எம். கண்ணன், பாங்காக்:
1) அழகிரி முதல்வராகக்கூடிய சான்ஸ் உண்டா? அப்படி நடந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும்?
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி, "ஸ்டாலினும் அழகிரியும் முறையே ராஜீவையும் சஞ்ஜய்யையும் நினைவுபடுத்துகின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தால், அழகிரிதான் அதிகம் பொருத்தமாக இருப்பார் என்பது எனது எண்ணம். இது சரியான நீதியாகுமா என்று கேட்டால், அது இந்த இடத்தில் ரெலெவண்ட் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அடாவடிக்குத்தான் காலம் இது". அழகிரி முதல்வராவது தி.மு.காவுக்கு நல்லது. தமிழ்நாட்டுக்கு? வேறுவழியில்லை. அதற்காகவே தி.மு.க. தோற்பது நல்லது.
2) சமீபத்தில் (போன வாரம்தான் சார்!) அர்ஜுன் சிங் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினாரே. பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எனக் காரணம் சொன்னாலும் அவரும் முதல்வரும் சுமார் 1/2 மணிநேரம் தனியே பேசியுள்ளனரே. அப்போது என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள் அல்லது முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் உடன் இருந்திருப்பாரா ? முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்றாலும் தடையற்று பேச உதவி தேவைப்பட்டிருக்கும் அல்லவா? இதுமாதிரி துபாஷி பொறுப்பு செய்திருக்கிறீர்களா?
பதில்: அர்ஜுன் சிங்கிற்கு கூட தடையற்று ஆங்கிலம் பேச வரும் எனத் தோன்றவில்லை. நிற்க. புத்திசாலிகளாக இருந்தால் ஹிந்தி மற்றும் தமிழில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்?
மற்றப்படி, கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை சந்திக்க வந்த மொராக்கோ மந்திரிக்கு அவர் விருந்தளித்தார். பெரிய மேஜையை சுற்றி அவர், அவரது மனைவி, பிரதமர் வாஜ்பேயி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் அமர்ந்திருந்தனர்.
நாராயணன் அவர்கள் அருகில் மொராக்கோ மந்திரியின் மனைவி அமர அவர்கள் நாற்காலிகளுக்கு நடுவில் சற்றே பின்தள்ளி மொராக்கோ வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வந்த மொழிபெயர்ப்பாளர், மேஜைக்கு எதிர்ப்பக்கத்தில் மொராக்கோ மந்திரி திருமதி நாராயணன் அவர்கள் நடுவில் சற்றே பின்னால் வைக்கப்பட்ட நாற்காலியில் இந்தியத் தரப்பு துபாஷி டோண்டு ராகவன்.
மொராக்கோ மந்திரியிடம் நான் முதலிலேயே பிரெஞ்சில் பேசுமாறும், மொழிபெயர்ப்பு செய்யவே நான் வந்துள்ளேன் எனவும் கூறிவிட்டேன். விருந்து பாட்டுக்கு நடந்தது. எல்லோரும் உண்டனர், இரு துபாஷிகளும் வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயம். விருந்து முடிந்து எல்லோரும் போனதும் இரண்டு துபாஷிகளுக்கும் அத்தனை சர்வர்களுமாக சேர்ந்து அன்புடன் விருந்து பரிமாறினர், அதே ஐட்டங்கள் எங்களுக்கும் போடப்பட்டன.
3) த்ரிஷா கிழவி மாதிரி இருக்கிறார். அவரிடம் என்ன இருக்கிறது என விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் ஜோடி சேர சிபாரிசு செய்கின்றனர்?
பதில்: இம்மாதிரி கேள்விகளுக்கு எனது பதில், முக்கியமான இரண்டு அம்சமாக உள்ளன என்பதே.
4) சமீபத்தில் 2004 ஆம் ஆண்டு பெட்ரோல், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை என்னவாக இருந்தது. தற்போதைய விலை என்ன என ஒரு பட்டியல் போடுவீர்களா? இதற்கு என கன்ஸ்யூமர் இதழ் ஏதேனும் உள்ளதா?
பதில்: தெரியாது. கூகளில் பார்த்தால் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
5) சுப்பிரமணியன் சாமி யாரை நம்பி அரசியல் நடத்துகிறார்? அவருக்கு ஏன் யாராவது சப்போர்ட் செய்கிறார்கள். அவருக்கு அமெரிக்காவிலிருந்து சப்போர்ட் கிடைக்கிறதா?
பதில்: அவர் ஒரு சுயம்பு. 1976 நெருக்கடி காலக் கட்டத்திலிருந்தே அசத்துகிறார் அவர்.
6) ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க சந்தர்ப்பம் கிட்டுமானால் என்னென்ன கேள்வி கேட்பீர்கள் ? (கரன் தாப்பர் பேட்டியை நியாபகம் வைத்து பதில் சொல்லவும்)
பதில்: ஒரே ஒரு கேள்வியுடன் ஆரம்பிப்பேன், தர்மபுரி பஸ் எரிப்பு நிகழ்ச்சியை குறித்து. பேட்டியை முறித்து கொண்டு அவர் வெளியேறுவார். அப்புறம் காலி நாற்காலியைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.
7) நீங்கள் ஒரு நாள் முதல்வராக ஆனால் அந்த ஒரு நாளில் என்னென்ன முடிவுகளை அமல் படுத்துவீர்கள்? ஏன்?
பதில்: தேர்தலில் ஜெயித்து வரும் முதல்வருக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தங்கள் எனக்கு இருக்காது ஆதலால் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் நீண்டகாலப் பலன்கள் லேது, ஏனெனில் அவை அடுத்த நாளே திரும்பப் பெறும் அபாயம் உண்டு.
8) 'எங்கே பிராமணன்' கதையில் சோ சொல்லவருவது என்ன? முடிவு சரியாக அமையவில்லை என தோன்றுகிறது. சோ அவர்கள் அந்த நாவலில் அசோக் மூலமாக சொல்லியுள்ளபடி நீங்கள் தற்போதைய உங்கள் பழக்கவழக்கங்களை வைத்து பிராமணர் என சொல்லிக்கொள்ள முடியுமா?
பதில்: சோவின் இந்தக் கதையை பல தளங்களில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு எண்ணம் மேலே எழுகிறது. உபநிஷத்தில் இம்மாதிரி முடிச்சு கதைகள் அதிகம். பலர் பலவிதமாக புரிந்து கொள்வார்கள். அதுதான் இதன் விசேஷமே.
மற்றப்படி நான் அசோக்கின் கூற்றுப்படி கண்டிப்பாக பார்ப்பனனாக முடியாது என்பதுதான் உண்மை.
9) யாகாவாராயினும் நா காக்க - காவாக்கால் சோ காப்பர் - சொல்லிழுக்குப் பட்டு. இந்த குறளில் உள்ள 'சோ' வுக்கு அர்த்தம் என்ன?
பதில்: 'அல்லாப்பர்', 'செம்மாப்பர்' என்பனபோலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல். அதன் பொருள் '(தாமே) துன்புறுவர்' என்பது.
10) உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது? ஏன்? (போண்டா என சொல்லவேண்டாம்)
பதில்: எல்லா உணவுமே பிடிக்கும்.
11) உங்கள் வீட்டில் காலையில் டிபனா? அல்லது 10- 11 மணி நேராக சாப்பாடா? டிபன் என்றால் தினமும் வெவ்வேறு வகையா இல்லை இட்லி, தோசை, உப்புமாதானா?
