8/29/2008

டோண்டு பதில்கள் 29.08.2008

வால்பையன்:
1. மத்தியில் காங்கிரஸ் வலுவிழந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் எம்மாதிரியான முயற்சிகள் பா.ஜா.க.விற்கு பயனளிக்கும் என்று உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்?
பா.ஜ.க.விற்கு நல்ல சான்ஸ் மத்தியில். அதன் ஆட்களாக ஏதேனும் சொதப்பாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களுக்கு எப்போதுமே வலுவான நிலை கிடையாது. அ.தி.மு.க. கொடுத்தாலும் அவமானம் செய்து ஏதோ ஐந்து சீட்டுகள் தரலாம். திருநாவுக்கரசரை அமுக்கப் பார்ப்பார் ஜெ. நிலைமை கஷ்டம்தான். என்னைக் கேட்டால் அந்த ஐந்து இடங்களையும் தானே தேர்ந்தெடுத்து தனியாக நிற்பதுதான் பலன் தரும். உடனடி பலன் கிட்டாவிட்டாலும் பரவாயில்லை. கட்சியை வளர்க்க வேண்டியதுதான். 1984 தேர்தலி இரண்டு லோக்சபா சீட்டுகள்தான் அதற்கு கிடைத்தன என்று ஞாபகம். அதிலிருந்து உழைத்து முன்னேறவில்லையா? இம்மாதிரி திமுக மாற்றி அதிமுக என தமிழகத்தில் குதிரை ஏறுவது காங்கிரஸ் பாஜக இரண்டுக்குமே நல்லதல்ல.
(பின்குறிப்பு: சாதாரணமாக நான் கேள்விகள் பதிவு வரும்போதே அடுத்த வாரத்துக்கான பதிவின் வரைவை போட்டு வைத்து. கேள்விகள் வரவர அவற்றை வரைவில் ஏற்றிவிடுவேன். இம்முறை விட்டு போயிற்று. ஒரு கேள்வியை மிஸ் செய்து விட்டேன் எனத் தெரியும். தேடியும் பார்த்தேன். அனுப்பியவர் பெயரை மறந்ததால் சட்டென்று கண்டுபிடிக்க இயலவில்லை. இப்போது உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் கூகள் ஆர்கைவ்சில் உங்கள் பெயரையிட்டு ஒரு நொடியில் கண்டு பிடித்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.)


மொக்கைசாமி:
1. ஏங்க இப்பல்லாம் உங்க பதிவுல மொக்கை போட்டு பின்னூட்டம் வர்ரதே இல்லை?
பதில்: அதாவது நான் மொக்கையாகப் பதிவு போட்டு அதற்கு பின்னூட்டம் வரவில்லை என்கிறீர்களா அல்லது நான் சாதாரணமாக பதிவு போட்டு அதுக்கு மொக்கையாக பின்னூட்டம் வரவில்லை என்கிறீர்களா அல்லது நானும் மொக்கையாக பதிவு போட்டு பின்னூட்டமும் மொக்கையாக வரவில்லை என்கிறீர்களா என்பதை தெளிவான மொக்கையுடன் கூறினால் நலம்.

அனானி அடுத்தவாரக் கேள்வி என்னும் பெயரில்:
1. (ஒரிஸா) கலிங்கத்தில் மதக்கலவரம் வரக்காரணம் என்ன?
பதில்: இதற்கு காரணம் மதம் என்பதை விட இட ஒதுக்கீடு என்றுதான் கூற வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சாதிக்கொடுமைகள் இந்து மதத்தில் அதிகம் என கிறித்துவ மதத்துக்கு சென்றால் அங்கும் அது தலைவிரித்தாடுகிறது. பாவம் மதம் மாறுபவர்கள். இந்த அழகில் சைவமும் வைணவமும் தோமா கிறித்துவமே என்னும் வெறுப்பின் அடிப்படையில் செய்யப்படும் பிரசாரங்கள் வேறு. இந்தியாவுக்கு வந்த போப் பாண்டவர் ஆன்மாக்களை அறுவடை செய்ய வந்தோம் என்று வெளிப்படையாகவே கூறினார். ஏதோ திட்டங்களுடனேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகள் இல்லாமல் இருக்குமா? அந்த எதிர்வினைகள் சரியா தவறா என்பதைப் பற்றி நான் பேசவில்லை. அவை இருக்கின்றன அவ்வளவுதான்.

2. காஷ்மீரை இந்தியா விட்டுக்கொடுக்கவேண்டும் என்று சொல்லும் அறிவுசீவிகள் பற்றி?
பதில்: ஜம்மு, லடாக் நம்மிடம் வைத்து கொண்டு காஷ்மீரை விட்டு கொடுத்தால் பல ஆயிர கோடிக்கணக்கான ரூபாய்கள் மிச்சம், மன அமைதியும் கிட்டும் என்று நினைப்பவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். 1948-ல் பட்டேல் கிட்டத்தட்ட பாகிஸ்தானை காஷ்மீரத்திலிருந்து விரட்டவிருந்தபோது நேரு அவர்கள் ஆர்வக்கோளாறில் சொதப்பியதன் பலனை நாம் இன்னும் அனுபவிக்கிறோம்.

3. சமீபத்தில் பார்த்த ஆங்கிலப்படம் (தமிழ் டப்பிங்கும் சேர்த்து).
பதில்: கடைசியாக நான் பார்த்த ஆங்கிலப்படம் "ஹாரி பாட்டரும் சிரஞ்சீவிக் கல்லும்" (முதல் புத்தகம்). ஸ்னேப், ஹாரி, ஹெர்மியோன் ஆகியவர் நல்ல தமிழ் பேசினர். டப்பிங் அமர்க்களம் எனக்கூறுவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.

டி. ராமசந்திர பிரபு:
1. அது என்ன நவீன குசேலன் கதை?
சொன்னால் போயிற்று.
கதையின் முடிச்சை மட்டும் எடுத்து அதை தற்காலத்துக்கு கொண்டு வந்துள்ளார் சுஜாதா அவர்கள். கல்கியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்யமர் என்னும் வரிசையில் வந்த பல கதைகளில் அதுவும் ஒன்று என ஞாபகம். கதை பற்றி சில வரிகள் எனது நினைவிலிருந்து.
கதாநாயகனின் பெயர் சுதாமா (குசேலனுக்கு இன்னொரு பெயர்). அவர் நண்பன் கிருஷ்ணன். பெரிய குரூப் கம்பெனியின் அதிபர். இருவரும் பள்ளியில் சிறு வகுப்பில் தோழர்கள். சுதாமனுக்கு கஷ்ட ஜீவனம். நிறைய குழந்தைகள். அதற்காக 27 குழந்தைகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. சுதாமா கிருஷ்ணனை பார்க்க வருகிறார். கிருஷ்ணரும் "ஹாய் எப்படியிருக்கே" என்ற ரேஞ்சில் கேள்வி எல்லாம் கேட்கிறார். தன் மனைவி ருக்மிணியிடம் சுதாமாவை அறிமுகப்படுத்துகிறார். இப்போது கிருஷ்ணர் பழைய ஞாபகங்களை தன் நண்பனுடன் பகிர்ந்து கொள்கிறார். ருக்மிணியும் கூடவே கமெண்ட் எல்லாம் செய்கிறாள். "டேய் சுதாமா, நம்ம ஸ்கூல் எதிரில் ரவிக்கை போடாத ஒரு அம்மணி இலந்தப்பழம் விற்பாளே ஞாபகம் இருக்கா"? என்பார் கிருஷ்ணர். "ரவிக்கை போட்டாமல் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் நல்லா ஞாபகம் வச்சிப்பீங்களே" என்று நொடிப்பாள் ருக்மிணி. "நம்மளோட மூணாம் கிளாஸ் படித்த பிரதீபா ஞாபகம் இருக்கா" என கிருஷ்ணர் கேட்பார். "ரொம்பப் பழக்கமோ அப்பெண்ணோட? Show me yours, I'll show you mine" எல்லாம் இருந்ததா? என்பது ருக்மிணியின் அடுத்த கேள்வி.
எல்லாம் முடிந்து கடைசியில் சுதாமாவுக்கு தனது குரூப் கம்பெனி ஒன்றில் பெர்சனல் மேனேஜராக போஸ்டிங் தருகிறார். என்ன, சுதாமாவின் முதல் பெண் கிருஷ்ணனிடம் சில நாட்கள் இதற்காக இருக்க வேண்டியிருந்தது. கதை முடிந்தது.
மனதுக்கு கஷ்டம் தந்த முடிவு, ஆயினும் கற்பனை கலியுக உண்மைக்கு சமீபத்தில் இருந்தது. குசேலன் கதையைப் பற்றி பெரியார் கூறும்போது 27 குழந்தையுள்ளவனுக்கு கண்டிப்பாக 20 வயதுக்கு மேல் பிள்ளைகள் குறைந்த பட்சம் 2 அல்லது 3 இருந்திருக்க வேண்டும். அவர்கள் என்ன கழட்டினார்கள் என்று கேட்பார். எனக்கும்கூட 27 குழந்தைகள் டூ மச் ஆகத்தான் தோன்றுகிறது.
இந்த மாதிரி சந்தேகங்கள் பல இடங்களில் வருகின்றன. உதாரணத்துக்கு ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் அந்த ஞானப்பழத்தைப் புசிக்காது சொர்க்கத்திலேயே இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைக்கிறீர்கள்?


நக்கீரன் பாண்டியன்:
1. பல முனைத் தாக்குதலில் சிக்கியுள்ளதாக பத்திரிகைகள் (புலான்ய்வு) கலைஞர் அவர்களை பற்றிய எழுதும் கதைகளில் உண்மையின் அளவு எவ்வளவு? சமாளிப்பாரா?
பதில்: பிணங்கள் அழுகும் இடத்தில் கழுகுகள் வட்டமிடுவதுபோல பணம் இருக்கும் இடத்தில் உறவுக்கழுகள் வட்டமிடும். இதுவரை கலைஞர் வெளிப்பகைகளை சமாளித்து வந்துள்ளார். கட்சியையும் குடும்பத்தையும் பிரிக்கத் தெரியாது அவர் செய்த காரியங்கள் அவருக்கே வினையாக வந்துள்ளன. பதவி பணம் எல்லாம் இவர் மூலமாக வினியோகம் ஆகும் நிலையில் அவற்றுக்காக அவரது உறவினர்கள் போட்டி போடுகின்றனர். அதுதான் கசப்பான உண்மை. ஸ்டாலின் அழகிரியாவது அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு தத்தம் வட்டத்தைத் தேடிக்கொண்டுள்ளனர். மற்ற உறவினர்கள் - மாறன் சகோதரர்கள் உட்பட - எல்லோரும் கலைஞரின் உறவுக்காரர்கள் என்னும் நிலையில்தானே பதவி பெற்றனர்? அது மற்ற உறவினர்கள் கண்ணை உறுத்தாதா என்ன? உள்பகையை சமாளிப்பது கஷ்டம்தான். அதற்கு முதலில் மன உறுதி வேண்டும். கலைஞரிடம் அது இருக்கும் என நம்புவோம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

வால்பையன் said...

நான் ஏதோ கேள்வி கேட்டமாதிரி ஞாபகம்?

dondu(#11168674346665545885) said...

//நான் ஏதோ கேள்வி கேட்டமாதிரி ஞாபகம்?//

அதை இப்போது சேர்த்து விட்டேன்.

சாதாரணமாக நான் கேள்விகள் பதிவு வரும்போதே அடுத்த வாரத்துக்கான பதிவின் வரைவை போட்டு வைத்து. கேள்விகள் வரவர அவற்றை வரைவில் ஏற்றிவிடுவேன். இம்முறை விட்டு போயிற்று. ஒரு கேள்வியை மிஸ் செய்து விட்டேன் எனத் தெரியும். தேடியும் பார்த்தேன். அனுப்பியவர் பெயரை மறந்ததால் சட்டென்று கண்டுபிடிக்க இயலவில்லை. இப்போது உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் கூகள் ஆர்கைவ்சில் உங்கள் பெயரையிட்டு ஒரு நொடியில் கண்டு பிடித்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
ஜம்மு, லடாக் நம்மிடம் வைத்து கொண்டு காஷ்மீரை விட்டு கொடுத்தால் பல ஆயிர கோடிக்கணக்கான ரூபாய்கள் மிச்சம், மன அமைதியும் கிட்டும் என்று நினைப்பவர்கள் அவ்வாறு கூறுகின்றனர்.
//

அவ்வாறு விட்டுக்கொடுத்தால் அவர்கள் கூறும் மன அமைதி கிட்டுமா ? இல்லை என்றே சரித்திரம் விடையை நம் மூஞ்சியில் விட்டெறிகிறது என்று சொல்கிறீர்கள்.

Anonymous said...

27 kuzhandhaigalum evlo prasavathil prirandhargal. 100 kuzhandhaigal ore delivery il vandha kaala gattadhil nadandhu ahce?

ALso there is a big difference between ithihasam and puranam. Bhagawatham kooda. Ithihasam mattume nadandhathai nadandhapadi sollum (100 in one delivery ithihasam, also lot of bio technology things are there in Mahabharatham). Bhagwatha kadhaigal figuritive dhane

Anonymous said...

//1984 தேர்தலி இரண்டு லோக்சபா சீட்டுகள்தான் அதற்கு கிடைத்தன என்று ஞாபகம். அதிலிருந்து உழைத்து முன்னேறவில்லையா?//

ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

சுழியம் said...

வீர வேல் ! வெற்றி வேல் !

//குசேலன் கதையைப் பற்றி பெரியார் கூறும்போது 27 குழந்தையுள்ளவனுக்கு கண்டிப்பாக 20 வயதுக்கு மேல் பிள்ளைகள் குறைந்த பட்சம் 2 அல்லது 3 இருந்திருக்க வேண்டும். அவர்கள் என்ன கழட்டினார்கள் என்று கேட்பார். //

ஈவேரானுக்குத்தான் புத்தி இல்லை. கேனத்தனமாக கேள்வி கேட்பான். உங்களுக்குமா?

தன்னை பிராமணன் என்று கண்டுகொண்டவர்கள் அக்காலத்தில் தங்களது நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவு செய்யவில்லை. அந்த காலத்தில் மனித வாழ்வின் ஞானத்தை பாதுகாத்து, பயின்று, பயிற்றுவிக்கும் உன்னத நோக்கத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பதில் அடுத்தவர்களுக்கு முன்னோடியாக இருந்த ஒருவனே பிராமணன் என்று மதிக்கப்பட்டான்.

இரந்தே உயிர்வாழ வேண்டும் என்ற விதியை அவன் பின்பற்றினான். உஞ்சவிருத்தி எடுத்து பிழைக்கவேண்டிய, எந்த நிலையிலும் பணத்திற்காக வாழ்வை செலவழிக்காத பாப்பான் குடும்பத்தில் வறுமை என்பது நிரந்தரம். இரந்து உயிர்வாழவேண்டும் என்பது விதியானால், அது குசேலன் குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே பொருந்தும். பூஜ்ஜியங்களைக் கூட்டினால் பூஜ்ஜியங்கள்தான் வெளிவரும்.

புரவலர்கள் இல்லாதபோது இரவலர்கள் வறுமையை அனுபவிப்பார்கள். அத்தகைய ஒரு சூழலில்தான் குசேலர் கண்ணனிடம் செல்லுகிறார். அங்கும் இரத்தல் அஞ்சி, வெட்கி நிற்கும் ஒரு சுயமரியாதை உள்ள மனிதனையே நாம் காணுகிறோம்.

இதை புரிந்துகொண்டவர்களிடம் முட்டாள்தனமான கேள்விகள் எதுவும் எழவில்லை.

இத்தகைய வேதனைகளை சகித்துக்கொண்டு அன்றும், இன்றும் ஹிந்து தர்மத்தின் ஞானத்தை காப்பாற்ற உழைப்பவர்கள் அனைவருமே அந்தணர்கள்தான்.

ஆனால், இப்படி ஒரு விதியை ஒருவன் ஏன் பின்பற்றவேண்டும் என்ற கேள்வி எழலாம். இத்தகைய விதிகளை விரும்பி ஏற்றுக்கொள்பவனையே அந்த காலத்தில் பிராமணனாக மதித்தார்கள்.

அந்த காலத்தில் அரசாண்டவர்களே இது போன்ற விதிகளை ஏற்படுத்தினர். மற்றவர்கள் அதை பின்பற்றினர். அறிவுசார்ந்த விஷயங்களை பாதுகாத்த வர்ணத்தவர்களான பார்ப்பனர்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவதை, சொல்லித் தருவதை கடமையாகச் செய்தனர். அரசர்கள் கட்டளையின்படி அவ்வபோது இந்த விதிகளை மாற்றவும் செய்தார்கள்.

எனவே, ஏன் இந்த விதிகள் ஏற்படுத்தினாய் என்ற கேள்வி அக்கால அரசர்களிடம் சொந்தமாக யோசிக்கத் தெரியாதவர்கள் கேட்கவேண்டிய ஒன்று.

குசேலனுக்கு 27 குழந்தைகள் என்பதை ஏற்றுக்கொள்பவர்கள், அந்த காலத்தில் பலர் பத்தாயிரம் ஆண்டுகள் உயிர்வாழ்ந்ததாக சொல்லுவதையும் ஏற்றுக்கொள்கிறார்களா?

தன்னுடைய உளறலுக்கு ஏற்றவாறு ஒரு இனவெறியன் ஒரு கதையை திரித்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறக்கின்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடப்பது உங்களுக்காவது தெரியுமா? அந்த வகையில் கணக்கிட்டால் 5 - 10 வருடங்களுக்குள் சுதாமாவிற்கு 27 குழந்தைகள் பிறந்திருக்க முடியாதா?

பகுத்தல் என்றால், உடைப்பது என்று பொருள். அறிவை பகுத்துவதோடு ஒருவன் நிறுத்தக்கூடாது. அவற்றை ஒருங்கிணைத்து, அவற்றில் இருந்து ஞானத்தின் சாரத்தை பெறுவதற்கு "புத்தி" என்கிற ஒன்றை பயன்படுத்தவேண்டும்.

இதுதான் பஸ், இதில் ஏறிக்கொண்டு ஊருக்கு போகலாம் என்று இந்த குத்தறிவுவாதிகளிடம் சொன்னால், அவர்கள் பஸ்ஸை பார்ட் பார்ட்டாக கழற்றி (பகுத்து), டயரையும், ஹெட்லைட்டையும் காட்டி இவற்றில் ஏறிக்கொண்டு ஊருக்கு போய் காட்டு என்று உளறுகிறார்கள். இந்த உளறலை புத்தி இல்லாதவர்கள் மட்டுமே பாராட்டுவார்கள்.

இதுபோன்ற உளறல்களை உளறல் என்று சொல்லாமல் உயர்ந்தது போல எழுதுவதால் தவறான ஒரு புரிதலுக்கு ஆதரவு கிடைத்துவிடுகிறது.

உளறல்களுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். இனிமேலாவது.

வாழிய செந்தமிழ் ! வாழிய நற்றமிழர் !
வாழிய பாரத மணித்திருநாடு !

வந்தே மாதரம் !

dondu(#11168674346665545885) said...

//ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறக்கின்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடப்பது உங்களுக்காவது தெரியுமா? அந்த வகையில் கணக்கிட்டால் 5 - 10 வருடங்களுக்குள் சுதாமாவிற்கு 27 குழந்தைகள் பிறந்திருக்க முடியாதா?//
இதில் அக்காலம் என்ன இக்காலம் என்ன? எக்காலத்திலும் பேணமுடியாத அளவுக்கு குழந்தைகளைப் பெறுவது சரியான செயல் ஆகாது. குசேலன் கதை நட்பை உயர்த்தியது என்பது ஒரு புறம். தோழனுடன் ஏழைமை பேசேல் என்ற உயர்ந்த நோக்கத்துடன் நடந்து கொண்டது சுதாமாவுக்கும் பெருமையையே சேர்க்கிறது. அதற்காக முதற்கண் அவ்வளவு குழந்தைகளை பெற்றுக் கொண்டதை மறக்க இயலாது. அதுதான் இடிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dondu,

1) Rudhu kalathil manaiviyai kooda vendum ennum sasthram. Adhan padi nadandhirukalam.
2) Ore prasavathil 27 per kooda pirandhirukalam.

Idhil vilakam alika edhuvum illai enbadhal vyasar appidiye vittirukirar.
Neengal oru novel padipadhai pola mahabhratham bhagwatham padithu karuthukalai alli thelika mudiyadhu. Ramanujar ramayanam karka patta paadu theriuma? Katru arindha gnanigal adakathudan irupargal. Periyar solvadhai kekkum naam ellam bhagawatha, purana expertgal! Indha vyadhi sujatha mudhal madan varai palaridam irukiradhu. Ungalukum irukiradhu.

Anonymous said...

"அதற்காக முதற்கண் அவ்வளவு குழந்தைகளை பெற்றுக் கொண்டதை மறக்க இயலாது. அதுதான் இடிக்கிறது."

Do modern rationalists understand anachronism?

even in recent history, more children meant more hands to work - in the field, tending animals etc. You apply the modern Indian notion of family planning to some thing from a few thousand years ago.

Even in the present times, there are countries whose leaders encourage its youngsters to marry early and beget more children.

Do not let modern rationalists crap overtake you. Otherwise you do a fine job.

Anonymous said...

தமிழ்நாட்டு தமிழர்கள் அதாவது மலையக தமிழர்கள் வந்தேறிகள் என்று சொல்லி அவர்களை இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்பியதில் யாழ்பாணவாசிகளுக்கு பெரும் பங்கு உள்ளதாமே?? உண்மையா??

Anonymous said...

1. உங்கள் வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்த்து, செய்யாமல் விட்டதை எண்ணி வருந்தியுள்ளீரா?

2. ஜயேந்திரர் வழக்கு என்னாயிற்று?

3. மாநில அரசுக்கும் தேர்தல் லோக்சபா தேர்தலுடனேயே வந்து விடுமா?

சித்தார்த்தா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது