நண்பர் சந்திரசேகரன் அன்புடன் ஒரு புத்தகம் அனுப்பியுள்ளார். அதுதான்: The Adventures of Jonathan Gullible: A Free Market Odyssey எழுதியது Ken Schoolland.
இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது. படிக்கப் படிக்க புது கருத்துக்கள் வருகின்றன. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
முதலில்
சுட்டிப் பையன் பி. லட்சுமணன் ஜன்னலை உடைத்த ஒரு மொக்கை கதை இதில் எவ்வாறு கூறப்படுகிறது என பார்ப்போம். இதில் லட்சுமணனுக்கு பெயர் ரிக்கோ. என்ன, லட்சுமணன் ஜன்னலை வேண்டுமென்றே உடைக்கவில்லை. அடுத்த தெருவில் வசிப்பவனும் அன்றுதான் அவன் எனிமி விட்டிருந்தவனுமான ஆர். கோபாலசுவாமி கருவிக் கொண்டே பந்துவீச, பி. லட்சுமணன்
சமீபத்தில் 1958-ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னை டெஸ்டில் அணித்தலைவர் வினூ மன்காட் கில்கிரிஸ்டின் முதல் பந்தை அனாயாசமாக லேட் கட் செய்து பவுண்டரி அடித்தது போல அவனும் முயற்சி செய்ய, பந்து சட்டென்று மேலே எழும்பி அவன் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்தது. ஆனால் ரிக்கோவோ வேண்டுமென்றே ஜன்னலை உடைத்து பாராட்டுகள் பெற்றான். அவனைப் பின்பற்றி மற்றவரும் உடைக்க, ஒரு தொழிற்சாலையின் அத்தனை கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. ஆனால் அதன் உரிமையாளர் கண்ணாடிகளை திரும்பப் பொருத்த முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. அவர் திவாலானதாக கோடி காட்டப்படுகிறது.
அம்மாதிரி வேண்டுமென்றே கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வேலைகளை உருவாக்குவது என்பது புத்தகத்தில் தரப்பட்ட சூழ்நிலையின்படி தவறான செயல்பாடுதான் என்பதில் ஐயமேயில்லை. பிச்சுமணி பற்றிய பதிவில் நான் கூற வந்ததே வேறு. தற்செயலாக நடந்த விபத்தின் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணவேண்டிய கண்ணோட்டத்தைத்தான் நான் வலியுறுத்தினேன். "வா ஃபைட் வச்சுக்கலாம்" என்ற தோரணையில் நடந்து கொள்வது கண்டிக்கத் தக்கதே. அதே சமயம் வந்த சண்டையினால் விளைந்த பொருளாதார செயல்பாடுகளையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதே நான் கூற வந்தது.
எண்ட்ராப்பி (entropy) என்று ஒரு கோட்பாட்டை இயற்பியலில் அடிக்கடி கூறுவார்கள். அது ஒழுங்கின்மையை குறிகிறது. அதாவது ஒழுங்கின்மை அதிகரித்து கொண்டே போகிறது. அதை சில இடங்களில் குறைத்தால் வேறு இடங்களில் அது அதிக அளவில் பெரிதாகிறது என்பார்கள். யுத்தமும் இந்த ஒழுங்கின்மையைத்தான் குறிக்கிறது. ஏதோ கணினியை பொருத்தினோம், ஆளைவிடு என இருக்க முடிகிறதா? அதற்கு வைரஸ்களால் தாக்குதல் வராமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. தினமும் ஒரு முறையாவது ஸ்கேன் செய்து வைரஸ்களை தேடி ஒழிக்க வேண்டியுள்ளது. இத்தனைக்கும் இது பல இயற்பியல் விதிகளுக்கு கீழ் செயல்படும் ஒரு உயிரில்லாக் கருவியே. அதற்கே இத்தனை பாடுபட வேண்டியுள்ளது. அப்படியென்றால் முழுக்க முழுக்க மனிதர்கள் தத்தம் வெவ்வேறு மனநிலைகளுடன் சேர்ந்து இருக்கும்போது என்னென்ன அனர்த்தமெல்லாம் நிகழும்? அவை வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதான். ஆனால் அதே சமயம் வந்த பிறகு அதற்காக அழுது கொண்டு சும்மா இராது நடவடிக்கைகள் எடுப்பதுவும் அதை விட முக்கியமே.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஏன் இந்தியா கூட ராணுவ ரீதியாக சில நடக்கக் கூடிய நிகழ்வுகளை அனுமானம் செய்து வைத்து கொண்டு திட்டங்கள் தீட்டி வைத்து கொள்வார்கள். இதை
war scenario என கூறுவார்கள். ஆக்கிரமிப்புகளை தூண்டும் செய்கைகள் என ஒரு சாரார் கூற இன்னொரு கோஷ்டியோ இதை வருமுன்காப்போன் செயல் எனக் குறிப்பிடும். அதுவல்ல பிரச்சினை. யுத்தம் என்பது தவிர்க்க முடியாது என்பதற்காகத்தான் இதை இங்கு குறிப்பிடுகிறேன். அதே போல சுனாமி, பூகம்பம் ஆகியவையும் தவிர்க்க இயலாததுதானே. அவற்றால் நல்லவை நடக்குமா அல்லது அல்லவை நடக்குமா என்று பேசுவது வீண்செயல். அவை வரும் என்ற உறுதியுடன் இருந்தால்தான் அவை நிஜமாகவே வரும்போது நிலைகுலையாமல் செயல்பட இயலும். அதித்தான் நான் பிச்சுமணி பதிவில் கூறப் புகுந்தேன்.
இந்தப் புத்தகத்தில் இன்னொரு சுவையான விஷயமும் உள்ளது. பதிவுலகில் உலகமயமாக்கலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் காரசாரமான விவாதங்கள் நடந்தன. இப்புத்தகம் உலகமயமாக்கலை ஆதரிக்கிறது.
அடுத்து வரும் பதிவுகளில் இப்புத்தகம் பற்றி மேலே எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6 comments:
சார்!
நேத்திக்கு அந்த "மாம் ஃப்ரம் இந்தியா" புத்தகம் கேட்டிருந்தேன்! பதிலையே காணோம்! கண்டிப்பா உங்ககிட்ட வாங்கின 20 நிமிஷத்துல (பிரதியெடுத்துட்டு) கொடுத்துடறேன் சார்! ஓகேவா?
அன்புடன்
வெங்கட்ரமணன்
மாம் ஃப்ரம் இந்தியா கல்கியில் தொடராகப் படித்ததுடன் சரி. தொடர்கதைகளை பைண்ட் செய்து வைத்து கொள்ளும் காலம் என்னிடம் எழுபதுகள் வரை இருந்தது. பிறகு அப்பழக்கம் விட்டுப் போயிற்று.
ஆகவே என்னிடம் அப்புத்தகம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவுத்திட்டீங்களே சார்!
சரி! நான் வேற இடத்துல பார்க்கறேன்!
நன்றி!
வெங்கட்ரமணன்!
சுனாமி ,பூகம்பங்கள் தவிர்க்க முடியாதது, ஆனால் போரை தவிர்க்கலாமே,
அவைகள் உருவாக்க தானே படுகின்றன.
அவைகள் வராமல் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா?
(எனக்கு சண்டைனா பயம்)
வால்பையன்
வெவ்வேறு நாடுகள் உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு பிரச்சினைகள். அவற்றில் பல பொருளாதார ரீதியானவை. இருக்கும் வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உள்ளன. ஆனால் ஆசைகளுக்கு எல்லையே இல்லை.
சரித்திரத்தைக் கூர்ந்து பார்த்தால் பல யுத்தங்கள் பொருளாதார அடிப்படையிலேயே நடந்தன, நடக்கின்றன, நடக்கும்.
மனிதன் பிறந்தால் இறப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் யுத்தங்களும்.
ஆகவே யுத்தத்தைத் தவிர்ப்பது என்பது கடினமே. அதே சமயம் அது வந்தால் என்ன செய்வது என்பது குறித்து தயாரான மன நிலையில் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1ஹோகனேக்கல் திட்டம் என்னாச்சு?
2.கலைஞரின் மனநிலை?
3.எடியூரப்பவின் மன்
நிலை?
4.தமிழ் நடிகர்கள் இப்போது?
5.கன்னட நடிகர்கள் இப்போது?
6.தமிழ்க கட்சிகளின் நிலை?(கூட்டணி)
7.எதிர்க்ட்சிகளின் நிலை?
8. பா.ம.க வின் நிலை?
9.ரஜினியின் மன்னிப்பு பற்றி?
10.பிறரின் விமர்சனம் ரஜினியின் மன்னிப்பு பற்றி?
Post a Comment