மக்கள் குரல்:
1. கோமணகிருஷ்னன் போன்ற சிலர் தொடர்ந்து இந்துமத எதிர்ப்பாய் கருத்துக்களை உதிர்த்த போதிலும் அக்கும்பலின் தலைவர் பிறந்த நாளில் அவருடைய இல்லத்துக்கு அருகேயுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் அவர் வீட்டு அம்மாள் உபயத்தில் சிறப்பு பூஜைகள் குறித்து உமது கருத்து என்ன?
பதில்: யாரை குறிப்பிடுகிறீர்கள்? கருணாநிதி அவர்களையா? அது அவரது வீட்டம்மாவின் சொந்த கருத்து, தான் ஒன்றும் செய்வதற்கில்லை எனக் கூறுவார் அவர்.
2. பகுத்தறிவு பார்ப்பன/இந்துமத எதிர்ப்பு எனப் பக்கம் பக்கமாய் பதிவு போடும் பதிவர்கள் கூட வீட்டு விசேஷங்களூக்கு புரோகிதர்களை அழைப்பதும், தமது பொண்டாட்டி பிள்ளை அல்லது அம்மாவை கோவிலுக்கு கூட்டிப் போவதும் ஏன்? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?இவர்கள் ஏன் கேள்வி கேட்டால் வீட்டுப் பெண்கள் முந்தானைக்குள் ஒளிந்து கொள்கின்றனர். இவர்கள் வீட்டுப் பெண்கள் கொண்ட கருத்துரிமை மற்றவருக்குகில்லையா?
பதில்: அவர்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு போகிறார்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் நீங்கள் ஏன் அவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டும்? உங்களுக்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள். ஆனால் ஒன்று. எல்லோருக்குமே உள்ளுக்குள் பயம் உண்டு. எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டுப் பெண்கள் கோவிலுக்கு போவதை கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். தங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்கள் மனைவியருக்காகவாவது கடவுள் தம்மை பாதுகாப்பார் என நம்புகிறார்கள் போலும். பார்க்க "பாளையத்தம்மன்", "தாலி காத்த அம்மன்" ஆகிய காவியங்களை. :))))))
3. இந்தியா போக்ரானில் அணுவெடிப்பு சோதனை நடத்திய போது அதை எதிர்த்த கம்யூனிஸ்ட் கும்பல் இப்போது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அணுவெடிப்பு சோதனை உரிமை போய்விடும் எனப் புலம்புவது ஏன்?
பதில்: சீனாவின் நலனுக்கு எதிராக எதுவும் நடக்கலாகாது என்று அந்த (சீன) தேச பக்தர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
4. பெருந்தலைவர் மாதிரி மீண்டும் ஒரு தலைவர் தமிழகத்துக்கு கிடைப்பாரா? அப்படி கிடைத்தாலும் மக்கள் அவருக்கு ஓட்டுப் போடுவார்களா?
பதில்: ஏன் கிடைக்கக் கூடாது? வந்தால் நிச்சயம் ஓட்டு போடுவார்கள். குஜராத் உதாரணமே சாட்சி. லஞ்ச ஊழல் இல்லாத மோடியின் வெற்றியை மறந்து விட்டீர்களா?
5. சீனாவில் தோன்றிய நிலநடுக்கத்துக்கு காரணம் சைனா செய்யும் அட்டூழியம், சைனாவின் 'கர்மா' எனச் சொன்ன ஸ்ரன் ஸ்டோன் கருத்து பற்றி...
பதில்: அப்பட்டமான உளறல். இருண்ட நூற்றாண்டுகள் எனப்படும் காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் இம்மாதிரி பல கோஷ்டிகள் சொல்லி திரிந்தன. பூகம்பம் வெள்ளம் ஆகியவை ஏற்பட்டால் உலகில் பாவம் அதிகரித்து விட்டது என கதை கட்டி பாவிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களை உயிருடன் எரித்தனர். என்ன இப்போதெல்லாம் எரிப்பதில்லை, ஆனால் அந்த முட்டாள்தனம் மட்டும் அப்படியே உள்ளது.
ரமணாஸ்திரம்:
1. தற்சமயநிலவரப்படி தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் கொடிகட்டி பறக்கும் துறைகளை வரிசை படுத்தவும்(வருமான அடிப்படையில்) rto, taluk office, sub registrar office, pwd, local administration, highways, taluk supply office, education dept, police dept,etc
பதில்: ஆளை விடுங்கள். இந்த விஷயத்தில் அவற்றுக்குள் பயங்கர போட்டி நிலவுவதாக ஒரு முக்கிய அதிகாரி காசு பெற்று கொண்டு செய்தி கூறினார்.
2. நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூம் பழகி கொண்டார்கள் போல் உள்ளதே?
பதில்: திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்.
3. அரசியல் வாதிகளுக்கு ஏதிராக வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு போல் இந்த அதிகாரிகளை வளைக்க ஏதாவது வழிஉண்டா?
பதில்: உண்டு, ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? சாதாரணமாக வாங்கிய லஞ்சப் பணத்துக்கு உண்மையாக இருந்து காரியம் செய்து கொடுத்தால் யாரும் புகார் செய்வதில்லை. அதிலும் ஏமாற்றினால்தான் இம்மாதிரி பிரச்சினை வருகிறது.
4. அழகிரி &தயாநிதி கூட்டணி மாறன் மகன்களின் வியாபாரத்தை ஒரு வழிபண்ணிவிடுவார்கள் போலிருக்கிறதே? "இது தான் தெய்வ தண்டனையா" (முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்).
பதில்: சன் குழுமத்தின் நிகழ்ச்சிகளும் நன்றாக இருப்பதால் அவர்கள் தப்பித்தனர். ஆனால் கலைஞர் டிவி காப்பியடிப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறது? திமுக அடுத்த தேர்தலில் தோற்றால் அதுவும் காலிதானே.
5. பா.ம.க. தலைவரின் ஆட்டம் ஓவர் போல் உள்ளதே "நுணலும் தன் வாயால் கெடும்"
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.
அனானி (13.06.2008 இரவு 09.11-க்கு கேட்டவர்):
1. What will be the fate of anbumanl ramadoss after one week?
பதில்: காத்திருந்து பார்ப்போம். அவர் மந்திரி பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றுதான் தோன்றுகிறது.
2. On what grounds pmk leader dr.ramadoss has decided, to part with dmk in Tamil Nadu?
பதில்: முதலில் மிரட்டலை பயன்படுத்தி அடுத்த தேர்தலில் அதிக சீட்டுக்கு வழிவகுத்து கொள்ள நினைத்திருப்பார் போல. அது சற்று ஓவராக நடந்து விட்டது. நிலைமை இன்னும் தெளியவில்லை.
3. It seems admk is also not interested to have allaiance with this "kaariyakkaarrar"
பதில்: ஜெயலலிதா என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. முக்கியமாக அவருக்கே தான் செய்ய நினைப்பது இன்னும் தெளிவாகவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
4. It is learnt anbumani ramadoss also become " nalla aruvadai mannaR" using power in centre?
பதில்: பதவி வாங்கியதே வசூலுக்குத்தானே. பின்னே மக்கள் சேவை எனத் தவறாக எண்ணினீர்களா?
5. PMK leader Maruththuvar Aiya innumoRu vaikOvaa (vai.Gopalasamy,mdmk) aavaaraa?
பதில்: வைக்கோ திமுகாவையே தள்ளிக் கொண்டு போக முயற்சித்தார், ராமதாசு அவர்களுக்கு அந்தப் பேராசை எல்லாம் கிடையாது. இந்த மடம் போனால் சந்தைமடம் என வாழ்வது அவர் கட்சி.
எழில் அரசு:
1. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளை போல் நகராட்சி பகுதிகளிலும் ஏன் சிறு கிராமங்களில் கூட காலிமனை விலை, வீட்டு வாடகை இவைகளின் அதீத உயர்வு நடுத்தர மக்களை (lower middle class families - no software engineer sons) பிளாட்பார வாசிகளாய் மாற்றிவிடும்போல் இருக்கிறதே!
பதில்: பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்த்துள்ளன என்பதுதான் உண்மை. அப்போது சில மாறுதல்கள் வந்தே தீரும். அவற்றைத் தவிர்க்க இயலாது.
2. இந்த விபரீத உயர்வுக்கு பாகிஸ்தானின் கள்ள் நோட்டு பணப் புழக்கம் ஒரு காரணம் என்பது உண்மையா?
பதில்: அப்படி வேறு கதை போகிறதாமா?
3. நாடு பிடிக்க மன்னர் ஆட்சிகாலத்தில் நடந்தது போல், போலி ஆவணம் தயாரித்து பிறர் நிலங்களை விற்கும் போக்கு கூடுகிறதே?
பதில்: இது பல காலமாக இருந்து வருவதுதானே.
4. துணை சார்பதிவாளர் அதிகாரியின் சொந்த சொத்துக்களை சம்பந்தமில்லாதவர் அவரது அலுவலகத்தில் விற்கவந்தால் அதையாவது அவர் தடுப்பாரா? (யார் சொத்தை யார் விற்றால் என்ன எனது இன்றைய வருமானம் குறையக் கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தது ரூபாய் 500 முதல் 1000 வரை கல்லாக் கட்டிவிடுவார்.அதுவும் கூடிக் கொள்ளையடி பின் பங்கு பிரி தத்துவம் வேறு.
பதில்: அம்மாதிரி நிஜமாகவே நடந்தால் யாரும் அனுதாபம் கூட காட்ட மாட்டார்கள்.
5. ஆடாத ஆட்டம் போடும் இந்த ஊழல் அதிகாரிகளுக்கு, "ஆடி அட்ங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலந்தான் சொந்தமடா" என்னும் கவியரிசின் வரிகள் புரியுமா?
பதில்: இறக்கும் தருவாயில் புரியும். அப்போது டூ லேட்.
அனானி (14.06.2008 இரவு 8.08-க்கு கேட்டவர்):
1. பஸ்ஸிலே கூட்டம், கடையில கூட்டம், சினிமா தியேட்டர்ல கூட்டம். குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி எனச் சொன்னது என்னவாயிற்று?
பதில்: குடும்பக் கட்டுப்பாட்டின் மேல் இவ்வளவு எதிர்பார்ப்பா?
2. இப்படியே போனால் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு வரும் போலிருக்கிறதே?
பதில்: எல்லாம் விற்று போனால் உற்பத்தி தானே அதிகரிக்கும் அல்லவா, அதுவும் நல்லதுதானே.
3. வயதானவர்கள் தங்கள் வீடு அன்றாட (வீடு சுத்தம் செய்தல்) வேலைகளை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமம்படும் போக்கு அதிகமாகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வேலைக்காரர்களுக்கு திருப்தி இல்லாச் சூழ்நிலை எங்கு கொண்டுபோய் விடும்?
பதில்: ஆலைகளில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்போது வீட்டு வேலைகளுக்கு ஆள் கிடைக்காது போவது புரிந்து கொள்ளக் கூடியதே. தேவையானால் அதற்கும் மேல் அதிக சம்பளம் கொடுத்து வைத்து கொள்ள வேண்டியதுதான்.
4. வரும் காலத்தில் கொத்தனார், சித்தாள், ஆசாரி, சுமை தூக்குவேலை,தோட்ட வேலை இவைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாகி விடும் போல் உள்ளதே. இவைகளுக்கு மாற்று ஏற்பாடு?
பதில்: என்ன புடலங்காய் மாற்று ஏற்பாடு? அந்த வேலைக்கானக் கூலியை உயர்த்தவேண்டியது காலத்தின் கட்டாயம்தானே. இது சம்பந்தமாக ஒரு அமெரிக்க ஜோக் படித்தேன். குழாய் ரிப்பேர் செய்பவர் ஒரு மருத்துவர் வீட்டில் வேலை முடிந்ததும் தனது பில்லை தர, மருத்துவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே கூறுகிறார். "என்ன செய்யறது. நான் ஒரு விசிட்டுக்கு வாங்கற ஃபீசை உட உங்களுக்கு அதிகம் தரவேண்டியிருக்கு". குழாய் ரிப்பேர்காரர் கூறுகிறார்: "நீங்க சொல்றது புரியறது சாட். நான் கூட முதல்ல மருத்துவரா இருந்த போது இதை பார்த்திருக்கேன்".
அனானி (15.06.2008 காலை 05.12-க்கு கேட்டவர்):
1. தசாவாதாரம் பார்த்தீர்களா? படம் எப்படி?
பதில்: பார்க்கவில்லை. என்னவோ பார்க்க வேண்டும் எனத் தோன்றவுஇல்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டிலிருந்து சில நிமிட நடையில் இருக்கும் இரு ஏ.சி. தியேட்டர்களில் அது வெளியிடப்பட்டுள்ளது.
2. சுருக்கமான தங்கள் விமரிசனம்?
பதில்: விமரிசனம் ஏதும் இல்லை.
3. நாத்திக கருத்து ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை? பின் ஏன் அந்த களேபரம்?
பதில்: விளம்பரத்துக்காக தயாரிப்பாளர்களே கூட கேஸ் போட ஏற்பாடு செய்திருக்கலாம் என சில செய்திகள் உண்டு. இது ஒன்றும் முன்னால் நடக்காததில்லையே.
4. நீதிமன்றச் செலவும் மட்டும் 5 கோடியாம், தாங்குமா?
பதில்: தாங்கி விட்டது என்றுதான் தோன்றுகிறது. மீரான் தெரு திரை வியாபாரிகள் சரியான கணக்கு சொல்வார்கள்.
5. நடிப்பில் நடிகர் திலகத்தை மிஞ்சிவிட்டாரா?
பதில்: இருவருமே அவரவர் அளவில் க்ரேட். ஒப்பிடுதல் சரியாக வராது.
6. 10-ல் எதில் கமல் சூப்பர்?
பதில்: நான் கேள்விப்பட்டவரை நம்பிதான் எனக்கு பிடித்தவர்.
7. உலகநாயகன் படம் தமிழ் திரையுலகை உலக தரத்துக்கு கொண்டு செல்கிறது தங்கள் கருத்து?
பதில்: தொழில் நுட்ப விஷயங்களில் பெரிய வெற்றி எனக் கேள்விப்படுகிறேன்.
8. வழக்கம் போல் ஆடைக் குறைப்பு, பண்பாடு மிஞ்சும் ஆடல்கள் தூள் கிளப்புதா?
பதில்: கமல் படங்களில் அவை இல்லாமலா?
9. இந்தியன், விருமாண்டி வரிசையில் கமலின் திரை வாழ்வில் ஒரு மைல் கல்லா?
பதில்: நிச்சயமாக.
10. அடுத்து 21 ம் நூற்றாண்டின் சிவாஜி கமலின் .....மர்ம யோகி கமலை இன்னுமொரு M.G.R ஆக ஆக்குமா?
பதில்: இன்னுமொரு M.G.R. ஆவதில் என்ன பெருமை? நடிப்பு விஷயம் என்று வந்து விட்டபின் இன்னொரு சிவாஜி என்று சொன்னாலாவது அர்த்தம் உண்டு.
தென்காசி:
1. நெல்லை மாவட்டதிலுள்ள பிரசித்திபெற்ற அருவிகளில் நீராடிய அனுபவம் உண்டா?
பதில்: இல்லை
2. திருக்குற்றால அருவிகளின் தங்களை மெய்சிலிர்க்க வைத்த அருவி எது?
பதில்: எந்த அருவியிலும் குளித்ததில்லை.
3. பிரமுகர்களுக்கான பழத்தோட்ட அருவி சென்றதுண்டா?
பதில்: ஆளை விடுங்கள்
4. காரையார் அணைக்க மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ் ( சின்ன சின்ன ஆசை) பாணதீர்த்த அருவி பார்த்த்ருக்கிறிர்களா?
பதில்: பம்பாய் படத்தில் பார்த்ததோடு சரி.
5. சென்னை வெயில் பழகி விட்டு, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீசும் மென்மையான தென்றல் காற்றின் அனுபவம் எப்படி?
பதில்: அனுபவித்ததில்லை.
ரமணா:
1. பொதுத்துறை பெட்ரோல் பங்க்களில் திட்டம் போட்டு "பிரிமியம் பெட்ரோல்" தான் விற்கின்றனர்? இது பகல் கொள்ளை இல்லையா?
பதில்: இதில் உள்ள எல்லா விஷயங்களுமே வெளியில் வந்ததாகத் தெரியவில்லை. மொத்தத்தில் சாதாரண பெட்ரோலில் லாபம் இல்லையென்றாலோ அல்லது நஷ்டம்தான் வரும் என்றாலோ வியாபாரி அதை ஏன் கொள்முதல் செய்யப் போகிறார்?
2. அவர்கள் விற்பது சாதாரணமா அல்லது செறிவூட்டிய ஸ்பீடா எப்படி தெரிந்து கொள்வது?
பதில்: அந்த கஷ்டங்களை எல்லாம் 'எனது கார்களின்' ஓட்டுநர்கள் பார்த்து கொள்வார்கள்.
3. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் அளவு குறைகிறதே? ஒரு லிட்டர் பெட்ரொலுக்கு 50 லிருந்து 100 மில்லி ஆட்டை போட்டு விடுகிறார்களே?
பதில்: சற்று விழ்ப்புடன் இருந்தால் இதைத் தவிர்க்க இயலும். முதலில் பூஜ்யம் செட்டிங்கை சரி பார்க்க வேண்டும். பம்பை நிறுத்தியவுடன் குழாயில் உள்ள அத்தனை பெட்ரோலும் வருகிறதா எனப் பார்க்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அதை பங்க்-காரரிடம் கூறத் தயங்கக் கூடாது. குறைந்த பட்சம் உங்களை ஏமாற்றுவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.
4. சில புத்திசாலிகள் கலப்படம் வேறு செய்து விடுகிறார்கள்?
பதில்: இந்த விஷயத்தையும் 'எனது கார்களின்" டிரைவர்கள் கவனித்து கொள்கிறார்கள்.
5. பெட்ரோல் பங்க்களில் பெரிய யோக்கிய சிகாமணி மாதிரி நுகர்வோர் நலன் காப்பது போல் எழுதி வைத்துள்ளதை பார்த்தால்? படிப்பது ராமாயணம் இடிப்பது?
பதில்: அம்மாதிரி போலித்தனம் வாழ்வின் எல்லா தரப்பிலும்தான் உள்ளது. ஊராரை தமிழில் படிக்கச் சொல்லும் தலைவர்களின் குழந்தைகள் படிப்பது கான்வெண்டில். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு, குடி குடியை கெடுக்கும் என்பனவும் அதில் அடங்கியதே.
6. இடதுசாரிக் கட்சிகளின் பெட்ரோல் எதிர்ப்பு ஆர்பாட்டம்,ஹர்த்தால், அனல் பறக்கும் பேட்டிகள் எல்லாம் அவ்வளவுதானா? சாயம் வெளுக்கிறதா?
பதில்: இடதுசாரி கட்சிகளும் இரு மாநிலங்களில் ஆளும் கட்சிகளே என்பதை மறந்தீர்களா?
7.அடுத்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதை இப்போதே காங்கிரஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டதே?
பதில்: எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் விலைவாசியை தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஆட்சி சரியாக செய்ய வக்கில்லாது இலவச டி.வி. வர்ஜாவர்ஜமில்லாத கடன் தள்ளுபடிகள் ஆகியவற்றையாவது தவிர்த்தால் அவர்களை நானிலத்தவரும் வாழ்த்துவர்.
8. வழக்கமாக விலையேற்றிய பிறகு கொஞ்சம் விலை குறைப்பு நாடகம் உண்டே? குளிர் விட்டு போச்சா?
பதில்: கேஸ் விலை குறைந்ததே.
9. மத்திய அரசைக் குறைகூறும் எதிர்கட்சிகளின் அரசுகள் விற்பனை வரியை குறைக்க தயக்கம் காட்டும் இரட்டை வேஷம்? (சில அரசுகளின் கருணை பரவாயில்லை)
பதில்: மேலே உள்ள கேள்வி ஒன்றில் சொன்ன ப்தில்தான் இங்கும்.
10. எதிலும் சட்டங்களை தனக்கு சாதகமாக வளைத்து உலக கோடீஸ்வரா வரிசையில் நம்பர் 1 க்கு ஓடும் அம்பானியார் இதில் தோற்று பங்க்களை மூடி எதற்கு பாவ்லா காடுகிறார்? பெட்ரோல் விலை கட்டுப்பபாட்டிலிருந்து விடுதலை பெற முஸ்தீபா? ஆதாயம் இல்லாமல் அண்ணாச்சி ஆத்தோட போகமாட்டாரே?
இந்த விஷயத்தில் அம்பானியை குற்றம் சொல்ல இயலாது. ஒன்று சந்தையை அதன்போக்கில் விடவேண்டு, இல்லை சலுகைகள் தந்தால் எல்லோருக்கும் தரவேண்டும். அரசு நிறுவனகளுக்கு மட்டும் அல்ல. இந்த விஷயத்தில் அரசு ஆடுவது அழுகினி ஆட்டம்.
பாண்டிய நக்கீரன்:
1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவையெல்லாம் அகராதியில் மட்டுமெ பார்க்கமுடியும் என பிரபல பத்திரிக்கையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டது பற்றி தங்கள் கருத்து?
பதில்: இம்மாதிரி பலான விஷயங்கள் மனித நாகரிகங்கள் ஆரம்பித்த போதே துவங்கி விட்டன. இப்போது வெளிப்படையாக நடக்கிறது அவ்வளவே. புராணக் கதை ஒன்று உண்டு. ஒரு முனிவர் ஒரு பெண்ணை தன் கமண்டலத்தினுள் சிறை வைத்து தேவைப்பட்டபோது அவளை வெளியில் கொணர்ந்து அவளுடன் சுகித்தார். அவர் அந்தண்டை போனதும் அப்பெண் தன் மோதிரத்தில் ஒளித்து வைத்திருந்த தன் கள்ள புருஷனை வெளியில் வரவழைத்து அவனுடன் சந்தோஷமாக இருந்தால். இப்போது முனிவர் மேல் அனுதாபப்படுவீர்களா என்பதை மறைக்காமல் கூறவும், நன்றி.
2. முன்பு அரசல் புரசலா, மூத்த அரசியல் வாதிகளையும்,அதிகாரிகளையும்,பிர துறை வல்லுனர்களையும் குஷிபடுத்தி தங்கள் காரியத்தை சாதிப்பர் எனும் சொல்வது இப்போது பரவலாக்கப்பட்டு வருவது போல் உள்ளதே?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
3. மென்பொருள் வல்லுனர்கள் மத்தியில் இதெல்லாம் (சோமபானம் சுராபானம் அருந்தி சொர்க்கபுரி வாழ்க்கை (free sex) சுசூபீயாக (just like that) இருப்பதாக செய்திகள் வலம் வருகிறதே? (please refer this week India today tamil version)
பதில்: வாய்ப்புகள் உள்ளன, அனுபவிக்கிறார்கள். மற்றவர்களுக்கு இல்லை அவர்களுக்கு எரிகிறது. முடிந்தால், வக்கிருந்தால் அவர்களும் மென்பொருள் நிபுணர்கள் ஆகவேண்டியதுதானே.
4. கொலையும் செய்வாள் பத்தினி என்பது வேறு திக்கில் பயணிப்பது போல் உள்ளதே? சுகம் சுகம் எதைக் கொடுத்தாவது, யாரைக் கொன்றாவது, எதைச் செய்தாவது சுகம், சுகம், சுகம் ..... இன்பசுகம்
பதில்: கொலையும் செய்வாள் பத்தினி என்பது பல நூற்றண்டுகளாகத் தெரிந்த உண்மை. இப்போது என்ன அதற்கு? அழகானப் பெண் மனைவியாக இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி விரும்பும் ஆண்களுக்கு சரியான பதில்.
5. இதுவரை உப்பைத் தின்ன ஆணாதிக்க வர்க்கம் தண்ணீர் குடிக்கிறதா? (வேணும்யா இந்த பயலுகளுக்கு, என்னா ஆட்டம் போட்டாங்க - என பெண்ணிய ஆதரவாளார்கள் சொல்வது ஏற்புடையதா)
பதில்: இது பற்றி எனது பதிவுகளைப் பார்க்கவும்.
6. பண்டைய காலத்தில் மனிதர்கள் கூட்டமாக வாழும் போது கூட்டத்தின் தலைவி பெண்தான் எனவும், அவள் விருப்பப்படும் ஆனோடு அன்றைய இரவைக் கழிக்கும் உரிமை கொடிகட்டி பறந்ததாகச் சொல்வார்கள். நாகரிகச் சுழற்சி இதிலுமா?
பதில்: யார் கொடி உச்சியில் பறக்கிறதோ அவர்கள் அதன் பலனை எடுத்து கொள்வார்கள்தானே.
7. 20 வருடங்களுக்கு முன்னால் விழாக்களில்,பொருட்காட்சி அரங்குகளில் நடனம் அடும் நடன மங்கையர், சினிமா நடிகைகள் உப்யோகித்த பளபள என டால் அடிக்கும் சமிக்கிகள் (காக்க பொன் போன்றது) இல்லாத சேலைகளே (hand-woven sarees with glittering substances fixed) இன்று இல்லாச் சூழ்நிலை? நாம் எங்கே போகிறோம்? (கறுப்பு பர்தாவில் கூட சமிக்கி டாலடிக்குது)
பதில்: பேஷனின் சுழற்சியே இது.
8. அந்தக் காலங்களில் o.s.o வே அது பெரிய விசயம் இப்போ free show ?(எல்லாரும் கேரளாவாய் மாறிட்டாங்க!) கலாச்சாரப் புரட்சியா?
பதில்: அப்படியே வைத்து கொள்வோமே.
9. கலாச்சார கட்டுப்பாடற்ற சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் குடும்ப முறையே அழிந்துள்ளதைப் பார்த்த பிறகாவது நாமும் கண்ணை திறந்து பள்ளத்தில் விழ முயலலாமா?
பதில்: அவரவர் பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
10. பழைய நகைச்சுவை துணுக்கு your children and my children are playing with our children என்பதை வரலாறாக்காமல் (இதெல்லாம் வாழ்ககையில் ஜகஜம் அப்பா!) தடுக்கப்படுமா? பாரதியும், பாரதிதாசனும் கனவு கண்ட பெண்ணுரிமை வேறு இலக்கை நோக்கிச் செல்கிறதே?
பதில்: பாரதியே தன் மனைவியை மட்டம் தட்டி பேசியதாக பாரதி சினிமாவில் பார்த்தேன். பெண்ணுரிமை பேசிய பெரியாரே தனது முதல் மனைவி ஆணாதிக்கத்தை அப்படி விழுந்து விழுந்து ஆதரித்தபோது வாய்மூடி அதன் அனுகூலங்களை எடுத்து கொண்டது பற்றி அவரே கூறியுள்ளார். இதில் என்ன கனவு காண்பது எல்லாம் பாழாகப் போகிறது?
பாண்டிய நக்கீரன்:
1. 1952 லிருந்து 2008 வரை இருந்த/இருக்கும் தமிழக முதல்வர்களில் முதன்மையானவர் யார்? காரணம்?
பதில்: ராஜாஜி அவர்கள். அவரளவுக்கு கட்சியை ஆட்சியில் தலையிட இயலாதபடி பார்த்து கொண்ட முதல்வரை பார்ப்பது அரிது. கூடவே திறமையான நிர்வாகி. லஞ்ச ஊழல் குற்றங்கள் கிஞ்சித்தும் அண்டமுடியாத நிலையில் தன்னை வைத்திருந்தவர். அடுத்து காமராஜ் அவர்கள்.
2. அவர்களை திறமை, நிதி நிர்வாகம், மக்கள் நலம், நேர்மை இவைகளின் அடிப்படையில் தர வரிசைபடுத்தவும்.
பதில்: அதே வரிசைதான், ராஜாஜி, காமராஜ்.
3.யாருடைய காலத்தில் மக்கள் ஒரளவுக்கு சுபிட்சமாக இருந்தார்கள்?
பதில்: காமராஜ் காலத்தில் என்று கூறலாம். ராஜாஜி ஆட்சி புரிந்த காலம் சரியாக இரண்டாண்டுகளே. அவையும் மிகவும் பிரச்சினைக்குரிய ஆண்டுகள்.
4. அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் ஆண்ட/ஆளும் பிற சக அமைச்சர்களில் (1952 டூ 2008) முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு யாருக்கு?
பதில்: எனக்கு தெரிந்த ஒரே உதாரணம் கக்கன் அவர்கள்தான். இதில் என்ன வரிசைப்படுத்துவது?
5. கட்சி வேறு ஆட்சி வேறு மக்கள் நலமே என் பணி என 100/100 மார்க் யாருக்கு? (முதல்வர்களில் முதல்வர் யார்?-பாரபட்சமற்ற போக்குடன்)
பதில்: ராஜாஜி 100/100, காமராஜ் 98/100 (ஏனெனில் கட்சியில் உள்ளவர்களை அணைத்து செல்லவும் அவர் முயன்றார். அதுவும் தேவைதான். ராஜாஜி அவர்களது ஆட்சி வீழ்ந்ததே அது இல்லாததால்தான்).
6. பதவியில் இருந்தாலும் சாதி இரண்டொழிய வேறில்லை என்று அனைவரையும் சமமாக பாவித்தவர்களில் சத்யவான் யார்?
பதில்: ராஜாஜி, காமராஜ்.
7. முதல்வராய் கோலோச்சி பின் மறைந்தும் மறையாமல் வாழ்பவர் யார்?
பதில்: ராஜாஜி, காமராஜ்
8.தமிழகம் யாருடைய காலத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் திளைத்தது?
பதில்: காமராஜ்.
9. பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது ஆனால் இல்லை. இந்த புண்ணியத்தை முதலில் தொடங்கி வைத்தது யார்?
பதில்: கருணாநிதி அவர்கள். ஆனால் அதை பிஎச்டி அளவுக்கு கொண்டு சென்றது ஜயலலிதாதான்.
10. அரசியல் கட்சிகளில் ஜாதி ஆதிக்கம் இருந்த போதும் முதல்வர்கள் தேர்வில் அது இருப்பதில்லயே? எப்படி?
பதில்: ஒரு ஜாதிக்கு மட்டும் விசுவாசம் காட்டுபவர்கள் முதல்வர் பதவிக்கு லாயக்கற்றவர்கள். ஏஎனெனில் மாநில அளவில் ஆதரவு வேண்டுமென்றால் எல்லா ஜாதியினரிடமிருந்துதான் அதை பெற முடியும்.
ரமணா:
1. வாடகை ஏறிபோச்சு, விலைவாசி உயர்ந்து போச்சு, பணவீக்கம் பெருத்துப் போச்சு, நடுத்தர வர்க்கத்தின் எதிர்காலம் காற்றில் கரைஞ்சு போகுமா?
பதில்: செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அது முடியாவிட்டால் வருமானத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். வேறு வழிகளில்லை.
2. அரசின் மிரட்டல்கள் எல்லாம் வியாபாரக் கூட்டணிகளுடன் இனி எடுபடுமா?
பதில்: வியாபாரம் என வந்து விட்டால் கொடுக்கல் வாங்கல்கள் இல்லாமல் போகாது.
3. பெட்ரோல் விற்பனையில் வரி என்ற பெயரால் நடக்கும் கொள்ளை நாடு தாங்குமா? அடுக்குமா?
பதில்: அரசுக்கு வருமானமும் தேவைதானே. பின் எப்படி அரசு நடத்துவது? வரியில்லாமல் பெட்ரோல் விலை ரொம்ப குறைந்தால் அதன் உபயோகம் அதிகமாகி பிற்காலத்தில் பெட்ரோல் வறட்சி ஏற்படலாம், சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்படலாம் அல்லவா?
4. அமெரிக்காவுக்கு இந்தியா எடுபிடியாகுமா?
பதில்: ஏன் அமெரிக்கா இந்தியாவின் எடுபடி ஆகக்கூடாதா?
5. புதிய பொருளாதாரக் கொள்கை "புலி வால் புடித்த நாயரின் கதை போலவா"?
பதில்: ஆம்.
பாண்டிய நக்கீரன்:
1. பா.ம.க உறவு முறிப்பு தி.மு,காவின் முடிவு அ)சரியா ஆ)தவறா
பதில்: சரியோ தவறோ, காலத்தின் கட்டாயம்.
2. லாபம் யாருக்கு?(இருவரில்)
பதில்: யார் அடுத்த தேர்தலில் இதனால் வெற்றி பெருகிறாரோ அவருக்குத்தான் லாபம்
3. லாபம் யாருக்கு (இருவரைத் தவிர)
பதில்: விஜயகாந்துக்கு
4. பா.ம.க உடையுமா?
பதில்: அதில் உள்ள தலித்துகள் வேண்டுமானால் போகலாம், வன்னியர்கள் போக மாட்டார்கள் என நினைக்கிறேன்.
5. தி.மு.க வின் செல்வாக்கு சரியுமா வன்னியர் பகுதிகளில்?
பதில்: சரியாது என திமுகவில் உள்ள வன்னியர்கள் கருதுகின்றனர்.
6. ராஜஸ்தான் போல் பழங்குடியினராய் மாற்ற பா.மா.க போராட்டம் தொடங்குமா?
பதில்: அப்படி நடந்தால் தலித்துகள் அவர்களுக்கு சமமாக ஆகிவிடுவார்களே. ஆகவே அதை கேட்க மாட்டார்கள்.
7. காடுவெட்டி மீது அரசு..?
பதில்: வழக்கு போடாது என நினைக்கிறேன். கூட்டணியை வெட்ட ஒரு சாக்கு தேவைப்பட்டது. அதற்கு குரு பேசியது உதவியது, அவ்வளவே.
8. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்ட இது எப்படி இருக்கு?
பதில்: சொன்னாலும் சொல்லுவாங்க.
9. அன்புமணி பாவமில்லையா?
பதில்: காடுவெட்டி குருவுக்கு மருத்துவர் அளித்த ஆதரவு அவருக்கு பிடிக்கவில்லை எனப் படித்தேன்.
10. அவர் திட்டமெல்லாம் கோவிந்தாவா?
பதில்: என்ன திட்டம்?
11. ரயில்வே வேலு அண்ணாச்சி கதை?
பதில்: அன்புமணியே பறக்கச்ச வேலு என்ன உசத்தி?
12. மக்கள் தொலைக்காட்சி மூடுவிழாவா? (அரசின் நெருக்கடி வருமே)
பதில்: வராது என நினைக்கிறேன்.
13. ராமதாசுக்கு 7.5 சனியா?
பதில்: ஏன், அவரைப் பார்த்தால் அவ்வளவு பாவமாகவா இருக்கிறது?
14. விஜய்காந்த் எந்த பக்கம் சாய்வார்?
பதில்: தனக்கு சாதகமான பக்கம்.
15. திருமால்வளவன் மீண்டும் அம்மா பக்கமா?
பதில்: தற்சமயம் இருக்குமிடத்திலேயே இருப்பார்.
16. காங்கிரஸ் வைகோவை கை கழுவியது போல் ராமதாசை..?
பதில்: ராமதாசின் ஆதரவு அடித்தளம் இன்னும் அகலமானது. ஆகவே சட்டென்று அப்படி நடக்காது என்றுதான் நினைக்கிறேன்.
17. ராமர் பாலம் இடிப்பு விவகாரம் தி.மு.க கூட்டணியை சிதைக்க..?
பதில்: ராமர் பாலம் இதில் காரணியாக இல்லை. இரண்டு குடும்பங்களின் நலன்கள் மாறுபட்டு போயின.
18. விடுதலைப்புலி விவகாரம் இனி சூடு பிடிக்குமா?
பதில்: அதனால் அரசியல் லாபம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே
19. ராமதாசு, வைகோ, கம்யுனிஸ்டுகள் கூட்டணி சாத்தியமா?
பதில்: அவர்களிலேயே அதை யாருமே அதை விரும்ப மாட்டார்களே.
20.ஆப்பை பிடிங்கிய குரங்கார் யார்?
பதில்: ராமதாசு என்கிறீர்களா?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
14 hours ago
24 comments:
டோண்டு ஐயாவின் பதில்கள் எல்லாம் சூப்பர்.
நன்றி
அடுத்த வெள்ளிகிழமை கேள்வி பதிலை எதிர் பார்க்கும்
-பாண்டிய நக்கீரன்.
மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், நம்ம "எழுத்துச் சித்தர்" பாலகுமாரனுக்குமான பதிலா?
//மக்கள் குரலின் ஐந்தாவது கேள்விக்கான பதில்தான், நம்ம "எழுத்துச் சித்தர்" பாலகுமாரனுக்குமான பதிலா?//
சீனாவின் நிலநடுக்கம் பற்றிய கேள்வியையா சொல்கிறீர்கள்? ஏன் பாலகுமாரன் அம்மாதிரி பதில் கொடுத்தாராமா? அவ்வாறு கூறியிருந்தால் அதுவும் உளறலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு சார்,
//பதில்: யாரை குறிப்பிடுகிறீர்கள்? கருணாநிதி அவர்களையா? அது அவரது வீட்டம்மாவின் சொந்த கருத்து, தான் ஒன்றும் செய்வதற்கில்லை எனக் கூறுவார் அவர்.
//
ஜெயலலிதா பற்றி குற்றம் சொல்லாமல் மக்களுக்காக (அவர் மக்களுக்கு இல்லைங்க நாட்டு மக்களுக்கு) உழைக்கும் திராவிட தலைவர்களை குற்றம் சொல்லும் ஆரிய டோண்டு அவர்களை கண்டித்து தங்கிலீசில் இன்னும் பின்னூட்டம் போடாத கோபகிருஷ்ணனை (அவர் வச்சுருக்கரத விட இந்த பேரு நல்லாவே இருக்கு) வன்மையாக கண்டிக்கிறேன்.
சீக்கிரம் வாங்க சார் மொக்கையா இருக்கு வந்து காமெடிய ஆரம்பிச்சு வைங்க
சரவணன்
ஜெயலலிதாவிடம் ஆயிரம் குறைகள் உண்டு. ஆயினும் இந்த நாத்திக வாதம் விஷயத்தில் அவரை குறைகூற ஒன்றுமேயில்லை. தன்னை ஒருபோதும் நாத்திகவாதி என அவர் கூறிக்கொண்டதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
2. நேர்மையற்ற தன்மைக்கு நமது மக்களூம் அதிகாரிகளூம் பழகி கொண்டார்கள் போல் உள்ளதே?
பதில்: திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்.
//
சார் இதுல என்ன சொல்ல வரீங்க மக்கள் கொடுக்கராங்க அதனாலதான் அதிகாரிங்க வாங்குகிறார்கள் தப்பு இருவர் மீதும் என்கிறீர்களா, மக்களை திருந்த சொல்கிறீர்களா.
என்னை பொறுத்தவரை தப்பு அதிகாரிகள் பக்கமே அல்லது லஞ்சம் வாங்குபவன் பக்கமே, பொறுப்பில் இருப்பவன் தவறு செய்வது அவனை அங்கே அந்த தவறுக்கு பொறுப்பாளியாக குற்றவாளியாக ஆக்குகிறது.
மக்களின் பொறுப்பற்ற தன்மை கண்டிக்கதக்கது,
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை தண்டிக்கதக்கது. செய்யும் தவறை பொறுத்து மக்கள் எனப்படுபவர் இங்கு அவர் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அவரும் தண்டிக்கபடவேண்டியவரே.
உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்
சரவணன்
டோண்டு ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
டோண்டு அய்யா,
ஒரு சின்ன கேள்வி.
தமிழ்மணம் திராவிட,பெரியாரிய,நக்சல,இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூடாரமாக இன்னும் ஆகவில்லையா?ஆகவில்லையென்றால் எப்போது ஆகும் என்று ஆருடம் சொல்ல முடியுமா?
பாலா
பாலா அவர்களே, போகிறவர் வருபவர் எல்லாம் ஆ ஊ என்றால் தமிழ்மணத்தை சாடுவது ஏன் என்று புரியவில்லை. அது ஒரு திரட்டி மட்டுமே என்பதை ஏன் மறக்கிறீர்கள்? என்ன, மேம்பாடுகள் நிரம்பிய திரட்டி என்று வேண்டுமானால் கூறுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எல்லோருக்குமே உள்ளுக்குள் பயம் உண்டு//
இதை நம்பித்தான் பல கடவுளைப் படைத்தார்கள்.
//சீனாவின் நலனுக்கு எதிராக எதுவும் நடக்கலாகாது என்று அந்த (சீன) தேச பக்தர்கள் முடிவு செய்துள்ளார்கள்//
வருத்தமான உண்மை
//பெருந்தலைவர் மாதிரி மீண்டும் ஒரு தலைவர் தமிழகத்துக்கு கிடைப்பாரா?... ஏன் கிடைக்கக் கூடாது? வந்தால் நிச்சயம் ஓட்டு போடுவார்கள். குஜராத் உதாரணமே சாட்சி//.
toooo much
//சீனாவில் தோன்றிய நிலநடுக்கத்துக்கு காரணம் சைனா செய்யும் அட்டூழியம், சைனாவின் 'கர்மா' எனச் சொன்ன ஸ்ரன் ஸ்டோன் கருத்து பற்றி...
ஐரோப்பாவில் இம்மாதிரி பல கோஷ்டிகள் சொல்லி திரிந்தன//.
இங்கையும் தான்
//திடீரென ரயில் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில் டிடிஆரிடம் துட்டு தள்ளி பெர்த் பிடிப்பீர்களா மாட்டீர்களா என்பதை முதலில் கூறுங்கள்//
சமயோசிதம் என்று நாம் செய்யும் தவறுகள்..
//பெட்ரோல்....இது பகல் கொள்ளை இல்லையா???
இதில் உள்ள எல்லா விஷயங்களுமே வெளியில் வந்ததாகத் தெரியவில்லை//.
தமிழன் exprss-இல் பா.ராகவன் ஒரு கட்டுரை எழுதத தொடங்கி இருக்கிறார்.
//முனிவர் மேல் அனுதாபப்படுவீர்களா என்பதை மறைக்காமல் கூறவும்//.
கடினம் தான்
//தமிழகம் யாருடைய காலத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் திளைத்தது?
பதில்: காமராஜ்//.
அப்படித்தான் என் அப்பா சொல்வார்.
//விஜய்காந்த் எந்த பக்கம் சாய்வார்?
பதில்: தனக்கு சாதகமான பக்கம்.//
உண்மை
டோண்டு அய்யா,
சமீபத்துல எங்க புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா ஒரு புரட்சிகர கருத்தை சொன்னார்."மக்கள் பெரியாரிய நச்சு முறிவு மருந்தை உண்ணாதவரை அவர்களுக்கு உய்வில்லை" என்பது தான் அந்த கருத்து.கட்சியோட உண்மையான தொண்டனாகிய எனக்கு சில கேள்விகள் தோன்றின.
1)பெரியாரிஸ்ட்களிடம் அப்படிப் பட்ட சக்தி இருக்கிறதா?
2)ஏன் ஓவ்வொரு ஹெல்த் சென்டரிலும் ஒரு பெரியாரிஸ்டை வேலைக்கு அமர்த்தி,நஞ்சுண்டவர்களை கடிக்க வைத்து, நச்சை முறிக்கக் கூடாது?(வேலையத்த பெரியாரிஸ்ட்களுக்கு வேலையும் போட்டுக் கொடுத்த மாறி இருக்கும் அல்லவா?)
3)பாம்பின் பல்லை பிடுங்கி நஞ்சு எடுத்து மருந்தாக விற்கப்படுவது போல்,ஏன் பெரியாரிஸ்ட்களோட பல்லைப் பிடுங்கி நச்சு முறிவு மருந்தை எடுத்து,மறுகாலனி ஆதிக்க சக்திகளுக்கு வித்து பணம் பண்ணி அவங்களுக்கே ஆப்பு வைக்கக்கூடாது?(விலைவாசி விஷம் போல் உயர்ந்ததால் நொந்து போய் வருத்தத்தில் இருக்கும் எம் மக்களுக்கு இந்த பொக்கை வாய் பெரியாரிஸ்ட்கள் காமெடி விருந்து படைத்து வேதனையை மறக்க கொஞ்சமாவும் உதவுவார்களே).
விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.
பாலா
பாலா அவர்களே,
உங்களுக்கு கருணாநிதி அவர்களைப் பிடிக்காது என்பதை பி.பி.சி.யிலேயே சொல்லும் ரேஞ்சுக்கு எல்லோருக்குமே தெரியும். இங்கும் அது வேண்டாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தன்னை ஒருபோதும் நாத்திகவாதி என அவர் கூறிக்கொண்டதில்லை//
naathigavaathi ena koorikkolvathu enna kolai kutramaa? naan oru paappaaththi ena irumaappudan koorikkolvathai
vida ithu mosamillaiye?
//ஏன் கிடைக்கக் கூடாது? குஜராத் உதாரணமே சாட்சி//
yen? innum pala appaavi muslim makkal kollappattu hindu veriyargal aattam poduvatharkaa?
komanakrishnan
//innum pala appaavi muslim makkal kollappattu hindu veriyargal aattam poduvatharkaa?//
2008க்கு வாங்க கோமணம் சார். இன்னும் 2002ல் இருந்தா எப்படி.
கடந்த ஆறு வருடங்களாக எந்த கலவரமும் நடக்கவில்லை என்பதை மறைக்க முடியாது.
//naathigavaathi ena koorikkolvathu enna kolai kutramaa? //
நாத்திகவாதி என சொல்லிகொள்ளகூடாதா, ஏன் கூடாது ஜனநாயக நாட்டில் அதற்கு உரிமை உண்டு அதை மறுக்கமுடியாது. அவர் நாத்திகர் அதனால் இந்துவை திருடன் என்பார் ஆனால் முஸ்லிம்கள் அழைத்ததும் போய் கஞ்சி குடிப்பார் என்று எல்லொரையும் போல் நான் சொல்லமாட்டேன். ஏன்னா எனக்குதான் தெரியுமே நாத்திகம்னாலே அதானேன்னு ஏன்ன தமிழன் தான் சோத்தால் அடித்த பிண்டம் என்று அவரே சொல்லியிருக்காரே.
எத்தனை முறை ஏமாற்றினாலும் கருணாநிதிதான் தமிழினதலைவர் அப்படின்னு சொல்லுவாங்க அதை எதிர்த்து சொல்றவன்லாம் ஆரியன் அல்லது ஆரிய அடிவருடி அல்லது தலித் துரோகி அதை கூட அவர் சொல்லவேண்டாம் அதை சொல்வதற்கு வேலை வெட்டி நிறைய உள்ள சமூகநல இயக்கங்கள் உள்ளன, அதிமுக போல் இல்லாமல் சுய சிந்தினை உள்ள தொண்டர் படை உள்ளது. நாம வழக்கம் போல ஜெயலலிதா ஊழல் மற்றும் அவரது பார்பன கருதியல் பற்றி பெசுவோம்.
ஆனால் ஒண்ணு பிஜேபி இந்துதுவா கட்சி இல்லை... நான் சொல்லலைங்க தேர்தல் வரும்போது தமிழின தலைவர் அவர்களுடன் சேரும்பொது சொல்லுவாரு பாருங்க அது நீங்க பண்ற காமெடி விட நல்லா இருக்கும்.
அப்புறம் கடைசியா காமெடி
During the Last several years of Brain drain in India not a single politician left the country.
and what you talked about Gujarath has been answered immediately by another anonymous, thanks.
சரவணன்
டோண்டு sir,
Any chance of ‘CHO’ become CM in the future, so that our 'Vaitheyrichal' Bala Happy.
Koka makkan
கேள்வி கந்தசாமி:
1. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று இடதுசாரிகளுக்கும் பிரதமர்/காங்கிரசுக்கும் இடையே பூசலை தீர்க்கும் அளவிற்கு - டெல்லியில் பெரிய தலைகள் யாரும் இல்லையா ? இல்லை காமராஜருக்குப் பிறகு, மூப்பனார் (காங்கிரசில் மட்டுமே) செய்து வந்த அரசியல் சாணக்கியத்தின் உச்ச கட்டமா? இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமைதானே ?
2. ஜப்பானுக்கு சென்று ஜி- 8 கூட்டத்தில் புஷ்ஷை பார்க்க பேச மன்மோகன்சிங்கிற்கு தயக்கம் ஏற்பட்டு அவர் ராஜினாமா செய்தால் அடுத்த இடைக்கால (தேர்தல் வரை) பிரதமராக செயல்பட யாருக்கு சான்ஸ் கிடைக்கும் ? பிரணாப் முகர்ஜி, கருணாநிதி, ஜோதி பாசு ? (கருணாநிதி பிரதமரானால் - அது சிலமாதங்களுக்கே ஆயினும் சோனியாவிற்கு இந்த விலைவாசி திண்டாட்டத்தில் அது ஒரு நல்ல பலடை ஆட்டம் தானே ?)
3. கருணாநிதி பிரதமரானால் காவிரி,ஓகனேக்கல், முல்லைபெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகளில் முன்னேற்றம் காண வழிவகுப்பாரா ? (இந்த சந்தர்ப்பத்திலாவது ஸ்டாலின் முதல்வராக சான்ஸ் உண்டா ?)
4. 85 வயதில் இத்தனை அலைச்சல், உழைப்பு, ஞாபகசக்தி, அரசியல் முடிவுகள், அரசு முடிவுகள் போன்றவை நிச்சயம் ஒரு பாராட்டப் படவேண்டிய விஷயம் தானே ? (ஜோதிபாசு, அச்சுதாநந்தன் கூடவே ஞாபகம் வருகிறது)
5. நீங்களே ஏன் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை ஒரு கால்டாக்ஸி கம்பெனிக்கு வாடகைக்கு விடக்கூடாது ? (போலீசார் ஆட்டோ வைத்திருப்பதைப்போல). உங்களுக்கும் உபயோகமாகும் - நீங்கள் உபயோகிக்காத தருணங்களில் உங்களுக்கு பணமும் வரும் ?
6. மானாட மயிலாட - யாரின் தமிழ் கொஞ்சுகிறது - நமீதா ? ரம்பா ?
7. நீங்கள் ஏன் ஒரு மடிக்கணினி (லாப்டாப்) வாங்கி வைத்துக்கொண்டு பதிவர் மீட்டிங்குகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் ஏன் உங்கள் வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கும் பயன் படுத்துவதில்லை. ரு..25000க்கே இப்பொதெல்லாம் நல்ல மடிக்கணினி கிடைக்கிறதே ?
8. அலுவலக ஆபீசர் ஒருவர், 35-40 வயது, அலுவல் வேலையாக வெளியூருக்கு/வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கூடவே அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுமாரான பெண்ணும் செல்லவேண்டும். வெளியூரில்/வெளிநாட்டில் இருவருக்கும் நெருங்க சந்தர்ப்பங்கள் அதிகம். இருவருக்கும் குடும்பம் (மனைவி அல்லது கணவன், குழந்தைகள் இருக்கின்றனர் - ஊரில்). இருவருக்கும் அவ்வாறான எண்ணங்கள் இது வரை அலுவலகத்தில் ஏற்படவில்லை. ஆனால் இந்த வெளியூர்ப் பயணத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவருக்கும் நெருங்க சான்ஸ் கிடைக்கும் போது என்ன செய்யவேண்டும் என உங்கள் அறிவுறையாக இருக்கும் ?
அ) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் சந்தோஷப் படவேண்டும் ஆனால் பிறகு இது தொடரக்கூடாது
ஆ) வீடு, குடும்பம், மனைவியைக் கருத்தில் கொண்டு இருவரும் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளவேண்டும்
இ) இவ்வாறு ஏற்படும் சந்தர்பத்தையே தவிர்க்க முயலவேண்டும்.
எது உங்கள் பதில் ? ஏன் ? அப்படியாப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா ?
கேள்வி கந்தசாமி அவர்களே,
அடுத்த பதிவில் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.கடைசியில் பொருளாதர தாராளமயம் இந்தியாவை ஒருகை பார்த்துவிடும் போல் இருக்கிற்தே?
2.என்ன திடெரென்று முலாயம் 3 வது அணியிலிருந்து காங்கிரஸ் பக்கம்?
3.சோ அவர்கள் சொன்னது போல் இன்கே யாருக்கும் வெட்கம் இல்லையா/
4.பங்கு வணிக தரகர் போல் செயல்படும் சிவகங்கை சிமான் திடெரென்று கச்ச எண்ணெய் வர்த்தத்தில் யூக வணிகம் கூடது என்கிறாரே? பார்த்தீர்களா/
5.இந்த வட்டமாவ்து இடது சாரி பாம்பு கீரி சன்டையை நடத்துவார்களா?
எனது கேள்வி:
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை படு பயங்கரமாக உயர்த்திடும் மத்திய அரசு ஏன் இன்னும் அதன் மீதுள்ள அபரிமிதமான (கிட்டத்தட்ட 30% த்திற்கு மேல்) வரியை குறைக்கவில்லை ?
1.உண்மையில் அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா? எது அதிகம?
2.வாக்கு கொடுத்துவிட்டு அதை காப்பாற்ற முலுவதுபோல் உள்ளதே பிரதம அமைச்சரின் பரபரப்பு?
3.சுப்பிரமணிய சாமி என்ன சொல்கிறார் இதைப் பற்றி?
4.இடதுகள் புடி இறுகுகிறாதா?
5.ஆனால் அமெரிக்கா நம்மை விடாது போல் உள்ளதே?
6.ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்று வந்தால் இதை என்ன செய்வார்கள்,ரத்து செய்ய முடியாதே?
7.லாலு அவர்கள் ஏதோ எல்லாம் தெர்ந்த ஏகாம்பரம் போல் இதை ஆதரிக்கிறாரே?
8.எல்லாக் கட்சிகளும் தங்கள் ஆதயத்தைதான் பார்க்கிறார்கள்? இந்திய மக்கள் பாவம் தானே?
9.மீண்டும் கலைஞருக்கு யோகம் பார்த்தீர்களா? பெரியண்னா அல்லவா?
10.பணவீக்கம் கூடும் போதெல்லாம் ஏன் பங்கு வர்த்தகம் சாமி ஆட்டம் ஆடுகிறது?
//
காரையார் அணைக்க மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ் ( சின்ன சின்ன ஆசை) பாணதீர்த்த அருவி பார்த்த்ருக்கிறிர்களா?
பதில்: பம்பாய் படத்தில் பார்த்ததோடு சரி.
//
சின்ன சின்ன ஆசை பாட்டை பம்பாய் படத்தில் பார்த்த டோண்டுவுக்கும், தென்காசிக்கும் மிக்க நன்றி. நாங்கள் எல்லாம் அதை ரோஜா படத்தில் தான் பார்த்தோம்!
கஷ்மீரில் அமர்நாத் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால் அமைதிமார்க்கத்தினர் போராட்டம் நடத்தி கடைகளை உடைத்து வருகின்றனர். அதைப்பற்றி "செகுலரிஸ்டுகள்" பேச்சுமூச்சற்று இருக்கிறார்களே. இதே ஒரு மசூதிக்கு நிலம் வழங்குவதில் தகராறு ஏற்பட்டால் இதே போல் சும்மா இருப்பார்களா ?
//சின்ன சின்ன ஆசை பாட்டை பம்பாய் படத்தில் பார்த்த டோண்டுவுக்கும், தென்காசிக்கும் மிக்க நன்றி. நாங்கள் எல்லாம் அதை ரோஜா படத்தில் தான் பார்த்தோம்!
June 25, 2008 1:17 PM
பம்பாய் படம் அல்ல ரோஜாதான்.
வட காசிக்கு தென்காசியின் நன்றி.
Post a Comment