உண்மை கூறப்போனால் சம்பந்தப்பட்ட உயர்சாதியினருக்கு ஒட்டுமொத்த அபராதம் விதித்திருக்க வேண்டும். ரேசன் கார்டுகள் மின்சாரம் ஆகியவற்றை பறித்திருக்க வேண்டும்".
மேலே சுட்டப்பட்ட பதிவின் விஷயங்களுடன் 100 சதவிகிதம் ஒத்து போகிறேன் என்பதை கூறிவிட்டு, இப்போது இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.
அரசின் செயல்பாடுகள் வெறுமனே எதிர்வினைகள் புரிவதாகவே உள்ளன. இந்த கலெக்டருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வெளியில் போய் எவ்வளவு நாட்கள்தான் உட்கார முடியும்? அவ்வாறு சென்றவர்களில் யாரேனும் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களை முதலில் வேலையை விட்டு தூக்க வேண்டும். அது முடியாவிட்டால் வேறு ஏதாவது ஊருக்கு மாற்றல் செய்ய வேண்டும். அவனவன் சொந்த ஊரில் பல பகுதி வேலைகள் பார்த்து கொண்டு அரசிலும் வேலை செய்து பல சம்பளங்கள் வாங்குகிறார்கள். இந்த மாற்றலே பெரிய தண்டனையாக அவர்களுக்கு இருக்கும். ஊருக்கே பொது அபராதம் விதிக்கலாம். எடுத்துக்காட்டு தண்டனையாக (Exemplary punishment) பெரிய அளவில் தந்தால் மற்ற ஊர்களில் வன்கொடுமை செய்பவர்களும் யோசிப்பார்கள். தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை தரும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை எடுப்பது பற்றிக் கூட யோசிக்கலாம்.
இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னும் சில கூறுவேன். தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.
பெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது.
இந்த இடத்தில் நாடார்கள் உதாரணம் மனதில் கொள்ளத்தக்கது. தலித்துகளைப் போலவே வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் இன்று தங்கள் சமுதாய ஒற்றுமையால் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். ஆகவே தலித்துகளால் இதெல்லாம் முடியாது எனக் கூறுவது சரியாக இருக்காது. முதலில் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளட்டும். இரட்டைக் குவளை திட்டத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதற்காக நான் அளித்த ஆலோசனைகள் அப்படியே உள்ளன. அவர்களில் யாராவது ஒருவர் தம் அளவில் நிறைவேற்றினாலே ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
35 comments:
//"ரேசன் கார்டுகளை திருப்பித் தராங்களாமா. ரொம்ப நல்லதா போச்சு. வாங்கி அப்படியே கிழித்து போட வேண்டும். வன்கொடுமை செய்ததற்கு தண்டனையாக ரேசன் இல்லாமல் அவதிப்படட்டும். வீட்டுக்கு திரும்பாமல் மலைப்பகுதியிலே ஒக்காந்திருப்பாங்களாமா அப்படியே ஒக்காரட்டும். போடா மூதேவிகளான்னு விட்டுட்டா தானே திரும்ப வந்துட்டு போறாங்க. அப்படியே வராவிட்டாலும் நாட்டுக்கு ஒரு நட்டமும் இல்லை.
உண்மை கூறப்போனால் சம்பந்தப்பட்ட உயர்சாதியினருக்கு ஒட்டுமொத்த அபராதம் விதித்திருக்க வேண்டும். ரேசன் கார்டுகள் மின்சாரம் ஆகியவற்றை பறித்திருக்க வேண்டும்".
//
முற்றிலும் சரி டோண்டு சார்!
அப்படி போடு அருவாளன்னனாம், கலக்கிட்டீங்க ஆனா எப்படியாவது யாராவது உங்க வார்தைகளை திரிச்சு ஆரிய திராவிட ஜல்லிய கொட்டமாட்டங்களா.. :-)
if you start judging people;
you will have no time to love them
- இது தெரியாம உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் வரும்பாருங்களே
சரவணன்
எத்தனையோ ஆதிவாசிகள் மலைப்பிரதேசத்தில் வசிக்கின்றனர்.
இவர்களும் அங்கேயே வசிக்கட்டும் 10 வருடங்களூக்கு.
காலி செய்துவீடுகளில் தலித்களை குடியிருக்கச்செய்யலாம்
aamaam..? thideerendru dalith makkal meethu ungalukku enna akkarai dondu avargale?
komanakrishnan
என்ன சார் இன்னும் களை கட்டல.. அப்ப நானே ஆரம்பிச்சு வச்சுடவா
கம்யூனிஸம் வெறுக்கும் டோண்டு கார்ல்மார்க்ஸின் கால் மார்க்ஸை (footpath) திடீரென பின்பற்றும் சூழ்ச்சி கண்டீரா..
விற்பதற்கு கடைகாரரிடம் எதுவும் இல்லை என்றாலும் வாங்குவதற்கு மக்களிடம் பணம் எதுவும் இல்லை என்றாலும் கடைகள் தோறும் மைல் நீள க்யூக்களில் மக்களை வாட்டிய கம்யூனிஸ சிந்தனையாளரின் கருத்தை எடுத்து கையாண்ட கயமைத்தனம் காணீர் மக்களே இன்னுமா தூக்கம்.
பொங்கி எழுங்கள் தலித் நண்பர்களே என்கிறார் டோண்டு ஏன் பொங்கி எழுங்கள் என் தலித் சோதரர்களே என்று சொல்லவில்லை அவரது ஆரிய மனம் தலித்களை இன்னும் தோழர்களாகவே (உண்டி குலுக்குபவர்கள் & தட்டி கட்டுபவர்கள்) வைத்திருக்கிறது இதை கேட்க தமிழ்மணத்தில் யாருமே இல்லையா..
தீ பரவட்டும்
சரவணன்
//இந்த இடத்தில் நாடார்கள் உதாரணம் மனதில் கொள்ளத்தக்கது. தலித்துகளைப் போலவே வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் இன்று தங்கள் சமுதாய ஒற்றுமையால் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.//
தற்போதைய பிராமணர்களிடையே ஒற்றுமை உள்ளதா?
நாடார்களை ஒற்றுமை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்காடும் நீங்கள் பிராமணர்களை எதற்கு உதாரணமாக காட்டுவீர்கள்?
பி.கு: வெள்ளி கேள்வி பதிலில் சேர்த்தாலும் மகிழ்வேன்!
- வேல் -
//வெள்ளி கேள்வி பதிலில் சேர்த்தாலும் மகிழ்வேன்//
சேர்த்தாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தீ பரவட்டும்//
கும்மி ஆரம்பமாகட்டும். ஸ்டார்ட் மீஜிக், 1,2,3.... :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
போடா வெண்று
மலையாளத்தில் தீய்யர்களைவிடவா? எப்படி முன்னேறிவிட்டனர்! அதுபோல தமிழ்நாட்டு தலித்துகளும் செய்யலாமே.
வணக்கம்
ஆமாம் நானும் உங்களை ஆமோதிக்கின்றேன்
அடிபடுபவனிடமிருந்து எதிர்வினை வரவேண்டும்
சும்மா குனிந்து முதுகை காட்டிக்கொண்டு இருந்தால் அடித்துக்கொண்டேதான் இருப்பார்கள்
நன்றி
//கும்மி ஆரம்பமாகட்டும். ஸ்டார்ட் மீஜிக், 1,2,3.... :))))))//
நான் ரெடியா இருக்கன்.
அப்புறம் அங்க சுவத்தை முழுசா இடிக்கலியாம் சும்ம கொஞ்சம் இடிச்சு பாதை போடறாங்களாம். நம்ம அரசியல்வாதிகளுக்கு ரெண்டு பக்கமும் ஓட்டு வேணுங்க பிரச்சனை தீரவிடமாட்டனுவ பாருங்க
சரவணன்
தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும் இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா
- அது மாதிரி ஸ்கூல் புத்தகத்துல தீண்டாமை ஒரு பாவ செயல்னு எழுதுனா மட்டும் போதாது பயபுள்ளைக மனசுல பதியனும் அதுக்கு வீட்டுல அப்பன் ஆத்தா அது மாதிரி நடந்துக்கனும்.
சரவணன்
இது விஷயமா கலைஞர் சட்டசபையில் இம்மாதிரி பேசினதா விடுதலை. காம்-ல் படிச்சேன்:
"எல்லோரும் சமம்தான். அந்த நிலையில் இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறுதியிட்டு கூறப்பட்ட பிறகு ஆடவர்கள் சில பேர் - உயர் ஜாதிக்காரர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற ஆடவர்கள் சில பேர், நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம். நாங்கள் பக்கத்திலே உள்ள மலைப் பகுதிக்குச் சென்றுவிடுவோம் என்று ரேஷன் கார்டுகளை யெல்லாம் கூட தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார்கள் என்று செய்தி வந்தது.
அது அவர்களுடைய கோபத்தினுடைய அடையாளம் என்று நாம் கருதிக் கொள்ள வேண்டுமே அல்லாமல் அவர்கள் உள்ளபடியே ஜாதி வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருத முடியாது, எண்ண முடியாது, நினைக்க முடியாது. அவர்கள் மலைப் பகுதியிலே வாழப் போகிறோம் என்று சொல்லி விட்டுப் போனாலும் கூட அந்த வீட்டுப் பெண்மணிகள் யாரும் செல்லவில்லை என்றும் அவர்கள் எல்லாம் அங்கேயே தான் தங்கி இருக்கிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு சற்று முன்பு கூட செய்தி சொன்னார்.
பரவாயில்லை, தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள்.பெண்கள் முன்னேற பெரியார் - அண்ணா பட்டபாடுஅந்தக் காலத்திலிருந்து பெரியாரும் அண்ணாவும் மற்றும் பல தலைவர்களும் பட்ட பாட்டின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.
ஆண்களும் நிச்சயமாக முன்னேறுவார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு அங்கே அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாதுகாப்புக்கு சுவர் மாத்திரமல்ல, இன்னும் பாதுகாப்பு தேவை என்று உயர்வர்க்கத்தார் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் சொல்வார்களேயானால், நான் அவர்களுக்கு சொல்வேன். இன்னும் சில மாதங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக் கூடிய அளவிற்கு இராணுவம் வேண்டுமானால் அங்கே வர வழைத்துத் தருகிறேன் - மத்திய அரசுக்கு எழுதி வரவழைத்து இராணுவத்தை வேண்டுமானால் அங்கே வைப்போம்".
இது என்ன வழவழா கொழா பேச்சு? சுவற்றை புறம்போக்கு நிலைத்தையும் வளைத்து போட்டு கட்டியது முதற்குற்றம். அதற்கே எஃப்.ஐ.ஆர். போட்டிருக்க வேண்டும். செய்து வந்தது வன்கொடுமை. அதற்கும் எஃப்.ஐ.ஆரை. காணோம். அவர்கள் பாதுகாப்பு என்று கூறுவதற்கும் ஜால்ரா போடுவது போல அல்லவா கலைஞர் பேச்சு இருக்கிறது. தலித்துகளையும், அவர்களை வன்கொடுமை செய்பவர்களையும் ஒரே தராசில் வைப்பது போல இல்லை? என்ன ஆயிற்று கலைஞருக்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன ஒருத்தரையும் காணோம் ..
ஒரு வேளை நம்ம பொட்டி தட்ற ஆளுங்கள்ளாம் உண்மையிலேயெ வேலை செய்றாங்களோ... சே அப்படிலாம் இருக்காது நம்ம பயலுக அப்படில்லாம் நம்பிக்கை துரோகம்லாம் பண்ணமாட்டங்க, அம்பது பர்சென்ட் அப்ரெய்சல் கொடுத்தாகூட ப்ராஜக்டுக்கு ஆப்பு வைக்கற வேலைய கரெக்டா செய்வாங்களே..
சரவணன்
அல்சமைர் என்பது ஒரு மனிதனை அவனது வயோதிக காலத்தில் தாக்குகிறது இந்த நோய் தாக்க எந்த குறிப்பிட்ட காரணமும் தேவையில்லை. எப்படி இதை நான் இங்கு குறிப்பிட குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லையோ அதுமாதிரி. இதன் முதல் தாக்குதல் நினைவாற்றலையே. மேலும் மேய http://en.wikipedia.org/wiki/Alzheimer's_disease
உடம்புல் எத்தனை செல் இருந்தாலும் ஒரு சிம் கார்டு போட முடியுமா
- சூத்திரன் ஆட்சி சூத்திரனுக்கே ஆப்பு; ஒரு வேளை இதுதான் இன்டிஜினியஸோ. அடுத்தவனை நம்பாமல் அவர்களே முன்னேறும்போதுமட்டுமே இந்த தளைகள் உடையும்.
சரவணன்
கும்மி...