பதில்: நேரடியாக காலை சாப்பாடுதான்.
12) சன் டிவி திருவிளையாடலில் ஔவையார் வேஷத்திற்கு மனோரமா பொருந்தவில்லையே? இந்தக் கால நடிகைகளில் யார் அந்த வேஷத்திற்கு பொருந்துவர்?
பதில்: கே.பி. சுந்தராம்பாளைப் போலவே ஒரு நடிகை இருக்கிறாரே, பெயர் மறந்து விட்டது. அவர் ஒரிஜினலின் ஆசியும் பெற்றவர்.
அனானி (06.06.2008 இரவு 09.46 க்கு கேள்வி கேட்டவர்):
1. Kindly give details about the petrol pricing in india, like basic price, different state/centarl taxes.
பதில்: ஆளை விடுங்கள் சார். என்னிடம் கார் கிடையாது. ஆகவே நேரடியாக பாதிக்கப்படவில்லை. டாக்சி உபயோகிக்கிறேன் என்பது நிஜமே. ஆனால் அந்த பாதிப்பு மறைமுக பாதிப்புதான். தேவையானால் பஸ்ஸில் போய்க் கொள்வேன். இக்கேள்விக்கு பதில் சொல்ல நான் அடியைப் பிடிடா பாரத பட்டா என்று பல உரல்களை அலச வேண்டும். அதிலும் ஏதாவது ஓட்டையை கண்டுபிடித்து யாராவது எழுதுவார்கள்.
2. As all the polical parties know that petrol price raise is a must, even then agitations/hartal ..etc? are they not ashamed?
பதில்: அது அவர்களது அரசியல் நிர்ப்பந்தமே.
3. Who is stopping left parties to withdraw support to central government?
பதில்: ஆதரவை விலக்கினால் தேர்தல் வரும். அதிலும் இடதுசாரி கட்சிகள் இப்போதிருப்பது போன்ற பலத்துடன் திரும்ப வருமா என்பது சந்தேகமே. பி.ஜே.பி. வந்து விட்டால் கதை கந்தல்தானே அவர்களைப் பொருத்தவரை?
4. Your BJP is also doing the same polical game. is it good?
பதில்: பி.ஜே.பி.யும் ஒரு அரசியல் கட்சி என்பதை ஏன் மறக்கிறீர்கள். தங்களது கட்சியின் நலன்களுக்கு ஏற்பத்தான் செயல்படுவார்கள், செயல்பட வேண்டும்.
5. What about modi's gujarat state taxes on petrol? (less or more)
பதில்: குஜராத்தில் உள்ள நிலைமை நோக்க இங்கே சொடுக்கவும்.
இத்துப்போன ரீல்:
1. தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்காக!கனிமொழி அதிபன் போஸ் ஆக இருந்தவர் கனிமொழி அரவிந்தன் ஆனது ஏன்? கனிமொழி அரவிந்தன் தற்போது கனிமொழி கருணாநிதி ஆனது ஏன்?
பதில்: கனிமொழி அவர்களது பெயர் மாற்றம் அவரது தனிப்பட்ட விவகாரம். இங்கே இக்கேள்விக்கு நான் பதிலளிப்பது நாகரிகம் இல்லை.
2. பாமரன் சூத்திரன் கீழோன் கடைசாதி என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி முன்பு ஆட்சிக்கு வ்ந்த காலத்தில் இருந்தே ஒரு அரசனும் இப்படி இருக்க முடியுமா? என்ற அளவிற்கு ஆடம்பர விழாக்களும்,பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க காரணம் என்ன?
1. மக்கள் இளிச்சவாயர்கள் என்பதாலா? 2. அதிகார போதையாலா? 3. இப்படி வாயும் சொல்லும் வேறு, வேறு என்று புரியாத முட்டாள்கள்தான் தன்னால் ஆளப் படப்போகிறவர்கள் என்பது தெரிந்ததாலா?
பதில்: மூன்று காரணங்களுமே இதில் வெவ்வேறு விகிதத்தில் கலந்துள்ளன.
3. இணையத்தில் மிக அதிகமாக பிராமண எதிர்ப்பு இருக்கக் காரணம் 1. மற்ற சாதியினர் தாமும் வளர்ந்து விட்டோம் என்பதைவெளிக்காட்டவா? அல்லது 2. நிஜமாகவே திக, திமுகவினர் அதிகமா? அல்லது 3. நிஜமாகவே பிராமணர்களால் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாலா?
பிராமணர்கள் அதிகம் சீறாததும் ஒரு காரணம். அவ்வாறு சீறாததற்கு ஒரு காரணம் எதிர்ப்பாளர்கள் ஏதேனும் உளறுவதற்கு எல்லாம் பதிலளித்து தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டுமா என்று பலர் நினைப்பதே காரணம். எதற்கும் எனது வெளிப்படையான எண்ணங்கள் பதிவைப் பாருங்களேன்.
4. இப்போது இணையத்தில் திரு சோவைத் தாக்க பல கும்பல்கள் கிளம்பியுள்ளதைப் பற்றி?
பதில்: அவை முதலிலிருந்தே உள்ளன.
5. திரு ரஜினி அவர்களைப் பற்றி? (அரசியலாகட்டும் அல்லது அவரது தொழில் ரீதியிலாகட்டும்)
தொழில் ரீதியாகப் பார்த்தால் உழைப்பாளி. அரசியல் ரீதியாகப் பார்த்தால் 1996-ல் வந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டவர். இதில் கூட நான் என்ன நினைக்கிறேன் என்றால் அரசியலுக்கு வந்த பிறகு தனது ஆதரவாளர்கள் செய்யக்கூடிய சொதப்பல்கள் தன்னால் சமாளிக்க முடியாமல் போய்விடுமோ என்னும் பயமே கூட அவரை வந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதிலிருந்து தடுத்தது என்பதே.
6. காங்கிரஸ் ஆட்சி போன பிறகு கருணாநிதி ஆட்சி கவிழும் வாய்ப்பு உண்டா?
போனால் என்ன, பி.ஜே.பி.க்கு ஆதரவு தந்தால் போகிறது.
7. இதுவரை கேட்ட மொக்கை கேள்விகளில் கடைசி... கலைஞர் டிவியின் தகவல் படி தமிழுக்கு 85 வயதுதான் ஆகிறது.இதனால் தமிழுக்கு செம்மொழி ஆகும் வாய்ப்பு பறிபோகுமா?
பதில்: இந்த இடத்தில் தமிழ் என்பது ஆகு பெயர், உயர்வு நவிற்சி அணி.
அனானி (07.06.2008 காலை 09.01-க்கு கேள்வி கேட்டவர்):
1. கலைஞரின் மருமான் பிள்ளைகள் கலாநிதி, தயாநிதி இவர்களின் அன்னை தஞ்சாவூர் அந்தணர்குலத்தை சேர்ந்தவர் எனச் சொல்கிறார்களே? உண்மையா, பொய்ச் செய்திகளின் புருடாவா?
பதில்: தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
2. தயாநிதியின் மனைவி இந்து ராம் குடும்பத்தை சேர்ந்தவர் எனவேதான், இந்து பத்திரிக்கை ஜெயாலிதாவின் எதிர்ப்பில் திமுகாவிற்கு கண்முடித்தனமான ஆதரவு கொடுக்கிறது? உண்மையா? (மதுரை தினகரன் பிரச்சனையை முதலில் கையில் எடுத்தது ஹிந்து ராம் அவர்கள்தான்)
பதில்: அப்படியா, தெரியாது. நான் ஏற்கனவே கூறியது போல தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச விரும்பவில்லை.
3. தயாநிதி, கலாநிதி வியாபார சாணக்கியத்தனங்கள் கலப்பு மணத்தின் கருணையா?
பதில்: கருத்து ஏதும் இல்லை.
4. அழகிரியின் வலிமையான பாதுகாப்பு கோட்டைகளை உடைத்து தாத்தா பேரன் சந்திப்பு மலருமா?
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம்.
5. தயாநிதி விவகாரம் - சம்பத், m.g.r, வை.கோ மாதிரிதானா இல்லை உண்மையில் கட்சியை வளைக்கப் பார்த்தாரா?
பதில்: சம்பத் அளவுக்கு தயாநிதி கட்சி பலம் இருந்தவராகத் தெரியவில்லை.
6. ஒருவேளை தயாநிதியின் கையில் திமுக போய்விட்டால் பெரியார் எதற்காக திராவிடர் கட்சி ஆரம்பித்தாரோ அது?
பதில்: திமுக ஆரம்பித்ததே பெரியாருக்கு தோல்விதானே. 1957-லேயே தேர்தலில் போட்டி போடலாகாது என்ற அவரது அடிப்படை கொள்கையே பறந்து விட்டதே. பிறகு என்ன?
7. ஜெயா டி.வி இப்போது உள்ள பரபரப்பில் "வாரிசு யுத்தம்"," யாருக்காக' மாதிரி ஒன்றையும் காணோமே பார்த்தீர்களா?
பதில்: எந்த வாரிசு யுத்தம் பற்றி பேசுகிறீர்கள், திமுகாவிலா அதிமுகாவிலா?
8. பா.மா.கா ஒரு எதிர் முடிவு எடுத்த பிறகும் கூட்டணி தொடரும், தொடர வேண்டும் என எப்படி சொல்ல முடிகிறது?
பதில்: சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் தத்தம் நலன் கூட்டணியில் இருப்பதால் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நிஜமான தேர்தல் வந்தால்தான் நிலைமையில் தெளிவு வரும்.
9. விஜயகாந்த் கட்சி வன்னியர் மற்றும் திருமால்வளவன் கட்சியின் வாக்கு வங்கியை "சுவாகா" செய்து விட்டதால்தான் கலைஞர் பா.மா.க வை பற்றிய மோசமான விமர்சனத்தை பேச வைத்து அதை வெளிவிட்டுவிடுகிறாறோ?
பதில்: இந்த விஷயத்தில் மோசமான விமரிசனம் பெறுவதற்காக பா.ம.காவே மிகவும் உழைத்துள்ளது என்பதை மறப்பது ஆகாது.
10. உங்கள் பா.ஜா.க பாசத்தை மறந்து நடுநிலையோடு சொல்லுங்கள் சேது சுமுதிரத்திட்டம் உலகயமயமாக்கல் யுகத்தில் தமிழக பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லதா ? இல்லையா? விளக்கவும்.
பதில்: சேது சமுத்திர பாதையில் பெரிய டாங்கர்கள் செல்ல இயலாது. மேலும் கடலின் நீர் ஓட்டத்தால் மணல் குவிந்து கொண்டுதான் இருக்கும். மணல்வாரி கப்பல்கள் விடாது செயல்பட்டு கொண்டேயிருக்க வேண்டும். அச்செலவை பாதையை உபயோகிக்கும் கப்பல்கள்தான் அதிகக் கட்டணம் என்னும் வழியில் தரவேண்டியிருக்கும். ஒரு நிலைக்குமேல் சுற்றிப் போவதே அவற்றுக்கு சாதகமானதாக முடியும். சேது திட்டத்தால் பவழப் பாறைகள் அழிக்கப்படும். சுற்றுப்புறச் சூழல் மிகுந்த அளவில் பாதிக்கப்படும். இன்னும் பல தொல்லைகள் உண்டு.
அனானி (08.06.2008 காலை 5.06-கு கேட்டவர்):
1. உலகில் நல்லவர்கள் கஷ்டப்படுவதும்,தீயவர்கள் ஆலவட்டம் போடுவதும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பார்த்து அனுபவுத்து வருகிறேம்.பெரியவர்களைக் கேட்டால் அது அவரவர் பூர்வ ஜெனமப் புண்யம் என்கிறார்? தங்கள் கருத்து யாது?
பதில்: ஏன் கடந்த 50 வருடங்கள் மட்டும்? 'நல்லதுக்கு காலமில்லை' என்னும் சொலவடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையது.
2. அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்வான் என படித்து கேட்டு இருக்கும் உலகில், நிதர்சனமாக நடத்தாக செய்தி இல்லையே?
பதில்: கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள ஹிந்துமத'த்தில் இதற்கான பதிலைத் தேடலாம்.
3. நமது பிள்ளைகளை கோவிலுக்குப் கூப்பிட்டால்,பெரியார் பக்தர்கள், இடது சாரி கட்சிகளின் புரட்சி சிந்தாந்தங்கள் பக்கமே செல்கின்றனர்(ஆனால் இது இந்து மதத்தில் மட்டும்தான்)?
பதில்: நாத்திக சிந்தனை உலகளாவியது.
4. ஐந்து முறை அல்லாவை தொழவில்லை என்றாலும்,ஞாயற்றுக் கிழ்மை சர்ச்க்கு வரவில்லை என்றாலும் அது பெரிய பாவமாக / நாகரிக மற்ற தன்மையாகக் கருதும்போது இந்து இளைஞர்கள், 25 வயதுக்கு உட்பட்டோர்?
பதில்: இந்து மதம் கட்டாயப்படுத்துவதில் நம்பிக்கை வைக்கவில்லை. அவரவர் கடவுள் அனுபவம் தனித்தனி. 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'.
5. ஆனால் வடஇந்தியாவில் பக்தி பரவசம் எல்லாக் கோவில்களிலும் கொடிகட்டி பறக்கிறது. மதுரா, காசி, அயோத்தி போன்ற அடிக்கடி செய்திகளில் பேசப்படும் கோவில்களுக்கு செல்லும்போது அங்கு உள்ள பக்திநிலை நம் உடலுக்குள் ஒரு சக்தியை முடுக்கி கிவிடுவதாக தெரிவதன் காரணம்?
பதில்: அதுவும் தன் அனுபவமே. எல்லோருக்கும் அது கிட்டுவதில்லை. பலர் நீங்கள் சொன்ன ஊர்களின் அசுத்தங்களை மட்டுமே பார்க்கின்றனர்.
6. வடஇந்தியக் கோவில்களில் முருகப் பெருமான் வழிபாடு இல்லையே? காரணம் யாது?
பதில்: அங்கு கார்த்திகேயன் என முருகனுக்கு பெயர். அவர்தான் அண்ணன். அவர் பிரும்மச்சாரி. பிள்ளையாருக்கு சித்தி, புத்தி என இரு மனைவியர். கார்த்திகேயன் யுத்தக் கடவுள், கோபக்காரர்.
7. தமிழகத்தில் சிறு கிராமங்களான சிவைசலம், கடையம், மன்னார்கோவில், களக்காடு, நவத்திருப்பதி தலங்கள்... பெரிய பிரமாண்ட கோவில்களும்,அழகு சுவாமி சிலைகளும், சிற்ப மண்டபங்களும் இருக்கும் போது வட இந்தியாவில் சுவாமிகள் சிலைகள் அழகு ததும்பும் பொம்மைகள் போல் இருப்பது காரணம் யாது?
பதில்: தென்னகத்தில் ஸ்தபதிகள், சிற்பிகள் அதிகம். வட இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் ஆட்கள் கிடையாது. தென்னகத்தில் உள்ள சிலைகளின் அழகு வட இந்திய சிலைகளில் இல்லைதான்.
8. சிவன் சொத்து குல நாசம் என்பர் ஆனல் கோவில் சொத்தை ஆண்டு அனுபவித்து வரும் அனைத்து பிரிவினரும் வளமாக வாழ்வதைப் பார்க்கும் போது?
பதில்: இதையெல்லாம் விளக்கத்தான் பூர்வஜன்ம விஷயங்கள் உள்ளன.
9. தென் மாவட்டங்களில் இந்துப் பெண்களை மதம் மாற்ற செய்யும் தந்திரம் வேகமாய் அரங்கேறுவது தெரியுமா?
பதில்: தெரியாதே. கேள்விப்பட்டதிலையே.
10. பக்தி இலக்கியங்களை அருளி சமயக் குரவர் நால்வர், பன்னிறு ஆழ்வார்கள், 64 நாயன்மார்கள் இவர்களின் தொடர்ச்சி இனி எப்போது மலரும்?
எப்போதெல்லாம் இந்துமதத்தில் பலவீன நிலை ஏற்பட்டதோ அப்போதெல்லாம் ராமானுஜர், சங்கரர், மத்வர் போன்ற பெரியவர்கள் பலர் தோன்றி தொண்டு செய்துள்ளனர். அப்போதும் பொது ஜனங்கள் தத்தம் வேலைகளை மட்டும் பார்த்தவண்ணம் இருந்தனர்.
திண்டுக்கல் சர்தார்:
1) சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என்று அந்நாட்டு அரசு கருணாநிதிக்குத் தடை விதித்திருக்கிறதாமே! இங்கு வந்து இங்குள்ள தமிழர்களையும் போராடுமாறு தூண்டிவிட்டுக் கெடுத்து விடுவார் என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாமே. உண்மையா?
பதில்: நான் இதுவரை கேள்விப்படாத செய்தி. ஆகவே கருத்து ஏதும் இல்லை.
2) மதுரையில் நேற்று(9/6/2008)ராயல் கேபிள் விசன் என்ற பெயரில் அழகிரி ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அதன் எதிரொலியாக அவரது அடியாட்கள் மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இயங்கும் அறுநூறுக்கும் மேற்பட்ட தனியார் கேபிள் அலுவலகங்களில் புகுந்து சன் குழுமத்திலிருந்து வரும் எந்தத் தொலைக்காட்சியையும் ஒளிபரப்பக்கூடாது என்று மிரட்டிவிட்டு அழகிரியின் நிறுவனம் மூலமாகப் புது இணைப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்."கலைஞர் டி.வி.யைப் பாருங்களேன். எதுக்கு எங்க எதிரியோட டிவியைப் பார்க்கவிட்றிங்க"என்று சொன்னார்களாம்! மதுரைப் பகுதியில் இனிமேல் சன் டி.வி., சன் நியூஸ், கே.டி.வி.எதுவுமே இனிமேல் ஒளிபரப்பாகாதாமே.இவிங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா? போலிசில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதோடு அல்லாமல்,ஏண்டா வீண்வம்பை விலைக்கு வாங்கறீங்க? என்று விரட்டிவிட்டார்களாம்.பத்திரிக்கைகளுக்குத் தகவல் தெரிவித்தால் பேச்சு மூச்சையே காணோம்.
பதில்: அழகிரியின் கை ஓங்கியுள்ள தருணம் இது. வேறு என்ன சொல்லமுடியும்?
அனானி (10.06.2008 மாலை 08.29-க்கு கேட்டவர்):
1. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் கூட்டணியின் எதிர்காலம் பற்றிய தங்கள் கருத்து?
பதில்: விஜயகாந்தைத் தவிர்த்து மற்றவர்கள் ஐயோபாவம் ரேஞ்சுதான். அதிலும் கார்த்திக் ஐயையோ பாவம்.
2. தலித், வன்னியர் வாக்கு வங்கியில் பெரும் பகுதியை விஜயகாந்த் கவர்ந்துவிட்டாதால்தான் பா.ம.க.தலைவருக்கும், தி.வழவனுக்கும் அவர் மீது கோபமா?
பதில்: இருக்காதா பின்னே?
3. சரத் இதுவரை தென் மாவட்டங்களில் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல் இல்லையே?
பதில்: அடுத்த தேர்தல் வந்தால்தான் நிலைமை தெளிவாகத் தெரியும். இப்போது பார்க்கும் வரை சரத்துக்கு ஏதும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
4. கார்த்திக் கதை இதற்குமேலே எடுபடுமா? (பாக்யராஜ், ராஜேந்தர் கதை ஊரறிந்த உண்மை)
பதில்: சிவாஜியை விட்டுவிட்டீர்களே.
5. பதவிப் பங்கீடு ஒரு சமாதானத்தை எட்டியுள்ளதாக தெரியவில்லை அதனால் தான் ஜுன் 3 -செப் 15-க்கா?
பதில்: கேள்வி புரியவில்லை.
6. அன்பழகனுக்கு கட்சியில் ஆதரவே இல்லாத நிலையிலும் இந்த அந்தஸ்து எப்படி தொடர்கிறது (கலைஞருக்கு பிராமினை தொடர்ந்து,முதலியாரையும் பிடிக்காது என்பர்)
பதில்: கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஒரு பழம்பெரும் தலைவரும் தேவைதானே. முன்பு நெடுஞ்செழியன் இருந்த இடத்தில் பேராசிரியர்.
7. அழகிரியின் பிடிவாதம் சரியா, தயாநிதி, கலாநிதி விஷயத்தில்?
பதில்: அழகிரிக்கு அரசியல் விஷயத்தில் ஒரு உள்ளுணர்வு உண்டு. அதன்படி அவர் நடக்கிறார். அவர் தயாநிதியை நம்பவில்லை.
8. கனிமொழி அண்ணன் பக்கமா, தம்பி பக்கமா?
பதில்: தனக்கு சாதகமான நிலையைத் தருபவர் பக்கம்.
9. மூத்த அமைச்சர்கள் ஸ்டாலினை ஏற்கவில்லை என்கிறார்களே அவர்கள் யார்?
பதில்: யாருமே மனதளவில் ஏற்கவில்லை என்றுதான் படுகிறது. வெளியில் சொல்லி கொள்வது வேறாக இருக்கலாம்.
10. ஸ்டாலினைவிட, அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதாவின் அதிரடி அரசியலுக்கு அழகிரிதான் சரி என்பதால்தான் கலைஞர் .........
பதில்: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.
அனானி (11.06.2008 காலை 05.45-க்கு கேள்வி கேட்டவர்):
1. தமிழ்மண நிர்வாகிகளின் பெயர்கள் என்ன? அவர்களது நிர்வாகச் செலவை சமன் செய்வது எப்படி?
பதில்: ஜூன் 15 அன்றைக்கு வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்து நேரடியாகவே கேட்டுவிடுங்கள்.
2. பதிவர்களின் சில தளங்களில் உள்ள விளம்பரவருவாய் தமிழ்மணத்திற்கா?
பதில்: தமிழ்மணம் வெறும் திரட்டி மட்டுமே என்பதை ஏன் மறக்கிறீர்கள். பதிவர் தளங்களை வைத்து கொள்ளும் செர்வர் அல்ல தமிழ்மணம்.
3. பல ஒத்த கருத்து உள்ள பதிவாளர்களிடையெ லிங் உள்ளதுபோல் பிற தமிழ் திரட்டிகளுக்குகம் தமிழ்மணத்துக்கும் லிங் கொடுக்க முயற்சி செய்யலாமே?
பதில்: யார் தர வேண்டும் என சொல்கிறீர்கள்?
4. சில நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இல்லாச் சூழ்நிலையும்,ஒரு சில பதிவாளரின் பதிவுகளுக்கு குவியும் (பரஸ்பர நல்லுணர்வு) பின்னூட்ட இஸம் ஏதோ சொல்வது போல் உள்ளதே? இங்கும் கொள்கைக் கூட்டணி அரசியலா?
பதில்: அரசியல் இல்லாத இடம் எது?
5. அநாகரிக,பண்பு கெட்ட வார்த்தைகளுடன் பவனிவரும் பின்னூட்டங்களை தடுக்கும் firewall வசதி இருந்தும் சில பதிவாளர்கள் அனுமதிப்பது ஏன்?
6. வாசிப்பவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்பதற்காகவே வைக்கப் படும் தலைப்புகளை பார்த்தீர்களா?
பதில்: அவரவருக்கு ஆயிரம் காரணங்கள். நாம் யார் இதையெல்லாம் கேட்க. முடிந்தால் நீங்களும் செய்யுங்களேன்.
7.அ.தி.மு.க சார்ந்த பதிவர்களே இல்லாதது போல் உள்ளதே? காரணம் என்ன?
பதில்: அதிமுகாவை ஆதரிப்பது கடினம், ஏனெனில் அதன் தலைவி எப்போது என்ன பேசுவார் என்பது தெரியாது.
8. ஒருவரின் கருத்து,கொள்கை பிடிக்கவில்லையென்றால் கருத்து மோதல் செய்யாமல் ஜாதி, இன, தனிமனித துவேஷம் செய்வது?
பதில்: அவ்வாறு செய்பவர்களது பலவீனமே இதில் தெரியவருகிறது. கூடவே கருத்து வறட்சி.
9. ஒரு சில பதிவாளரின் பதிவுகளை படிப்பதற்கே நேரம் போதவில்லையே,உண்மைதமிழன் போன்றோருக்கு ஒரு நாள் 28 மணி நேரமா?
பதில்: ஒரு பதிவுபோட அதிகபட்சம் ஒரு மணி நேரம் தேவை. அவ்வளவே. அதையும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொள்ளலாம். உண்மையாகவே பிசியாக இருப்பவனுக்குத்தான் நேரம் அதிகம் கிடைக்கிறது, ஏனெனில் அவன் நேர மேலாண்மையில் தேர்ச்சி பெற்றவன்.
10. பதிவாளர், வாசகர், தமிழ் ஆர்வலர் பங்கு பெறும் அளவில் தமிழ் மாநில மாநாட்டிற்கான முயற்சிகளை செய்யும் எண்ணம் உண்டா?
பதில்: யாருக்கு எனக்கா? சரிதான், சாதாரண பதிவர் மீட்டிங்கிற்கே ஆள் கிடைக்க மாட்டேன் என்கிறது. தமாஷ் செய்கிறீர்களா?
கீ-வென்:
1. ஏன் இந்திய மக்களுக்கு மட்டும் சுத்தம், பொது நலம் என்ற மனப்பான்மை இருப்பதில்லை. இதுவே நம் தவறுகளுக்கு காரணமோ?
பதில்: தவறு செய்தால் தண்டனை, அதில் தனிப்பட்டவர் செல்வாக்கு உள்ளே புகக் கூடாது என்ற நிலையில் அதிகாரத்தில் உள்ளவர் நடந்து கொண்டால் தமிழகமும் சிங்கப்பூராக மாற இயலும்.
அனானி (11.06.2008 மாலை 7.07-க்கு கேட்டவர்):
1. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார தேக்க நிலைக்கு வியட்நாம், இராக் இவைகளின் மேல் தொடுக்கப்பட்ட தேவையில்லாத யுத்தம்தான் காரணமா?
2. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் அமெரிக்காவில் ஆகியவை தோல்விமுகம் காணுகின்றனவா?
3. வேலையில்லாத் திண்டாட்டம், பாங்குகளில் தேக்க நிலை, வீட்டு வசதிகளில் மதிப்பு கீழிறக்க நிலை தென்படுகிறதே?
4. வளர்ச்ச்சி விகிதமும் கண்ணாமூச்சி காட்டுகிறதே? (3 % குறைவு)
5. உலக போலீஸ்காரரின் கைப்பிடி நழுவுகிறதா?
பதில்: எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். இப்போது அமெரிக்கா சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்குமே அளவுக்கதிகமாக கடன் வாங்கும் அவர்களது கலாச்சாரமே முக்கிய காரணம். திடீரென அமெரிக்க பொருளாதார நீர்க்குமிழி வெடிக்கப் போகிறது. அப்போது அவர்கள் மட்டும் மூழ்க மாட்டார்கள், கூட மற்றையோரும் கூட. பணம் போனால் உலக போலீஸ்காரரும் கப்பறை ஏந்த வேண்டியதுதான். ஆனால் பிச்சை போடுபவர்கள் யார் என்பதுதான் பிரச்சினை.
கீ-வென்:
1. ஏன் தலைவர் மு.க குடும்பதினரோட பெயர்களில் பணத்தின் பாதிப்பு (எல்லா பெரும் நிதியிலேயே முடியறது) இருக்கு ? விசேட காரணங்கள் ஏதும் உங்களுக்கு படுகிறதா?
பதில்: யதேச்சையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் குடும்பத்தில் நிதியில் முடியும் பெயர்களையுடையவர்கள் எல்லோருமே கணிசமான வயதுடையவர்கள். சம்பந்தப்பட்டவர்கள் பிறந்தபோது பிற்காலத்தில் இப்படி சொத்து சேர்க்கும் நிலைக்கு வருவார்கள் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க இயலாது. என்னமோ பெயர்கள் அமைந்துவிட்டன. கமலஹாசன் குடும்பத்தில் பல பெயர்கள் ஹாசனில்தானே முடிவடைகிறது?
பெயரை வைத்து ஒரு ஜோக்: ஒருவன் தன் குழந்தைகளின் பெயரை வரிசையாகக் கூறுகிறான். ராமன், சந்திரன், கிருஷ்ணன், மாசேதுங். ஏன் கடைசி குழந்தைக்கு அந்தப் பெயர் என்பதற்கு ஒரு ஆங்கில கட்டுரையைக் காரணமாகக் காட்டினான். அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. "China is the most populated country. Of the children born daily in the world, every fourth child is a Chinese child".
ரமணாஸ்திரம்:
1. தமிழக அரசு r.t.o சேவைகளுக்கு சேவைவரி விதித்திருப்பதற்கு மக்கள் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே வசூல் வேட்டை தொடர்கிறதே, நியாயமா?
பதில்: கருத்து எல்லாம் கேட்டுமுடிச்சுட்டு சேவை வரி வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா என்ன செய்யறதுன்னு யோசனையா இருக்குமோ?
2. ஓட்டுனர் உரிமம் புதிப்பதற்கு ரூபாய் 500 வரை ஆகிறது, முன்பு 30 to 50 ரூபாய்தான். (சேவை வரி மட்டும் 100)
பதில்: கேள்வி என்ன?
. புரோக்கர்கள் தயவில்லாமல் அங்கு ஒன்றும் நடக்காது போல் உள்ளதே?
பதில்: உள்ளே உள்ள செட்டிங்க்ஸே அப்படித்தான்னு நினைக்கிறேன்.
4. மக்கள் முணுமுணுத்துக் கொண்டே பணத்தை கொட்டுகின்றனர். அதிலும் ஏழை வாடகை ஊர்தி ஓட்டுனர்கள் நிலை பரிதாபம் இல்லையா?
பதில்: பரிதாபம்தான். அதைவிடப் பரிதாபம் அந்த வாகன ஒட்டிகள் பப்ளிக்கின் மேல் அந்த சார்ஜை போடுவது.
5. இவர்களை திருத்தி நேர்மையை நிலை நாட்ட எதிர்காலத்தில் வழி பிறக்குமா?
பதில்: கண்ணுக்கெட்டிய தூரம்வரை வழியேதும் லேது.
அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
24 comments:
//பதில்: கே.பி. சுந்தராம்பாளைப் போலவே ஒரு நடிகை இருக்கிறாரே, பெயர் மறந்து விட்டது. அவர் ஒரிஜினலின் ஆசியும் பெற்றவர்.//
அவர் பெயர் கோவை கமலா , ஒரு சில படங்களில் நடித்ததோடு பாடியும் இருக்கிறார்
மிக்க நன்றி கானா பிரபா அவர்களே. பை தி வே, உங்களை ரொம்ப நாட்களாக ஒரு கேள்வி கேட்க நினைத்திருந்தேன்.
உங்கள் ப்ரொஃபைல் போட்டோ உங்களுடையதா? ஹிந்தி நடிகர் மோனிஷ் பெஹல் மாதிரி இருப்பதால் அந்த ஐயம். இந்த மோனிஷ் பெஹல் நடிகை நூதனின் மகன். சாதாரணமாக வில்லன் ரோலில் வந்தாலும் "ஹம் ஆப்கே ஹைன் கௌன்" என்னும் படத்தில் மிகவும் நல்லவராக வந்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவ்வ்வ், உங்க கேள்வி பதிலில் என்னிடம் கேள்வியா? அது நானே தான், நான் பக்கா வில்லனாட்டம் இருப்பேன், ஆனால் ஹீரோ நான் தான் ;-))( உபயம் கே.எஸ்.ரவிகுமார் புத்தம் புது பயணம்)
/////இவர்களை திருத்தி நேர்மையை நிலை நாட்ட எதிர்காலத்தில் வழி பிறக்குமா?
பதில்: கண்ணுக்கெட்டிய தூரம்வரை வழியேதும் லேது.////
அதுதான் உண்மை!
மீண்டும் கிருஷ்ணர் அவதாரம் எடுக்க வேண்டும்!
வணக்கம் டோண்டு சார்,
//3) த்ரிஷா கிழவி மாதிரி இருக்கிறார். அவரிடம் என்ன இருக்கிறது என விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் ஜோடி சேர சிபாரிசு செய்கின்றனர்?
பதில்: இம்மாதிரி கேள்விகளுக்கு எனது பதில், முக்கியமான இரண்டு அம்சமாக உள்ளன என்பதே.
//
சமீபத்துல நான் ரசிச்ச நல்ல பதில் ;-)...நான் நினைச்சததானே சொல்றீங்க வேற எதுவும் விவகாரமா இல்லையே
சரவணன்
//சமீபத்துல நான் ரசிச்ச நல்ல பதில் ;-)...நான் நினைச்சததானே சொல்றீங்க வேற எதுவும் விவகாரமா இல்லையே//
நான் சொன்னது ஒரு சராசரி ஆணின் கண்கள் எங்கே போகும் என்பதை வைத்துத்தான். ஆனால் அதையே விவகாரமாக நினைப்பவர்கள் உள்ளனரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதுதான் உண்மை!
மீண்டும் கிருஷ்ணர் அவதாரம் எடுக்க வேண்டும்!//
கண்டிப்பாக. சம்பவாமி யுகே யுகே என்று கீதாசார்யன் கூறியுள்ளாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் போட்ட மொதல் கமென்டே மதியம்தான் வரும்னு நினைச்சன் காலங்கார்தால எழுந்து வேலை செஞ்சுகிட்டுருக்கீங்க வெரி குட்.
//
3. நமது பிள்ளைகளை கோவிலுக்குப் கூப்பிட்டால்,பெரியார் பக்தர்கள், இடது சாரி கட்சிகளின் புரட்சி சிந்தாந்தங்கள் பக்கமே செல்கின்றனர்(ஆனால் இது இந்து மதத்தில் மட்டும்தான்)?
பதில்: நாத்திக சிந்தனை உலகளாவியது.
//
இது உலகம் முழுதும் பொறுந்துமான்னு தெரியல, வாடிகன்ல நாத்திகர்கள் இருப்பார்களா இன்னும் இது போல சில சிறு நாடுகளில் இருக்க மாட்டர்கள் அல்லது வெளிப்படையாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன், தங்கள் கருத்து யாராவது பெரியார் பக்தர்கள் தெளிவு படுத்தினாலும் தன்யனாவேன்.
சரவணன்
//காலங்கார்தால எழுந்து வேலை செஞ்சுகிட்டுருக்கீங்க வெரி குட்//
நன்றி, இன்று விடியற்காலை 4.30 மணியிலிருந்து கணினியில் மொழிபெயர்ப்பு வேலை (ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு) நடக்கிறது.
இன்னும் 15 நிமிடங்களில் கணினியை மூடிவிட்டு வெளியில் செல்ல வேண்டும். பகல் 12 மணிவாக்கில்தான் திரும்புவேன்.
//நாத்திக சிந்தனை உலகளாவியது.
இது உலகம் முழுதும் பொறுந்துமான்னு தெரியல//
கண்டிப்பாக பொருந்தும். பைபிளை கேலி செய்து பல புத்தகங்கள் வந்து விட்டன. என்ன, குரான் விஷயத்தில் அது வெளிப்படையாக இல்லை. ஆனால் கேலிகளுக்கும் குறைவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//1) சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என்று அந்நாட்டு அரசு கருணாநிதிக்குத் தடை விதித்திருக்கிறதாமே! ...
//
இது தவறான தகவல் கருணாநிதி அவர்கள் சிங்கப்பூர் வர எந்த தடையும் இல்லை. அவர் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார் அவர் மகள் இங்கு வாழ்ந்துவரும்போது.
அவர் இங்கு வந்து இங்குள்ள கால்டேக்ஸிகளை பார்த்து விட்டு போன பின் தான் சென்னைக்கு டோண்டு டேக்ஸி கிடைத்தது.
சரவணன்
என்னுடைய முதல் கேள்விக்கு உங்கள் பதிலில் திருப்தி..ஆயினும்..இரண்டாவது கேள்விக்கான பதிலில் சுவாரசியம் இல்லை.. எதுகை மோனைக்காக மு.க குடும்பத்தினர் அம்மாதிரி பெயர் வைத்துக்கொண்டனரா அல்லது..பண மோகமே காரணமா ?
//1) சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என்று அந்நாட்டு அரசு கருணாநிதிக்குத் தடை விதித்திருக்கிறதாமே! இங்கு வந்து இங்குள்ள தமிழர்களையும் போராடுமாறு தூண்டிவிட்டுக் கெடுத்து விடுவார் என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாமே. உண்மையா? //
இவருக்கு நான் பதில் சொல்கிறேன்.. கலைஞரை (மற்றும் ஏனைய தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் கூட )அரசியல் வாதியாகவோ, அரசாங்க ரீதியாகவோ சிங்கபூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது உண்மையே ! (அங்கு உள்ள சில சிங்கப்பூர் தமிழர்கள் எனக்கு சொன்னது) ஏனெனில், 60 களில், அறிஞர் அண்ணா சிங்கைக்கு வருகை தந்த போது..அங்கே சிராங்கூன் ரோடு அருகே நடந்த போது கூட்டத்தில் அண்ணா உரை ஆற்ற, அருகில் சிங்கப்பூர் தந்தை என்று அழைக்கப்படும் "லீ குவான் யூ" அமர்ந்திருக்க, அங்கே லட்சோப லட்சம் தமிழர் கூட்டம்..
மற்றும் அண்ணாவின் பேச்சுக்கு சரியான அப்ளாஸ்.. அண்ணா அங்கே தமிழர் அரசியலில் ஈடு படவேண்டும், தனி கட்சி இருக்கவேண்டும் என்று தீ பொறி பட பேசியதாக கேள்வி... இதை கண்ட உள்ளூர் அரசியல் வாதிகள் (சீனர் மற்றும், இதர இந்திய இனத்தவர்-குறிப்பாக மலையாளிகள் ) காண்டாகி.."லீ குவான் யூ" விடம் முறையிட..அது வரை அமைதி காத்த அவர்..பின்னர் ஆட்சிக்கு வந்த பின் வாய்மொழியாக பிறப்பித்த உத்தரவு இன்று வரை பின் பட்டு வருகிறது.. (தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் யாரும் அரசியல் ரீதியாக சிங்கபூருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்..)
ஆயினும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் அங்கே ஒரு தமிழ் அரங்கில் உரை ஆற்ற வந்திருந்தார்..அப்போதும் தமிழ் அறிஞராக வே ௧௪ நாட்களுக்கு மட்டுமே அவருக்கு விசா வழ்ங்கப்பட்டதாம் .. (கனி மொழி வீட்டுக்காரர் அரவிந்தன் உள்ளூர் எம்.பி க்களின்..கை, கால்களை பிடித்து வாங்கினார் என்று அறியப்பட்டேன்) அரசியல் பேசக்கூடாது, அரசியல் பேட்டிகள் அளிக்கக்கூடாது, கோடி, கோஷங்கள், கூட்டங்கள் கூடாது என்ற நிபந்தனைகளின் பேரில்..
எம்.ஜி.ஆரே, நடிகராக வே அனுமதிக்கப்பட்டார்..ஆயினும் அவர் மேல் ஒரு soft stand இருந்தது உண்மை.. (மலையாளி அல்லவா.., பழைய சிங்கை அரசியல் வாதிகளில் பல பேர் மலையாளிகள்..)
//நாத்திக சிந்தனை உலகளாவியது...
//
நான் கேட்பது ஒன்றே வாடிகன் எனும் நாட்டில் நாத்திகர்கள் இருப்பார்களா.. இது கிறித்துவத்துக்கு எதிரானது அல்ல, அது என்னதான் ஒரு சிறு நகரமாக இருந்தாலும் அது ஒரு நாடே அதனால் அந்த நாட்டில் நாத்திகர்கள் இல்லை என்றால் .. நாத்திகம் எப்படி உலகளாவியது ஆகும் என்பதே.
இது யாரவது ரோமபுரி மக்களால் சரியாக பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
சரவணன்
//இணையத்தில் மிக அதிகமாக பிராமண எதிர்ப்பு இருக்கக் காரணம் 1. மற்ற சாதியினர் தாமும் வளர்ந்து விட்டோம் என்பதைவெளிக்காட்டவா? அல்லது 2. நிஜமாகவே திக, திமுகவினர் அதிகமா? அல்லது 3. நிஜமாகவே பிராமணர்களால் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாலா?
பிராமணர்கள் அதிகம் சீறாததும் ஒரு காரணம். அவ்வாறு சீறாததற்கு ஒரு காரணம் எதிர்ப்பாளர்கள் ஏதேனும் உளறுவதற்கு எல்லாம் பதிலளித்து தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டுமா என்று பலர் நினைப்பதே காரணம். எதற்கும் எனது வெளிப்படையான எண்ணங்கள் பதிவைப் பாருங்களேன்//
I just want to draw a parallel here. Yedhaiyum thangum Idhayam Vendhum (Correct me if I am wrong it is by Annadurai). The corollary to that is Udhaiyum Vangum udambum vendum. It roughly translates to having a sound mind in a sound body.
Tell me which Brahman is physically strong? The problem is the thought that vegetarians cannot be strong. It is a wrong notion, it all depends on protein intake. Decrease/ eliminate rice and increase pulses. I can confidently say that I can kick any ass that eats meat and have proven it many times over.
Brahmins are supposed to be Chathur (read brainy), imagine what a combination and brain and brawn can achieve.
For me caste does not matter, religion and food habits does. So all the Brahmin haters can go shove it.
Jai Bajrangbali.
Anand
//மாசேதுங். ஏன் கடைசி குழந்தைக்கு அந்தப் பெயர் என்பதற்கு ஒரு ஆங்கில கட்டுரையைக் காரணமாகக் காட்டினான். அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. "China is the most populated country. Of the children born daily in the world, every fourth child is a Chinese child".//
டோண்டு அய்யா,
ஆ அப்படியா சங்கதி?ஆனா நம்ம ஊர்ல சில மூஞ்சிகள் தங்கள் வாரிசுக்கு ஸ்டாலின்,என்று பெயர் வைப்பதின் மர்மம் என்ன?"Every thousandth child is a communist child" என்பதாலா?விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா
டோண்டு சார்!
உங்களுக்குநாக்கை பிடுங்கிக் கொள்கிறது போல நான்கு கேள்விகள்!!
விளையாட்டைத் தொடரவும்! :-)
டோண்டு sir,
Why you not answered my question?
Embarrassed???!
I paste below my qtn.
---------------------------------
Please read this blog :
யார் இந்த சோ ராமஸ்வாமி?
http://madippakkam.blogspot.com/2008/06/blog-post_05.html
About CHO'mary …cheeeeee CHO, please let us have your 'candid' he...he ...he…..
Honest comments please.
-----------------------------------
Sathappan
//About CHO'mary …cheeeeee CHO, please let us have your 'candid' he...he ...he…..
Honest comments please.//
இதில் சங்கடமடைய என்ன இருக்கிறது? பதில் கூற விட்டுப் போய் விட்டது அவ்வளவே.
சோவைப் பற்றி எனது கருத்தை எனது பதிவில் உள்ள இடுகைகளை (முக்கியமாக சோ லேபலின் கீழ் வருவதை) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மற்றப்படி நீங்கள் சுட்டிய இடுகையில் உண்மைத் தமிழன் நான் கூற வேண்டியதையெல்லாம் ஏற்கனவே கூறிவிட்டார். அங்கு போய் பார்த்து கொள்ளவும்.
மறுபடியும் கூறுவேன், சோ அவர்கள் தன் பத்திரிகையை நடத்தும் உயர்ந்த தரத்தில் பாதியளவு கூட மற்றவர்கள் செய்யவில்லை என்பதில் நான் உறுதியாகவே உள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
//சமீபத்துல நான் ரசிச்ச நல்ல பதில் ;-)...நான் நினைச்சததானே சொல்றீங்க வேற எதுவும் விவகாரமா இல்லையே//
நான் சொன்னது ஒரு சராசரி ஆணின் கண்கள் எங்கே போகும் என்பதை வைத்துத்தான். ஆனால் அதையே விவகாரமாக நினைப்பவர்கள் உள்ளனரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஊர்களில் ஒரு சுலவடை(பழமொழி)சொல்லுவாங்க
"கறந்த இடத்தை காணுதே கண்ணு
பிறந்த இடத்தை நோக்குதே பேதை மன்மே"
1.பஸ்ஸிலே கூட்டம்,கடையில கூட்டம்,சினிமா தியேட்டர்ல கூட்டம் .குடும்பக் கட்டுபாடு திட்டம் வெற்றி எனச் சொன்னது என்னவாயிற்று.
2.இப்படியே போனால் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சதாரண பொருட்களுக்கு கூட தட்டுப் பாடு வரும் போலிருக்கிறதே?
3.வயதானவ்ர்கள் தங்கள் வீடு அன்றாட (வீடு சுத்தம் செய்தல்)வேலைகளை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமம்படும் போக்கு அதிகமாகிறது.எவ்வளவு பணம் கொடுத்தாலம் வேலைக்காரர்களுக்கு திருப்தி இல்லாச் சூழ்நிலை எங்கு கொண்டுபோய் விடும்.
4.வரும் காலத்தில் கொத்தனார்,சித்தாள்,ஆசாரி,சுமை தூக்குவேலை,தோட்ட வேலை இவைகளுக்கு
ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாகி விடும் போல் உள்ளதே
5.இவைகளுக்கு மாற்று ஏற்பாடு ?
.
1.அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு இவையெல்லாம் அகராதியில் மட்டுமெ பார்க்கமுடியும் என பிரபல பத்திரிக்கையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டது பற்றி தங்கள் கருத்து?
2.முன்பு அரசல் புரசலா, மூத்த அரசியல் வாதிகளையும்,அதிகாரிகளையும்,பிர துறை வல்லுனர்களையும் குஷிபடுத்தி தங்கள் காரியத்தை சாதிப்பர் எனும் சொல்வது இப்போது பரவலாக்கப் பட்டு வருவது போல் உள்ளதே?
3.மென்பொருள் வல்லுனர்கள் மத்தியில் இதெல்லாம்(சோம பானம் சுரபானம் அருந்தி சொர்க்க புரி வாழ்க்கை( free sex) சுசூபீயாக (just like that)இருப்பதாக செய்திகள் வலம் வருகிறதே?(please refer this week India today tamil version)
4.கொலையும் செய்வாள் பத்தினி என்பது வேறு திக்கில் பயணிப்பது போல் உள்ளதே?
சுகம் சுகம் எதைக் கொடுத்தாவது, யாரைக் கொன்றாவது,எதைச் செய்தாவது சுகம்,சுகம்,சுகம்.....இன்ப சுக்ம்
5.இதுவரை உப்பை திண்ண ஆணாதிக்க வர்க்கம் தண்ணிர் குடிக்கிறதா?
( வேணும்ய்ய இந்த பயலுகளுக்கு என்னா ஆட்டம் போட்டாங்க-என் பெண்ணிய ஆதரவாளார்கள் சொல்வது ஏற்புடையதா/)
6.பண்டய காலத்தில் மனிதர்கள் கூட்டமாக வாழும் போது கூட்டத்தின் தலைவி பெண்தான் எனவும், அவள் விருப்பப் படும் ஆனோடு அன்றய இரவை கழிக்கும் உரிமை கொடிகட்டி பறந்த்தாக சொல்வார்கள்.
நாகரிகச் சுழ்ற்சி இதுலுமா?
7. 20 வருடங்களுக்கு முன்னால் விழாக்களில்,பொருட்காட்சி அரங்குகளில் நடனம் அடும் நடன மங்கையர்,சினிமா நடிகைகள் உப்யோகித்த பள பள என டால் அடிக்கும் சமிக்கி(காக்க பொன் போண்ரது)கள் இல்லாத சேலைகலே(hand work sarees with glittering substances fixed ) இன்று இல்லாச் சூழ்நிலை? நாம் எங்கே போகிறோம்?(கறுப்பு பர்தாவில் கூட சமிக்கி டாலடிக்குது)
8.அந்த காலங்களில் o.s.o வே அது பெரிய விசயம் இப்போ free show ?( யெல்லாரும் கேரளாவாய் மாறிட்டாங்க!) கலாச்ச்சரப் புரட்சியா?
9.கலாச்சார கட்டுப் பாடற்ற சுதந்திரம் உள்ல அமெரிக்கவில் குடும்ப முறையே அழிந்துளதை பார்த்த பிறகாவது நாமும் கண்ணை திறந்து பள்ளத்தில் விழ முயலலமா?
10.பழய நகைச்சுவை துணுக்கு
your children and my children are playing with our children
என்பதை
வரலாறாகமல் (இதெல்லாம் வாழ்ககையில் ஜகஜம் அப்பா!) தடுக்கப்படுமா?
பாரதியும்,பாரதி தாசனும் கணவுகண்ட பெண்ணுரிமை வேரு இலக்கை நோக்கி செல்கிறதே?
-பாண்டிய நக்கீரன்
Dondu sir - can you upload your Q & A on thursday or wednesday itself every week ? Most of your answers and the comments require further discussion and this gets missed if your Q&A post comes on friday. Many do not watch out replies/comments on saturday and sunday.
thanks
வெளிக்கிழமைதான் கேள்வி பதில் என்பது நிலைத்து விட்டது. அதுவும் வெள்ளியன்று காலை 5 மணியளவிலேயே அது வெளியாகி விடுகிறது. அடுத்த ஒரு வாரம் பின்னூட்டங்களுக்கான நேரம்.
ஆக தற்சமயம் கிழமையை மாற்றும் அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
ஒரு சின்ன கேள்வி.
தமிழ்மணம் திராவிட,பெரியாரிய,நக்சல,இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூடாரமாக இன்னும் ஆகவில்லையா?ஆகவில்லையென்றால் எப்போது ஆகும் என்று ஆருடம் சொல்ல முடியுமா?
பாலா
டோண்டு அய்யா,
ஒரு சில கேள்விகள்.
1) ம க இ க நக்சல் தீவிரவாத கும்பலில் சிறந்த நிதி அமைச்சராக நாட்டுக்கு தொண்டு செய்ய வல்லவர் யார்?
சம்பூகன்?ஏகலைவன்?அசுரன்?பனியன் தியாகு?தோழர் மருதையன்?
2) ம க இ க பொலிட்பீரோவில பதவி வேண்டும் என்றால்,என்ன தகுதி வேண்டும்?கேள்வி கேட்பவர்களை "ஏண்டா அம்பி,குடுமியை மறைச்சுக்கோடா" என்று அதி புத்திசாலித்தனமாய் மடக்கத் தெரிந்தால் போதுமா?
பாலா
Post a Comment