31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள்.
Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவுக்காக ஆர். ரகு அவர்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் ஆர்.டி.ஓ. அதிகாரியால் கைப்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றுக்கான ஆவணங்களை ஆட்டோ ஓட்டிகள் தர இயலாமல் போவதே அதற்கு காரணம். அவை எல்லாம் இப்போது பல்லவன் சாலையில் உள்ள ஷெட்டில் வைக்கப்பட்டுள்ளன. யாரும் அவற்றுக்கு உரிமை கோரி வராததால் அவை தூசிகளால் மூடப்பட்டு துருப்பிடித்து கிடக்கின்றன.
ஒரே ஒரு காவலாளி மட்டும் நொந்து போய் அவற்றின் அருகில் காணப்படுகிறார். அவரைத் தனிமையில் இருக்கவிடாது விஷப்பாம்புகள் அவருக்கு அருகில் குடிகொண்டுள்ளன. காவலாளி ஆறுமுகம் அவர்களது கூற்றின்படி ஆட்டோக்கள் உள்ளே வருவது மட்டும்தான் நடக்கிறது. வெளியே போவது இல்லை. ஏனெனில் யாரும் அவற்றுக்கு உரிமை கோரி வருவதில்லை. '
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?' என்று கேள்வி கேட்ட கவியரசுதான் நினைவுக்கு வருகிறார்.
ஷெட்டுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. பல ஆட்டோக்களில் பாட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் மிஸ்ஸிங் என்கிறார் ஆறுமுகம். போகுவரத்து ஆணையர் சி.பி. சிங்க் அவர்கள் கூறுகிறார்: "இந்த ஆட்டோக்களை என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஓட்டுநர்கள் சோதனைகளின்போது ஆர்.சி. புத்தகம் மற்றும் உரிமம் இல்லாது மாட்டிக் கொள்கின்றனர். அந்த ஆவணங்களுடன் யாரேனும் எங்களை அணுகினால்தானே நாங்கள் வாகனங்களை விடுவிக்க இயலும்?" போக்குவரத்து இணை இயக்குனர் டி. நாராயணமூர்த்தி கூறுகிறார்: இந்த ஷெட்டில் உள்ள ஆட்டோக்களில் 400க்கும் மேல் நல்ல ஓடும் நிலையில் உள்ளன. தரமணியில் உள்ள சாலை போகுவரத்து கழகத்தின் பின்னால் இருக்கும் ஷெட்டிலும் சில நூறு ஆட்டோக்கள் இம்மாதிரி உள்ளன".
அவர் மேலும் கூறுவது என்னவென்றால், இந்த ஆட்டோக்கள் பல பினாமி ஆட்டோக்கள், பல முறை கைமாறியவை. ஆகவே உண்மையான சொந்தக்காரர்களை கண்டறியாது ஆட்டோக்களை ஏலத்தில் வைப்பது நடக்காத காரியம் என கூறுகிறார்.
இப்போது டோண்டு ராகவன். துணை ஆணையர் கூறுவது முற்றிலும் சரி எனக் கூற இயலாது. இதற்கெல்லாம் முதல்வன் பாணி ட்ரீட்மெண்ட்தான் சரி. அதாவது ஒரு பொது அறிவிப்பு எல்லா பத்திரிகைகளிலும். "பலான தேதிக்குள் இவற்றை உரிமை கோரவில்லையென்றால் அவை இருக்கும் நிலையிலேயே ஏலம் விடப்படும்."இதற்கான அதிகாரம் அரசிடம் ஏற்கனவே உள்ளது. அப்படியே உரிமை கோரி வருபவர்கள் அவ்வளவு நாள் ஆட்டோக்கள் அங்கே இருந்ததற்கான வாடகையையும் தரவேண்டும். அவை பினாமி ஆட்டோக்கள் என்று தெரியவந்தால் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டும். ஓடும் நிலையிலுள்ள ஆட்டோக்களை எடுப்பவர்கள் பெயரில் எல்லா ஆவணங்களும் தரப்படும். பிறகு முந்தைய சொந்தக்காரர்களுக்கும் அந்த ஆட்டோக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அவ்வாறு புது சொந்தக்காரர்களுக்கு ஆவணங்கள் தரும்போது பக்காவாக விசாரித்தே தரவேண்டும். ஒருவர் ஏலத்தில் எடுக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் சென்னையில் ஓடும் எல்லா ஆட்டோக்களையும் இதே முறையில் சோதனை செய்து பினாமி வண்டிகளை ஷெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஓரிரு முறை இவ்வாறு நடந்தால் பினாமி முறையால் நஷ்டம்தான் என கண்டுகொண்டு அதை கைவிடுவார்கள். ஆட்டோக்காரர்களிடம் லஞ்சம் கேட்டு தொல்லை தரும் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். அதே சமயம் மீட்டர் சூட்டிற்கும் தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
இப்பதிவின் நோக்கமே இம்மாதிரி செயல்பாட்டுக்கான நேரம் வந்துவிட்டது என்பதைக் கூறுவதே. செய்வார்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
20 comments:
டோண்டு அய்யா,
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."ஏன் இம்மாதிரி ஆட்டோ/கார்/லாரி/ட்ராக்டர்/பஸ்/ஸ்கூட்டர் போன்ற சமாசாரங்களை நம்ம ஒடுக்கப்பட்ட இனங்களை சேர்ந்த க்ரீமி லேயர் ஓ பி ஸி கும்பலுக்கு இலவசமாகவோ அல்லது மிகவும் குறைந்த விலைக்கோ ஒதுக்க வேண்டும்" என்று சட்டத் திருத்தம் கொண்டு வரக் கூடாது.க்ரீமி லேயருக்கு ஆட்டோவும் கிடைக்கும், ஓட்டும் கிடைக்குமே?
இவ்வாறு செய்து திராவிட சமூக நீதி காக்கப்பட வேண்டுமே என்று ஏங்கி நிற்கும்,
பாலா
பாலா அவர்களே,
இது அரசியல் பிரச்சினை அல்ல. சாதாரண சட்ட ஒழுங்கு, பொருளாதார பிரச்சினை. ஓ.பி.சி. கிரீமி லேயர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகைகள்? ஏலம் எடுப்பவன் பணம் வைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். இதில் ஓபிசி என்ன, எஸ்.சி./எஸ்.டி என்ன? அதிகவிலைக்கு ஏலம் எடுப்பவனுக்குத்தான் அவற்றைத் தர வேண்டும். இதில் என்ன பிரச்சினை? அவற்றை அவர்களுக்கு மட்டும் ஏன் குறைந்த விலையில் தர வேண்டும்?
இந்த யோசனையால் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த யோசனையால் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கலாம். //
டோண்டு அய்யா,
ஆமாங்கய்யா, எப்பவும் "ஒரே கல், பல மாங்காய்" ஸ்ட்ரடிஜி தான் சிறந்தது.சொல்லப் போனா, நான் சொன்ன யோசனை கூட அந்த வகை ஸ்ட்ரடிஜி தான்.
1)மாங்கா ஒண்ணு: உதவாத ஆட்டோக்கள் நீக்கப் பட்டு இடம் காலியாகும்.அரசு அந்த காலியான நிலத்தை விற்று பணம் பண்ணலாம்.
2)மாங்கா இரண்டு..ஓட்டு
3)மாங்கா மூணு: சமூக நீதி காக்கப்பட்டு "பெரியார் தோன்றிய மண்" என்று தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு,ஏன் இந்த உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்க வாய்ப்பு.
பாலா
மூணாவது மாங்கா வெம்பின மாங்கா. நீங்க குறிப்பிடும் சமூக நீதி எல்லாம் படிப்புக்கும் வேலைக்கும் மட்டும்தான். மற்றப்படி வணிகத்துக்கெல்லாம் கிடையாது. அங்கு ரிசர்வேஷனே கிடையாது. அப்படியே இருக்கட்டும். இந்த கிரீமி லேயர் அலம்பல்கள் சகிக்கவில்லை. இங்கும் அவை வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."
மதியம் நேரம் பல கோயில் முடப்படும் அந்த இடைபட்ட
நேரத்தில் விருப்பமுள்ள பாப்பானுக்கு Part time Job -க இந்த ஆட்டோவை அரசு வாடைகைக்கு விடலாம்.
காலையும், மாலையும் கோயிலில் கடுமையான பனியான
மணி அடித்து பிழைக்கும் கூட்டத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடக இது அமையும்.
அனைத்து சாதியனரும் அர்சகர் ஆகலாம் போல்
அனைத்து பாப்பானும் ஆட்டோ டைவர் ஆகலாம்!!
புதுவை சிவா.
The Hindu report says "He (the govt. official) says the department is unable to identify several of the owners as ‘benami’ transactions or multiple transfers of ownership are common. Without identifying the owner they cannot even dispose of the vehicle to scrap dealers"
The govt.official does not know what he is talking about. It is upto the prospective owners to claim the articles, which is legally theirs. The govt has every right to dispose of these autos as they wish after giving due public notice. Morons are running the govt.
This is no different from Customs officials disposing of seized goods in the airports.
டோண்டு சார் இதெல்லாம் நமது தமிழகத்தில் நடக்குமா சார் .
சதாரணமாக நீங்கள் கேள்வி பதிலில் சொல்வீர்களே அடிக்கடி அது போல் இப்போது உங்கள் turn சார்
" உங்களுக்கு மிகப் பெரிய பேராசை
சார்"
திட்டம் போட்டு திருடடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது
அதை சட்டம் போட்டும் தடுக்க வேண்டிய கூட்டமோ
பாபத்தில் பங்கு வாங்கி ,பங்கு மார்கட்டில் கெலிக்கிறார்களே சார்
அதில் பாதி ஆட்டோவுக்குமேலே காவல்துறை,போக்குவரரத்துத் துறை
பணியாளர்களின்(ஒரு பிரிவினர்) கனமான சன்மானங்களில் வாங்கியிருக்கும் போது எப்படி சார் வெளியெ சொல்வார்கள்.
"திருடன் தேள் கொட்டிய கதை தான் இங்கும்.
சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளில் தப்பு செய்த அரசு அதிகாரிகள்,பெரும் உழல் செய்த அரசியல் வாதிகள்,பதுக்கி கொள்ளை லாபம் அடித்த வியாபாரிகள்,
அதிக வட்டி ஆசை காட்டி மோசம் செய்த பொருளாதார மேதைகள்,கடத்த்ல்
சிகாமணிகள்,கருப்புபண முதலைகள்,கள்ள மார்க்கட் பேர்வழிகள்
இவர்களில் எத்துனை பேர் அரசின் விதிகள் படி வழக்குகள் போடப் போட்டு தப்புகளுக்கு தகுதியான தண்டனை அனுபவித்துள்லார்கள்.
பதில் சொல்ல முடியாது சார் அதுதான் உண்மை
அப்படி இருக்கும் பட்சத்தில் இதில் மட்டும் எப்படி சார் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும்.
அதெல்லாம் இங்கெ ஜகஜமுங்கோ!
கடவூள் தான் இவர்களை தண்டிக்க வேண்டும்.
அரசன் அன்று கொல்லாதாதால்
தெய்வம் என்று கொல்லும்?
Abolish The RTO
via ANTIDOTE by Sauvik on 6/1/08
New Delhi: June 1, 2008: 2000hrs
My inquiries have revealed that a 10-year old Bajaj autorickshaw that runs on CNG (and possesses a “permit” from the RTO to ply on our city streets) costs 2,50,000 rupees.
My own 7-year old Opel Corsa with a 1.4 litre petrol engine, air-conditioning, power steering, power windows and central locking commands a resale value of not more than 80,000 rupees.
Three Opel Corsas for one Bajaj autorickshaw?
Is that a bum deal or what?
The “permit” to ply an autorickshaw is issued by the Regional Transport Officer (RTO).
If this office was abolished, and there was complete freedom to ply any vehicle for commercial purposes, autorickshaws would be junked.
Passengers would travel in good cars – and taxi drivers would drive good taxis as well.
Win-Win.
If we add duty-free second-hand car imports to this scenario, the road transportation sector would leapfrog into the modern age.
Fleet owners would own fleets of modern cars – like the highly durable Mercedes Benz, the chosen vehicle for taxi services in much of the world.
What about driving licenses? – another power that the RTO has.
Well, car insurance companies can take over this vital function, and since they have a financial interest in seeing that only good drivers get insurance, they will do this job well.
Another great idea from the Antidote blog?
Go on… spread the virus.
//அதில் பாதி ஆட்டோவுக்குமேலே காவல்துறை,போக்குவரரத்துத் துறை
பணியாளர்களின்(ஒரு பிரிவினர்) கனமான சன்மானங்களில் வாங்கியிருக்கும் போது எப்படி சார் வெளியெ சொல்வார்கள்.
"திருடன் தேள் கொட்டிய கதைதான் இங்கும்//.
அது தெரிந்துதான் நான் இவ்வாறு கூறினேன், "சென்னையில் ஓடும் எல்லா ஆட்டோக்களையும் இதே முறையில் சோதனை செய்து பினாமி வண்டிகளை ஷெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஓரிரு முறை இவ்வாறு நடந்தால் பினாமி முறையால் நஷ்டம்தான் என கண்டுகொண்டு அதை கைவிடுவார்கள்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இம்மாதிரி ஆட்டோ/கார்/லாரி/ட்ராக்டர்/பஸ்/ஸ்கூட்டர் போன்ற சமாசாரங்களை நம்ம ஒடுக்கப்பட்ட இனங்களை சேர்ந்த க்ரீமி லேயர் ஓ பி ஸி கும்பலுக்கு இலவசமாகவோ அல்லது மிகவும் குறைந்த விலைக்கோ ஒதுக்க வேண்டும்"//
//மதியம் நேரம் பல கோயில் முடப்படும் அந்த இடைபட்ட
நேரத்தில் விருப்பமுள்ள பாப்பானுக்கு Part time Job -க இந்த ஆட்டோவை அரசு வாடைகைக்கு விடலாம்.
காலையும், மாலையும் கோயிலில் கடுமையான பனியான
மணி அடித்து பிழைக்கும் கூட்டத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடக இது அமையும்//
தனியாக ரூம் ஏற்பாடு செய்து, ஓவர்டைம் போட்டு இம்மாதிரி சிந்திப்பவர்களால்தான் நாடே குட்டிச்சுவராகப் போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//The “permit” to ply an autorickshaw is issued by the Regional Transport Officer (RTO).//
நன்றி அதியமான் சார்,
இந்த RTO ஆபிஸ ஒழிச்சி கட்டினாலே பல தொல்லைகள் நீங்கும்.
சார் யாரவது லஞ்சம் கொடுக்காம driving - license வாங்க முடியுமா சார்? இப்படி அப்பட்ட ஊழல் நடக்கும் இடத்தை ஒழித்து கட்டுவது தான் சரி.
போட்டி அதிகமாக இருந்தால் இந்த திருட்டுத்தனம் எல்லாம தானாக அடங்கி விடும்.
போட்டியை அதிகரிப்பதற்கு ஒரே வழி பெர்மிட் வழங்குவதை சுலபமாக்குவது.
பம்பாயில் நிறைய ஆட்டோ பெர்மிட் வழங்கபட்டுள்ளது, அதனால் இங்கு பேரம் பேசுவது எல்லாம் கிடையாது, சூடு வைத்த மீட்டராக இருந்தாலும் 5-10 ரூபாய் கூட வரும்.. அவளோதான்.
பயணிகளுக்கு இதனால் நிம்மதி..
அதியமான் அவர்களே,
இன்றுதான் எனக்கும் ஆர்.டி.ஓ. பற்றிய மின்னஞ்சல் வந்தது. சரி அதைப் பற்றி நானே பின்னூட்டமாகப் போடலாம் என்று நினைப்பதற்குள் நீங்களே போட்டுவிட்டீர்கள். இப்படியா நம் இருவரது எண்ணங்களும் ஒத்துப்போகணும்னு இன்னொரு பின்னூட்டம் போடறதுக்குள்ளே, DFC முந்தி கொண்டார். ஆகவே இம்முறை சந்திரசேகரும் வருவதற்கு முன்னால் நானே எழுதிவிடுகிறேன். இம்மாதிரியா நம் மூவரின் எண்ணங்களும் ஒத்து போக வேண்டும்? ஆககக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//If this office was abolished, and there was complete freedom to ply any vehicle for commercial purposes, autorickshaws would be junked.//
//What about driving licenses? – another power that the RTO has.//
வாங்க வாங்க அதியமான் சார்.
தனியார் மயம்,தாரளமயம்,உலகமயம்
இது தாராளமயம் பகுதிக்குள் இது அடங்கும்
rto அலுவலக்கத்தில் நடைபெறும் வழிப்பறிக்காக அதை மூடி எல்லாக்க கட்டுபாடுகளையும் நீக்கலாம்.
நமது குறுக்கு சால் ஒட்டும் வியாபர சிகாமணிகள்( ஒரு பிரிவினர்) நாட்டையே மொட்டைஅடித்துவிடமாடார்களா?
ரயில் பயண முன் பதிவுகளில் உள்ள தாராளம்,எளிய முறைகள் உலகறிந்த உண்மை.
நம்ம ஆள் ( தனியார் ட்ராவல் ஏஜன்சிகள்என்ன செய்கின்றன. போலியாக இருக்கைகளெ 90 நாடகளுக்கு முன்னால் பதிவு செய்து கள்ளமார்க்கட்டில் விற்பது பறிய பத்திரிக்கைசெய்தி கூறுவதென்ன?
இதற்கு என்ன செய்யலாம் பேசமல் ரிசர்வேசனையே தனியாருக்கு தாரை வார்த்துவிடுவோமா.?
பத்திரப் பதிவு துறையில் நடக்கும் தில்லுமுல்லுகலள்,லஞ்ச லாவன்யங்களுக்கு
மாற்றாக அதையும் தனியார் கையில் ஒப்படத்துவிடச் சொல்வீர்களா?
அப்போது போட்டி குறைந்து கட்டுப்பாடுகள் தளர்வதால்
காலிமனைகள்,கட்டப்பட்டுள்ல வீடுகள்
1990 க்கு முன்னால் நிலவிய விலைக்கு கிடக்குமா?
( 1990 தானே நச்சுப் பொய்கை,மாயவலை,மயக்கும் மோகினி யின் பிரசன்ன வருடம்)
இந்தியாவை மற்றொரு மெக்சிகோ ஆக்காமல் ................
செய்யவேண்டியதை செய்வதற்கு அதிகாரம் இருந்தும் செய்யாது ஒப்பாரி வைக்கும் ஆர்.டி.ஓ. இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற கோபத்தில் அவ்வாறு கூறுகிறார். அதியமான்.
மற்றப்படி தேவையற்ற லைசன்சு முறைகளை ஒழித்தாலே நாடு உருப்பட்டுவிடும் என்பதில் மிகப் பெரிய உண்மை உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// இம்மாதிரியா நம் மூவரின் எண்ணங்களும் ஒத்து போக வேண்டும்? ஆககக.//
ஓ முவேந்தர்களா!
சந்திர சேகரன் சார் என்ன சொல்லப் போகிராறோ.பார்க்கலாம்.
இந்தப் பதிவுக்கு,
no rto office,no permit -தாரளமயம்
car insurance companies can take over this vital function-தனியார்மயம்.
சரியான பதிலடி கொடுக்க சரியானாவர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே.
//உலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை//
//dondu(#11168674346665545885) said...
வலைப்பதிவர் மீட்டிங்கில் நீங்கள் எல்லோரும் அதியமானுடன் தர்க்கம் புரிந்ததைக் கண்டு நானும் அதில் வந்தேன். அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன்//
//சரியான பதிலடி கொடுக்க சரியானாவர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே.//
இதில் பதிலடி கொடுக்க என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. தனது ரோலை புரிந்து கொள்ளாத, அல்லது புரிந்தும் செய்ய மறுக்கும் ஆர்.டி.ஓ.வின் இந்த செய்கையை யாராவது நியாயப்படுத்த இயலுமா? மேலும் தேவையின்றி ஆட்டோக்களின் விலையை உயர்த்த செய்து, மட்டமான ஆட்டோக்களையும் சில சில்லறை காசுகளுக்காக அனுமதிக்கும் செயல்பாட்டைத்தான் குறை கூறினோம்.
அதே சமயம் போட்டி அதிகமானால் தரம் தானே உயரும் என்பதை இப்போது பலதுறைகளில் பார்த்து வருகிறோம். அதெல்லாம் தாராளமயமானதால்தான் சாத்தியமாயிற்று என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.
நான் வேறு பல இடங்களில் கூறியதுபோல உலகமயமாக்கம் உங்கள் அனுமதிக்கெல்லாம் காத்திராது உள்ளே வந்தாகி விட்டது. அதை எப்படி எதிர்க்கொள்வது, அதன் விரும்பத்தகாத பக்க விளைவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை பார்ப்பதை விட்டு விட்டு, வந்திருக்கவே கூடாது அது என்று கூறுவதில் யாருக்கு பிரீதி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
காவல் நிலையங்களிலும் இதேப்போல் ஏராளமான வாகனங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன...
இதுபோன்ற வாகனங்களில் இருக்கும் எக்ஸட்ரா-பிட்டிங்களை கழட்டி(திருடி) விற்கும் நபர்களை என்ன சொல்வது
அன்புடன்
அரவிந்தன்
//அதே சமயம் போட்டி அதிகமானால் தரம் தானே உயரும் என்பதை இப்போது பலதுறைகளில் பார்த்து வருகிறோம். அதெல்லாம் தாராளமயமானதால்தான் சாத்தியமாயிற்று என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.//
எந்த இலக்கனத்துக்களுக்குள்ளும் அடங்கா நேர்மையின்மையின் வெண்மையில்லா கொற்றக் குடையின் கீழ் வாழும் மனிதர்கள் அதிகம் வாழும் இங்கே இது சாத்யமா தெரியவில்லை சார்.
தாங்கள் சொலவ்து போல் ஒரு சில துறைகறை தவிர பொரும்பான்மை துறைகளில் கூட்டுக் கொள்ளை ,நியாய பேரங்களை காற்றில் பறக்கவிட்டு வரிஏய்ப்புகள்,சட்டமீறல்கள்,கவனிப்புகள் முன்பைவிட( after 1991 new era) மிக அதிகம் நடந்து செல்வத்தில் கொளிக்கிறார்கள் .இது தர்மமா ?கடவுளுக்கு அடுக்குமா? தவறான முறையில் சேர்க்கும் செல்வம் தவராமல் தண்டனை தரும் உலக் நீதி இவர்களில் விஷயத்தில்? உலக பணாக்காரார் வரிசைகளில் நமது அம்பானிகளும்,பிரோம்ஜிகளும்,நா.மூர்த்திகளும்,மிட்டல்களும் உலக பணக்கார வரிசைகளில் இடம் பிடித்துள்ளார்கள்.மறுக்கவில்லை.
பல கம்பெனிகள் இன்னும் பூமி பூசையே போடாத நிலையில் அதன் பங்குகள் எப்படி விலை ஏறிக் கொண்டே இருக்கிறது.
டிவிடண்ட் வருமானம் கொடுக்கப் படாத சில கம்பெனிகளின் பங்கும் கொடிகட்டி பறப்பதகா உள்ள தகவ்ல் உண்மையா?( வ்லைபையன் சார் தான் பதில் சொல்ல வேண்டும்)
பல கம்பெனிகளின் காலாண்டு/ஆண்டு வருமானங்கலள் 50 % மேல் கூடியுள்ள தாகச் சொல்லப் படுவதற்கு நேர்மையற்ற வானிபத் தந்திரம் காரனம் இல்லையா?( அடக்க் விலை விட பல மடங்கு லாபம் வைப்பது-அரசு மிரட்டினால் போனால் போகிரது என ஒரு சிரு சதவிகிதம் குறைப்பதாகச் சொல்லி பிற்குசெய்யா சதிகள் உண்டா இல்லையா? முக்கியமாக கட்டுமானப் பொருட்களில் நடக்கும் கண்கட்டி வித்தைகள்.
ஒரு பகுதியினரிடம் குவியும் பெரும் செல்வத்தால் ரியல் எஸ்டே வானிபம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறதெ? குறிப்ப்பக சென்னை,பம்பாய் நிலவரங்கள்.இது நல்லதற்கா?வீக்கம் வெடித்துவிடாதா?
வர்த்தக அமைச்சகம் பணவீகத்திற்கு( more than 8 %) ரயில் வேயின் மறைமுக 6000 கோடி வர்த்தக கட்டண ஏற்ற்ம் என்கிறது.
ஆயில் கம்பெனிகள் திவால் ஆனாலும் பரவாயில்லை மிக அதிகமான(அமெரிக்கவை விட அதகம்)கலால் வரிகலை குறத்தால் பற்றாக் குறை பதறிய கூறை ஆகிவிட்ம் என மறுக்கும் நிதி அமைச்சகம்( அதிலும் தாங்கள் வெறுக்கும் பெர்மிட், ரேசன் நுழையப் பார்ப்பதாக செய்திகள்)
தனியார் தொலைபெசி நிறுவனக்கங்ளுக்கு
அரசு நிறுவனங்களின் திரண்ட சொத்தை தாரை வார்க்க முயலும் சிந்தனை ஓட்டங்கள்
தொடர்ந்து பல வருடங்களாக பெரும் லாபம் சம்பாதிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை ( வெள்ளை யானையாய் இல்லாமல் அரசுக்கு கோடிகணக்கான டிவிடண்ட் அளித்து வருபவை) சீர்குலையச் செது தனியாருக்கு கொடுக்க முயலும் தாரள மயங்களின் கர்ண பிரபுக்களின் வள்ளல் தன்மைகள்
அரசு நிருவனங்களில் சிறப்பாக பணி புரியும் அதிகாரிகளை பெரும் பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து அவரது அனுபவங்கள்,influence among previous staff,ஆகியவற்றை முறையற்று,unethical business தந்திரங்களை அதர்மமாக உபயோகித்து பழய நிறுவனக்களை முடக்கி தானாதாக்ககிக்
கொள்ளும் தனியார் மயங்களின் சாணக்கியர்களின் நவின அர்த்த சாஸ்திர சூத்த்ரங்கள்
லாபம் ஈட்டும் கம்பெனிகளை குறிவைத்து ,சட்ட ஓட்டைகளை உபயோகித்து முறை கேடாக 74 % க்கு மேலும் பங்குகளை வாங்கி கம்பெனிகளை வளைக்கும் உலகயமயங்களின் சுகுனிகளின்
சூதாட்ட அறிவுகள்
இதை எல்லாம் தாண்டி நமது 60 கோடி க்கும் மேற்பட்ட வெள்ளந்தி மனத்துடன் வாழ்கின்ற ஏழை,எளியவர்களின்
எதிர் காலம்
கேள்விக் குறியாய் .............
//தாங்கள் சொலவ்து போல் ஒரு சில துறைகறை தவிர பொரும்பான்மை துறைகளில் கூட்டுக் கொள்ளை ,நியாய பேரங்களை காற்றில் பறக்கவிட்டு வரிஏய்ப்புகள்,சட்டமீறல்கள்,கவனிப்புகள் முன்பைவிட( after 1991 new era) மிக அதிகம் நடந்து செல்வத்தில் கொளிக்கிறார்கள் /////
Annoy,
you don't know what you are talking about. The levels of corruption in getting licenses and permits in those days was terribly high. now such kinds of corruption no longer exists. and tax evasion during 98 % tax regimes was even higher (naturally). now govt corruption mainly is in contracts, supplies and tax evasion.
and other than RTO offices, insurance companies or other competent bodies can issue licenses. it is only an alternate suggestion that can be experimented.
And railway ticketing : when computerisation was introduced in the early 80s in govt PSUs, railways and banks, people like you cried hoarse along with trade unions against the computerisation , stating they would lead to job losses, etc. how utter nonsense, it has been proved.
Obviously you don't know the level of corruption in railway ticketing in those days. now e-ticketing helps lot of genuine travellers like never before. can you suggest any alternate ideas ? The unions resist privatisation for selfish reasons ; nothing noble in their aims. And try to work in Railways for a year and learn about SRMU and its billion rupee corruption.
Do you know about the assets of its leaders like Maaveeran Kannayaa, etc. Obviously that can be tolerated while ideas like ours cannot be. Nonsense.
And sure BSNL is corrupted and the minister for telecom has been purchased by R-Comm. open secret. suppose if BSNL was not nationalised in the early 50s (it was with private before 1947) and free cometition and MNC cos allowed right from 1947, how would things and level of corruption now be ? say, comapare with Europe or US..
and compare Lorry transport and bus transport sectors. permits and routes and deficiency is supply to meet growing demand. try travelling in MTC buses alone for a month.
///தொடர்ந்து பல வருடங்களாக பெரும் லாபம் சம்பாதிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை ( வெள்ளை யானையாய் இல்லாமல் அரசுக்கு கோடிகணக்கான டிவிடண்ட் அளித்து வருபவை) சீர்குலையச் செது தனியாருக்கு கொடுக்க முயலும் தாரள மயங்களின் கர்ண பிரபுக்களின் வள்ளல் தன்மைகள்////
Do you mean oil PSUs, ONGC, BHEL, etc. Do you have any idea of the level of corruption inside them. There is always a scramle for petroloeum ministry berth. the amounts of commission are mind boggling. Remember Sathish Sharma, Sankarand and Valayapaadi Ramamurthy days. billions and billions. i suppose you are happy if officers and politicians mint money in crores from these PSUs ;
but oject if a private company makes money legally and transparently.
do you know about the coal mafia in Eastern Coal Fields ? The officer who pioneered in nationalising them in 70s now regrets those moves ; try working in any PSU for a year to really understand what is going on inside them.
SAIL : another horror story. the amount we have poured into these steel mills since 1950s is simply too much. what is the net rate of return on all those investemtns ?
and at what cost ? only recently do SAIL show some efficency. still lot is hidden inside. Go see for yourself.
Dondu Sir,
I have been requesting you to write in detail about your on job experience in PSU IDPL, Delhi. Pls expose the working conditions, corruption, cost/ benefit analysis, mismanagement, plain stealing, etc.
And Annoy,
Jyovram Sunder and others (incl you) have not answered my points about liberalisation and globalsiation. the new wealth, job, taxes and prodcuts in created,
and foreign exchange acumulations ;
and most importantly the alternate ways to solve the foreign exchange criris of 1991.
most of you are economic illetrates but high on word play and rhetoric. As Nanbar Jamalan
has honestly commented, he lacks the required knowledge and data to argue back. I respect him for his honestly and openess..
All you annoy buggers who
சபாஷ் அதியமான். நான் மேலே கூற ஒன்றும் மிச்சம் வைக்காமல் நீங்களே கூறிவிட்டீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment