"டிப்ஸ் கொடுத்து பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்" என்று நான் மற்றவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அவ்வப்போது கூறி கொள்ள வேண்டியிருக்கிறது. மேல் நாட்டினரிடமிருந்து கற்று கொள்ள எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது போயும் போயும் இதைப் போய் நாம் பிடித்து கொண்டோமே!
ஹோட்டல்களில் ஏற்கனவே விலைகள் தாறுமாறாக ஏறியுள்ளன. இந்த அழகில் தன் வேலைக்காகவே சம்பளம் தனியாகப் பெறும் சர்வருக்கு ஏன் நீங்கள் டிப்ஸ் என்று அழவேண்டும்? அதற்கும் மேல் 10% அளவு தரவேண்டும் என்று வேறு எழுதப்படாத சட்டம். இதில் என்ன கொடுமையென்றால் சர்வர்கள் வாங்கப் போகும் டிப்ஸை கணக்கில் வைத்து அவர்கள் சம்பளம் ஏற்கனவே குறைவாகத்தான் தருவார்களாம். அதாவது ஹோட்டல் முதலாளிதான் பெரிய பிச்சைக்காரனாக மாறியுள்ளார் இந்த விஷயத்தில்.
வடபழனியில் உள்ள சரவணா பவனுக்கு சென்றிருந்தேன். அங்கு சர்வர் பில்லை கொடுத்துவிட்டு நேரடியாக கவுண்டரில் செலுத்தும்படி கூறி விட்டார். பலரும் அன்று கவுண்டரில்தான் பணம் செலுத்தினார்கள். இன்றும் அதே நிலைமையா என்று தெரியாது. அங்கு போய் சில மாதங்கள் ஆயின. மற்றப்படி சாதாரணமாக ஹோட்டல்களில் இந்த டிப்ஸ் விஷயம் ரொம்பவே படுத்துகிறது. சில ஹோட்டல்களில் வேண்டுமென்றே சர்வர்கள் மூலம்தான் பணம் செலுத்த வேண்டும் என்று இன்சிஸ்ட் செய்கிறார்கள். அதை பார்த்தாலே எனக்கு ரத்த கொதிப்பு ஏறிவிடும். வேண்டுமென்றே மீதிப் பணம் முழுக்கவே நிதானமாக எடுத்து வருவேன். ஏதோ நம்மால் ஆனது. ஆனாலும் சில சமயம் நண்பர்களுடன் போகும்போது அவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க குறைந்த அளவு டிப்ஸ் தருவதுண்டு. அதுவும் எனது தரப்பில் ஒரு பலவீனமே. திருத்தி கொள்ளவேண்டும்.
இரண்டு இட்டிலிகள் விலை அடக்கவிலைக்கு சம்பந்தமேயின்றி பத்து ரூபாய்க்கு விற்கும்போது டிப்ஸ் என்பது குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்த கதைதான். இந்த டிப்ஸ் கல்சர் பல இடங்களுக்கு பரவுகின்றன. மீட்டருக்கு மேல் போட்டு கொடு என்று அதிகாரப் பிச்சையாக கேட்கும் ஆட்டோக்காரரிலிருந்து சலூனில் முடிவெட்டுபவர், ஹோட்டல் ரூம்பாய்கள் என்று வாழ்க்கையின் எல்லா தரப்பிலிருந்தும் டிப்சு பிச்சை கேட்கும் கூட்டம் பெருகிவிட்டது.
மத்தியப் பொதுப்பணித் துறையிலிருந்த போது அதுவரை தானும் அரசு ஊழியன் என்றெல்லாம் பந்தா செய்து, தண்ணீர் கொண்டுவரும்படி கூற அதெல்லாம் தங்கள் வேலையில்லை, கோப்புகளை கொண்டு செல்வதுதான் தம் வேலை என்றெல்லாம் சட்டம் பேசும் நான்காம் வகுப்பு ஊழியர்கள், தீபாவளி, பூஜா சமயங்களில் மட்டும் ஒரு நோட்புக்கை எடுத்து கொண்டு வலம் வருவார்கள். அவர்கள் எல்லோரும் செய்யும் பூஜைக்காக நானும் பணம் தரவேண்டுமாம். நான் சேர்ந்த புதிதில் ஒரு முறை இதென்ன பழக்கம் எனக் கேட்டதற்கு இது பல தலைமுறைகளாக வரும் பழக்கம் எனக் கூறினர். அக்காலத்தில் பங்கா இழுக்கும் வழக்கம் எல்லாம் இருந்திருக்கிறது. நாம் சொன்ன பல வேலைகளையும் செய்வார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு மனிதன் சக மனிதனை இழிவு செய்வதற்கு சமம் என்று கொடி பிடித்துத்தானே பல வேலைகளிலிருந்து விடுபட்டார்கள். இன்னும் ஏன் இந்த பிச்சை எடுக்கும் புத்தி மட்டும் அப்படியே உள்ளது? அவர்களும் அரசு ஊழியர்களே. அவர்கள் சம்பளத்துக்கும் குறைவில்லை. பலர் ஆபீசர்களுக்கு கூட வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கின்றனர். ஆனால் அவர்களும் நோட் புத்தகம் எடுத்து கொண்டு வருவதில் குறைவில்லை.
'திடீரென ஏன் இந்தப் பதிவு' என்று கேட்பவர்களுக்காக:
சாதாரண ஷேவிங் செய்து கொள்ளப் போய் அவர்கள் செய்த பந்தாவில் மயங்கி பல விலை உயர்ந்த சேவைகளை பெற்று 1000 ரூபாய் வரை கொடுத்த கோவி கண்ணன் அவர்கள் கூடவே 50 ரூபாய் டிப்ஸ் வேறு தந்து விட்டு வந்திருக்கிறார். அதுதான் இப்பதிவை ஊக்கியது. நம்மைப் போன்றவர்கள் இம்மாதிரி பிச்சை எடுப்பதை ஆதரிக்கிறோம் என்று அச்சப்படுகிறேன்.
இப்போதெல்லாம் சில சலூன்களில் சேவைகளுக்கான விலை விவரங்கள் இல்லை. இது சட்டப்படி குற்றம். நான் புதிதாக ஒரு சலூனுக்கு செல்லும்போது கட்டிங் மற்றும் ஷேவிங்கிற்கு என்ன விலை என்று கேட்டு விட்டுத்தான் நாற்காலியிலேயே அமர்வேன். நான் கேட்டு பெறும் பதிலை மற்ற வாடிக்கையாளர்களும் ஆவலுடன் உள்வாங்குவதையும் ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பேன். நான் போகும் சலூனில் கட்டிங் மற்றும் ஷேவிங் ஐம்பது ரூபாய்கள். அதற்கு மேல் காலணா தர மாட்டேன். என் நண்பன் கூட ஒரு பத்து ரூபாய் வைப்பான். ஏண்டா இப்படி என்று கேட்டால் உன் தைரியம் எனக்கில்லையப்பா, ஆளைவிடு என்பான். இதற்கென்ன தைரியம் புடலங்காய் வேண்டியிருக்கிறது.
போகிற போக்கில் நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயத்தையும் கூறிவிட்டு போகிறேன். ஹோட்டல்களில் சர்வரிடம் பில்லுக்கு பணம் கொடுத்தாலும் கிரெடிட் கார்டுகளை மட்டும் தந்து விடாதீர்கள். அதை துர் உபயோகம் செய்யும் கோஷ்டி பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக அத்தனை சர்வர்களும் அப்படி என்று நான் கூறவில்லை. 0.001 % இருந்தாலும் அப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக் கொண்டால் நீங்கள் மொட்டையடிக்கப்படுவது நிச்சயம். ஆகவே நீங்களாகவே நேராகச் சென்று கவுண்டரில் கிரெடிட் கார்டை கொடுத்து உங்கள் எதிரிலேயே அவர்கள அதை உபயோகிக்குமாறு பார்த்து கொள்ளவும். சில கடைகளில் அதை தனியே உள்ளே எடுத்து செல்வார்கள், தயங்காமல் ஆட்சேபிக்கவும், தேவையானால் உங்கள் சந்தேகத்தை ஓப்பனாகவே கூறிவிடவும். கூடவே உள்ளே செல்லவும். வறட்டு கௌரவம் பார்க்காதீர்கள். அவர்கள் மனம் புண்பட்டால் படட்டும். உங்கள் பணம் களவாடப்பட்டு மனம் இன்னும் அதிகமாக புண்படும்போது அவர்களா வந்து தேற்றப் போகிறார்கள்? தேவையானால் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் இதை பற்றி கூறி எச்சரித்துள்ளார்கள் என்று கூறவும். முக்கியமாக அம்மாதிரி இடங்களில் பணமாகவே செலுத்தி விடுவது உத்தமம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
23 hours ago
39 comments:
ஊணவகங்களிள் நடை பெரும் கத்தியை காட்டாமல் நடக்கும் ( விலைகள்,
" T" hanks
"I" ntimating for
"P "leased
" S "ervice
-( T I P S - விரிவாக்கம் சரியா சார்)வழிப்பறி பற்றிய பதிவுக்கு பாரட்டுக்கள்.
உனவுப் பொருட்களின் வான் முட்டும் விலைகள் மக்களின் அதுவும் குறிப்பாக பிரம்மச்சாரிகள்,தொடர் பயணிப்போர்,இன்பச் சுற்றுலா செல்லும் ஆரம்பித்திருக்கும் நடுத்திர வர்க்கம் முதலியவர்களை படா படுத்து கிறது.அவர்களை இன்னும் கலங்கடிக்கப் போகும் அடுத்த உணவுப் பொருள் விலை உயுர்வு பெட்ரோல்,டீசல்,சமையல் காஸ் ஆகியவைகளின் தொடரப் போகும் விலை யுர்வுகள் ( இப்போ வந்த உயர்வு ரூ5/ரூ3/ரூ50 பெட்ரோல்/டீசல்/சமையல் எரிவாயு முதல் தவனைதான் கச்சா எண்ணெய் விலை பேரல் 200 க்கும் போகும் எனும் பார்வையாளரின் கணிப்பு நிஜமனால்)
இதில் யோசிக்கப் பட வேண்டிய ஹோட்டல் உரிமையாலர் களின் கோரிக்கை மனு உனவுப் பொருட்களின் விலையை சற்று குறக்க ( இட்லி,தோசை,பொங்கல்,வடை,டீ,காபி அளவு சாப்படு)
பார்த்தால் தலை சுற்றுகிரது.
அவர்களும் நான் தான் அடுத்த முதல்வர் , எங்கள் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும்
"
உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார் "
என அரசியல் கட்சி ஆரம்பிப்பார் போல் தெரிகிரது
அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள்:
1. சலுகைவிலை யின் பால்,தண்ணிர்
2. மானிய விலையில் சமையல் எரி வாயு
3. குறைந்த மின்கட்டனம்
4. 2 % வாட் வரி விலக்கு
5. அரசின் நியாய விலை கடைகளில் ( Ration supply based on ration distribution cards) எளியவர்களுக்கு வழங்கப்படும் சலுகை விலையில்
( நல்ல வேளை தமிழக அரசின் அரிசி கிலோ 2 ரூபாய் திட்டத்தில் ஹோட்டல் களையும் சேர்க்க வேண்டும் எனக் கோர வில்லை)
அரிசி, பருப்பு வகைகள்,உணவு எண்ணெய் வகைகள்,மற்ற மஞச மசாலாச் சாமான்கள். மார்கக்ட் விலைவிட மிகக் குறைவான விலயில்
வழ்ங்க வேண்டும்.
"இது தாண்டா ஹோட்டல் காரர்"
என இனி திரைப்படம்( தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி மொழிகளில்) / எல்லாச் சேனல் களீலும் சின்னத்திரை நெடுந் தொடர் வந்தாலும் வரும்.
டோண்டு சார் அவர்கள் முக்கியமன ஒன்றை மறந்து விட்டார்களே.
ஹோட்டல் கட்டங்களுக்க அனத்து வாடகை,தல வரிகள்( அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளன் டொனெசன் தெந்திரவற்ற donation/bribes free era) அனைதையும் தள்ளுபடி செய்து அரசின் நிதிஆதாரத்தில் இருந்து அதை மானியமாக ஏற்க வேண்டும்)
கடைசிக் கோரிக்கையாக ஹோட்டல் துறையில் பணிபுரியும் அனத்து உழியர்களையும் ( includung owener )
அரசு உழியராகக் கருதி அரசே அவரது சம்பளங்கள்,மருத்துவ செலவுகள்,ஓய்வுதியப் பலன்கள் வழ்ங்கினால்
( சார் கொஞ்சம் கற்பனை over தான் சார்-உங்கள் பதிவு என்னை அப்படி யோசிக்க வை த்து விட்டது)
//டிப்ஸ் கொடுத்து பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள் //
உங்கள் தகவல்கள் சர்வர்களுக்கு மட்டும் தானா ?
அறநிலைய துறையில் ஊதியம் பெற்றுக் கொள்ளும் அர்சகர்களுக்கு இல்லையா ?
நியூஸி & ஆஸியில் இந்த டிப்ஸ் வாங்கும்/கொடுக்கும் பழக்கம் அறவே இல்லை.
இந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட நான் பல நாடுகளில் ஒன்னும் கொடுக்காமல் இருந்துவிட்டு, 'எதுக்காக இந்த ஆள் இப்படிக் கேவலமாப் பார்க்கிறார்?' என்று புரியாமல் விழித்தும் இருக்கிறேன்.
ரொம்ப சரியாக சொன்னீர்கள் டோண்டு சார்!
கோவி.கண்ணன் சொன்னதுபோல் அர்ச்சகர் மட்டுமல்ல அங்கு செக்யூரிட்டிகளாக அலைபவர்களை மீறி
டிப்பாமல் கோவிலை விட்டு வெளியேற முடியாது.
//அறநிலைய துறையில் ஊதியம் பெற்றுக் கொள்ளும் அர்சகர்களுக்கு இல்லையா?//
கண்டிப்பாக உண்டு. அர்ச்சகர்களது ஊதிய விவரங்கள் தெரியவில்லை. அதை கூகளிட்டதில் இந்த உரல் கிடைத்தது. பார்க்க: http://www.thehindu.com/2006/01/03/stories/2006010308560400.htm
நகரங்களில் இருக்கும் ஒரு அர்ச்சகருக்கு மாதம் ரூபாய் 1000 முதல் 2000 வரை கிடைக்கிறதாம். மேலும்: "Temples get the same amount as `grant' on special occasions: (பெங்களூர்)
Thousands of "archakas" in Hindu temples across the State receive a remuneration of Re. 1 a month, according to the State federation of Archakas-Agamikas and Upadhivanthas.
The federation has urged the Government to constitute a high-power expert committee to suggest amendments to the Karnataka Hindu Religious and Endowment Act. According to it, the recently introduced rules are detrimental to interest of temples and should be withdrawn. It has demanded that the Government constitute an autonomous "Hindu temple consultation committee" with statutory status for protecting temples and monitoring their administration.
Addressing presspersons here on Monday, office-bearers of the federation, including its honorary president Srikanta Murthy and general secretary K.S.N. Dikshit, said the Government should have studied the issue in detail and consulted experts before enacting uniform rules. The Government's intention is to exercise control over Hindu temples by appointing dharmadarshis (board of trustees) to religious institutions, ignoring the repercussions, they alleged. Explaining the plight of archakas, they said men and women from the Scheduled Castes and Scheduled Tribes and Other Backward Classes are functioning as archakas besides the traditional Brahmin archakas. Of the 43,217 temples in the State, only 100 are financially sound. The average remuneration for archakas in temples in cities varies from Rs. 1, 000 to Rs. 2,000 a month. The remuneration for those in rural areas vary from Re. 1 to Rs. 200 a month.
The Department of Endowment extends a grant of Re. 1 to temples on occasions such as Independence Day, Republic Day, Gandhi Jayanthi, Ugadi, Shivaratri, Sri Rama Navamai, and Shankranti. It has fixed a salary of Rs. 1 for archakas irrespective the status of temples, the federation office-bearers said".
ஆக தட்டுகளில் வரும் வருமானத்தை கணக்கில் வைத்து அரசு சம்பளம் நிர்ணயிக்கிறது எனத் தெரிகிறது. அதாவது, டிப்ஸ்களை வைத்து சம்பளத்தை குறைக்கும் ஹோட்டல் முதலாளிகளின் நிலையில் அரசு உள்ளது. நான் ஹோட்டல் முதலாளிகளுக்கு சொன்னது அப்போது அரசுக்கும் பொருந்த வேண்டும்.
ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியரை இதற்காகவே நான் கேட்டபோது சாதாரணமாக அர்ச்சகர்களுக்கு கன்சாலிடேட்டட் ஊதியம்தான் தருவார்கள் என்று கூறினார். அவர் கூறிய தொகை சென்னையில் உள்ள பெரிய கோவில்களில் 3000க்கு மிகாது. இன்னொரு விஷயம். கோவிலுக்கு போய் வெறுமனே பெருமாளை சேவித்து விட்டும் வந்து விடலாம். காலணா செலவில்லை. ஆனால் ஹோட்டல்களுக்கு போனால் வெறுமனே தண்ணி குடித்து விட்டு வந்து விட முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வது சரிதான்.ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஐந்தோ,பத்தோ டிப்ஸ் கொடுத்துவிட்டு..அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு..இருப்பதால் சாப்பிட்டதும் உடனேயே ஜீரணமும் ஆகிவிடுகிறது. ஆட்டோவில் மீட்டருக்கு மேல்
கொடுத்துவிட்டு அதைப்பற்றியே நினைத்து B.P. ஏறியதும் உண்டு.சலூனில் மட்டும் டிப்ஸ் கொடுத்தால் ஒரு ஆதாயம்..முடி அதிகமாக வளராது..டிப்ஸ் கொடுத்த வருத்தத்தில் முடி கொட்ட ஆரம்பித்துவிடும்.டிப்ஸ் கொடுப்பதே ஒரு வறட்டு கௌரவம்.
// கோவி.கண்ணன் said...
//டிப்ஸ் கொடுத்து பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள் //
உங்கள் தகவல்கள் சர்வர்களுக்கு மட்டும் தானா ?
அறநிலைய துறையில் ஊதியம் பெற்றுக் கொள்ளும் அர்சகர்களுக்கு இல்லையா //
டோண்டு சார் இதுவும் கவனிக்க கண்டிக்கப் பட வேண்டியது தான்.
கோவி.கண்ணன் சார்ருக்கு எனது ஓட்டு.
இந்து அறநிலயத் துறையின் கட்டு பாட்டுக்குள் இருக்கும், உண்மையான ஆத்திகர்கள் இதை ஏற்க முடியாமல் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும், வருமானம் ,பகதர்களின் வருகை,நிதி ஆதாரம்,சொத்துக்கள் அடிப்படையில் முதல் நிலைக் கோயில் களான பழனி,திருச்செந்தூர்,மதுரை,சிதம்பரம்
கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்கள்,உழியர் களுக்கு ஒரளவுக்கு கவுரமான சம்பளம்.,பிற சலுகைகள் இது தவிர சில குடும் பங்களின் பரம்பரை பரம்பரையாக அவ்ர்கள் சார்பில் நெல்,தானிய அறக் கட்டளை வேறு இவர்களின் வருமானத்தை கூட்டும் நிலயிலும்
கற்புரத் தட்டில் விழும் காசு/பணம் இவற்றின் தரத்தை பார்த்து கொடுக்கப் படும் பிரசாதங்கள்,புகழுரை களும், வாங்கோ, வாங்கோ என வரவேற்பதும் .மற்ற காக்கி சீருட அணிந்த கடை நிலை உழியர் களும் கையேந்தி காசு கோட்கும் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும்.
தென் மாவட்டங்களில் நடை பெரும் மத மாற்றங்களுக்கு கோவிலில்களில் நடை பெறும் அரசியல் வாதித் தனங்களும் காரணமாம்.
பாவம் ஹோட்டல் பனியாளார்கள். அவர்களில் நல்ல கல்வித் தகுதியுள்ளவர்கள் கூட இருப்பதாக சொல்வார்கள்.
ருபாய் 1 முதல் 5 வரை டிப்ஸ் கொடுப்பதால், நாம் குறைந்து விட மாட்டோம் சார்.
அனால் அதே சமயம் டிப்ஸ் கொடுக்காத காரனத்திற்காக முறை தவறி நடந்தால் கண்டிக்க தக்கது
விஸ்வநாதன்
தென்காசி
தென்காசி அவர்களே,
கோவி கண்ணன் கூறியதை படித்தீர்கள் சந்தோஷம். அதற்கு நான் தந்த எதிர்வினையை படித்ததாகத் தெரியவில்லையே. அர்ச்சகர்கள் மற்றும் சீருடை அணிந்து பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு ஸ்கேலில் சம்பளம், டி.ஏ., வாடகைப்படி என்றெல்லாம் தரட்டும் பிறகு பேசலாம்.
அப்படியே அர்ச்சகருக்கு காசுபோட இஷ்டமில்லாதாவர்கள் வெறுமனே பெருமாளை சேவித்துவிட்டும் வரலாம். யாரும் கையை பிடித்து இழுக்க மாட்டார்கள். காலணா செலவில்லை. பிடிக்காத வேலையை தவிர்ப்பதில் உங்களுக்கும் திருப்தி கிட்டும்.
மற்றப்படி அரசே அர்ச்சகர்கள் தட்டேந்துவதை கணக்கில் வைத்துத்தான் சம்பளத்தையே நிர்ணயிக்கிறது என்றும் கூறினேன்.
பல அர்ச்சகர்கள் சொந்தத்தில் புரோஹிதம் செய்ய போய்விடுகிறார்கள். எங்களூர் நரசிம்மர் கோவிலில் இதை அடிக்கடி பார்க்கிறேன்.
ஆனால் அரசு என்ன செய்கிறது என்றால், கோவில் வருமானங்களை மத சம்பந்தமற்ற செலவுகளுக்கு உபயோகித்து கொள்கிறது. திருப்பதி கோவிலில் வரும் வருமானத்தில் கிறித்துவ முதல் மந்திரி ராஜசேகர் ரெட்டி ஈத்கா மைதானம் முஸ்லிம்களுக்காக எழுப்புகிறார். பாதாளச் சாக்கடை திட்டத்துக்கு செலவழிக்கிறார். அதுவே அவரால் ஒரு மசூதி அல்லது சர்ச்சின் வருமானத்தில் கைவைக்க முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
அர்ச்சகர்ன்னு சொன்னவுடனே உங்க சப்பை கட்டு சகிக்கல்ல.
அப்புறம் ,கிறிஸ்தவ கோயில்களை அரசாங்கம் நிர்வகிப்பதற்கு ,அவை என்ன அரசாங்கத்தாலோ அல்லது அந்த கால மன்னர்களாலோ கட்டப்பட்டதா என்ன ?
ஊரான் பணத்துல அந்த கால அரசர்கள் கட்டுன கோவில்களில் வருமானத்தில் உங்களுக்கு பங்கு வேணுமாக்கும்?
யாரும் அர்ச்சகருக்காக சப்பை கட்டு கட்டவில்லை ஜோ அவர்களே. நான் கூறியபடி அரசே அர்ச்சகர்கள் அம்மாதிரி நடக்க வேண்டும் என்பதற்காகவே சம்பளத்தை நிர்ணயிப்பதால் அரசுதான் பெரிய பிச்சைக்காரராகிறது அவ்வளவே. இப்போதும் கூறுகிறேன், தாராளமாக அர்ச்சகர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமனே சாமியை சேவித்து விட்டு வாருங்கள், அது உங்கள் விருப்பம். அதே போல சர்வர்களுக்கு, சலூன்களில் ஏற்கனவே கொள்ளைவிலை வாங்கும் இடங்களில் பீத்த பெருமைக்காக டிப்ஸ் போடுவதை நான் தவிர்ப்பது எனது சாய்ஸ். அதற்கான பதிவை போட்டுவிட்டேன். மீதி படிப்பவர்கள் சாய்ஸ்.
கோவில்கள் விஷயத்தில் புதிதாக ஆஸ்திகர்களே கோவிலை உருவாக்கி, தாங்களே நிர்வகிக்கும் இடங்களிலும் அரசு அறநிலை ஆணையம் மூக்கை நுழைக்கிறது. (எங்களூர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் இதற்கான முயற்சிகள் நடக்கின்றன). மதசார்பற்ற அரசு இந்துமதக் கோவில்களில் மட்டும் ஏன் கைவைக்க வேண்டும்? அப்படி கைவைத்து மற்ற மதத்தினருக்கான செலவுகளை ஏன் கோவில்களிலிருந்து எடுக்க வேண்டும் என்பதை கேட்கும் கடமை ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு. கையகப்படுத்தினால் எல்ல மத வழிப்பாட்டு ஸ்தலங்களையும் கையகப்படுத்து என்றுதான் கூறுகிறோம். அதை செய்ய வக்கு இல்லாது இந்துக்களை மட்டும் குறிவைக்கும் அரசு செயலை அப்படித்தான் விமரிசனம் செய்வோம்.
மற்றப்படி டிப்ஸ் வாங்கும் விஷயத்தை டீல் செய்யும் இப்பதிவில் அதை பற்றியும் பேசுங்கள் என்றுதான் கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.
இது ஒரு திசை திருப்பும் முயற்சி.
இந்த அழகில் ஆதரவு ஓட்டு வேறு.
அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?
Pls see what bala bharathi writes about tips :
///எனக்கு ஒரு வியாதி உண்டு. பிச்சைகேட்டு யார் வந்தாலும் காசு போட மாட்டேன். அவர்களுக்கு ஒரு வேளைக்கான சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவேன். என்னிடமே காசு குறைவாக இருந்த சமயங்களில் டீயும் பன்னும் வாங்கி கொடுத்திடுவேன். அதே சமயம் பார்வையற்றவர் ஏதேனும் பொருள் விற்கிறார் என்றால்.. எனக்கு அது பயன்படாவிட்டாலும் சின்னதாக அவரிடம் இருந்து ஒரு பொருளை வாங்கி வந்துவிடுவேன். ஓட்டல்களில் சாப்பிடப்போகும் போது சர்வருக்கு எல்லோரும் டிப்ஸ் கொடுப்பது வழக்கம். நான் கையில் காசு இருந்தால் சர்வரையும் டேபிள் தொடைக்கும் பையனையும் அழைத்து அவனுக்கும், நல்ல மூட் இருந்தால் சமையல் கட்டுக்கு சென்று மாஸ்டருக்கும் கூட டிப்ஸ் கொடுத்திட்டு வருவேன். (இது எல்லாம் நான் ஓட்டலில் டேபிள் துடைத்த காலத்தில் எனக்கு நடந்திருப்பதை/பார்த்ததையும் இப்போது நான் செய்கிறேன் அவ்வளவே!) அது போலவே முடிதிருத்தகங்களில் வேலைப்பார்ப்பவர்கள் 10க்கு 4 என்ற அளவில் கமிசன் அடிப்படையில் வேலை பார்க்கிறார்கள். அதாவது.. மொத்தமாக 100 ரூபாய்க்கு ஒருவர் வேலை பார்த்தார் எனில் நாற்பது ரூபாய் அவருக்கும், அறுபது கடை முதலாளிக்கும் போகும். அதனால்.. அங்கு போனாலும் டிப்ஸ் கொடுப்பது என் வியாதி. ஆனால்.. /////
////இங்கு அக்குள் முடி அகற்றப்படமாட்டாது என்று முடிதிருத்துவோர் சங்கத்துச் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்கள். எத்தனையோ க்ரீம்கள் வந்த பின்னுமா இங்கு வந்து கையை தூக்கிக்கொண்டு நிற்கிறார்கள் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. அப்படி தூக்காமலா இப்படி எழுதி போட்டிருப்பார்கள் என்ற எண்ணமும் உடனே தோன்றியது.
என் முறை வந்ததும் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நான் எல்லா இடங்களிலும் வேலைப் பார்ப்பவரின் பேரை கேட்பது போல அங்கேயும் அந்த இளைஞன் பேரை கேட்டேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி இருக்க வேண்டும். சிரித்த முகத்துடன் தன் பெயரைச் சொன்னார். அப்புறம் என்னைப் பற்றி கேட்டார் சுருக்கமாக சொன்னேன். நிதானமாக வேலை செய்தார். வேலையில் அவரின் கவனம் என்னைக் கவர்ந்தது. இடையிடையே பேசிக்கொண்டோம். எல்லாம் முடிந்ததும் அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தேன். நன்றி சொன்னார். கூடவே இன்னொன்றையும் சொன்னார். எனக்கு மனம் கணத்து வெளியில் வந்தேன்.
‘நானும் நாலுவருடமா இதே வேலையைச் செய்யுறேன் சார்.. யாருமே என்கிட்ட பேரு கேட்டதில்ல. என்னமோ தெரியலை சார்.. சந்தோசமா இருந்துச்சு’ என்றார். சக மனிதனின் பேர் கேட்பதில், என்ன வந்து விடப்போகிறது. அது எதிராளிக்கு மகிழ்வளிக்கும் செயலாக இருக்கும் நிலையில் போகின்ற எல்லா இடங்களிலும் பேர் கேட்பதோடு ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு வருவதில் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது./////
http://blog.balabharathi.net/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88-30%e0%ae%ae%e0%af%872008/
நன்றி வீ.எஸ்.கே. அவர்களே,
நான் கூறிய இன்னொன்று எல்லோருமே கவனம் கொள்ள வேண்டியது. அதுதான் கிரெடிட் கார்டுகளால் பணமளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்புகள்.
என்னிடம் கிரெடிட் கார்டுகளோ டெபிட் கார்டுகளோ இல்லை. நான் கூறியது பல பத்திரிகைகளில் படித்ததுதான். ஆகவே நான் க்ரெடிட் கார்ட் விஷயத்தில் கூறியதில் ஏதேனும் தகவல் பிழை இருந்தால் திருத்தி கொள்வேன்.
அதியமான் அவர்களே,
பாலபாரதியின் அப்பதிவை நானும் படித்தேன். அவரது அனுபவத்திலிருந்து அவர் எழுதுகிறார். நான் எனது அனுபவங்களிலிருந்து எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?//
அடேங்கப்பா!
நல்லா இருக்கு பதிவு. க்ரெடிட் கார்ட் பாதுகாப்பு பற்றீய தகவல் மிக அவசியமானது.
//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?//
சூப்பரா கேப்ல கெடா வெட்டுறீங்களேங்க.
அய்யா 1000 ரூபாய்க்கு முடி வெட்டுற இடத்துல மட்டும் தான் அப்படிங்கோ. எல்லா இடத்துலேயும் இல்லீங்கோ.
ஆனா இந்த அன்றாடம் மக்கள காய்ச்சுற அர்ச்சகர் மேட்டரே வேறேங்கோ...
//
"டிப்ஸ் கொடுத்து பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காதீர்கள்" //
எதுக்கு இந்த மாதிரி ஒரு தலைப்பு ,
அப்ப டிப்ஸ் வாங்கராவங்கலாம்
பிச்சகாரன்ங்கறீங்காளா சார் ,
மொதல்ல தலைப்ப மாத்துங்க
//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?//
என்ன கொடுமை வீஎஸ்கே ஐயா,
கோவில் பாதுகாப்பான இடம் என்பதால் அர்சகர்கள் அன்றாடம் 'காய்ச்சுகிறார்களா?'
தகவல் புதுசாக இருக்கே ... !
/////அவர்கள் செய்த பந்தாவில் மயங்கி பல விலை உயர்ந்த சேவைகளை பெற்று 1000 ரூபாய் வரை கொடுத்த/////
சந்தனம் மிஞ்சினா ***ல அப்புனானாம்' அப்படின்னு ஒரு சொலவடைதான் நினைவுக்கு வருது.
இப்படியெல்லாம் ஒரு பதிவா ? ஒரு ஏழை சர்வருக்கு டிப்ஸ் வைக்க மனமில்லாதவர் அதை வெளியே பெருமையாய் சொல்லிக் கொள்வதைக் கேட்கச் சகிக்கவில்லை.
அவர்களுடைய உழைப்புக்கு நாம் தரும் வெகுமதியை பிச்சை என்று தாழ்த்துவது அதை விட அருவருப்பாய் இருக்கிறது.
நான் எனது அலுவலகத்திலுள்ள ஆபீஸ் பாய்க்கும், செக்கூரிட்டிக்கும் தினம் ஒரு நேரமாவது காஃபி ஆடர் செய்து வாங்கிக் கொடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ளேன்.
இத்தகைய சிறு சிறு செயல்களில் கிடைக்கும் மன நிறைவை அறிந்து கொள்ளாமலேயே வாழும் மனிதர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
கிறிஸ்தவ பாதிரியார்கள் சர்ச்சில் எடுக்கும் பிச்சையை விடவா கோயிலில் எடுத்துவிட்டார்கள்? பாவமன்னிப்புகேல்லாம் காசு வாங்கி பிச்சை எடுத்த கத்தோலிக்க பாதிரிமார்களின் அராஜகத்தால் தான் புராட்டஸ்டண்டு மதமே தோன்றியது.கோயில் அந்த கால அரசர்களின் காசில் கட்டியதாம்...சர்ச்சு கட்ட மட்டும் என்ன வானத்திலிருந்து கர்த்தரா காசு கொடுத்தார்?உலகம் பூரா டொனேசன் வாங்கியும், இந்தியாவில் ஆத்ம அறுவடை செய்யவும் வந்த பிச்சை காசு தானே அதெல்லாம்? பிச்சை எடுப்பதற்கு டொனேசன் என்று பெயர் சூட்டி, மாணவர்களிடம் காசை கறக்கும் கலையை விஞ்ஞானமாக்கியது மிசனரி ஸ்கூல்கள் தான்.
அப்புறம் அமெரிக்காவிலிருந்து ஒருத்தர் சிங்கப்பூருக்கு போனாராம்.அவருக்கு சோறுபோட்டு,ஊரை சுத்திக்காட்டி அதுக்கு 'நன்கொடையா' டாலரை பூஜை ரூமில் வெச்சு வாங்கிய ஒருத்தர் இன்னைக்கு கோயிலில் பிச்சை எடுப்பதாக சொல்கிறார். வாயால் சிரிக்க முடியலை டோண்டு சார்.
//அவர்களுடைய உழைப்புக்கு நாம் தரும் வெகுமதியை பிச்சை என்று தாழ்த்துவது அதை விட அருவருப்பாய் இருக்கிறது.
நான் எனது அலுவலகத்திலுள்ள ஆபீஸ் பாய்க்கும், செக்கூரிட்டிக்கும் தினம் ஒரு நேரமாவது காஃபி ஆடர் செய்து வாங்கிக் கொடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ளேன்.//
சர்வர்கள் உழைப்புக்கு சம்பளம் தரவேண்டியது அவர்களது முதலாளி. அதையும் தின்பண்டங்களின் விலையில் உள்ளிட்டுவிடுகின்றார். ஆகவே அவர்கள் சம்பளத்தை நாம் ஏற்கனவேயே கொடுத்து விடுகிறோம்.
அதற்கும் மேல் நாம் டிப்ஸ் கொடுப்போம் என அவர்கள் சம்பளத்தை குறைப்பது பெரிய பிச்சைக்காரனான ஹோட்டல் முதலாளிதான். அதற்கு நாமா பிணை? உங்களை மாதிரி இருப்பவர்கள்தான் சர்வர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளவிக்கிறீர்கள்.
அதே போல ஆஃபீஸ் பாய்க்கும் செக்யூரிடிக்கும் சம்பளம் வருகிறது. நீங்கள் அவர்களுக்கு வாங்கி தந்து அவர்களது கௌரவத்தை குலைக்கிறீர்கள்.
இது சொல்லும்போது நான் எனது இரட்டைக் குவளை முறைக்காக போட்ட இப்பதிவு ஞாபகத்துக்கு வருகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
எங்கள் அலுவலகத்தில் காப்பி கிளப் ஆரம்பித்தோம். எல்லோரும் பணம் போட்டோம். பியூனும் அதில் பணம் போட்ட மெம்பர். ஆகவே அவரை எல்லோருக்காகவும் கிளாஸ் கழுவச் சொல்லக் கூடாது என்றேன். அப்பதிவின் ஒரு பின்னூட்டதிலிருந்து இப்போது சில வரிகள்: "எங்கள் அலுவலக பியூன் ஒரு தலித். அது எனக்கு அப்போது தெரியாது. நான் பொதுப்படையாக பியூனை க்ளாஸ் கழுவச் செய்யக் கூடாது என்று கூறியதற்கு முக்கியக் காரணம் எல்லோரும் சம உரிமை பெற்ற, பணம் செலுத்தும் உறுப்பினர்கள் என்பதே. பியூனுக்கு இலவசமாக காப்பி கொடுத்து கிளாஸ் கழுவச் சொல்லலாம் என்ற எதிர் யோசனை வைக்கப் பட்டப்போது, அதற்கு நான் க்ளப் அமைக்கும் யோசனையையே விட்டு விடத் தயார் என்று சிறிது கடுமையாகக் கூறினேன். உதவிப் பொறியாளர் எனக்கு ஆதரவு தெரிவித்தார். பியூனும் தான் பணம் செலுத்துவதையே விரும்புவதாகக் கூற எல்லாம் சுமுகமாக முடிந்தது. 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து நான் செல்லும் போதுதான் பியூன் தான் ஒரு தலித் என்பதையும், இரட்டை டம்ளர் முறை தங்கள் கிராமத்தில் இருந்தது என்றும், பணமும் செலுத்தி க்ளாஸையும் கழுவி வைக்க வேண்டியிருந்தது என்பதைப் பற்றியும் என்னிடம் கண்கலங்கக் கூறினார். எங்கள் க்ளப் விதி முறையால் தன் சுய மதிப்பு உயர்ந்ததாகவும் கூறினார்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹஹ்ஹா, சிங்கப்பூர் பதிவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார் பாருங்கள். சூப்பர். மேட்டர் என்னன்னு தெரியாம தானாவே ஒளறியிருக்காரு பாருங்க. கோயிலிலே வேலை பார்க்கிற அர்ச்சகர்களை குறித்து தான் இங்கே டாபிக். ஆனா அப்படியே ஆரம்பிச்சு அவரோட பிரண்டு சொன்னாராம் (அவரு 'பிரண்டு' தானே சொல்லிருக்கும், சொல்லிருக்கும்). என்னோட வீட்டுக்கு வர்ற அர்ச்சகரோட 50 லட்சம் வீடுன்னு.
அடப்பாவி, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்ப்பா. பிரச்னை கோயிலிலே வேலை பார்க்கிற அர்ச்சகர்களை பற்றியதா, அல்லது வீடுகளுக்கு செல்லும் புரோகிதர்களைக் குறித்தா. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் எழுத வந்திட்டாங்க பாருங்க.
டோண்டு ஐயா!!
நமது உரிமை பொருள் மீது நமது அனுமதி இல்லாமல் எந்த தொழிலாளியும் கை வைக்கமாட்டார்கள, ஆனால் இழி பிறப்பான கோயிலில் பணிபுரியும் அனைத்து பாப்பானும் அர்ச்சனை தட்டில் இருந்து உடைத்த தேங்காயில் ஒரு பகுதி் திருடும் இவர்களை காட்டிலும் தோழிலாளிக்கு டிப்ஸ் தருவது தவறு இல்லை!!
புதுவை சிவா.
//எங்கள் க்ளப் விதி முறையால் தன் சுய மதிப்பு உயர்ந்ததாகவும் கூறினார்//
sutthungal dondu avargale, nandraaga... yaaraavathu IDPL-il poy visaarikka pogiraargalaa enna?!! neengal solvathaithaane kettaaga vendum!!!??
komanakrishnan
//சர்வர்கள் உழைப்புக்கு சம்பளம் தரவேண்டியது அவர்களது முதலாளி. //
sarithaan... aanaal sevaiyin tharam aalai poruthu maarupadum. nandraaga customer-ai kavanithaal tips kodukkalaame. antha extra varumaanaththilum neengal yen mannai podukireergal?
komanakrishnan
This is really a crap. Tips are not meant for show offs or anything like that. It is such mentality that needs to be changed.
some stingy people will shell money only when they feel there is something to gain otherwise they will not even chase bugs with their wet hands. I think the author of this post is also seems to be one like that.
If i recollect correctly this author would do a great showoff saying he spent 50 paise for peanuts for the blogger meet etc.,
Govt. is interfering in Hindu's matter because the hindus are incapable of sorting their affairs.
They do all sort of discrimination , they dont allow any one to become archakars. They dont allow Tamil or any other language to be used other than the dead language. So the govt. has to do all these types of interference.
The temples now are now little saner becuase of govt. interference.
In christianity, there are lots of Datlit priests christianity does not need govt. interference but for hindus...
டிப்ஸ் கொடுப்பது ஒரு சில சமயம் பலருக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. எப்படி என்றால் நான் சென்னையில் இருந்த போது ஒரு சிலர் அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குறைந்த வருமானத்தால் தினமும் உணவகத்தில் சாப்பிடும் போது டிப்ஸ் கொடுக்க முடியாது, அவர்கள் கணக்கு ஒரு நாளைக்கு 3 வேலைக்கு 2*3=6 வைத்துக்கொண்டால் 30*6=180 ஆகிறது. குறைந்த பட்சம் மாதம் 150 ஆகிறது. என்னையா! 150 ருபாய் எல்லாம் ஒரு பணமா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை, அவ்வாறு கஷ்டப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும். இதனால் என்ன பிரச்சனை என்னவென்றால் அங்கு பணிபுரியும் சர்வர்கள் டிப்ஸ் கொடுப்பவருக்கு ஒரு மாதிரியும், கொடுக்காமல் தொடர்ந்து சாப்பிட்டு செல்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பணி புரிவார்கள். கொடுக்காமல் இருப்பவர்களுக்கு எதுவும் உடனே கிடைக்காது, ஒரு முறைப்பு இருக்கும் என்னவோ அவர்கள் இலவசமாக சாப்பிட்டு செல்பவர்களை போல மதிக்கப்படுவார்கள்.
இதனால் தான் ஒரு சில உணவகங்கள் டிப்ஸ் முறையை ஒழித்துள்ளன, இதன் காரணமாக தொடர்ந்து வரும் வாடிக்கையாளர் தடை படுவார் என்று. நீங்க சரவணபவன் ல் பார்த்தால் விரைவு மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில் மட்டுமே டிப்ஸ் வாங்குவார்கள். சாதாரண சரவண பவன் உணவகங்களில் டிப்ஸ் வாங்க மாட்டார்கள் பில்லை நம் கையிலேயே கொடுத்து விடுவார்கள். இந்த பகுதிக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலர் தொடர்ந்து வருவதே இதற்க்கு காரணம் என்றும் அவர்களால் தினமும் டிப்ஸ் கொடுக்க முடியாது என்று ஒரு முறை அண்ணாச்சி பேட்டியில் கூறி இருந்தார் (ஆனால் இப்போது அங்கே தாறுமாறாக விலை உயர்ந்து விட்டதால் தினமும் செல்லும் வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர் அது வேறு விஷயம்)
நானும் டிப்ஸ் கொடுக்கிறேன் என்றாலும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை!!!. அவர்கள் பணி தரம் கண்டு கொடுப்பதற்கு நான் எதிரியல்ல. எதோ கொடுத்தாக வேண்டுமே என்று கொடுப்பது தான் தற்போதைய பிரச்சனை. அவர் நமக்கு சரியான முறையில் செய்யவில்லை என்றாலும் டிப்ஸ் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்பதே உண்மை. டிப்ஸ் என்பது ஒருவர் தன்னை மனநிறைவு செய்ததற்காக கொடுக்கப்படும் ஒரு ஊக்க ஊதியம், ஆனால் அவ்வாறு செய்யாதவர்களுக்கும் கொடுக்க வேண்டி உள்ளதே தற்போதைய நடைமுறை. இது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இந்த தவறை நானும் செய்து கொண்டு இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
Tipping is a choice in india ! And the analogy of Hotel servers to beggers is absolutely ridiculus. If you are expected to tip (because others are doing so), you can be assertive and decline.
And hotel servers mostly belong to lower middle class economies. (or even less).
If someone serves you well, you tip them. What can be wrong in it ?
This is like performance related bonus from your establishment and the only difference is that instead of establishment, you get the reward from the end customer. And just because you work for the establishment, it is absolutely not necessary that rewards should come only from the establishments. And also tips are cumulated at the end of the day and shared between all the servers.
Temples are supposed to be one of the places where the equality is maintained. (it is seldom true) but i hate those archagars who tries to give extra "mariyadhai" to people who give "kaanikai". But to be fair, i have seen more archagars taking the money from the plate and putting them in Koyil Hundiyal. So, it is a personal choice.
And a reminder to dondu :- No hotel server declines to serve you because you are not tipping him as you tip only at the end. And i have been using the credit cards in restaurants for the past 10 years and noone has cheated on me. If you have 24 hours news channel and magazines that are published twice a week, you got to fill in spaces. And if you try to be extra cautious in protecting you from all the scams, i think it would be futile.
You got to atleast check your credit card bills. If there is any cheating, you can call up the bank and decline to pay.
//And just because you work for the establishment, it is absolutely not necessary that rewards should come only from the establishments.//
But what do you say to the fact that hotel owners pay less salary to servers just in anticipation of tips from patrons?
It is quite an established swindle and I am just cautioning the patrons.
//And i have been using the credit cards in restaurants for the past 10 years and noone has cheated on me.//
I tell you to keep your house locked and you say that you have never been robbed. You are free to remain blissfully ignorant.
Regards,
Dondu N. Raghavan
//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?//
அப்படியா? சவரக் கடை தொழிலாளி அநியாயமாக பணம் புடுங்குகிறார்களா? இது வரையில் என்னிடம் எந்த சவரத் தொழிலாளியும் டிப்ஸ் கேட்டதில்லையே... நானும் பல ஊரில் பணி புரிந்திருக்கிறேன்.. சிறிதும் பெரிதுமான பல சவரக் கடைகளுக்கு போய் இருக்கிறேன். யாரும் டிப்ஸ் கேட்டதில்லை. நீங்களும் டிப்ஸ் கேக்காத சவரக் கடைக்கு போங்களேன்....
.. டோண்டு சார்... எந்த சர்வரும் கட்டாயமாக டிப்ஸ் கேட்பதில்லை.. இது வரை எந்த ஹோட்டலிலாவது கட்டாயம் டிப்ஸ் தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களா? நாமாகத் தான் கொடுக்கிறோம்... அதுவும் கூட எல்லோருக்கும் தருவதில்லை... நமக்கு அந்த சர்வர் எப்படி பரிமாறுகிறாரரென்பதை பொருத்து தான் தருகிறோம்... சிலர் பரிமாறும் லட்சணத்தை பார்த்தால் கொடுக்க தோணாது.. சிலர் மிக அன்பாக இன்முகத்துடன் பரிமாறுவார்கள்.. அவர்களுக்கு தருவதில் தப்பில்லை.... இதை பிச்சை என்று சொல்லி அருவெறுப்பாக சந்தோஷப் பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை... உங்களுக்கு பிடிக்கலைனா குடுக்காதிங்க.. அதுக்கக ஏன் பிச்சைனு சொல்லி குடுக்கறவங்களையும் கொச்சை படுத்தறிங்க... நீங்க அர்ச்சகர் தட்டில் காசு போட்டதே இல்லையா? உண்டியலில் காசு போட்டதே இல்லையா? இதெல்லாம் எந்த கணக்கு? உங்கள் பார்வையில் பிச்சை கணக்கு தானே...
.. அப்புறம்... இந்து கோவில்களில் அரசு மூக்கை நுழைக்கிறது என்கிறீர்கள்...
கிறிஸ்துவ தேவாலயங்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் குறைந்த பட்சம் அவர்கள் மதத்துக்காவது ஏழைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று சேவை செய்கிறார்கள்... ஆனால் நீங்கள் உண்டியலில் போடும் பணத்தை எந்த கோவிலாவது எந்த வகையிலாவது உங்களுக்கு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு திருப்பி தருகிறதா? இலவசக் கல்வி இலவச மருத்துவம் என்று எத்தனை கோவில்கள் சேவை செய்கிறது... சாய்பாபா, அம்ரிதா போன்ற சில மடங்கள் இதற்கு விதிவிலக்கு... அவர்களும் கூட மருத்துவம் இலவசமாக செய்தாலும் கல்வியை அநியாய விலைக்கு தான் விற்கிறார்கள். கோவில்கள் தரவில்லை என்றால் அரசாங்கள் எடுக்கத் தானே செய்யும்?...
/கிறிஸ்துவ தேவாலயங்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் குறைந்த பட்சம் அவர்கள் மதத்துக்காவது ஏழைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று சேவை செய்கிறார்கள்... ஆனால் நீங்கள் உண்டியலில் போடும் பணத்தை எந்த கோவிலாவது எந்த வகையிலாவது உங்களுக்கு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு திருப்பி தருகிறதா?/
உண்டியல் பணத்தை அரசு பிடுங்கிக்கொண்டு கஜானாவில் சேர்த்து அந்த நிதியை வக்ஃபு வாரியத்துக்கும், சர்ச்சுகளுக்கும் கொடுக்கும்போது கோயில் எப்படி அந்த பணத்தை பக்தர்களுக்கு திருப்பி கொடுக்கும்?
கோயில் பணத்தை செலவு செய்ய இந்துக்களுக்கு உரிமை கிடைத்தால் அப்புறம் இருக்குடி சர்ச்சு நடத்தும் ஆஸ்பத்திரி,கல்லூரி,பள்ளிகளுக்கு ஆப்பு.
நான் பள்ளியில் படித்த காலத்தில் மதசார்பின்மை என்பது எல்லா மதமும் சமம்னு இருந்துச்சு. இன்றைக்கு தீவிரவாதிகளுக்கு பொச்சு கழுவி விடுவது தான் மதசார்பின்மைன்னு ஆயிப்போனதுக்கப்புறம் அந்த மதசார்பின்மையே வேண்டாம்னு ஆயிப்போச்சு.
இன்றைய தேதியில் செக்யூலரிசம் என்பது முகமதியர் பலதாரமணம் செய்யலாம்,முகமதிய பெண்கள் மசூதிக்குள் போகக்கூடாது,முகமதிய பெண்களுக்கு அரேபியாவில் லைசென்சு கொடுக்க கூடாது என்று முகமதிய பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக மாறிப்போனதுதான் விந்தை.
செக்கூலரிஸ்டுகள் முகமதிய அடிப்படைவாதத்துக்கு இப்படியே குண்டிகழுவி விட்டுகிட்டிருந்தா அப்புறம் எல்லா இந்துக்களும் தாமரைக்கு குத்தி தள்ளிடுவாங்க.அப்புறம் கர்னாடகாவில் சைலண்டா ஆட்சிக்கு வந்தது மாதிரியே தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வந்துடும்.
மோடி மாதிரி ஒருத்தன் வந்து ஆப்படிச்சதுக்கப்புறம் ஐயோ,அம்மான்னு அலறி பிரயோசனமில்லை!!!
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தன்வந்திரி சன்னிதானத்தில் உள்ள அர்ச்சகர்கள்,தட்டுல சில்லறை போடுங்கோ என்று வாய்விட்டு பிச்சை எடுக்கிறார்..முடிந்தா ஒரு முறை போய் பிச்சை போட்டுட்டு வாங்க..
எந்த உணவகத்திலாவது டிப்ஸ் கொடுங்கோ என்று பிச்சை எடுத்ததுண்டா
அன்புடன்
அரவிந்தன்
//முடிந்தா ஒரு முறை போய் பிச்சை போட்டுட்டு வாங்க//
டோண்டு ராகவன் கண்டிப்பாக அங்கும் போட மாட்டான். நீங்களும் போடாதீர்கள்.
எங்கெல்லாம் பணம் அளிக்கப்பட்டு கொடுக்கப்படும் சேவைக்கு மேலதிகமாக கேட்கிறார்களோ, அங்கெல்லாம் போடக்கூடாது. அதுதான் நல்லது. ஹோட்டல்களானாலும் சரி, கோவில்களானாலும் சரி, சர்ச்சுகளில், தர்காக்க்களில், குருத்துவாராக்களில் ஆகிய எங்குமே தட்டெடுத்து வந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் பணம் போட்டு இம்மாதிரி செயல்பாட்டை ஊக்குவித்தல் வேண்டாம் என்பதுதான் இப்பதிவின் கருப்பொருள். அதை இப்போது சுட்டி காட்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த செய்தியைப் பாருங்கள்.
http://ezhila.blogspot.com/2008/06/blog-post_7349.html
இந்தப் படிப்பில் உடனடியாக சேர சிங்கப்பூர் கோவி. கண்ணன் மற்றும் லக்கிலுக் போன்ற ஏகப்பட்டோர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதைப் படித்து விட்டு உடனடியாக புரோகிதராக ஆகி, டி.வி.எஸ். கம்பெனியின் டூவீலர் வாங்கி 'சர், சர்' என்று செல்லவும், 50 லட்சத்தில் அண்ணா நகரில் வீடு வாங்கவும் அவர்களுக்கு(ம்) ஆசையாம். அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் அவர்களது வாரிசுகளை கண்டிப்பாக அர்ச்சகர்கள் தான் ஆக்கப் போகிறார்களாம்.
தாராளமாக ட்ரைனிங் பெறலாம். கோவி கண்ணனும் அவரது ஒருபதிவில் தானும் 'இது நம்ம ஆளு' படத்தில் பாக்கியராஜ் செய்வது போல பூணூலை மாட்டிக் கொள்ள டெம்ப்ட் ஆனதை கூறியுள்ளார்.
நான் ஜெயா டிவிக்கு அளித்த நேர்க்காணலில் கூறியது நினைவுக்கு வருகிறது.
நான் அனாயாசமாக மொழிபெயர்ப்பு செய்து கணிசமான பணம் ஈட்டுவதை பார்த்த சில வாடிக்கையாளர்கள், பாதி விளையாட்டாகவும் பாதி சீரியசாகவும் கூறுவார்கள், "என்ன ராகவன் சார், நீங்க பாட்டுக்கு வந்தீங்க, கணினிலே படபடவென மொழிபெயர்ப்பை அடிச்சீங்க, இப்ப செம துட்டு வேற வாங்க போறீங்க. இதெல்லாம் பார்த்தா நான் கூட ஜெர்மன் ஃபிரெஞ்சு கற்று கொண்டு பணம் ஈட்டலாம் போலிருக்கே" என்பார்கள். நானும் கூறுவதுண்டு, "தாராளமா பண்ணுங்கோ. என்ன என்னோட லெவலுக்கு வரணும்னா முதல்லே இஞ்சினீயரிங் படிச்சுருக்கணும், ஒரு 20 ஆண்டுகள் போல இஞ்சினியரா வேலை செஞ்சிருக்கணும். நடுவிலே, ஜெர்மன் என்னளவுக்கு கற்று கொள்ள 6 கல்வி ஆண்டுகள் (அவர்கள் மாலை வகுப்புக்கு சென்றால்) 12 பரீட்சைகள் எழுதி தேற வேண்டும், அப்புறம் ஒரு 30 ஆண்டு பிராக்டீஸ் செய்யணும், அவ்வளவுதான் என்பேன்.
அதே போல புரோகிதத்துக்கான படிப்பும் விளையாட்டில்லை. அதே நேரத்தில் இயலாததும் இல்லை. கற்று கொண்டு செழிக்கட்டும், ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இது நம்ம ஆளு பாக்கியராஜ் மாதிரி ஆக டெம்ப்ட் ஆனாராம்.
சொன்னது தான் சொன்னாரு, நல்லா புரோகிதம் படிச்சு புரோகிதரா ஆக டெம்ப்ட் ஆனேன்னு சொல்ல வேண்டியது தானே.
அப்படீன்னா அவரு எழுதறதையெல்லாம் பெரிசா எடுத்துக்க தேவையில்லை.
இன்னொருவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி தானே. பாவம் அவரோட வீட்டுக்காரம்மா. இவரு தலைவன் வழியில துணைவி, துணைவிக்கு துணைவின்னு வரிசையா 'வெச்சுக்க' போறாரு பாருங்க.
/*I tell you to keep your house locked and you say that you have never been robbed. You are free to remain blissfully ignorant.*/
Right. I will remain so rather than acting i am not !
mani
//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?//
Are you a brahmin !!!!!
Post a Comment