சோ அவர்கள் எழுதிய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' - 1 பல எதிர்வினைகளைப் பெற்றதில் அதிசயமே இல்லை. பெறாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம். நான் இங்கு கூறுவது என்னவென்றால், சோ அவர்கள் கூறுவது அத்தனையையும் அப்படியே நம்பிவிடக் கூடாது என்பதுதான். அதாவது அவர் தனது சாதனைகள் பல அதிர்ஷ்டத்தால் வந்தவை என்கிறார், அதை அப்படியே நம்பிவிடக் கூடாது என்பதையே நான் இங்கு கூற விரும்புகிறேன்.
அவரது சட்ட அனுபவங்களிலிருந்து இன்னும் இரு உதாரணங்கள் இங்கு தருவேன்.
அவர் வேலை செய்த குரூப்பின் ஒரு நிறுவனத்தில் ஒருவர் மேனேஜராக பணி புரிந்து வந்தார். அவர் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததாலும், மேனேஜர் ஹோதாவில் வேலை செய்து வந்ததாலும், சட்ட ஆஃபீசராக பணிபுரிந்த சோ அவ்ர்களது ஆலோசனைபடி அவருக்கு ஒரு மாத நோட்டீசுக்கு பதில் ஒருமாத சம்பளம் கொடுத்து வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவ்வாறு நீக்கப்பட்டவரோ நூதனமான முறையில் தான் மேனேஜரே இல்லை என்றும், சாதாரண குமாஸ்தா என்றும் ஆகவே தன்னை அம்முறையில் நீக்கியது செல்லாது என்றும் வழக்கு தொடுத்தார். அவர் மேனேஜர்தான் என்பதற்கு அவரது நியமன உத்திரவைப் பார்க்கலாம் என்றால் அது கிடைக்கவில்லை. இங்கு சோ ஒருவேலை செய்தார். அவர் நண்பரை விட்டு இன்னொரு கம்பெனியில் ஒரு காலி வேலைக்கான விளம்பரம் தரச் செய்தார். அது ஒரு மேனேஜருகானது. இந்த பிரச்சினைக்குரிய மேனேஜரின் தகுதி, அனுபவம் எல்லாம் கிட்டத்தட்ட அப்படியே புதுவேலைக்கு தேவையான ஷரத்துகளாகக் குறிக்கப்பட்டிருந்தன. இந்த மனிதரும் அந்த வேலைக்கு விண்ணப்பித்து தான் இருந்த கம்பெனியில் மேனேஜராக இருந்ததை மேற்கோள் காட்டி விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து சோ அவர்கள் இவரை குறுக்கு விசாரணையில் மடக்கி உண்மையை ஒப்பு கொள்ள வைத்தார். இத்தனைக்கும் அவர் சோவுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர். இருப்பினும் கடமை என்று வரும்போது சோ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை.
இன்னொரு முறை டி.டி.கே. குரூப் கம்பெனி ஒன்றில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருந்து பாட்டில் ஒன்றில் வேண்டுமென்றே பல்லி ஒன்றை போட்டிருக்கிறார்கள். இது பற்றிய விசாரணையில் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த சுமார் 60 பேர் மாட்டினார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே இக்காரியத்தை செய்தவர்கள். அவர்கள் யார் என்று தெரிந்த நிலையிலும் மற்றவர்கள் அவர்களை காட்டிக் கொடுக்க மறுத்தனர். சோ அவர்கள் ஆலோசனைபேரில் அத்தனை பேர் மீதும் ஒட்டுமொத்த விசாரணை நடந்து கலெக்டிவ் தண்டனையாக அவ்வளவு பேரும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வேலை நிறுத்தம், கேரோ, போலீஸ் தடியடி எல்லாம் நடந்து, வேறு வழியின்றி அரசின் லேபர் கமிஷனர் தலையிட வேண்டியதாயிற்று. ரிங் லீடர்களுக்கு அளித்த டிஸ்மிசலை திரும்பப் பெறாது மற்றவர்களுக்கு சர்வீஸ் இழப்புடன் மறுபடியும் வேலை போட்டு தரப்பட்டது. பிறகு அக்கம்பெனியில் இம்மாதிரியான லேபர் தொந்திரவு வரவேயில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் 60 பேர் மேல் சார்ஜ் ஷீட் என்றவுடன் முதலில் எல்லோரும் இவரை ஏளனமாகப் பார்த்திருக்கிறார்கள். தனித்தனியே விசாரணை செய்து நொந்து போவார் என அவர்கள் நினைத்துள்ளார்கள். அவரோ அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரேவிசாரணை நடத்தி, ஒரு நிலைக்குமேல் உண்மையான குற்றவாளிகள், அவர்களைக் காட்டிக்கொடுக்க மறுத்தவர்கள் ஆகிய எல்லோரையும் ஒரே லேபலில் கொண்டுவந்து அத்தனை பேரையும் வேலைநீக்கம் செய்வித்ததை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அதுதான் சோ.
இவ்வளவும் நடந்தபிறகு இன்னொரு அதிகாரி தானே எல்லாம் செய்ததாக கூறி கிரெடிட்டை அவர் தட்டிப் போனதையும் நகைச்சுவையுடனேயே குறிப்பிடுகிறார். ஆனால் அவ்வாறு அடாவடி செய்தவர் பெயரைக் கூறவில்லை. இருப்பினும் அக்காலக் கட்டத்தில் அந்த குரூப் கம்பெனியில் வேலை செய்த அனைவருக்கும் அவர் யார் என்பதில் சந்தேகமிருந்திருக்காது. அவரும் இப்புத்தகத்தை படித்து திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருந்திருப்பார். அதுதான் சோ.
அடுத்த பதிவில் அவரது நாடக அனுபவங்களுக்கு செல்லலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
03.06.2008 காலை 8.05 அளவில் சேர்க்கப்பட்டது:
எழுத வேண்டும் என முதலில் நினைத்து வைத்ததை அச்சமயம் மறந்து விட்டேன். இப்போது எழுதுகிறேன். சோ அவர்கள் 60 பேருக்கு சார்ஜ் ஷீட் தந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சோ அவர்கள் தனது நோக்கத்தில் தெளிவாக இருந்தார். அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் மேல் வன்மம் ஒன்றும் கிடையாது. அவரவர் நிர்ப்பந்தங்களால் தவறு செய்தவரை காட்டிக் கொடுக்க மற்றவர் வரவில்லை என்பதை விட, வந்திருக்க முடியாது என்பதையும் உணர்ந்துள்ளார். அவ்வாறு முன்வருபவர் கருங்காலி என மற்றவர்களால் முத்திரை குத்தப்படுவதையும் நாம் ஒப்பு கொள்ளத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் சோ அவர்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே கடுமையாக நடந்து கொண்டார். முதலிலேயே நிர்வாகத்துடன் பேசி, பிறகு அவர்களில் பலருக்கு சற்று குறைந்த தண்டனையில் வேலையைத் தரும் எண்ணத்தில்தான் காய்களையே நகர்த்தியுள்ளார். அதே போல நடந்தது. பிற்காலத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அம்மாதிரி பிரச்சினைகள் வரவேயில்லை. இதை நான் இங்கு அழுத்தி கூறுவதன் நோக்கமே ஜயலலிதா அவர்கள் அரசு ஊழியர்களை கையாண்ட விதத்தைப் பற்றி பேசத்தான். முதலில் திறமையாகக் கையாண்டு டிசிப்ளின் என்றால் என்னவென்று தெரியாத அரசு ஊழியர்களுக்கு பேதி உண்டாக்கினார். பொது மக்களும் அவரை ஆதரித்தனர். அச்சமயம் சோ அவருக்கு சற்றே விட்டு கொடுக்கும்படி ஆலோசனை கூறினார். அதை ஜயலலிதா ஏற்க மறுத்ததன் விளைவு அவருக்கு இதில் ஏற்பட்ட அனுகூலங்கள் எல்லாமே விரைவில் மறைந்ததுதான். இப்போது அரசு ஊழியர்களின் டிசிப்ளின் மறுபடி பிரச்சினை உண்டு பண்ணுகிறது. ஆக, ஜெயித்தால் போதாது, எப்போது விட்டுத் தரவேண்டும் என தெரிந்து கொள்வதும் முக்கியம். அது சோவிடம் இந்த விஷயத்தில் தேவையான அளவு இருந்திருக்கிறது.
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
14 hours ago
8 comments:
ஒரு முறை சோ இரயிலை மறித்துப் போராடியதாக (இரயில் கொண்டான்!!!) கேள்விப் பட்டிருக்கிறேன்.. எந்த சம்பவம் என்று நினைவில்லை.ஆனால் சம்பவம் நடந்தது உண்மை.உங்களுக்கு நினைவிருந்தால் எழுதுங்களேன்...திரு சோவினுடைய வீர வாழ்க்கையையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே!....வாழ்க சோ! வளர்க அவரது வீரம்
பல்துறை வித்தகராக அளப்பரிய பணிகள் ஆயிரம் செய்து ஜெயித்திட்ட சோ அவர்களின் நிர்வாகத் திற்மையை கண்டு வியந்தேன்.
அடுத்து நாடக உலகில் அவர் தொட்ட உச்சங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன் ஐயா.
தாங்கள் சோ அவர்களின் பன்முகத் திறமைகளை பாராட்டி மகிழும் சம்யத்தில்,
தங்களை வலிபதிவாளர் உலகில் பாண்டவர்களின் மூத்தவர் தருமராய் சித்தரித்து போற்றி மகிழும் திரு சுப்பையா அவர்களின் பல்சுவை பதிவுக்கு நன்றி.
http://devakottai.blogspot.com/
Monday, June 02, 2008
இதுதான் அந்த ஒற்றுமை!
அரசு உழியர்கள் தமிழக்த்தில் சுமார்
10 லட்சம் பேர் இருப்பார் கள்.அது போக கூட்டுறவு,உள்ளாட்சி பணியாளர்கள்,மின்துரை,பொக்குவரத்து துரை,மாநிலதின் கட்டுபாட்லிலுடள்ள பொதுத்துரை நிறுவனங்ககள், வங்கிகள்
முதலியவற்றில் பணி புரியும் பணியாளர்கள் ,அவ்ரது குடும் பங்கள் ,சொந்தங்கள் இஅவ்ர்களின் ஓடு பல்ம் சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி தாண்டும்.
சில தொகுதிகளில் அவர்களின் வாக்கே
முடிவுகளை முடிவு செய்யும்.
தேர்தல் பணிகள் வேறு அவர்கள் கையில் இருக்கும் ஆயுதம்
இதை சோ, மற்றும் MGR காலத்து அதிமுகா மூத்த தலைவர்கள் எவ்வள்வு சொல்ல்யியும் அதை சட்டை செய்யாது
1 ல்ட்ச்ம் பேரை ஒரு வழி பண்ணியதால் அதிமுகா இனி ஆட்சிக்கு வர முடியுமா என்ற, வினா அரசியல் பார்வையலர்களை
கேட்க வைத்துள்லது உன்மைதானே சார்.
ஆந்திரா வை விட பரப்பளவில் சிறிய தமிழ் மாநிலத்தில் அர்சுப் பணியானர் கள் அதிகம் என்பார்களெ (புள்ளி விபரம் ஞாபகத்தில் இல்லை-படித்த உண்மைத )
மத்தியரசுக்கு இனயான சம்பளம்( less hra ,t.a- but better promotional scales,earned leave encashment,better retiremenbt benefits,other extra concessions--
நாங்கள் எங்கள் அலுவலகத்தில் இப்படி வேடிக்கையாக பேசுவோம்( மாநில அரசு ஊழியர்கள் பொருத்தருள்க)
- "கலைஞர் அவர்கள் ஒலிப்பெருக்கி பிடித்து பேசினால் சம்பள மாற்ற உயர்வுகள்,சலுகைகளின் ஆனந்த ஊர்வலங்கள் ") வழங்கிய பிறகும்
மத்திய அரசு அமுல் படித்திய 6 நாள் வேலைத் திட்டத்தை செயல் முடுத்த முடியாத போது
//Anonymous said...
அரசு உழியர்கள் தமிழக்த்தில் சுமார்
10 லட்சம் பேர் இருப்பார் கள்.அது போக கூட்டுறவு,உள்ளாட்சி பணியாளர்கள்,மின்துரை,பொக்குவரத்து துரை,மாநிலதின் கட்டுபாட்லிலுடள்ள பொதுத்துரை நிறுவனங்ககள், வங்கிகள்//
போன பதிவின்போது மின்தடை ஏற்பட்டதால்( system was using 10 mts backup battery) தட்டச்சு தவறுகளை திருத்த முடியவில்லை.
ekalappai ல் தட்டச்சு செய்யும் போது
ற்,ர- ல,ள- ஒற்றைக் கொம்பு,இரட்டக் கொம்பு (பெ,பே) வரும் தவறுகளை
தவிர்ப்பதற்கு உபாயம் ஒன்று சொல்லுங்கள்.வேறு ஏதாவது எளிமையான தமிழ் தட்டச்சு உள்ளதா?
கற்றுத் தாருங்கள் ஐயா.
பெரும் பான்மையான வலைப்பதிவாளர்களின் பதிவுகளில் ஒன்றிரண்டு பிழைகள் மட்டுமே கண்ணில் தெரிகிறது.அவர்கள்(தாங்கள்) உபயோகிக்கும் மென் பொருள் என்ன .எங்கு கிடைக்கும்.
வரியுருமா எனும் தமிழ் மென்பொருள் வாங்கினேன்( சென்னை சிவனடியார்கள்-விலை 150).அதன் உபயோகம் ekalappai போல்தான் என்று சொன்னார்கள்.
தமிழ் தட்டச்சு தெரியாததால் பிழைகள் மலிந்து விடுகின்றனவா?
தங்களின் தட்டச்சு திறமை பற்றி கேட்ட கேள்விக்கு தனி பதிவு போடுவதாக சொன்னீர்கள்.
பதிலுக்கு(பதிவுக்கு) காத்திருக்கிறேன்.
//தங்களின் தட்டச்சு திறமை பற்றி கேட்ட கேள்விக்கு தனி பதிவு போடுவதாக சொன்னீர்கள்.//
வரவிருக்கும் வெள்ளிக்கிழமைக்கான கேள்வி பதில்கள் பதிவில் அதற்கு ஏற்கனவே பதில் போட்டு வைத்தாகி விட்டது.
மற்றப்படி நெடில் வரும்போது ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டும். ந மற்றும் ற வரும்போதும் அவ்வாறே. தமிழ் தட்டச்சு என நீங்கள் கூறுவது யளனகபக என்றால் எனக்கு அது தெரியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ந மற்றும் ற வரும்போதும் அவ்வாறே//
இதை இவ்வாறு படிக்கவும்.
ண மற்றும் ற வரும்போதும் அவ்வாறே
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondo sir,
'Kalanger-85'-
What do you think (inner mind) ?
Sathappan
'Kalanger-85'-
85 வயது இளைஞருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment