8/22/2008

டோண்டு பதில்கள் 22.08.2008

பட்டாம்பூச்சி அருண் (Arun as Butterfly):
1. விகடன் சில தினங்களுக்கு முன் இலங்கை பிரச்சனை தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பை பற்றிய தங்கள் கருத்து எண்ண? (படிக்கவில்லை என்று எஸ்கேப் ஆகவேண்டாம்:) )
பதில்: நிஜமாகவே நான் அதை படிக்கவில்லை. எனது கோரிக்கையை ஏற்று விகடன் சர்வேயினை பி.டி.எஃப் கோப்பாக அனுப்பியதற்கு நன்றி. உண்மை கூறப்போனால் ஈழப்பிரச்சினை விஷயம் என்று பத்திரிகைகளில் வந்தாலே நான் அவற்றைத் தாண்டிப்போவதுதான் வழக்கம். அலுத்துவிட்டது. தமிழீழத்தவர் துயரத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இங்கு புலிகள் ஆதரவு நிலை எடுப்பவர்கள் செய்யும் அலம்பல்கள்தான் தாங்க முடிவதில்லை. எனது நிலை இதுதான். தமிழ் ஈழம் வருகிறதோ இல்லையோ, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் புலிகள் ஆட்சிக்கு வருதல் ஈழத்தமிழருக்கும் நல்லதல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல. விகடன் எடுத்த சர்வேயில் ஆன்லைனில் வாக்களித்தவர் எத்தனை பேர் ஈழத்தமிழர்கள் என்பது பற்றி ஏதேனும் செய்தி இருக்கிறதா எனத் தெரியவில்லை.
"ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா"? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சரி வாதத்துக்கு ராஜிவும் குற்றவாளி என்றால், அவர் தண்டனை அடைந்து விட்டார். பிரபாகரனும் தண்டனை அடைவதுதானே பலரும் விரும்புவது. இதில் என்ன தவறு? நான் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல பிரபாகரன் தனது ஈகோவுக்காக ராஜீவ் காந்தியினை கொலைசெய்வித்து அதையும் தமிழகத்தில் நடத்தி தமிழகத்துக்கு மாறா களங்கத்தை கொடுத்து சென்றார். வெறுமனே "அது துன்பியல் செயல்" என உளறுவாராம், எல்லோரும் அப்படியே அவரை மன்னித்து விட வேண்டுமாம். ஐ.பி.கே.எஃப். படை வாபஸ் பெறுவதற்காக இந்தியா தங்களுக்கும் இலங்கை அரசுக்கும் வேண்டாத வெளியாள் என்று கூறிய பிரபாகரன் இப்போது ஏன் பதறிப்போய் ஆதரவு பிச்சை எடுக்க வேண்டும் என நான் கேட்கிறேன். "ஐயா உன்னைத் தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. இன்னும் இந்திய ஆதரவுக்கு ஏன் தொங்க வேண்டும் என்பதுதான் எனக்கு புரியவில்லை". தானும் தனது பிள்ளைகளும் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க, ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டும் இந்த மகானுபாவன் பிரபாகரன் தலைவனாக இருக்கும்வரை விடுதலைப்புலிகளை யாரும் நம்ப மாட்டார்கள்.

2. தமிழ் நாட்டுக்கு நியாயமாக வர வேண்டிய ரயில்வே திட்டங்கள் தள்ளி போகும் நிலையில்.. அதிக நஷ்டத்தில் ஓடும் பீகார், உபி மாநிலத்தில் வரும் ரயில்வேக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு போகிறதே..??
பதில்: என்ன செய்வது, அதுதான் நம் தலைவிதி. மத்தியில் இருக்கும் நம்ம மந்திரிகள் இளிச்சவாயர்கள். வடக்கத்திக்காரர்கள் அப்படியில்லை.

3. புது தில்லிக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி வரும் பீகாரிகள் எண்ணிக்கை 30,000 என்று படித்தேன்.. எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் பீகாரிகள் அதிக அளவில் தில்லியில் குவிவது உண்மைதானே.. பீகார் உபி மாநிலங்களில் இப்படி சீர் கெட்டு போனதற்கு என்ன காரணம்? எப்படி இந்த நிலை மாறும்?
பீஹாரிகள் கடும் உழைப்பாளிகள். வெயில் மழைக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்கு கிராக்கி ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. அதே சமயம் பீஹாரில் மாஃபியாக்கள் ராஜ்ஜியம் சகிக்கமுடியாத அளவில். என்னதான் செய்வார்கள் அந்த உழைப்பாளிகள்?

4. அணுசக்தி ஒப்பந்தம் எல்லாம் முடிந்து போய் விட்டது.. ஆதாயம் கிடைக்க நமக்கு பல வருடங்கள் ஆகலாம்.!! பொது பணி துறை பொறியாளர் என்ற முறையில் உங்களுக்கு மரபு சாரா எரிசக்தியால் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு ஏன் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று கூற முடியுமா?
இப்போது தொழில்நுட்ப அறிவு இந்தியாவில் இருக்கும் நிலையில் நாம் அணு மின் உற்பத்தியில் செல்ல வேண்டியது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது. அதற்குத்தான் அணு ஒப்பந்தம். அதை பிடிவாதமாக நிறைவேற்ற முயலும் பிரதமர் பாராட்டுக்குரியவர். அதே சமயம் உடனடி லாபம் என்பது அதிகமில்லை என்பதால், ஒரு சராசரி அரசியல்வாதியின் நிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

5. தில்லி வாழ்க்கை சென்னை வாழ்க்கை எது உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. விளக்கம் தேவை.
1981-ல் முதன்முதலில் தில்லிக்கு சென்றபோது அவனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகியிருந்தன. சென்னையில் அந்த 4 ஆண்டுகளில் சம்பாதித்ததை டில்லியில் ஒரே ஆண்டில் சாதித்தான். அவனது மொழிபெயர்ப்பு வேலைக்கு தீனி அதிகம் போட்டது டில்லி. ஆகவே 1991-ல் சென்னைக்கு மாற்றல் வரும்போல இருந்த நிலையில் குறுக்கே படுத்து அதை ரத்து செய்வித்தான். ஏனெனில் டில்லியைப் போல சென்னையில் அச்சமயம் வாய்ப்புக்கள் லேது. 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றாலும் அங்கேயே மேலும் 8 ஆண்டுகள் இருந்து மொழிபெயர்ப்பாளராக கொழிக்க முடிந்தது. இதற்குள் உலகமயமாக்கம் வந்து விட்டது. இந்தியா முழுக்கவே வாய்ப்புக்கள் வந்தன. அதுவும் இணையத்தின் உபயத்தால் இருக்கும் இடத்துக்கும் வரும் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை வந்தது. 2001-ல் டோண்டு ராகவன் அவனது பாண்டவர் பூமிக்கு வந்தான். வந்த மூன்று ஆண்டுகளிலேயே டில்லியில் 20 ஆண்டுகளாக ஈட்டியதை மிஞ்ச முடிந்தது. இப்போது? மறுபடியும் சென்னைதான் கோலோச்சுகிறது, அவன் மனதில்.

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்


9 comments:

வால்பையன் said...

//மத்தியில் இருக்கும் நம்ம மந்திரிகள் இளிச்சவாயர்கள். வடக்கத்திக்காரர்கள் அப்படியில்லை. //

தயவு செய்து இவ்வளவு குறைவாக மதிப்பிடாதீர்கள்,

கேரளாக்காரன் மாட்டேன் மாட்டேன் என்று சொல்லியும் அவனிடமிருந்து சேலம் கோட்டத்தை பிடுங்கியது எந்த வகை?

கர்நாடகாக்காரன் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்வது எந்த வகை?

அவர்களுக்கு எதில் அதிக வருமானமோ அதில் அவர்கள் குறியாக தான் இருக்கிறார்கள்.
இளிச்சவாயர்கள் மக்கள் தான்

Anonymous said...

///
தானும் தனது பிள்ளைகளும் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க, ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டும்
///
யார் சொன்னது அவருடைய பிள்ளைகளை போருக்கு அனுப்புவதில்லை என்று? சார்லஸ் ஆண்டனி, அவருடைய மகன் கடந்த, முறை நடந்த புலிகளின் வான்வழித் தாக்குதலில் கலந்துகொண்டார். விஷயம் தெரியாமல் பேச வேண்டாம்.

-ராயலசீமா மகேந்திர ரெட்டி

dondu(#11168674346665545885) said...

தன் பிள்ளைகளுக்கு பெல்ட்பாம் கட்டியனுப்பித்து அவர்களை கரும்புலி ஆக்கினாராமா? என்ன பேசுகிறீர்கள். அவர்கள் எங்கு தங்கி இவ்வளவு ஆண்டுகள் படித்தார்கள் என்பதை அறிவீர்களா?

டோண்டு ராகவன்

Anonymous said...

(ஒரிஸா) கலிங்கத்தில் மதக்கலவரம் வரக்காரணம் என்ன ?

Anonymous said...

கஷ்மீரை இந்தியா விட்டுக்கொடுக்கவேண்டும் என்று சொல்லும் அறிவுசீவிகள் பற்றி ?

சமீபத்தில் பார்த்த ஆங்கிலப்படம் (டமில் டப்பிங்கும் சேர்த்து).

Anonymous said...

//இங்கு புலிகள் ஆதரவு நிலை எடுப்பவர்கள் செய்யும் அலம்பல்கள்தான் தாங்க முடிவதில்லை. எனது நிலை இதுதான். தமிழ் ஈழம் வருகிறதோ இல்லையோ, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் புலிகள் ஆட்சிக்கு வருதல் ஈழத்தமிழருக்கும் நல்லதல்ல,//
இது சாரியான நிலைபாடு.

Anonymous said...

//தானும் தனது பிள்ளைகளும் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க, ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டும் இந்த மகானுபாவன் பிரபாகரன் தலைவனாக இருக்கும்வரை விடுதலைப்புலிகளை யாரும் நம்ப மாட்டார்கள்.//

அது !! சரியான பதில் !! நான் பசியாய் இருக்கிறேன் என்று சிறு குழந்தை புகைபடத்தை போட்டு காசு வேட்டையாடும் புலிகள் ஏன் தங்களின் தலைவன் பிரபாகரன் தவ புதல்வி துவாரகா லண்டனில் ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடியதை மறந்தது ஏனோ??

Anonymous said...

பதம்நாபா கொலை என்பது துரோகி அழிப்பா அல்லது கொலையா? தெளிவுபடுத்தவும்??

Anonymous said...

என்ன டோண்டு சார்
புரளி மனோகர் என்று அங்கு கமேண்ட் வரலாம் xxx xxx xx என்று வந்தால் தவறா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது