8/30/2008

கங்கம்மாவின் கதை

"இல்லாத ஆணையைக் காட்டி ஏமாற்றிய அதிகாரிகள்" என்னும் தலைப்பில் இன்று விற்பனைக்கு வந்த குமுதம் ரிப்போர்டரில் (04.09.2008 தேதியிட்ட இதழ்) ஒரு ரிப்போர்ட் வந்துள்ளது. அது சுருக்கமாக பின்வருமாறு:

17 ஆண்டுகளுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது ஒரு சட்டம். அதை ரத்தானதை மறைத்த உப்புத்துறை அதிகாரிகள் உப்பு வியாபாரிகளிடம் அதை வைத்தே கெடுபிடி செய்து வைத்துள்ளனர். உப்பு ஏற்றுமதியால் நாட்டுக்கு கணிசமான அன்னியச் செலாவணி கிடைக்கிறது. ஏற்றுமதி செய்யும் முன்னால் உப்புத்துறை அதிகாரிகளிடம் தரச்சான்றிதழ் பெற வேண்டும் என 1972-ல் வந்த ஆணை கூறியது. அதைத் தருவதற்கு உப்புத்துறையால் நடத்தப்படும் பரிசோதனைச் சாலைகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய உப்பை அனுப்ப வேண்டும். அவர்கள் தரச்சான்றிதழ் தருவார்கள். வழக்கம்போல மாமூல் தந்தால் உடனே கிடைக்கும் இல்லாவிட்டால் உற்பத்தியாளருக்கு சங்குதான்.

ஆனால் 1991-ல் இந்தச் சான்றிதழுக்கான அவசியம் நீக்கப்பட்டது. இதை அப்படியே மறைத்து விட்டனர் உப்புத்துறை அதிகாரிகள். ஆக அன்றிலிருந்து 17 ஆண்டுகளுக்கு இல்லாத ஒரு சட்டத்திற்காக செலவு செய்ய வைக்கப்பட்டுள்ளனர் உப்பு வியாபாரிகள். இப்போது எதேச்சையாக விஷயம் வெளிப்பட உப்பு வியாபாரிகள் கோப நிலையில் உள்ளனர். உப்புத்துறை அதிகாரிகள் உப்புசப்பற்ற பதில்களையே தருகின்றனர்.

எனது பெரியப்பாவின் மகன் அம்பி ராகவன் டிஃபன்ஸ் அக்கௌண்ட்ஸ் பூனாவில் வேலை செய்த போது தொழிற்சங்கத்தில் செயலாளர். எழுபதுகளில் அவன் அங்கு இருந்தான். 1962 சீன ஆக்கிரமிப்பின்போது அவசரநிலை முதலில் ஏற்பட்டது. அத்துறையின் ஊழியர்களது வேலை நேரம் அரைமணி அரசு ஆணை ஒன்றின்மூலம் அதிகரிக்கப்பட்டது. அந்த ஆணை அடுத்த இரண்டாண்டுகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அப்படியே மூடி மறைத்தனர். பழைய ஆணைகளை புரட்டி பார்த்துக் கொண்டிருந்த அம்பி ராகவன் எதேச்சையாக இதை கவனித்தான். உடனே பிறந்தது பிரச்சினை. கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அதிக வேலைநேர அட்டவனை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. "அது போதாது" என்றான் அம்பி. அவ்வாறு வேலை செய்த ஊழியர்கள் ஓவர்டைம் பெற வேண்டும் என்று கொடி உயர்த்தினான். அதிகாரிகளுக்கு எரிச்சல் இரண்டு காரணங்களால். முதல் காரணம் அவர்களும் அதே அளவு அதிக நேரம் வேலை செய்திருந்தாலும் அந்த ஓவர்டைம் அவர்களுக்கு கிடைக்காது. இரண்டாவது பணச்செலவு. அத்தனை பேருக்கு ஓவர்டைம் போட்டால் கணிசமான தொகை செலவாகும். அதை எப்படி சமாளிப்பது? எந்த அதிகாரிகள் பொறுப்பு என்று பார்க்க வேண்டும். அவர்கள் சிலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் ஓய்வு பெறும் நிலையில் இருந்தனர். அம்பி ஆனால் உறுதியாக இருந்தான். தேவையானால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பென்ஷனை நிறுத்தலாம் என்றும் ஆலோசனை சொன்னான். சில நாட்கள் மண்டைகாய்ச்சலுக்குக்கு பின்னால் ஒருவழியாக பூசிமெழுகினார்கள் என்று வைத்து கொள்ளலாம்.

The Front Page என்ற தலைப்பில் 1974-ல் ஒரு படம் வந்தது. தூக்குதண்டனைக் கைதி ஒருவனுக்கு கடைசி நேர மன்னிப்புவந்தது. அதை சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி அப்படியே மறைத்து விட்டார். நல்ல வேளையாக கதாநாயகன் வால்டர் மாத்தோ அதை கண்டுபிடித்து அவனைக் காப்பாற்றுகிறார்.

இதையெல்லாம் பார்த்தால் எனக்கு கங்கம்மா என்னும் பெண் பற்றி நான் படித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கல்கத்தாவில் சிவப்பு விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த பாலியல் தொழிலாளி. ஒரு நாள் ஒரு புதியமுகம் அங்கு தட்டுப்பட்டது. பிம்புகள் அவனுக்கு நல்ல பெண்களைக் காட்டுவதாகக் கூறி சூழ்ந்து கொண்டனர். அவனோ இரண்டாம் தெரு, 15-ஆம் நம்பரில் இருக்கும் கங்கம்மாதான் வேண்டும் எனக் கூறிவிட்டான். கங்கம்மாவிடம் அவனை அழைத்து சென்றனர். அவன் கங்கம்மாவிடம் ஒரு இரவுக்கு 500 ரூபாய் என ரேட் பேசி 4 இரவுகள் வந்து போனான். பணத்தை அவ்வபோது செட்டிலும் செய்தான். நான்காம் நாள் இரவு கங்கம்மா அவனிடம் ஊர் பேர் எல்லாம் விசாரிக்க அவன் தான் பம்பாயில் கிராண்ட்ரோட் பகுதியில் வசிப்பதாகக் கூறினான். "அடேடே அங்குதான் என் அக்கா சீதம்மா இருக்கிறாள், அவளைத் தெரியுமா"? எனக் கேட்க அவன் "நன்றாகத் தெரியும். நான் கல்கத்தா போகப்போகிறேன் என்பதை அறிந்த சீதம்மா உன்னிடம் த்ருவதற்காக என்னிடம் 2000 ரூபாய் கொடுத்து விட்டாள். அதைத்தான் நான் உனக்கு இப்போது கொடுத்து முடித்தேன்" என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
என்னிடம் 2000 ரூபாய் கொடுத்து விட்டாள். அதைத்தான் நான் உனக்கு இப்போது கொடுத்து முடித்தேன்" என்றான் ===>
====)))))

Anonymous said...

வெறும் 4 இறவுகளுக்கே கவலைப்பட்டா எப்படி?

அங்கே 17 வருஷம் வெச்சு ஓ****பட்டுள்ளார்கள் பல மக்கள்.

இன்னும் பலர் தாங்கள் ஓ****படுகிறார்கள் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

http://www.deeshaa.org/2008/08/30/of-product-and-process-innovation/#more-1333

dondu(#11168674346665545885) said...

//சேசியலிசப் பேயை விரட்டுபவர்கள் சங்கம் said...
வெறும் 4 இறவுகளுக்கே கவலைப்பட்டா எப்படி?
அங்கே 17 வருஷம் வெச்சு ஓ****பட்டுள்ளார்கள் பல மக்கள்//.

சேசியலிச --> சோசியலிச
இறவு: இரவு
17 வருஷம் --> 74 வருஷம் (1917 முதல் 1991 முடிய)

மற்றப்படி சரியான பின்னூட்டம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இலவச டி.வி.க்கள், இலவச காஸ் இணைப்பு ஆகியவற்றை வாங்கும் நம்மூர் கங்கம்மாக்கள் திருந்துவது எப்போது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
இலவச டி.வி.க்கள், இலவச காஸ் இணைப்பு ஆகியவற்றை வாங்கும் நம்மூர் கங்கம்மாக்கள் திருந்துவது எப்போது?

அன்புடன்,
டோண்டு ராகவன்


ஐயா ஒரு கிலோ அரிசி திட்டத்தை மறந்துட்டீங்களா ?

Anonymous said...

Sir,

Very sad story. People don't realise that govt. is raping us with socialist policies.

People of tamilnadu have lost regular electric supply in exchange for free tv's.
Sadly the people are paying for both.

வால்பையன் said...

//நக்கீரன் பாண்டியன் said...
ஐயா ஒரு கிலோ அரிசி திட்டத்தை மறந்துட்டீங்களா ?//

ஆஹா என்ன அருமையான திட்டம்.

தேர்தல் பீதி முகத்தில் தெரிகிறது

Anonymous said...

//வால்பையன் said...
//நக்கீரன் பாண்டியன் said...
ஐயா ஒரு கிலோ அரிசி திட்டத்தை மறந்துட்டீங்களா ?//

ஆஹா என்ன அருமையான திட்டம்.

தேர்தல் பீதி முகத்தில் தெரிகிறது//


தேர்தல் பீதியா?

தோல்வி பயமா?

கைது கனவா?

கேஸ் நடுக்கமா?


இலவச (அரிசி காப்பாற்றாது
டீவீ காப்பாற்றாது
நிலம் காப்பாற்றாது
கேஸ் காப்பாற்றாது)

Madhu Ramanujam said...

பி.எஸ். வீரப்பா டையலாக் தான்...

”இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”

இப்படித் தான இவனுக நினைக்கிறானுங்க. தமிழ்நாட்டில திராவிடம் பேர் சொல்லி போலி அரசியல் பண்ற அத்தனை பேரையும் உதைச்சா ஊரை விட்டு விரட்டினா போதும். நாடு தன்னால நல்ல நிலைக்கு வரும்.

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...
பி.எஸ். வீரப்பா டையலாக் தான்...

”இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”

இப்படித் தான இவனுக நினைக்கிறானுங்க. தமிழ்நாட்டில திராவிடம் பேர் சொல்லி போலி அரசியல் பண்ற அத்தனை பேரையும் உதைச்சா ஊரை விட்டு விரட்டினா போதும். நாடு தன்னால நல்ல நிலைக்கு வரும்.//



உழல் அரசியல் தலைவர்கலையும்,லஞ்ச லாவண்ய அதிகாரிகளையும் நீதி மன்றம் மூலம் உண்மையான கடுமையான நடவடிக்கை
விரைந்து எடுக்கலாம் என்று எண்ணினால், நீதிபதிகளோ இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற முடியுமென்கிறார்களே!

அது சரி அரசியலில் திராவிடம் பேசாதவர் மட்டும் சத்யவான் என்று எப்படி Madhusudhanan Ramanujam சார்
சொல்றீங்க ?

Anonymous said...

//உழல் அரசியல் தலைவர்கலையும்,லஞ்ச லாவண்ய அதிகாரிகளையும் நீதி மன்றம் மூலம் உண்மையான கடுமையான நடவடிக்கை
விரைந்து எடுக்கலாம் என்று எண்ணினால், நீதிபதிகளோ இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற முடியுமென்கிறார்களே!//

அரசு மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து, தேவைக்கு அதிகமாக இருக்கும் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் எடுக்க வேண்டும். அரசு தனது அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் அளவுக்கு மட்டுமே அதற்கு அதிகாரம் இருக்க வேண்டும்.
இதை செய்தாலே நாடு உருப்படும்.

Anonymous said...

//தமிழ்நாட்டில திராவிடம் பேர் சொல்லி போலி அரசியல் பண்ற //

are you talking abt only politicians or certain dravidian 'booth agents'(who blog also) too?!!

vikram

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது