முதலில் 05.06.2008 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் இந்தச் செய்தியைப் பார்ப்போமா: (திடீரென சுட்டி வேலை செய்யாவிட்டால் என்ற யோசனை வந்ததால் அதை அப்படியே இங்கும் நகலிடுகிறேன். நன்றி: குமுதம் ரிப்போர்டர்)
"ஆளே இல்லாத கடையில யாருக்கய்யா டீ ஆத்துற?'' என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் காமெடி பண்ணுவார். அந்தக் கதையாக மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்திற்கு இலவச டி.வி. வழங்க அரசு தயாராக இருக்க, அந்த கிராம மக்களோ, அதைப் புறக்கணித்துப் போராடத் தயாராகி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பச்சைகுளம் என்ற கிராமத்தில்தான் இப்படியொரு விசித்திரம். இந்த கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களும், பிற வகுப்பைச் சேர்ந்த இருபது குடும்பங்களும் வசிக்கின்றன. ஆனால் ஒருவர் வீட்டிலும் மின்சார வசதி கிடையாது. அது மட்டுமல்ல, தண்ணீர் வசதி, பேருந்து வசதி, ரேஷன் கடை வசதி என எதுவுமே இல்லாமல் ஆதிவாசிகளைப் போலத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் முதல்வர் பிறந்த மாவட்டம் என்பதால், அவரது 85-வது பிறந்த நாளை இந்தப் பகுதிகளில் வெகு ஜோராகக் கொண்டாட தி.மு.க. வினர் ஏற்பாடு செய்துவருகிறார்கள். இந்தச் சமயம் பார்த்து பச்சைகுளம் கிராம மக்கள் இப்படிப் போராடக் கிளம்ப, லோக்கல் தி.மு.க. புள்ளிகள் கிலியடித்துக் கிடக்கிறார்கள்.
இதுகுறித்து நாம் பச்சைகுளம் கிராமத்திற்குச் சென்று சிலரிடம் பேசினோம். வீரமணி என்ற இளைஞர், ``இதுவரை எங்க ஊரில் மின்வெட்டே இல்லைங்க. ஆச்சரியமா இருக்கா? மின்சாரம்னு ஒண்ணு இருந்தாத்தானே அதில் வெட்டு வரும்? ம்.... நாங்களும் எங்க கிராமத்துக்கு மின்சார வசதி வாங்க நாயாப் பேயா அலைஞ்சு பாத்துட்டோம். ஆனா அது கடைசி வரைக்கும் கனவாகவே போயிடும் போலிருக்கு. 2001-க்கு முன்பு நாங்க குடிசை வீடுகள்லதான் இருந்தோம். ஏதோ புண்ணியம் பண்ணி எங்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தாங்க. சரி, இனி கரண்ட் வசதி வந்துடும்னு ஆசையா காத்துக் கிடந்தோம்.
ஆனால் கிடைக்கல. நாங்க படும் அவஸ்தைகளைப் பார்த்து இரக்கப்பட்டு தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்த காண்ட்ராக்டர் ராஜேந்திரன், ஒரு சோலார் தெருவிளக்கு மட்டும் அமைச்சுக் கொடுத்தார். ஒரு வருஷம் அது நல்லாத் தான் எரிஞ்சுது. இப்ப அதுவும் கெட்டுப்போச்சு. ஊராட்சித் தலைவர்களா இருந்தவங்க எங்க ஊரைக் கண்டு கொண்டதே இல்லை. எங்க தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கமும் எங்க ஊரைக் கண்டுக்கலை'' என்றார் விரக்தியாக.
நாகூரான் என்பவரோ, "ராத்திரியானா எங்களால எந்தப் பக்கமும் பயமில்லாம போக முடியல. பாம்பு, தேளுன்னு ஏதாவது கடிச்சுடுது. இப்படிப் பாம்பு கடிச்ச இரண்டு பேரோட உயிரை போராடிக் காப்பாத்தினோம். கரண்ட் வசதி இல்லாததால போர்போட்டு விவசாயமும் செய்யமுடியல. அதுமட்டுமில்ல, ரேஷன் வாங்க ஏழு கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ரிஷியூருக்குத்தான் லொங்கு லொங்குன்னு ஓட வேண்டியிருக்கு.அதே மாதிரி பஸ் ஏற ஆறு கிலோமீட்டர் தள்ளியிருக்கிற வாளாச்சேரிக்கு ஓடணும்.தண்ணிதூக்க இரண்டு கிலோமீட்டருக்கு அங்கிட்டு இருக்கிற அனுமந்தபுரத்துக்குப் போகணும். இப்படி நாங்க தினமும் நாய்படாத பாடு படவேண்டியிருக்கு. இ.பி. ஆபீஸ்ல கொடுத்த நம்பிக்கையில பத்து வீடுகள்ல ஒயரிங் பண்ணி வச்சிருக்கோம். ஆனா நாங்க காலம் முழுக்க இருட்டோட போராட வேண்டியதுதான் போலிருக்கு'' என்றார் வேதனையோடு.
வசந்தி என்ற பெண்மணி,"இப்படி இருட்டோட போராடுறதுக்கு செத்திடலாம்னு தோணுது. பின்ன என்னங்க? கவர்ன்மெண்டுல கொடுக்கிற மூணு லிட்டர் மண்ணெண்ணெய்யை வைச்சுக்கிட்டு நாங்க எப்படி காலந்தள்ள முடியும்? `பிள்ளை பெறும் முன்னால பேரு வச்ச கதை'யா, இலவசமா கலர் டி.வி. தர்றாங்களாம். டி.வி. கொடுக்கும் முன்னாடி கரண்ட் வசதி செஞ்சு கொடுக்கட்டும். இல்லைன்னா டி.வி.யோட, ஆளுக்கு ஒரு ஜெனரேட்டரும் கொடுக்கட்டும்'' என்றார் அதிரடியாக.
நீடாமங்கலம்மின்சார வாரிய ஜெ.இ.பிரபாவிடம் இதுகுறித்துக் கேட்டோம். "சில காரணங்களால் பச்சை குளத்திற்கு கரண்ட் வசதி கொடுக்க முடியவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். இதைப் பெரிது படுத்தவேண்டாம்'' என்றார்.
"பச்சைகுளம் இருப்பது கலைஞர் பிறந்த மாவட்டத்தில் என்பதாலும் அவரது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்பட இருப்பதாலும் முதல்வருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் அந்த கிராம மக்களைத் தூண்டி விடுகிறார்கள். குறிப்பாக, எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் இதில் முனைப்புக் காட்டுகிறார்'' என்றார்கள் தி.மு.க.வினர் சிலர்.
ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான வைத்தியலிங்கத்திடம் பேசினோம். "நான் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. இல்லை. இந்தப் பிரச்னையை ஆளும் கட்சிதான் தீர்க்க வேண்டும்.மற்றபடி நான் யாரையும் தூண்டிவிடவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரிடம் பேசினோம்."அந்த கிராமத்தில் மின்சார வசதி கிடையாது என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். தொகுப்பு வீடுகளுக்கு கட்டாயம் மின்சார வசதி செய்து கொடுத்திருக்க வேண்டுமே?நாளைக்கே அந்த ஊருக்கு அதிகாரிகளை அனுப்பி,உடனே அங்குள்ள குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்.என் கவனத்திற்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்ததற்கு நன்றி'' என்றார் நம்பிக்கையான வார்த்தைகளில்.
(ரிப்போர்ட் எழுதியது: ஸீ துரை. வேம்பையன்)
இப்போது டோண்டு ராகவன். மாவட்ட கலெக்டரின் தனது மாவட்டத்தை பற்றிய அறிவு புல்லரிக்க வைக்கிறது. ஜே.இ. அவர்களோ ஒரு படி மேலே போய் "சில காரணங்களால் பச்சை குளத்திற்கு கரண்ட் வசதி கொடுக்க முடியவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். இதைப் பெரிது படுத்தவேண்டாம்'' என்கிறார். அப்படி என்னத்தான் காரணங்கள் ஜே.இ. அவர்களே? உங்கள் வீட்டுக்கு ஒரு அரை மணிநேரம் மின்வெட்டு வந்தால் தாங்குவீர்களா? இந்தப் பதிவு வெளிவரும் இந்த நேரத்திலாவது மின்வசதி வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஒரு வேளை டி.வி. அளிப்பு விழாவுக்காக தற்காலிக போஸ்டுகள் போட்டு வயர் இழுத்துவிட்டு அப்புறம் எல்லாவற்றையும் திரும்ப எடுத்து கொண்டு போயிருக்கலாம். எதுவானாலும் இது கழக அரசுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அதே சமயம் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கமும் நழுவல் பேச்சு பேசுவது நன்றாகத்தான் இல்லை. அவர் அமைச்சராக இருந்தபோது ஏன் இதை செய்யவில்லை என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாகவோ அதற்கு அவர் பதில் கூறியதாகவோ தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
24 comments:
டோண்டு சார் JE ய விடுங்க ஓட்டு வாங்கி ஜெயிச்ச MLA இவ்வளவு நாள் மணி ஆட்டிட்டா இருந்தாரு ........
//டோண்டு சார் JE ய விடுங்க ஓட்டு வாங்கி ஜெயிச்ச MLA இவ்வளவு நாள் மணி ஆட்டிட்டா இருந்தாரு ........//
எல்லதொட சூப்பர் அந்த ஊரு கலெக்டர்தான், அவரு எதை அடிச்சுகிட்டு இருந்தாரோ. இந்த அழகுல உனக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாண்ட்டம் வேற... தூ
//
இந்த அழகுல உனக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாண்ட்டம் வேற... தூ
//
அனானி அவரு இதுக்கு என்ன பண்ணுவாரு .....
அப்புறம் பிறந்தநாள் கொண்டாடுறது அவரோட பிறப்புரிமை
குஜராத்துல ஜோதிக்ராம் திட்டப்படி 100% கிராமங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் (ஆற்காடு வீராச்சாமி மின்சாரம் அல்ல) வந்து ரொம்ப நாளாச்சி. நம்மூருக்கு எப்போ விடிவுகாலமோ. முப்பெரும் விழா, பிறந்த நாள் கொண்டாட்டம், இளைஞரணி எழுச்சி மகாநாடுன்னு சொல்லிட்டிருக்கவே நேரம் பத்தலை. இவங்க எப்போ, வந்து, என்னத்த நல்ல காரியம் செஞ்சு ஹூம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குஜராத்துல ஜோதிக்ராம் திட்டப்படி 100% கிராமங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் (ஆற்காடு வீராச்சாமி மின்சாரம் அல்ல) வந்து ரொம்ப நாளாச்சி. நம்மூருக்கு எப்போ விடிவுகாலமோ. முப்பெரும் விழா, பிறந்த நாள் கொண்டாட்டம், இளைஞரணி எழுச்சி மகாநாடுன்னு சொல்லிட்டிருக்கவே நேரம் பத்தலை. இவங்க எப்போ, வந்து, என்னத்த நல்ல காரியம் செஞ்சு ஹூம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
டோண்டு சார், உங்க புண்ணியத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன், பார்க்க "வாய்" "மை" யே வெல்லும்
எல்லா அரசுகளும்,அரசியல் கட்சிகளும் நகரங்களின் மேல் தான் கவனம் செலுத்துவதால்தான் கிராமங்களில் இந்த பரிதாபநிலை.
மேலும் அரசு அதிரிகளின் மெத்தனப் போக்கு உலகறிந்த உண்மையல்லவா.
அரசியல்வாதியின் தலையீடு கொஞ்சம் இங்கு அதிகம்
அதுவும் கலைஞரை தாய்த் தமிழகத்து தந்து மகிழும் திருவாருர் மாவட்டத்தில்
அவரது 85 பிறந்தநாள் கொண்டாடும் சம்யத்தில் இது ஒரு கரும் புள்ளிதான்
இதற்கு அப்புறமாவது வெளிச்சம் அவர்கள் வாழ்வில் வந்தால் அந்த குமுதம் ரிப்போர்ட்டருக்கு கை கொடுக்கலாம்.
சரியான நேரத்தில் உலகின் கவனத்தை
திருப்பியதற்கு.
இலவசங்களை இல்லாமல் ஆக்கும் நிலை இங்கு வருவது எப்போது சார்?
சும்மா கிடச்சா சுவைக்காது
உழைக்காமல் கிடச்ச உணவு ருசிக்காது
உடம்பில ஒட்டாது
உண்மை தெரிவது எப்போது
உலகம் திருந்துவது .........
வாருங்கள் உஷா அவர்களே. நீங்கள் சொல்வது புது செய்தி. ஆனால் அதை நம்பாமலிருக்க எந்தவிதப் பிரமேயமும் இல்லைதான்.
ஆனால் ஒரு சந்தேகம். இதை ஏன் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரங்களில் சரியாக எடுத்து கூறவில்லை? கிராமங்களில் 100% மின்சாரம் என்பது ஒரு ஆண்டுக்கும் மேலாக சொல்லப்பட்டபோது ஏன் காங்கிரசார் இதை எதிர்த்து கூறவில்லை?
குஜராத் எலெக்ஷன் கவரேஜுகளில் மீடியாவினர் யாருமே இது பற்றி கோடி காட்டவில்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இலவசங்களை இல்லாமல் ஆக்கும் நிலை இங்கு வருவது எப்போது சார்?//
மக்கள் வரிப்பணத்திலிருந்து தங்கள் பாட்டன் சொத்து போல இலவசங்களை தந்து அதிகாரத்துக்கு வரும் முதலமைச்சர் இருக்கும்வரை இலவசம் எப்படி போகும்? அதுவும் அப்படிப்பட்ட முதல்வரை "அதுவும் கலைஞரை தாய்த் தமிழகத்துக்கு தந்து மகிழும் திருவாருர் மாவட்டத்தில்
.." என்றெல்லாம் விதந்தோதும் குருட்டு தொண்டர்கள் இருக்கும் வரை இலவசம் எப்படி ஐயா போகும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்புறம் பிறந்தநாள் கொண்டாடுறது அவரோட பிறப்புரிமை//
ரோமா நகரம் எரியும் போது மன்னன் நீரோ பிடில் வாசித்த கதைய போல இது இருக்கு.
எல்லாருக்கும் மின்சார வசதி கொடுப்பாங்க என்ற நம்பிக்கையில் தானே இந்த துறை அரசு எடுத்து நடத்துகிறது. அப்படி செய்யாதது பச்ச துரோகம் இல்லையா?
அந்த ஊர்ல இருக்கும் மக்கள் ஏன் வரி கட்ட வேண்டும். வரி கட்டியதற்கு இணையான பொது சேவைகள் இவர்களுக்கு ஏன் அளிக்கபடுவதில்லை. அப்படி அளிக்காதது பச்ச துரோகம் இல்லையா?
இப்படி தலைவருங்க பிறந்த நாள் கொண்டாடும் போது தான்
மக்களுக்கு எதாவது நல்லது நடக்கிறது.
எங்கள் ஊருக்கு ஆளும் கட்சி தலைவர்கள் வந்தால் தான்
ஓட்டையான ரோடுகள் அடைக்கப்படும்
பரவாயில்லை அவர்களை மாதத்திற்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட சொல்லுங்கள்
வால்பையன்
//குஜராத்துல ஜோதிக்ராம் திட்டப்படி 100% கிராமங்களுக்கு 24 மணி நேர மின்சாரம் //
நீங்களும் எதற்கெடுத்தாலும் குஜராத்தை இழுப்பது, மோடியின் மேல் உள்ள பற்றை தான் காட்டுகிறது, இந்தியாவிலேயே அங்கே மட்டும் தான் தடையில்லாத மின்சாரமா?
வால்பையன்
//இந்தியாவிலேயே அங்கே மட்டும் தான் தடையில்லாத மின்சாரமா?//
வேறு எங்கு உள்ளது என்பதையும் நீங்களே கூறிவிடுங்களேன். அதையும் கேட்டு சந்தோஷம் அடையலாம். நாடே குஜராத் மாதிரி ஆகவேண்டும் என்பதுதானே எனது ஆசை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பரவாயில்லை அவர்களை மாதத்திற்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட சொல்லுங்கள்//
வால் இப்பலாம் தலீவங்களுக்கு 1 இல்ல 2 பொறந்த நாளு dont worry
தமிழ் மாசத்துல ஓன்னு இங்கிலீசு மாசத்துல ஒன்னு
சிலரின் கருத்தையும் , வாத்தையும் பார்க்கும் போது அந்த கிராமத்துக்கு 1996 - 2001 , 2006 - 2008 மட்டும் தான் மின்சாரம் இல்லை, 1991௯6, 2001-06 வரை அவர்கள் ஒளி வெள்ளத்தில் இருந்தது போல தெரிகிறது..
முப்பெரும் விழா, இளைஞர் மாநாடு.. இதோடு , இளைஞர் பாசறை , இளம் பெண் பாசறை விழா எல்லாம் ஏன் மறந்துப்போனது
//
குஜராத்துல ஜோதிக்ராம் திட்டப்படி 100% கிராமங்களுக்கு 24 மணி நேர மின்சாரம்
//
சார் அதென்ன 24 மணி நேர மின்சாரம் ,
குஜராத்ல மண் குடம் உடச்சாலும் பொன் குடமா..
//1991௯6, 2001-06 வரை அவர்கள் ஒளி வெள்ளத்தில் இருந்தது போல தெரிகிறது..//
1991-96, 2001-06 வரை அவர்களுக்கு மட்டும் தான் அப்போ மின்சாரம் இல்லை, இப்போ முழு தமிழ்நாட்டுக்கும் மின்சார தட்டுப்பாடு, ஒரே ஒளி வெள்ளம் தான்..
//சார் அதென்ன 24 மணி நேர மின்சாரம் //
அடப்பாவமே தமிழ் நாட்டுல இருந்தா இதான் நிலைமை, 24 மணி நேர மின்சாரம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. என்ன கொடுமை சரவணன் சார் இது
துக்ளக் ஆண்டுவிழா பற்றிய பதிவில் நான் எழுதியது இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-3.html
"தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது. நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது? ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார்.
அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்".
இதெல்லாம் செய்யாது வெட்டியாக தான் அதிகாரத்துக்கு வருவதற்காக இலவசங்களை அரசு பணத்திலிருந்து எடுத்து வாரிவிட்டால் இப்படித்தான் பல பச்சைகுளம் கிராமங்கள் தொடர்ந்து இருக்கும். இந்த லட்சணத்தில் முதலில் பிறந்த நாள் விழாவே வேண்டாம் எனக் கூறிவிட்டு, பிறகு லஜ்ஜையே இல்லாது மணிக்கணக்கில் அள்ளக்கைகளின் புகழாஞ்சலியை கேட்டால் நாடு எப்படி உருப்படும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதுவும் அப்படிப்பட்ட முதல்வரை "அதுவும் கலைஞரை தாய்த் தமிழகத்துக்கு தந்து மகிழும் திருவாருர் மாவட்டத்தில்
.." என்றெல்லாம் விதந்தோதும் குருட்டு தொண்டர்கள் இருக்கும் வரை இலவசம் எப்படி ஐயா போகும்?//
டோண்டு சார் தமிழினத் தலைவரை
சில காரனங்களுக்காக( நாத்திகம்,இட ஒதுக்கீடு) தமிழக்த்தில் எதிர்ப்பவர்களின் ஒட்டு வங்கியை கைப்பற்றிதான் M.G.R யும்(13 வ்ருடம்) ,பின்னர் selvi jeyalaltha வும்(10 வருடம்) ஆட்சி அதிகாரத்தை செய்தார்கள்.இப்போது அந்த ஓட்டு வங்கியில் விஜயகாந்த்,சரத் குமார் பங்கு போடுவதாக தெரிகிறது.
2006 க்கு முன்ணால் இருந்த கலைஞர் வேறு,2008 ல் நாம் பார்க்கும் பண்புகாக்கும் கலைஞர் வேறு.
அதிமுகா,பாஜக தவிர அனத்து தமிழக கட்சிகளும் அவரின் 70 ஆண்டுகால பொதுவாழ்வுச் சிற்ப்புகளை பாராட்டி மகிழுவதை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.
அன்பழகன் -ராஜராஜனாகக் காண்கிறார்
பிணாவ்-தன்னிரகற்ற தலவ்ர் என்கிறார்
சோனியா காந்தி-இந்தியாவின் த
லைவர் என்கிறார்
பொதுடமை கட்சிகள்9 (இடது,வலது ) தாழ்த்த்ப்பட்ட இன பாது காவலர்,சிறுபான்மை இன நலவிரும்பி)
அன்புமணீ-வாழ்வு வழிகாட்டி என்கிறார்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்
கலைஞரின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் தெரிகிறது.
அரசியல் முடிவுகளில் நல்ல நிதானம் தெரிகிறது
எதிரிகளை,துரோகிகளை கூட மன்னித்து அவருக்கு நல்லது செய்யும் பண்பு கூடியுள்லது.
ராம்ன் என்றாலே வெடித்துக் சிதறும் கோபக் கருத்துகலை மாற்றி,தனது கனவுத் திட்டதிற்கு " சேது ராம்"
என பெயர் சூட்டும் அளவுக்கு கனிந்து விட்டார்.
டோண்டு சார் உங்கள் பார்வையில், குஜராத்தில் உள்ள மோடி அவ்ர்களை வானாளவாய் புகழ பல காரனங்கள் இருக்கும் போது ( மின் வெட்டு பற்றி-ramachandranusha(உஷா)-உண்மை நிலை-பதிவை படித்தேன்)
1967க்குப் பின் வந்த திமுக/அதிமுக ஆட்சிகளில் 31 வருடங்கள் ஓடி விட்டது.( 5 முதல்வர்களை பார்த்து விட்டது)
கேரளா,ஆந்திரா,கர்நாடக ஆகிய தென் இந்திய மாநிலங்களை விட இந்த கால கட்டத்தில்( span of 30 yeras)
சாலைவசதி,குடிநீர் வசதி,போக்கு வரத்து வசதி,அdiப்படை கட்டமைப்புகள் வசதி(2nd-3rd நிலை நகரங்களிலும் சேர்த்து-), கல்வி வசதி,உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சி
போற்றுதற்கு உரியதா இல்லையா?
இவைகளுக்கெல்லம் வித்திட்டது கலைஞர் தான்.
ஆன்மீக உலகில் பெரியதேரால் பெருமை திருவாருர்க்கு
சமுதாய நல வாழ்வில் கலைஞரால்
பெருமை திருவாருர் மாவட்டத்திற்கு
அதே உஷா அவர்கள்தான் இங்கு குறிப்பிட்டுள்ள அவரதுஇ அந்தப் பதிவில் பிற்பாடு இந்த பின்னூட்டத்தையும் போட்டுள்ளார்.
"தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு என் கண்ணில் பட்டது, சரியான தலைமை இல்லை, சமஸ்தான இளவரசர் போல, ராகுல்காந்தி தன் ரதகஜ படையுடன் வந்துப் போனார். ஆனால் மோடி அவர்களுக்கு மக்களின் நாடி துடிப்பை தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல நிர்வாகி, தொழில் முனைவோர்களுக்கு
லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு, ஏராளமான முன்னேற்ற திட்டங்கள். அருமையான சாலை வசதி. மாநிலத்தை முன்னேற்ற
வேண்டும் என்று செயல்படுவதாய் பலரும் சொல்ல கேட்டேன். இந்துமத சார்ப்பு என்ற வாதத்துக்கு பதில் முஸ்லீம் எண்ணிக்கை
வெறும் 3% மட்டுமே. அதனால் இந்துக்கள் ஓட்டு அவருக்கே கிடைத்ததில் அதிசயமில்லை. இந்த மின் வெட்டு பற்றி எல்லாம் நாங்கள் வாங்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும், எக்ஸ்பிரசிலும் வரவில்லை. கல்கியும் துக்ளக்கும் எந்த குஜராத்தியரும் படிக்கப் போவதில்லை- இது டோண்டுவுக்கு.."
இந்த மின்வெட்டு ஏன் பத்திரிகைகளில் வரவில்லை என்று நான் அவரை கேட்ட கேள்வியடங்கிய பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
மோடியை பார்த்த பிறகு, அவரால் குஜராத் அடைந்த முன்னேற்றத்தை பார்த்த பிறகு மற்ற முதல் மந்திரிகள் மிகச்சாதாரணமாகவே தெரிகிறார்கள். அதுவும் மோடி பொதுப் பணத்தை எடுத்து தான் அதிகாரத்தில் நிலைத்து நிற்க ரூட் விடவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், இரண்டு திருத்தங்கள். நான் பயணித்தது எல்லாம் ஹைவேஸ். உள்ளே எப்படி என்று தெரியவில்லை. அடுத்து,
குஜராத் முழுக்க மின் வெட்டே இல்லை, எல்லா கிராமங்களிலும் மின்சாரம் உண்டு என்று அங்கு சொன்னது தெரியும், இங்கு தேர்தல் சமயம் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை :-) ,மற்றப்படி ஒரு எட்டு, குஜராத் முழுக்க சுத்திப் பாருங்க, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வசனம் உல்டா ஆனது உங்களுக்கே புரியும்.
excuse me, you have not denied your statement of 24 hour electricity to 100% villages in gujarat even after hearing from Mrs.Usha , instead your diverting the discussion to something else what she has writted about gujarat. This is not an argument supporting the TN government, but its a reminder that we should be fair enough to speak the right against anyone equally..
>>> ஒரு எட்டு, குஜராத் முழுக்க சுத்திப் பாருங்க, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வசனம் உல்டா ஆனது உங்களுக்கே புரியும் <<<
:-( ? :-) ?
யாத்ரீகன் அவர்களே,
உஷா தனது நேரடி அனுபவத்திலிருந்து கூறியுள்ளார். அதே சமயம் நான் கூறியதையும் மறுக்க இயலாததுதான். அவரிடம் நான் கேட்டது கூட இந்த முக்கியமான விஷயத்தை மோடியை எதிர்ப்பதிலேயே தம் காலத்தை கழித்த பத்திரிகைகள் எலெக்ஷன் சமயத்தில் எப்படி அதை கூறாமல் கோட்டை விட்டன என்ற ஆச்சரியத்தால்தான். அதற்கான நேரடி பதில் இதுவரை இல்லை.
மின்வெட்டு விஷயத்தையே எடுத்து கொள்வோம். குஜராத்தில் ஜோதிக்ராம் திட்டத்தில் 100% விழுக்காடு கிராமங்களுக்கு மின் இணைப்பு வந்தது போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் வந்துள்ளது? தமிழகத்தில் உள்ள நிலை இப்பதிவில் தெள்ளத் தெளிவாகப் கூறப்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்து கொள்ள இயலும் மனதிருந்தால் என்பதற்காக குஜராத்தில் நடந்த முன்னேற்றத்தை கூறினேன். 24 மணி நேரமும் மின்சாரம் என எல்லோரும் கூறியதைத்தான் நானும் கூறினேன். இல்லை, அங்கேயும் மின்வெட்டு உண்டு என்று உஷா கூறினார். நேரடி அனுபவத்தை ஒத்து கொள்ள வேண்டியதுதான். அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள மின்சார நிலைமையும் மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமையும் ஒன்றேதான் என்று இதை மட்டும் வைத்து கூறி மனதை தேற்றிக் கொள்ள நினைத்தால் அவ்வாறே கூறிக் கொள்ளுங்களேன். எனக்கு என்ன நஷ்டம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.85 வது பிறந்த நாள் கொண்டாட்ட கலைஞரின் ஏற்புரையில் மத சார்ர்பற்ற அரசு-மதநல்லிணக்க அரசு என்று கூறி உள்ளதை பர்க்கும் போது சூரியத்தாமரை மீண்டும் அரசியல் வானில் ?
2.சேது பாலத்திற்கு கூட " சேது ராம்" என பேர் சூட்ட தயாரய் விட்டார் பார்த்தீர்களா?அனுபவத்தின் கனிவின் உச்சமா?
3.துக்ளக்,இல கனேசன் போன்ற தாமரை நலவிரும்பிகள் சூரியனின் அருகாமையின் சொந்தங்களை நெருங்குவதக வரும் பத்திரிக்கை செய்திகள் பற்றி கருத்து யாது,வரவேற்கிறிர்களா?
4.அரசியலில் எதுவும் நடக்கலாம்.அப்படி நிலை உருவாகி தேர்தலில் வந்தால் (NDF ல் கலைஞர்)
தங்களின் நிலை யாது?வரவேற்பீர்களா? அவரது மீது விமர்சனத்தை தொடர்வீர்களா?
5.விபரீத காலம் விபரீத புத்தி என ச் சொல்லி நடுநிலை வைப்பீர்களா?
( கலைஞரின் அரசியல்,பொது வாழ்வு,நாத்திகம்,ஆட்சிமுறை,இட ஒதுக்கீட்டுக் கொள்கை,சிறுபான்மை நலம் பேணுதல்,ஆதிக்க சக்திகள் பற்றிய கலைஞரின் பேச்சு ஆகியவற்றில் மீது தங்கள் விமர்சனங்கள் அனல் கக்குகின்றன)
Post a Comment