என் கார் காந்தி சிலை அருகே என்னை டிராப் செய்து விட்டு பார்த்தசாரதி கோவிலை நோக்கி விரைந்தது. மணி அப்போது மாலை 05.45. ரோடை கிராஸ் செய்து வழமையான இடத்துக்கு வந்தால் ஏற்கனவே ஜமா சேர்ந்து விட்டிருந்தது. நான் பார்த்தவர்கள் நினைவிலிருந்து எழுதுவது: பாலபாரதி, மருத்துவர் ப்ரூனோ, லக்கிலுக், சுகுணா திவாகர், விக்கி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, பெண் பதிவர் (மலர்வனம் லட்சுமி என்று பெயரை நினைவுபடுத்திய லக்கிலுக்குக்கு நன்றி), வழக்கறிஞர் சுந்தரராஜன், அதிஷா, ஜோதிவேல், முரளி கண்ணன், ஜிங்காரோஜமீன், பைத்தியக்காரன், கடலையூர் செல்வம், கென் ஆகியோர். ஒரு மாதிரி செட்டில் ஆகி பேச ஆரம்பிப்பதற்குள் மழை பலமாக பிடித்து கொண்டது.
இங்கு எனது புதிய வழக்கம் உதவிக்கு வந்தது. வாக்கிங் போவதற்கு மழை தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே பாக்கெட்டில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையை எப்போதுமே மடித்து வைத்திருப்பேன். அதை வெளியே எடுத்து பிரித்து அதனுள்ளே என் செல்பேசி, பர்ஸ், வாட்ச் ஆகியவற்றை போட்டேன். பாலபாரதி தனது செல்பேசி, ஐபாட் ப்ளேயர் எல்லாவற்றையும் போட்டார். அவரை பின்பற்றி மற்றவர்களும் தத்தம் செல்பேசியை பையினுள்ளே போட்டனர். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து கொண்டேன். மழை இன்னும் வலுத்தது. நான் என் வாழ்நாளில் செய்ய ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை நிறைவேற்றிக் கொள்ள நேற்றுத்தான் வாய்ப்பு கிடைத்தது. அதாவது நல்ல மழையில் கடலோரம் நின்று காலை நனைக்க வேண்டும் என்பதுதான் அது. கூட யாரும் வருகிறார்களா எனக் கேட்க ஒரே ஒருவர் மட்டும் வந்தார் (ஜோதிவேல் என்று நினைக்கிறேன்). சாவகாசமாக கடலை நோக்கி நடந்தோம். எங்கள் கூடவே ம்யூசிக்கும் தொடர்ந்தது. ஆதாவது ஒவ்வொரு செல்பேசியாக ஒலிக்க ஆரம்பித்தது. பையை திறக்க இயலாதபடி மழை. பரவாயில்லை என பேசிக்கொண்டே கடலை நோக்கி சென்றோம்.
திருவல்லிக்கேணியேலேயே பிறந்து முதல் 24 ஆண்டுகள் கழித்த எனக்கு நேற்றைக்கு வங்கக் கடல் தனது மிகவும் அழகான தோற்றத்தைக் காட்டியது. கையில் செருப்பை பிடித்து கொண்டு தண்ணீரில் இறங்கினேன். தன்ணீர் திரும்பச் செல்லும்போது காலி மணல் குறுகுறுவென கிச்சு கிச்சு மூட்டி, சமீபத்தில் 1950-ல் முதல் முறையாக நான் அனுபவித்த குதூகல உணர்வைத் தந்து, அந்த வயதையும் தந்தது. அதற்குள் செல்பேசிகள் விடாது அடிக்க ஆரம்பித்திருந்தன. நாதஸ்வர இசை ஒரு செல்பேசியியின் காலெர் ட்யூன். அதுதான் ரொம்பவும் அடித்தது. இருக்காதா பின்னே, பால பாரதியின் செல்பேசியாயிற்றே. அவரவர் மீட்டிங் நடக்கும் இடத்தை தேடி அலைந்து கொண்டிருப்பவருக்கு அவர்தானே பதில் சொல்ல வேண்டும்.
திரும்ப மனமின்றி திரும்பி கொண்டிருந்தபோது ஆவேசத்துடன் ப்ரூனோவும் இன்னொரு பதிவரும் கடலை நோக்கி எங்களைத் தேடி வந்து கொண்டிருந்தனர். நான் திரும்புவதற்கும் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது. அவரவர் செல்பேசிகளை எடுத்து கொண்டனர். இப்போது பாஸ்டன் பாலாவும் அவர் நண்பர் மூர்த்தியும் வந்தனர் (இது வேறு மூர்த்தி). அவர் என் அருகில் அமர்ந்தார். இதற்குள் அதியமானிடமிருந்து ஃபோன். தனக்கு ஜுரம் என்றும் வர இயலவில்லை என்றும் தகவல் சொன்னார். பாஸ்டன் பாலாவுடன் பேச வேண்டும் என்றார். சட்டென்று அவர் கண்ணில் சிக்கவில்லை. பிறகு அவரை பேச வைக்கிறேன் என்று கூறி அதியமானது போனை கட் செய்தேன். பிறகு பாஸ்டன் பாலாவிடம் அதியமானின் எண்ணை கொடுத்தேன். அவரும் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறினார்.
அதற்குள் முறுக்கு, பால் ஸ்வீட் ஆகியவை வினியோகிக்கப்பட்டன.
இந்த மழை செய்த கலாட்டாவில் பேச நினைத்ததையெல்லாம் பேச இயலவில்லை. அதியமான் வரவில்லை என்பதில் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு ஃபீலிங். இதற்குள் வீட்டம்மாவிடமிருந்து ஃபோன். எதிர்ப்பார்த்ததற்கு மிக முன்னதாகவே பார்த்தசாரதி கோவில் தரிசனம் முடிந்து விட்டது. கார் காந்தி சிலைக்கு அருகில் திரும்ப வந்து கொண்டிருந்தது. மனமேயில்லாமல் விடை பெற வேண்டியதாயிற்று.
ஆக மீட்டிங் என்றவரை ஏமாற்றமே. ஆனால் கடலோரமாக கொட்டும் மழையில் அலைகளை எதிர்நோக்கி நின்றது அழகான அனுபவம். அதுதான் நேற்றைய அனுபவத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
5 hours ago
14 comments:
எனக்கு கூட உங்களைப்போல கடலில் நிற்க ஆசைதான் ,
என்ன செய்ய வயசாயிடுச்சு
;-)
//கூட யாரும் வருகிறார்களா எனக் கேட்க ஒரே ஒருவர் மட்டும் வந்தார் (ஜோதிவேல் என்று நினைக்கிறேன்).//
நான்தாங்க கடலலையில் நினைய உடன் வந்தவன்...
டோண்டு ஐயா!!
டோண்டுவின் கனவு!!!
இருள் சூழ்ந்த மாலை
கருத்துகள் சொல்ல வந்த வேலை வலை நண்பர்களை
வரவேற்றது வான் மழை
கூடிய கூட்டம் சிதறியது
குருவி போல்
பல நாள் கனவு
பெய்யும் மழையில்
பேண்டு இசையுடன்
கால் நனைக்க வேண்டும் கடலில் கனவு பலித்தது
புதுவை சிவா.
நன்றி அதிஷா, ஜோதிவேல் மற்றும் சிவா. இவ்வளவு ஆண்டுகளாக ஒரு தீராத தாகமாக குடிகொண்ட இந்த மழையின்போது கடலோரம் நிற்கும் ஆவல், இப்போது மிகக் குறைந்த நேரத்துக்கு மட்டும் நிறைவேறியதில் மனதுக்கு இன்னமும் வேண்டும் என்ற பேராசை கொழுந்து விட்டெரிகிறது.
மழை என்றாலே எனக்கு பிடிக்கும். சிறுவனாக இருந்த போது பெரியவர்கள் உடலுக்கு கெடுதி என பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அது உள்ளத்திற்கு ஒரு கடிவாளம் போல இருந்து வந்திருக்கிறது. முதல் தடவையாக தொண்ணூறுகளில் ஐ.டி.பி.எல். அலுவலகத்திலிருந்து கொட்டும் மழையில் 20 கிலோமீட்டர் சைக்கிள் விட்டு வந்த போது மனதில் உற்சாகம் பொங்கி வழிந்தது. போன திசம்பர் மாதம் அதே மாதிரி கொட்டும் மழையில் ஐந்தரை கிலோமீட்டர் வாக்கிங்கும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. அது எல்லாவற்றையும் மிஞ்சியது நேற்றைய அனுபவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி டோண்டு சார்.
சென்னை பதிவர் சந்திப்பு பற்றி தெரிந்துக்கொள்ள, நேற்றிலிருந்து பதிவுகளை தேடிக்கொண்டிருகிறேன். யாருமே இன்னும் எழுதவில்லை.
நீங்கள்தான் ஃபர்ஸ்ட் என நினைக்கிறேன்.
நன்றி மீண்டும்.
தலைநகர் சென்னை மாநகரில் கூடிய
தமிழார்வப் பதிவாளர் பதினாறு பேறுடனே
அருமை டோண்டுஐயா கூடி மகிழ்ந்திட்ட
அன்பு பரிமளித்த ஆர்வலர் பரிமாற்றத்தை
மேனி தழுவும் மென்காற்றாம் தென்றல்
மேளதாளம் கொட்டி வாழ்த்தி மகிழ்ந்ததுவோ!
//நீங்கள்தான் ஃபர்ஸ்ட் என நினைக்கிறேன்.//
தவறு. ஏற்கனவே அதிஷா அவர்கள் பதிவு போட்டாகி விட்டது. இப்பதிவிலேயே அவர் பெயரின் மேல் க்ளிக் செய்தால் அப்பதிவுக்கு செல்லலாம்.
அன்புடன்,
டோம்டு ராகவன்
நல்ல பதிவு டோண்டு சார். எப்படியோ பதிவர் சந்திப்பின் வாயிலாக மழையில், கடலலையில் கால்நனைத்து உங்கள் நீண்டநாள் ஆசையை தீர்த்துக்கொண்டீர்கள்.
//நல்ல பதிவு டோண்டு சார். எப்படியோ பதிவர் சந்திப்பின் வாயிலாக மழையில் கடலையில் கால்நனைத்து உங்கள் நீண்டநாள் ஆசையை தீர்த்துக்கொண்டீர்கள்.//
மழையில் நனைந்த கடல்கன்னி(களின்) பருவ அழகை சேர்தல்லவா சேர்த்தல்லவா டோண்டு ரசித்திருக்கிரார்.
Dondu sir... Just for fun.. dont take it offended...
//மழையில் நனைந்த கடல்கன்னி(களின்) பருவ அழகை சேர்தல்லவா சேர்த்தல்லவா டோண்டு ரசித்திருக்கிறார்.//
:)))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
வலைப்பதிவின் whole concept (எழுத்தாளர் வாசகர் உறவு-வலைப்பதிவில் கருத்துக்கே முக்கியத்துவம்,கருத்தரு'க்கு அல்ல போன்ற விதயங்களையும்)ஐயும் நினைந்து பதில் கூறவும்.
இந்த வித வலைப்பதிவர் சந்திப்பின் நோக்கம்,பயன் என்ன?
எனக்கு இது வெட்டி வேலை எனத் தோன்றுகிறது..
வலைப்பதிவர்களைத் தெரிந்து நண்பர்களாக்கிக் கொள்ள-என்ற மொக்கை பதில் வேண்டாம் !
1.தமிழ்மண நிர்வாகிகளின் பெயர்கள் என்ன? அவர்களது நிர்வாகச் செலவை
சமன் செய்வது எப்படி.
2.பதிவர்களின் சில தளங்களில் உள்ள விளம்பரவருவாய் தமிழ்மனத்திற்கா?
3.பல ஒத்த கருத்து உள்ள பதிவாலர்களிடையெ லிங் உள்லதுபோல் பிற தமிழ்திரட்டிகளுக்குகம் தமிழ்மணத்துக்கும் லிங் கொடுக்க முயற்சி செய்யலாமே?
4.
சில நல்ல பதிகளுக்கு பின்னூட்டம் இல்லாச் சூழ்நிலையும்,ஒரு சில பதிவாளரின் பதிவுகளுக்கு குவியும்( பரஸ்பர நல்லுணர்வு)பின்னூட்ட இஸம்
எதோ சொல்வது போல் உள்ளதே?
இங்கும் கொள்கைக் கூட்டணி அரசியலா
5. அநாகரிக,பண்பு கெட்ட வார்த்தைகளுடன் பவனிவரும் பின்னூட்டங்களை தடுக்கும் firewall வசதி இருந்தும் சில பதிவாளர்கள் அனுமதிப்பது ஏன்?
6. வாசிப்பவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்பதற்காகவே வைக்கப் படும் தலப்புகளை பார்த்தீர்களா?
7.அ.தி.மு.க சார்ந்த பதிவர்களே இல்லாதது போல் உள்ளதே?காரனம்.
8.ஒருவரின் கருத்து,கொள்கை பிடிக்கவில்லை யென்றால் கருத்து மோதல் செய்யாமல் ஜாதி,இன,தனி மனித துவேஷம் செய்வது ?
9.ஒரு சில பதிவாளரின் பதிவுகளை படிப்பதற்கே நேரம் போதவில்லையே,உண்மைதமிழன் போன்ரோருக்கு ஒரு நாள் 28 மணி நேரமா?
10.பதிவாளர்,வாசகர்,தமிழ் ஆர்வலர் தமிழ் மாநில மாநாட்டிற்கான முற்சிகளை செய்யும் எண்ணம் உண்டா?
//பிறகு அவரை பேச வைக்கிறேன் என்று கூறி அதியமானது போனை கட் செய்தேன். //
நல்லா வேலை செய்யற போன ஏன் கட் பண்ணினீங்க? மாடல் பிடிக்கலைன்னா 'யுனிவர்சல்'ல எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமே?
மொக்க மோஹன்
Post a Comment