இந்த சுவத்துக்கும் இஸ்ரவேலர்கள் மேற்கு கரையில் கட்டிய சுவற்றுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்று டோண்டு சார் சொல்லவும்
சரவணன்
//இந்த சுவத்துக்கும் இஸ்ரவேலர்கள் மேற்கு கரையில் கட்டிய சுவற்றுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்று டோண்டு சார் சொல்லவும்//
பதில் நாளைக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது என்ன "உயர் சாதி இந்துக்கள்"? தைரியமாக அவர்களின் சாதி பெயரை கூற வேண்டியது தானே? எடுத்ததற்கெல்லாம் "பாப்பார நாய்களா" என்று அமிலத்தை கக்கும் பதிவாளர்கள் எல்லாம் இப்போது மெளனமாக ஏன் இருக்கிறார்கள்? திராவிட பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி தேச துரோகிகளாகட்டும், அவர்கள் தூக்கி போடும் விளம்பரங்களுக்காக பிச்சைகாரர்களை விட மோசமாக கூழை கும்பிடு போடும் பத்திரிகைகள் ஆகட்டும், ஒருவர் கூட இந்த "உயர் சாதி இந்துக்கள்" யார் என்று தைரியமாக கூறவில்லையே, ஏன்? இவர்களை பகைத்துக்கொண்டால் நாளை தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டி வர வேண்டும் / வாசகர்களை இழக்க வேண்டி வரும் என்பதாலா? ஆனால் பிராமணர்களை சவுக்கால் அடித்து அவமானப்படுத்தினால் கூட பரவாயில்லை, ஏனென்றால் அவர்கள் மொத்த ஜனத்தொகையில் 2% கூட இல்லையே, அதனால் தாராளமாக அவர்களை போட்டு மிதிக்கலாம் அல்லவா? We are a nation of hypocrites, aren't we?
இப்போது கூட பாருங்கள், 'கோமணம்' என்ற பதிவன் "அது என்ன தலித்துகள் மீது கரிசனம்" என்று கூறி இருக்கிறான். Change your attitude and you will change your world, Komanaa!
மற்றபடி தலித்துகள் முன்னேறுவதற்கு நல்ல கல்வி அறிவும் economic independence மட்டும் தான் ஒரே வழி. அதற்கு நாடார்களை போல இவர்களும் சுய தொழில் செய்து தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்று நிரூபிக்க வேண்டும்.
டோண்டு சார் சாரி ஃபார் த டிலே,
நான் கொஞ்ச நாள் முன்னாடி கைப்புள்ள பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டன் அதை மதிச்சு கைப்புள்ள ஒரு பதிவ நான் சொன்னதுக்காக் மீள் பதிவு போட்டுருக்கார். அதை பார்த்து அங்க ஓடி போய் நன்னி சொல்லிட்டு வந்தேன். பதிவு அன்னையர் பற்றியது, அன்னையர் தினம் நெருங்கும் வேளையில் இது மிக தேவையான பதிவு. அதனால் உங்கள் அனுமதியுடன் ஒரு விளம்பரம் கைபுள்ள பதிவுக்கு,
http://kaipullai.blogspot.com/2008/05/blog-post_08.html
படிச்சு பாருங்க மக்கா நாம நம் தாய்க்கு தலைவணங்குவோம். உலகில் பொய்மை இல்லா உண்மை தாய்மை !.
சரவணன்
இந்த சுவற்றை கட்டிய பிள்ளைமார் ஜாதி வெறியர்களை கண்டிக்கிறேன்.
(அது என்ன உயர் சாதி. பிள்ளைமார் ஜாதி என்று பொதுவில் போட்டு உடைப்பது தான் சரி.)
இணையத்தில் புரட்சி பேசும் பிள்ளைமார் பெரியாரிஸ்டுகள் (வெளியே மிதப்பவர், வரவை அனைப்பவர் ) அமைதிகாப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. கீழ்வெண்மணி எஃபெக்ட் தான்.
Dondu sir,
please let us have your answer for-
""WHY DID THE CHICKEN CROSS THE ROAD ??""
---------------------------
KINDERGARTEN BOY:- To get to the other side.
PLATO For the greater good.
HIPPOCRATES:-
Because of an excess of phlegm in its pancreas.
MARTIN LUTHER KING, JR:-
I envision a world where all chickens will be free to cross roads without having their motives called into question.
RICHARD M. NIXON:- The chicken did not cross the road. I repeat, the chicken did NOT cross the road.
BILL GATES:-
The newly released Chicken 2003, will not only cross roads, but will lay eggs, file your important documents, and balance your checkbook.
EINSTEIN:-
Whether the chicken crossed the road or the road moved beneath the chicken depends upon your frame of reference and relativity.
GEORGE BUSH:-
We are committed to establishing a democracy where chickens freely cross roads without oppression from terrorist organizations.
AZHARUDDIN:-
I am totally innocent, you know, I'm unnecessarily being dragged into this, you know, because I'm from the minority..... I neither know the chicken nor the road, you know.....
MULAYAM:-
I demand a 50% reservation of the road for the chicken class, so that they can cross the road freely without their motives being questioned .
ARJUN SINGH:-
Our policy will ensure the development of socially underprivileged chickens so that they can also cross roads.
ABDUL KALAM:-
Yes, why did the chickens cross the road? .. please tell me why? .. they crossed to go to the other side of the road... now repeat after me ....
ADVANI:-
I see Pakistani hand in this ...
VATAL NAGARAJ:-
No Tamil or outside chickens will be allowed to cross our roads, our roads are meant only for Kanadiga chickens!.
BAL THACKAREY:-
Chickens crossing the roads are against our culture; my followers will stone all such chickens which cross the road.
JAYALALITHAA:-
From reliable sources I've got the information that the chicken belongs to Karunanidhi. He is making his chicken cross the road to create law & order problems. The chicken has now been imprisoned under POTA.
Karunanidhi:-
Chicken belongs to TANSI rani.so..
AMITABH BACHHAN:-
The chicken has crossed the road?.. are you sure.. very sure ... really sure...
டோண்டு சார்:- ?????????
Whole tn should condemn this ;
hypocrites faces will get torn by this..
pillaimar jathiku kadum kandanam!!
நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு. சாலை நன்றாக எந்த ஒரு ஊருக்கும் இல்லை(கோபலபுரதிலிருந்து கோட்டை வரை தவிர), ஏழை குழந்தைகள் படிக்க சரியான பள்ளிகூடம் கிடையாது..இப்படி பல பிரச்சினைகள் இருக்க..என்னையா ஜாதி பிரச்சினை. இவற்றை எல்லாம் சுலபமாக தீர்க்க தெரியாதவர் என்னையா முதல்வர்.இந்த மாதிரி முதல்வர்களையெல்லாம் (பழைய புராணம் பேசுபவர்களை) என்ன செய்வது.இதில் அமைச்சர்கள் மட்டும் விதி விலக்கா..? அவர்களும் தங்கள் குடும்பதை மேம்படுதுவது, பிற்கால சந்ததியினருக்கு எப்படி பொருள் சேர்பது என இது போன்ற சிறு செயல்களில் தான் அவர்கள் எண்ணங்கள் உழல்கின்றன. இவற்றை எல்லாம் விடுத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படும் சுரண்டல் இல்லாத இளைஞர் சமுதாயம் அமைய வேண்டும். முதல்வர்களாக படித்தவன் மட்டுமே வரும் காலம் வருவரை, இப்படி எதுவும் சரியக வராது. படித்தவன், நன்றாக சிந்தித்து செயல்படுவான், மக்கள் முன்னேற்றதிற்காக உழைப்பவன் என வந்தால் நாட்டில் அதிரடி மாற்றங்கள் நிகழும். நான் இங்கு வந்து இந்த பதிவை படித்து பின்னூட்டம் இடுவதால் யாரும் திருந்த மாட்டார்கள், இருந்தும் என் ஆதங்கத்தை வெளிபடுத்த வேண்டும் போல் இருந்தது. நான் கூறுவது முதல்வன் பட கதை போல் இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. நான் எல்லா பெரியோரையும் சொல்லவில்லை.வயாதான அனுபவம் மிக்க படித்த பெரியோர்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். உ.தா. அப்துல் கலாம் அவர்கள். சில சமயங்களில் படித்தவர்களும் தவறு செய்வதுண்டு, ஆனால், சதவிகிதம் குறைவாக இருக்கும். மேலும், படித்தவர்கள் தவறு செய்ததால், படித்த அந்த குழுமத்தில் உள்ளவன் கேள்வி கேட்பான். ஆக, வயது முதிர்ந்து, சிந்திக்க முடியாத பெரியவரான திரு.கலைஞர் அவர்கள் இனிவரும் காலங்களில் ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.( அப்படி, ஒய்வு எடுக்கும் பட்சத்தில், ஆட்சியை தங்கள் குடும்ப வாரிசுகளுக்கு தாரை வார்க்காமல் இருத்தல் நாட்டிற்க்கு அவர் செய்யும் மிக சிறந்த காரியம ஆகும்.). தமிழ் என்ற ஒரு துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றுவதும், இளைய சமுதாயத்தினருக்கு வழி விடாமல், குறுக்கே நிற்பதும், ஒரு பழுத்த முதியவர்க்கு அழகல்ல. மேலும், இந்த நாடு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிளுக்கு பண்டார மடம் அல்ல. எத்தனையோ முன்னேறிய நாடுகளை பார்த்தாலாவது நாம் முன்னேற முயல வேண்டாமா..? நான் சொல்வது என்னவோ செவிடன் காதில் ஊதிய சங்கு என்று என எனக்கு தெரியும், என் செய்வது, என் ஆதங்கம் ..கொட்டி தீர்த்துவிட்டேன்.
//இணையத்தில் புரட்சி பேசும் பிள்ளைமார் பெரியாரிஸ்டுகள் (வெளியே மிதப்பவர், வரவை அனைப்பவர் ) அமைதிகாப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை//
எங்கப்பா பதில காணோம்..
அப்ப அவங்க உங்க மேல சொல்ர குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா
அரவிந்தன்
டோண்டு அவர்களிடமிருந்து வெளிவரும் மற்றொரு தெளிவான பதிவு.
இதுபோன்ற பல பதிவுகளை நீங்கள் எழுதவேண்டும்.
anonymous avargaluku,
unkal kopam sarithan...padithavarkal mattum nallavarkala...trafic vilation athikam pannuvathu padithavarkal than...ithil mattuma ...innum evlo...nallvarkal vara vendum....endru sollungal nanbare
பிள்ளைமார் சமுகத்தை ஒரடியாகத் தாக்குவது சரியில்லை.ஒரு குறிப்பிட்ட பகுதியினர்(300 குடும்பங்கள்)செய்த்தது மாபெரும் தவறுதான் . அந்த சமுகத்தை சேர்ந்த கணக்குப்பிள்ளை
கர்ணம் ( பதவிகள் ரத்து செய்யப் பட்டன-திரு MGRன் ஆட்சிகாலத்தில்)land record களை மிகத்திறமையாக நிர்வகித்தனர்.(அப்போதெல்லாம் ஒருவர் சொத்தை ஒருவர் ஏமாற்றி விற்க முடியாது.)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஐ தந்தது அந்த சமுகம் தான்.
முதல் தொழிலாளர் உரிமைபோர் வித்திட்டது அவர் தான்.பிள்ளைமார்
சமுகம் மிகவும் நலிந்த நிலையிலுள்ளது.அநேகம் பேர் அவர்கள் கிராமத்தைவிட்டு நகரங்களுக்கு சென்று விட்டார் கள். அவர்களது சொந்த விளை நிலங்கள் அபரிகப்பட்டு விட்டது.(குத்தகை தாரர்கள் நிலச் சுவான்தாரர்க்கு நெல்/குத்தகை பணம் கொடுப்பது என்பது ஏட்டளவில் உள்ளது)
ஜாதி கொடுமைகளை அந்தக் காலத்தில் செய்தது பெரிய நிலச் சுவான்தாரர்களே.
ஆனால் இன்று பெரும் பகுதியினர்(அரசின் சலுகைகள் ஏதுமில்லாமல்-வாழ வழியில்லாமல்) கஷ்ட ஜிவனம் நடத்துகின்றனர்.
இந்த நிலையிலும் அந்த 300 குடும்பங்களின் செயல்(போலி கெளவரவம்,வரட்டுப் பிடிவதம்,கனவுகளில் வாழும் நிலை) கண்டிகத்தக்கது.
இதை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.தமிழனத் தலைவர் கலைஞர் அவர்களின் அனுபவ அணுகுமுறை(தந்தையைப் போல் ) அவர்களை திருத்தி "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்பதை ஏற்று கொண்டு தலித் மக்களை தங்கள் சொந்த ரத்த சம்பந்த சகோதரர்கள் போல் ஏற்றுக் கொள்ளச் செய்யும்.அதற்கு அனைவரும்(பிரிவுளை கடந்து) பாடுபடுவோம்.
"மறப்போம் மன்னிப்போம்"
ஜாதிக் கொடுமைகள் வேண்டவே வேண்டாம்.
அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை உலகுக்கு உணர்த்தி மகிழ்வோம்.
//பிள்ளைமார் சமுகத்தை ஒரடியாகத் தாக்குவது சரியில்லை.//
நான் தாக்கவில்லை. உயர் சாதியினர் என்றுதான் போட்டேன். அதே சமயம் பிள்ளை சாதியை சார்ந்த யாரேனும் இனிமேல் பார்ப்பனீயம் என்று ஜல்லி அடித்தால் அவர்களுக்கு இதை உதாரணமாக காட்டி, அவர்கள் இதை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை என அசந்தர்ப்பமாகக் கேட்டு, எதிர் மரியாதை செய்வேன் என்பதையும் கூறிவிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நான் தாக்கவில்லை. உயர் சாதியினர் என்றுதான் போட்டேன். அதே சமயம் பிள்ளை சாதியை சார்ந்த யாரேனும் இனிமேல் பார்ப்பனீயம் என்று ஜல்லி அடித்தால் அவர்களுக்கு இதை உதாரணமாக காட்டி, அவர்கள் இதை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை என அசந்தர்ப்பமாகக் கேட்டு, எதிர் மரியாதை செய்வேன் என்பதையும் கூறிவிடுகிறேன்.
//
aanaal immaathiri saathi kodumaigalai uyar saathiyinar yaaridam irunthu katrukkondanar?
varunaasiramaththai aarambitha paarppanaridam irunthuthaane?
komanakrishnan
//aanaal immaathiri saathi kodumaigalai uyar saathiyinar yaaridam irunthu katrukkondanar?//
அப்படியே எல்லோரும் பாப்பாக்கள் பாருங்கள், யாரோ கற்று கொடுத்தார்களாம், இவர்கள் கேட்டு கொண்டனராம். கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேனையன் மட்டுமே நம்புவான். வேறு வேலை இருந்தால் போய் பாரும்.
டோண்டு ராகவன்
1.பிராமணர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதால் தான் திராவிட கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்பது உண்மையா?(பிராமணர் அல்லாத பிற உயர் சாதிப் பிரிவினர்,குறிப்பாக முதலியார்,பிள்ளைமார்,கார்காத்தார்,சமுகத்தார்.)
2.கேரள மன்னர்கள் பிராமணர்களின் முக்கியத்துவத்தை கட்டுபடுத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுகத்தை கேரளாவில் குடியமர்த்தினர் என்ற செய்தி உண்மையா?
3.எட்டுவீட்டு பிள்ளைமார் செய்த கலகத்தை அடக்க சிங்கம் பட்டி ஜமீந்தார் கேரளாசென்றார் என்ற தகவல் உண்மையா?
4.பிராமணர்களும் தலித்துகளும் உ.பி. மாநிலத்தில் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல் தமிழகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதா?
5.அதை தாங்கள் வரவேற்கிறிர்களா?
6.சமதர்ம சமுதாயம் உருவாக அது வழி கோலுமா?
7.கலப்புத் திருமனங்கள் இதற்கு உறுதுணையாகுமா?
8.தலித் குடும்பங்கள் தங்கள் இல்ல வைபோவங்களுக்கு பிராமண வைதீகர்களை அழைப்பது தற்சமயம் சர்வசாதரணம்
9.கோயில் தர்ம காரியங்களிலும் தலித்
சகோதரர்கள் ஈடுபடுவது கண்கூடு
10.தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,தமிழினத் தலைவர் கலைஞர்
கனவு நனவாகுமா?
//aanaal immaathiri saathi kodumaigalai uyar saathiyinar yaaridam irunthu katrukkondanar?//
From the rulers such as Kings, and Jamindars.
Muslim rulers have tried to remove the flexibility present in the caste system for their convenience. Until their rule in India intercaste marriage, intercaste legal affairs were practised. Since they started ruling the caste system slowly became stringent and inflexible.
The current caste system as practised in our period is created by the British. They have codified the stringent caste system that the muslims rulers tried to bring in India.
If you want to disprove, show one evidence from the Hindu literature that bequeath punishment for inter-caste marriages.
english-il ezuthivittal thaangal solvathu unmai aagividumaa anaani avargale?
komanakrishnan
/// english-il ezuthivittal thaangal solvathu unmai aagividumaa anaani avargale?
komanakrishnan ////
I appreciate your accepting the fact that it is the current high caste non-brahmins who created the upper and lower caste structure in India.
Post a Comment