தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதையெல்லாம் அரசு ரகசியங்கள் என மூடி மறைப்பது உலகளாவிய செயல்பாடு என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் (“அப்படியாங்க, சரிங்க” எனக் கூறி போலி பவ்யம் காட்டும் முரளி மனோஹரின் கிண்டல் அவதானத்துக்குரியதல்ல).
“எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்”என்ற புத்தகத்தை அவரது சொந்த மெய்க்காப்பாளராக இருந்த கே.பி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி:
எம்.ஜி.ஆர். அவர்கள் சட்டசபைக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து ஒருவர் அவர் காலில் விழுந்து எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர் அவரிடம் இஞ்சினியரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 45000 ரூபாய் வரை ஏமாற்றியதாக புலம்பினார். அந்தத் தகவலின் உண்மையைக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவருக்கு அப்பணம் திரும்ப வருமாறு ஏற்பாடு செய்துவிட்டு, அந்த உதவியாளரையும் நீக்கியுள்ளார். மறுநாள் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி கேள்வியெழுப்ப, எம்.ஜி.ஆர். அவர்கள் நடந்ததைச் சொல்லியுள்ளார். “ராமாவரத்தில் தன் வீட்டு வாசலில் நடந்த நிகழ்ச்சி கருணாநிதிக்கு எப்படித் தெரிந்தது என்பது பற்றி தலைவர் நினைக்கவில்லை” என முத்தாய்ப்பு வைத்துள்ளார் கே.பி. ராமகிருஷ்ணன்.
அதே போல அவரது மந்திரி சபையிலிருந்த சரஸ்வதி என்ற மந்திரியின் தாயார் மந்திரிக்கு அரசால் தரப்பட்டக் காரில் கிண்டி ரேஸுக்கு செல்ல, அது பெரிய இஷ்யூவாயிற்று. சரஸ்வதி மன்னிப்பு கேட்கும்வரை அவர் சட்டசபைக்கு வரக்கூடாது என கண்டிப்பாக இருந்து எம்.ஜி.ஆர். அவரை மன்னிப்பு கேட்க வைத்தார். “அப்ப நெஜம்மாவே எம்.ஜி.ஆர். வெளிப்படையான அரசைக் கொண்டு வந்தாரா” என்று ஆவலுடன் கேட்கும் முரளி மனோஹர் சற்றே அமைதி காக்க வேண்டும்.
இந்தக் கதையெல்லாம் சமீபத்தில் 1977-ல் எம்.ஜி.ஆர். முதலில் பதவிக்கு வந்து 1980-ல் அவர் ஆட்சி கலைக்கப்பட்ட வரைக்கும்தான். நிஜமாகவே மனிதர் ஊழலற்ற அரசைத் தர முயன்றுள்ளார். அது என்ன ராசியோ தெரியவில்லை, 1977-லும் சரி 1980-லும் சரி பாராளுமன்ற தேர்தலில் அவர் அவர் ஆதரித்த கட்சி அறுதி வெற்றி பெறவில்லை. 1977-லாவது காங்கிரஸ் தில்லியில் தோற்றாலும் தமிழகத்தில் கணிசமான வெற்றி பெற்றது, அதிமுகவும் கணிசமான அளவில் லோக்சபா தொகுதியைக் கைப்பற்றியது. திமுகாவுக்கு இரண்டே சீட்டுகள்தான் கிடைத்தன. ஆனால் 1980-லோ எம்ஜிஆர் ஆதரித்த ஜனதா கட்சியும் சரி, அதிமுகவும் தமிழகத்தில் மண்ணையே கவ்வின. அது எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு மோசமான நேரம். ஆனால் கருணாநிதியின் முட்டாள்தனமான செய்கையால் அவர் கட்சிக்கு நல்ல காலம் வந்தது. கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் இந்திரா அவர்கள் எம்.ஜிஆரின் ஆட்சியைக் கலைக்க, அதனால் எழுந்த அனுதாப அலையில் எம்.ஜி.ஆர். சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பெரும் வெற்றி பெற்றார். ஆக எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதிக்கு முதலமைச்சர் பதவி கனவாகவே போனது என்பதுதான் நிஜம். நிற்க.
இப்போது மீண்டும் பதிவுக்கு வருகிறேன். மேலே சொன்னதன் பின்னணியில் 1980-க்கு பிறகு எம்ஜிஆரின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவரை ஊழல் இல்லாத ஆட்சி தர எண்ணி வெளிப்படையாக பாடுபட்டு நடந்து வந்தவர் ஒரே நாளில் மாறிப்போனார். ஊழலில் கருணாநிதி டிகிரி பட்டம் பெற்றார் என்றால் எம்ஜிஆர் முதுகலைப் பட்டமே பெற்றார். ஆகவே இப்போது வெளிப்படையான அரசு என்பதே உதவாதுதானே.
திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணும் விவகாரத்தில் அந்த நடவடிக்கையை மேற்பார்வை பார்க்க வந்த அரசு அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் 1982-ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார். இது சம்பந்தமாக C J R பால் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் உருவாயிற்று. அதில் அரசுக்கு சங்கடம் அளிக்கும் விஷயங்கள் இருந்ததால் அதை அரசு அமுக்க நினைத்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் அந்த அறிக்கையை கைப்பற்றி தந்திரமாக வெளியிட்டார். எம்.ஜி.ஆர் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது எப்படி வெளியே தெரியப் போயிற்று என்றுதான் பதறினார். அது பற்றி துறைரீதியாக விசாரணை செய்து அரசு மொழிபெயர்ப்புத் துறையில் இருந்த ஒரு ஊழியரை டிஸ்மிஸ் செய்தார்.
அதே போலத்தான் இப்போதும் டெலிஃபோன் ஒட்டுக் கேட்கப்பட்ட விஷயத்தில் அது எப்படி வெளியே லீக் ஆனது என்றுதான் கருணாநிதி கவலைப்படுகிறாரேயன்றி அதில் ஒளிந்திருந்த லஞ்ச லாவண்ய விவரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இது ஏதோ நம்மூரில் மட்டிலும் நடக்கிறது என நினைக்க வேண்டாம். உலகளாவியது இந்த மனோபாவம். பிபிசியில் வந்த எஸ் மினிஸ்டர் மற்றும் எஸ் பிரைம் மினிஸ்டர் ஆகிய தொடர்களை நம்மில் பலர் பார்த்திருப்போம். அதில் வரும் ஜிம் ஹேக்கர் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர். தேர்தலில் அவர் கட்சி வெற்றிபெற, அவரும் அரசு நிர்வாக இஷயங்களை மேற்பார்வை பார்க்கும் அமைச்சகத்தின் மந்திரியாகிறார். வந்த புதிதில் தாட்பூட் தஞ்சாவூர் என குதிக்க, அவரது அரசு காரியதரிசி ஹம்ஃப்ரீ அவரை ஒரு அசட்டுத்தனம் செய்ய வைத்து பிரதம மந்திரியிடம் மாட்டி விடுகிறார். அப்போது நடக்கும் கூத்து என்னவென்பதை அந்த எபிசோடின் நான்கு யூட்யூப் டேப்புகளில் கீழே காணலாம்.
யெஸ் மினிஸ்டர் பாகம் 1
யெஸ் மினிஸ்டர் பாகம் 2
யெஸ் மினிஸ்டர் பாகம் 4
யெஸ் மினிஸ்டர் பாகம் 4
எதிர்க்கட்சியில் இருந்தவரை வெளிப்படையான அரசுக்காக பாடுபட்ட ஜிம் ஹேக்கர் எப்படி தனக்கு கெடுதல் எனத் தெரிந்தவுடன் பல்டி அடிக்கிறார் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? அவர் எனது ஐ.டி.பி.எல். மேனேஜரை நினைவுபடுத்துகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
13 comments:
Dear Dondu Anna,
Do you accept Modi govt as transparent govt? What about Nites Kumar's Govt
Regards
Kuppukutty
இப்போதெல்லாம் யார் குறைவாக திருடுவார் என்று பார்த்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கு!
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே
நல்ல பதிவு. நன்றி டோண்டு ஐய்யா.
//இப்போதெல்லாம் யார் குறைவாக திருடுவார் என்று பார்த்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கு!
நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லையே//
அரசியலுக்கு ஒருவர் வந்தாலே அவர் கெட்டவர் இல்லியா?
உங்களது இந்த பதிவு என்னை என்னுடைய கல்லுரி காலத்துக்கு அழைத்து செல்கிறது.
மதுரை மாநாடு-எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட கடைசி மாநாடு.1972-எம்.ஜி.ஆர் கழகத்தாரிடம் கணக்கு கேட்டு பேசி முடித்ததும் .கலைஞரின் மாநாட்டு நிறைவுப் பேருரை- கூட்டம் 90 % மேல் கலைகிறது.எம்.ஜிஆருக்கு கழகத்திலிருந்து கல்தா.அ.தி.மு.க தொடக்கம்.1977ல் பெரும்பான்மை யுடன் நல்லாட்சி தொடங்குகிறார்.
1980 பராளுமன்ற தேர்தலில் சிவகாசி,கோபி மட்டுமே அதிமுகவுக்கு.
அடிப்படைக் காரணம் .இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு குழறுபடி. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சலுகை பெற வருட வருமானம் ரூபாய் 9000/= என்பதே.( இப்போது அது 4.5 லடசம்-creamy layer concept)
சட்ட்ம்ன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி.
பொருளாதார அளவுகோலை நீக்கியதுடன் இட ஒதுக்கீட்டை 50 % ஆக்கிவிட்டார் .
அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்தே கடைசிவரை ஆட்சிக்கட்டில் இருந்து சென்றார்.
கலைஞரின் எதிர்ப்பு வாக்கு வங்கியையும் ,தனது ஆதரவு வாக்கு வங்கியையும்( தலித் மற்றும் முக்குலத்தோர்,இஸ்லாமியர்,கிருத்துவர் மற்றும் முற்பட்ட ஜாதியினர்-பிராமின்ஸ் உட்பட ) இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் போல் வெற்றி பவனி வந்தது ஒரு சரித்திரம்.
இப்படிபட்ட பலமான வாக்கு வாங்கியை பலிவீனமாய் ஆக்கிய பெருமையுடையவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.
மீண்டும் எம்.ஜி.ஆரின் உயர்ந்த இடத்தை
(ஜாதிகள்,மதங்கள் ,நகரங்கள்,கிராமங்கள்,படித்தவர்கள் பாமரர்கள் -எல்லாப் பேதங்களையும் தாண்டிய தொடர் வெற்றி அதுவும் வாழும் காலம் வரை)
ரஜினியின் அரசியல் பிரவேசம் 2009 க்கு மேல் ,மீண்டும் நம் கன்முன்னே நிறுத்துமா?.
ஒன் மில்லியன் டாலர் கொஸ்டின்
டோண்டு சார் இப்போ உள்ள
ரைட் டு இன்பர்மெஷன் ஆக்ட்
பல உன்மைகளை வெளிப்படை ஆக்குகிறதா?
ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் வருமானவரி கட்ட பணமில்லை என்பதால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று வருமான வரி கட்டியதாக புளிப்பு கொடுத்தார்...பிறகுதான் தெரிந்தது அவர் அந்த நிலத்தை அவருடைய துணைவியார் ஜானகி அவர்க்ளுக்கு விற்றார் என்ற விவரம்...
//இப்படிபட்ட பலமான வாக்கு வாங்கியை பலிவீனமாய் ஆக்கிய பெருமையுடையவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.//
1.athikara mamathai
2.yaaraiyum mathikka thanmai
3.thaanthonrithanm
4.eduththen kavizhththen
5.mgr pukazhi maraikkum seyal
6.ellath tharappu mkkalaiyum uthaasinab paduththiyathanmai
7.arsua aluvarkalai undu ilai yenru aakkiya seyal
8.thaane yellam enum karvam
ippadi sollikonde pokalaam
தற்போதைய நிலையில் வெளிபடையான அரசு யாராலும் நடத்த முடியும் என்ற தோன்றவில்லை. காரணம் அதிகரித்து வரும் மக்கள் தொகை கூடவே அதிகரித்து வரும் அதிகார வட்டதின் கீழ் முதல் மேல் வரையிலான ஊழல்.
இதை போன்ற தவறுகளை அரசின் மீதும் அதை போல ஆட்சியாளர்கள் மிதும் சுமத்துவது சரியாகது.
மக்கள் எப்படியோ அதே போல ஆட்சியாளர்களும்
சாதாரண Learning driving license எடுக்கவே லஞ்சம் தர மக்கள் தயாரக இருக்கும் போது ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி பயன் இல்லை
புரட்சி நடிகர் M.G.R திரையுலக வாழ்வில்
1.பெற்ற உச்சம் எதில்
2.பெரிய தோல்வி
3.அவரால் வாழ்ந்தவரில் முக்கியமானவர்
4.அவரால் வீழ்ந்தவரில் முக்கியமானவர்
5.திருப்பத்தை ஏற்படுத்திய படம்
6.நீங்கள் விரும்பி பார்த்த படம்
7.பிடிக்காத அவரது படம்
8.பெரும் வெற்றிபெற்ற படம்
9.பெரும் தோல்விப் பட்ம்
10.திரை யுலகில் ஆட்சி செய்த மொத்த காலம்.
புரட்சித் தலைவராய் அரசியல் வாழ்வில்
M.G.R
1.பெற்ற பெரும் வெற்றியின்- ஆண்டு உதவியது-அதன் பலன்?
2.அதிமுக தொடங்கியதற்கு அப்போதைய மத்திய அரசின் நெருக்குதலும் காரணமா?
3.தங்க பஷ்பம் அவரது உடல் நலக் குறைவுக்கு காரணமா?
4.அவரது நேர்மைக் குறைவை கட்சிவரை பெரும் பகுதி மக்கள் நம்பவில்லையே எப்படி?
5.அவரது வீழ்ச்சி தொடங்கும் காலத்தில் உடல்நலக் குறைவு அனுதாப அலை காப்பாற்றியதா?
6.இன்னும் கொஞ்ச காலம் அவர் இருந்திருந்தால் கலைஞர் அவரை வென்றுருப்பார் .நடந்திருக்குமா?
7.எப்போதாவது கலைஞரின் மனசாட்சி
mgr ஐ கட்சியை விட்டு விலக்கியது தன் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறு என எண்ணியிருக்குமா?
8.தமிழகம் முழுவதும் பரவலாய் ஆதரவு இருந்தும் ( சென்னையை தவிர)அருப்புக்கோட்டை போன்ற கிராம சட்டமன்ற தொகுதிகளையே வைத்திருந்தாரே,காரணம்?
9.m.g.r அதிமுக ஆரம்பிக்காமல் ஒரே திமுக வாக இருந்திருக்குமே ஆனால் கலைஞரின் ஆட்சி முதல்வராய் 1968 தொடங்கி இன்றுவரை 40 ஆண்டுகளி முடித்திருக்குமா?( மற்ற் கட்சிகளின் ஓட்டு அவவளவு சொல்லி கொள்ளுபடி இபோதும் இல்லை என்ற நிலையில்- திமுக+அதிமுகா = 70-80 %of voting strength of tamil nadu - total paid members of both dmk and admk+mdmk+other small like minded groups- more than 2,00,00,000)
10.இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் கலைஞரைவிட ஒருபடி மேலே போய் 50 % பின் 69 % -செய்தது அதிமுக.இதனால் மிகவும் பாதிக்கப் பட்ட முற்பட்ட இனத்தினர் ( குறிப்பாக-பிரமாண சமுகத்தினர்)வெளிப்படையாக இல்லவிட்டாலும் ,எல்லாத் தேர்தலிலும் ஒட்டுப் போடுவது இரட்டை இலைக்கு காரனம் என்ன?( சென்னையில் முற்பட்ட சமுகத்தியினர் & பிராமணர்கள் பகுதி -அதிமுக பக்கம்-பொதுவாய்).
//எஸ் மினிஸ்டர்//
இதேப் போல் மக்கள் தொலைக்காட்சியில் 'தலைவா' என்றொரு தொடர் வெளியாகிறதென அறிகிறேன்!
அன்புடன்
வெங்கட்ரம்ணன் (வெங்கட்ரமணி அல்ல!)
Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund
//Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund//
Je vous saurais gré de bien vouloir m’expliquer ce que vous voulez dire.
Salutations,
Dondu N. Raghavan
// Anonymous said...
Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund
November 19, 2008 4:44 PM
dondu(#11168674346665545885) said...
//Cher frère israélien Pro, vraiment agréable rouleau & Nebel Hund//
Je vous saurais gré de bien vouloir m’expliquer ce que vous voulez dire.
Salutations,
Dondu N. Raghavan//
please translate in english or tamil so that all can enjoy
Post a Comment