8/10/2008

பதிவர் சந்திப்பு 10-08-2008

எனது பஸ் காந்தி சிலையை அடைந்தபோது மணி சரியாக மாலை 05.30 ஆகியிருந்தது. வெண்பூ என்னும் வெங்கட், அதிஷா மற்றும் ஜிங்காரோ ஜமீன் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். சுய அறிமுகங்களுக்கு பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகுமார் என்னும் பரிசல்காரனிடமிருந்து தொலைபேசி அதீஷாவுக்கு வந்தது. அவருடன் பேசிவிட்டு என்னிடமும் செல்பேசியை கொடுத்தார். பரிசல்காரன் தனது மைத்துனர் ஆத்திலிருந்து பேசியதாகக் குறிப்பிட்டார்.

சிறிது நேரம் கழித்து ஜிங்காரோ ஜமீனும் அதீஷாவும் வெண்குழல் பற்றவைக்க சற்றே அப்பால் சென்றனர். அச்சமயம் பாலபாரதியும் லக்கிலுக்கும் வந்து சேர்ந்தனர். பாலபாரதி தன் செல்பேசியை எடுத்து அதீஷாவை உடனே வருமாறு அழைக்க, அவரும் ஜிங்காரோவும் ஆஜர். ஆனந்த விகடனில் வேலை செய்யும் ரமேஷ் வைத்யா அடுத்து வந்தார். முரளி கண்ணன் தனது சுட்டிப்பையனுடன் வந்தார். பையனை பீச்சுக்கு அழைத்து சென்றால்தான் அவர் பதிவர் மீட்டிங்கிற்கு வரமுடியும் என்பது அவரது தங்கமணியின் உத்திரவு என நினைக்கிறேன். சுட்டிப் பையன் சற்றுநேரம் சும்மா இருந்து விட்டு பிறகு பீச்சுக்குள்ளே போக வேண்டும் என அடம்பிடிக்க அவரும் தற்காலிகமாக விடை பெற்று சென்றார்.

வால்பையனுக்கு நான் ஃபோன்போட்டு அவர் எங்கிருக்கிறார் என விசாரித்தேன். அவர் ஈரோடில்தான் இருந்தார். அதீஷா லக்கிலுக் ஆகியோரிடம் பேச விருப்பமா என கேட்க, அவர் தானே தொடர்பு கொள்வதாகக் கூறி லைனை கட் செய்தார். பிறகு உடனேயே எனக்கு அவரிடமிருந்து இன்கமிங் கால் வந்தது. செல்பேசி அதீஷா, பாலபாரதி மற்றும் லக்கிலுக் என எல்லோரிடமும் சென்றது. லக்கிலுக் பேசும்போது மழை பிடித்து கொண்டது. செல்பேசி, கடிகாரம் ஆகியவற்றை நான் தயாராக எடுத்து சென்றிருந்த பிளாஸ்டிக் பையில் போட்டு கொண்டு நான் கடலை நோக்கி விரைந்தேன். நல்ல மழையில் கடலில் காலை நனைக்கும் நோக்கத்துடன் சென்றேன். ஆசைதீர நின்றேன். மழையும் விட்டுவிடவே திரும்பினேன். மீட்டிங் வழக்கமான மொக்கையுடன் தொடர்ந்தது.

வால்பையன் மறுபடி ஃபோன் செய்து மருத்துவர் ப்ரூனோவுடன் பேச வேண்டுமென்றார். அவர் இன்னும் வரவில்லை. ஆகவே அவரது எண்ணை வால்பையனிடம் தந்து பேசச் சொன்னேன். மழை விட்டுவிட்டு வந்தபடியால் ரொம்பநேரம் மொக்கை போட இயலவில்லை.

லைட்ஹவுஸ் தாண்டி வழமையான டீக்கடைக்கு புறப்பட்டோம். அச்சமயம் கடலையூர் செல்வமும் வந்தார். டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மருத்துவர் ப்ரூனோவும் வந்தார். அவரிடம் வால்பையனைப் பற்றிக் கூற அவர் வால்பையன் தன்னுடன் செல்பேசியதாகக் கூறினார். குசேலன் படு ஃப்ளாப் என்பதை லக்கிலுக் உறுதி செய்தார். அதே சமயம் தசாவதாரத்துக்கான விளம்பரமும் சரிவரச் செய்யவில்லை என்பதைத் தன் தொழிலறிவு பார்வையில் எடுத்துரைத்தார்.

முதலில் பாலபாரதி விடைபெற்று சென்றார். பிறகு ஒவ்வொருவராகக் கலைய நானும் பஸ்ஸை பிடித்து வீடு சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
11.08.2008 காலை 8 மணியளவில் சேர்த்தது:
மீட்டிங் முடியும் தருவாயில் அது நடப்பது பற்றி தெரியாது, வேறு காரணத்துக்காக எனக்கு ஃபோன் போட்டார் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள். மீட்டிங் விஷயத்தை அவரிடம் கூறினேன். ப்ரூனோவிடம் சற்று நேரம் பேசினார்.

11 comments:

பரிசல்காரன் said...

மீ த ஃபர்ஸ்ட்?

பரிசல்காரன் said...

முதல் முதலாக உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி!!!

சந்திப்பின் போது மழை வந்ததை அறிந்தேன்...

அதனால்தான், பல பதிவர்களுடன் வந்துகொண்டிருந்த லாரிகள் திரும்பிப் போய் விட்டனவாம்!!

dondu(#11168674346665545885) said...

வால்பையன் எக்ஸ்க்ளூசிவ் படத்துடன் வந்த பதிவில் உங்கள் புகைப்படத்தை பார்த்தேன். எனது நண்பர் ஜயகமல் போலவே இருக்கிறீர்கள். அவரது புகைப்படத்தை எனது இப்பதிவில் பார்க்கலாம், http://dondu.blogspot.com/2007/02/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

புருனோ Bruno said...

10.08. 2008 நடந்த சென்னை வலைப்பதிவர்
சந்திப்பு குறித்த என் இடுகை இங்கு உள்ளது

Anonymous said...

//குசேலன் படு ஃப்ளாப் என்பதை லக்கிலுக் உறுதி செய்தார்.//

Amaam amaam, Lucky is the box office authority. He even says Sivaji is also a flop movie and movies like Hey Ram, Guna, Dasavatharam are super hit movies.

dondu(#11168674346665545885) said...

விளம்பரத் துறையில் இருப்பதால் லக்கிலுக் கூறுவதை இந்த விஷயத்தில் அலட்சியப்படுத்த இயலாது. அடிப்படை கண்டிப்பாக உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//எனது பஸ் காந்தி சிலையை அடைந்தபோது மணி சரியாக மாலை 05.30 ஆகியிருந்தது.//

பஸ்சும் உங்களோடதா?

உங்களுக்கு சந்திப்புக்கு வரும் நேரத்திலும், வந்தபோதும் வந்த ஆபாச தொலைபேசி பற்றி குறிப்பிட்டிருக்கலாம். இதுபோல குற்றவாளிகள் கையும், களவுமாக மாட்டும் சந்தர்ப்பங்கள் அரிது. உடனடியாக அதை பதிவு செய்துவிடுவது நல்லது.

வால்பையன் said...

சந்திப்புக்கு வராவிட்டாலும் நான் தான் நிறைய இடத்தில் வருகிறேன் பாருங்கள்.
இங்கே எங்கள் சந்திப்பும் இனிதே நடந்தது

வால்பையன்

அரவிந்தன் said...

//எனது பஸ் காந்தி சிலையை அடைந்தபோது மணி சரியாக மாலை 05.30 ஆகியிருந்தது.//

டோண்டு ஸார்..கால் டாக்ஸி என்ன ஆச்சு..வீட்டம்மா வந்தாத்தான் டாக்ஸியா..?

அரவிந்தன்

Anonymous said...

Dondu sir, exactly what u guys are trying to achieve thru this kind of 'meets', except having tea, bajji, useless 'discussions' etc??!! Is there anything useful coming out of these?

Just curious..

Vikram

dondu(#11168674346665545885) said...

//டோண்டு ஸார்..கால் டாக்ஸி என்ன ஆச்சு..வீட்டம்மா வந்தாத்தான் டாக்ஸியா..?//
நேற்று காலைதான் வேறு காரணத்துக்காக டாக்ஸி எடுத்து போயிருந்தோம். ஒரே நாளில் இரண்டு முறை எடுக்க மனம் வரவில்லை எனக்கு. மேலும் கைவசம் நேற்று வேலை ஏதும் இல்லை, ஆகவே என்னால் அதிக நேரம் வெளியில் எடுக்க இயன்றது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது