நண்பர் ஜயகமல் அனுப்பிய் இந்த மின்னஞ்சல் சிந்தனையைத் தூண்டியது. On A Strike... And Veerappan என்னும் தலைப்பில் Sauvik Chakraverti என்னும் பதிவர் எழுதியுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள இடுகையில் அவர் இருவிஷயங்களைத் தொட்டுள்ளார். முதல் விஷயம் இன்றைய பொதுவேலைநிறுத்தம் பற்றி. அதுவும் மேற்கு வங்கத்தில். அதன் விரும்பாத்தன்மையை பல முறை எடுத்து காட்டியாகி விட்டது. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்ற கணக்கில் இங்கு அதை மறுபடியும் எடுக்க விரும்பாது தற்காலிகமாக ஓரமாக வைக்கிறேன். அதே பதிவில் வந்த இரண்டாவது விஷயம்தான் நான் இப்பதிவுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம்.
பெங்களூரைப் பசுமையாக்க மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டனவாம். கர்நாடகாவின் வனத்துறையினரின் செய்தி அறிவிப்பு ""A variety of trees including Peepal, Mahogany, Glory of India, Neem and Thespecia were planted at the event." என்று பெருமிதத்துடன் கூறுகிறது. எல்லாம் சரி, ஆனால் அவற்றில் ஏன் சந்தன மரக்கன்றுகள் இல்லை என கேட்பது பதிவர் Sauvik Chakraverti. அவரே அதற்கு விடையும் தருகிறார். ஏனெனில் சந்தன மரங்கள் எல்லாமே அரசுக்கு சொந்தம். உங்கள் தோட்டத்தில் இருப்பினும் அது அரசுக்கே சொந்தம். அதே நிலைதான் தேக்கு மரத்துக்கும். ரோஸ்வுட்டும் விதிவிலக்கல்ல. ஏன்? எனக்கு தெரியவில்லை. ஏதேனும் காரணம் முதலில் எங்காவது இருந்திருக்க வேண்டும். இப்போது அது இருக்கிறதா எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும் சட்டம் அதைத்தான் சொல்கிறது. அது கழுதையானாலும் மதிக்கப்படவேண்டியதே.
சந்தன மற்றும் தேக்கு மரங்கள் சுதந்திரமாக தனியார் தோப்புகளிலும் வளர்ந்தால் சுனாமி வந்துவிடுமா என்ன? நிறைய வளர்வதால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது அல்லவா? ஒருவேளை அதைத்தான் சுயநலம் பிடித்த குறிப்பிட்ட குழுவினர் விரும்பவில்லையோ. யோசித்து பாருங்கள். கஞ்சாச்செடி விஷயங்களை ஒத்து கொள்ளலாம் ஏனெனில் அவற்றால் பொது மக்கள் உடல்நலனுக்கு கெடுதி ஏற்படும். ஆனால் சந்தனம், தேக்கு, ரோஸ்வுட்?
இம்மாதிரி குருட்டுத்தனமாக கட்டுப்பாடுகள் விதிப்பது அறிவுகெட்ட சோஷலிச காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமையை எதிர்ப்பவர்கள் இச்சட்டத்தத்தை போட்டிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் இப்போது என்ன கேடுகாலம்?
பல கட்டுப்பாடுகள் அதன் தேவைகளையும் தாண்டி நீடிக்கின்றன. உதாரணத்துக்கு கார்டினால் மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள். அவை மிகவும் மலிவானவை. ஒரு மாத்திரை ஒரு பைசாவுக்கும் குறைவு. காக்காய் வலிப்புக்கு அது பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் உற்பத்தியில் பல கட்டுப்பாடுகள். ஒவ்வொரு மாத்திரை விற்பனைக்கும் மூன்று ரெஜிஸ்டர்கள் தேவைப்பட்டன. பல மருந்து கம்பெனிகள் அவற்றின் உற்பத்தியையே கைவிட்டன. இப்போது நோயாளிகளே அவற்றை பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர். ஏனெனில் ஒரு முறையில் ஐம்பது மாத்திரைகள்தான் பெற முடியும் அடுத்த முறை இன்னொரு புது மருந்துசீட்டு தேவை.
இத்தனைக்கும் என்ன காரணம்? ஐம்பதுகளில் அதை தற்கொலைக்கு உபயோகித்தனராம். ஆகவே இத்தனை கட்டுப்பாடுகளாம். அட மாங்காய் மடையர்களா! அதற்கு பின்னால் கங்கை, யமுனை மற்றும் காவேரியில் எவ்வளவு தண்ணீர் பாய்ந்து விட்டது என்பதை அறிவீர்களா? இன்னுமா அந்தக் கட்டுப்பாடு தேவை? யார் கேட்பது?
சரி, இப்பதிவின் தலைப்புக்கு வருகிறேன். சந்தன மரங்கள் தனியார் நிலங்களிலும் வளர்ந்திருந்தால் அதன் விலை குறைந்திருக்கும், ஆகவே அதை திருட்டுத்தனமாக காடுகளிலிருந்து வெட்டி ஊருக்கு எடுத்து செல்வது கடத்தல்காரர்களுக்கு கட்டிவந்திராது. ஆகவே அவர்கள் வேறு வேலை பார்த்திருக்கலாம். அதே போல வீரப்பனும் உருவாகியிருக்க மாட்டான். அவனைப் பிடிக்க செலவழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வேறு ஏதாவது உருப்படியான நிர்மாண வேலைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?
ஆக, சந்தன வீரப்பனை சுலபமாகத் தவிர்த்திருக்கலாமோ!
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
17 hours ago
23 comments:
In TN Jayalalithaa had removed this particular ban on growing sandalwood saplings in private estates. This was done as a part of her "Tharisu nila membadu" drive.
Now government sells saplings of sandalwood, rosewood, redsandars etc.,
But you need the permission of district forest officer to cut them and transport.
Many districts in TN do not have a single hectare of forest land but still have district forest oficers. :-)
Even pondy govt that doesnt have a single square feet of forest has a department of forestry :-)
Same anony
முடிஞ்சு போன விசயம்.விடுங்க!ஆமா!இங்கே ஒரு மனுசன் தேக்கு மரம் நான் வளர்த்து தாரேன்.ஆனால் பைசா மட்டும் நீ கொடுன்னு வந்து பிரமாதமா விளம்பரம் பண்ணி காசு சுருட்டிகிட்டு இப்ப எங்கே இருக்காருன்னே தெரியவில்லை.நல்லவேளை நான் இந்த ஆட்டத்தில் சேரவில்லை.
.// கஞ்சாச்செடி விஷயங்களை ஒத்து கொள்ளலாம் ஏனெனில் அவற்றால் பொது மக்கள் உடல்நலனுக்கு கெடுதி ஏற்படும். ஆனால் சந்தனம், தேக்கு, ரோஸ்வுட்?
இம்மாதிரி குருட்டுத்தனமாக கட்டுப்பாடுகள் விதிப்பது அறிவுகெட்ட சோஷலிச காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம்.//
இந்த தண்ட சட்டம் இல்லை என்றால் வீரப்பன் சந்தன மர விவசாயியாக கூட மாறியிருக்கலாம்.
//பல கட்டுப்பாடுகள் அதன் தேவைகளையும் தாண்டி நீடிக்கின்றன.//
தேவையில்லா தடைகளையும் கட்டுபாடுகளையும் உடைத்து எரிய வேண்டும்.
//Even pondy govt that doesnt have a single square feet of forest has a department of forestry //
என்ன கொடுமை இது சரவணன் சார்
//முடிஞ்சு போன விசயம்.விடுங்க!ஆமா!இங்கே ஒரு மனுசன் தேக்கு மரம் நான் வளர்த்து தாரேன்.ஆனால் பைசா மட்டும் நீ கொடுன்னு வந்து பிரமாதமா விளம்பரம் பண்ணி காசு சுருட்டிகிட்டு இப்ப எங்கே இருக்காருன்னே தெரியவில்லை.நல்லவேளை நான் இந்த ஆட்டத்தில் சேரவில்லை.//
இல்லை விஷயம் இன்னும் முடியவில்லை. வீரப்பன் விஷயத்தில் பண நஷ்டம் ஒருபுறம். எவ்வாளவு பேர் வாழ்க்கை இருண்டது? எல்லாம் பைசாவுக்கு பெறாத பழைய சட்டத்தால். ஆகவே நிலமை ரொம்பவும் சீரியஸ்.
பொருள்களின் விலையை இம்மாதிரி செயற்கை முறையில் அதிகமாக வைப்பதன் கேட்டுதான் இது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//In TN Jayalalithaa had removed this particular ban on growing sandalwood saplings in private estates. This was done as a part of her "Tharisu nila membadu" drive.//
If it is true. Then it is the second good measure after the rain water harvesting scheme.
Appreciate Madam Jayalalitha for that.
//இல்லை விஷயம் இன்னும் முடியவில்லை. வீரப்பன் விஷயத்தில் பண நஷ்டம் ஒருபுறம். எவ்வாளவு பேர் வாழ்க்கை இருண்டது? எல்லாம் பைசாவுக்கு பெறாத பழைய சட்டத்தால். ஆகவே நிலமை ரொம்பவும் சீரியஸ்.
//
அப்படி போடு தல.
All that is necessary for the triumph of evil is for good men to do nothing.
//If it is true. Then it is the second good measure after the rain water harvesting scheme.
Appreciate Madam Jayalalitha for that.//
இல்லை இதுவும் போதாது. அரசின் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்க வேண்டும். இல்லாவிடில் அரசில் வேலை செய்யும் லஞ்ச பெருச்சாளிகள்தான் பலன் பெறுவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
தேக்கு மரம் பத்தி எனக்கு தெரியும். மரம் வைக்கறதுக்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. வெட்டுகிற போது மட்டும் நம்ப பாரஸ்ட் ஆபீசர் கிட்ட சொல்லணும். அவ்வளவு தான். அதையும் எடுத்து விடலாம்.
என்னது தேக்கு மரத்தை வெட்டக்கூடாதுன்னு சட்டம் இருக்கா ?
இதென்ன கொடுமை ?
//பாரஸ்ட் ஆபீசர் கிட்ட சொல்லணும். அவ்வளவு தான். அதையும் எடுத்து விடலாம்.//
அவரது ஒப்புதல் பெற எவ்வளவு கையூட்டு? முதலில் அவரது கட்டுப்பாட்டுக்கான மூலகாரணம் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
சந்தனமரம் பற்றி நான் படித்து பார்த்ததில் தெரிந்து கொண்டவை இவை.
India controls the price and supply of sandalwood to the world. (same also grows in australia and a little bit in indonesia). It takes atleast 30 years for a tree to mature. To get a real quality wood, it takes around 50 to 60 years. It is suitable to grow in south of india.
It is feared that sandalwood trees would become extinct in the future.
Government would like to help people growing sandalwood (farming) but if they relax the rule, it is feared that all the trees would be cut for easy profits. And that is the primary reason for the government to still have the control in growing and cutting sandalwood trees.
Sandalwood and its oil has usage in perfume industry. Even though the government controls the cutting of sandalwood trees, it does not curb/regulate the exports. And that is one of the main reason of illegal harvesting as it is highly profitable to export the oil.
So, i think government fears that these trees would be extinct if the relaxations are taken out. And it is imperative to keep this industry profitable by keeping the demand higher in comparison to supplies.
சந்தன மரத்தை வளர்க்கலாம். வெட்டத்தான் அனுமதி தேவை.
அதற்கு காரணம் மரம் endangered species ஆக மாறி விடக்கூடாது என்பது தான்.
ஆனால் சந்தன மரம் வளர்த்தால் அதன் அருகில் வேறு செடிகள் வளரும் வாய்ப்பு குறைவு
//அதற்கு காரணம் மரம் endangered species ஆக மாறி விடக்கூடாது என்பதுதான்.//
இப்போதைய நிலை என்ன? வெட்டுவதற்கு அனுமதி தேவை என அரசு லஞ்சங்களுக்கு வைவகுப்பதால் ஆளைவிடு சாமி என்று ஒருவரும் அதை வளர்ப்பதேயில்லை. இரவோடிரவாக எவனாவது திருட்டுத்தனமாக வெட்டிக்கொண்டு போனால் அது வேறு தலைவலி.
ஆக, சந்தன மரம் அழிவதுதான் திண்ணம். சுதந்திரமாக அனுமதித்தால், அதம் மார்க்கெட் மதிப்புக் குறைந்து, அதன் திருட்டும் குறையும். அதை பேணி வளர்ப்பவர்கள் எல்லாரையும் மாங்காய் மடையர்கள் என மடத்தனமாக அரசு நினைப்பதாலேயே இத்தனை கெடுபிடி.
மருத்துவர் என்னும் முறையில் கார்டினால் பற்றி தங்கள் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஏனெனில் ஒரு முறையில் ஐம்பது மாத்திரைகள்தான் பெற முடியும் அடுத்த முறை இன்னொரு புது மருந்துசீட்டு தேவை. //
எந்த மாத்திரை என்றாலும் ஒரு முறை எழுதிய மருந்து சீட்டை வைத்து ஒரு முறை தான் மருந்து பெற முடியும் என்பது தான் விதி
இது அமெரிக்காவில் கூட உண்டு :) :)
சந்தேகம் இருந்தால் இங்கு பின்னூட்டமிடும் அமெரிக்கா வாழ் பதிவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்
//காக்காய் வலிப்புக்கு அது பரிந்துரை செய்யப்பட்டு வந்தது.//
இன்று வரை பரிந்துரை செய்யப்ப்டுகிறது
//ஆனால் அதன் உற்பத்தியில் பல கட்டுப்பாடுகள்.//
தூக்க மாத்திரை வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு இந்தியாவில் உள்ள கட்டுபாடு அமெரிக்காவை விட குறைவு
//ஒவ்வொரு மாத்திரை விற்பனைக்கும் மூன்று ரெஜிஸ்டர்கள் தேவைப்பட்டன.//
அப்படியா. இது உண்மையென்றால் கூட இதில் என்ன தவறு. அமெரிக்காவில் எப்படி என்று கேளுங்கள்
// பல மருந்து கம்பெனிகள் அவற்றின் உற்பத்தியையே கைவிட்டன.//
தவறு. இன்று வரை இந்த மாத்திரை கிடைக்கிறது.
// இப்போது நோயாளிகளே அவற்றை பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர்.//
என்னிடம் யாரும் இது வரை இப்படி கேட்டதே கிடையாது
//ஏனெனில் ஒரு முறையில் ஐம்பது மாத்திரைகள்தான் பெற முடியும் அடுத்த முறை இன்னொரு புது மருந்துசீட்டு தேவை.//
இது அனைத்து மருந்துகளுக்கும் பொது விதி.
//இத்தனைக்கும் என்ன காரணம்? ஐம்பதுகளில் அதை தற்கொலைக்கு உபயோகித்தனராம்.//
இன்று வரை உபயோகிக்கிறார்கள். அன்மையில் ஒரு திரைப்படத்தில் சிம்ரன் கூட அதை சாப்பிடுவதாகத்தான் காண்பித்தார்கள் :) :)
// ஆகவே இத்தனை கட்டுப்பாடுகளாம்.//
கண்டிப்பாக தேவை.
பாராசிட்டமாலுக்கு கட்டுபாடுகள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆணுறைக்கு கட்டுபாடு கிடையாது :) :)
ஆனால் 10 மாத்திரையை ஒரேயடியாக சாப்பிட்டால் பரலோகம் போகக்கூடிய ஒரு மாத்திரையை கட்டு பாடு இல்லாமல் இருக்க வேண்டுமா
// அட மாங்காய் மடையர்களா! அதற்கு பின்னால் கங்கை, யமுனை மற்றும் காவேரியில் எவ்வளவு தண்ணீர் பாய்ந்து விட்டது என்பதை அறிவீர்களா?//
கங்கை யமுனையில் பாய்ந்தது தெரியாது
ஆனால் காவேரியில் எவ்வளவு என்று அளவு இருக்கிறது.
// இன்னுமா அந்தக் கட்டுப்பாடு தேவை?//
கண்டிப்பாக
//யார் கேட்பது?//
பொதுநலம்
முக்கிய விஷயம்
கார்டினால் என்பது ஆணுறை கிடையாது
இரண்டையும் ஒன்றாக ஒப்பிடாதீர்கள்
அதே நேரம்
பல மருந்து கம்பெனிகள் அவற்றின் உற்பத்தியையே கைவிட்டன என்பது உண்மையா என்று தெரியவில்லை
இப்போது நோயாளிகளே அவற்றை பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர் என்பது பொய்
இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கமாட்டாய்ங்களா ? முட்டாப்பசங்க...எதுக்கெல்லாம் ரூம் போடுறதுன்னு வெவஸ்தையே இல்லையா ?
//இப்போது நோயாளிகளே அவற்றை பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர் என்பது பொய்//
எனக்கு நெருங்கிய உறவினர் கார்டினால் கிடைக்காமல் பட்ட பாட்டினை பார்த்தே கூறுகிறேன். மெதுவாக அது நிறுத்தப்பட்டு டெக்ரடால் கொடுக்கப்படுகிறது. அதுவும் நிரந்தரமாக எடுத்து கொள்ள வேண்டிய மருந்துதான். ஆனால் கார்டினால் அளவுக்கு கெடுபிடிகள் இல்லை.
கார்டினால் போன்ற வேறு எந்த மருந்துகளுக்கு மூன்று ரெஜிஸ்டர்கள் தேவைப்படுகின்றன. மருந்து சீட்டை வைத்து சாதாரணமாக எக்கடையிலும் கார்டினால் கிடைக்கும் என்கிறீர்களா? எவ்வளவு மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன தற்சமயம் கார்டினாலை?
இன்னும் ஒரு கேள்வி. காக்காய் வலிப்பு இருப்பவர்கள் அதை மறைத்து திருமணம் செய்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திருமணத்தையே ரத்து செய்யலாம் (அதாவது திருமணம் நடக்கவே இல்லை என்னும் நிலை, விவாகரத்தை விட கடுமையானது இது) என்னும் விதிமுறைகள் திருமணச் சட்டத்தில் இருப்பதாக படித்துள்ளேன்.
அதே போல காக்காய் வலிப்பை பைத்தியத்தன்மையுடன் ஒப்பிடும் கடுமையான பழைய சட்டங்கள் இன்னும் சட்டப்புத்தகத்தில் இருக்கின்றன என்றும் படித்துள்ளேனே.
வேலையும் கிடைக்காது என்றும் சட்டம் உள்ளது போல இருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனக்கு நெருங்கிய உறவினர் கார்டினால் கிடைக்காமல் பட்ட பாட்டினை பார்த்தே கூறுகிறேன். //
அவர் மளிகை கடையில் கேட்டிருப்பார்.
//மருந்து சீட்டை வைத்து சாதாரணமாக எக்கடையிலும் கார்டினால் கிடைக்கும் என்கிறீர்களா? //
கண்டிப்பாக
//கார்டினால் போன்ற வேறு எந்த மருந்துகளுக்கு மூன்று ரெஜிஸ்டர்கள் தேவைப்படுகின்றன. //
Schedule G மற்றூம் Schedule H
மருந்துகள். பின்னர் (நேரம் கிடைக்கும் போது) விபரமாக கூறுகிறேன்
//எவ்வளவு மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன தற்சமயம் கார்டினாலை?//
ஒரே ஒரு நிறுவனம் தான்.
பல நிறுவனங்கள் Phenobarbitone தயாரிக்கிறார்கள் :)
//அதே போல காக்காய் வலிப்பை பைத்தியத்தன்மையுடன் ஒப்பிடும் கடுமையான பழைய சட்டங்கள் இன்னும் சட்டப்புத்தகத்தில் இருக்கின்றன என்றும் படித்துள்ளேனே. //
காக்காய் வலிப்பு என்பது ஒரு நோய் இல்லை. !!! -
"Fits" / "Seizures" is a Sign and not a disease
இது குறித்தும் பின்னர் விபரமாக
இதே கருத்தை மையமாக கொண்டு சென்ற ஏப்ரல் மாதமே ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
எனக்கும் இந்த கேள்வி உண்டு.
குற்றவாளிகளை நாம் தான் உருவாக்குகிறோமா
வால்பையன்
In chittoor and anathapur district of AP sandalwood grows as a wild tree.
Local forst officials harass poor farmers of those areas if they discover sandawood within their land.
So the farmers routinely chop off yound saplings and use it as fire wood.
Though they may not have anything good to eat, they still cook using sandalwood or red sanders.
What a criminal waste. :(
Post a Comment