துக்ளக் 05.11.2008 இதழில் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக வந்த கேள்வி பதில்களை நான் நகலெடுத்து ஒட்டி பதிவு போட நினைத்தேன். ஆனால் வேலை மும்முரத்தில் விட்டு போயிற்று. இன்று அனானி ஒருவர் அதை எனக்கு தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி உரித்தாகுக.
சோ அவர்கள் கேள்வி பதில்களை இங்கு தருமுன் இன்னொரு விஷயம். அவர் கருத்தில் எனக்கு ஏதும் மாற்று கருத்து உண்டா? பதிவின் கடைசியில் பார்க்கவும். இப்போது கேள்வி பதில். நன்றி துக்ளக் மற்றும் அதை சிரமம் பார்க்காது காப்பியெடுத்த அனானி.
இரா. சாந்தகுமார், சென்னை49
கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்?
ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.
வெ. கிருஷ்ணன், இடைப்பாடி
கே : "சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று
விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி?
ப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. "நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.
மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1
கே : விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா? விபீஷணனா?
ப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை
முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.
என். சண்முகம், சேலம்1
கே : "விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை
முன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது?
ப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். "புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.
கே.என். பாலகிருஷ்ணன், சென்னை91
கே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்?
ப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே
விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை44
கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.
ஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42
கே : "இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தலையிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே?
ப : அவர் கூறியுள்ளது சரிதான். "காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா? முடியாதல்லவா? நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா?
ஜி. சாந்தி, பனங்கோட்டூர்
கே : முரண்பட்ட கொள்கையை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இலங்கைப் பிரச்சனையில் சந்திக்கத் தொடங்கியுள்ளதே? இதனால் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கிறீர்களா?
ப : இலங்கை விஷயத்தில் முரண்பட்ட கொள்கையையுடைய தி.மு.க.வும்,
காங்கிரஸும் சேர்ந்தே இருப்பது போல – ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியைத் தொடர்ந்தாலும் தொடரலாமே!
ஏ. முகம்மது மைதீன், சிவகங்கை
கே : "இந்தியாவில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், புலிகள் மீதான தடை
நீக்கப்பட்டு, பிரபாகரனின் உதவியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'
– என்று பால்தாக்கரே கூறியுள்ளாரே?
ப : வன்முறையாளர், வன்முறையாளரை ஆதரிப்பதில் வியப்பில்லை.
பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
கே : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, கலைஞர் வாபஸ் பெறும் அளவிற்கு துணிச்சல்காரரா என்ன?
ப : மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வருகிற ஆதரவு வாபஸ் ஆகும் போலத் தெரிகிறது – என்று ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினாலே, அவருக்கு கடும் கோபம் வருகிறது. "எப்படிச் சொல்லலாம் இப்படி? நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது? இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி!' என்றெல்லாம் கோபித்துக் கொள்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஆதரவாவது, வாபஸாவது?
ஒரு துணிவு அவருக்கு உண்டு. "எம்.பி.க்கள் ராஜினாமா' என்று சொல்லிவிட்டு, "இல்லை. மத்திய அரசுக்கு இன்னமும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது
– ஆகையால் எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை' என்று ஒரு பல்டி அடிக்கிற துணிவு அவருக்கு உண்டு.
எஸ். பக்கிரிசாமி, திருவாரூர்1
கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?
ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.
எம். சம்பத், வேலாயுதம்பாளையம்
கே : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில், இந்தியாவின் அணுகுமுறை சரிதானா?
ப : இதுவரை பழுது காண இடமில்லை.
இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை? அப்படி உடன்பாடு இல்லை என்று கூற ஒரு கருத்துமே இல்லை.
“இந்த மாதிரி வெறுப்பேத்தறதே உனக்கு தொழிலாச்சு” எனச் சாடுவது முரளி மனோஹர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
22 comments:
ஹிட் எண்ணிக்கை விரைவில் 4,00,000 தாண்டப் போகிறது.
அதுவும் இந்த சோவின் கேள்வி பதில்
யாருக்கான பதில்?
சோவின் கருத்துக்கள் சரியானது தான் ... சிங்களவர்களும் ஈழத் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதர்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும் ..
//இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை? அப்படியென்று ஒரு கருத்துமே இல்லை.
ethuthaan nurrukku nuraa-perfect understanding-great men think alike
ramakrishanhari
கோவி அண்ணா தங்கள் கருத்து என்னவோ?
// കെ.പി.സുകുമാരന് അഞ്ചരക്കണ്ടി. said...
சோவின் கருத்துக்கள் சரியானது தான் ... சிங்களவர்களும் ஈழத் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதர்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும் ..//
விவாதம் சூடு பறக்கப் போகிறது.
சேரன் அண்ணே பத்த வச்சுட்டீங்களே!
பாண்டிக்காரன் என்றால்
அவ்வளவு பாசமா உங்களுக்கு
சேரமான் கணைக்கால் இரும்பொறையின்
வாழ்வுக்கு(அழிவுக்கு) வஞ்சம் தீர்க்க உத்தேசமா!
(அப்போ தண்ணி நேரத்துக்கு சிறைக் காவலன் கொடுக்கலேன்னு சேர மன்னன்
உயிர் நீத்தார் என்பது பள்ளியில் படித்த வரலாறு நினைவுக்கு வருகிறது)
அன்பின் டோண்டு ராகவன்,
சோவின் கேள்வி பதிலை வெளியிட்டதிற்க்கு நன்றி. தங்களுக்கும்
சோவிற்கும் நன்றி. நானும் ஒரு இலங்கை தமிழன் தான்.
தமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதற்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!
//கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.///
இந்த ஒரு கேள்வி பதில் போது சோ மாறியின் நிலையை எடுத்துக்காட்ட... போர் நிறுத்தம் என்று சொல்வதை கூட எப்படி மாற்றி பேச முடிகிறதென்றால்.. அவரின் தந்திரம் நன்றாக தெரிகிறது
இனப்பாசம், என்ன பன்றது. உள்ள நெளியறது, நெளிஞ்சுத்தானே ஆகும்..
/// .പി.സുകുമാരന് അഞ്ചരക്കണ്ടി. said...///
தமிழர் விஷயத்துல இவரெல்லாம் கருத்து சொல்ற நெலமடா சாமீ
டோண்டு சார்,
சோ உண்மையை உண்மையா சொல்லுறதுனாலதான் அவரோட கருத்துக்கள் சில கருத்து கந்தசாமிகளுக்குப் பிடிக்கவில்லையா? கொள்ளையடிப்பவனை சோ கொள்ளைக்காரன் என்பார், இந்த "காண்டு"கள் தலைவர் என்றும், தமிழர்களை உய்விக்க வந்தவர் என்றும் சொல்லுவார்கள். இதுதான் வித்தியாசம். ஈழத்தமிழர் பிரச்சனையில் தலைவர் ஒன்றுமே செய்யவில்லை என்று வருத்தப்பட்டு பதிவு போட்ட டவுசர்கள் எல்லாம் இப்போது தலைவரை விட்டால் ஈழத்தமிழர்களுக்கு உதவ யாருமே இல்லை என்று ஜல்லியடிப்பது எதனால்?
I agree with Cho except that India should use its good office and get UN Involvement and restrain LTTE.
For SL -
1. Arrest Prabhakaran and start the trial in India for Rajiv mess-up.
2. Force SL to conduct negotiation under UN including various parties (Tamils, Sinhala and LTTE) UN and come to a solution within SL Framework
3. As long as LTTE is not happy to the agreement - however good for Tamils it may be - some few hundred people will go back to forest and start all over again (back to pavilion). So it is imperative that they are agreeing to this...With Prabhakaran in Indian Jail things may be easier to resolve as well…
4. An unstable SL is not in the good interests of India. (Indian interests are utmost important and SL Tamil interests should come second). Already we have Pak, Nepal, Bangladesh and China - first 3 being unstable and the 4th one helping all the 3 actively to keep us occupied. It is better that some form of settlement is worked out and folks start living peacefully in SL.
5. A separate Eelam is not in the best interests of India (is not in the best interests of SL Tamils as well since LTTE will rule that country)
வெங்கட் ராகவன் ஆர்.
//வாக்காளன் said...
//கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
– "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.///
இந்த ஒரு கேள்வி பதில் போது சோ மாறியின் நிலையை எடுத்துக்காட்ட... போர் நிறுத்தம் என்று சொல்வதை கூட எப்படி மாற்றி பேச முடிகிறதென்றால்.. அவரின் தந்திரம் நன்றாக தெரிகிறது
இனப்பாசம், என்ன பன்றது. உள்ள நெளியறது, நெளிஞ்சுத்தானே ஆகும்..//
thirunthunka sir
kaalam rompa maaripossu
pazayakathai ini vendaame
anaivarum onrupaddu
thamizar nalan kaappom
namakkul pirivinai vendaame!
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்
dondu sir,
please read this reply for your blog supporting the views of cho
http://thamilar.blogspot.com/2008/11/blog-post_5108.html
சோவின் ஒரு பதிலை கூட இவர்களால் மறுக்கவோ அதற்கு பதிலளிக்கவோ முடியவில்லை..அதிலிருந்தே தெரிகிறது இவர்களது போராட்டம் எவ்வளவு சிறுபிள்ளை தனமானதும்..முட்டாள் தனமானதும் என்று...இவர்களது இந்த முட்டாள்தனத்தால் ஒரு இனமே கிட்ட தட்ட அழிந்து விட்டது...
இதற்கு அந்த பென்சில் புகழ் பாரதிராஜா , கட்ட பஞ்சாயத்து ரவுடி சீமான் போன்ற கேவலம் கேட்ட பொறுக்கிகள் தான் லாயக்கு..
சார் அடுத்த பிரச்சனை
ஆரம்பித்துவிட்டது.
பெரியண்ணன் உலகப்போலிஸ் அமெரிக்காவின் புதிய அதிபரின் தேவையற்ற தலையீடு காஷ்மீர் பிரச்சனையில்.
மத்திய அரசின் கண்டனம் கவனத்துக்குரியது.
அடுத்த ஆப்பு bpo பணிகளுக்கு போலுள்ளது.
இதையெல்லாம் அனைவரும் புரியும் வகையில் விளக்கவும்.தனிப் பதிவாக என்றால் நலம்.
இது எல்லாம் இந்தியாவுக்கு நல்லதிற்கா?கெட்டதிற்கா?
அமெரிக்கவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சாதமானவர் இல்லை என்ற செய்தி உன்மையாய் விடுமா?
ஏற்கனவே வளர்ச்சி விகிதம் 9% .......->..6% ........->
நானும் இதை துக்ளக்கில் படித்தேன். நீங்கள் கூறுவதைப் போல அவரின் கருத்துக்கள் சரியாகவே உள்ளதாக எண்ணுகிறேன்.
//இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை? அப்படியென்று ஒரு கருத்துமே இல்லை.
-----------------------------------
Dondu Raghavan sonnadhu puriyalennu sollalaa, puriyara maadhiri sonnaa nallaa irukkumennu solla vandhen ..........
//Dondu Raghavan sonnadhu puriyalennu sollalaa, puriyara maadhiri sonnaa nallaa irukkumennu solla vandhen ..........//
இப்ப திருத்தி எழுதியிருக்கேன், பாருங்க கோபி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
After leading the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in several battles, `Col.' Karuna,its longest-serving regional military commander, left the group on March 3 citing "discrimination." Three days later, the Tigers expelled him for "traitorous acts" — a crime that means death in the LTTE.
In an exclusive interview to V.S. Sambandan, deep inside LTTE-controlled Batticaloa in eastern Sri Lanka, the rebel military commander, who joined the LTTE as V. Muralitharan, a school student, and went on to become the much-feared `Col.' Karuna, says he considers the assassination of Rajiv Gandhi the "gravest mistake" and "winning a separate nation an impossibility." Excerpts:
Question: On March 3, you left the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Why?
Muralitharan: It is discrimination against us within our organisation. I don't feel our leader [V. Prabakaran] has given regard to the lives of our [eastern] fighters. From the time of the Indian Army, our fighters have been martyred in the Vanni battlefields.
Even now, there are 600 fighters there. Parents don't like their children to be deployed during peace. What we wanted was that the eastern fighters should be sent back. When the leader asked for 1,000 more people, it was unacceptable. Then, of the more than 30 administrative positions in the LTTE not even one is held by someone from Batticaloa-Amparai.
There have been problems within the LTTE in the past, before you went public. Did you weigh the impact of this on the LTTE?
There will certainly be an impact. They cannot function without me. Even if they do, they cannot be strong. May be they can become a real guerrilla movement, but they cannot continue any longer as a conventional army. We gave 75 per cent of the strength. We gave fighters and introduced technology and tactics into the military. For instance, the organisation does not know defence battles. As I had read books on history of warfare — Stalingrad, Hitler, Rommell — I knew the importance of defence in warfare.
Do you think your action would affect concepts such as traditional homelands?
I am not even concerned that they will be affected because the northern, Vanni leaders think arrogantly that they are the educated lot, that they can do everything and that they can suppress other communities. That is not acceptable. So when a country or a solution comes, what are they going to do? Even then, our people will be suppressed.
From the beginning, there have been severe problems between the Jaffna man and the Batticaloa man. There was discrimination. We thought war would change things. Within the organisation all was well; they took care of us well till their work was done. But with passage of time, we find discrimination within the organisation. How can we continue to accept that?
Before the war there was a good relationship between the Tamils, Sinhalese and Muslims here. In the 1983 riots those who were affected were Jaffna Tamils, not eastern people. Apart from one problem — colonisation — I don't think there was a big problem here. I was studying in school when I joined the LTTE. There were no Sri Lankan forces here then. When we started attacking there, destruction started here.
What happened on March 3 when you informed Norway that you are leaving the LTTE?
I had written a letter to the leader, very humbly: "We regard you as God. Please accept our demands. You appointed 30 administrative heads. None of them is from Batticaloa-Amparai. I will run [the east] directly under your control as we have the capacity to do so."
He said, he can't permit it. I said: "I don't approve [of] sending fighters. I want to function from here." Then he said: "No, you cannot do that. Come here if you want or quit [the LTTE]." That was the internal communication. Then I decided: "This will not work," and I told Norway immediately: "We have parted ways with the LTTE from today."
Political killings are also cited as a background for the current problem.
That is true. The problem is the atrocity of the intelligence gang, directly under [the intelligence wing leader] Pottu [Amman]. Pottu is a terrorist. That is what I can tell you. None of the work done by him is acceptable to the international community. He wields personal influence on the leader.
They do not accept our views. We are consistently for conventional war — ground battles, raids, attacks — I really did not like these games of exploding bombs, killing civilians.
The atrocities of the intelligence increased. The Sri Lanka Monitoring Mission (SLMM) coordinates with us; we give them assurances. Then the next day there will be an incident. We ask [our intelligence] "is there any link with you in this?" They would say "we don't know." Then the SLMM tells us: "You guys are hopeless." When we realised that [the LTTE intelligence] was involved, I said: "If intelligence is to operate here they must function under my control, or they must be removed from here immediately." They did not accept it, so I ordered the intelligence out as [we] are getting a bad name. My inference is that they were portraying us as villains.
Do you still believe in Tamil nationalism?
Yes. I believe that when the northern Tamil Eelam people discard the Vanni leadership, then Tamil nationalism will be rescued. Even there, nearly 80 per cent oppose it. If they had people's support, they could have recruited people there.
You were a member of the LTTE's negotiating team. Were you surprised that you were named? What were your experiences?
It was a surprise. Questions would have been raised if someone from the East was not there. I feel that was the reason I was sent. However, the travels were truly a good experience. I learnt a lot. I could see other societies and study various developments.
Even our leader has given up the demand for Tamil Eelam. His demands now are for a federal system and internal self-determination. That is why we went for talks. Now we cannot be accused of giving it up. We cannot be blamed for it. You would have noticed his position in last year's Heroes Day speech. I think he has given it up.
The relationship between India, the LTTE and the Sri Lankan conflict is a much-discussed subject. What are your views?
That was our biggest setback. We should have stopped with fighting against the Indian Army. Going back and assassinating Rajiv Gandhi — killing him in Tamil Nadu — is not acceptable. I consider it the gravest mistake of our intelligence wing. That was the reason why our liberation struggle deteriorated so badly. I was trained there and I remember that we were considered as freedom fighters then.
As far as I am concerned, we attacked their army on the basis of retaliation. Their army left. What is the need for rage after that? It is because of the assassination that we have such a bad reputation. We have been trying to explain this on and off, but none accepts our version.
`Col.' Karuna is known as one who evoked fear, now with the emergence of Muralitharan, what is the difference?
(Chuckles) I have had long experience in war. I really did not like it during the war. Destruction on both sides affected me. I started feeling "is it necessary?" They used to say "if you bring 1,000 soldiers, we will win." We take them; nothing comes of it. Then they would say "bring 2,000 here, we will win." We take them; there is no solution. I am convinced that we cannot solve this through war.
If we have to form a separate Tamil Eelam, we cannot do so antagonising India. That is out of the question. Or we should create a relationship with that country. They have not attempted that, except superficially saying so once in a way.
If we still want to get a separate country, we will only face more destruction. There will be destruction on both sides — no problem with that — but there will be no solution. We will not get a separate country.
Now there is a different situation in the global order. Without any support, I consider winning a separate nation an impossibility.
So you held negotiations (with the Sri Lankan Government) on the premise that a separate country was not possible?
Certainly. There are no doubts about that. Even I was there. We negotiated only the possibility of considering a federal system. We were not negotiating Tamil Eelam.
Throughout this interview you have referred to "Leader Prabakaran." What are your views about him?
As far as the leader is concerned we were reverential of him. In the beginning he was a good person. We accept that, but those surrounding him started exerting pressure on him and when he started acting according to their influence, he moved away from the leadership qualities and started behaving differently. He has become a person controlled by [those] around him.
He could have shared powers. He failed to do that. In the early days it was ok, when there were 500 or 1,000 people, when there was little territory, a single person can control things then. Now, with such a large Tamil Eelam, he must have shared administrative powers. That is his monumental mistake. It is impossible to achieve things now as a single man.
Another weakness of his is that he will not like anyone growing up as an equal to him. I know that.
http://www.hinduonnet.com/2004/03/13/stories/2004031303881200.htm
http://www.cbi.gov.in/rnotice/prabha.htm
those who supports LTTE and prabhakaran can be arrested by interpol
இதில் எனக்கும் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால் நான் ரொம்ப சின்னபையன்
அமெரிக்கா பற்றி பின்னூட்டமிட்ட நண்பருக்கு மட்டும் சிறு கருத்து பரிமாற்றம்.
அமெரிக்காவின் புதிய பொறுளாதாரக் கொள்கை இந்தியாவில் BPO வேலை செய்பவர்களுக்கு எதிராக அமையலாம் என்பது உண்மை தான்.
ஆனாலும் ஒபாமாவின் இந்த முயற்சி அமெரிக்காவின் நலன் கருதியே என்பது என் கருத்து.
உள்ளூர்காரனுக்கே வேலையில்லை வெளியூர்காரனுக்கு அவன் ஏன் வேலை கொடுக்க வேண்டும்.
தாராளமயமாக்கல் கொள்கையுடய ஒரு நாடு இப்படி திரும்பியிருப்பது ஆச்சரியமான விசயம் தான்.
அதே போல் நாமும் மற்ற நாட்டுகாரர்களை திரும்பி நிற்க வைத்து பெட்டக்ஷிலேயே அடித்து துரத்துவது சாலச் சிறந்தது.
//உள்ளூர்காரனுக்கே வேலையில்லை வெளியூர்காரனுக்கு அவன் ஏன் வேலை கொடுக்க வேண்டும்.
தாராளமயமாக்கல் கொள்கையுடய ஒரு நாடு இப்படி திரும்பியிருப்பது ஆச்சரியமான விசயம் தான்.
அதே போல் நாமும் மற்ற நாட்டுகாரர்களை திரும்பி நிற்க வைத்து பெட்டக்ஷிலேயே அடித்து துரத்துவது சாலச் சிறந்தது.//
hats off to tailboy
Post a Comment